Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 20

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
அயர்ந்து உறங்கும் மனைவியை கண்ட ஷ்ரவன் முகத்தில் தான் எத்தனை நிறைவு.

ஏனோ இப்பொழுது எதையும் கடக்கும் துணிவு அவனுக்கு வந்திருந்தது.அதனால் உறக்கத்தில் இருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு போர்வையை 'சரி' செய்து தன் ஆராய்ச்சி கூடம் நோக்கி சென்றான் அவன்.

ரகோத்வா, ஷ்ரவன், ரக்சன் மூவரும் தான் இன்றைய போட்டியின் முடிவை அறிந்ததும் அவரவர் இல்லம் சென்றிருந்தனர்.

மற்ற நால்வரும் தங்கள் முதல் குழந்தை கையை விட்டு சென்ற துக்கத்தில் ஆய்வு கூடத்தில் தான் இருந்தனர்.அங்கிருந்து செல்ல மனமில்லை அவர்களுக்கு.

"யாராய் இருக்கும்!?" என்ற மூளையின் கேள்விக்கு

ரக்சனை தன் இல்லம் வரவழைத்தவன் அவனோடு ஆய்வகம் நோக்கி பயணித்தான்.

"தெரியவில்லை!" என்றது அவன் மனது.

"உன் அருகில் இருக்கும் யாரோ ஒருவர் தான் கண்டிப்பாக குற்றவாளி யார் அந்த பிரூட்டஸ்!?"

"எனக்கு தெரிந்தால் இந்நேரம் விட்டு வைப்பேனா!?"

"அவனை கண்டறிய என்ன செய்யப் போகிறாய்!?"

"ஒன்றும் சொல்லிவிட்டு செய்வதாக இல்லை. செய்யும் போது நீயே பார்த்துக்கொள்!" என்று மூளையை அடக்க.

அதுவோ "யார் அந்த துரோகி!?' என்பதை கண்டறியாமல் அமைதி கொள்ள மறுக்க.



ஷ்ரவனால் தன் குழுவை சந்தேகம் கொள்ள மனம் வரவில்லை;ஆனால் 'எங்கோ' இடிக்கும் இடத்தில் தெளிந்த விளக்கம் அவன் மூளைக்கு தேவையாக இருந்தது.


"கண்டிப்பாக தங்கள் கண்டுபிடிப்பின் மூலத்தை இங்கிருக்கும் ஒருவர் அன்றி வேறு யாரும் கொடுத்திருக்க முடியாது!" என்பது திண்ணம்.

வலைவீச முடிவு செய்தான்.அதுமட்டும் அல்ல தந்தை இறப்பன்று நேர்ந்த கார் விபத்து பற்றி அவன் சந்தேகமும் அதிகரிக்க அதையும் விசாரிக்க முடிவு செய்தான்.

காவல் துறை 'விபத்து' என்று இழுத்து மூடி இருக்க.ஆண்டுகள் பல நடந்த நிலையில் மீண்டும் எடுத்து தூசி தட்ட முன்வந்தான் மைந்தன்.

ஆனால் இதில் எதையும் வெளியில் சொல்லவில்லை அவன்.

"ரகசியமாக செய்ய வேண்டும்!" என்ற முடிவில் இருந்தான்.

ரக்ஷன் மட்டும் தான் அவன் நம்பிக்கை.அவனிடம் பொறுப்பை ஒப்படைக்க முன்வர.

"ரக்ஷா..!"

"சொல்லு ஷ்ரவா!?"

"எனக்கு என்னவோ தப்பாபடுது..!"

"எனக்கும் தான் ஷ்ரவா!"

"உனக்கு என்ன தோனுது ரக்ஷா!?"

"அன்னைக்கு கடைசியா எல்லாமே சக்சஸ் ஆனதும் எல்லாருமே ரொம்ப ஹாப்பியா இருந்தோம்!" என்றவன் மதுபானம் அருந்தியதை குறிப்பிட்டு.

இன்னும் சில சந்தேகங்களை அவனுக்குள் விதைக்க.

