Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மங்கை 1.2

Advertisement

Elampooranidesigan

New member
Member
சென்னையில் உள்ள அந்த பரபரப்பான ஷாப்பிங் காம்ப்ளக்சில் முதல்தளத்தில் இருந்து நான்காம் தளத்திற்கு சென்று கொண்டிருந்த மின்தூக்கி இடையில் பழுதடைந்து நின்றுவிட்டது. மின்தூக்கியில் மூன்று இளைஞர்கள் இரண்டு பெண்கள் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர். ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தார். அந்த பெண்ணும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் இருந்த இன்னொரு இளம் பெண் இதனைகவனித்துவிட்டாள். அவன் முன் சென்று உனக்கு இந்த மாதிரி ஆசைகள் இருந்தால் உன் வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள். அவர்கள் உனக்கென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து தருவார்கள். அதை விட்டுவிட்டு பொது இடத்தில் பெண்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ளாதே. நீ இப்படி நடந்து கொள்வது உனக்கும் கேவலம் உன் பெற்றவர்களுக்கும் கேவலம். அடுத்த முறை இதுபோல் பார்த்தேன் என்றால் பொறுமையாக சொல்லமாட்டேன் அனைவரும் பார்க்குமாறு உன் மானத்தை வாங்கிவிடுவேன். அவள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்ததை ஒரு ஜோடி இளம் கண்கள் ரசித்துக கொண்டிருந்தது. அந்த இடத்தில் மற்றவர்களுக்கு காட்சி பொருளாகவும் இல்லை அவனை அவமானப்படுத்தவும் இல்லை பொறுமையாக அவன் தவறை சுட்டி காட்டிவிட்டால் அப்பெண். அவள் கண்கள் மட்டுமே கோபத்தை பிரதிபலித்து கொண்டிருந்தது. அவள் மித்ரமங்கை நம் நாயகி. ஒரு முறை பார்த்தால் மறுமுறை திரும்பி பார்க்கவைக்கும் அழகி. சட்டென்று நட்பு கொள்ளவைக்கும் இயல்பான முகபாவம். அவள் அடர் நீல நிற ஜீன்சும் இலஊதா நிற குர்தா அணிந்திருந்தாள். முதுகு வரை வெட்டப்பட்ட அடர்த்தியான கூந்தலை போனிடெயில் போட்டிருந்தாள். மின்தூக்கி சரி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் நான்காம் தளத்தில் சென்று அடைந்தனர். அந்த இளம் ஜோடி கண்கள் மட்டும் அவளை ரசித்து கொண்டிருந்தது. அங்கு அவள் அவளுக்காக காத்திருந்த ஓர் இளம் பெண்ணுடன் இணைந்து கொண்டாள். அங்கு அவள் தோழி என்ன மித்ரா இன்னிக்கு என்ன பஞ்சாயத்து. அதுதான் அவள் தோழி சஞ்சனா எத்தனை கலவரத்திலும் மித்ராவின் கண்களை வைத்து அவள் மனநிலையை புரிந்து கொள்வாள்.மித்ரா மின்தூக்கியில் நடந்ததை கூறினாள். எத்தனை முன்னேற்றம் வந்தாலும் இந்தமாதிரி ஆட்களை ஒன்னும் செய்ய முடியாது. சரி வா நாம் கிளம்பலாம். சஞ்சனா மித்ராவின் ஒரே தோழி.
 
சென்னையில் உள்ள அந்த பரபரப்பான ஷாப்பிங் காம்ப்ளக்சில் முதல் தளத்தில் இருந்து நான்காம் தளத்திற்கு சென்று கொண்டிருந்த மின்தூக்கி இடையில் பழுதடைந்து நின்று விட்டது.
மின்தூக்கியில் மூன்று இளைஞர்கள் இரண்டு பெண்கள் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர்.
ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தார்.
(இவனுக்கென்ன மரியாதை?)
அந்த பெண்ணும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்தில் இருந்த இன்னொரு இளம் பெண் இதனை கவனித்து விட்டாள்.
அவன் முன் சென்று உனக்கு இந்த மாதிரி ஆசைகள் இருந்தால் உன் வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்.
அவர்கள் உனக்கென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து தருவார்கள்.
அதை விட்டுவிட்டு பொது இடத்தில் பெண்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ளாதே.
நீ இப்படி நடந்து கொள்வது உனக்கும் கேவலம்
உன் பெற்றவர்களுக்கும் கேவலம்.
அடுத்த முறை இது போல் பார்த்தேன் என்றால் பொறுமையாக சொல்ல மாட்டேன்
அனைவரும் பார்க்குமாறு உன் மானத்தை வாங்கி விடுவேன்.
அவள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்ததை ஒரு ஜோடி இளம் கண்கள் ரசித்துக கொண்டிருந்தது.
அந்த இடத்தில் மற்றவர்களுக்கு காட்சி பொருளாகவும் இல்லை
அவனை அவமானப்படுத்தவும் இல்லை
பொறுமையாக அவன் தவறை சுட்டிக் காட்டிவிட்டாள் அப்பெண்.
அவள் கண்கள் மட்டுமே கோபத்தை பிரதிபலித்து கொண்டிருந்தது.
அவள் மித்ர மங்கை
நம் நாயகி.
ஒருமுறை பார்த்தால் மறுமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகி.
சட்டென்று நட்பு கொள்ள வைக்கும் இயல்பான முகபாவம்.
அவள் அடர் நீல நிற ஜீன்சும் இள ஊதா நிற குர்தா அணிந்திருந்தாள்.
முதுகு வரை வெட்டப்பட்ட அடர்த்தியான கூந்தலை போனி டெயில் போட்டிருந்தாள்.
மின்தூக்கி சரி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் நான்காம் தளத்தில் சென்று அடைந்தனர்.
அந்த இளம் ஜோடி கண்கள் மட்டும் அவளை ரசித்து கொண்டிருந்தது.
அங்கு அவள் அவளுக்காக காத்திருந்த ஓர் இளம் பெண்ணுடன் இணைந்து கொண்டாள்.
அங்கு அவள் தோழி என்ன மித்ரா இன்னிக்கு என்ன பஞ்சாயத்து.
அதுதான் அவள் தோழி சஞ்சனா
எத்தனை கலவரத்திலும் மித்ராவின் கண்களை வைத்து அவள் மனநிலையை புரிந்து கொள்வாள்.
மித்ரா மின்தூக்கியில் நடந்ததை கூறினாள்.
எத்தனை முன்னேற்றம் வந்தாலும் இந்த மாதிரி ஆட்களை ஒன்னும் செய்ய முடியாது.
சரி வா நாம் கிளம்பலாம்.
சஞ்சனா மித்ராவின் ஒரே தோழி.
 
Last edited:
Top