Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக-17

Advertisement

நிஷா......எதுக்கு அந்த கல்யாணத்துக்கு போலாம் என்று சொல்லும்போது கத்தினால்.....

சாதா கோபப்படுவது கரெக்டு

வேணி இனி என்ன முடிவு எடுப்பாங்க

சர்வா சொன்ன மாதிரி கல்யாணத்திற்கு வேற பொண்ணா
 
ஆமா எங்களை எல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிட்டுட்டு, இப்படி குண்டையும் போட்டுட்டு போனால் என்ன அர்த்தம் ??????, இந்த வேணியை நம்ப முடியாது.
சிவா -சர்வா கல்யாணம் நடக்குமா???
 
ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் -17

சிவன்யாவின் மகிழ்ச்சி அப்போது மட்டுமல்ல,வீட்டிற்கு சென்ற பின்னும் குலையாமல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது,இரவு உணவு முடித்த நேரம்,மீண்டும் பார்கவி அழைத்தவள்.

இந்த ஜாதக விடயம் அணைத்தையும் தங்கையிடம் பகிர்ந்ததோடு,
"இத்தனை வருசமா மருமகள்னு சொல்லிட்டு இருந்த நிஷாவை,இவ்ளோ சீக்கிரம் தூக்கி போட்டவங்க,நாளைக்கு ஒரு பிரச்னை வந்தா, எப்படி வேணும்னாலும் மாறி போவாங்க"

"இவ்ளோ நாள் நீ அந்த வீட்ல ,எப்படி வேலைக்காரியா இருந்தியோ,இனிமேலும் அப்படி தான் இருக்க போற .... இதெல்லாம் தேவையா, உனக்கு அந்த கல்யாணம் வேணாம் சிவா சொல்றதை கேளு," என்று அறிவுரை கூறியும்

அந்த மங்குணிக்கு ஏறிய பாட்டில்லை,"அக்கா அப்படிலாம் பண்ண மாட்டாங்கடி,அத்தை எப்படி இருந்தாலும் , அவங்க...அவங்க அப்படி பண்ண மாட்டாங்க,"என்று உறுதியாய் கூறிவிட்டாள்,

உண்மையில் அவளுக்கும் புரிகிறது ,ஆனால் அனைத்தையும் அவன் மேல் கொண்டுள்ள அன்பால் அவளுக்கு சாதகமாகவே எடுத்து கொள்கிறாள் .

பார்கவி அவளிடம் மட்டும் இல்லை சரவணன் ,சுகுணா இருவரிடமும் இந்த திருமணம் வேண்டாம், என்று கூறி பார்த்து விட்டாள்,அவர்கள் இவளை தான் சமாதானம் செய்தார்களே ஒழிய ,திருமணத்தை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்க வில்லை.

சரவணனிடம் பேசுவது போல, அவளால் சங்கரிடம் பேச முடிவதில்லை,அவரின் மகன் வேண்டாம் என்று அவரிடமே எப்படி சொல்வதாம் ,கனத்த மனதோடு இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் பார்கவிக்கு,

பார்கவி சொல்லிய பொழுது மட்டும் இல்லை,விடயம் அறிந்து சதா நேரில் வந்து."அம்மா என்ன பேச்சுமா இது,பாப்பு எப்படி சர்வா கூட ,அது எல்லாம் வேண்டாம்மா,"

"பாப்புக்கு நான் நல்ல மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன்."என்று சண்டை இட,

வேணி "என்னடா பேசுற நீ ,நீதான் இவங்க கல்யாண விஷயம் கேட்டு சந்தோச படுவேன்னு பார்த்தால் ,இப்படி குதிக்கிற, சர்வாவை விட நல்ல மாப்பிள்ளை யாராம்,பொறுப்பா கல்யாண வேலையை பாப்பியா,அதை விட்டுட்டு வந்துட்டான்,வியாக்கியானம் பேசிகிட்டு" என்கவும்,

"பாப்பு ,இங்க பாரு,நான் சொல்றதை கேளு ,நீ நல்லா படி , நான் உனக்கு மாப்பிள்ளை" என்று அவன் தொடங்கும் முன்னே,

"அண்ணா"என்று இவள் திணற,பெண்ணை கூர்ந்து பார்த்தான்,
"ஹோ! உனக்கு இது எல்லாம் பிடிச்சிருக்கு இல்லையா ,சரி ஆனால் ,நிசா பாவம் இல்லையா,"என்றவன் ஒரு அந்நிய பார்வையை அவளை நோக்கி வீசி விட்டு கிளம்பி விட்டான்,பெங்களுருக்கே............

