Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-26

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றிரவு வழக்கம் போல் மற்றோரு அறையில் இருந்த பனித்துளி அங்கேயே உறங்கிவிட சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தவன் அவள் அருகில் படுத்து உறங்கும் அவளையே ரசித்துக்கொண்டிருந்தான். தன் கைகள் இரண்டையும் ஒன்றிணைத்து தலையணையில் வைத்தவாறு அதன் மேல் தன் முகத்தைக் கிடத்தி அமைதியாக உறங்கும் அவளைக் கண்டவன் தன்னையும் அறியாமல் உதட்டோரத்தில் சிறு புன்னகை ஒன்றைத் தவழவிட்டான்.
"முன் ஜென்மத்துல அல்லி ராணியாப் பொறந்திருபையா டி? அதென்ன எப்போ பாரு என் கிட்ட மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டே பேசுற? ஒரு வேளை நீ என்னை விட்டு விலகி விலகி போறதால தான் என் மனசு உன்னை நெருங்கி நெருங்கி வருதோ என்னவோ? வீட்ல இருக்கிறது நீயும் நானும் மட்டும் தான். நானும் காலையில வேலைக்குப் போனா ஈவினிங் தான் வரேன். அப்போ கூட என்கிட்டப் பேசமா எப்படி டி உன்னால இருக்க முடியுது? இருந்தாலும் சொல்றேன் உன்னைப் போல வீம்பு யாருக்கும் ஆகாது டி..." என்றவன் அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் அந்தத் தலையணையைத் தூக்கி வீசிவிட்டு அவளருகில் படுக்க இருவரின் மூச்சுக்காற்றும் மற்றொருவர் மீது மோதுமாறு உறங்கினார்கள்.
எப்போதும் போல் அலாரம் இல்லாமல் காலையில் கண்விழித்தவள் தன்னை எதுவோ இழுத்துப் பிடித்திருப்பதைப் போல் உணர்ந்து திடுக்கிட்டு எழ அவளை தன்னுடைய கையால் அணைத்தவாறு உறங்குபவனைக் கண்டதும் எரிமலை வெடிக்கத் தயாரானது. அதன் வெளிப்பாடாக தன்னைச் சிறைசெய்திருந்த அவன் கரத்தைப் பிடித்து தூக்கி வீச அந்தச் செய்கையில் விழித்தவன் அவளுடைய பார்வை கொடுத்த போர்முரசை உணர்ந்தவனாக போர் தொடங்கு முன் சமாதானக்கொடியை ஏவ தயாராகி எழுந்து அமர்ந்தான்.
"என்ன நெனச்சிட்டு இருக்க நீ? யாரைக் கேட்டு இந்த ரூம்குள்ள வந்த?" என்று முடிக்கும் முன்னே போர் நாதமான சங்கொலியை தன்னுடைய கரத்தால் மூடியவன்,
"சத்தம் போடாத... அப்பா வந்திருக்காங்க... அவர் இந்நேரம் வெளியில பேப்பர் படிச்சிட்டுக் கூட இருக்கலாம்... கீப் குவைட்..." என்று ஹஸ்கியில் பேசியவனை விந்தையாகப் பார்த்தாள் பனித்துளி.
அவளின் பார்வையை வைத்தே இனிமேலும் சண்டை வளர்க்க மாட்டாள் என்றுணர்ந்து கையை எடுத்தான்.
அவளோ இன்னும் நம்பாதப் பார்வையையே செலுத்த,"டைம் சிக்ஸ் தேர்ட்டி ஆகப்போகுது. நான் போய் நான் வெஜ் எடுத்துட்டு வரேன்... இன்னைக்கு சன்டே கூட்டமா வேற இருக்கும்... அண்ட் தயவு செஞ்சு நம்ம பிரச்சனையை இந்த நாலு சுவருக்குள்ள வெச்சுக்கலாம்... வெளிய காட்டிடாத தாயே உனக்குப் புண்ணியமாப் போகும்..." என்றவன் மேற்கொண்டு எதையும் பேசாமல் ரெஃப்ரெஷ் ஆக மறு அறைக்குள் செல்ல வேண்டி வெளியேற இங்கே மொட்டு தான் குஷாவின் செய்கைகளை பாம்பாக எண்ணி பயப்படவும் முடியாமல் பழுதென கடக்கவும் முடியாமல் திண்டாடினாள். பிறகு தன்னை ரெஃப்ரெஷ் செய்தவள் வெளியேற எண்ணி பிறகு ஒரு கணம் தன்னையே கண்ணாடியில் பார்த்தவள் வேறு உடை அணிந்து வெளியே சென்றாள். அவள் இங்கே வந்து சில நாட்கள் மட்டுமே சேலையும் சுடிதாரும் அணிந்தாள். அதன் பின் எப்போதும் போல் பாவாடை சட்டை தான் அணிகிறாள். ஊரில் வேலை செய்யும் போதெல்லாம் அதற்கு ஏதுவாக அவ்வாறே உடையணிந்து பழகியவளுக்கு இங்கேயும் அப்படியே தான் இருக்க பிடித்தது.
