Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.-8

Advertisement

நல்லா இருக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசறது
 
ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் - 8

tea கடை ராஜா நாங்க
நாளைய இந்தியாதாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதா போங்க

தெருவில் உள்ள டீ கடை மற்றும் பெட்டிக்கடை அருகே இருந்த குட்டி சுவரில் தனது நண்பர்களோடு அமர்ந்து,டீ குடித்து கொண்திருந்தான்,சர்வேஸ்வரன்

அவனின் மாமா குடும்பம், இவர்கள் வீட்டிற்கு வந்து சென்று,இன்றோடு இரண்டு மாதமாகிறது .அடுத்த நாளே அவன் படித்த கல்லூரியிலேயே ,மேனேஜ்மென்ட் படிப்பதற்கு சேர்த்து விடுங்கள். என்று அவன் தந்தை முன்னே நிற்க ,

"படிக்க வைக்க முடியாது ,உனக்கு அடுத்து தம்பி இருக்கான். அவனுக்கு பீஸ் கட்டணும். அதான் அண்ணா சொல்றாங்க இல்லை ,நீ கிளம்பு கார்மென்ஸ் போற , போய்தான் ஆகணும் ."என்று தந்தையை முந்தி கொண்டு தாய் கூறிவிட்டார் ,

அவன் தான் செல்ல கூடாது என்ற முடிவில் இருந்தானே! அதனால் ,அவன் செல்லவே இல்லை ,தான் கூறியது போன்று சர்வா வராததால் ,கனேசன் அழைத்து இவனை வர சொல்லவும் ,அவன் மாமனை சட்டை செய்யாமல் விட்டு விட்டான்.

அடுத்த இரண்டு நாளில் அவர் தங்கைக்கு அழைத்து சத்தம் போட்டு வைத்து விட , கனகா ஒரு படி மேலே சென்று வீட்டிற்கு நேரே வந்தவர் ."கார்மென்ஸைல வந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டு வேலைக்கு உக்காந்தா தான் , நிஷாவை கல்யாணம் பண்ணி வைப்பேன்ன்னு ,உங்க அண்ணா சொல்றாங்க,பாத்துக்கோங்க அண்ணி,"

"நிஷாக்கு மாப்பிள்ளை கிடைக்காதுன்னா ,நாங்க சர்வாவை கேட்டு வரோம் ,நம்ம சொந்தம் விட்டு போய்ட கூடாது , அதோட எங்களுக்கும் பையன் இல்லை ,நாளைக்கு எங்கேயோ இருந்து வர போறவன். இந்த சொத்தை அனுபவிச்சிட்டு போறதுக்கு..... "

"சொத்து இழந்துட்டு நிக்குற உங்களுக்கு ஒரு ஆதரவா இருக்குமேன்னு தானே! நாங்க இவ்ளோ சொல்றோம் ,இது சர்வாவிற்கும் நல்லது தானே !அவன் ஏன் இப்படி பன்றான். அவர் போன் பண்ணா எடுக்ககூட மாட்டிங்குறான் ."

"உன் மருமகன் வருவான்னு சொன்ன, ஏன் இன்னும் வரலைன்னு.... அவரோட பிரண்ட் , இவரை கேட்டுட்டே இருக்காராம் ,அவரு முன்னாடி அசிங்கமா போச்சுன்னு இவரு புலம்புறாரு"



என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று ஏற்றிவிட்டு செல்ல ,வேணி என்னும் தீ பற்றி எரிந்தது ,மகனை அடிக்காதது ஒன்று தான் குறை.

"சம்பாரிச்சு போட வேண்டிய வயசுல, ஓசி சோறு திங்குறியே !"என்று கடிந்த பின் அவன் வீட்டில் உணவு உண்ணுவதை நிறுத்தி இருந்தான் .

"அண்ணா போன் பன்றாங்க எடுத்து பேசு" என்றதற்கு பதில் பேசாமல் இருந்தவனிடம் கட்டாயமாய், தனது அலைபேசியை திணிக்க , அவன் சுவற்றை நோக்கி ஓங்கி எறிந்ததில், அந்த விலையுயர்ந்த அலைபேசி சுக்கல் சுக்கலாய் நொருங்கியது தான் மிச்சம் .

