Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.18.1

Advertisement

TNWContestWriter028

Well-known member
Member
ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் -18

சுகுணா கிளம்பியதும்,சிவண்யா அணிந்திருந்த நகைகளை கழட்டியவளுக்கு, கணேசன் அணிவித்த சங்கிலியை கழட்ட மனமில்லை.அவர் அப்பா என்று சொன்னது தான் காரணம்,'எங்க அப்பா இருந்திருந்தா,எவ்ளோ சந்தோசமா இருந்துருப்பாங்க,'என நினத்தவளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக,தாயின் நினைவு,பாட்டியின் நினைவு என வரிசை கட்டியது.



ஒரு பெரு மூச்சோடு உடை மாற்றி படுக்கையில் சரிந்தவளை அவளின் அக்கா அழைத்திருக்க,சிறிது நேரம் பேசியவள்,"சீக்கிரம் வாடிக்கா"என்று செல்லமாய் சிணுங்க,

பார்கவியும்"இப்போ நைட்ல எப்படி சிவா,விடியகாலைல கிளம்பி வந்துடுவேன். நீ தூங்கு "என்கவும்,அலைபேசியை வைத்தவள்,கண்முடியபடியே இன்று நடந்த அணைத்தையும் அசைபோட்ட படி படுத்து கிடந்தாள்.

சற்று நேரத்தில் சர்வாவின் பெரியம்மா வந்தவர்,நிஷாவின் விஷயத்தை கூறி ,வீட்டினர் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாய் கூற,அதிர்ந்து போய் நின்று விட்டாள்.

வேணி தனது மகன்களுடன் அடிபிடித்துத்தான் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

"அண்ணா,நிஷா எப்படி இருக்கா "என்று அவர் தமயன் அருகில் செல்ல

கனகாவுக்கு அப்படி ஒரு ஆத்திரம்"ஏய்? எங்க வந்திங்க,மரியாதையா வெளில போங்க, என்னோட பொண்ணை கொண்டு வந்து படுக்க வச்சது பத்தலையா, ஒரேடியா அனுப்பி வச்சிடலாம்னு வந்திங்களா,"என்று கடியவும்

"அய்யோ! என்ன அண்ணி இப்படி பேசுறீங்க," என்று வேணி ஆற்றாமையாய் கேட்க,

அவ்வளவு தான் பொங்கி விட்டார் கனகா ,ஏற்கனவே மண்டபத்தில் உறவுகள் பேசியிருக்க, இப்போது பெண்ணும் இப்படி செய்து விட,

"என்ன இப்படி பேசுறிங்களா ,நீங்க எல்லாம் ஒரு ஆளுங்கன்னு, என் பொண்ணை உங்களுக்கு குடுக்குறன்னு, இவர் சொல்லும் பொழுதே! வேண்டாம் வேண்டாம்ன்னு அடிச்சிகிட்டேன், கேட்டாரா....."

"இப்போ என் மகள்,என்ன நிலைல இருக்கா,இந்த பூமில வாழ எந்த அளவு, அவளுக்கு வெறுத்துப்போயிருந்தா,இப்படி ஒரு முடிவு எடுத்துருப்பா எல்லாம் உங்களால"

"அப்படி எங்க பொண்ணோட தகுதிக்கும்,தராதரத்திற்கும் சமமானவனா உன் பையன்,அவரோட தங்கச்சி பையன்கிற, ஒரே ஒரு தகுதி தவிர, என்ன இருக்கு அவனுக்கு,"

"உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம்.நாங்க, எங்க வீட்டு கேட்டுக்குள்ள கூட விட மாட்டோம்.அப்படி பட்ட அன்னாடங்காட்சிங்க நீங்க,தேடி வந்து பொண்ணு கொடுக்குறோம்னு சொல்லவும், உங்களுக்கு திமிரா போச்சி..."

