Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 23

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
இன்று நாளை என்று பல மாதங்களை விழுங்கி ஒருவழியாக நடைபெற்ற விழாவில் தான் 'எத்தனை மாற்றங்கள்!?'

காவல் துறை சூழ்ந்து கொண்டனர் ஐவரையும்.

தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்த ரகோத்வா அழைப்பு விடுத்திருந்தான் தன் கீழ் இருக்கும் ஒருவனுக்கு.

எல்லாம் ஷ்ரவன் கதையை
முடித்துவிடுமாறு ஆணை பணிக்க.

அதன்பின் தான் காவலில் சிக்கினான் கயவன்.

ஷ்ரவன் துரோகியின் முகம் காணவிரும்பவில்லை என்பதை விட சிறு வயது முதல் பார்த்து பழகிய ஒருவர் இவ்வாறு செய்தது அவனை உடைய செய்திருந்தது.

அவரை எதுவும் செய்ய மனம் வராது காவல் துறையில் சேர்ப்பிக்க தேவையான அனைத்தையும் முடித்துக் கொண்டு வருவதாக கூறியவன் அங்கே சென்றுவிட.

சௌந்தர்யா உடன் இல்லம் சென்றாள் ரித்து.

தன் ஏழு மாதக் கருவை சுமந்து கொண்டு
"இன்னைக்கு ஒரு நாள்ல எவ்வளவு அதிர்ச்சி!" தனக்குள் கூறிக்கொண்டு கீர்த்தனாவின் எண்ணிற்கு அழைக்க.

அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தகவல் வந்தது.

அவளின் சூழல் உணர்ந்தவள் தனக்கு பேச விரும்பும் போது கட்டாயம் அழைக்குமாரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.

ரம்ஜானுக்கு பெருமை பிடிபடவில்லை.

"யார் கணவனை பார்த்து ஏதோ சாதாரணமாக ஒரு வேலையில் இருக்கிறான்!" என்றனரோ;

அவர்களுக்கு எல்லாம் புலனத்தின் மூலம் இன்று சாதனை படைத்த கணவனின் தகவல்களை ஒளிபரப்பி இருந்தாள்.

"ஃபாத்திமா தன் பெற்றோருடன் இன்பமாய் பகிர்ந்தாள்!"இத்தகவலை.

"இன்ஷா அல்லாஹ் ஃபாத்தி முன்னாடி என் மானத்தை காப்பாத்திடீங்க!" மனதில் நன்றியை தெரிவித்தான் ரபீக்.

சிறையில் இருந்த தந்தையை காண சென்றான் சாத்விக்.

"மை பாய் வாடா கண்ணா அப்பா இப்படி பண்ணும்வேனா சொல்லு!?" என்றவர் தொடங்க.

"நிப்பாட்டு"என்பதை போல கையை பட்டென்று உயர்த்தியவன் கண்களை நிறைத்தது கண்ணீர்.

"உன்னை நான் எவ்வளவு நம்பினேன் ஏன் இப்படி பண்ணின சொல்லு!?உன்னால என் அம்மா தங்கச்சிக்கு எவ்வளவு பெரிய கஷ்டம்!?"என்றான் சாத்விக்.

"இல்லடா சாத்விக் நான் எதும் செய்யலை!" காணொளி பதிவு செய்தது மகன் தான் என்பதை அறியாது பேச.

"பொய் சொல்லாத.... பொய் சொல்லாத இந்த வீடியோவை ரெகார்ட் பண்ணினது நான் தான் என்கிட்டையே உனக்கு ஒன்னும் தெரியாது சொல்ற!"

"நீ செஞ்ச எல்லா வேலைக்கும் பலன் கிடச்சுது பார்த்தியா.நல்லா உள்ள போய் களி திண்ணு.உன் கனவு உன் ஆசைன்னு சுயநலமாக இருந்து ஒரு குடும்பத்தை அழிச்ச இல்ல இப்போ உன் குடும்பம் எங்க நிக்கிது பார்த்தியா!?" அழுகையின் இடையே பேசி இருந்தான் ஆரோன் சாத்விக்.

மகன் கேள்விகள் கேட்க கேட்க

"சொல் பொறுக்கா மனைவி,மகளை எண்ணி புழுவாய் சுருண்டது!"வாகீசன் மனது.

