Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!- 20 இறுதி அத்தியாயம்

Advertisement

praveenraj

Well-known member
Member
மழைக்கால மேகங்கள்!- 20 இறுதி அத்தியாயம்

உணவை நன்றாகச் சுவைத்தவர்கள் வண்ணனின் வீட்டில் அமர்ந்து கிரிஜாவுடன் சகஜமாக கதைபேசினார்கள். இவர்களெல்லாம் வண்ணனின் நண்பர்கள் என்று கிரிஜா அறிந்திருந்தாலும் அவர்களைப் பற்றி வேறேதும் கிரிஜா அறிந்ததில்லை என்ற காரணத்தால் இரவு வரை பழமை பேசினார்கள். அப்போது மது தான் அந்தக் கேள்வியைக் கேட்டு அந்தப் பேச்சுக்கு வித்திட்டாள்.

"ஆண்ட்டி, எப்போ எங்களுக்கு கல்யாண சாப்பாட்டைப் போடுவீங்க?" என்றதும் வண்ணன் உண்மையிலே அதிர்ந்து தான் போனான். பல வருடங்களுக்குப் பிறகு பல களேபரங்களுக்குப் பிறகு இப்போது தான் கிரிஜாவுடன் அவன் சுமுகமாக பழகிக்கொண்டிருக்கிறான். இந்நேரத்தில் மீண்டும் சிக்கல் ஏதும் வந்துவிடுமோ என்று அவன் அஞ்சினான். நிஹாரிகாவுடனான காதலால் அவனுக்கும் கிரிஜாவுக்கு நடந்த மனக்கசப்புகளை எல்லாம் இப்போது நினைக்கையில் அவனுக்கே 'எம்பேரேசிங்காக' இருந்தது.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஒருகணம் திரும்பி வண்ணனைப் பார்த்த கிரிஜா,

"எனக்கு மட்டும் ஆசையில்லையா? உன் ஃப்ரண்ட் ஓகே சொன்னா இப்போ கூட நான் ரெடி தான்..." என்று இந்தச் சமயத்தை சரியாக உபயோகப்படுத்த எண்ணினார் கிரிஜா.

"அம்மா, நீங்க சொல்றத எல்லாம் பார்த்தா பொண்ணு எல்லாம் ரெடி போல?" என்றான் சத்யா.

இவர்களின் இந்தப் பேச்சு ஏனோ தூரிகாவுக்கும் அசௌகரியங்களைக் கொடுத்தது. வண்ணனுக்குத் திருமணம் என்றதும் அனிச்சையாக அவள் மனம் சரிதாவை தான் அவனுக்குப் பார்த்த பெண்ணாக யோசிக்க வைத்தது. அவர்களுக்குள் நல்ல ரேப்போ இருப்பதை அவளும் அறிவாள் தான். அதே நேரம் சமீபத்தில் அவளையும் அறியாமல் வண்ணனை ரசிக்கும் அவள் மனதிற்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. முன்பே வண்ணனைத் திருமணம் செய்யவதில் இருக்கும் சிக்கலை எல்லாம் அவள் ஆராய்ந்து இருந்தாள். என்ன தான் வண்ணனைப் பிடித்திருந்தாலும் வண்ணனைத் திருமணம் செய்வதால் தன்னுடைய பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக அவனை உபயோகப்படுத்திக் கொண்டாள் என்று ஊரார் பேசும்படி வந்து விட்டால் என்று யோசிக்கையில் அவளுக்கு உடல் நடுங்கியது. பழிக்கு நாணுவர் பெரியார் என்னும் வள்ளுவனின் வாக்குக்கு தூரிகாவும் ஒரு உதாரணம். வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்று இதுநாள் வரை போராடி வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.
இதுநாள் வரை அவள் அவளுக்கென்று பெரியதாக எதையும் எதிர்பார்த்ததில்லை. சூர்யாவை தன் குழந்தையாக எண்ணி கையில் ஏந்திய போது அவள் இருபத்தியொரு வயது பெண். இன்று சூர்யாவுக்கே ஆறு வயது கடந்துவிட்டது. இந்த ஆறு வருடங்களில் எத்தனையோ சவால்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறாள். அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கும் போது காதல் திருமணம் போன்றதை எல்லாம் யோசிக்கும் அளவுக்கு கூட வாழ்க்கை அவளுக்கு அவகாசம் அளிக்கவில்லை.