"சந்தேகம் பிறந்தால் தானே அதன் நுனியை பிடித்துக் கொண்டு யார் முக்கிய புள்ளி என்பதை அறிய முடியும்!?"

ஆதலால் ரக்ஷனின் சந்தேகத்தை முதலில் தெளிவு பெற அவன் கூறுவதை உட்கிரகித்தவன்.

"ரக்ஷா எனக்கு யாராய் இருக்கும் ஒரு அவுட் லைன் கிடச்சுட்டு.இதையே வச்சு நம்ம போகலாம். சக்சஸ் ஆகற வரை யாருக்கும் தெரிய வேண்டாம்!" எனக் கூறி தன் திட்டம் எதுவென்று நண்பனுக்கு விளக்க தொடங்கியது அந்த வேங்கை.

"இது சரியா வருமா மச்சான்!?"

"கண்டிப்பா சரியா இருக்கும் ரக்ஷா!"

"நீ சொல்ற.ஆனா ஒன்னு மட்டும் எனக்கு உறுதி.இந்த வேலையை நம்ம பண்ணினோம் எதிரி அடுத்து எழுந்து நிற்கவே முடியாது இந்த ஃபீல்டுல!?"

"அதுக்கு என்ன பண்றது ரக்ஷா நம்ம இப்போ இருக்க நிலையை யோசி உனக்கு அப்ப புரியும். ஒருவேளை உழைப்பையும் உண்மையும் நம்பி நம்ம மட்டும் ஏமாந்து நிக்கிறதா!?"

"இந்த முறை சாம தான பேத தண்டம் எதுவும் பார்க்கப்போவது கிடையாது!" அவன்.

'இருந்தாலும்'என்ற ரக்ஷனின் நல்ல எண்ணம் அவன் பேச்சில் தெரிய.

"நல்லவனா இருக்கலாம் ரக்ஷா ஆனா ஏமாளியா இருக்கக்கூடாது!" என்றான் நண்பனுக்கு அறிவுரை வழங்கும் நோக்கில்.

மனைவியும் கூட இதை தான் கூறுவாள் என்ற எண்ணம் அவனுள் தோன்ற.முகம் வாடினான்.

"என்ன ஆச்சு உனக்கும் வீணாக்கும் சண்டையா!?"

"ஆமாம் மச்சான்! அவ தான் ரொம்ப பண்றா அதுதான் வா பெட்டிசன் போடலாம்னு கூப்பிட்டேன்.உடனே பையை தூக்கிட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டா!"

"விடுடா இன்னும் ரெண்டு நாள்ல மாமா சமாதானம் பேசவருவாரு!" என்றான் ஷ்ரவன்.

"ஆனால் இந்த முறை அவர் வந்தாலும் நான் அவளை போய் கூப்பிடமாட்டேன் மச்சான். ரொம்ப பேசிட்டா!"

"சோ... என் மாமா மகள் உன் ஈகோவை இடுச்சுட்டா ஹப்பாடா நல்லவேளை பார்த்திருக்கா.இனியாவது கொஞ்சம் இரக்கத்தை குறைடா மாப்ள!" என்றான் நண்பனாய்.

இருவரும் அடுத்து செய்ய வேண்டியவைகளை சரியாய் திட்டமிட்டு திரைக்கு பின் நின்று தாக்கிய எதிரியை திரைக்கு பின் நின்றே தாங்களும் தாக்க முடிவு செய்தது இரண்டு அரிமாக்கள்.

"இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லையே மாப்ள!?" என்றான் ஜோ ஷ்ரவன், ரக்ஷன் இருவரும் அங்கே வந்துவிட.

ரகோத்வாவையும் அழைத்திருக்க அவரும் வந்திருந்தார்.

எழுவரும் தங்கள் ரகசிய ஆய்வு கூடத்தில் அமர்ந்திருக்க ஜோவே முதலில் தொடங்கினான்.

"என் சர்வீஸ் காலத்தில இப்படி ஒன்னு நடக்கறது இதுதான் முதல்முறை!" வருத்தமாக கூறினார் ரகோத்வா.