"இப்பொழுது சுருண்டு பலன் தான் என்ன!?"

தந்தையை கண்ட கையோடு நேரே ரேமாவை காண சென்றான் சாத்விக்.

"என்ன ஆரு ஆர் யூ ஹாப்பி!?" என்றாள் ரேமா.

"அவளை அவ்வாறு காண அவனால் முடியுமா என்ன!?"

கண்ணீர் அவன் கண்களை நிறைக்க.அவள் மீது செய்த உண்மை காதல் எல்லாம் அம்பக நீராய் உருகி ஓடியது.

"ஏன்டி அவங்க சொன்னாங்கன்னு உன் வாழ்க்கையை அழிச்சுட்டியே பாவி!" என்க.

"எல்லாருக்கும் ஒரு போதை இருக்கும் ஆரு உனக்கு அன்புன்னா போதை!"

"எனக்கு அறிவியல் போதை. சைன்ஸ் இல்லாம இந்த உலகமே கிடையாதுன்னு எங்க அப்பா சொல்லித்தந்த பாடம் ஆரு.
அந்த போதை ஒவ்வொரு கண்டுபிடிப்பின் போதும் அது குடுக்குற ஹேப்பி வேற எதுலையுமே கிடைக்காது ஆரு!"

"அதுக்காக இப்படியா உன்னை என்னால பார்க்க முடியலடி டார்லிங்!" என சொல்ல வந்தவன்.

"என்னால முடியலைடி!" இடம் மறந்து சூழல் மறந்து அவளுக்காக கண்ணீர் சிந்தினான்.

இப்பொழுதும் அவன் உண்மை அன்பு தான் அவளை அவனிடம் அடிபணிய வைத்தது.

"நான் கிளம்பறேன் ரேமா!" என்றபடி சாத்விக் நகர.

"ஆரு ஐ லவ் யூடா அண்ட் ஐ மிஸ் யூ!" என்றாள் ரேமா.

அவனால் முடியவில்லை அங்கிருந்து அழுகையை அடக்கிக் கொண்டு நகர்ந்தவன்.

அறையின் வெளியே வந்து பக்க சுவரில் மடங்கி அழுக தொடங்கி இருந்தான்.

அவன் குரல் உள்வரை கேட்டு அவளுக்கும் கண்ணீர் கோடுகள்.


**********************************

ஊட்டியில் இருக்கும் தங்கள் எஸ்டேட்டில் இருந்தாள் கீர்த்தி.

"நேற்று அண்ணன் ஏன் போனை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து விரட்டினான்!?" என்பது புரியவில்லை அவளுக்கு.

காலை தேனீர் உடன் பொழுது போக்கிற்கு எதுவும் இல்லாததால் செய்தி தாளில் சினிமா செய்தி படிக்கலாம் என்று எடுத்தவள்

முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் எழுதி இருந்த செய்தியை கண்டு கையில் இருந்த கோப்பையை தவற விட்டிருந்தாள்.

செய்தித்தாள் நசுங்கியது அவள் கண்ட செய்தியில்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சங்கீதாவும் செய்தியை கண்டவர் தான் ஒரு மூலையில் சென்று அமர்ந்துவிட்டார்.

"சில நாட்களாகவே கணவன் போக்கு சரியில்லை!" அவரிடம் உண்மை இல்லாததாக உணர்ந்து இவர் கேட்டதற்கும் கூட.

"அப்படி எல்லாம் இல்லை!" என்று மலுப்பியதன் பொருள் இன்று புரிந்தது.

"குடும்பத்தை அழித்து துரோகத்தின் சம்பளமாக கிடைத்த பணத்திலா இத்தனை நாட்கள் வாழ்ந்திருந்தோம்!?"
தன்னையே அருவருத்தாள் கீர்த்தி.

**********************************

"ஏய் விணு..!"

"உன்னைத்தாண்டி ராட்சசி..!"

"கூப்பிடுறேன் இல்ல திரும்புடி..!"

கூப்பிட கூப்பிட திரும்பாது 'ரப்பாக' செல்லும் மனைவியின் பின்னழகை ரசித்துக் கொண்டே நடந்தான் ரக்ஷன்.

முன்பு அவள் அவன் பின்னால் சுற்றிய போது ஆணெனும் மிடுக்கை அவன் காட்ட.