"உன் பசங்க என்ன இந்த நாட்டுக்கு ராஜாங்கன்னு நெனச்சியா நீ ,ஏதோ உன் வீட்டுல வளர்ந்ததால,உங்களை விட்டால் போக்கிடம் இல்லாத,அந்த அனாதை ஒத்துக்கிட்டதால,உன் மகனுக்கு கல்யாணம் ஆக போகுது,"

"உன் அடுத்த மகனுக்கு எப்படி பண்றன்னு நானும் பாக்கிறேன்,உன் பசங்களை,இண்ணைக்கு கல்யாண சந்தையில,இறக்கி பாரு.. அப்போ தெரியும் லட்சணம்,இருக்க சொந்தமா வீடு கூட இல்லாத, உங்களுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்"

"கார்மென்ஸ் வர மாட்டேன்னு ,முறுக்கிட்டு போன, உன் மகன். அப்படியே! என்ன லட்ச லட்சமாகவா,சம்பாரிக்கிறான், வெறும் முப்பதாயிரம்.அந்த முப்பதாயிரம் தான் எங்க வீட்டு ட்ரைவரோட சம்பளம்."



"அதை வச்சி எந்த கோட்டையை பிடிக்க போறான்னு, நான் பாக்க தானே போறேன்.எங்க வீட்டோட இருங்கன்னு சொல்லும் பொழுது, உன் புருஷன் வீம்புக்குன்னு போய்,கூலிக்கு மாறடிச்சு கையுக்கும்,வாயுக்கும் பத்தாமல் வாழறாரே! ஒரு வாழ்க்கை."

"அதே! தான் உன் மகனுக்கும் ,காலம் முழுசும் மாச சம்பளத்தை எதிரிபார்த்து ஒரு வாழ்க்கை வாழட்டும்.உன் புருஷன் கொண்டு வர்றது பத்தலைன்னு உனக்கு கொடுக்கவாவது, நாங்க இருந்தோம் ,உன் மருமகள்... அந்த தகர டப்பாவுக்கு யாரும் கிடையாது,மாச கடைசில பட்னி கிடங்க,அப்போ தெரியும், எங்களோட அருமை,"





"வந்துடங்கா....உறவு கொண்டாடிட்டு ,சொந்தமா போய்ட்டீங்களேன்னு நிற்க வச்சி பேசுறேன்,இதுக்கு மேல நின்னா மரியாதை இருக்காது கிளம்புங்க,"என்று அவர் அத்தனை இழிவாக பேச,சதாவுக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை,

அதை விட,திருப்பி அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றால் கூட இவர்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் அல்லவா,இயலாமையில் வெடுக்கென திரும்பி வந்தவன் அவர்கள் வந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அத்தை பேச பேச, மாமனையே அழுத்தமாக பார்த்திருந்தான் சர்வேஸ்வரன்,உண்மையில் கணேசன் தளர்ந்து போய் அமர்ந்திருந்தார்.மகள் இத்தனை தூரம் செல்வாள் என்று அவர் நினைத்திருக்க வில்லை,

நினைத்திருந்தால் மகளுக்கு காவல் இருந்திருப்பாரே தவிர, அவளின் ஆசையை ஒரு சதவீதம் கூட நிறைவேற்றி இருக்க மாட்டார் என்பது உண்மை.அவளின் ஆசையை நாலு பேரிடம் வெளியில் சொல்ல கூட முடியாது.

நினைக்கவே முடியவில்லை அவரால்,அதுவும் இப்போது வந்து படுத்திருக்கிறாளே!என்ன செய்து வைத்திருக்கிறாள். என்று வெளியில் சொன்னால், அவ்வளவு தான் அவரின் மானம் கப்பல் ஏறி விடும்,

ஏதோ! இவனுக்கு திருமணம் என்பதால், காதல் தோல்வியில் தூக்க மாத்திரையை விழுங்கி விட்டாள். என்று மனைவி உட்பட, அனைவரையும் நம்ப வைத்து விட்டார்,மருத்துவரும் அவர்களுக்கு உறவினர் என்பதால்,பெண் என்ன செய்து வைத்திருக்கிறாள். என்று வெளியில் வரவே இல்லை.

இந்த பழக்கத்தில் இருந்து அவளை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று அத்தனை பயமாக இருந்தது மனிதருக்கு,இதற்க்கு தான் அவசர அவசரமாக சர்வாவிற்கு மணமுடித்து வைக்க முயன்றார் அதுவும் முடியவில்லை,

அவருக்கு இருக்கும் கவலையில் மனைவி தங்கையை பேசுவதை எல்லாம் மனிதர் காதிலேயே வாங்கவில்லை,அப்படியே அமர்ந்திருந்தார்.

மாமாவை பார்த்தவன்,அவரின் நிலை புரிந்து"அம்மா வாங்க" என்று தாயின் கையை பற்றி இழுத்து கொண்டு வந்து விட்டான்,வேணி வரும் வழியெல்லாம்,"தப்பு பண்ணிட்டேன் சாமி" என்று புலம்பியபடியே வந்தார்.