அவரின் முப்பத்தி ஐந்து ஆண்டுகால உழைப்பு அதில் இருந்தது.இதை கூறும் போதே கண்கள் கூட கலங்கியது மனிதருக்கு.


அப்துல்லா,ரபீக் இருவரும் பேசாது அமைதியாக நடப்பதை பார்த்திருந்தனர் சூழல் மௌனத்தை விதைத்தது அங்கே.

அந்நேரம் தான் புன்னகை முகத்துடன் பேசத் தொடங்கினான் ஷ்ரவன்.

"நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்!" என்றான்.

"இவன் என்ன பைத்தியமா!!" என்று மற்றவர்கள் பார்க்க

"கூட்டத்தில் இருந்த கள்ள நரியோ இவனிடம் மாற்று வழி என்ன உள்ளது!?" என்பதை அறிய ஆர்வமானது.

"சொல்லு மச்சான் என்னடா ஶ்ரீ!" உற்சாகமாக கேட்க.

"பொறு மச்சான் சொல்றேன்!" என்றவன்.

அவனோ,"இவர்களின் முன்னால் ஆய்வின் கண்டுபிடிப்பு அறிக்கையை அரசாங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும்.

அது எதிரிகள் கைகளுக்கு கிடைப்பதற்கு முன்பாகவே தன் கைகளுக்கு வந்த அறிக்கையை தான் பதிவு செய்திருந்ததாகவும்.

அதனால் நமக்கு லேபை பற்றிய கவலை வேண்டாம்!" என்றான்.

"ஹேய் மச்சான்!" என்று துள்ளினர் நண்பர்கள் கூட்டம்.

"இதை ஏன்டா முன்னாடியே சொல்லலை!?" என்றான் ஶ்ரீ.

"இல்லடா சொல்றதுக்கு எங்க நமக்கு டைம் இருந்தது.சாப்பிட கூட நேரம் இல்லை நமக்கு அதுதான் சொல்லலை.அதுதான் இப்போ சொல்லிட்டேன் இல்ல!"

"எப்படியோ சந்தோசம்டா மச்சான் ஷ்ரவா!" என்றான் அப்துல்லா இப்பொழுது தான் அவனுக்கு நிம்மதி.

"ரபீக்கோ ஓடி வந்து கட்டிக் கொண்டான்!" ஷ்ரவனை.

ஜோ முகம் யோசனை படிந்தது.

"மச்சான் ஷ்ரவா...!" என்று 'எதுவோ' சொல்ல வந்தவன் ரக்ஷனின் கண்பார்வையை கண்டு சொல்ல வந்ததை விழுங்கிக் கொண்டான்.

ரகோத்வா எப்படியோ தன் பிள்ளையை காப்பாற்றிய உணர்வு.அவரின் வயதிற்கு இதற்கும் மேலாக இப்படி ஒரு அருமையான கண்டுபிடிப்பை உருவாக்க இன்னும் ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால்,"அதற்குள் அவர் உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்தால் என்ன செய்வது!?" என்ற பயம் அவருக்கு

"அவர் இம்மண்ணில் இருக்கும் பொழுதே தன்னால் முடிந்த சாதனையை ஆராய்ச்சியில் நிகழ்த்த வேண்டும்!"
என்பது அவரின் குறிக்கோள்.

"என்ன அங்கிள் நீங்க ஒன்னுமே சொல்லாம இருக்கீங்க!?" என்றான் ஷ்ரவன்.

"உன் அப்பா போல நீயும் அறிவாளியா இருக்க ஷ்ரவன் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு!"

"ஆமாம் அங்கிள் அப்படி இல்லைன்னா எதிரிகிட்ட இருந்து நம்மை காப்பாத்த முடியுமா!?"

"அதுவும் சரிதான்!ஆனால் இனி தான் உன் அடிகள் ஒவ்வொன்னையும் நீ பார்த்து கவனமா வைக்கணும் ஷ்ரவா!"