"ஏன் வீட்டில் வெட்டியா இருக்குறதுக்கு, கார்மன்ஸ் போனால் தான் என்னவாம்" என்றதற்கு பின் ,வீடு தங்குவதே கிடையாது .இதோ இப்போது அமர்ந்திருக்கிறானே அதே குட்டி சுவற்றில். காலை எழுந்தும் வந்து அமர்ந்தான். எனில் இரவு பதினோரு மணிக்கு மேல். அவனின் அன்னை உறங்கிய பின்பே வீடு செல்வான்.

முதன் முறையாய் மகனின் பிடிவாதத்தில் வேணியே மலைத்து போனார்.நாளுக்கு நாள் அவனின் பிடிவாதம் அதிகரித்ததிலும்.சரியாய் உணவு உன்னததால் ஏற்பட்ட உடல் மெலிவையும் கண்டு தவித்த தாய் உள்ளம்.

"தெரியாமல் சொல்லிட்டேன் சாப்பிடுடா ,"என்று கெஞ்சிய பின்னும் கண்டு கொள்ளவில்லை .

இதே நிலை ஒரு மாதம் தொடர ,கணவனிடம் கூறிவிட்டார் வேணி ,தந்தையும் அழைத்து சத்தம் போட்டு, "சரி நீ கார்மென்ஸ் போக வேண்டாம். படிக்கணும் தானே! போய் படி," என்று பணம் கொடுத்தும் சர்வா வாங்காமல் நிற்க,

சதாவை விட்டு கட்ட வைத்தவர் ."பீஸ் கட்டியாச்சு காலேஜ்க்கு போ ,"என்று கூறிய பின்பும் யார் பேச்சையும் கேளாமல், இப்படி ஊர் சுற்றி கொண்டிருக்கிறான் .

'நான் கேட்கும் பொழுது ,கொடுக்கலை தானே ,இப்போ நீங்க சொன்னால் நான் படிக்க போகணுமா ,சொத்து இழந்துட்டு நிக்கிறோம். வந்து ஆதரவு கொடுங்கன்னு ,இவங்க கிட்ட நாங்க கேட்டோமா ,என்னை கேட்காமல் என்னோட விஷயத்தில் இவங்களை யாரு முடிவெடுக்க சொன்னது .'என்று என்னவோ அவனிற்குள் ஒரு வீம்பு வந்து அமர்ந்து கொண்டது.

இதற்க்கு இடையில் சமாதனம் செய்ய வந்த நிஷாவின் அழைப்பை கூட ,நிராகரிக்க ஆரம்பித்தான்.
இப்போது ஆட்டோ ஸ்டேண்டில் இருப்பவர்களோடு சேர்ந்து குடிக்கும் பழக்கம் கூட வந்திருந்தது .

பனிரெண்டாம் வகுப்பு முடித்த விடுமுறையில் , தந்தை "கம்ப்யூட்டர் கிளாஸ் போ" என்றதை மறுத்து விட்டு , தந்தைக்கு உதவும் பொருட்டு, அவரோடு கார்மென்ஸில் வேலைக்கு வந்தவன்.அவன்



அந்த இரண்டு மாதம் கார்மென்சில் வேலை பழகியதிலேயே , அவனுக்கு அந்த தொழிலில் இருக்கும் ஆர்வம் புரிந்து கொண்டதனால் தான் .கணேசன் வந்து அழைக்கையில் சங்கரும் அமைதியாக இருந்தார் .

படிப்பிலும் சரி ,திறமையிலும் சரி ,வெகு சமத்து அவன் .வருங்காலத்தில் பெரிய ஆளாய் வருவான். என்று நம்பியதினால் தான் .கணேசன் அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முயன்று கொண்டிருக்கிறார் .

பெற்றவர்களுக்கும் சரி, அவன் பொறுப்பான மகன்தான் ,அப்படி பட்டவன் இன்று இப்படி உதாரியாக சுற்றுகிறான் என்றால் ,மகனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவனின் மனதை ஏதோ ஒன்று குடைகிறது. என்று சங்கருக்கும் புரிகிறது,

ஆனால் அது என்னவென தான் அவருக்கு புரியவில்லை.எப்படி இருந்தாலும்.மற்றவர்களை போல மகனை தானும் இறுக்கி பிடிக்க விரும்பாமல் விட்டு பிடிப்போம். என்று தான் அமைதியாக இருக்கிறார்.