"வாங்க மாமா... சாரி நீங்க வந்ததைப் பத்தி எனக்குத் தெரியாது..." என்று மிகச் சாதரணமாகவே வார்த்தைகள் விழுந்தது. மொட்டுவின் குணம் இது தான். பிடிக்குதோ இல்லையோ யாரிடமும் பாசாங்கு செய்து போலியாகப் பேச அவளுக்குப் பிடிக்காது.
"நான் வர விஷயம் அவனுக்கே தெரியதுமா... வேற வேலை விஷயமா வந்தேன். ஆனா வேலை முடியல... அதான் திடீர்னு..." என்றவர் மேற்கொண்டு எவ்வாறு பேசுவதென்று தெரியாமல் நிறுத்த,
அவளோ அவருக்கு காஃபி கொடுத்து வேலையில் மூழ்கினாள். அங்கே ரகுவோ இருபது நாட்களில் வீட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு மகிழ்ந்தார். என்ன தான் குஷா வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தாலும் இதுநாள் வரை அதொரு பேச்சுலர் ரூம் போலவே தான் இருந்தது. இன்று தான் அது ஒரு வீடாக நிறைவடைந்திருந்தது. பின்னே இதுவரை இந்த வீட்டில் அவர்கள் நால்வரும் அதிக நாட்கள் சேர்த்து இருந்ததில்லையே? அப்படியே வீட்டை நோட்டமிட்டவரின் கண்களில் அந்த தையல் இயந்திரம் தென்பட்டது. அதைக் கண்டவர் புரியாமல் யோசிக்க அப்போது வந்த குஷா,
"மொட்டுக்கு எம்ப்ராய்டரிங் செய்ய தெரியும் அண்ட் பிடிக்கும்பா... அதான் வாங்குனேன். நாலு நாள் தான் ஆகுது. இன்னும் யூஸ் பண்ணல..." என்றதும் அவனையே கேள்வியாகப் பார்த்தார் ரகு.
கடந்த ஞாயிறு அன்று குஷாவுக்கும் மொட்டுவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குஷா ஏதும் பேசாமல் சென்றுவிட முதலில் அவனுடைய இந்தச் செய்கை மொட்டுவுக்கும் எரிச்சலைத் தான் கொடுத்தது. ஆனால் அன்று முழுவதும் ஏன் அடுத்த நாளும் அவளிடம் எதையும் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் குஷா அவளுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தினான். எதற்கெடுத்தாலும் தன்னோடு ஏட்டிக்குப் போட்டியாக இருக்கும் குஷா திருமணம் முடிந்ததில் இருந்து அமைதியாக இருந்தாலும் ஏனோ அவனுடைய நேற்றைய அமைதி தான் அவளுக்கு எதையோ புரியவைக்க முயன்றது. மூன்றாம் நாளும் எதையும் பேசாமல் அவன் சென்றுவிட அன்று வீட்டிலிருந்த மொட்டுவுக்கு அமேசானில் இருந்து வந்த ஆர்டர் வியப்பளித்தது. அது தான் இந்தத் தையல் இயந்திரம். தையல் மட்டுமின்றி அதனூடே தையல் வேலைப்பாடும் செய்யலாம். முதலில் இது அட்ரஸ் மாறி வந்திருக்கிறது என்று குழம்பியவள் அதில் குஷாவின் பெயரைக் கண்டு வாங்கி வைத்தாள்.
