Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 11

Advertisement

Sakthi bala

Active member
Member
மதிவதனியின் அலறல் சத்தம் கேட்டு என்னவென்று மனோரஞ்சன் திரும்பி பார்ப்பதற்குள் எங்கிருந்தோ ஒரு கல் பறந்து வந்து மதிவதனியின் நெற்றியை தாக்கியிருந்தது. அவர்கள் கார் நோக்கி வேகமாக பல கற்கள் பறந்து வந்துக் கொண்டிருந்தது. மனோரஞ்சன் மதிவதனியை பிடித்துக் குனிய வைத்து தானும் குனிந்துக் கொண்டான்.

சத்தம் கேட்டு வந்து செக்யூரிட்டி மீதும் கற்கள் மழையாய் பொழிந்தன. அவராலும் யார் கல் எறிகிறார்கள் என்று பார்க்க முடியவில்லை. உடனே அவர் உள்ளே ஓடிச் சென்று போலீசுக்கு போன் செய்தார். அதற்குள் காரின் கண்ணாடி அனைத்தும் உடைந்து விட்டன. மனோரஞ்சனும், மதிவதனியும் குனிந்த வண்ணமே இருந்தனர். சிறிது நேரத்தில் போலீஸ் அங்கு வரும் சப்தம் கேட்டது. சைரன் சத்தம் கேட்டதுமே கல் வருவது நின்று விட்டது.

இன்ஸ்பெக்டர் செல்வன், மனோரஞ்சனின் குடும்ப நண்பர் ஆவார். அவர் தான் அங்கு வந்திருந்தார். செக்யூரிட்டி அவரிடம் நடந்ததைக் கூற போலீஸ் ஓடிச்சென்று சுற்றி யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்று தேட ஆரம்பித்தனர்.

அவர்கள் தேடிக்கொண்டிருக்கும்போதே, மதிவதனிக்கு நெற்றியில் அடிபட்டு லேசாக ரத்தம் வழிந்துக் கொண்டிருந்ததால்,மனோரஞ்சன் அதற்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்தான். அவன் உடல் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ரஞ்சன்! என்னாச்சு? யார் இப்படி பண்ணினது?”

“கொஞ்சம் நேரம் பேசாமல் இரு!” மனோரஞ்சன் கோபத்தில் கத்தினான். பின்பு அவன் இன்ஸ்பெக்டர் செல்வனுக்கு போன் செய்து மதிவதனியை அழைத்துக் கொண்டு தான் வீட்டுக்குச் செல்வதாக கூறி விட்டு காரைக் கிளப்பினான். வீட்டுக்குச் செல்லும் வரை மதிவதனி அவன் முகத்தை கவலையுடன் அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தாள்.

வீட்டுக்குச் சென்று காரை நிறுத்தியதும் மதிவதனி பிடித்துக் கொண்டாள்.”ரஞ்சன்....இப்பவாது என்ன நடக்குதுன்னு சொல்லுங்க? ப்ளீஸ்!”

“அது....எல்லாம் அந்த ரவி தான்னு நினைக்கிறேன். அன்னைக்கு நான் உன் கிட்ட சொன்னேன் இல்லையா?அதுக்கு மறுநாளே நான் ரங்கராஜன் அங்கிள் கிட்ட பேசிட்டேன். அவருக்கு இது பெரிய அதிர்ச்சி தான். ரொம்ப வருத்தப்பட்டார். தன் பையன்னு பார்க்க வேண்டாம், அவனை போலீசில் பிடிச்சு குடுக்கணும் அப்போ தான் அவன் திருந்துவான்னு சொன்னாரு. நான் தான் போலீஸ் எல்லாம் வேண்டாம்னு சொன்னேன். அப்புறமா ரவியை கூப்பிட்டு பேசினோம். முதலில் அவன் ஒத்துக்கவே இல்லை”

“அப்புறமா, ‘ஆமா நான் தான் பண்ணினேன். உங்களால என்ன பண்ண முடியும்?அப்படி இப்படி’ன்னு கத்த ஆரம்பிச்சிட்டான்.போலீசுக்கு போவோம்னு மிரட்டினோம். ஒழுங்கா எல்லா பணத்தையும் கொண்டு வந்து தந்துட்டா போலீசுக்கு போக மாட்டோம்னு சொன்னேன். உடனே அவன் நான் யாருன்னு உனக்கு காட்டுறேன் பாருனு என்னை மிரட்டிட்டு போய்ட்டான். அவன் தான் இப்படி பண்ணிருக்கனும்.சாரி மது. என்னால உனக்கு அடிப்பட்டிடுச்சு. இனிமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கனும்.”

இதைக் கேட்ட மதிவதனியின் முகம் இருண்டது.

“ஏய்!என்ன ஆச்சு?”

“அவன் இதோட விட மாட்டானே. வேற.....வேற ஏதாவது பண்ணிடானா?” அவள் குரல் நடுங்கியது.

