Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 8

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
"ஹிக்கரி டிக்கரி டாக்
தி மௌஸ் ரன் அப் த கிளாக்
தி கிளாக் ஸ்டிரக் ஒன்
தி மௌஸ் ரன் டவுன்
ஹிக்கரி டிக்கரி டாக்


ஹிக்கரி டிக்கரி டாக்
தி மௌஸ் ரன் அப் த கிளாக்
த கிளாக் ஸ்டிரக் டூ
தி மௌஸ் வென்ட் "பூ.!"
ஹிக்கரி டிக்கரி டாக்...."

அபிநய தாரகையாய் மாறி சில்வண்டுகளோடு ஓர் வண்டாகி ரீங்காரமிட்டு இருந்தாள் ரித்து.

மகனிற்கு என்று தணிகா பார்த்துவந்த பெண்களில் எல்லாம் குறைவில்லை ஆனால் யாரை பார்த்தாலும் அன்னையான இவருக்குத் தான் மகனுக்கு எந்த பெண்ணும் பொருந்தாத ஓர் பிரேமை.

எந்த பெண்ணை கண்டாலும் மனம் ஆசையாய் சொல்ல மறுத்தது, "இவள் தான் உன் மருமகள்!" என்று.

அதனால் தணிகாசலத்தை பொறுமையாக பார்த்தாலும்; தன் விருப்பத்திற்கு ஏற்ற பெண்ணாக.

தான் கூறிய கோட்பாடுகளுக்கு உட்பட்ட பெண்ணாக கொண்டுவருமாரு கூறி அனுப்பிவிட்டார் சௌந்தர்யா.

எண்ணம் எல்லாம் மகனின் வாழ்வே முன்னிற்க.

அதே சிந்தனையோடு மழலையர் வளாகம் வந்திருந்த சௌந்தர்யாவின் காதுகளில் இந்த கோரஸ் ராகம் விழுக.

தன் விறைப்பு, மனக்கிலேசம் எல்லாம் பறந்ததை உணர்ந்தவர் ராகம் வந்த வகுப்பை நோக்கி நடையை எட்டிபோட்டார்.

உள்ளே சிறு மலர்களின் நடுவே மலர்ந்த செந்தாழமாய் சிரித்த முகமும் அழகில் விரித்த முகமுமாய்;

நிற்காது பாடலுக்கு ஏற்றவாறு கைகால்களை ஆட்டிக் கொண்டே ஆடி இருந்த பெண்ணவளை காண்கையில்

ஏனோ உள்ளமதில்,"தன் மகனிற்கு இவளே ஏற்றவள்!" என்ற எண்ணம் மின்னி மறைய 'திடுக்கிட்டார்' பெண்மணி.

"என்ன இது முதல்முறை காணும் பெண்ணை கண்டதும் இவ்வாறு ஒரு எண்ணம் சரியா!?"

"இந்த யோசனை சரியாக வருமா!?"

யோசித்தவர் தன்னுடன் நடந்துவந்த பள்ளி தலைமை ஆசிரியர் மேகலாவை ஒரு பார்வை பார்க்க.

முதலில் ரித்துவின் முகத்தில் படிந்த சௌந்தர்யாவின் பார்வை; இப்பொழுது மேகலாவின் புறம் திரும்புவதைக் கண்டு ரித்து பற்றிய தகவல்களை வழங்கி இருந்தார் அவர்.

"அந்த பொண்ணு பேர் பிரீத்தா மேம்.நம்ம ஸ்கூல்ல எந்த ஃபங்ஷன்னாலும் நிறைய ஹெல்ப் பண்ணுவா மேம். நிறைய தீம் அவதான் சொல்லுவா.நல்ல ஹெல்ப் ஃபுல் சோல்!" ஆரம்பித்து அடுக்கியவர்

"என்ன கொஞ்சம்....!" பாதியில் நிறுத்தினார்

'என்ன..!?' என்பதாய் ஒரு அழுத்தப்பார்வை சௌந்தர்யா பார்க்க.

