Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-25

Advertisement

praveenraj

Well-known member
Member
அடுத்த நான்கு நாட்களில் சூரக்கோட்டையில் விருந்து மற்றும் இதர சடங்குகள் எல்லாம் நடந்து முடிந்தது. லவா குஷா இருவரும் வரும் திங்களன்று தங்கள் பணியில் சேரவேண்டும் என்ற காரணத்தால் அந்த வியாழக்கிழமை எல்லோரும் சென்னைக்குப் புறப்பட ஆயத்தமானர்கள். அந்த நான்கு நாட்களில் மொட்டுவும் சரி குஷாவும் சரி தங்களுக்குள் இருக்கும் பனிப்போரைப் பற்றி வெளியில் மூச்சைக்கூட விடவில்லை. அனு மற்றும் லவாவிற்கும் அதே நிலை தான். அவர்களுடைய பயமெல்லாம் எங்கே குஷாவும் மொட்டுவும் சண்டை போட்டுக் கொள்வார்களோ என்றதிலே இருந்தது. நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. அங்கே முதலிரண்டு நாட்கள் ரகு சுசியிடம் கூடப் பேச முடியாமல் தவித்தார். மற்றவர்களுக்கும் கிட்டதட்ட அதே நிலை தான். ஆனால் அன்று சுசி ரகுவிடம் மனம்விட்டுப் பேச ஜானகியும் நந்தாவிடமும் சித்ராவிடமும் பேசியிருந்தார். லவா குஷா இருவரும் வேறு வேறு வேலையில் இருந்தாலும் அவர்களின் பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. என்ன ஒன்று மொட்டுவை ஹைதராபாத் அனுப்பும் திட்டத்தில் தற்போது அனு இணைந்து கொள்ள சென்னையில் குடியேற இருந்த அனுவின் இடத்தில் மொட்டு வந்துவிட்டாள். அன்று எல்லோரும் சென்னைக்குச் சென்றிருந்தனர்.
ரகு ஜானகியின் இல்லமானது போரூரை அடுத்த ஒரு ரெசிடென்ஷியல் ஏரியாவில் இருந்தது. ஏழாண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட ஒரு அபார்ட்மெண்டில் இரண்டு டூ பி.எச்.கே பிளாட்டை ஒன்றாக இணைத்து ஒரே பிளாட்டாக வாங்கியிருந்தார்கள். அந்த வீட்டின் க்ரஹப்ரவேசத்தின் போது நந்தாவைத் தவிர எல்லோரும் வந்து தங்கியிருக்கிறார்கள். அப்போது நந்தாவை ஜானு அழைத்திருந்தாலும் ரகு அழைக்கவில்லை என்ற காரணத்தால் அவர் செல்ல வில்லை. தந்தையே செல்லாத போது தனக்கென்ன அங்கு வேலை என்று மொட்டுவும் அங்கு செல்லவில்லை. ஆனால் பிளாட் அருமையாக இருக்கிறதென்று வைத்தியும் கனகாவும் பெருமை பேசிய போது மொட்டுவுக்கு ஏனோ எரிச்சல் தான் வந்தது. அப்போது அவளுக்கு போர்ட் எக்ஸாம்ஸ் வேறு நடந்ததால் யாரும் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை. பனிரெண்டாவது முடித்ததும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு சென்னை வந்த அனு ஒரு வாரம் இங்கே லூட்டி அடித்து விட்டுத் தான் சென்றாள். இங்கே குடி வந்த சில வாரங்களிலே ஜானகிக்கு ட்ரான்ஸ்பெர் கிடைத்ததால் சொந்த வீடாயினும் இங்கே அவரால் நிரந்தரமாகத் தங்கமுடியாமல் போனது. லவாவும் குஷாவும் இளநிலை பொறியியல் முடித்து முதுநிலை பொறியியலை இங்கே தங்கி தான் படித்தார்கள். அப்போது வீட்டு வேலைக்கு ஒருவர் வந்து அவர்களுக்கு சமைத்துக்கொடுத்தும் செல்வார். அதன் பின் லவா வேலை நிமித்தமாய் ஹைதராபாத் சென்றதால் இந்த மொத்த வீட்டிற்கும் தனிக்காட்டு ராஜாவாகிப் போனான் குஷா. ரகுவுக்கு வாரத்தில் பாதி நாட்கள் வேலூரிலும் மீதி நாட்கள் ஜானகி இருக்கும் ஊரிலும் பொழுது கழியும்.
சென்னைக்கு வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று எல்லோரும் ஓய்வெடுக்க வேண்டி சென்றுவிட இந்தப் புதிய வீடும் இது கொடுக்கும் இந்தப் புதிய சூழலும் மொட்டுவைச் சலனப்படுத்தியது மட்டும் நிச்சயம். பின்னே அவளுக்கு சூரக்கோட்டையில் இருந்து இங்கு வர மனமே இல்லையே. தான் வளர்த்த மாடு, கோழி நாய், பூனைக்குட்டி, தோட்டம் முதலியவற்றை விட்டுப் பிரியும் வேளையில் அவன் முயன்று கட்டுப்படுத்திய கண்ணீர் வெளியேறிவிட்டது. ஏனோ சென்னைக்கு வரும் முன்பாகவே அவளுக்கு சென்னை வெறுத்துவிட்டது. பிடிக்காத ஊர் பிடிக்காத வீடு பிடிக்காத சூழல் இதற்கும் மேல் பிடிக்காத மாப்பிள்ளை என்று எல்லாமும் அவளுக்கு எதிராகவே இருப்பதாக எண்ணி வருந்தினாள்.