வீட்டில் இவன் உண்பதில்லை என்பதற்காக ,தான் பணம் கொடுத்தால் வாங்குவானோ மாட்டானோ என்று சின்ன மகனிடம் கொடுத்து கொடுக்க சொல்ல ,அவன் அண்ணனின் பர்சில் வைத்த விடுவான் .

சர்வா பணத்தை வேண்டாம் என்றும் சொல்லவில்லை ,பணம் தீர்ந்து விட்டது கொடுங்கள் என்றும் சொல்லவில்லை.



சிவாவும் பள்ளி சென்று திரும்புகையில், இவனை பார்த்து கொண்டு தான் செல்கிறாள். அவள் இங்கு வந்த புதிதில் இங்க் தீர்ந்து விட்டது. என்று மாலை மங்கிய நேரம் இதே கடைக்கு அவள் வந்திருக்க ,

அப்போது தான் காலேஜில் இருந்து திரும்பிய சர்வா, இவளை கண்டு "இருட்டுன நேரத்துல தனியா இந்த பக்கம் வர கூடாது,காலி பசங்க சுத்திட்டு இருப்பாங்க "என்று எச்சரித்து இருந்தான்.

இன்று அவனே அங்கு அமர்ந்திருப்பதை ,என்னெவென்று சொல்ல.... வேணியின் ஓயாத புலம்பலை கேட்டு சிவா கூட , ஒரு முறை " வீட்ல சொல்றாங்க தானே , நீங்க கா ..... "என்று தான் ஆரம்பித்திருப்பாள் ,

"அடிங்க " என்று சர்வா இருக்கையில் இருந்து எழுந்த வேகத்தை கண்டு, அந்த இடத்தில் இருந்து ஓடியவள்.அதன் பிறகு அதை பற்றி பேசக்கூட முயன்றது இல்லை.



இன்னும் அவனின் குடி பழக்கம் வீட்டினர் யாருக்கும் தெரியாது .அந்த அளவுக்கு யாரும் அறியாமல் பார்த்து கொண்டான் .

"சர்வா வாயேன்,சவாரி கிடைக்குதான்னு, ஒரு ரவுண்ட் போய்ட்டு பாத்துட்டு வரலாம்" என்று ஆட்டோக்கார நண்பன் ஒருவன் கூப்பிட்டதும் .இவனும் அவன் அருகிலே டிரைவர் சீட்டில் ஓரமாய் அமர்ந்து கொண்டு வந்தான் .

ஒரு திருப்பத்தில் ஆட்டோ திரும்பும் பொழுது, "சர்வா அங்க பாரு உங்க வீட்டு பாப்பா" என்றதும், குனிந்து அலை பேசியை நோண்டிய, படியே வந்துகொண்டிருந்த சர்வா. இப்போது நிமிர்ந்து பார்க்கவும் .

அங்கு சிவன்யா பதட்டமாக நடந்து வர ,அவளின் பின்னே கையில் சாக்லேட் மற்றும் பூ சகிதம் ஒரு ரோமியோ வந்து கொண்டிருந்தான்.அந்த அவன் இரண்டு வருடம் முன்பு சிவாவை பார்க்கில் இருந்து பார்த்து கொண்டிருந்தவன்.

சர்வாவிற்கு அவனை நன்கு அடையாளம் தெரிந்தது. ஏன்? எனில், அவன் சதாவின் நண்பன் விஷ்வா ,அன்று சாதாரணமாய் பார்த்தான் என்று சர்வா நினைத்திருக்க , அவன் இரண்டு வருடமாய் இவள் பின்னோடு சுற்றுகிறானோ!

இவள் ஏன்?யாரிடமும் சொல்லவில்லை ,இது சதாவிற்கு தெரியுமா ,முன்பே கண்காணித்து இருக்க வேண்டுமோ!தலை சூடாகியது அவனுக்கு ,



ஆட்டோவை அப்படியே நிறுத்த சொன்னவன்.உள்ளே அமர்ந்து கொண்டே ,அங்கு நடப்பதை பார்க்கலானான்.

சிவா வேகமாய் வரும்பொழுதே! அங்கு உடை எல்லாம் கிழிந்து ,வெட்டப்படாத தாடி மீசையோடு ,பைத்தியக்கார தோற்றம் உடைய ஒருவன் .