"என்ன தன் உயரம் குறைஞ்சது பத்தி எப்பவும் அவளுக்கு ஒரு கவலை இருக்கும் மேம்!"

"ஃபர்ஸ்ட் டைம் இன்டர்வியூ வந்தப்போ நாங்க எல்லாம் இந்த பொண்ணு ஹையர் செகண்டரிக்கு தான் இன்டர்வியூ வந்திருக்கும் போலன்னு பார்த்தா இந்த பொண்ணு பிரைமரிக்கு கூட இல்லாம நர்சரின்னு சொல்லிட்டா!?"

'வியந்து போனார்!' சௌந்தர்யா.

தன் பள்ளியில் உயர்நிலை பள்ளி கல்வி ஆசிரியராவது என்பது குதிரைக் கொம்பாக இருக்க.அதையே வேண்டாம் என்றிருக்கிறாள் எனில் அவளின் மனம் பெரிது தான் என்றவர்.

"ஏன் மேகலா அந்த பொண்ணு வேண்டாம் சொல்லிட்டா!?"

முதல்முறையாக ரித்துப்பற்றி கேட்க வாயைத் திறந்தார் பெரியவர்.

"இல்ல மேம் அவளுக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் மேம்.யாரும் தன் உயர்த்தை பார்த்து கிண்டல் பண்ணிடுவாங்களோ அப்படின்னு!"

"நாங்க ஹெல்ப் அப்படின்னு கேட்டு தான் டென்த் இலெவன்த்,டுவல்த் ஸ்டூடண்ட்ஸ்கு கிளாஸ் எடுக்க கூப்பிடுவோம்.இவ கிளாஸ்னா அவங்களும் அட்டென்டிவ்வா இருப்பாங்க! ஆனால் ஒரு நாள் ரெண்டு நாள் வர்றதுக்கே இந்த பொண்ணு ரொம்ப அந்நீசியா ஃபீல் பண்ணும்!!"

தனக்கு தெரிந்தவரை ரித்துவின் இயல்பைக் கூறிமுடித்தார் மேகலா.

அனைத்தையும் சிறு தலை அசைப்போடு கேட்டிருந்தாரே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை பெண்மணி.

அத்தோடு அன்றைய வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார் சௌந்தர்யா.

குளோபல் குரோத் மூலம் பெண்களின் மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கும் மையங்கள் பல இருக்க.

அதன் மூலம் பயன்பெறும் பெண்கள் கோடிக்கணக்கான பேர் உள்ளனர்.

பலருக்கு சௌந்தர்யாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி கிடக்கும் தொழில் ராஜ்யத்தில் வேலை நிச்சயம் உண்டு.

தனியே சொந்தக்காலில் நிற்க தயங்கும் பெண்களை பெரும் முதலாளியாக மாற்றி அழகுபார்கும் நிறுவனம் குளோபல் குரோத் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

என்ன பொய்யாக ஏழ்மையை காரணம் காட்டி உள்ளே நுழைய முடியாது.

நிச்சயம் ஏழ்மை சூழலில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே அங்கே அனுமதி வழங்கப்படும்.

தாங்களே முதலீடு செய்து தொடங்கும் தொழில்களில் குறிப்பிட்ட தொகையை நிறுவனத்திலே மாதாமாதம் வாங்கிக் கொள்வர்.

இதனால் யாருக்கும் தொழிலை தொடங்கிவிட்டு சோம்பேறியாக சுற்ற முடியாது; அப்படி கடுக்காய் கொடுக்க நினைத்தால் அதன்பின் காவல் துறையின் நிழலில் களி தான் கிடைக்கும்.

அனைவரும் அங்கே வேடந்தாங்கல் பறவைகள் பருவகாலம் நோக்கி வருவது போல அந்நிறுவனத்தின் நிழல் தேடி வந்தாலும் கூட;

சிலர் ஏமாற்று எண்ணங்களை சுமந்து கொண்டும் வந்து நிற்க.