"நீங்க பேசிட்டு இருங்க. நான் வரேன்..." என்று அங்கிருந்து நகர்ந்தவள் தன்னுடைய வீட்டிற்குச் சென்று கதவடைத்துக் கொண்டாள். வண்ணனைப் பற்றி யோசித்தாலே அவளுக்கு வெறுப்பு உண்டான நாட்கள் தான் அதிகம். இங்கே அவனை நினைத்து கிரிஜா புலம்பும் வேளையில் எல்லாம் அவனை பலவாறு கரித்துக் கொட்டியிருக்கிறாள். ஏன் வண்ணன் இங்கே வந்த பிறகும் கூட அவளுக்கு அவன் மேல் நல்ல அபிப்ராயம் ஏதும் இல்லையே! இன்று யோசிக்கையில் அது அப்படியே தொடர்ந்திருக்கலாம் என்று எண்ணினாள். சில சமயம் நமக்குக் கிடைக்காது என்று தெரிந்த பிறகும் கூட மனம் அதன் மீதே சுற்றித் திரியுமே அதுபோலொரு நிலையில் தூரிகா தள்ளப்பட்டாள். அன்று அவன் தோளில் சாய்ந்து அழுத வேளையில் அவளுக்குக் கிடைத்த நிம்மதியும் பாதுகாப்பும் அவள் வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்று அவள் மனம் தேட தொடங்கிவிட்டது.
தூரிகா அங்கிருந்து சென்றதும் மதுவே கிரிஜாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

"ஆண்ட்டி, தூரிகா தானே நீங்க வண்ணனுக்குப் பார்த்திருக்கும் பொண்ணு?"
இப்போதும் மௌனத்தாலே தன்னுடைய எண்ணத்தை உரைத்தார் கிரிஜா. அவருடன் சேர்ந்து வண்ணனின் நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்தனர். அன்று சரிதாவும் இதைத் தானே தன்னிடம் சொன்னாள் என்று யோசித்தான் வண்ணன். வண்ணன் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர,

"டேய், வேன் பதில் சொல்லிட்டுப் போடா. உனக்கு அம்மாவோட சாய்ஸ் ஓகேவா?" என்று தான் கேட்க நினைத்ததையெல்லாம் ஒரு இறைதூதராக வந்து கேட்ட மதுவை நினைக்கையில் கிரிஜாவுக்கு காருண்யம் பொங்கி வழிந்தது.

சரிதாவை சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நட்பாகவே எண்ண முடிந்தவனால் அதே பார்வையை தூரிகா மீது செலுத்த முடிந்ததே இல்லை. அவள் எப்போதும் புடவை தான் அணிவாள். புடவை தவிர்த்து ஒருநாளும் அவளை வேறு உடையில் அவன் கண்டதே இல்லை. யாரிடமும் சிரித்துப் பேசியும் அவளைக் கண்டதே இல்லை. தன்னை ஒரு மெட்சூர்ட் பெண்ணாகவே அவள் காட்டிக்கொள்ள விரும்பினாள் என்று வண்ணனும் புரிந்துகொண்டான். தூரிகாவை அவனுக்குப் பிடிக்கும். ஆனால் அதை காதல் என்று ஒருபோதும் அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். அன்றைய இரவு அவனுக்கு உறக்கமின்றி கழிந்தது. மறுநாள் அவன் நண்பர்கள் எல்லாம் ஊருக்குப் புறப்பட்டு விட இவனும் வேலைக்குக் கிளம்பினான். தன் வீட்டிலிருந்து வெளியே வந்தவனின் கண்களில் தூரிகா தான் முதலில் தென்பட்டாள். அங்கிருந்து செல்ல நினைக்கையில் அவனை அழைத்த சரவணன் அவனுடன் சிறிது உரையாட அதில் தூரிகா இறுதி வரை பங்கு பெறவே இல்லை. இப்போதே அவளிடம் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றினாலும் என்ன பேசுவதென்று அவனுக்குத் தெரியவில்லை.