"என்ன பாப்பா எங்க போகணும்,வா நான் பத்திரமா கூட்டிட்டு போறேன்." என்று அவள் கையை பிடிக்க முனையவும் ,

சிவா சட்டென்று தள்ளி நின்றவள்,முகத்தில் அப்பட்டமான பீதி ,சுற்றும் முற்றும் யாரேனும் இருக்கிறார்களா, என்று அவள் பார்வை அலச ,சர்வா கீழே இறங்கி அவள் பார்வையில் படும் வண்ணம் நின்றான் ,

அவ்வளவு தான் இவனை கண்டதும் ,வில்லிலிருந்து புறப்பட்ட நானாய் ,இவன் அருகில் ஓடி வந்து நின்று கொண்டாள்.இவனை கண்டதும் அந்த விஷ்வா ஓடி விட ,அந்த ஆள் மட்டும் ,சிவாவை நோக்கி வந்தவர் .

"வா வீட்டுக்கு போகலாம்" என்க ,அச்சத்தில் சிவா சர்வாவின் கையை இறுக்கி பிடித்திருந்தாள்."அண்ணா இது எங்க வீட்டு பாப்பா, நான் கூட்டிட்டு போறேன்." என்று சர்வா சொல்லவும் ,

"அப்படியா பாப்பா" என்று சிவாவிடம் அவர் கேட்க,பயத்தோடு இவள் தலை அசைக்கவும் "சரி போ" என்றார் அவர்.

ஆனால் சிவா சர்வாவை விட்டு நகரவே இல்லை ,தன்னிலிருந்து அவளை பிரித்தவன் நட, என்று சைகை செய்து அவனும் பினோடு வரவே! அவளும் நடந்தாள்.கடை அருகில் வந்ததும்.

இவளுக்கு தண்ணீர் வாங்கி கொடுத்து அவள் குடித்ததும் .அவளை "வீ ட்டுக்கு போ" என்று சொல்லியும் அவள் அங்கேயே! அவர்கள் பின்னோடு வந்திருந்த, அந்த ஆளை பார்க்கவும்.

ஒரு டீயை வாங்கி, அந்த ஆளின் கையில் கொடுத்து விட்டு வந்து பைக்கை எடுத்தவன். அவளை அமர்த்தி கொண்டு வீடு நோக்கி வந்த படியே , "உனக்கு அந்த தெருலவுல என்ன வேலை" என்றிருந்தான்.

"அது என் ப்ரண்ட்க்கு பர்த்டே,அவ வீட்டுக்கு வர சொன்னால், அத்தை கிட்ட கேட்டேன் போக வேண்டாம் சொல்லிட்டாங்க, அதான் அவ ரொம்ப கெஞ்சி பக்கத்துல இருக்குற பேக்கரி கூப்பிட்டால், போயிட்டு வந்தேன்."

"அத்தைகிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்," என்று எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டு அவள் கூறவும்.

அதற்கு எந்த பதிலும் கூறாமல்,ஏன் ?விஷ்வாவை பற்றி ஒன்றும் கூறவில்லை .என்று தோன்றினாலும் ஏதும் கேட்க்கவில்லை.



பின் "அந்த அண்ணா பைத்தியம் எல்லாம் இல்லை ,லவ் பெயிலியர். முதல்ல அந்த விரக்தில தான் இப்படி சுத்த ஆரம்பிச்சாரு,அவருக்குன்னு யாரும் இல்லை ,எனக்கு தெரிஞ்சு பத்து வருசமா இப்படியே தான் சுத்திட்டு இருக்கார் ,"

"அவரை பாத்து எல்லாம் பயப்பட தேவை இல்லை. அவரு கேட்குற கேள்விக்கு பதிலை சொல்லிட்டு, கடந்து போயிட்டே இரு ,யாரு கண்டா நான் கூட ஒரு நாளைக்கு இப்படி தான் சுத்த போறேன் போல," என்றுவிட்டு,வீடு வந்து சேர்ந்ததும் அவளை இறக்கி விட்டு, பைக்கை கிளப்பி கொண்டு சென்றுவிட்டான்.

அவன் கூறிய கடைசி வார்த்தையில், சிவா திக் பிரம்மை பிடித்தவள் போல நின்று விட்டாள்."என்ன குட்டி வெளில நிக்கிற, உள்ள போ" என்ற வேணி ,"சர்வா பைக் சத்தம் கேட்டுசேன்னு வந்து பாத்தேன். அவனாவது வரதாவது,"என்றுவிட்டு இவளை தாண்டி கொண்டு மீண்டும் உள்ளே சென்றார்.