ஒரு புறம் அவளுக்கு இது ஆனந்தத்தைக் கொடுத்தாலும் மறுபுறம் இவன் ஏன் இதெல்லாம் செய்கிறான் என்ற கேள்வியும் அவளுள் எழுந்தது. பின்னே அவளுக்கு எம்ப்ராய்டரி செய்ய பிடிக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் அவளை ஊக்கிவிப்பது என்னவோ லவா ஒருவனே! அன்று மாலை வந்தவன் இதைப் பற்றி எதையும் பேசாமல் மறுநாள் அவளுக்கு வேண்டிய பொருட்களின் லிஸ்டை தயார் செய்யுமாறு சொல்ல இவளோ வீம்பாக மறுத்தாள்.
"இங்க பாரு பனித்துளி இது உனக்குப் பிடிக்காத நடந்த மேரேஜ் தான். நான் ஒத்துக்கறேன். ஆனா நமக்கு ஒரு விஷயம் தப்பா நடந்தா எல்லாமே தப்பா தான் நடக்கணும்னு அவசியமில்லை. எப்பயுமே நதி போல வாழப் பழகிக்கணும். அது எப்பயும் வளைஞ்சு நெளிஞ்சு தான் போகும். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அது தன்னை மாத்திக்கும். என்னை நீ மேரேஜ் பண்ணதால நீ உனக்குப் பிடிச்சதை எல்லாம் மிஸ் பண்ணனும்னு அவசியமில்லை. அண்ட் நீ என்கிட்டயும் பேசுறதில்லை. இவ்வளவு பெரிய வீட்ல எப்படி நீ தனியா இருக்க? இத்தனை வருஷத்துல நானே ரெண்டு நாளுக்கு மேல இங்க தனியா இருந்ததில்லை. ஒன்னு அம்மாவைப் பார்க்க போயிடுவேன் இல்ல லவாவ பார்க்கப் போயிடுவேன். லிஸ்ட் எழுது சனிக்கிழமை வெளிய போலாம்..." என்றவன் அதன் பின் அவளிடம் பெரியதாக நெருங்கவில்லை.
அந்தச் சனிக்கிழமையும் வர அன்று காலையிலே அவளைக் கூட்டிக்கொண்டு அவளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்க சென்றனர். மதியம் வெளியே சாப்பிட்டவர்கள் மாலையில் அவளை வடபழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அவளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று அவனும் அறிவான். அதனால் அவளைக் கேட்காமலே கூட்டிச் சென்றவன் அவள் வேண்டுதலையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்களை மூடி எதையோ தீவிரமாக முணுமுணுத்தபடி வேண்டினாள்.
பிறகு சிறிது நேரம் அங்கே அமர்ந்தவர்கள் சுற்றிலும் வேடிக்கை பார்த்தனர். அப்போது அவனாகவே பேச்சை வளர்ந்தான்.
"பனித்துளி, உன்னைப் பழிவாங்கவோ இல்லை உன் அப்பாவை ஹர்ட் பண்ணவோ எல்லாம் நான் உன்னைக் கல்யாணம் செய்யல... சத்தியமா சொல்றேன் நம்ம மேரேஜ் நடக்குற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை நான் உன்னைக் கல்யாணம் செய்வேன்னு துளியும் எதிர்பார்கல... இட் ஆல் ஹேப்பண்ட்... ஆனா ஒன்னு என் லைஃப்ல மேரேஜ்ங்கறது ஒரு முறை தான்... அது நடந்திடுச்சு... அண்ட் இதனால நான் உன்னை விட்டுப் பிரிஞ்சிடுவேன்னு எல்லாம் கனவு கூடக் காணாத... ஏன்னா நம்ம வாழ்க்கையில நடக்குற எந்த ஒரு சின்ன அசம்பாவிதமும் நம்மைச் சுற்றி இருக்க எல்லோருடைய வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதை நான் நடக்க விடமாட்டேன்... உனக்குப் பிடிச்சா நாம ஒரு ஹஸ்பண்ட் வைப்பா வாழ முயற்சிக்கலாம். இல்லைனா கடைசி வரை இப்படியே ப்ரெண்ட்ஸ் வித்தவுட் பெனிபிட்டாவே வாழ்வோம். அட் எனி காஸ்ட் உன்னை தனியா விட மாட்டேன்... அதாவது உன் பாஷையிலே சொல்லனும்னா உன்னை வாழா வெட்டியா அனுப்ப மாட்டேன்... இதை நீ என்னுடைய சங்கல்பமா எடுத்தாலும் சரி சபதமா எடுத்தாலும் சரி இல்ல பழிவாங்கலா எடுத்தாலும் சரி எனக்கு அதுல கவலை இல்ல... உனக்கான நேரத்தை எடுத்துக்கோ... அண்ட் நான் ஒன்னும் அவ்வளவு கெட்டவன் இல்ல... நிச்சயம் இதை நான் உனக்குப் புரிய வெப்பேன்... கிளம்பலாமா?" என்றதும் அன்று வீட்டிற்கு வந்தார்கள். பிறகு தான் அன்றைய இரவு ரகு வந்துவிட அதை எதிர்பார்காதவன் அவளுடன் ஒரே அறையில் தங்கினான்.