தெளிவாக இருந்த அவன் மனதில் மதுவும் அவன் அன்னையும் கல்லை எறிந்துவிட்டார்கள். அன்றைய பொழுது குழப்பத்துடன் செல்ல மாலையில் சரிதாவிடம் கூட அதைப் பற்றி ஏதும் சொல்லாமல் கோவிலுக்குச் சென்றுவிட்டான். எப்போதும் போல் இல்லாமல் ஒரு தூணின் அருகில் சம்மணமிட்டு அமர்ந்தவன் தன்னுடைய குழப்பத்திற்கான விடை தேடிக்கொண்டிருந்தான். அவன் மனம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. கண்களை மூடி இருந்த போதும் யாரோ தன்னையே பார்ப்பதைப் போல் உணர்ந்தவன் திடீரென்று கண்களைத் திறக்க அங்கே தூரிகாவைக் கண்டான். அவளோ அவன் திடீரென கண்களைத் திறப்பான் என்று அறியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனுடைய பார்வையில் தடுமாறி திரும்பிக் கொண்டாள்.

நடை சாற்றும் வரை அமர்ந்திருந்தவன் எழுந்து வெளியே செல்லும் போது தான் தூரிகாவும் கடையைப் பூட்டி வெளியேறினாள்.

"என்ன ரொம்ப நேரமா யோசனையில இருந்திங்க போல?" என்று தூரிகா கேட்டு விட்டாள். தன்னை வைத்து நேற்று நடந்த பேச்சுக்கள் எதையும் அவள் அறிய மாட்டாளே?

"நேத்துல இருந்து ஒரே குழப்பம். அதான் கோவிலுக்கு வந்தேன்..."

"குழப்பம் தீர்ந்ததா?"

"தூரிகா, என்னைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன?" என்று அந்தக் கேள்வியை சட்டென கேட்டு விட்டான்.

அதில் அவள் அதிர்ந்தாலும்,"ரொம்ப நல்ல பையன். பொறுப்பான பையன். ஜாலியான பையன்..." என்று நிறுத்தியவளுக்கு மேற்கொண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டா உன் பதில் என்னவா இருக்கும்?" என்று அடுத்த கேள்வியில் அவளை உறைய வைத்தவன்,

"இந்தக் கேள்விக்கான பதில் தேடித்தான் இவ்வளவு நேரம் கோவில்ல தியானம் செஞ்சேன். எவ்வளவு யோசிச்சும் நீ என்ன பதில் சொல்லியிருப்பனு என்னால ஒரு முடிவுக்கு வர முடியல. அதான் நேரா உன்கிட்டயே இந்தக் கேள்வியைக் கேட்டுட்டேன். அவசரம் வேணாம். அவகாசம் எடுத்து யோசிச்சு முடிவு சொல்லு. ஆனா எனக்கு பதில் வேணும் தூரி. உன் மனநிலை எனக்குப் புரியனும். நீ எனக்கு ஏத்த சாய்ஸானா அந்தக் கேள்வியே தப்பு. அதுவே நான் உனக்கு ஏத்த சாய்ஸானா அதுக்கு எனக்கு பதில் தெரியணும்... நான் உன்னை லவ் பண்றேனானு கேட்டா எனக்கு பதில் தெரியில. ஆனா நீ என் லைஃப் பார்ட்னரா வந்தா என் லைஃப் நல்லா இருக்கும்னு என் மனசு சொல்லுது. யோசிச்சு பதில் சொல்லு தூரி..." என்று அவன் சென்றுவிட்டான்.

இங்கே தூரிகாவுக்குத் தான் நடப்பதெல்லாம் கனவா நினைவா என்று விளங்கவில்லை. உற்சாகத்தோடு வீடு திரும்பியவளுக்கு நாளையே இதற்கான பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்க மறுநாள் காலையில் கோலம் போடும் வேளையில் வண்ணனின் வீட்டைக் கேட்டு ஒரு பெரியவரும் பெண்ணும் வந்திறங்கினார்கள்.

