Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 3

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 3

ஆனால் என்ன சொல்லு என்றாள் யமுனா. அது அவரின் அண்ணன் அதாவது நான் வேலை செய்யும் கம்பெனி யின் CEO(MD) பத்து நாள் முன்னாடி வந்து விட்டார். அவர் தான் குணா விடம் எதாவது சொல்லிருப்பார் அதிலிருந்து தான் குணாவைக் காணவில்லை. அவருடைய எண்ணும் செயலில் இல்லை. "ஏன்டி உன் குணா க்கு எல்லை மீற தைரியம் இருக்கு ஆனா தன்னோட அண்ணா கிட்ட பேச தைரியம் இல்லையா? நம்புற மாரி இல்லடி ஏன் இப்படி அவசரப்பட்ட." என்றாள் யமுனா.

நான் இன்னும் சொல்லி முடிக்கலடி போன வாரம் எனக்கு எச்ஆர்டி ல இருந்து கால் பண்ணாங்க சிஇஓ உங்கள இமிடியட்டா பாக்கனும்னு சொன்னாங்க நானும் பயத்துலேயே தான் போன. அவர் என்ன பார்த்த உடனே எவ்வளவு பணம் வேணும் உனக்கு என்று கேட்டார். எனக்கு ஒன்னும் புரியல.

பணக்கார பசங்க பின்னாடி இந்த மாதிரி நிறைய பொண்ணுங்க சுத்துவாங்க. அதுல நீயும் ஒருத்தி. குணாவ இனிமேல் பார்க்க முயற்சி பண்ணாத உனக்கு ஒரு வாரம் டைம் தர அதுக்குள்ள எவ்வளவு பணம் வேணும்னு முடிவு பண்ணு இப்போ நீ கிளம்பலாம் என்றான். அவனிடம் மறுவார்த்தை பேச பயந்து அறையை விட்டு வெளியேறினேன் என்றாள் திவ்யா. இப்போதைக்கு இதப்பத்தி பேசாம தூங்கு என்று யமுனா தங்கள் ஹாஸ்டல் தோழி மீனாவை திவ்யாவோடு தங்க வைத்துவிட்டு கிளம்பினாள். ஏனெனில் அடுத்த நாள் அவளுக்கு கான்பரன்ஸ் இருக்கிறது.

சென்னையில் பிரபலமான அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலான பார்க் ஹையாத் தில் கான்பரன்ஸ் நடக்கவிருந்தது யமுனா வேலை செய்யும் ப்ராஜெக்ட் மிகுந்த போட்டியில் இருக்கிறதால் அதையே கான்பரன்ஸில் ப்ரெசென்தேஷன் கொடுக்கலாம் என்று யமுனா மற்றும் அவளுடைய டீம் மொத்தம் ஆறு பேர் வந்தனர். அங்கு பல கம்பெனி சிஇஓ வந்திருந்தனர்.

ரெட் கலர் டிசைனர் சாரி அணிந்து புதுப்பூ போல் ஜொலித்து கொண்டிருந்த யமுனா வை அங்கு இருக்கும் முக்கால்வாசி ஆண்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த அனைவரும் கான்பரன்ஸ் தொடங்கும் முன் சலசலப்பாக பேசிக்கொண்டிருந்தனர் அப்போது திடீரென அனைவரும் அமைதி ஆனார்கள். ஏனென்று பார்த்த யமுனா வின் கண்முன்னே தாண்டி சென்றான் அந்த ஆறடி ஆணழகன். யார் இவர் ஏன் எல்லாரும் இவர பார்த்து அமைதியாக இருக்காங்க என்று தன்னோடு வேலை பார்க்கும் பூர்ணா விடம் கேட்டாள். "ஏய் இவர் தான் இந்தியா விலேயெ டாப் பிஸினஸ்மேன் இவர் பண்ணாத தொழிலே இல்ல. அந்த பெரிய எம்என்சி இவரோடது தான் என்றாள் அவள் சொன்ன கடைசி வாசகத்தை யமுனா கவனிக்கவில்லை. அதை கவனித்திருந்தால் பின் வரும் விளைவுகளை தவிர்த்திருக்கலாம்.

~மாயம் செய்ய வருவான்.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

என்ன இது குணாவின் அண்ணன் பணம் வாங்கிக்கிட்டு விலகிடுன்னு திவ்யாவிடம் சொல்லியிருக்கிறான்
அண்ணனுக்கு பயந்த அந்த கூமுட்டை கோழை குணா எங்கே போனான்?
ஹோட்டல் பார்ட்டியில் யமுனாவுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ?
 
Top