இப்பொழுது பெண்ணெனும் மிளிர்வை இவள் காட்டுகிறாள்.

'போ.. போ...' என்று விரட்டும் போது மீண்டும் மீண்டும் சென்று அவன் முன் நின்று வெறுப்பை சம்பாதிக்க வீணா விரும்பாது வீட்டிற்குள் அடைய.

ஶ்ரீனி தான் மகளை வீட்டிற்குள் அடையவிடாது அருகே இருக்கும் பூங்காவிற்கு செல்லுமாறு கூறினார்.

வயதானவர்கள்,குழந்தைகள் யாரென்று தெரியாத பலரின் இயல்புகளை விதவிதமான சூழலை உணர்வதற்கு அது உதவி என்று மகளுக்கு வழி காட்டினார் அந்த தந்தை.

இப்பொழுதும் அப்படித்தான் தன் நடை பயிற்சிக்காக வந்திருந்தவளை;அவள் இருக்கும் இடத்தை மாமனார் மூலமாக அறிந்து கொண்டு பின்தொடர்ந்து வந்திருந்தான் ரக்ஷன்.



"ஆனாலும் ஒருத்தன் பின்னாடியே வந்தா அலைய விடுவீங்களே இரக்கமே இருக்காதுடி உங்களுக்கு!" என்றான் சலிப்பாய்.

"ஓஹோ சார் அப்படி எத்தனை பேரை சுத்தி வந்தீங்க இல்லை உங்களை யாரு அப்படி அலையவிட்டது சொல்லுங்க!?"

"நான் யார் பின்னாடியும் போகலை.ஆனா எங்க ஆபீஸ்ல மஞ்சுன்னு ஒரு பொண்ணுக்கு என் மேல ஒரு அது!"

"உங்க மேல எது!?"

"அதுதாண்டி உனக்கு என்மேல வந்தது இல்ல அதுதான்!"

"அப்போ எனக்கு மட்டும் தான் உன்மேல வந்தது அப்படித்தானே.. நான் ஒரு மடச்சி உன்னை என்பின்னாடி சுத்தவிட்டு இருக்கணும்!"

"எங்க அப்பாகிட்ட அடிவாங்கி லோலோன்னு நீ லோல்பட்டு சீப்பட்டு எங்க அத்தைகிட்ட திட்டு வாங்கி ஷ்ரவன் கிட்ட கொட்டு வாங்கி...!"வரிசையாய் அடுக்கிக் கொண்டே செல்ல.

"பாவி கொலைகாரி ராட்சசி உனக்கு எப்படி எல்லாம் ஆசை பாரு!?"

"நீ மட்டும் நான் தான் உன்னை லவ் பண்ணேன்னு சொல்ற அதுமட்டும் சரியா!?"

"நான் அப்படி சொல்லல செல்லம் உனக்கு என்மேல வந்த அதே அது அவளுக்கும்னு என் மேலன்னு சொன்னேன்.ஆனா உன்மேல் எனக்கு வந்தது வேற யாரு மேலேயும் வராதுடி கன்னுகுட்டி!!" என்றிட.

"போதும் போதும் நீ பொழிஞ்ச பாசம் எல்லாம்.அதுதான் உன்னை தேடி வந்தப்போ எல்லாம் விரட்டினே இல்ல நீ. போடா உனக்காக அங்க அந்த பஞ்சரி காத்துட்டு இருக்கா தானே!" கணவனை பொறாமையால் விரட்ட.

அவனோ," ஏய் அவ பேரு பஞ்சரி கிடையாது ம..ம.. மஞ்சரி எங்க சொல்லு பார்க்கலாம்!"

"அடிங்க எடு அந்த கர்லாகட்டையை!"

அவனை துரத்திக் கொண்டு ஓடினாள் வீணா.

சிறு தூரம் ஓடுவது போல போக்கு காட்டியவன் கைசிறைக்குள் அவளை இழுத்துக் கொண்டான்.

"விடுடா என்னை விடு சொல்றேன் இல்ல விடு..!"

"ஏன்டி விடுறதுக்கா பிடிப்பாங்க உன்னை இனிமே விடறதா இல்லை என் மொசமுட்டி..!"