"நீங்க யாரு?" என்றவளுக்கு,

"நிஹாரிகா" என்றாள் அந்தப் பெண்.

அப்போது தான் தன் வீட்டுக் கதவைத் திறந்த கிரிஜாவுக்கு நிஹாரிகாவும் அவள் தந்தையும் அழையா விருந்தாளியாகவே காட்சியளித்தனர்.

எல்லாம் நல்ல படியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில் அவர்களின் வருகை கிரிஜாவுக்கு கலக்கத்தை உண்டாக்க தூரியின் முகத்திலும் அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து காணப்பட்டது.
விருப்பமில்லை என்றாலும் அவர்களை வீட்டிற்குள் அழைத்தவர் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்க அந்நால்வரும் ஒருவரை ஒருவர் சங்கோஜத்துடன் பார்த்துக் கொண்டனர்.

"நான் இப்போ வந்தது என் பொண்ணுக்காக. அவளோட சந்தோஷத்துக்காக. நான் நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு நம்ம புள்ளைங்க ஆசையை நிறைவேத்த..." என்னும் போதே அவருக்கு அசௌகரியமாக இருந்தது. இவர்களின் இந்தப் பேச்சு தூரிகாவுக்கு பெரும் கவலையை அளித்தது. நேற்று தான் தன்னிடம் காதலைச் சொன்னான். அதும் தன் முன்னாள் காதலி இனி தன் வாழ்வில் நுழையவே மாட்டாள் என்று அறிந்ததால் தான். அதுபோக அவனுக்கு இன்னும் தன் மேல் காதலெல்லாம் இல்லை என்று அவனே ஒப்புக்கொண்டான். ஒரு இரவு கூட முழுதாக முடியவில்லை. நெஞ்சம் திக் திக் என்று அடித்துக்கொள்ள இது எதையும் அறியாதவன் தூரியின் பதிலை வேண்டி கண்விழித்து வெளியே வந்தான்.

"அம்மா நான் தோட்டத்துக்கு..." என்று இழுத்தவன் நிஹாவையும் அவள் தந்தையையும் அங்கே கண்டு மௌனமானான்.

அவர்களைக் கண்டவனுக்கு முதலில் தோன்றியது என்னவோ தூரியின் முகம். நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் அவளிடம் பேசும் முன்னே,

"நான் உங்களுக்கு காஃபி கொண்டுவரேன்..." என்று வெளியேறிவிட்டாள்.

"வண்ணா, அவங்களை ரூமுக்கு கூட்டிட்டுப் போ. குளிச்சு ரெடி ஆகட்டும். மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..." என்று கிரிஜா சொல்ல அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.

"வண்ணா நீ எப்படி இருக்க?" என்ற நிஹாவுக்கு,

"ஹ்ம்ம். இதான் ரூம். ரெடி ஆகிட்டு வாங்க..." என்று வெளியேறினான். அங்கே கிரிஜாவோ வந்தவர்களுக்கு உணவு செய்ய தொடங்க அவர் முன் சென்று நின்றான் வண்ணன்.

"அம்மா..." என்று அவன் தயங்க,

"சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. இன்னைக்கு வேலைக்குப் போகாத. லீவ் சொல்லிடு" என்றதும் அவனும் தோட்டத்திற்குச் சென்று தயாரானான்.
வெளியே தூரிகாவைத் தேட அவளோ அவன் கண்களில் தென்படவே இல்லை. இந்தக் குழப்பத்தில் இருந்தவன் முதலில் சரிதாவை அழைத்து நடந்ததைத் தெரிவித்தான்.

"டேய், என்ன சொல்ற? அதான் நீ ஆசைப்பட்ட மாதிரியே நிஹா வந்தாச்சே? பிறகென்ன?" என்றாள் சரிதா.

"நேத்து நைட் தான் தூரிகாவுக்கு ப்ரபோஸ் பண்ணேன்..." என்று நடந்ததை விளக்கியவன் சரிதாவுக்கு ஷாக் கொடுத்தான்.

"அடப்பாவி! இதெப்ப டா நடந்தது? சொல்லவேயில்ல? டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ..." என்று பாடி வண்ணனை வெறுப்பின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றாள்.