மகன்கள் அவரவர்கள் யோசனையில் இருந்ததால், தாயை சமாதானம் செய்ய முயலவில்லை,டிரைவர் கார் ஓட்ட அமைதியாக மண்டபத்திற்குள் நுழைந்தனர்,

கீழே இறங்கியதும் சதாவின் அலைபேசி ஒலிக்க, அவன் வாசலிலேயே நின்று கொண்டான்,அழைத்தது வர்ஷா தான் அவளும் அன்னை பேசியதை கேட்டபடி தானே மருத்துவமனையில் நின்றிருந்தாள்.

அதனால் சதாவை சமாதானம் செய்ய அழைத்திருந்தாள்.



"அம்மா மண்டபத்துல யாருகிட்டயும், அங்க நடந்த எதுவும் சொல்லாதீங்க,அமைதியா போய் தூங்குங்க," என்று சர்வா வேணியை அறைக்கு அனுப்பி வைத்தவன்,

இவனையே பார்த்திருந்த தந்தையிடமும் பெரியம்மா,பெரியப்பா விடமும் அங்கு நடந்தை சுருக்கமாக சொல்லி கொண்டிருந்தான்,கிட்ட தட்ட பதினோரு மணி நெருங்கி இறுக்க,மற்ற ஆட்களின் நடமாட்டம் இல்லை,

அந்த பெரிய ஹாலில் இவர்களை தவிர,ஓரிருவர் மட்டுமே! அவர்களும் வேலை ஆட்கள்.இங்கு அறையினுள் சிவண்யா,நிசா விஷயம் கேள்வி பட்டதில் இருந்து உச்ச கட்ட பதட்டத்தில் இருந்தாள்.

அவளின் வாழ்க்கையை தட்டி பார்த்து விட்டோமோ!பேசாமல் இங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி விடலாமா,நாம் சென்று விட்டால்,அவளோடு திருமணம் நடத்தி வைத்துவிடுவார்கள் தானே!என்ற எண்ணம் வேறு,

நேரம் செல்ல செல்ல வலுவாய் தோன்றவும்,'எப்படி செல்வது விடிந்தால் திருமணத்தை வைத்து கொண்டு ஓடிவிட்டாள்,தங்களின் குடும்ப மானம், என்ன ஆகும்.' என்ற யோசனை, என அவள் ஒரு வித தளம்பலான மனநிலையில் இருக்கையில்,

அவளின் அலைபேசி வீடியோ காலில் அதிர்ந்தது, அழைத்தது அவளின் ஒரே ஒரு தோழி,அன்று காதல் விடயத்தை பகிர்ந்தாலே அவள்,

எடுத்து பேச விருப்பம் இல்லை எனினும்,இவள் ஏற்று பேச அவள் சொந்த ஊர் சென்றித்திருப்பதால் வரமுடியவில்லை.என்று சிறிது நேரம் பேசினாள்.சட்டென அறைக்கதவை திறந்து கொண்டு வேணி வரவும் ,நிஷாவை பற்றி விசாரிக்க வேண்டியதால்.

"சரி டி... நான் வைக்கிறேன்,"இவள் சொல்லவும்.



"எப்படியோ நீ விரும்புனவங்களையே கல்யாணம் பண்ண போற ,ரொம்ப சந்தோஷம் ஒன்ஸ் அகைன் கங்கிராட்ஸ்,"என்று அவள் வைத்து விட ,இதை கேட்ட வேணி காளி அவதாரம் எடுத்து விட,

"அய்யய்யோ" என்று சிவாவிற்கு, நெஞ்சில் நீர் வற்றி போன உணர்வு,

"ஏய்! குட்டி என்னடி சொல்றா,உன் ப்ரண்டு,அவ சொன்னது உண்மையா,"என்று அவர் கேட்க

கையும் களவுமாக மாட்டிய பின் உண்மையை சொல்வது தானே உத்தமம்,"ஆமாம்" என்று விட்டாள்.