அவள் எண்ணம் மற்றவர்களுக்கும் புரியாமல் இல்லை. எல்லோரைக் காட்டிலும் லவா தான் அவளுக்காக அதிகம் வருந்தினான். பின்னே தன்னுடைய உற்றத்தோழியின் மனதை அவனைத் தவிர வேறு யார் நன்கு அறிவார்? அதும் போக இந்த நான்கு நாட்களில் எத்தனையோ முறை அவளிடம் நடந்ததை விளக்கி ஒரு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தவன் அதற்குத் துணிவில்லாதவனாக ஒதுங்கிக்கொண்டு இருக்கிறான்.
இரண்டு நாட்கள் அப்படியே கடக்க குஷா, மொட்டு, நந்தா, சித்ரா ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் எல்லோரும் லவாவை குடிவைக்க ஹைதராபாத் சென்று விட்டனர். குஷாவுக்கு இன்றளவும் நந்தாவைக் கண்டால் ஒரு கோவம் வருகிறது தான். ஆனால் நடந்தவற்றை எல்லாம் மறக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறான். அதும் போக அடிக்கடி லவா அவனுக்கு தான் இட்ட நிபந்தனையை நினைவுபடுத்த முயன்ற அளவுக்கு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறான்.
"எப்படி மாப்பிள்ளை இந்த வீட்ல தனியா இருந்திங்க?" என்று அவர் கேட்ட கேள்விக்கு ஒரு புன்னகையுடன் பதிலளிக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தான். அதும் போக இந்த இடைப்பட்ட நாட்களில் ரகு வேறு தங்களிடம் பழையபடி உரையாடவில்லை என்ற ஏக்கமும் குஷாவை வாட்டியது. பின்னே இவர்களிடம் ஒரு நண்பன் போல் பழகும் தன்னிடத்திலாவது தங்களுடைய விருப்பத்தைச் சொல்லியிருக்கக்கூடாதா என்பது அவர் வருத்தம். அதனால் நந்தாவிடம் ஏதாவது மனஸ்தாபம் ஏற்பட்டால் தன் பெற்றோர்களுக்கும் தன் ஆசைகாதலிக்கும் இடையில் சிக்கிக்கொள்ள அவன் விரும்பவில்லை.
அந்த இரண்டு நாட்களும் சித்ரா சமைக்க அவருக்கு அருகிலிருந்து எல்லா உதவிகளும் குஷா தான் செய்தான். எதையோ பறிகொடுத்ததைப்போல் வலம்வரும் மொட்டுவை எப்படிச் சமாதானம் செய்யப்போகிறோம் என்ற கேள்வி தான் அவனுக்கு முன் பூதமாக இருந்தது. அன்று மதியம் சித்ராவிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தான் குஷா. அப்போது தான் ஒரு தாயாக தன் மகளைப் பற்றிப் பேசினார் சித்ரா.
"மாப்பிள்ளை உங்ககிட்ட..." என்று ஆரமித்தவரிடம்,
"ஐயோ அத்தை என்னை குஷானே கூப்பிடுங்க... இது என்னவோ வேற ஆள் மாதிரி இருக்குனு நான் சொன்னேனில்ல?" என்றவனின் ஈகோ இல்லாத பேச்சு சித்ராவுக்கு மனநிறைவு கொடுத்தது.
"அப்படியில்லப்பா... இதுவரை இருந்தது வேற இப்போ வேற..." என்றதும் பொய்யாக குஷா கோவிக்க,
"சரிப்பா..." என்றவர் தயங்க,
"எதுனாலும் சொல்லுங்க..." என்றான் குஷா.
"அவளுக்கு கொஞ்சம் முன்கோபம் வரும். அவங்க அப்பா மாதிரி... போதாக்குறைக்கு அவங்க தாத்தா வேற அவ்வளவு செல்லம்... இந்த இடம் சூழல் எல்லாம் அவளுக்குப் புதுசு... நானும் சொல்லியிருக்கேன்... இருந்தாலும் எதாவது தப்பா செஞ்சா கொஞ்சம் பொறுமையா சொல்லுப்பா..." என்று அவர் முடிக்கும் முன்னே,
"ஏன் அத்தை எனக்குத் தெரியாதா என்ன? என்னமோ இன்னைக்குத் தான் அவளை நான் பாக்குற மாதிரி சொல்றிங்க? நான் பாத்துக்கறேன்... என்மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல?" என்று குஷா நிறுத்த,
"அதில்ல குஷா, கோவம் வந்தா என்ன பண்ணுவான்னு அவளுக்கே தெரியாது..." என்று சொல்ல,'ஆனா எனக்குத் தான் தெரியுமே? இத்தனை வருஷமா என்கிட்ட வெறும் கோவம் மட்டும் தானே பட்டுட்டு இருக்கா...' என்று நினைத்தவன் அவருக்கு ஆறுதல் வார்த்தை கூற அப்போது பார்த்து அங்கே வந்த மொட்டுவுக்கு எல்லாமும் கேட்டது.