"அது பார்த்துக்கலாம் அங்கிள்.இனி எதிரி நம்ம பக்கம் திரும்ப யோசிப்பான் பாருங்கள்!" என்றவன்

எதிரியால் கைப்பற்றப்பட்ட அடிப்படை சூத்திரம் இனி வழக்கு முடியும் வரை ஆய்வுக்கு தோதுபடாது என்பதால் புதிதாக ஒன்றின் சூத்திரத்தை கூறினான் ஷ்ரவன்.

"தன் தந்தை கண்டறிந்த ஃபார்முலா ஒன்றைக் கூறி அதன் விளக்க மூலத்தையும் குறிப்புகளையும் கொடுக்க!"

அதனை பெற்று கொண்ட ரகோத்வா உடனே பணியில் இறங்கினார்.

இளையவர்களும் கூட உற்சாகமாக தங்கள் வேலையில் இறங்க.

இரவு பகல் பாராது அனைவரும் வேலையில் இறங்க.

அனைவரையும் தன் கண்காணிப்பிற்குள் வைத்திருந்தான் ஷ்ரவன்.

சுந்தரின் கண்டுபிடிப்பில் இன்னும் ஒரு படி மட்டுமே இருந்தது,அதுவே கடைசி.

ஆனால்,அதற்கான மருந்தை தயாரித்து அதில் வேதியல் மாற்றம் நிகழ்ந்த பின்பு எலியின் உடலில் செலுத்தி ஒருவாரம் அதன் உடலில் நிகழும் மாற்றங்களை குறிப்பெடுத்து வைக்க வேண்டும்.

அதனால் அனைவரும் இல்லம் நோக்கி செல்ல. ஶ்ரீ முதல் ஆளாக வெளியே சென்றான்.

அவனை தொடர்ந்து அனைவரும் வெளியேற ஜோ மட்டும் தேங்கினான் அங்கேயே.

"என்ன மச்சான் எதுக்கு பொய் சொன்ன!?" என்றான்

"அவனுக்கு தெரியுமே!ஷ்ரவன் பதிவு செய்யவே இல்லை என்பது.அதனால் தான் அவ்வாறு கேட்டான்!"

"என்ன மச்சான் பண்றது கள்ள நரி யாருன்னு கண்டுபிடிக்க வேண்டாமா? அதுக்குத் தான்!"

"சோ நம்ம டீம்ல தான் அந்த கள்ள நரி இருக்கு.ஏன் புரோடக்சன் டீம்ல இருக்க கூடாது!?" தன் சந்தேகத்தை முன் வைத்தான் ஜோ.

அவன் கேள்வியும் நியாயமானது தான்.ஆனால் புரோடக்சன் செய்வதற்கு முன்பே அவ்விடத்தில் இருந்தவன் அல்லவா ஷ்ரவன்.அவனுக்கு உறுதியாக தெரியும் இதில் தவறு புரோடக்சன் டீமில் 'இல்லை' என்பது.

"மச்சான் ஏதாவது சொல்லுடா!?" ஜோ அவசரபடுத்த

"என்ன சொல்ல சொல்ற ஜோ.எதை சொல்ல சொல்ற நம்ம கூட பழகின யாரோ ஒருத்தர் தான் திருடன்.அவன்தான் நம்ம கண்டுபிடிப்பை உழைப்பை திருடியதுன்னு சொல்ல சொல்றியா என்ன!?

"என்ன மச்சான் இவ்வளவு உறுதியாக சொல்றான் இவன் நீ ஏதாவது பேசுடா!?" ரக்ஷனை ஊக்கினான்.

"அவன் சொல்றது சரிதான் ஜோ.
இன்னைக்கு பண்ணின இந்த வேலைக்கான ரிசல்ட் நாளைக்கு காலைல கண்டிப்பா தெரியும்!" என்றதோடு முடித்துக் கொண்டான் அவன்.

"இப்போதைக்கு நம்ம பேரையும்; கம்பெனியையும் மட்டும்தான் காப்பாத்த முடியுமா!?" வேதனை கூத்தாடியது ஜோ முகத்தில்.