“ஏய்! லூசு. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அவனுக்கு அந்த அளவுக்கு தைரியம் கிடையாது. சின்னபிள்ளைத்தனமா கல் எறிஞ்சுட்டு போயிருக்கான். அவன் என்ன பண்ணிட போறான்? அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.”

அவன் தேற்றிய பின்பும் அவள் முகம் தெளியவில்லை. “சரி வா, உள்ளே போவோம். இந்நேரம் இந்த விஷயம் வீட்டுக்கும் தெரிஞ்சிருக்கும். எல்லாரும் பயந்துட்டிருப்பாங்க” என்று சொல்லி

அவளை அழைத்துக் கொண்டுச் சென்றான்.
வீட்டில் அனைவரும் பதட்டமாக இருந்தனர்.
சூரியநாராயணன்,ரிதுநந்தன்,நிலா, பாட்டி பார்வதி அனைவரும் வந்து என்னவாயிற்று என்று மனோரஞ்சனிடமும், மதிவதனியிடமும் விசாரித்தனர். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக தாத்தா நாராயணனும் அவர்கள் பக்கத்தில் வந்தார்.

“ரொம்ப வலிக்குதா?” என்று மதிவதனியிடம் விசாரித்தார்.

அவள் மிகுந்த
ஆச்சரியத்துடன்,”இப்போ....பர...பரவாயில்லை....தா..தாத்தா...”என்றாள்.
அவர் மனோரஞ்சனிடம் திரும்பி,”அவ உன்னை நம்பி வந்திருக்கிற பொண்ணு. நீ தான் அவளை நல்லபடியா பாத்துக்கணும்” சொல்லிவிட்டு சென்ற அவர், மீண்டும் திரும்பி,”நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.” என்றார்.

மனோரஞ்சன் நம்ப முடியாமல் தலையை ஆட்டினான். தாத்தா பேசியதில் மனோரஞ்சனும், மதிவதனியும் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றனர்.

ரிதுநந்தன் கூட மதிவதனி பக்கத்தில் வந்து,”அண்ணி....இப்போ வலி எப்படி இருக்கு?டாக்டர் கிட்ட போனீங்களா?” என்று கேட்டான். அவன் என்றுமே அவளிடம் பேசியதில்லை என்று சொல்ல முடியாது, ஆனால் இணக்கமாக பேசிக் கேட்டதில்லை.

அப்படிப்பட்டவன் இன்று பரிவாக கேட்டதும் அவள் திக்கித் திணறி கொண்டு,”இல்லை ரித்து.....இது ரொம்ப சின்ன காயம் தான். இதுக்கு எதுக்கு டாக்டர்லாம்?”

ஆனால் அவன் ஏற்கவில்லை.”அண்ணா...எதுக்கும் காயம் எப்படி இருக்குனு பார்த்துட்டு ஒரு டி.டி போட்டுருங்க”

“சரிடா.பார்க்கலாம்”

நிலா அழுதே விடுவாள் போல நின்றுக் கொண்டிருந்தாள்.மதிவதனி தான் அவளை தேற்றினாள்.

“அய்யே!சின்ன பாப்பா அழுவுது பா. யாரவது உட்வர்ட்ஸ் கொண்டு வாங்க”

“போங்க அண்ணி, விஷயம் கேள்வி பட்டதும் நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?”

“சரி விடு பேபி”

“சரி சரி, நீங்க என்னை பேபினு கூப்பிட்டதால இதை விடுறேன். எனக்கு வேற ஒரே கவலை!எங்கே எரிஞ்ச கல் உங்க மூளை மேல பட்டு ஏதாவது ஆயிடுமோன்னு!”

அவள் கூறியது புரியாமல் மதிவதனி விழித்துக் கொண்டு நின்றாள்.

“ஆக்சுவெல்லா உங்களுக்கு மூளை கிடையாது தான், ஆனா இருக்கிற
அந்த கொஞ்ச நஞ்ச மூளைல அடி பட்டு உங்களுக்கு டிரஸ் டிசைன் பண்றதே மறந்து போயிடுச்சுனா? அப்புறம் நான் எப்படி காலேஜ் கல்ச்சுரலுக்கு பந்தாவா டிரஸ் பண்ணிட்டு போறது?” அவள் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும், மதிவதனி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அன்றும் மறுநாளும் அவள் அத்தை ராஜேஷ்வரி கூட அவளிடம் கனிவாக நடந்துக் கொண்டார். அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாவிட்டாலும் அவளை எந்த வேலையும் செய்ய விடாமல்,அவளுக்கு சாப்பிட,குடிக்க என்று ஏதாவது குடுத்துக் கொண்டே இருந்தார்.

இதையெல்லாம் பார்க்கும்போது,’இதுவும் மாறி போகும்.எல்லாம் நன்மைக்கே’என்ற வாசகம் எவ்வளவு உண்மையானது என்று உணர்ந்தாள் மதிவதனி.எல்லாரது அன்பில் அவள் திக்குமுக்காடி போனாள். அவள் ஊரில் இருந்தவரை அவள் அத்தை காமாட்சியிடம் எந்த விதமான அன்பையும் அவள் அறிந்ததில்லை.கல்யாணத்துக்கு பின் தனக்கு கிடைத்த இந்த அன்பான வாழ்க்கைக்கு அவள் கடவுளிடம் மனதார நன்றி சொன்னாள்.