"ஐயோ! பாவமேன்னு வீட்ல இடம் குடுத்து சோறு போட்டதுக்கு உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணிருக்கியே!நீயெல்லாம் நல்லா இருப்பியா,அநியாயமா,நிஷா வாழ்க்கையை தட்டி பறிக்க நினைச்சிருக்க,"

"இந்த மாதிரி பண்ணுவீங்கன்னு,தெரிஞ்சு தானே! உங்களை வீட்ல விட அத்தனை முறை யோசிச்சேன்,நல்லவள் மாதிரி நடிச்சு என்னையே! ஏமாத்தி என்னோட வாயால,என் பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்ற அளவுக்கு தத்ரூபமா நடிச்சிருக்க,"

"உன் நடிப்பை கூட புரிஞ்சிக்காமல் ,இத்தனை நாள் முட்டாளா இருந்துருக்கேன் பாரு,கிளம்புடி இதுக்கு மேல நீ இங்க இருக்க கூடாது," என்றுஅவளின் கையை பிடித்து அறைக்கு வெளியிலேயே! பெண்ணை இழுத்து வந்து விட்டார்.



"அத்தை நான் நடிக்கவெல்லாம் இல்லை," என்று சிவா பேச பேச, அப்படி ஒரு ஆங்காராமாய் கத்த ஆரம்பித்தார் வேணி.

"அத்தை அது இதுன்னு சொன்ன, பல்லை தட்டி கையில கொடுத்துடுவேன்.போடி வெளிய, இனி மேல் உன் வேஷம்,என்கிட்ட பலிக்காது,உங்க புத்தியை காட்டிட்டிங்க இல்லை"என்று அவர் எரிச்சலாய் பேசி கொண்டிருக்க

தந்தையிடமும் பெரியம்மா,பெரியப்பாவிடமும் பேசிக்கொண்டிருந்த சர்வா உட்பட நால்வரும் இவர்களை அதிர்ந்து பார்த்தவர்கள். அருகில் வரவும்,சங்கர் தான் மருமகளை மனைவியின் கையில் இருந்து பிரித்து விட்டார்.

"வேணி, என்ன பண்ணிட்டு இருக்க ,"அவர் மனைவியை கடிய

"வாங்க, உங்க தங்கச்சி மகள் பண்ண காரியத்தை கேளுங்க, இவ சர்வாவை விரும்பி இருக்காள் ,அவனை கட்டிக்க தான் நல்லவள் மாதிரி வேஷம் போட்டு, நம்மளை நம்ப வச்சி கழுத்தறுத்துருக்கா,"என்றவர் மேலும்

"இதுக்கு மேல இங்க நின்னன்னு வை, என்ன பண்ணுவேன்னு தெரியாது,என் மகனை மயக்க பாத்துருக்க நீ,வெளியில போடி திருட்டுக்கழுதை,"

"அது சரி அம்மா புத்தி தானே! பெண்ணுக்கு வரும், இவள் அம்மா எந்த அளவுக்கு மயக்கி இருந்தாள்,இத்தனை வருஷம் ஆகியும் ,எங்க அண்ணன் அவளோட பொண்ணுக்கு, பத்து பவுன் சங்கிலியை பரிசு கொடுத்திருப்பார்,"என்று வார்த்தையை விட்டு விட,

வேணி என்ற கர்ஜனையோடு ,அடுத்த நொடி சங்கர் அவரின் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுத்திருந்தார்.

இவரின் வார்த்தைகளை கிரகிக்கவே பெண்ணுக்கு சில வினாடிகள் தேவை பட்டது,புரிந்த நொடி,உடல் கூசியது'இது என்ன நாக்கா, தேள் கொடுக்கா,என்ன வர்த்த சொல்லி விட்டார் ,சீ' என்று முகம் சுளித்தவள்,கழுத்தில் கிடந்த சங்கிலியை,இரண்டு மூன்றாக பிய்த்து அவரின் முகத்தில் விட்டெறிந்து விட்டாள்.

பெண்ணின் மனம் முழுவதும் ரணம்,'என்னை பெற்ற பாவத்திற்கு,இறந்து தெய்வமான,என் தாய்க்கு இந்த வார்த்தைகள் தேவையா,இதற்கு மேலும் இந்த பாழாய் போன காதல் எனக்கு தேவையா,போதும் அவன் மேல் கொண்ட காதலுக்கு நான் பட்ட துன்பம்,' என்று தோன்றவும்,

யாரையும் பாராமல் விறு விறுவென வெளியில் நடக்க தொடங்கினாள்.கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவளை கண்டா சதா 'இப்போ எங்க போறா' என நினைத்தாலும். ஏதும் கேளாமல், அப்பட்டமாய் இவளை முறைத்து விட்டு கடந்து போனான்.