'பிராடு பையன் பிராடு பையன்... என்னமா ஆக்டிங் கொடுக்குறான் பாரு... ஏம்மா பாலுக்கு காவல் பூனையா? இவனை நம்பி என்னை ஒப்படைச்சிட்டுப் போறீங்க? எனக்கு இது எதுவுமே பிடிக்கலமா... என்னை நீ உன்கூடவே ஊருக்குக் கூட்டிட்டுப் போயிடுமா...' என்றவள் இப்போது தான் அவள் எவ்வளவு பலவீனமடைந்து உள்ளாள் என்றே அவளுக்குப் புரிந்தது.
அங்கே லவாவையும் அனுவையும் ஹைதராபாத் கூட்டிச் சென்றவர்கள் அவனுடைய இல்லத்தை ஒழுங்குபடுத்தி அவர்கள் குடித்தனம் செய்ய தேவையானவற்றை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அன்று மாலை அங்கே இருக்கும் கடைத்தெருவில் வைத்தியுடன் நடைபயணம் மேற்கொண்ட அனு அருகில் யாருமில்லை என்று அறிந்து தன் தாத்தாவிடம் சிறிது மனம்விட்டுப் பேசினாள். அதில் தெரியவேண்டிய உற்சாகத்தைவிட வருத்தமே மேலோங்கி இருந்தது. அதைப் புரிந்துகொண்டவர்,
"இங்க பாருமா என்ன நடந்தாலும் உன் தைரியத்தை மட்டும் நீ விடக்கூடாது... எதையும் எதிர்த்துப் போராடனும் அதை விட்டுட்டு அன்னைக்கு மாதிரி கண்ணைக் கசக்கிட்டு இருக்கக்கூடாது..." என்று ஆறுதல் சொல்ல,
"தாத்தா நான் தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது தாத்தா... என்னால அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் ஸ்பாயில் ஆகிடுமோனு பயமா இருக்கு..." என்றவளுக்கு,
"இங்க பாரு அனுமா... வீணா கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம லவா கிட்ட எல்லாத்தையும் மனசு விட்டுப் பேசு... உன்னோட நிலை எனக்கும் புரியுது... ஆனா இனி நீ உன் வாழ்க்கையை நெனச்சு பயப்பட வேண்டியதில்லை... உங்களுக்குள்ள இன்னும் புரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு... ஐம்பத்தி அஞ்சு வருஷம் ஆச்சு இன்னைக்கும் உன் அப்பத்தா செய்யுற சில விஷயங்களுக்கு எனக்கு அர்த்தம் விளங்காது... அதே நேரம் எங்களுக்குள்ளையும் மன வருத்தம் வரும்... ஆனா அது நம்ம சந்தோஷையும் நிம்மதியையும் பாதிக்கக் கூடாது. விட்டுக்கொடுத்துப் போகவும் பழகணும்... அவங்க வாழ்க்கையைப் பத்தி நீ யோசிக்காத... அது அவங்க பிரச்சனை... நீ உன்னோட வாழ்க்கையை மட்டும் வாழு... தனியா வாழப் போறீங்க அதனால் சூதனமா இருங்க..." என்று தன்னுடைய பேத்தியின் கவலைகளுக்கும் குழப்பங்களுக்கும் பதிலளித்தார்.
அதன் பின் அடுத்த நான்கைந்து நாட்கள் எல்லோரும் அங்கே தான் இருந்தார்கள். லவாவும் அனுவும் தனித்துப்பேச வாய்ப்பே அமையவில்லை. இப்போது யோசிக்கையில் லவாவுக்கு நிம்மதியாக இருந்தது. இதுவரை அவனை வாட்டிக்கொண்டிருந்த சிக்கல்களுக்கு விடை கிடைத்தவனாக உலா வந்தான். அதேநேரம் அனுவை எப்படியேனும் சமாதானம் செய்ய வேண்டி யோசித்தான். பின்னே மற்றவர்களிடம் பேசும் பொழுது அவளிடம் இருக்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அவனிடம் பேசும்போது குறைவதாய் உணர்ந்திருந்தான்.
அன்று பெரியவர்கள் அனைவரையும் ஊருக்கு அனுப்பிவிட ஜானகி தான் இவர்களின் வாழ்க்கையை எண்ணி கவலை கொண்டார். பின்னே இவர்களைப் பொறுத்தவரை மொட்டுவும் குஷாவும் காதலித்த காரணத்தால் தான் லவாவும் அனுவும் திருமணம் செய்ய வேண்டி வந்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். புறப்படும் முன் லவாவையும் அனுவையும் தனியே அழைத்து நிறைய அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்னைக்குத் திரும்பினார்கள்.