இந்த சம்பவத்துக்கு பின் மதிவதனி தினமும் மனோரஞ்சனுடன் கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்தாள். முதலில் மனோரஞ்சன் இதை முற்றிலுமாக மறுத்தான். அவள் இன்னும் கொஞ்ச நாள் கம்பெனிக்கு வருவது ஆபத்து என்றுக் கூறினான்.

ஆனால் எவ்வுளவு சொல்லியும் அவள் கேட்கவே இல்லை. அவனுடன் போவதன் மூலம் அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அந்த ஆபத்தை தன்னால் முடிந்த அளவு தடுத்து நிறுத்தலாம் என்று நினைத்தாள். தன் கண் முன்னே மனோரஞ்சன் இருந்தால் தான் தன்னால் நிம்மதியாய் இருக்க முடியும் என்று உணர்ந்தாள்.

இப்படியெல்லாம் யோசிக்கும் போது தான்,மனோரஞ்சனை உயிருக்கு உயிராய் காதலிப்பது புரிந்தது.அவன் காதல் தனக்கு திரும்ப கிடைக்குமா என்று தெரியாத போதும், அவனை தன்னால் விட்டு குடுக்கவும் முடியாது, விட்டு விலகவும் முடியாது என்பதை உணர்ந்தாள்.பாரதியின் வரிகளை போல தன் காதலை எண்ணி களிக்கவும், அதில் திளைக்கவும் முடிவு செய்தாள்.

நாட்கள் இப்படியே சென்றுக் கொண்டிருக்க, வினோதன் அவர்கள் வீட்டுக்கு வருவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டான். ஆபீசில் கூட வேலை விஷயம் தவிர வேறு எதையும் பேசிக்கொள்வதை அவர்கள் தவிர்த்தனர். மதிவதனியும் இதை கவனித்தாள். இரு நல்ல நண்பர்கள் இப்படி பிரிந்துவிட்டனரே என்று சஞ்சலம் கொண்டாள்.

மனோரஞ்சனை நினைத்து, நினைத்து உருகி தவித்துக் கொண்டிருந்த மதிவதனிக்கு ஆறுதலாக அவள் வேலை அமைந்தது.மனசுக்கு பிடித்த வேலை செய்யும்போது மற்ற கவலையெல்லாம் பஞ்சு போல மறைந்து விடும் என்பதைக் கண்டாள்.அவள் செய்த பல டிசைன் அந்த கிளயன்டுக்கு மிகவும் பிடித்து விட்டது.

ஒரு நாள் மனோரஞ்சன் அவளிடம் வந்து ஒரு புது உடையை வடிவமைத்து தருமாறு கேட்டான். கம்பெனியின் முக்கியமான கிளயன்ட் யாருக்கோ பரிசளிக்க போவதாகவும், அவர் மிகவும் முக்கியமானவர் என்பதால் அந்த உடை ஸ்பெஷலாக இருக்க வேண்டுமென்றுக் கேட்டு கொண்டான்.

அதனால் அவளே கடைக்குச் சென்று துணியையும், மற்ற அணிமணிகளையும் வாங்கிக் கொண்டு வந்தாள்.காத்திருக்கும் காதலை உணர்த்தும் இளம்பச்சை கலரில் துணி வாங்கியிருந்தாள். அதில் மயில் கழுத்து கலரில் சரிகை வேலைப்பாடு செய்து, பச்சை மற்றும் நீல நிற கற்கள் பதித்திருந்தாள். புடவை முழுவதும் மஞ்சள் நிறம் இழையோடுவது போல மெல்லிய நூல்வேலை செய்திருந்தாள்.அதுமட்டுமல்லாது அந்த உடைக்கு பொருத்தமான கம்மல், மற்றும் நெக்லஸ் பட்டு நூலில் செய்திருந்தாள்.

புடவையை மிக அழகாக தோகை விரித்தாடும் மயிலை போலவே முடித்திருந்தாள்.இது வரை அவள் செய்த வேலைப்பாடுகளில் இது மிக மிக அழகாக இருப்பதாக தோன்றியது.

காதலில் விழுந்தால் எல்லாமே அழகாக தெரியுமாமே! அதனால் தான் இந்த உடையும் இவ்வளவு அழகாக தெரிக்கிறதோ என்று நினைத்தாள்.ஆனால் அவள் கருத்தை பொய்யாக்கி மனோரஞ்சனும் அந்த உடை மிக மிக அழகாக இருப்பதாகக் கூறினான்.குடுக்க மனசே இல்லாமல் அந்த உடையை மனோரஞ்சனிடம் குடுத்தாள்.

இந்நிலையில் மனோரஞ்சனின் தந்தையும், தாயும் ஒரு திட்டம் தீட்டினர்.....

புலரும்
 
Top