ரகு அவன் சொன்னதைக் கேட்டு எதையும் பேசாமல் சென்று விட குஷா தனி ஒருத்தியாக சமைக்கும் மொட்டுவுக்கு உதவ சமையல் அறைக்குள் நுழைந்தான். உண்மையிலே அவனுக்கு பல நாட்களாய் அவளுக்கு உதவ ஆசை தான். ஆனால் அவன் உள்ளே நுழைந்தாலே ஏதோ கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போல் அருவருப்பாக ஒரு பார்வைப் பார்ப்பாள். அதனாலே அவன் எதையும் செய்யாமல் வந்துவிடுவான்.
இன்று தன் தந்தை இருக்கும் தைரியத்தில் உள்ளே நுழைந்தவன் அவளுக்கு உதவுகிறேன் என்ற பேர்வழியில் அவளைத் தொந்தரவு செய்தான். அவன் அதை எடுக்கிறேன் இதை எடுக்கிறேன் என்ற சாக்கில் அவளை உரச அதில் எம்பேரேஸ் ஆனவள் வெங்காயம் நறுக்கும் சாக்கில் தன்னுடைய விரலையும் சேர்த்து நறுக்கிக்கொள்ள அதை எடுத்து அவன் வாயில் வைத்ததும்,
"வேம்பையரா நீ? இப்படிக் குடிக்கிற?" என்றவளுக்கு,
"பாரேன் இங்கிலிஷ் படமெல்லாம் நீ பார்ப்பயா?" என்றவனுக்கு,
"ஏன் கிராமத்துல இருக்கவங்க இங்கிலிஷ் படமெல்லாம் பார்க்கக் கூடாதா?"
"யார் சொன்னா? அதெல்லாம் பாரு... அதானே எனக்கும் நல்லது..." என்றவன் நமட்டுச் சிரிப்புடன் வெளியேற,
"இதுக்கு ஏன் இவன் இப்படிச் சிரிக்கிறான்?" என்றவள் சமைக்க சட்டென அவன் சொன்னதன் அர்த்தம் அவளுக்கு விளங்க,
"பொறுக்கி பொறுக்கி... பிராடு காரப்பையன்..." என்று முணுமுணுத்தாள்.
பிறகு மூவரும் குளித்து வர ரகுவுக்கும் குஷாவுக்கும் அவள் அவர்களுக்கு உணவு பரிமாற அவளையும் சேர்ந்து சாப்பிட அழைத்தார். முதலில் தயங்கிய மொட்டுவின் கையைப் பிடித்து அவளை குஷா அமரவைக்க அவனை முறைத்தவாறே அமர்ந்தாள் மொட்டு.
ரசித்து உண்ட தன் தந்தையைக் கண்டவன்,"எப்படியிருக்குபா?" என்றவனுக்கு,
"நல்லா இருக்குடா..."
"அப்போ சொல்லுங்க உங்க பொண்டாட்டி சமையல் நல்லா இருக்கா இல்ல என் பொண்டாட்டி சமையல் நல்லா இருக்கா?" என்றதும் தந்தையையும் மகனையும் விந்தையாகப் பார்த்தாள் மொட்டு.
"இரு கோடுகள் தத்துவம் கேள்விப்பட்டிருக்கயா? அது மாதிரி உன் அம்மாவோட சிறு கோடுக்கு மேல உன் வைப் சமையல் பெருங்கோடா இருக்கு..." என்றார்.
இதுவரை ரகுவின் மேல் அவளுக்கு இருந்த ஒரு பிம்பம் கொஞ்சம் மாறுவதைப் போல் இருந்தது.