சர்வாவின் மேல் ......அரை ....இல்லை இல்லை முழு பைத்தியமாய் இருந்த சிவாவிற்கு இவனின் பார்வை புரியவில்லை,இத்தனை நாள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மேல் அன்பு செலுத்திய ஒரு நட்பு, தன்னை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டது எனபதும் புரியவில்லை.

அது மட்டும் இல்லை, அவன் சொல்லி சென்ற" நிசா" என்ற வார்த்தை அவளை உறுத்தியது தான் ,ஆனால் 'அவங்களுக்கு ஜாதகம் ஒத்து போகலை ,நான் என்ன பண்ண முடியும் 'என்று , அந்த நொடி அவளும் சுயநலவாதியாகி போனாள்.

பேருந்தில் தலை சாய்த்து சரிந்திருந்த சதாவின் , அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி,திறந்து பார்த்தான் வர்ஷா தான்,"கவலை படாதீங்க" என்று அனுப்பி இருந்தாள்.

"எப்படி எங்க அக்காவை ஏமாற்றலாம்," என்று சர்வாவிடம் கேட்க பயந்து ,சதாவிற்கு அழைத்து வர்ஷா சண்டையிட்ட பின்பு தான் சதாவிற்கே அனைத்தும் தெரியும்.அப்போது கூட

"இல்லை ,பாப்பு ஓகே சொல்லிருக்க மாட்டாள் ,அவள் எப்படி சர்வா கூட" என்றவனால் ஜீரணிக்க முடியவில்லை.

உண்மையில் சதா அவளை தங்கையாகவே மனதில் வறித்திருக்க,இப்போது அண்ணியாய்,கசந்தது நினைக்கவே,அவன் கண்டு கொண்டானே,அவளின் விழி வழியே சர்வா மேல் அவள் விருப்பம் கொண்டிருக்கிறாள் என்று,

அதற்கு பிறகும் வர்ஷாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்து கொண்டு தானிருந்தது,அவன் கண்டு கொள்ளவில்லை.







சங்கர் பணி முடிந்து வீடு வந்ததும்,தம்பிக்கு அழைத்து பேசியவர்,"பார்கவிக்கு ஏதாவது நல்ல வரன் வந்துச்சா முதல்ல அவளுக்கு முடிச்சிட்டு, அப்புறம் இவங்களுக்கு பண்ணலாம் "என்று விசாரிக்க...

"இல்லைனா பார்கவிக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்றது இல்லை ,இந்த வருஷ படிப்பு முடிஞ்சதும்,b.ed படிக்க போறா,அது முடிஞ்சதும் ரெண்டு வருஷம் வேலை பார்க்கட்டும்,என்று கறாராக கூறி, சரவணன் அண்ணனை அடியோடு மறுத்து விட்டார்.

இவர்கள் பேசுவதை காதில் வாங்கி கொண்டு தான் ,பார்கவி உண்டு கொண்டிருந்தாள்.'அக்காவை வைத்து கொண்டு தங்கைக்கு கல்யாணமா,' என நினைத்தாலும், சுகுணாவிற்கு வேறு வழியில்லை ,என்ன செய்ய பார்கவிக்கு நேரம் சரியில்லை போலும்,

இவள் பனிரெண்டாம் வகுப்பு முடித்ததில் இருந்து வரன் வந்து கொண்டு தான் இருக்கிறது,அவர்களாகவே கேட்டு வருவார்கள்,பின் தானாகவே வேண்டாம், என்று விடுவார்கள்,முதலில் காரணம் புரியாமல் குழம்பிய சரவணனுக்கு அடுத்து வந்த வருடங்களில் தெளிவாக புரிந்து விட்டது,

இத்தனை வரன்கள் தட்டி போவதற்கு காரணம். அவளுக்கு முதலில் வந்த வரன்,தான் ஊரெல்லாம் அவர்கள் தான் பார்கவியை மனம் முடிக்க போவதாக ,திரை மறைவில் ஒரு வதந்தி பரவி கொண்டிருந்தது ,

அந்த வரனை இது வரை ஐந்து முறை சரவணன் தட்டி கழித்திருக்கிறார்,அவர்களும் அசராமல் வந்துபோய்க்கொண்டு தான் இருக்கின்றனர்."பெண்ணை தூக்க முடியாமல் ஒன்னும் ,நாங்க வீடு தேடி வரலை ,உங்க மரியாதைக்காக தான் வரோம்," என்று அவர்கள் இரண்டாம் முறை வந்த பொழுது மறைமுகமாய் மிரட்டல் விடுக்க ,ஒரு கட்டத்தில் சரவணனுக்கே பெண்ணை இங்கு வைத்திருப்பது அச்சமாய் இருந்தது.