அப்படிபட்டவர்கள் எல்லாம் அடுத்தமுறை கண்டிப்பாக களி தான் உண்பர் என்பது திண்ணம் என்பதால் பொதுவாக ஏமாற்று பேர்வழிகளின் வரத்து குறைந்தே இருந்தது.

வேலைகள் ஒருபுறம் இருந்தாலும் மனதில் ஏனோ மழலையர் கூட்டத்தில் 'மஞ்சரியாய்' மினுங்கிய கன்னிகையின் கள்ளமில்லா முகமே மினுக்கட்டான் போட்டிருந்தது.

*********************************
"ரேமா..!"

"என்ன சார்!?"

பணிவாய் கேட்டு நின்றாள் சாத்விக்கின் அழைப்பை ஏற்று அவன் அறை வந்த ரேமா.

தன்னிடம் அன்று கேட்ட கேள்விக்கு பிறகு கண்டும் காணாமல் சென்றவன் இன்று எதற்காக அழைக்கிறான்.

'ஒருவேளை பழிவாங்கும் படலமா ?'

பதுமை மனம் ஏதேதோ பாடாய்பட்டது.

ஆனால் அழைத்தவனோ,

தன் தொழில் முறை பங்குதாரர் ஒருவர் புதிதாக இன்றைக்கு வரப்போவதாக கூறி; அவரை அழைத்துக்கொண்டு கான்ஃபிரன்ஸ் ஹாலுக்கு வரும் வேலையை வழங்கி வெளியே அனுப்பினான்.

'என்ன இதற்குத் தான் அழைத்தானா!?' என அவள் மனமே குழம்பி அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவளின் குழம்பிய முகம் கண்டு குழம்பிய குளத்தின் மீன்பிடிக்க தயாராகினான் சாத்விக்.

கபில் கொடுத்த ஐடியா படுபயங்கரமாக செயலாக்கம் பெறுவதாக எண்ணினான்.

முன்பெல்லாம் இவன் வரும்போதே தலையை கவிழ்ந்து கொள்ளும் பெண் மான்.

இப்பொழுது எல்லாம் இவன் 'பார்வை தன் மீது திரும்பாதா?' என கண்களில் ஏக்கம் கூட்டி பார்ப்பதை கடைக்கண்ணால் கண்டு களிக்கின்றான் அற்புதன்.

முதலாளி கூறியதை செய்யும் சீரிய செம்மலாக சென்று வாசலில் காத்திருந்தாள் ரேமா.

அவளுக்கு இந்த வேலை துளியும் பிடிக்கவில்லை.

அவளுக்கு அறிவியலின் மீது தீரா தாகம்.ஆனால் அவளுக்கு கிடைத்ததோ இந்த அலுவலகத்தின் ரிஷப்ஷனிஸ்ட் வேலை தான்.

"இவ்வளவு பெரிய அலுவலகத்தில் தனக்கு இந்த வேலையாவது கிடைத்ததே!" என்ற எண்ணம் தான் அவளுக்கு.

"இந்த வேலையை வைத்துக் கொண்டு எப்படியாவது ஆராய்ச்சி கூடம் வரை அவள் செல்ல வேண்டும்!"

"அப்படியே படிப்படியாக உயர்ந்து ஒரு ஆராய்ச்சியாளராக வேண்டும்!" இதுதான் அவளின் லட்சியம்.

காதல் எல்லாம் அவள் லட்சியத்தின் 'தடைக்கல்' அப்படித்தான் எண்ணி இருந்தாள் காரிகை.

ஆனால் என்றைக்கு முகம் பார்த்து ஒருவன் காதலை கதைத்தானோ அன்றே கனவுகளோடு கள்ளமும் இணைய.

காதல் சொன்ன நாள் முதல் அவன் பாராமுகம் காட்ட.இவளோ மனம் கருகி போனாள்.