என்னவோ சிவாவுக்கு அவனின் வார்த்தை அப்படி ஒரு வலியை கொடுத்தது , 'நிஷா மேல அவ்ளோ காதல் இருந்தா,இவங்க மாமா சொல்ற வழில போக வேண்டியது தானே!'

'எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிச்சி சுத்திட்டு இருக்காங்க ,'என்று உள்ளுக்குள் புலம்பியபடியே படிக்க அமர்ந்தவளுக்கு படிப்பு ஏறிய பாடில்லை,எப்படியோ முயன்று மனதை சமாதானம் செய்து படிக்க அமர்ந்தவள். அன்றய வீட்டு பாடத்தை முடிப்பதற்குள். இரவு பதினோரு மணி ஆகியிருந்தது,வீடே உறங்கி போயிருந்தது.

அவளின் அறையில் புழுக்கமாய் இருப்பது போன்று இருக்கவும் ,சிறிது நேரம் காத்தாட ஜன்னலை திறந்து வைக்கலாம் ,என்று இவள் திறக்க ,அங்கே தெருவில் சர்வா எதிரே இருந்த வீட்டின் கேட்டில் தொங்கி கொண்டிருந்த பூட்டை தூக்கி பார்த்தவன் ,

மதில் சுவரில் ஏறி குதித்து உள்ளே செல்வதற்கு முயன்று கொண்டிருந்த வேளையில் தான்,சிவா ஜன்னலை திறந்தது.பார்த்ததும் தன்னவனை கண்டு கொண்டவள்.

'இவங்க அங்க என்ன பண்றாங்க' என்று புரியாமல் பார்த்தவளுக்கு ,அவனின் உடல் தள்ளாடுவதில் பதற்றமாகி அருகில் ஓடியவள்."இங்க என்ன பண்றீங்க ,"என்று கேட்கவும்

அவள் புறம் திரும்பியவன்."உன்னையும் வெளில விட்டு கேட்டை பூட்டிட்டாங்களா , வா இந்த சுவத்துல ஏறி குதிச்சு உள்ளே போகலாம்"

'சுவரேறி குதிச்சி போகவா 'யோசனையாய் அவனை பார்த்தவாறே! "நம்ம வீடு அங்க இருக்கு ,"என்றதும்.

"ஹோ இப்போ அந்த வீட்டுக்கு மாறிட்டாங்களா,சரி வா போகலாம்" என்று அவன் தள்ளாடிய படியே முன்னே நடந்தவன்,சுற்று சுவரில் மோதி அப்படியே மல்லாக்க விழ போக, அவனை தாங்கி நிறுத்திய சிவாவிற்கு புரிந்து போனது.

"குடிச்சிருக்கீங்களா ,"அதிர்ச்சியாய் அவள் கேட்க ...."ஆமா" என்று அலட்சியமாய் கூறிவிட்டு. அவளிடம் இருந்து விலகி அவன் முன்னே நடக்க ஆரம்பிக்கவும்,

சிவாவிற்கு வந்ததே கோபம் ,அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து கொண்டு அவள் முன்னே நடக்க , தள்ளாடியபடியே அவளின் இழுப்புக்கு பின்தொடர்ந்து சென்றான்.

பின்கட்டிற்கு சென்றவள்.துணி துவைக்கும் கல்லில் அவனை அமர வைத்து அருகே இருந்த பாக்கெட்டை எடுத்து அவன் மேல் கவிழ்த்தவள் ,அதுவும் போததென்று இன்னும் இரண்டு மூன்று பாக்கெட் தண்ணீர் பிடித்து வந்து கவிழ்த்திருந்தாள்.

முதலில் போதை தெளியாமல் இருந்தவன். பின் தெளிந்து "ஏய் லூசு என்னடி பண்ற" என்று அவளை அடிப்பது போல , அவள் மேல் எகிறி கொண்டு போக ,

"மூச் நீங்க என்ன பண்றீங்க அறிவு இருக்கா ,உங்களுக்கு,"என்று அவள் அவனுக்கும் மேலே எகிறி கொண்டு போக, அந்த கல்லில் அமைதியாய் அமர்ந்து கொண்டான்.