அவள் ஹாஸ்டலில் தங்க ஆரம்பித்ததை, அவர் பெரிதாக மறுக்காமல் போனதிற்கு இவர்களும் ஒரு காரணம்,காலேஜிற்கு உள்ளேயே ஹாஸ்டல் இருக்கிறது,அந்த கேம்பசை விட்டு பெண் வெளியில் வர தேவை இல்லை,

அதுவோ மகளிர் கல்லூரி ,அப்படி அவள் வரவேண்டும் என்றால்,இவரே சென்று தான் அழைத்து வருவார்.கிட்ட தட்ட ஆறு மாதம் மனிதர் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் அலைந்தார்.



ஆனால் அவர்கள் அப்படி எதுவுமே செய்யவில்லை,என்பதை புரிந்து மெல்ல மெல்ல பார்கவியை அடைக்காப்பத்தை நிறுத்தி இருந்தார் மனிதர் ,இன்று வரை பெண் சுதந்திரமாக வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறாள்,'ஆக நாங்களாக கொடுத்தாள் தான் இவர்களுக்கு பார்கவி கிடைப்பாள்,'என்றும் புரிந்து விட

'கொடுக்கவே மாட்டோம் காத்திருந்து பார்த்துவிட்டு ,என்று? அவர்களின் பிள்ளைக்கு மணமுடிகிறார்களோ! அதன் பின் நாங்கள் எங்கள் பெண்ணுக்கு செய்துகொள்கிறோம்,'

'எப்படியும் அந்த பிள்ளை ஆருத்ரனுக்கு, வயது இருபத்தியெட்டு இருக்கும்,மிஞ்சி போனால் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் முடித்து விடுவார்கள்,அடுத்த வருடம் பார்கவியை ஒரு கிறிஸ்டியன் காலேஜில் சேர்ப்பதற்கு அனைத்து ஆயத்தங்களையும் செய்து விட்டார்.'அங்கு கார்டியன் இவரை தவிர, எவரும் நுழைய முடியாது .என்ன ஆனாலும் சரி அவர்களுக்கு பெண் இல்லை. என்பதில் மனிதர் தெளிவாக இருந்தார்.

தேடி வருபவர்களுக்கு, கொடுக்க...ஏன்? இத்தனை தூரம் மறுக்கிறார். என எண்ணினால்,அந்த குடும்பத்து பையன் , ஆருத்ரன் வேறு யாரும் அல்ல ,இவர்களின் தந்தையிடம் இருந்து அந்த இக்கட்டான சூழலில் ,அடி மட்ட விலைக்கு சொத்தை எழுதி வாங்கியிருந்த அரசியியல் வாதியின்,மகன் வழிப்பேரன்.

அப்போதாவது அந்த மனிதர் வெறும் கவுன்சிலர் தான் , ஆனால் அவரின் மகன் இப்போது mla, ஒரு முறை மந்திரியாகவும் இருந்திருகிறார்,மூன்றாவது தலை முறையான ஆருத்ரனும் இப்போது பகுதி நேர அரசியல்வாதி,

அந்த குடும்பத்தை சரவணனுக்கு மட்டும் அல்ல சங்கருக்கும் அறவே பிடிக்காது. இத்தனைக்கும் அவர்கள் இவர்களின் பங்காளிகள் தான்,அவர்களால் பெரிதாய் எந்த குடைச்சலும் இல்லாததால், இன்று வரை அண்ணனிடம் கூட சரவணன் இதை பற்றி கூறியதில்லை.

அதனால் சிவா கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று விட்டார் மனிதர்.காலமும் நேரமும் கூடி வந்தால் ,நில் என்றால் கூட நல்லவைகள் நிற்காதாம்,அப்படி தான் சர்வா, சிவா திருமண வேலைகள் கூட நடந்து கொண்டிருந்தது.