சரியாக அவன் சொன்ன நேரத்திற்கு குறிப்பிட்ட காரில் இருந்து இறங்கிய நபரை பூங்கொத்து கொடுத்து சாத்விக்கின் ஆணைப்படி கான்ஃபிரன்ஸ் ஹால் வரை சென்று விட்டுவிட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் அவள்.

இன்னும் தெளியாத இருவாச்சி முகம் கண்டு இதழுக்குள் மூரல் கொண்டவன் தன் வேலையை கவனிக்கலானான்.


**********************************

"என்ன பாய்ஸ் ரிசல்ட் என்ன வந்திருக்கு!?" என்றபடி வந்தார் ரகோத்வா.

ஆராய்ச்சி குழுவின் தலைவர்.


பொறுமையாக நாற்காலியில் அமர்ந்தவர் எலியின் மீது சென்ற வாரம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவை அறிய ஆர்வமாக நுண்ணோக்கியை சரி செய்தவாறு வினவ

அவரை சுற்றி நின்ற அப்துல்லா,ஜோ,ரபீக், ஶ்ரீதரன் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றிருக்க.

"யங் பாய்ஸ் என்ன நடந்தது!?" என்றவாறு ஸ்பெசிமனைக் கண்டவர் முகத்தில் அப்படி ஒரு ஆச்சர்யம்.

'ஆம்!'

அவர்கள் செல்ல வேண்டிய பாதையின் முதல் படி வெற்றியை தொட்டிருந்தது.

அதில் இன்னும் சில திருத்தங்கள் செய்தால் போதும்; கண்டிப்பாக அற்புதமான வெற்றியை ஈட்டிடலாம்.

"கங்கிராக்ஸ் யங் பட்டிஸ் ஃபர்ஸ்ட் சக்சஸ் எப்படி இருக்கு!?" என்றவர் இளையவர்களின் முகம் பார்க்க

அதுவோ அதிர்ந்த தோரணை மாறாது அப்படியே இருக்க

தன்னை மறந்து வாய்விட்டு சிரித்திருந்தார் ரகோத்வா.

"என்னப்பா இதுக்கே இவ்வளவு ஷாக்கா!?" என்றவர் தன் நண்பன் சுந்தரம் பற்றி பெருமையாய் கூறினார்.

"என் பிரென்ட் சுந்தர் அவன் கூட ரிசர்ச் பண்ணினோம் வைங்க எல்லாமே சக்சஸ் தான்!"

வட இந்தியர் என்பது அவர் கொஞ்சி பேசும் கொஞ்சம் தமிழே கூறிட.

அவரின் அனுபவத்தை ஆர்வமுடன் கேட்டிருந்தனர் நால்வரும்.

"ஆனால் புரோபஷர், சுந்தர் புரோபஷர் கண்டுபிடிப்புகள் நிறைய காணாமல் போனதாகவும்; சில திருடபட்டதாகவும் இன்னும் சிலது அவருடைய கார் விபத்துல அழிஞ்சதா சொல்றாங்களே நீங்க கூட அவரோட தானே இருந்தீங்க இந்த விசயம் எல்லாம் உண்மையா இல்லை கட்டுக்கதைகளா!?"

ஶ்ரீ தரன் அறியும் ஆவலில் கேட்டான்

"அவனுடைய இறப்பு அறிவியல் அறிஞர்கள் உலகத்துக்கு ஒரு பேரிழப்பு! அவன் கண்டுபிடிப்புகள் எல்லாம் இன்னும் அவன் கம்பெனி பேடெனட் வச்சு புரோடியூஸ் பண்ணிட்டு தானே இருக்காங்க!"

"வெளியில் இருக்கவங்க ஆயிரம் கதைகள் சொல்லலாம்; ஆனால் அவனுடைய எந்த கண்டுபிடிப்பும் திருட்டு போகலை.அவன் கார்விபத்தில் தான் அழிஞ்சதா போலீஸ் சொல்றாங்க இதுல எது உண்மை என்பது எனக்கு தெரியலை!?"

"ஆனால்! அவனோட இருந்த எனக்கு தெரியும்.அவன் திறமை என்னன்னு !?"