இத்தனை நாட்கள் வீடு நிறைய ஆட்கள் இருந்ததால் லவாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தவளுக்கு அவர்கள் சென்றதும் தனிமை ஆட்கொண்டது. அதும் போக வேலை செய்து பழகியவளுக்கு புதிய ஊரில் அதும் மொழி தெரியாத ஊரில் இருக்க சிரமப்பட்டாள். எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கலகலவென கதையளந்து பழகியவளுக்கு இந்த ஒரு நாள் தனிமையே சொல்ல முடியாத பாரம் கொடுத்தது. அதனால் அன்றே தன்னுடைய ப்ரொபைலுக்கு தகுந்த வேலை கிடைக்குமா என்று தேட ஆரமித்தாள். ஆனால் எவ்வளவு முயன்றும் அவளால் சில நினைவுகளை மறக்க முடியவில்லை. மொட்டுவிடம் அவளுக்குப் பேசவே துணிவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவளை நேரில் பார்க்கவே திராணி இல்லாமல் இருந்தாள் அனு. அனுவின் இந்த திடீர் அமைதிக்குப் பின்னால் மொட்டுவின் உணர்ச்சிகளற்ற முகமே இருந்தது. அவள் தினமும் குஷாவுடன் வாட்ஸ் அப் செய்கிறாள் தான். அவர்களின் வாழ்க்கை எப்படிப் போகிறது என்று தெரிந்துகொள்வதில் இவளுக்கு அதிக ஆவல் இருந்தது. அந்த ஆவலுக்குப் பின் இவளுடைய குற்றயுணர்ச்சியும் இருக்கிறது.
அன்றும் குஷாவுக்கு மெசேஜ் செய்தாள் அனு. அதில் கடுப்பானவன் அவளை அழைத்து,
"என்னாச்சு அனு உனக்கு? இங்கபாரு இந்தக் கல்யாணம் நடந்ததுக்கு நீ மட்டும் காரணமில்லை... அண்ட் நான் மனசார தான் இதைச் செஞ்சேன். எல்லாத்துக்கும் மேல இது எங்க வாழ்க்கை. நீ இதுல தலையிடாத புரியுதா? உன் லைஃபை மட்டும் நீ பாரு..." என்று கடுமையாகவே உரைத்தான். பின்னே அனுவின் மனதை அறியாதவனா குஷா? அவள் எவ்வளவு கலகலப்பாகப் பேசினாலும் இயற்கையில் இளகிய மனம் கொண்டவள். அவளுக்கு அதிர்ந்து பேச வராது. தன்னைச் சுற்றியுள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். அதில் யாரேனும் வருத்தமடைந்தால் அவருக்காக இவளும் வருந்துவாள். குஷா பேசியதில் அப்செட் ஆகியிருந்தவள் அந்த பால்கனியில் நின்று எதையோ வெறித்துக்கொண்டிருக்க அப்போது வீட்டிற்கு வந்த லவா அவளைக் கண்டு இன்று அவளிடம் பேசி சமாதானம் செய்யலாம் என்று வந்தவன் பின்னிருந்து அவளைத் தொட ஏனோ அதில் அதிர்ந்தவள் துள்ளி விழுந்தாள்.
"ஏ அனு நான் தான் என்னாச்சு?" என்ற லவாவிடம்,
"பெல் அடிச்சிட்டு வர மாட்டையா? எப்பயுமே எதையும் சொல்லிட்டுச் செய்யுற பழக்கமே இல்லையா உனக்கு?" என்று தன்னுடைய குற்றயுணர்ச்சியைக் கோவமாக உருமாற்றி லவாவிடம் வீசியெறிந்தாள். அனுவிடமிருந்து இப்படி ஒரு ரெஸ்பான்ஸை லவா எதிர்பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்தவன் அவளைக் காணாது போக அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி திடீரென்று பின்னிருந்து தொட அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்ததில் வருத்தம் கொண்டான்.
"இல்ல அனு, சாரி..." என்று லவா சொன்னதும் தான் தன்னுடைய தவறை உணர்ந்தவள்,
"தப்பு என் மேல தான்... ஏதேதோ யோசனை... அதையெல்லாம் உன்மேல காட்டிட்டேன்... சாரி" என்றதும்,
"என்னாச்சு அனு? ஆர் யூ ஆல் ரைட்?" என்றான்.
"லவா உனக்கு உண்மையிலே இந்தக் கல்யாணத்துல சம்மதமா இல்ல தாத்தா சொன்னாங்கனு ஒத்துக்கிட்டயா?" என்று கேட்டாள்.
"இதென்ன கேள்வி அனு? நான் விருப்பப்பட்டு தான் இது நடந்தது... ஏன் இந்த திடீர் கேள்வி?"
"இல்ல ஒருவேளை அன்னைக்கு நான் தாத்தா கிட்ட இதெல்லாம் சொல்லாம இருந்திருந்தா நீ யாரைக் கல்யாணம் செஞ்சி இருப்ப லவா?" என்று நேராக தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள்.
இந்நேரத்தில் இந்தக் கேள்வியை எதிர்பார்காதவன் முதலில் தடுமாறினாலும்,
"அப்பயும் நான் உன்னைத் தான் கல்யாணம் செஞ்சி இருப்பேன்..." என்றான்.
"அப்போ நீயும் என்னை லவ் பண்றயா லவா?"