அதன் படி அடுத்த பதினைந்து நாளிலே திருமண தேதி குறித்துவிட ,சிவா தான் தடுமாறி போனால் ,அவள் நினைத்தது ........முதலில் அக்காவிற்கு முடித்து விட்டு பிறகு தனக்கு செய்வார்கள் என்று,இப்போது என்ன செய்யவென்று தெரியாமல் விழித்த பெண்ணவள் அக்காவிடம் சொல்ல

"முடிவு பண்ணிய பிறகு தள்ளி போட வேண்டாம்" என்று , பார்கவி கூறிவிட்டாள்.உண்மையில் பார்கவிக்கு பயம், வேணி எப்போது என்ன செய்வாரோ என்று , பார்கவிக்கு மட்டும் இல்லை ,அந்த பயம் சங்கருக்கும் இருந்ததால் அவரும் அடுத்து நடக்க வேண்டியதை பார்க்கலானார்.

சர்வேஸ்வரன் அன்று அலைபேசியில் நெருக்கமாக பேசியதோடு சரி ,மற்றபடி எப்போதும் போல சாதாரணமாகவே இருக்க,முதலில் முகம் சுருக்கிய சிவாவும் 'அவங்க அப்படி தான்னு தெரியுமே' என்று இலகுவாகவே இருந்தாள்.

சர்வா லோன் வாங்கி ,கல்யாண வேலைகளை பரபரப்பாக பார்க்க ஆரம்பித்திருந்தான்,அருகிலேயே பெரிய மண்டபம் ஒன்றை புக் செய்தனர்,பத்திரிக்கைகள் அடித்து வாங்கி வந்தனர்,

முகுர்த்தத்துக்கு மட்டும் நல்ல தரமான பட்டும் , மற்றவைகளுக்கும் ,உறவுகளுக்கு கொடுப்பதற்கும் இளம்பிள்ளையில் உறவினர் ஒருவரின் தறியில் சென்று வாங்கி வந்தனர்.

பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரே வீட்டில் இருப்பதால் , பெண்பார்க்கும் படலம் எல்லாம் வைக்கவில்லை.சனிக்கிழமை இரவு மணடபத்தில் நிச்சயதார்த்தம் ஞாயிறு காலை திருமணம் என முடிவு செய்யப்பட்டது.

ஒரு வாரத்திற்கு முன்பே வேணி விடுமுறை எடுக்க சொல்லியதால் சிவா விடுப்பு எடுத்து கொண்டாள்.கணேசன் வீட்டுக்கு சங்கர் ,வேணி இருவரும்நேரில் சென்று,முறையாய் அழைத்து விட்டு வந்திருந்தனர்.

நாட்கள் குறைவாக இருந்ததால் வேணி சிவன்யாவிடம் "இப்போதைக்கு நகைகள் வாங்க நேரம் இல்லை, என்னுடையதை அணிந்து கொள்,பிறகு வாங்கி கொள்வோம்." என்று அவரினதை கொடுத்து விட்டார்.

வேணியின் நகைகள் சற்று அதிகம் தான்,ஐந்து நாட்கள் காலை,மாலை என நலங்கு வைத்து எழுந்ததும் வித விதமான அலங்காரங்களில்,பௌர்ணமி நிலவாய் ஜொலித்து கொண்டிருந்தாள்,வெளி வேலைகள் அதிகம் இருப்பதால் ,ஒரு நலங்கு மட்டும் சர்வாவிற்கு வைத்து கொள்வோம் என்று விட்டு

சிவாவிற்கு மட்டும் வைத்தனர்,பிறந்தததில் இருந்து இப்படி ஒரு மகிழ்ச்சியை அனுபவித்தது இல்லை அல்லவா ,அகமும் புறமும் இன்பத்தில் திளைத்திருக்க,அப்படி ஒரு அதீத பூரிப்பு , தங்கையின் மகிழ்ச்சியில்,முதல் நாள் நலங்கிற்கு வந்திருந்த தமக்கையும் இணைந்து கொண்டாள்.

வேணியின் பக்க உறவுகள்,சற்று வசதியானவர்கள் கூட சிலர் பார்கவியை பெண் கேட்க,சுகுணா அலட்டி கொள்ளவே இல்லை,என்ன தான் தலைக்கீழாய் நின்றாலும் இது நடக்க போவதில்லை,நடக்கப்போவதில்லை என்பதை விட ஆருத்ரன் நடக்க விட போவதில்லை ,

பிறகெதற்கு மெனக்கெட வேண்டும் , அனைவருக்கும் ஒரு புன்னகையை கொடுத்தவர்,"திருமணத்திற்கு வருகிறோம்" என்று பார்கவியை அழைத்து கொண்டு சேலம் வந்து விட்டார்,

"எத்தனை வேலை இருக்கு , சீக்கிரம் கிளம்பி வா" என்று வேணி சத்தம் போட,வேறு வழியின்றி சதா மூன்று நாட்களுக்கு முன்பு வந்து சேர்ந்தான்,சிவாவிடம் பேசவில்லை,சிவா இதை உணர்ந்தாலும். 'வீடு முழுவதும் ஆட்கள் இருப்பதால் போலும்' என நினைத்து கொண்டாள்.