"போன்ல செருப்பால அடிக்க முடியாதுனு தைரியத்துல பேசுறியா? உன்னை" என்றான் வண்ணன்.

"சரி, இப்போ என்ன பண்ணப் போற?"

"அதுக்குத் தான் உனக்கு போன் பண்ணேன். ஹெல்ப் மீ..."

"இதுல நான் ஹெல்ப் பண்ண என்ன இருக்கு? நீ தான் சொல்லணும். நிஹாவா? தூரிகாவா?"
வண்ணன் கண்களை மூடி யோசித்தவன் கணப்பொழுதில் முடிவெடுத்து விட்டான்.

"ஐ ஹேவ் டிசைடெட்"

"அதுக்குள்ளையா? யாரு டா?"

"பாட்டுப் பாடி கிண்டலா பண்ணுற. சஸ்பென்ஸோடவே வேலைக்குப் போடி" என்று அழைப்பைத் துண்டித்தவன் அடுத்து செய்ய வேண்டியதை எல்லாம் யோசித்து தயாராகி வீட்டிற்குச் சென்றான். அங்கே நிஹாவும் அவள் தந்தையும் தயாராகி இருக்கு அவர்களை சாப்பிட வைத்து முடித்ததும் நிஹாவின் தந்தை தாமதிக்காமல் பேச்சை ஆரமித்தார்.
தன்னுடைய சுயநலத்தால் தான் நிஹாரிகா வண்ணனை வேண்டாம் என்று சொன்னதையும் தன்னுடைய வற்புறுத்தலால் தான் வேறொரு பையனைத் திருமணம் செய்ய அவள் ஒப்புக்கொண்டதையும் இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவையும் சொல்லி,

"நான் செஞ்ச தப்புக்கு என் பொண்ணு கஷ்டப்படக்கூடாது. அதான் இங்க வந்திருக்கோம்..." என்றார்.

"இதுல நான் முடிவெடுக்க ஒண்ணுமில்ல. எல்லாம் என் பையன் தான் முடிவெடுக்கனும். அவனுக்கு என்ன விருப்பமோ அது எனக்கும் சம்மதம்..." என்று போன முறை போலல்லாமல் இம்முறை வண்ணனின் பக்கம் பந்தைத் திருப்பிவிட்டார் கிரிஜா. தூரிகாவைத் திருமணம் செய்யுமாறு தான் கேட்டு இரண்டு தினங்கள் கடந்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் குழப்பத்தில் இருந்தவருக்கு இவர்களின் வருகை மேலும் குழப்பம் அளிக்க இம்முறை அனைத்தையும் வண்ணனின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார் கிரிஜா. இதை வண்ணனே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரின் இந்தப் பதில் நிஹாவுக்கும் அவள் தந்தைக்கும் ஒரு தைரியத்தைக் கொடுத்தது.

"நிஹா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ வரயா?" என்று தனியே அழைத்தவன் நீண்ட நேரம் மௌனம் காத்தான்.

"வண்ணா..." என்று அவள் அழைத்ததும்,

"நீ ஏன் நிஹா இப்போ திரும்ப வந்த?" என்று ஒரே கேள்வியில் அவளின் எதிர்பார்ப்பை எல்லாம் சுக்குநூறாக உடைத்திருந்தான்.

"வண்ணா! ஏன் இப்படிப் பேசுற? நம்ம லவ்வுக்காக தான்..." என்று முடிக்கும் முன்னே,

"இவ்வளவு நாள் எங்க போயிருந்தது அந்த லவ்?" என்று நொடியும் தாமதிக்காமல் பதில் வந்தது.

"வண்ணா, அது..."