"எனக்கு லவ்வுனு பர்டிகுலரா சொல்லத் தெரியல அனு... ஆனா நீ அன்னைக்கு எனக்கு ப்ரபோஸ் பண்ணதுல இருந்து எனக்குள்ள நிறைய சலனம். உண்மையைச் சொல்லனுமா நான் உன்னை சைட் அடிச்சேன், ரசிச்சேன்... உன்னைப் பிடிச்சது... உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணத நெஞ்சு நான் சிரிச்சிருக்கேன்... அதுக்குள்ள நிச்சயதார்த்தம் நடந்து எல்லாம் மாறிடுச்சு..." என்று சொல்ல,
"நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல லவா... எனக்கு எஸ் நோ எதாவது ஒரு பதில் வேணும்... உண்மையான பதில்..."
"இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா கண்டிப்பா எஸ் ஆகியிருக்கும்... ஆனா அதுக்குள்ள தான்..."
"அப்போ நீ என்னை விரும்பி கல்யாணம் செய்யல ரைட்?"
"அனு, ஏன் இப்படிப் பேசுற? எனக்குத் தான் உன்னைப் பிடிக்குமே?"
"பிடிக்கிறது வேற நேசிக்குறது வேற லவா... உனக்கு ரெண்டுக்குமான வித்தியாசம் புரியுதா?"
"இப்போ ஏன் இதெல்லாம் கேக்குற? நமக்கு தான் கல்யாணமே ஆகிடுச்சே? சோ இனிமேல் நேசிச்சுக்கலாம்..." என்ற வாக்கியத்தில் அனுவுக்குத் தேவையான பதிலை அவன் சொல்லியும்(உளறியும்) விட்டான்.
"ஓகே இரு உனக்கு நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்..." என்று உள்ளே சென்றாள் அனு.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... ஏன் உடனே முகம் வாடிடுச்சு?"
"லவா, நாம பேசலாம். கண்டிப்பாப் பேசலாம். இரு வரேன். நீ ரெப்ரெஷ் ஆகிட்டு வா..." என்று அனுப்பினாள் அனு.
(லவா அனுவை விரும்பவில்லையா? என்ற கேள்விக்கான பதில் இல்லை. அத்தியாயம் 23 ஐ மீண்டுமொரு முறை வாசிக்கவும்)
"இப்போ சொல்லு என்ன உன் பிரச்சனை?" என்ற லவாவுக்கு,
"லவா, எனக்கு உன்னைப் பிடிச்சது. அதாவது நான் உன்னை விரும்புனேன். உன்னோட கூச்சசுபாவம் நான் என்ன கேள்விகேட்டாலும் அதுக்கு இன்னொசென்ஸா ஒரு பதில் சொல்லி திரும்ப என்கிட்டயே நீ மாட்டிக்குறது நான் டீஸ் பண்ணா அசடுவழியுறதுனு இப்படி நிறைய விஷயம் உன்கிட்டப் பிடிச்சது. அதோட வெளிப்பாடா தான் நான் உனக்கு ப்ரபோஸ் பண்ணேன். ஆனா நீ பதிலேதும் சொல்லலனதும் உனக்கு என்னைப் பிடிக்கலைனு நெனச்சு தான் நான் குஷாவை மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்டேன். ஆனா உன்கூட நான் ஸ்பென்ட் பண்ண மொமெண்ட்ஸ் எனக்குக் கொடுத்த அந்த ஹேப்பிநெஸ் அந்த... என்ன சொல்ல வயித்துக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமில்லா உருண்டையை நான் உணர்ந்தேன். அது தான் உன்மேல எனக்கிருந்த லவ். ஆனா உன் நிலை அப்படியில்ல... நீ மொட்டுவைக் கல்யாணம் செஞ்சுக்க ஓகே சொல்லி மேரேஜுக்கு ரெண்டு நாள் முன்னாடி வரை வந்துட்ட... ஒருவேளை குஷா மொட்டுவை லவ் பண்ணாம இருந்திருந்தா நீ என்ன பண்ணியிருப்ப? அப்பயும் நீ என்னைக் கல்யாணம் செஞ்சு இருப்பையா?"
"நீ தப்பாப் புரிஞ்சிருக்க அனு... நீயும் குஷாவும் எப்படிப் பழகுனிங்களோ அப்படித்தான் நானும் மொட்டுவும்..." என்று முடிக்கும் முன்னே,
"நான் ஒன்னும் நீ மொட்டுவை லவ் பண்ணணு சொல்லவே இல்லையே? என் கேள்வியெல்லாம் ஒன்னே ஒன்னு தான்... நீயும் என்னை லவ் பண்ணயா?"
யோசித்தவன் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திண்டாடினான்.
"இப்போ புரியுதா? உனக்கு என்னைப் பிடிக்கும்... நான் ஒத்துக்கறேன். ஆனா லவ்? எனக்கும் குஷாவை அவ்வளவு பிடிக்கும் ஆனா அவன் கூட வாழப்போறோம்னு நினைக்கவே முடியல என்னால... உன் கண்ணுல நான் லவ்வைப் பார்க்குற மொமெண்ட் நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணலாம்... புரியுதா? பீலிங் ஆப் பிலாக்கிங் நெஸ்... அந்த பொசெசிவ் நெஸ் நான் உன்கிட்டப் பார்க்கணும்... நான் உன்னைத் தப்பு சொல்லல... பட் ப்ரூவ் பண்ணு... இல்லைனா எனக்கு மேலும் குற்றயுணர்ச்சி ஆகிடும்... கொஞ்ச நாள் போகட்டும்... தப்பா எடுத்துக்காத... இந்த விஷயத்தை எனக்கு உணர்த்தனதே மொட்டு தான். நமக்குள்ள என்னமோ ஒன்னு மிஸ்ஸிங்... அது வரட்டும்... அண்ட் நான் வொர்க் பண்ணலாம்னு இருக்கேன். ஜாப் ஆபேரிங்ஸ் பார்க்கணும்... உனக்கொன்னும் அப்ஜெக்சன் இல்லையே?"