சனி கிழமை காலை வேணியின் அக்கா குடும்பம் சென்னையிலிருந்து நண்டு சிண்டோடு வந்து இறங்கியது , சரவணன் குடும்பமும் வந்து சேர இன்னும் வீடு களைகட்டியது,

பார்கவி வரவில்லை ,அவள் டியூஷன் எடுக்கும் பத்தாம் வகுப்பு பையனுக்கு ,திங்கள் கிழமை கணக்கு தேர்வு,ஞாயிறு இவள் விடுமுறை என்பதால்,அவனின் தாய் சனி இரவு இருந்து சொல்லி கொடுத்தே ஆகவேண்டும் என்று விட அதனால் வரவில்லை

அக்கா வராததால் சிவா முகம் கலையிழக்க,சுகுணாவின் பெண் தாங்கி கொண்டாள்.இங்கு இவர்கள் உற்சாகமாய் இருக்க ,கணேசன் வீடு போர்க்களமாக இருந்தது ,

"சரியோ, தவறோ தாய் மாமா சீர் செய்ய நான் செல்வேன்" என்று கணேசன் நிற்க , கனகா மறுத்து கொண்டிருந்தார்,நிசாவின் உற்ற தோழி,வடஇந்திய பெண் கோமலுக்கு நாளை காலை ஜெய்ப்பூரில் திருமணம் ,

சென்னை சென்ற இத்தனை வருடத்தில் அவள் இல்லாமல் இங்கு நிசா வந்ததே இல்லை,அப்படியே வந்தால் ஒரு நாள் தவிர்த்து இருந்ததில்லை, இதோ இப்போது அவர்கள் இருவரும் இணைந்து சென்னையில் ஒரு பொட்டிக் தொடங்குவதாக இருந்தது,

தீடீரென அவளின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்று அவளுக்கு அவசர திருமணம் ,இதில் தன் தந்தைக்கு ஏதேனும் பங்கிருக்கிறாதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் நிசாவிற்கு இருந்தது .

அப்படி பட்ட நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று கூட கேட்க்காமல் தாய் ,தந்தை சண்டையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

இறுதியாய் கனகா "நீங்க உங்க தங்கச்சி வீட்டு கல்யாணத்துக்கு போங்க ,நாங்க கோமல் கல்யாணத்துக்கு போறோம்." என்று இறங்கி வந்திருக்க,கணேசனுக்கு முன் நிசா "நோ" என்று வீறிட்டு இருந்தாள்.

"என்னடி" என்று கனகா அதிர்ந்து பார்க்க ,பெண் சுதாரித்து கொண்டது ."சர்வாத்தான் கல்யாணத்துக்கு போறதுல உனக்கென்ன பிரச்சனை,நான் போறேன், அப்பாகூட" என்று அவள் வீரமாக கிளம்ப செல்ல,'அங்கு அத்தனை உறவுகளின் மத்தியில் அவனை மணக்கோலத்தில் பார்த்தால், பெண் தாங்குவாளா,' என்று பரிதவித்த தாயுள்ளம் ,

மகளுக்கு ஆயிரம் புத்தி சொல்லியும் அவள் காதில் வாங்காததால் தானும் கிளம்ப அங்கு சென்றால் சதாவை பார்க்கலாம், என்ற எண்ணத்தில் வர்ஷாவும் கிளம்பி இருந்தாள்.

மேல, தாள முழக்கத்துடன்,கணேசன் சர்வவிற்கு சீர் கொண்டு வர ,அந்த புறம் சிவாவிற்கு சரவணன் கொண்டு வந்திருந்தார்,நிஷாவின் தலையை அங்கு கண்டதும் உறவுகள் தங்களுக்குள் கிசு கிசுக்க தொடங்கியது.

கனகாவின் அண்ணன் குடுமபத்தினரும் வந்திருந்தனர்,என்ன தான் கனகாவிற்கும் அண்ணிக்கும் உட்கட்சி பூசல் இருந்தாலும்,பொது இடங்களில் அன்பாக காட்டி கொள்வார்கள்,இப்போதும் அப்படியே!