"இல்லை ஜோ அது எல்லாம் கிடையாது நம்ம கண்டிப்பா புராஜக்ட்டை ஃபுல்ஃபில் பண்ணுவோம் டா!"


"ஏன்டா மாப்ள இங்க இருக்கவன் தான் கள்ள ஆடுன்னா அப்போ நமக்கு அவசரமா ஒரு லேப் வேணுமேடா!?" தன் புத்தி கூர்மையை நிரூபித்தான் அவன்.


"அதெல்லாம் இப்போதைக்கு அவசரம் கிடையாது பொறுமையா பார்த்துக்கலாம்!" என்றான் ஷ்ரவன்.

அவன் அவ்வாறு கூறுகிறான் எனில் கண்டிப்பாக ஏதோ காரணம் உள்ளது புரிந்தது.

மூவரும் அவரவர் இல்லம் நோக்கி சென்றனர்.

லேபில் இருந்து கிளம்பிய கள்ள நரி தான் கைகோர்த்த எதிர் நிறுவனத்திற்கு அழைப்பை தொடுத்து காத்திருந்தது.

"சொல்லுடா..!"

"இங்க அந்த ஷ்ரவன் புதுசா ஒரு ஃபார்முலாவை தூக்கிட்டு வந்திருக்கான். அதுவும் அது சுந்தர் உருவாக்கினதாம்!"

"என்ன சொல்ற!?"

"ஆமாம் இதைவிட இன்னும் ஒன்னு இருக்கு அதை நான் சொன்னா ஆடி போய்டுவ நீ!"

"என்னனு சொல்லுடா முதல்ல!?"

"அது நம்ம இன்னைக்கு சப்மிட் பண்ணின ஃபார்முலா அப்பறம் டாகுமெண்ட் எல்லாமே ரெஜிஸ்டர் பண்ணினது!"

"இது உனக்கு முதல்லயே தெரியாதா!?"

"எனக்கு முதல்லயே தெரிஞ்சா உனக்கு முன்னாடியே அலாட் குடுக்க மாட்டேனா!?"

"சரி இப்போ என்னடா செய்றது!?"

"இப்போதைக்கு நீ என்ன பண்ற நாளைக்கு காலைல ஐ எம் ஏக்கு ஒரு மெயில் பண்ணிடு!"

"என்ன சொல்லட்டும்!?"

"ஏன் உனக்கு தெரியாதா!?"

"சரி செஞ்சுடுறேன்..!" என்ற நபர் அழைப்பை துண்டித்த கையோடு ஐ எம் ஏ எனும் இந்திய மருத்துவ சங்கத்திற்கு காலை அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை தயார் செய்ய ஆரம்பிக்க.

அலைபேசியை துண்டித்த உருவம் தன் இல்லம் சென்று "அடுத்து ஆய்வில் என்ன செய்ய வேண்டும்!?" என்பதை குறிப்பெடுக்க தொடங்கியது.

"அடியே ரித்து என்னடி ஆச்சு!?"

"எனக்கு என்ன ஆச்சு தூக்கம் வருதுடி!" என்றாள் சோர்வாக.

"ஏன்டி இன்னைக்கு நடந்ததை பார்த்தும் கூட உனக்கு தூக்கம் வருதாடி!?" கீர்த்தி கேட்க.

"போடி அவர்...!" என்று தூக்க கலக்கத்தில் அவள் உலற வர.

"ஹேய் சொல்லுடி அவரு சொல்லு கம்மான் பேபி என்ன பண்ணினார் உன் ஆத்துக்கார்!?"

"அவரு ஒன்னும் பண்ணலை எனக்கு தூக்கம் வருது...!"என்றவள் இப்பொழுது தெளிவாய் பேசிட.

"ரித்து உன் ஐத்தான் என்னடி பண்ணினாரு இப்போ கூடவா உங்க லவ் பொங்குது..!?"
கிறிஸ்டி கிண்டல் செய்ய.