"ஆமாம் இத்தனை நாள் என்னை நீ விட்டுடு ஓடுனது நினைவுல இல்லையா ஏன் திடீர் அம்னீசியாவா உனக்கு!?"

"உன்னை விட்டது அப்படியே விடுறதுக்கு இல்லடி. சமயம் பார்த்து இப்படி இறுக்கமா பிடிக்கறதுக்கு!' என்றவாறு மனைவியை தூக்கிக் கொண்டே நடையை கட்டினான் அந்த காதல்காரன்.

கணவன் கொஞ்சலுக்கு மிஞ்சிக்கொண்டே அடங்கிப் போனாள் ஆரமுது.

மகளை சுமந்து கொண்டு வரும் மருமகனை பார்த்து முதலில் பதறிய தேவி இருவரின் முகம் சிரிப்பை உதிர்ப்பதை கண்டு

"வாங்க தம்பி!" என முதன்முறையாக உரிமையாய் அழைக்க.

"ஆமாங்க அத்தை!" என்று மருமகனும் சொல்லிக்கொண்டே மனைவியோடு அவள் அறைக்குள் அவளை இறக்கிவிட்டு ஹாலில் வந்து அமர.

உள்ளே சென்றவள் வீட்டில் அணியும் இலகு உடை அணிந்து வரட்டும் என காத்திருந்த கணவனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தாள் கையில் பெட்டியோடு வந்து நின்ற வீணா.

"ஏய் என்னடி இது!?"

"என்ன பார்த்தா தெரியாதா உனக்கு மாலைக்கண் நோயா!?"

"அப்பா ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதிலே சொல்லமாட்டியாடி இது பெட்டின்னு தெரியும்.ஆனா இதை இப்போ எங்க தூக்கிட்டு கிளம்பற நீ!?"

"அம்மா நான் என் வீட்டுக்கு போறேன்.இனிமே உனக்கு எதுவா இருந்தாலும் என்னை அங்க வந்து பாரு புரியுதா!?" என்றவாறு கணவன் சட்டை காலரை பிடித்து இழுத்துக் கொண்டே பேசியவாரு நகர்ந்தாள் தடாகை.

"ஹேய் இருடி நடந்து வர்றேன் விடுடி இருக்க பிரஸ்டீஜை ஸ்பாயில் பண்ணாதடி வீணு!"

"அதெல்லாம் இருக்கவன் கவலை. இல்லாத நீயேன் அதை யோசிக்கிற!?" என்றவள் தன் காரிலே அவனை ஏற்றிக் கொண்டு இல்லம் நோக்கி விரைந்தாள்.

"தன்னால் இனி மகள் வாழ்வில் சிறு சருக்கும் வராதவாறு நடந்து கொள்ளவேண்டும்!" என்பதை அனுபவத்தால் உணர்ந்து கொண்டார் தேவி.

ஶ்ரீனி சொல்லியும் கேட்காத தேவிக்கு சொல் பாடம் வழங்காது போக விதி அனுபவத்தால் பாடம் புகட்டி இருந்தது.

கணவனை முதலில் சின்ன சண்டைகளில் பிரிந்து வர பழகிய மகளை ஊக்குவித்த தேவியின் செயல்.

'விவாகரத்து' எனும் பெரும் பிளவிற்கு பாதை வகுக்க.

மருமகனை பிரிந்து வந்தது முதல் மகள் முகத்தில் தொலைந்த புன்னகை எல்லாம் ஒரே நாளில் வீணா முகத்தில் மிளிர.

அதை கண்டு ஒரு அன்புள்ள தாயாய் ஆனந்தம் கொண்டார் தேவி.

**********************************

காவல் நிலையத்தில் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்ப தன் ஓட்டுனருடன் பயணத்தில் இருந்தான் ஷ்ரவன்.

"அவமானம்!" என்று எண்ணி தந்தை அறையில் இருந்து வர..

மனைவி கண்ணாடியை கீழே விட.

"அதில் இருந்து விழுந்த நுண்ணிய நரம்பு போன்ற ஒன்றை கண்ட ஷ்ரவன் அது தந்தையின் ரகசிய பெட்டிக்கான திறவுகோல் என்பதை புரிந்து மனைவி உறங்கியதும் சென்று திறந்து பார்க்க!"

"கடைசியாக சுந்தர் தயாரித்த மருந்தின் குறிப்புகள் அனைத்தும் அதிலே இருந்தது!"