'என்னவோ ஜாதகம் சரியில்லை, அது இது' என்று மனதை தேற்றி கொண்டிருந்த சிவாவிற்கு,எப்போதும் மூன்று அங்குலம் மேக்கப்பில் மின்னும் நிஷாவின் முகம் , இன்று எதுவுமே இல்லாமல்,அழுது களைத்து,சோக சித்திரமாய் வந்திருப்பது , அப்பட்டமாய் தெரிய, முதன் முறை,'வேறு ஒருத்தியின் வாழ்க்கையை தட்டி பறிக்கிறோமோ!' என்று உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி ,சிவன்யாவிற்கு

அத்தனை நேரம் வானுலக மங்கையாய் மிளிர்ந்து கொண்டிருந்தவள் முகம் சோபை இழந்து சுருங்கி போக.உள்ளுக்குள்டமார் டமார் என்று மத்தளம் முழங்கி கொண்டிருந்தது,'சிவா வாழ்கை முழுசும் குற்ற உணர்ச்சில வாழ போறடி,' என்று மனம் முரசு கொட்டி அறிவிக்க,விழிகள் கலங்கியது.

நிச்சயம் நடந்து கொண்டிருக்க ,மாப்பிள்ளையாய் அருகில் அமர்ந்திருந்த சர்வாவின் கரத்தில் இவளின் கண்ணீர் பட்டு தெறித்தது,சடாரென அவளை நிமிர்ந்து பார்த்தவன்.அவளின் பார்வை செல்லும் திசையை உணர்ந்து,அவளின் கரத்தை பற்ற,

யாரோ முகம் தெரியாத ஒருவன் தொட்டததை போன்று , அவளின் கரத்தினை சிவா வெடுக்கென உருவி கொண்டாள்.சர்வாவிற்கு அப்படி ஒரு கோவம்,முகம் எல்லாம் ஜிவு ஜிவு என எரிந்தது,

இந்த முறை முன்பை விட வெகு இறுக்கமாய் அவளின் கையை பற்றி, மேலும் மேலும் அவளுக்கு அழுத்தம் கொடுக்க , பெண்ணின் கை இத்து விடும் போல வலித்தது.

அதற்கு மேல் போறுக்க முடியாமல், "ஸ்ஸ்" என்று இவள் சத்தம் எழுப்ப,"இங்க என்ன நடக்குதோ!அதுல மட்டும் கவனம் வை ,வேற எங்கயாவது பார்வை திரும்புச்சி, கையை உடைச்சிடுவேன்." என்று அடிக்குரலில், மாலையை சரி செய்வது போல அவள் அருகில் குனிந்து மிரட்டியவன்,கையை விட்டு விட்டான்,

"ஹா"என்ற மெல்லிய அணத்தலோடு அவன் பிடித்திருந்த கையை நீவி கொண்டவளுக்கு, மீண்டும் நிஷாவை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாததால், அவர்களுக்கு முன்னே அடுக்கி வைக்கப்பட்டிருந்த, தாம்பள தட்டுகளை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

சபையில் தட்டு மாற்ற மணமக்களின் தாய் தந்தையை அழைக்கவும் சிவாவிற்கு,சங்கரின் சித்தப்பா பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேடைக்கு வர சொல்ல சரவணன் எழுந்த சமயம்,

மேடையில் இருந்தே "அண்ணா,அண்ணி வாங்க "என்று வேணி அழைக்க,கணேசன் மகிழ்ச்சியோடு எழுந்து வந்தார்,கனகா கூட எங்களை விட்டால் உங்களுக்கு வேறு வழி என்பது போல பிகு செய்து கொண்டே எழுந்து வந்தார்.

பெண்ணுக்கு தாய் தகப்பனாய் அனைத்தும் செய்தார்கள்,சர்வா சிவா இருவரும் மோதிரம் மாற்றி கொண்டதும் ,சர்வாவிற்கு சீராய் கொண்டு வந்திருந்த சங்கிலியை கழுத்தில்போட்டு விட்ட கணேசன் என்ன நினைத்தாரோ!

தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை கழட்டி சிவாவி கழுத்தில் போட வர ,பெண் மிரண்டு பின்னால் சென்றது,பின்னே அந்த தடிமனான சங்கிலி எப்படியும் பத்து பவுனாவது இருக்கும்,

"சிவாம்மா நானும் உனக்கு ஒரு அப்பாதாண்டா,"என்று மறுத்த பெண்ணின் கழுத்தில் சங்கிலியை போட்டு , அவளின் தலை மேல் கைவைத்து ஆசீர்வதித்தவர்,கீழிறங்கி செல்ல,ஏற்கனவே குற்ற உணர்வில் புகைந்து கொண்டிருந்தவளுக்கு,தர்ம சங்கடமாகி போனது,

'அழுதால் கையை பிடித்து முறுக்குவானே!' என்று அமைதியாக இருந்து கொண்டாள்.அனைவரும் சந்தனம் பூசி நலங்கு வைத்து,ஆரத்தி சுற்றி முடித்ததும்,பெண்,மாப்பிளையை எழுப்பி உண்ண அனுப்பினார்கள்.