"நான் வேணுனா என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட விசாரிக்கிறேன்..."
"கண்டிப்பா... எனக்கிங்க யாரையும் தெரியாது... நீ தான் ஹெல்ப் பண்ணனும்..."
"சூர் நல்ல கேன்டீனோட இருக்கக்கூடிய ஐடி கம்பெனியை விசாரிக்கச் சொல்றேன்..." என்று அவன் சிரிக்க,
"சோ ஃபண்ணி போடா..."
*************
நந்தா சித்ரா ஆகியோர் சூரக்கோட்டைக்குத் திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது. லவா- அனுவை குடித்தனம் வைத்தவர்கள் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பி குஷா மொட்டுவுடன் நான்கு நாட்கள் தங்கினார்கள். ஜானகிக்கு தன்னுடைய விடுப்பு முடிந்து பணியில் சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் லவா அனுவுக்கு கொடுத்த அதே அறிவுரைகளைக் கொடுத்து ஊருக்குத் திரும்பியிருந்தார்.
கடந்த பத்து நாட்களில் நிறைய நிகழ்ந்து இருந்தது. அவர்கள் எல்லோரும் ஊரில் இருந்தவரை குஷாவும் மொட்டுவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தார்கள். அன்று சித்ராவிடம் குஷா பேசியதைக் கேட்டவள் குஷாவை பொய்யன் என்றே முடிவெடுத்து விட்டாள். அதும் போக இந்தத் தனிமை வேறு அவளைப் பாடாய்படுத்தியது. குஷாவும் பணியில் சேர்ந்திருந்ததால் பகல் பொழுது முழுவதும் தனிமையிலே கழிக்க நேர்ந்தது. மாலை குஷா வீட்டிற்கு வந்தாலும் அவனிடம் பேச்சை வளர்க்கவே மாட்டாள். முதலில் இது எத்தனை நாட்களுக்குத் தொடரும் பார்க்கலாம் என்று மிதப்பில் இருந்தவனுக்கு நிலைமை கைமீறிச் சென்று விடுமோ என்ற அச்சமும் குடிகொண்டது. இன்று அதற்கொரு முடிவு கட்ட எண்ணியவன் இரவுகளில் பக்கத்துக்கு அறையிலே உறங்குவளை தன்னுடன் நெருங்க வைக்க முயற்சித்தான். மறுநாள் ஞாயிறு என்பதால் தாமதமாகவே விழித்தவன் டைனிங் டேபிளின் ஒரு முனையில் அமர்ந்து பேப்பர் படித்தவளின் அருகில் அமர்ந்ததும் அவள் கண்டுகொள்ளாமல் இருக்க அந்த நாளிதழை தன்வசப்படுத்தியவன்,
"இன்னும் எவ்வளவு நாளுக்கு இந்த சத்யாக்ரகத்தை நடத்துறதா உத்தேசம்?" என்றதும் முறைத்தவளிடம்,
"இங்கபாரு மொட்டு நடந்ததை உன்கிட்ட நான் அன்னைக்கே சொல்லிட்டேன். இருந்தும் திரும்ப சொல்றேன். அனு லவாவை விரும்பியிருக்கா... அவனும் அவ மேல சாப்ட் கார்னெர் வெச்சிருந்தான். எனக்கே கல்யாணத்துக்கு ஒருநாள் முன்னாடி தான் தெரியும். அது தான்..." என்று முடிக்கும் முன்னே,
"அவங்க லவ் பண்ணா அவங்க கல்யாணம் மட்டும் நடந்திருக்க வேண்டியது தானே? நீ எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுன? அன்னைக்கே என்கிட்ட இதைப் பற்றிச் சொல்லியிருக்கலாமில்லை? நாம வீட்ல பேசியிருக்கலாம்..."
"என்ன பேசியிருக்கலாம்? ஊரைக்கூட்டி கல்யாணம் வெச்சு கடைசியில நிப்பாட்டி இருந்தா வீட்ல எவ்வளவு அவமானப் பட்டிருப்பாங்க? அது போக உங்க அப்பாகும் என் அப்பாகும் ஏற்கனவே ஆகாது... அப்பறோம் பழி என் அப்பா மேல விழவா? அதும் போக கல்யாணம் வரை வந்து நின்னா உன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்னு நெனச்சியா? நீ என்ன சிட்டிலயா இருக்க? ஊர் வாய் முழுக்க உன் மேல தான் இருக்கும்... அண்ட் நான் ஒரு வில்லனாகி இருப்பேன்..."