அதனை எடுத்துக்கொண்டவன் இதைப்பற்றி மூச்சே காட்டவில்லை.



அடுத்தது எல்லாம் சாத்விக் மூலம் தாங்கள் உண்மை அறிந்த பின் நடந்த சம்பவமே ஓடியது.


சாத்விக் 'கிராக்ட்ரீ'யை அழைத்து பேச காரணம் தந்தை அறிந்தாலும்

"தங்கையை விட்டு விலகு!" என்று மிரட்டியதாக சொல்லலாம்;என்ற எண்ணம் தான்.

சாத்விக் மூலம் உண்மை குற்றவாளியை அறிந்தாலும்,"பெரும் அடியை கொடுக்க வேண்டும்!" என்று எண்ணிய ஷ்ரவன் கண்முன்

"பால் மனம் கொண்ட கீர்த்தியும்;தவறு செய்தது தந்தை என்று அறிந்தும் தங்களிடம் உண்மையை உரைக்கும் சாத்விக்கின் நேர்மையும் புரியும்!"

"தங்கள் கண்டுபிடிப்பை வெற்றி பெற செய்வதோடு; கயவர்களை சிறையில் அடைக்க வேண்டும்!" இதுவே அவன் எண்ணமாக இருந்தது.

"தங்களால் கண்டிப்பாக புதிய ஆய்வகம் நிறுவுவது கடினம் என்பதால்; சாத்விக் மூலமாகவே புதிய ஆய்வகம் ஒன்றை உருவாக்கி.

அதில் ஜோ மற்றும் இயக்கி உடன் புதிய குழுவை உருவாக்கியவன்!"

அவர்கள் இருவரையும் காதலியுடன் சுற்றுவதாக பெயர் செய்துவிட்டு.. ஆய்வில் நிறுத்தினான்.

ரகோத்வாவின் கவனத்தை திசை திருப்ப
அவருடனே அப்துல்லா மற்றும் ரபீக்கை விட்டிருந்தான்.

ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே வந்தவன்

"சார்...!"என்ற வாகன சாரதி அழைப்பில் சுயம் பெற

"சொல்லுங்க..!"என்றான்.

"சார் ரொம்ப நேரமா நம்மளை ஒரு லாரி ஃபாலோ பண்ற ஃபீல்!"

"நீங்க அப்போ சீக்கிரமா போங்க. வீ வான்ட் டூ லீவ்!" என்றவன் கண்களை மூடிக் கொண்டான்.

வாகன ஓட்டி பதட்டம் கொள்ள,எதையும் கவனிக்காது சீட்டில் சாய்ந்தவன் எண்ணம் எல்லாம் மனைவியும்,பிள்ளையும் தான்.

"தன் தந்தை சென்றதை போல அவர்களை தனியே தவிக்கவிட்டு செல்லக் கூடாது!" எனும் உத்வேகத்தை மனதிற்குள் உருபோட்டிருந்தான் ஷ்ரவன்.

பின்னால் வந்திருந்த லாரியை கவனித்த வாகன ஓட்டுநர் முன்னால் வந்ததை கவனிக்க மறக்க.

தன் வேலையை கனகச்சிதமாக முடித்துக் கொண்டு சென்றது அந்த வாகனம்.

அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனை சேர்க்கப்பட.

மொத்த குடும்பமும் நண்பர்களும் கூடிவிட.

வாகன ஓட்டிக்கு அடி பலமாக இல்லை என்றும், ஷ்ரவனுக்கு அடி சற்று பலம் என்றும் தகவல் பரவியது.

ஒன்றும் புரியவில்லை. மற்றுமொரு இழப்பை தாங்க முடியா நிலையில் அமைதியாக கண்களை மூடி "பிள்ளை நல்ல முறையில் தி
ரும்பி வரவேண்டும்!" என்பதை மந்திரமாக உச்சரித்தார் சௌந்தர்யா.

மருமகளை அருகில் அமர்த்தி அவளின் கைகளை தனக்குள் பொதித்து தட்டிக் கொடுத்து கொண்டிருந்தார்.

அதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.

"நான் உன்னோடு என்பதை மருமகளுக்கு உணரச் செய்தார்!" தன் செய்கையால்.
 
Top