நண்பனை எண்ணி ஓர் நொடி அமைதியாக இருந்தவர் கண்களில் விழிநீரின் பளபளப்பு.

நாசுக்காக கண்ணீரை துடைத்து கொண்டவர்," ஓகே பாய்ஸ் உடனே ரிப்போர்ட் ரெடி பண்ணி டைப்பிங் வேலை எல்லாம் முடிங்க.நானும் சைன் பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பறேன்.இன்னைக்கு உங்களுக்கு ஹாலிடே!" என்றார் மனிதர்.



இவர்களின் முதல் கண்டுபிடிப்பு வெற்றி பெற்றது 'முதல் ஆனந்தம்' என்றால்;

ராணுவத்தில் கூட விடுமுறை உண்டு ரகோத்வா வாயில் இருந்து விடுமுறை எனும் சொல்வருவது கடினம் என்பதால் ;
"அப்பாடா..!"எனும் பெருமூச்சு வெளிப்பட.

தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு ரகோத்வா முன் சென்று நிற்க.

அவரோ புன்னகை முகமாக கையெழுத்தை இட்டு சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

எப்பொழுதுமே சிரிப்பார் என்றாலும்; இன்றைய வெற்றியில் அவரின் சிரிப்பு அதிகமாக இருந்தது.

"டேய் ஜோ உன் ஆளை பார்க்க போறியா!?"

"ஏன் அப்படி கேட்கற ஶ்ரீ !?"

"இல்லை எனக்கு போர் அடிக்குது எங்க போறது தெரில அதுதான் கேட்டேன்!"

"நான் ஷ்ரவன் ரக்ஷனை பார்க்க போறேன் நீயும் வா போகலாம் !"

"ஓகே மச்சான் அப்போ நாங்க கிளம்பறோம் மச்சான் நீங்க பொறுமையா வீட்டுக்கு போங்க!" என்று விடைபெற்று நண்பர்களை காண சென்றனர் இருவரும்.


**********************************

விடியல் பொழுது இதமாய் விடிய மகளையே இன்றைக்கு காலை உணவும், மதிய உணவும் பார்த்துக்கொள்ளுமாரு பணித்துவிட்டு தம்பதியராய் மகளின் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோதிட சிகாமணி ஒருவரைக் காண சென்றனர் ரித்துவின் பெற்றோர்.

"சுவாமி இருக்காரா !?"

"இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திருவார் கொஞ்சம் பொறுங்க!" என்ற காரியக்காரன் சொல்லிவிட்டு வாயிலில் இருந்த காவித்திரையை விளக்கிக் கொண்டு உள்ளே செல்ல.

இவர்கள் வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து வரிசையில் காத்திருந்தனர்.

இவர்களுக்கு முன்பு இருவர் இருக்க இவர்களுக்கு பின்னும் கூட சிலர் காத்திருந்தனர்.

கணவனும் மனைவியும் ஜோதிட சிகாமணி,சாஸ்திர சக்கரவர்த்தி ஶ்ரீ ல ஶ்ரீ வராஹசிம்ம சிதம்பரத்தின் வருகைக்காக காத்திருந்தனர்.

சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரின் அறைக்கதவு திறக்க சொர்க்க வாசல் திறந்தது போல பக்தி மயமாக வெளியில் காத்திருந்த மக்கள் கூட்டம் பார்த்திருந்தது.

சுற்றி இருந்த கூட்டத்தின் பரபரப்போடு தானும் தன் கரமதை குவித்தார் ராகவன்.

பக்தி பரவசமாக கன்னிகாவும் கரத்தை குவித்து கண்களை மூடி இவரின் பெயரை உருபோட.

காவி வேட்டி உடுத்தி, மேல் சட்டை இல்லாது காவி துண்டை மேனியில் போர்த்தி பலவண்ண பாசிமணி மாலைகளும், உத்ராட்ச மாலையும் அணிந்து அவரின் ஆசனத்தில் விரித்திருந்த பட்டு துண்டு இட்டிருந்த பலகையில் அமர்ந்தார்.