அங்கும் நிசா உண்டு கொண்டிருக்க,சிவா இலையை விடுத்து சர்வாவையும் , நிஷாவையும்,ஆராய்ச்சியாய் நோட்டம் விட்டு கொண்டிருந்தாள்,போட்டோ கிராபர் வந்து பெண்ணுக்கு ஊட்டி விட சொல்லி புகைப்படம் கேட்க ,

சர்வா, முழு மைசூர்பாகை எடுத்து அப்படியே!அவளின் வாய்க்குள் திணித்து விட்டான், இதை எதிர்பாராதவள்,"ஆ" என்று அலறும் முன்பே! அது மண்டைக்கு ஏறி,நிறக்காமல் இருமல் வந்து கண்ணெல்லாம் கலங்கி விட்டது,

ஒருவழியாய் தண்ணீர் குடித்து சரியானவள்,பாவமாய் அருகில் இருப்பவனை பார்க்க "இப்போ ரென்டு பேரையும் மாத்தி மாத்தி பாரேன்," என்பது போல அவன் அழுத்தமாய் அவளை ஊடுருவி பார்க்க,

'எப்பா எனக்கு சோறே வேண்டாம்டா சாமி ,'என்று எழுந்து கொள்ளும் நிலை அவளுக்கு, அதற்கு அந்த தடியன் விடுவானா,என்ன... இலையில் இருக்கும் அணைத்து பதார்த்தங்களில் இருந்தும் ஒவ்வொரு வாயாய் ஊட்டி கொண்டிருந்தான்.என்ன இந்த முறை சற்று குறைவாக ஊட்டி விட, பெண் தப்பித்தது.

உண்டு முடித்து இலையில் இருந்து எழ போன நேரம்,"இங்க பாரு என்னோட வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு, உனக்கு நல்லா தெரியும் ,நான் ஒரு தரம் தனியா சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை,ஆனால் ஒன்னு மட்டும் சொல்றேன் கல்யாணம் நம்ம ரெண்டு பேருக்கும்,தான் நடக்க போகுது , வாழ்கை முழுசும் ஒண்ணா வாழ போறது நாம மட்டும் தான்,"

"மத்தவங்க எல்லாம்,வருவங்கா ...போவாங்க,லைக் பாசிங் க்ளோவுட்ஸ்,தேவை இல்லாமல் கண்டதை யோசிச்சி மண்டையை உடைச்சிக்காமல், நிம்மதியா தூங்கி எழு, அப்புறம் காலைல மேக்கப் கொஞ்சம் கம்மியா போடு ,பார்க்க முடியல,"என்று அசால்டாக சொல்லி செல்ல,

சிவாவிற்கு சுவற்றில் முட்டி கொள்ள தான் தோன்றியது.அவனிடம் இருந்து இந்த பதில் தான் வரும் என்று அவளுக்கு தெரியுமே!

'ஏன் சும்மா,எனக்காக ,உன்னை ரொம்ப பிடிக்கும்,அம்மாவுக்காக இல்லை உனக்காகத்தான் கல்யாணம் பணிகிறேன்னு சொன்னால் என்னவாம், போடா ....' என்று சோர்ந்து போனது பெண் மனம்.



அமைதியாக மணமகள் அறையில் நுழைந்து கொண்டாள்.மெல்ல எல்லா உறவுகளும் வந்து இவளை பார்த்து காலையில் வருவதாக சொல்லி சென்றனர்.

கணேசன் குடும்பம் கிளம்பி இருந்தது,நிசாவிற்கு இங்கு வந்திருந்த அனைவரும் உறவினர் தானே,முன்பு சிறு சிறு விசயத்திற்கு எல்லாம் கனகா அலட்டி கொண்டிருந்ததால்,

இப்போது ஆறுதல் சொல்வது போல அருகில் வந்து,அவரின் வேதனையை பெரிதாக்கி விட்டு சென்றனர் பாதி பேர் , நிஷாவின் வயது பெண்களும்,அவளை வைத்து கொண்டே! கேலி செய்ய... அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் கனகா எழுந்து கொண்டார்.