அதை கண்டு கொண்ட பெண்ணுக்கு ஒரு விரக்தி சிரிப்பு,அப்போது தான் அவர்கள் வந்து இறங்கியிருந்த, கார் ட்ரைவர் அங்கேயே இருந்தவர்,

"எங்கயாவது போகணுமாமா,"என்று இவளிடம் கேட்டவாறே! கதவை திறந்துவிடவும்.

முதலில் மறுக்க நினைத்தவள்,பின் ஏறியமர்ந்து கொண்டு, அவர்களின் வீட்டிற்கு போக சொன்னாள்.டிரைவரும் அவள் சொல்லியதை செய்தார்,

சர்வாவிற்கு தாய் பேசுவார் என்று தெரியும்,ஆனால் இத்தனை தூரம், தரம் இறங்கி பேசுவார் என தெரியாது,அவரை அவன் வெறித்து கொண்டிருக்கையில் தான் சிவா சென்றது,

"ஹே" என்றழைத்தாவாறு அவன் பின்னோடு வர முனைய,

வேணி "போனால் போய் தொலையட்டும்,விடுடா அம்மா, உனக்கு பிடிச்சமாதிரி நிசாவையே! கல்யாணம் பண்ணி வைக்கிறேன்." என்றதும்,

சர்வ்வாவிற்கு அப்படி ஒரு கோபம்,அவனுக்கு மேல் அவனின் தந்தைக்கு வந்து விட்டது போல, இன்னொரு அரை கொடுத்து விட்டார்,மனிதர்

அன்று ஒரு நாள் சிவாவின் வருகைக்காக முதல் முறை அடித்தவர்,இப்போதும் அவளுக்காகவே திரும்பவும் அடிக்க,"ஹோ! நீங்க சொல்லித்தான் அவள் இத்தனையும் பண்ணாளா,"என்று இதற்கும் அவர் பேச,

முதன் முறை ,இத்தனை வருடம் மனைவியின் வாயை அடக்காமல் போனதற்கு நொந்து கொண்டார் சங்கர்,

வேணியின் அக்கா தான்,"வேணி இப்படிலாம் பேசாத," என்று சொல்ல,"உன்னால தான்,இது எல்லாம் "என்று அவரின் மீதும் இவர் பாய,சங்கருக்கு மனைவியின் மேல் இருந்த பிடிப்பே போய்விட்டது,

அவர் மருமகளை தேடுவதற்காக, நகர.... அவரை புரிந்து கொண்ட மகன்,"அப்பா, நீங்க போய் படுங்க, நான் அவளை கூட்டிட்டு வரேன்." என்று இவன் நகரவும்.சதா அங்கு வந்து சேரவும் சரியாய் இருக்க.

"டேய்! வெளில வந்தாளா ,எங்க போனாள்,"அவன் தம்பியிடம் கேட்க ,

"யாரு" அவன் அசிரத்தையாக கேட்கவும்."சிவண்யா" என்றான் சர்வா அழுத்தமாக,

"ஹோ! அந்த பொண்ணா,நாம வாடகைக்கு, எடுத்த காருல எங்கயோ போச்சு,"என்று விட்டு இங்கே என்ன நடக்கிறது, என்று கூட கேளாமல்,அவன் தந்தையோடு சென்று உறங்க ஆயத்தமானான்.
to be continued
 
Last edited:
என்ன ஒரு மாற்றம்
பேச்சில் வேணிக்கு
இவங்கள விட சதா செஞ்சது
ரொம்ப கஷ்டமா இருக்கு
சிவன்யா அக்கா சொன்ன பேச்சை
தேங்காய் இப்படி தத்தளிக்கும்
நிலைமை
 
அச்சோ வேணி வாயா அது காவாய். சதா ஏன் கண்டுக்காம இருக்கான். சர்வா உங்கம்மா நிசாவையே கட்டி வப்பாங்க. நீனும் அவுளுக்கு சொம்பு தூக்கிக்கிட்டு இரு.
 
பாரு உன்னோட முட்டாள் தனமான காதல் எங்க கொண்டு வந்து விட்டு இருக்குனு... சதா உனக்கு என்ன தான் ஆச்சு டா.. பத்து பவுன் சங்கலி அறுந்து போற அளவுக்கு ஆத்திரம்
 
Top