"அடியே அவங்க லவ்வு லாங் லாஸ்டிங் இல்லையா அதுதான்!" என்றிட.

இவளோ,'கணவன் என்ன நினைத்தான் என்பது தெரியவில்லை. ஆனால்! அவன் புன்னகை முகம் கூறியது தன்னவன் பிரச்சனைக்கான தீர்வழியை கண்டுவிட்டான்!" என்று.

ஆதலால் முழுதாக தெரியவில்லை என்றாலும்; மகிழ்வை பகிர தொடங்கினாள்.

"ஹேய் எனக்கு என்னவோ பிரச்சனைக்கான சொல்யூசன் கிடச்சுடுச்சு போலடி!" என்றிட.

"அதுனால தான் மேட்னி ஷோ நடந்ததாடி..!?"
இப்போது கீர்த்தி தொடங்க.

"போங்கடி இவளுங்களா என்னை வம்பு பண்ணவே வருவாளுங்க வைங்கடி நான் போய் என் அத்தையை பார்க்கணும்!" என்றாள்.

"ஓஹ் வீட்டுக்காரை விட மாமியார் மேல அவ்வளவு லவ்வு அம்மணிக்கு!?"

"ஆமாம்டி லவ்வு தான்!" என்று புன்னகை உடன் பதில் கூறி குளித்து முடித்து அறையில் இருந்து வெளியேற.

மருமகளின் மாலை நேரக் குளியல் அவருக்கு சேதி சொல்ல கமுக்கமாய் சிரிக்க.

அவரின் முகம் பார்க்க தயங்கினாலும்; அவரிடம் வந்தவள்

"அத்தை உங்க பிள்ளை எதுவும் சொல்லிட்டு போனாரா!?"

மருமகளை கிண்டல் செய்ய வாய்ப்பு அமைய

"ஆமாம் ரித்தும்மா சொல்லிட்டு போனான்!" என்றார் அவர்.

"என்னங்க அத்தை சொன்னாரு!?"

"என் பொண்டாட்டி டயர்டா தூங்கிட்டு இருக்கா.அவளா வர்ற வரைக்கும் யாரும் தொல்லை பண்ண வேண்டாம்னு சொன்னான்மா உன் புருஷன்!" என்க.

"அத்... தை...!"என்றவள் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க தெம்பில்லாது பூமிக்குள் புதையல் எடுப்பவாளக குனிய.

"ஹாஹாஹா...!" என்று வாய்விட்டு சிரித்த சௌந்தர்யா மேலும் கூறினார்.

"பிரச்சனையை நீ மனசுல போட்டு கவலைப்பட வேண்டாம்னும், உன் புருஷன் வர்றதுக்கு லேட் ஆகும்னும் சொல்லிட்டு போனான்மா!" என்றார் அக்கறை கொண்ட மாமியாராய்.

மாலை நேர தேநீர் கோப்பைகளோடு இருவரும் தோட்டத்து குடிலுக்கு செல்ல.

"ரித்து நீ ஏன் ஸ்கூலை மேனேஜ் பண்ணக் கூடாது.இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்ல நெக்ஸ்ட் எடுக்கல இயர் ஸ்டார்ட் ஆகிடும்.நான் உன்னை அப்போ எல்லாருக்கும் இன்றோ கொடுக்கலாம் இருக்கேன்!"

சௌந்தர்யா மருமகளிடம் தன் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை அவளிடம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்
க.

"ஐயோ அத்தை நானா!?" என்ற மருமகளின் முகத்தை தீர்க்கமாக பார்த்தவர்

"நீ தான்மா கண்டிப்பா பார்த்தே ஆகவேண்டும்!" என்றார்.

எல்லாம் தலைமை ஆசிரியர் மேகலா கூறிய நன்மதிப்பீட்டின் பேரில் தான் பெண்மணி கூறினார்.

மாமியாரின் தீர்க்கத்தில் வாயடைத்த ரித்துவால் தலையை மட்டுமே "சரி" என்று ஆட்டமுடித்தது
 
Top