"நிஹா, நீயா தான் என்கிட்ட ப்ரபோஸ் பண்ண. நீயா தான் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்ன. நீயா தான் நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்னு சொன்ன. இப்போ நீயா தான் திரும்ப நாம ஒன்னு சேரலாம்னு வந்திருக்க. நாம சம்மந்தப் பட்ட எல்லா முடிவுகளையும் நீயாவே எடுத்தா இதுல நாமங்கறதுக்கு என்ன மதிப்பிருக்கு நிஹா? உனக்கு வேணும்னா வேணும். வேண்டாம்னா வேண்டாம். அப்படித்தானே?"
நிஹாரிகாவுக்கு இந்த வண்ணன் முற்றிலும் மாறுபட்டவனாகவே தெரிந்தான். மிகத் தெளிவாக சிறிதும் தாமதிக்காமல் பட் பட்டென பேசும் இந்த வண்ணன் அவளுக்கு ஆச்சர்யமூட்ட வில்லை.

"நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்குறேன். கண்டிப்பா உன்னை நான் ஹர்ட் பண்ணணும்னோ இல்லை ரிவெஞ் எடுக்கணும்னோ இதைக் கேக்கல. ஜஸ்ட் ஹானெஸ்ட்டா ஒரு பதில் வேணும். ஒருவேளை உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போகாம இருந்திருந்தா இந்நேரம் உனக்குப் பார்த்த பையனோட உன் மேரேஜ் நடந்திருக்குமா இல்லையா? எனக்கு நேர்மையான பதில் வேணும் நிஹா. உன் மேரேஜுக்கு இன்விடேஷன் அடிச்சது வரை எனக்குத் தெரியும். ஜஸ்ட் பி பிராக்டிகல்"
இந்தக் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அவள் அந்தத் திருமணத்திற்குத் தயாராகி இருந்தாள்.

"எனக்கான ரீபிளேஸ்மென்ட் சரியா அமையாததால் நீ என்னைத் தேடி வந்திருக்க. ஒரு வேளை அது செட் ஆகியிருந்தா நீயோ உன் அப்பாவோ கண்டிப்பா இங்க வந்திருக்க மாட்டீங்க. இட்ஸ் டூ லேட் நிஹா. என் வாழ்க்கையில வேறொரு பொண்ணு வந்துட்டா. வெறும் கறுப்பு வெள்ளையா நெனச்சிட்டு இருந்த எனக்கு, என்கிட்ட இருக்கும் வண்ணங்களை எல்லாம் வெளிய எடுத்து எனக்கு முன்னாடி இருக்கும் வெள்ளை பேப்பர்ல வரைஞ்சு காட்டுச்சு ஒரு தூரிகை. இப்போ தான் நான் என் பேருக்கான அர்த்தத்தை அதாவது என்னுடைய பொன் வண்ணத்தையே முழுசா உணருறேன். வாழ்க்கையோட எதார்த்தங்களை மிக நெருக்கமா எனக்குக் காட்டுனா. அவளுக்கு முன்னாடியே சரிதானு ஒரு பொண்ணு என்னை நான் யாருனு உணர வெச்சா. நான் இப்போ உன்னை வேண்டாம்னு சொல்றதுக்கு முக்கிய காரணமே, என்கிட்ட எதையெல்லாம் பிடிச்சு நீ லவ் பண்ணயோ அதெதுவும் இப்போ என்கிட்ட இல்லவே இல்லை நிஹா. நான் குடிக்கிறதில்லை. என் அம்மா பேச்சை மீறுறதில்லை. இந்த ஊரை ரொம்ப நேசிக்குறேன். ரொம்ப கடவுள் நம்பிக்கை வந்திடுச்சு. முன்னாடி சம்பாதிச்சதுல பாதி தான் சம்பாதிக்குறேன். முன்பை விட இப்போ தான் இந்த வாழ்க்கையை ரொம்ப நேசிக்குறேன். நாம கல்யாணமே பண்ணாலும் இந்த ஊர்ல இந்த வீட்ல தான் வாழனும். இப்போ என் வாழ்க்கை நிறையவே மாறிடுச்சு நிஹா. இப்படியெல்லாம் பேசுறதால உன்னை நான் வெறுத்துட்டேன்னு அர்த்தமில்லை. நீ தான் என் பர்ஸ்ட் லவ். ஆனா யு ஆர் நாட் மை லாஸ்ட் லவ் நிஹா. ஐ அம் சாரி டு சே திஸ். இட்ஸ் டூ லேட் டு ரிக்கன்ஸைல். இன் பேக்ட் ஐ ஹேவ் மூவ்ட் ஆன்..." என்னும் வேளையில் அவள் கண்களில் நீர்கோர்த்துக்கொண்டது.