"ஓ இல்லைனா மட்டும் நீ என்ன ஹீரோவா? இல்ல ஹீரோனு உனக்கு ஆஸ்கர் அவார்டா கொடுத்திருப்பாங்க? பிராடு காரப்பையன்..." என்று முணுமுணுக்க அந்த வார்த்தை குஷாவின் செவியிலும் விழாமல் இல்லை. பல்லைக் கடித்தவன்,
"நல்லதுக்கே காலமில்ல? பாவம்னு..."
"உன்னை யாரு எனக்குப் பாவம் பார்க்க சொன்னா? இல்ல இதுவரை நீ எனக்கு எதுல பாவம் பார்த்திருக்க? உனக்கு தான் என்னைப் பிடிக்காதே?"
"அப்போ உனக்கு என்னைப் பிடிக்குமா?" என்று விளையாட்டாகக் கேட்டாலும் அதில் அவனுக்கொரு சின்ன எதிர்பார்ப்பு இருக்க தான் செய்தது.
"ச்சீ உன்னை கல்யாணம் செய்யுறதும் கல்லைக் கட்டி கிணத்துல குதிக்கிறதும் ஒன்னு..." என்றவள்,
"உனக்குத்தான் என்னைப் பிடிக்காதில்ல? அப்பறோம் எதுக்கு இப்படிப் பண்ண?"
அவன் பாவமாகப் பார்க்க,
"இதென்ன சினிமாவா? கல்யாணம் முடிஞ்சதும் சுபம் போட்டு முடிக்க? ஆனா இதுக்கு அந்தத் தாத்தாவும் கூட்டு... ஆனா அந்தக் கடவுளுக்குத் தான் என்மேல கொஞ்சம் கூட இரக்கமே இல்ல... சின்ன வயசுல இருந்து நான் என்ன ஆசைப்பட்டாலும் அது மட்டும் எனக்கு நிரந்தரம் ஆகுறதே இல்ல... சரி இப்போ அடுத்து என்ன பண்றதா பிளான்? இப்படியே காலம் முழுக்க ஏட்டிக்குப் போட்டியா வாழுறதா?"
"ஏன் ஏட்டிக்குப் போட்டியா வாழனும்? உனக்கு சம்மதம்னா நாம ஏன் சேர்ந்து வாழ முயற்சிக்கக்கூடாது?"
"நீ புரிஞ்சி தான் பேசுறியா? உனக்கு மண்டையில ஒன்னும் அடிபடலையே? நம்மால ஒரு பத்து நிமிஷம் சண்டைபோடம இருக்க முடியுமா? அதும் போக உன்னை மாதிரி ஒருத்தன் கூடலாம்..." என்று முடிக்கும் முன்னே,
"அப்படி என்ன குறையைக் கண்ட என்கிட்ட?"
"என்ன இல்லை? முதல்ல மனுஷன்னா நாணயம் இருக்கனும். எனக்குப் பொய் பேசுறவங்களைக் கண்டாலே பிடிக்காது... அதும் போக நீ உண்மையே பேசினாலும் எனக்குப் பிடிக்காது..." என்றதும் அங்கிருந்து அகன்றான்.(நேரம் கைகூடும்...)
 
ரொம்ப கஷ்டம் தான் குஷா நிலைமை.... கொஞ்ச ஆட்டமாடா ஆடுன ???
 
ரொம்ப கஷ்டம் தான் குஷா நிலைமை.... கொஞ்ச ஆட்டமாடா ஆடுன ???
ஆமா ஆமா அவன் பார்க்க வேண்டியது இன்னும் இருக்கு??
 
குஷா ரெம்ப கஷ்டம்பா இந்த மொட்டுவ சமாதானம் பண்றது. என்னவாம் இந்த மொட்டுக்கு குஷா உண்மையை பேசுனாலும் பிடிக்காதாம்ல? பார்க்கலாமா இந்த கதை முடியும் போது குஷா என்ன பேசுனாலும் (கொஞ்சம் ஓவரா இருக்கோ ? பரவாயில்லை இருகட்டும் உண்மையா நடக்கலனாலும் இப்படி நினைச்சாவது பாத்துகிடுவோம்) உனக்கு(மொட்டுக்கு) ரெம்ப பிடிக்கும் ( ரைட்டர் ஜீ ய நம்பி சவால் விடலாமா? ட்விஸ்ட் ஏதும் வந்துராதே, எனக்கு மொட்டு நக்கலா சிரிக்குற மாதிரியே இருக்கு) . வைத்தி தாத்தா மொட்டுகிட்ட தனியா மாட்டலயா? அனுகிட்ட பேசிருக்காங்க பனித்துளிட்ட (நானும் குஷா மாதிரி பனித்துளினுதான் சொல்லுவேன்) ஏன் பேசல , அறிவுரை சொல்லல. ஒருவேளை தாத்தாவுக்கும் கில்டி ஃபீல் இருக்குமோ? இந்த லவாக்கு அனு மேல லவ் இல்லையா? ஒரு சோடி என்னன்னா லவ் பண்றத கண்ணுல பாக்கனும்னு சுத்திட்டு இருக்கு, இன்னோரு சோடி நீ லவ் பண்றது கண்ணுல தெரிஞ்சாலும் நான் கண்ண மூடிப்பேன்னு சுத்திட்டு இருக்கு எங்க போய் எப்படி முடியப் போகுதோ?? எபி???????