"நீங்க கேட்ட மாதிரி அட்மிசன் போட்டாச்சு தானே! போய் படிக்கிறதுக்கு என்ன,பாட்டி ஒன்னு சொல்லுவாங்க முன் ஏர் எந்த வழியோ! பின் ஏரும் அதே வழி தான்னு . உங்களை பாத்து சதா அண்ணாவும். இதே மாதிரி பன்னால் ,என்ன பண்ண முடியும்"

"இல்லை உங்களால் தான், இப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு ,அட்வைஸ் பண்ண முடியுமா ,அப்படி பண்ணினா உங்க மூஞ்சில காரி துப்ப மாட்டாங்க ,"என்று அவள் ஆக்ரோஷமாய் கத்தவும் ,



"அவன் பண்ணினா பண்ணிட்டு போகட்டும், நான் எதுக்கு அட்வைஸ் பண்ணபோறேன் ,"அவனும் சூடாக பதில் கொடுக்க ,

"நீங்க பண்ண மாட்டீங்க சரி,அண்ணா இந்த மாதிரி நடந்துக்கிட்டா, உங்களுக்கு கஷ்டமா இருக்கும் தானே ,இப்போ அதே மாதிரி தானே !அண்ணாவுக்கும் உங்களை நினச்சு இருக்கும் ."ஆதங்கமாய் அவள் கேட்கவும் இதற்கு சர்வாவிடம் பதில் இல்லை

"இன்னைக்கு சொல்றது தான் இனிமேல் குடிச்சிட்டு வந்தா மாமா கிட்ட சொல்லிடுவேன்.அதுக்காக நான் பேக்கரி போனதை வீட்ல நீங்க சொன்னாலும் பரவாயில்லை"

அவளை பார்த்து உதடு பிதுக்கி புன்னகைத்தவன் ,"நீ என்னை காட்டி கொடுத்தாலும். நான் உன்னை காட்டி கொடுக்க மாட்டேன் .ஏன்னா இனிமேல் வீட்ல சொல்லாமல் எங்கயும் போக மாட்ட ,"

"நான் அப்படி கிடையாது ,நீ சொன்னாலும். இல்லை நாளும், எனக்கு தோணினா நான் குடிக்க தான் செய்வேன் , அப்புறம் ரோட்டுல உன் பின்னாடி யாரோ வந்தங்களே!அதை கூட சொல்ல மாட்டேன். அவன் கண் சிமிட்டி சிரிக்க ,

"அய்யோ!அது யாருன்னே தெரில ,இன்னைக்கு தான் நானே பாத்தேன். சத்தியமா,"என்று தனது தலையில் கை வைக்கவும்

"ம்ம் போய் தூங்கு ,சாயங்காலம் ரோடுல திரு திருன்னு முழிச்சிட்டு .இப்போ ஜான்சீ ராணி மாதிரி வந்துட்டா நடுராத்திரில என்னை திருத்த,"

என்றபடியே அவளை கண்டுகொள்ளாமல். ஈரமான சட்டையை கழட்டி கொடியில் போட்டவன் ,அதில் காய்ந்து கொண்டிருந்த துண்டை எடுத்து துவட்டவும் ,

பின்னோடு வந்தவனை இவன் பார்க்கவில்லை போலும்.பார்த்திருந்தால் ஏதேனும் சூடாய் திட்டி இருப்பானே !என்று நினைத்தவள், அவன் பார்த்தும் ஏதும் கூறவில்லை என்ற நிம்மதியில் ,

"அது என்னோட ஷால்" என்று இந்த முறை சிவா வாய்விட்டே கூறி விட்டாள்."குளிப்பாட்டி விட்டவள் ,துண்டையும் கொடுத்திருக்கனும்,"என்று அசராமல் கூறியவன் ,துடைத்து முடித்ததும்.

அதை அவள் முகத்தில் விட்டெறிந்ததோடு ,தலையில் நறுக்கென்று கொட்டியும் விட்டு சென்று விட்டான் ,

"ஹா" என்று வழியில் முகம் சுருக்கியவள் .அவன் வீசி சென்றதை தண்ணீரில் அலசி காயப்போட்டு விட்டு தானும் உறங்க சென்றாள்.