"ப்ளீஸ் நிஹா. அழாத. நான் உன்னை அழ வைக்க இதைச் சொல்லல. ஐ டோன்ட் வாண்ட் டு ஹர்ட் யு. இன் பேக்ட் ஐ டோன்ட் விஷ் டு ஹர்ட் யு. எனக்கே இன்னொரு பொண்ணு அதும் என் தகுதிக்கு ரொம்ப அதிகமா ஒரு பொண்ணு கிடைக்கும் போது நீ... உனக்கு அந்தச் சிரமம் இருக்காது. யு டீசெர்வ் தி பெஸ்ட் நிஹா..." என்னும் வேளையில் வண்ணனின் குரலில் துளியும் பிசிறில்லை.

"ஐ ஹேவ் ஃபௌண்ட் மைன். ஹோப் யு வில் சூன்..." என்னும் போது அவள் அழ அவளை நெருங்கி அணைத்திருந்தான் ஒரு தோழனாய்.

சிறிது நேரம் அழுதவள்,"ஐ மிஸ்ஸெட் யூ. பட் ரியல்லி ஹேப்பி ஃபார் யு. நாங்க வரோம்..." என்றவள் சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்றாள். சிறிது நேரம் அங்கேயே இருந்தவன் வீட்டிற்குள் செல்ல அங்கே கிரிஜாவுடன் தேனு அரசி ஆகியோர் அமர்ந்து தூரிகாவை வம்பிழுத்துக்கொண்டிருந்தனர்.

"தூரிகா, கொஞ்சம் இங்க வா. உன்கிட்டப் பேசணும்..." என்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தான்.

இப்போது அவள் கண்களில் காலையில் கண்ட கலக்கம் ஏதும் இல்லை.

"என்ன முடிவெடுத்திருக்க தூரி?" என்றதும் அவள் அமைதி காக்க,

"உன்னை நம்பி வந்தவளையும் அனுப்பி வெச்சுட்டேன். போச்சு போ. அவளும் கிளம்பி இருப்பாளே..." என்றதும் அவனை ஓங்கி குத்தினாள் தூரிகா.

"ஐ லவ் யூ தூரிகா. என்னைக் கல்யாணம் செஞ்சுப்பயா?"

"நிஹாரிகா கிட்ட என்ன சொன்னிங்க?"

"அவசியம் தெரியனுமா? கொஞ்சம் மேல ஸ்க்ரோல் பண்ணி எல்லாத்தையும் தெரிஞ்சிக்கோ?"

"ஏன் நிஹாவை வேண்டாம் சொன்னிங்க?"

"ஏன்னா நான் வேறொரு பொண்ணை விரும்புறேன்..." என்றதும் அவனை நம்பாமல் பார்த்தாள் தூரிகா.

"நான் அவ கிட்ட கடைசியாய் பேசி ஒன் இயர் ஆகுது. ஐ ஹேவ் மூவ்ட் ஆன். அவ இல்லாத ஒரு எதார்த்தத்தை நான் வாழப் பழகிட்டேன். நான் ட்வெல்த் மேத்ஸ்ல இருநூறுக்கு இருநூறு எடுத்தேன். அதுக்குன்னு இப்போ நான் அதை நெனச்சு சந்தோச படமுடியுமா?"

"அப்போ நாளைக்கு எனக்கும் இதே நிலை தானா?" என்று குறும்பாக புருவம் உயர்த்தினாள்.

"வாய்ப்பிருக்கு. வேணுனா அதுக்குள்ள என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ" என்று அதே குறும்புடன் அவனும் பதிலளிக்க, அவன் வயிற்றில் ஓங்கிக் குத்தினாள் தூரிகா.

"கல்யாணம் செஞ்சுக்கலாமா?"

"நிஜமாவா?"

"இல்ல சும்மா கல்யாணம் செஞ்சுக்கலாம். அப்போ தான் எனக்கும் வசதியா இருக்கும்..." என்றதும் மீண்டும் ஓங்கிக் குத்தினாள் தூரிகா.