தன்னை நோக்கி கும்பிட்ட மக்களின் முகங்களை பார்த்தவாறு; தானும் ஒரு கும்பிடை போட்டவர்.

'செய்யும் தொழிலே தெய்வம்!' என்பதாக முன்னால் இருந்த எழுத்து மேசைக்கு ஒரு வணக்கம் செலுத்தி.

விநாயகரை முன்னிறுத்தி ஒரு பாமாலை பாடி; அன்றைய வேலையை ஆரம்பித்தார் மனிதர்.

பெரும் ஏமாற்றி வேலைக்கு 'கும்பிடு ஒன்றுதான் குறை!'

ஶ்ரீ ல ஶ்ரீ வராஹம் இவர்களை அழைக்கும் வரை சுற்றி இருந்த தெய்வ படங்களை பக்திமயமாக பார்த்திருந்தனர் தம்பதியர்.
அவரின் பார்வை தங்களின் மீது படிந்த உடன் உணர்ச்சி பொங்க

"சுவாமி....!"
பக்தியுடன் அழைக்க

கை நீட்டி ஜாதகத்தை பெற்றுக் கொண்டவர்; கட்டங்களை எல்லாம் கருத்தாய் எண்ணிவிட்டு,

"குருவின் பார்வை இந்த பெண்ணின் மீது படவில்லை.இந்த ஜாதகத்திற்கு திருமணம் என்பதே கடினம்!" என்றிட.

ராகவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது.

ஜாதகம்,ஜோதிடம் என்பதில் எல்லாம் அதிக பற்றும், நம்பிக்கையும் கொண்ட மனிதர் அவர்.

கன்னிகா புலம்பல் பேர்வழியாக இருந்தாலும் கூட கணவனை போல ஜோதிடத்தில் நாட்டம் இல்லை என்றாலும் கணவனால் மாற்றப்பட்டார்.

யாராலும் பணம் வாங்கமுடியாத ராகவனிடமே ; இரண்டு வார்த்தை கூறி,ஆயிரம் ரூபாயை நகட்டி இருந்தார் ஶ்ரீ ல ஶ்ரீ.

வெம்பிய மனதுடன் பிள்ளையின் வாழ்வு பற்றிய வேதனையோடு வெளியேறிய தம்பதியர் இருவரும் வீடு திரும்பும் வழியில் தென்பட்ட கோவில் ஒன்றிற்குள் நுழைந்தனர்.


ஏனோ ராகவன் மனம் தான் அந்த கோவிலை முதலில் நாடியது.

கொழுத்து செழித்த படர்ந்து பரவி வளர்ந்திருந்த வன்னி மரத்தடியில் பல ஆண்டுகள் ஆயுள் கொண்ட அம்மன் சிற்பம் ஒன்று இருக்க.

அதன் அருகே சிறு மாடம் அமைத்து பெரிய மண் மாடவிளக்கை அணையா விளக்காக ஏற்றி இருந்தனர்.

ஆள் நடமாட்டமே இல்லாத பூமி போல அத்தனை அமைதி.

காற்றில் ஆடும் கிளைகளின் ஓசையும்,அணிலின் க்ரீச்சிடலும், பறவைகளின் கூச்சலும் மட்டுமே அங்கே நிறைந்திருந்தது.

காற்று விசு
விசுவென வீசிட அந்த குளுகுளு காற்றாலும் கூட பெண்ணை பெற்றவர்களின் மனபுழுக்கத்தை போக்க முடியாது போக காற்றும் கவலையை சுமந்து சென்றது.

கவலையை சுமந்து அம்மனிடம் முறையிட்டிருந்த நேரம் அவர்களின் காதுகளில் வந்து விழுந்தது ஓர் சிரிப்பு சத்தம் தம்பதியர் அரண்டே போயினர் அந்த சத்தத்தில்.
 
Top