"உங்க லைஃப் எப்படிப் போகுது?" என்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
"எங்களுக்கு அவன நெனச்சா தான் கவலையா இருக்கு... நீங்க லவ் பண்ணதால அவங்க ஜோடி சேர்ந்தாச்சு... என்ன பண்றங்களோ?" என்றதும் மொட்டுவும் குஷாவும் அர்த்தமாகப் பார்த்துக்கொள்ள,பார்த்துக்கொள்ள,
"அப்பறோம் ஒரு விஷயம், உன் அம்மாக்கு சென்னையில் இன்ஸ்பெக்க்ஷன் போட்டிருக்காங்களாம்... இன்னும் பத்து நாள்ல இங்க வரணும் போல... நானும் இங்க இருக்குற பேக்டரி விஷயமா இங்க வரணும்... நாங்க இங்க வரதால உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா?" என்றதும் குஷாவும் மொட்டுவும் ஒருவரை ஒருவர் பார்க்க குஷாவுக்கோ அவர்கள் இங்கே வந்தால் எப்படியும் அவள் தன்னுடன் தான் தங்க வேண்டும் என்று குதூகலிக்க அதே காரணத்திற்காக மொட்டு தயங்கினாள்.
"என்ன ரெண்டு பேரும் இப்படி சைலன்ட் ஆகிட்டீங்க? நீங்க கவலை படவேண்டாம்... நாங்க இந்தப்பக்கம் குடியிருக்கோம் நீங்க அந்தப்பக்கம் குடியிருங்க... எப்படியும் இது ரெண்டு பிளாட் சேர்ந்தது தானே?" என்று சிரிக்க,
"இதெல்லாம் நீங்க கேட்கணுமா? இது உங்க வீடு... நீங்க எப்ப வேணுனாலும் வரலாம்..." என்றான் குஷா. அவன் எண்ணத்தை யூகித்தவளாக முறைத்தவள்,
"நீங்க வாங்க மாமா... எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல..." என்றவள் குஷாவைப் பார்த்து நகைக்க,
'இவ ஏன் சிரிக்கிறா? ஒருவேளை என்னைக் கீழ படுக்கவெக்க திட்டம் போடுறாளோ? நோ நெவெர்...' என்றவன் யோசித்தான்.
'இவங்க இந்த வந்தாலாவது நம்ம தனிமை குறையுதான்னு பார்ப்போம்...' என்று யோசித்தாள்.
*****************
அங்கே அனு தீவிரமாக வேலை தேட மறுமுனையில் லவா அனு சொன்ன ஸ்பார்க்கிற்காக எதிர்நோக்கி இருந்தான். அன்று மாலை வேலை முடித்து வீடு வந்தவன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு அனுவிடம் பேச வந்தான். சோபாவில் அமர்ந்து டிவி பார்த்தாலும் அவனுடைய கவனமெல்லாம் அங்கே லேப்டாப்பில் மூழ்கியிருந்த அனுவிடமே இருந்தது. அவளுடைய துறுதுறு நடவடிக்கை சின்ன சின்ன முக சுளிப்பு ஆகியவற்றில் கவனமாக இருந்தான். யாரோ தன்னை நீண்ட நேரமாக நோட்டமிடுவதைப் போல் உணர்ந்தவளுக்கு குறுகுறுப்பு எழ திரும்பி லவாவை நோக்கி,"என்னை டிஸ்டர்ப் பண்ணாத லவா நான் ரெசுமே ரெடி பண்றேன் ப்ளீஸ்..." என்றாள்.
"இதென்ன வம்பா போச்சு? நீயும் நானும் காத தூரத்துல இருக்கோம்... நான் எப்படி உன்ன டிஸ்டர்ப் பண்ணுவேன் சொல்லு?" என்று வம்பிழுத்தான் லவா.
முன்பெல்லாம் அவனை இவள் தான் வார்த்தைகளால் சீண்டுவாள். ஆனால் இப்போதெல்லாம் இதுபோல் லவாவும் சீண்டுவது அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அவன் கொடுத்த வலிகள் நெஞ்சின் ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. அவள் வாழ்வில் இந்த இரண்டு மாதத்தைப்போல் கஷ்டப்பட்டதே இல்லை.