"இப்போ தான் நானே கொஞ்சம் ரெக்கவர் ஆகியிருக்கேன். திரும்ப ஹாஸ்பிடல் அனுப்பிடாத தாயே..." என்றவன் அவள் கன்னத்தில் இதழ் ஒற்றினான்.

"அப்போ அம்மா கிட்டப் பேசிடலாமா?" என்றான்.
அவளோ முதன்முதலில் வண்ணன் முன்பு நாணினாள்.

"வா..." என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்...
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தமின்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை...
வரிகள் - வைரமுத்து.


நிறைய கதைகள் வருஷ கணக்கா காத்திருக்கும் போது சில கதைகள் மட்டும் மனசுல தோணுனதுமே எழுத்து வடிவம் பெற்றுவிடும். என்னுடைய கடைசி இரண்டு நாவல்களும் இப்படித்தான். பொன்மாலை நேரங்களே மழைக்கால மேகங்கள் ரெண்டும் யோசிச்சதுமே எழுத ஆரமிச்சுட்டேன். வண்ணன் எனக்கு ரொம்ப சேலஞ்சிங் கேரெக்டெர். ஹீரோக்கான பொருத்தம் எதுவுமே இல்லாதவன் இந்த வண்ணன். ஒருவழியா இந்தக் கதையை முடிச்சிட்டேன். இப்போல்லாம் எழுத நேரம் அமையுறதே இல்ல. tight schedule. அடுத்து 'வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)' வரும். மஞ்சள் வெயில் மாலையிலே கூட எழுதணும். அடுத்து பதினேழு கதைங்க இருக்கு. எழுதுவோம். தொடர்ந்து ரெண்டு பேமிலி ஸ்டோரீஸ் எழுதிட்டேன். vkn கூட பேமிலி ஸ்டோரி தான். சோ அடுத்து ஒரு ட்ராவல் ஸ்டோரி. 'தூரத்து மேகம் தூறல்கள் சிந்த...' இதுதான் அந்தக் கதை. இல்லைனா விடையில்லா வினா. ரெண்டுல ஒன்னு ஸ்டார்ட் ஆகும். எப்போன்னு எல்லாம் சொல்ல முடியாது. நேரமில்லை. எதுனாலும் முதல vkn முடிஞ்ச பிறகு தான். vkn கதையை கொஞ்சம் படிச்சு recap பண்ணிக்கோங்க. அடுத்த வாரத்துல இருந்து கூடத் தொடரலாம். see you soon in my upcoming stories... keep supporting...?
என்றும் அன்புடன்,
பிரவின்ராஜ்.
 
Nice, good story. Enjoyed reading it. Ending expected. Happy finally.
But author, why all epi posted on yesterday itself.
If u posted one epi daily, it will become more more curiosity in reading.
Still thanks for giving wonderful reality story?
 
Nice, good story. Enjoyed reading it. Ending expected. Happy finally.
But author, why all epi posted on yesterday itself.
If u posted one epi daily, it will become more more curiosity in reading.
Still thanks for giving wonderful reality story?
Thank you so much ?. Actually 3 of my Stories are pending here. So I lost my credibility. Thats why I gave full story in one go. Happy that you enjoyed ??? thank you again
 
Nice story
Felt little difficult to read the
big paragraph and the conversation..It will reach more if it is easy to read .
congrats for the story
 
Nice story
Felt little difficult to read the
big paragraph and the conversation..It will reach more if it is easy to read .
congrats for the story
Thank you ?. Difficult in what sense? Whether wordings are hard to understand or the font size? Let me try to correct in next Stories...
 
Thank you ?. Difficult in what sense? Whether wordings are hard to understand or the font size? Let me try to correct in next Stories...
Wordings are perfect
I meant the splitting of the paragraphs..
I always feel Short short paragraph makes a story reading easy and if we take a pause and continue to read it will be easy to find..
It's my personal opinion ??
 
Wordings are perfect
I meant the splitting of the paragraphs..
I always feel Short short paragraph makes a story reading easy and if we take a pause and continue to read it will be easy to find..
It's my personal opinion ??
Thank you ?. I will consider it ?
 
Top