நேரம் சென்றது ,சுகுணாவின் சொந்த அக்காவினது,உடுமலைபேட்டையில் நாளை காலை பிரம்ம முகுர்த்ததில் புதுமனை புகுவிழா,அதை முடித்து கொண்டு இங்கு வருவதாக திட்டம் ,அதனால் அவரின் பெண்ணை மட்டும் சிவாவோடு இருக்க சொல்லி அவர் குடும்பம் கிளம்புகையில், சிவா அவரின் பெண்ணையும் காலை சீக்கிரம் வரச்சொல்லி, தாயோடு அனுப்பி விட்டாள்.

அறையில் சிவாவோடு இரவு வேணியின் உறவு பெண் வந்து உறங்குவதாக சொல்ல,வேணி "வேண்டாம் நானே படுத்து கொள்கிறேன்" என்று விட்டார்.அவர் இன்னும் அறைக்கு வராமல்,நாளை முகுர்ததித்ற்கு தேவையான பொருட்களை எடுத்து மணவறையில் வைத்து கொண்டிருந்தார்.

அவரோடு வேலை செய்து கொண்டிருந்த அக்கா, பதற்றமாய் வந்தவர் வேணியின் காதில் மெல்ல கிசுகிசுக்க,ஒரு நொடி வேணி நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்று விட்டார்.

பின் தெளிந்து,"இப்போ எப்படி இருக்கலாம்" என்று கேட்க "உயிருக்கு ஆபத்து இல்லையாம், கண் முழிக்க,நேரம் ஆகுமாம்" என்க,

'தன்னால் தானோ! தவறு செய்துவிட்டோமோ!'வேணிக்கு மனம் அடித்து கொண்டது. விஷயம் அறிந்து இரண்டு மகன்களும், தாயின் அருகில் வந்து நிற்க,"வாங்க ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்" என்று வேணி அவசரமாய் நடக்க,

"மாப்பிள்ளை இந்த நேரத்துல வெளில போக கூடாது," என்று வேணியின் அக்கா சர்வாவின் கையை பிடித்து இழுக்க,

வேணி "மாப்பிள்ளையா,அக்கா நீ பேசாத,உன் பேச்சை கேட்டு நான் பண்ணி வச்ச காரியத்தால் தான், நிசா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்கா"என்று கத்தியவர்,

சர்வாவை இழுத்து கொண்டு விரைந்தார்,திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த வாடகை காரில் மூவரும், நிசா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை வந்தடைந்தனர்.

விஷயம் மெல்ல மண்டபம் முழுவதும் பரவியது, சிவாவிற்கும் தெரிய வர ,அவள் முடிவே செய்து விட்டாள்,'நான் ஒரு கொலைகாரி' என்று



வேறு ஒன்றும் இல்லை, நிஷா, சர்வாவை மறக்க முடியாமல்,அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி , தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாளாம்.....

வருவாள் ...............



லைக்ஸ் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் , முடிஞ்ச வரைக்கும் நாளைக்கு ட்ரை பண்றேன் , இல்லை திங்கள் தான் ..............



Very sad ?
 
நிஷா உன் பிரின்ட் கோமல் கல்யாணத்துக்கு போகாமல் இங்க தற்கொலைக்கு முயன்று இருக்க நீ... உன் பிரின்ட் கல்யாணத்தில் உன் அப்பா செய்ய என்ன இருக்கு.... அப்போ உன்னோட பிரச்னை சர்வா இல்ல வேற....

இந்த லூஸ் சிவா தேவையானதை யோசிக்காமல் தேவையில்லாத எல்லாம் யோசிக்கும்... சர்வாக்கு நிஷா பத்தி தெரிஞ்சி இருக்கு அது தான் அவனும் எதிசியும் வெளிய சொல்லாம இருக்கான்...
 
என்ன இப்படி ஆயிடுச்சு.. வேணி திரும்பவும் நிஷா பக்கம் சாய்ஞ்சுடுவாரோ... சிவா வேற குழப்பத்துல இருக்கா.. கல்யாணம் நடக்குமான்னு தெரியல..
சிவன்யாவை விட பார்கவி சூப்பர்.. தங்களோட நிலையை உணர்ந்து பொறுப்பா படிக்கிறா.. எங்கயும் நிதானமா நடந்துக்கிறா.... அவளுக்கு நல்ல லைப் அமையனும்...
 
சிவா குழப்பமா இருக்கா. நாளைக்கு கண்ணாலத்தை வச்சிகிட்டு இதென்ன குழப்பம்.
 
Top