"யாரோ ஒருத்தன் எனக்கு வேலை வாங்கித்தரேனு சொன்னான். அந்த நல்லவை மட்டும் என் கண்ணுல படவே மாட்டேன்குறான்..." என்றாள்.
"இல்ல புல்வெளி நானும் விசாரிச்சேன் ஆனா இன்னும் ப்ரெண்ட்ஸ் எதையும் சொல்லல..." என்றதும் அவனுடைய புல்வெளி என்ற அழைப்பில் சிலிர்ந்தவள்,
"அதென்ன திடீர் புல்வெளி?" என்றாள்.
"ஏன் அது தானே உன் பேரு..."
"அப்பப்போ ஞாபகப்படுத்துங்க... இல்லைனா எனக்கே மறந்திடும்..."
"அப்படியே ஆகட்டும் புல்வெளி அவர்களே!" என்றவன் மீண்டும் அவளை சைட் அடிக்க,
"உனக்கு ஆர்வலன்னு பேர் வெச்சதால இவ்வளவு ஆர்வமா சைட் அடிக்கிறயோ?"
இப்போது அவளைச் சீண்ட எண்ணியவன் அவள் அருகில் சென்று அங்கிருந்த பீம் பேகை போட்டு அமர அவன் கண்களில் தெரிந்த உணர்வை ரசித்தவள்,
"ஏன் லவா எனக்கொரு டௌட்... கிஸ் பண்ணா குழந்தை பிறக்குமா என்ன? இல்ல எனக்குத் தெரிஞ்சு ஒரு பையன் அவங்க அம்மா கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டானாம்... ஏன்னா பத்து வயசுல ஒரு பையனுக்கு இருந்த அந்தச் சந்தேகம் இன்னைக்கும் அந்தப் பையனுக்கு இருக்கானு தெரிஞ்சிக்கனும்... அதான்..." என்றதும் லவா எம்பேரேஸ் ஆக,
"என்ன சந்தேகத்தை செக் பண்ணிடலாமா?" என்று அவனை நெருங்கவும் லவா அவளுடைய குறும்பில் பயந்து சற்று விலக,
"ஏன் பயப்படுற? அப்படியே பிறந்தாலும் நான் தானே சுமக்கனும்... நீ ஏன் ஷாக் ஆகுற?" என்று சொல்லி நெருங்க அதற்குள் லவாவுக்கு அழைப்பு வரவும் அவன் இடத்தைக் காலிசெய்திருந்தான். உண்மையில் இத்தனை நாட்களாக அவளிடமிருந்து மிஸ் ஆனதாக நினைத்த இந்த வால் தனத்தை வெளிக்கொண்டு வரவே அவன் முயற்சித்தான். ஆனால் பதிலுக்கு அவளும் அவனை பங்கம் செய்வாள் என்று அவன் நினைக்கவில்லை.
மறுநாள் காலை பணிக்குச் செல்ல தயாரான லவா ஷு மாட்டும் நேரத்தில் தன்னுடைய ஐடி கார்டை காணாமல் அனுவை அழைக்க அவளும் அவனுடைய ஐடி கார்டை தேடி ஒருவழியாக கண்டுபிடித்தும் கொடுத்தாள். அதை அவனுடைய கழுத்தில் வேண்டுமென்றே தாலிபோல் மாட்ட சிரித்தவாறு எழுந்தவன் விடைபெறும் முன் அவளுடைய கன்னத்தில் அழுந்த முத்தமொன்றை வைத்தவன்,"பாரு முத்தம் கொடுத்துட்டேன் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு சோ சீக்கிரம் ஒரு குழந்தையைக் கொடு. நீதானே நேத்து சுமக்க ரெடின்னு சொன்ன..." என்றவன் புறப்படுவதைப்போல் பாசாங்கு செய்து அவளது மற்றொரு கன்னத்திலும் முத்தம் வைத்து விறுவிறுவென்று நடக்க இங்கே புல்வெளியின் நிலை தான் அந்தோ பரிதாபமானது.
ஏதோ தோன்றியவளாய் அங்கிருந்து பால்கனி வழியாக அவனைப் பார்க்க எப்படியும் அவள் வருவாள் என்று எதிர்பார்த்தவனாக கையில் குழந்தை வைத்திருப்பதைப் போல் சமிஞை செய்து காட்ட உண்மையிலே மிரண்டு தான் போனாள் அனு.
