Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி முன்னோட்டம் ஒன்று

Advertisement

மக்களே மக்களே இதனால் சகல மானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்

யார் என்னை வண்ண வண்ணமாய் திட்டினாலும் அதை கரம் குவித்து சிரம் தாழ்ந்து ஏற்று கொள்கிறேன்

அஞ்சு கதை பெண்டிங்க ல இருக்கு இப்போ அடுத்து புதுசா நீயேன்மா கதை எழுதரேன்னு இந்த அக்கப்போர் பண்ற
படிக்கற எங்களை என்ன நினைச்சிட்டு இருக்க ஒரு கதை முடிச்சிட்டு அடுத்தது போக மாட்டியா

முழுசா எழுதிட்டாவது போடணும்

இப்படி பலதும் பலரின் மனதில் தோன்றினாலும்
மாத நாவலுக்கு நான் வாக்கு கொடுத்து விட்டதால் இரண்டு மாத்திற்கு ஒரு முறை குறுநாவல் கொடுத்தே ஆகவேண்டி இருப்பாதால் தான் இந்த அக்கப் போர்

சைடில் போடாமலும் என்னால் எழுத இயலாது
அது பழகிவிட்டது இல்லையேல் என் கற்பனை ஓடாது

எல்லா நாவல்களும் முடிவுறாமல் இருப்பதற்கு பெரிய பெரிய காரணம் நான் மாத நாவலோடு நிறுத்தாமல் அதனை இன்னும் அதிகம் எழுதுவதால் தான்.

அதனால் இனி குறு நாவல்கள் அப்படியே முடித்துக் கொள்வேன் அதனால் மற்ற நாவல்கள் முடிப்பதில் சிரமம் இருக்காது
எனவே மற்ற நாவல்களை கூடிய விரைவில் முடித்து விடுவேன்
இந்த நாவலையும் பதினைந்தே நாளில் முடித்து விடுவேன் என்ற வாக்குறுதி கொடுத்து


இதனை துவங்குகிறேன்.
திட்டுறவங்க எல்லாம் திட்டிக்கங்க ஸ்டார்ட் மியூசிக் ( எனக்கு இந்த கதை எழுதி முடிக்கற வரை காது கேட்காதுங்கோ..)


==============================================================================================


“சுவாமி சரணம்!! ஐயப்ப சரணம்!!” என்று சொல்லிக் கொண்டான் ராஜ ராஜன்.

சபரிமலைக்கு மாலையிட்டு இருந்தான்.. இன்று இருமுடி கட்டு.. அவர்களின் கிராமத்தில் இருந்து ஒரு வேன் கிளம்ப அதில் அவனும் ஒருவன். அவனின் வீட்ட்னில் இந்த மாதிரி செல்ல ஒத்துக் கொள்ளவேயில்லை. பிடிவாதம் பிடித்து கிளம்பி இருக்கிறான். அவனின் நண்பன் ஜகதீஷ் செல்வதால். இப்படி செல்வதெல்லாம் அவனின் பெரியப்பாவிற்கும் அப்பாவிற்கும் அவர்களுக்கு கௌரவ குறைச்சல்.

---------------------------------------------------------------------------

ராஜ ராஜனின் குடும்பம் மொத்தமும் இரண்டு கார்களில் வந்து இறங்கியது. அவனின் பெரியப்பா சுவாமிநாதன் அப்பா தமிழ்செல்வன் பெரியம்மா வாசுகி அம்மா தில்லை எல்லோரும் கூட்டுக் குடும்பம்.

பெரிய அண்ணன் கௌரிசங்கர் அண்ணி பார்வதி அவர்களின் மக்கள் ரோஹித் , சஹானா சின்ன அண்ணன் நந்த குமார் அண்ணி சிவசங்கரி அவர்களின் மக்கள் கவின், காவ்யா

அக்காள்கள் இருவர் சௌந்தரி, விஜயா. அவர்கள் மட்டும் வந்திருந்தனர். அவர்கள் குடும்பம் வரவில்லை. கௌரி சங்கரும் விஜயாவும் இவனின் உடன் பிறந்தவர்கள் சௌந்தரியம் நந்தகுமாரும் பெரியப்பா மக்கள். எல்லோரையும் விட சௌந்தரி மூத்தவர் அவருக்கு பின் கௌரிச்சங்கர் நந்த குமார் விஜயா.. இவர்களின் கடைக்குட்டி ராஜராஜன்.

-----------------------------------------------------------------------------------

அப்போது பார்த்து மனோகணபதி அவனின் குடும்பத்துடன் வர, அதுவும் கோவிலுக்கு போகும் ஏற்பாட்டுடன் வர, ‘இவனும் வருகிறானா ?யாரும் சொல்ல வில்லையே என்னிடம் ...’ என்று சுற்றும் முற்றும் பார்க்க

ராஜராஜனின் பார்வை ரகசியமாய் மனோகணபதியின் குடும்பத்தை வட்ட மிட, அங்கே மனோ அவன் மனைவி அவனின் நான்கு வயது மகன் விகாஸ் மட்டுமே!

‘அட! நம்ம கிழவியை காணோம்... கூட வர்றவளையும் காணோம்... அது இருந்தாளாவது நம்ம வீடு சும்மா இருக்கும்... இல்லைன்னா டேன்ஸ் ஆடுமே...’ என்று ராஜராஜன் எண்ணி முடித்த நேரம்

-------------------------------------------------------------------

“என்னலே எங்க சத்தம்?” என்றபடி வந்தார் நாட்சியம்மாள்.

மனோகணபதி நடப்பதை அமைதியாய் வேடிக்கை பார்த்து இருக்க

பெரிய பாட்டியை பார்த்ததும், “பிக் கிரேனி (big granny)!” என்றபடி வேகமாய் வந்து நாட்சியின் கையை பிடித்து கொண்டான்.

-------------------------------------------------------------------------

“டேய் சுவாமி! நீ எனக்கு பொறந்தது உண்மைன்னா... இவன் உன் தம்பிக்கு பொறந்தது உண்மைன்னா... போய் நீயே இருமடி கட்ட சொல்லு. இல்லை இதுல எது ஒன்னு இல்லைன்னாலும் கட்ட வேண்டாம்டா” என

வேகமாய் வந்த வாசுகி, “என்னங்க நீங்க... அவங்க பிடிவாதம் தெரியாதா?” என்று கணவனை அடக்க

“இப்படி சொல்லி சொல்லி தான் குடும்பத்தை குட்டி சுவாராகிட்டு இருக்கீங்க... சொல்லி வை... அவங்க நினைக்கறது ஒரு நாளும் நடக்காது. அவங்க பொண்ணு குடும்பத்தை நம்மோட ஓட்ட வைக்க முடியாது.. “

ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

Ha ha, super intro for this story sis, ????
 
Top