 
anuma ❤️ovvoru epilayum romba matured ah theriyarale.analum ivlo feel panna vaikathinga writer ji.lava kitta pesinathu Ellam ?semma anu....ethe mottuku chennai pidikalaya? starting la apdi than irukum ithellam oru ooranu.apram poga poga enga ooru Madras range ku pada arambichuruva mottu.dont wry.........??? Evlo getha suthitu iruntha oru paiyana kalyanam onna panni vaichu anti hero,poiyan, fraud,villain ?mothathula hero ah katave matinga polaye.unga heroes la ye intha kusha than ivlo damage agaran ponga....mottu avan pakka fraud than.innum flashback Ellam padicha avlo than kusha ?....athepdi pandrathellam pannitu ipo vanthu nambikai illaiya athaiyam?onnum soldrathuku illa.....enna irunthalum mottu pesinathu konjam over thano.ethana pidikala?kusha pakavum pavama than iruku.ethacum pathu pannividunga ?
 
Mottu naa in katchi, enakkum Madras pidikkathu,vera vazhi illa ingathaan irunthahanum,ji...Anu chance ye illa,avaloda feelings and thinking laam vera level,nalla well developed character Anuvodathu,semaya irukku,varavara Mottuva vida Anu character romba admire panna vaikithu, eppadi iruntha Kushava 420rangeku erakiteengale,what a pity,
thappu fullaa Nandha and Mottu mela, Mottuku reason theriyathu,ava yen therinchukala,illa therinchuka virumbalayaa,orunaal theriyumbothu feel pannuvaa thaan,but Kusha paavam illa,ava vaarthaiyaala avana hurt panraale,theriyiravara Tom & Jerry thaano,Kusha yethavathu pannuvaan,rombathaan panraa Mottu,bad girl,
Very interesting epi
 
குஷா ரெம்ப கஷ்டம்பா இந்த மொட்டுவ சமாதானம் பண்றது. என்னவாம் இந்த மொட்டுக்கு குஷா உண்மையை பேசுனாலும் பிடிக்காதாம்ல? பார்க்கலாமா இந்த கதை முடியும் போது குஷா என்ன பேசுனாலும் (கொஞ்சம் ஓவரா இருக்கோ ? பரவாயில்லை இருகட்டும் உண்மையா நடக்கலனாலும் இப்படி நினைச்சாவது பாத்துகிடுவோம்) உனக்கு(மொட்டுக்கு) ரெம்ப பிடிக்கும் ( ரைட்டர் ஜீ ய நம்பி சவால் விடலாமா? ட்விஸ்ட் ஏதும் வந்துராதே, எனக்கு மொட்டு நக்கலா சிரிக்குற மாதிரியே இருக்கு) . வைத்தி தாத்தா மொட்டுகிட்ட தனியா மாட்டலயா? அனுகிட்ட பேசிருக்காங்க பனித்துளிட்ட (நானும் குஷா மாதிரி பனித்துளினுதான் சொல்லுவேன்) ஏன் பேசல , அறிவுரை சொல்லல. ஒருவேளை தாத்தாவுக்கும் கில்டி ஃபீல் இருக்குமோ? இந்த லவாக்கு அனு மேல லவ் இல்லையா? ஒரு சோடி என்னன்னா லவ் பண்றத கண்ணுல பாக்கனும்னு சுத்திட்டு இருக்கு, இன்னோரு சோடி நீ லவ் பண்றது கண்ணுல தெரிஞ்சாலும் நான் கண்ண மூடிப்பேன்னு சுத்திட்டு இருக்கு எங்க போய் எப்படி முடியப் போகுதோ?? எபி???????
ஹாஹா அதானே? கண்டிப்பா அவங்க சூப்பர் ஜோடியா வருவாங்க? அவளுக்கு கோவம் சோ கோவிச்சிக்குடா... எல்லாம் சுபமாகவே முடியும்... டோன்ட் ஒர்ரி... நன்றி?
 
anuma ❤ovvoru epilayum romba matured ah theriyarale.analum ivlo feel panna vaikathinga writer ji.lava kitta pesinathu Ellam ?semma anu....ethe mottuku chennai pidikalaya? starting la apdi than irukum ithellam oru ooranu.apram poga poga enga ooru Madras range ku pada arambichuruva mottu.dont wry.........??? Evlo getha suthitu iruntha oru paiyana kalyanam onna panni vaichu anti hero,poiyan, fraud,villain ?mothathula hero ah katave matinga polaye.unga heroes la ye intha kusha than ivlo damage agaran ponga....mottu avan pakka fraud than.innum flashback Ellam padicha avlo than kusha ?....athepdi pandrathellam pannitu ipo vanthu nambikai illaiya athaiyam?onnum soldrathuku illa.....enna irunthalum mottu pesinathu konjam over thano.ethana pidikala?kusha pakavum pavama than iruku.ethacum pathu pannividunga ?
அனு practical பொண்ணு... ஓ அப்படியா அப்போ மொட்டுவும் பாட்டு பாடுவா? ஹா ஹா என்ன பண்ண அவன் செஞ்ச வேலை அப்படி? செஞ்சுடலாம் விடுங்க??
 
Top