அங்கே லவாவின் நிலையோ சொல்ல முடியாத ஆனந்தத்தில் கூத்தாடியது. இப்போது யோசிக்கையில் இது எவ்வாறு நிகழ்ந்ததென்றே அவனுக்கு விளங்கவில்லை. அன்று மாலை வரை பித்துபிடித்தவள் போல் இருந்த அனு லவா வந்துவிட்டான் என்று அறிந்ததும் குறுகுறுக்க அலைந்தாள்.
அவனோ வேண்டுமென்றே ஒரு விளையாட்டு பொம்மையை வாங்கி வந்து அறையைத் தேட முதலில் புரியாமல் பார்த்தவளுக்கு எல்லாம் புரிய,
"பையனா பொண்ணா?" என்றதும்,
"உன்னைப் போய் அப்பாவினு நெனச்சேன் பாரு..." என்று அவனை நெருங்கியவளிடம்,
"பாரு நான் லேப்ல இருந்து வரேன்... எதுனாலும் நான் குளிச்சிட்டு வந்து பேசிக்கலாம்..." என்று பாத் ரூமிற்குள் நுழைந்தவனிடம்,
"எருமை எருமை உன்னை வா வெச்சுக்குறேன்..." என்றாள்.
"நான் எருமையா?" என்று யோசித்தவன்,
"எருமை என்ன பண்ணும் தெரியுமா? புல்வெளியைக் கண்டா மேய ஆரமிக்கும்... மேயவா?" என்று கருத்து பேச அவனுடைய இந்தப் பதிலில் உறைந்தவள் அதன் வெளிப்பாடாக வாயில் கைவைத்தவாறு அதிர்ச்சி அடைய நின்றாள்.
இங்கே அனுவிற்குத் தான் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. நேற்றுவரை அம்பியாகச் சுற்றித்திரிந்தவன் இன்று ஒரே அடியாக ரெமோவாக மாறிவிட்டானே என்று குழம்பினாள்.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் வீடெங்கும் அவளைக் காணாமல் வந்தவன் பால்கனியில் அவளைக் கண்டு,
"என்ன இங்க வந்து நின்னுட்ட?" என்றவனுக்கு முறைப்பை பரிசளித்தவள்,
"எப்படி ஒரேநாள்ல இவ்வளவு வளர்ந்த?" என்றவளுக்கு,
"சத்தியமா எனக்குத் தெரியில... நமக்கு கல்யாணமாகி நேத்து தான் நீ சிரிச்சத பார்த்தேன்... ஐ அம் சாரி அனு... உன்ன நான் ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல? இப்பயும் சொல்றேன் அனு எனக்கு உன்னைப் பிடிக்கும்... நீ சிரிக்குறதைப் பார்க்க எனக்குப் பிடிக்கும்... ரொம்ப நாள் கழிச்சு உன் முகத்துல அதைப் பார்த்ததும் எனக்குள்ள ஒரு பூஸ்ட்... எனக்குள்ள நிறைய குழப்பங்கள் அனுமா... நீ பாட்டுக்கு திடீர்னு எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்ட... நான் குஷா மாதிரி தடாலடி கிடையாது... கொஞ்சம் டைம் கொடு... சிரிப்பு அழுகை லவ் பிஸிக்கல் இன்டிமேசி இதெல்லாம் செயற்கையாவோ இல்ல கட்டாயப்படுத்தியோ வரக்கூடாது... அன்னைக்கு ஒரு கேள்வி கேட்ட இல்ல? ஒருவேளை நீயா இந்த மேரேஜை மாத்தலனா நான் யாரைக் கல்யாணம் பண்ணியிருப்பன்னு... ஏதோ ஒரு மூலையில எனக்கு நான் உன்னைத் தான் கல்யாணம் செய்வேன்னு ஒரு நம்பிக்கை இருந்தது... எப்போ குஷா மொட்டுவை விரும்பறான்னு தெரிஞ்சதோ அப்போவே அது ஊர்ஜிதமும் ஆகிடுச்சு. உன்னை நான் கல்யாணம் செய்யாம இருந்திருந்தாலும் கண்டிப்பா மொட்டு கழுத்துல தாலி கட்டியிருக்க மாட்டேன்... கண்டிப்பா இதை நீ நம்புறயோ இல்லையோ இதை நான் உனக்கு கட்டாயம் புரிய வெப்பேன்... எனக்கு பழைய அனு வேணும்... அதுக்கு கொஞ்ச நாள் ஆனாலும் நான் வெய்ட் பண்றேன்... ப்ரெண்ட் கிட்டச் சொல்லியிருக்கேன்... ஒன் வீக்ல விசாரிச்சு சொல்றேன்னு சொன்னான். இந்த வீக் எண்ட் கோல்கொண்டா போர்ட்க்கு விசிட் அடிக்கலாமா?" என்றதும் அவள் ஆமோதிக்க பழைபடி அவர்கள் பேசிக்கொண்டனர். (நேரம் கைகூடும்...)