என்ன தான் சிவாவிடம் அலட்சியமாய் பேசிவிட்டு வந்திருந்தாலும் .தன்னை பார்த்து தானே தனது தம்பியும் கற்றுக்கொள்வான் என்கிற எண்ணம் அவனை யோசிக்க வைத்தது ,

ஆனாலும் காலை எழுந்து எப்போதும் போலவே சுற்ற கிளம்பி விட்டான்.இங்கு சிவாவுக்கு தான் மனம் ஆறவில்லை , இன்னும் என்ன என்ன வேண்டாத வேலை எல்லாம் செய்ய போகிறான். என்று தெரியவில்லையே! என்றபடியே மாலை பள்ளி முடிந்து வந்து கொண்டிருக்கையில் ,

அங்கே அமர்ந்து கொண்டிருப்பவனை வெறித்து கொண்டே வீடு வந்தவள்.தைரியத்தை வரவழைத்து கொண்டு, சதாவின் எண்ணில் இருந்து அவனிற்கு அழைப்பு விடுத்தாள்.

அழைப்பு சென்று கொண்டே இருந்ததே தவிர அவன் எடுக்கவில்லை ,தாயின் அலைபேசியை அவன் உடைத்து விட்டதால் ,தம்பியின் எண்ணில் இருந்து அழைத்து சத்தம் போடுவார். என்றெண்ணி எடுக்காமல் விட்டுவிட ,

அவன் எடுக்கும் வரை விக்ரமாதித்யனாய் முயன்று கொண்டே இருந்தவளுக்கு, அவன் எடுத்ததும் என்ன பேச, என்று ஒரு நொடி புரியவில்லை.

"நா...நா ...."என்று இவள் திணற ."உனக்கு என்ன திக்கு வாயா ,எதுக்கு போன் பன்னிட்டு திக்கிட்டு இருக்க" என்று அவன் கேட்கவும் ,

"நா ....நான் சிவா பேசுறேன் ,"

"அதை தெரிஞ்சி தான் நானும் பேசுறேன்,எனக்கு ரொம்ப பயந்தவ தான் நீ ,சொல்லு எதுக்கு கூப்பிட்ட ."

ஏதோ ஒரு வேகத்தில் அழைத்து விட்டவளுக்கு ,'ஐயோ இப்போ என்ன சொல்றது' என்று தெரியவில்லை ,"அது .....ஹான் நான் படிச்சிட்டேன். இப்போ ஒப்பிக்கனும். நீங்க வீட்டுக்கு வாங்க," என்று எப்படியோ உளறி கிளறி சமாளித்து விட்டாள்.

"படிச்சிட்டா ,எழுதி பாரு என்னை எதுக்கு கூப்பிடுற ,நீதான் நான் இல்லாமலே நெறய மார்க் எடுக்குறன்னு சபதம் எடுத்துருக்கியே !"

"ஆமா.... ஆனால் கணக்கு புரியலை ,நீங்க வந்து சொல்லி கொடுங்க ,வரீங்க ,வந்து தான் ஆகணும்" என்று விட்டாள் . அவளுக்கு பயம் நேற்று போலவே இன்றும் குடித்து விட்டு வந்து விடுவானோ! என்று



"ஒய் ,என்ன கழுத்துல கத்தி வைக்குற ,தலைல தண்ணி ஊத்துற,இப்போ போன் பண்ணி மிரட்டுற ,ஒரு நாளைக்கு வசமா சிக்க போற, வெளுக்க போறேன் உன்னை" என்று அவன் கூறவும் .

அவள் 'அதையும் பார்க்கலாம்' என்பது போன்று, இங்கு உதட்டை சுளித்து கொண்டிருக்கையிலேயே ,

"குட்டி போனை காதுல வச்சிட்டு என்ன பண்ற" என்று வேணி வந்துவிட்டார் .

"அது அத்தை அக்கா கூட ,"என்று அவள் கூறவும்,"உங்க அக்கா இங்க லைன்ல இருக்கா, நீ யாருக்கூட பேசிட்டு இருக்க ,"கண்டிப்பாய் வந்தது வாரத்தை .

"அது அத்தை ..."இவள் திணறி கொண்டிருக்கையிலேயே "மாட்டிகிட்டயா ,என்ஜாய் பண்ணு"



என்று சத்தமில்லாமல் சிரித்து விட்டு போனை வைத்திருந்தான் சர்வேஸ்வரன்.அவள் அழைத்து விட்டாள் என்பதற்காக ,எல்லாம் வீட்டிற்கு செல்லவில்லை ,உறைந்த புன்னகையோடு அப்படியே அந்த குட்டி சுவரில் அமர்ந்திருந்தான் .

வருவாள் .............

லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள் ,ஹேப்பி ரீடிங்.................
Super ud ??
 
Top