இந்த வாரம் வேற அப்டேட் வராது மக்களே... நெக்ஸ்ட் வீக் பார்ப்போம்... கொஞ்சம் பிசி... இன்னும் மேக்சிமம் 8அத்தியாயம் வரும்... நன்றி?
 
வாவ் வாவ் செம்ம செம்ம எபி??????. குஷா?????(பனித்துளி நோ பொறாமை நான் குஷாவோட ரசிகையாக்கும்) குஷா அண்ட் மொட்டு ரெண்டு பேருக்கும் வர்ற ஒவ்வொரு வாக்கியமும் சூப்பர்????????. ரகுப்பா????(ஜானுமா முதல நான் ரகுப்பாக்குதான் விசிறி). லவா???? அனு??????. ஆனா பாருங்க லவா ரெமோவா மாறின அப்றமும் எனக்கு அம்பியாதான் தெரியுறான் அதுதான் ஏன்னு புரியல.எபி???????????????????????
 
Last edited:
வாவ் வாவ் செம்ம செம்ம எபி??????. குஷா?????(பனித்துளி நோ பொறாமை நான் குஷாவோட ரசிகையாக்கும்) குஷா அண்ட் மொட்டு ரெண்டு பேருக்கும் வர்ற ஒவ்வொரு வாக்கியமும் சூப்பர்????????. ரகுப்பா????(ஜானுமா முதல நான் ரகுப்பாக்குதான் விசிறி). லவா???? அனு??????. ஆனா பாருங்க லவா ரெமோவா மாறின அப்றமும் எனக்கு அம்பியாதான் தெரியுறான் அதுதான் ஏன்னு புரியல.எபி???????????????????????
நன்றி? அதுங்க அழிச்சாட்டியம் இன்னும் இருக்கு... கவலை வேண்டாம்? ரகு என் பிரென்ட் அப்பா இன்ஸ் பிரேசன்... என்ன இப்படி சொல்லிட்டீங்க? இதுக்காகவே அவன் அந்நியன் அவதாரம் எடுத்து கருடபுராணம் படி உங்களை தண்டிக்க போறான்?
 
ம்ம்ம்... இப்பதான் அண்ணனும் தம்பியும் முதல் படில கால் வச்சிருக்காங்க.... பாப்போம் அடுத்தடுத்து எப்புடி போறாங்கன்னு ??
 
ம்ம்ம்... இப்பதான் அண்ணனும் தம்பியும் முதல் படில கால் வச்சிருக்காங்க.... பாப்போம் அடுத்தடுத்து எப்புடி போறாங்கன்னு ??
அதெல்லாம் நல்லாவே வழிவானுங்க? நன்றி??
 
Wow semma epi...finally lover boys vanthachu pola......kusha ❤️? dialogues ellam semaya iruke.analum love nu sollama family happiness nu samarthiyama pesaran pa. Tailoring machine embroidery?mottu. Kusha sonan antha unaku pidichatha yen vidanum ?? aahhaannn.... enaku enna acharyam na mottuku kusha activities pathu doubt varave illaiya enna.ennathan manjal kayiru magic ninaicha kuta avlo verutha oruthan ivlo thooram parthu parthu seiyarathellam pathu kutava oru doubt varala??pavam kusha..apram raghupa ?epovume semma than.analum januma samaiyal pathi 1st epi la than ketutome??...anuma❤️asusual semma girl....adei 90's kids ennada pandringa?athum antha bommai?....nankuta anu sonnathum lava bayanthu ponatha pathu ayyo pavame ninaichuten..but antha Eruma karuthu sonnatha pathutu ??.....2 perume avanunga side ullatha theliva sollitanga?super
 
Top