Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 19

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
கணவன் இதுபோல் இருந்தது கிடையாது.
எப்பொழுது என்ன சண்டை வந்தாலும் அவன்தான் முதலில் தணிந்து வருவான்.

அவன் வரவில்லை என்றாலும்; தன் தந்தை சென்று அவனை சமாதானம் செய்திடுவார்.

ஆனால் இந்த முறை அவன் இவள் இருக்கும் திசை பக்கம் கூட பார்வையை திருப்பவில்லை.

பொறுமையில் புரியாத காதல் அவன் "மௌனத்தில் கட்டுடைத்து பெண் மான் நெஞ்சில் சடுகுடு ஆடியது!"

"அன்னை பேசுவாரா!?"

"தந்தை பேசுவாரா!?"

"உன் இல்லம் செல்! என்று இருவரில் யாரேனும் ஒருவர் கூறமாட்டாரா!?" என ஏங்கியது பெண் மனம்.

காலையில் எழுந்ததும் அன்னை தந்தைக்கு தேநீர் கொடுப்பதை பார்க்கும் போது இவளுக்கு அவளவன் ஞாபகம் தான்.

காலை எழுந்ததும் இவளுக்கு என்று ஃபில்டர் காஃபியை தயார் செய்து கோப்பை ததும்ப ததும்ப கொண்டு வந்து துயில் எழுப்பும் கணவன் ஞாபகம் வராது போனால் தான் ஆச்சர்யம்.

அவள் பிறந்தகத்தில் தாயிடம் சென்று

"அம்மா எனக்கு ஃபில்டர் காபி தாம்மா!" என்றால்

"நீயும் போட்டுக் கொண்டு எனக்கும் கொஞ்சம் கொடு வீணா!"என்பார்.

காலை உணவு இவள் குளித்து வந்த சிறிது நேரத்திலே உண்ணும் பழக்கம் உடையவள் என்பதால் அவள் சமையல் அறையில் வேலைப்பார்க்கும் போது உடன் வந்து உதவி புரிவான் கணவன்.

ஆனால் இங்கோ,"அன்னை முன்பு போல இவளை கவனிப்பதே கிடையாது!"

அதுவும் என்றைக்கு மருமகன் மகளை விவாகரத்து செய்ய நீதிமன்றம் செல்லலாம் என்றதை அறிந்தாரோ, "அன்றே அவரின் இயல்பு மாறியது!"

"பெட்டியும் கையுமாக மகள் வருவாள்!" என்றது வரை அவரின் கணிப்பு சரியே!

"ஆனால் விவாகரத்தையும் தன் பின்னால் கட்டி இழுத்து வருவாள் என்று அவர் என்ன கனவா கண்டார்!?"

ஆனால் அவர் பெற்ற மகள் அதைத்தான் செய்திருந்தாள்

"என்னடி உன் புருஷன் கூட சண்டையா!?"

"ஏம்மா நீவேற என் கவலை புரியாம அவன் என்னை ரொம்ப பேசிட்டான்!"

"யாரு உன் புருஷன் உன்னை பேசினாரா!? போடி!" என்றார் தேவி.

"அம்மா அவரு தாம்மா என்னை டைவர்ஸ் அப்ளே பண்ணு கோர்ட்ல பார்த்துக்கலாம் சொல்லிட்டாரு!" என்ற மகளின் அறியாமை புரிந்தது.

மருமகனின் கண்பார்வை மனம் அனைத்தும் உன்னை சுற்றியே இருக்குமாறு பார்த்துக்கொள் என்றவர் கூறிய போதனைகள் இன்று வந்து நிற்கும் இடம் 'இது!' என்று புரிந்தவர் கணவனை காண அவரோ மனைவியை திரும்பி கூட பார்க்காது நடையை கட்டினார்.

"அப்பா என்னப்பா எதுமே சொல்லாம போறீங்க !?"

"நான் என்னம்மா சொல்ல.என் தங்கச்சி மகனை என் மகளுக்கு கல்யாணம் பண்ணி மருமகனாக்க நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் நீ அந்த ரக்ஷனை தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நின்ன!"

"அப்பா இப்போ எதுக்கு அதை எல்லாம் சொல்றீங்க!?"

"அப்போ உன் அம்மா என்ன சொன்னா அந்த பையன் நடந்தா ராஜா கணக்கா இருக்கான் என்ன ஒரு குறை உங்க தங்கச்சி பையனுக்கு எடுபிடியா இருக்கான்னு சொன்னா!"

"அப்பா அவரு ஒன்னும் எடுபிடி இல்லை அசிஸ்டன்ட்!" என்றாள் ரோசமாக.

"உனக்கு அன்னைக்கு இந்த கோபம் வரலையேம்மா!?"

"என் தங்கச்சியும் உன்னை மருமகளா நினச்சா.ஆனா நீ அந்த பையனை லவ் பண்றேன்னு சொன்னதை கேட்டு கொஞ்சம் கூட முகம் வாடாம

'என்ன அண்ணா எனக்கு ரக்ஷன் வேற இல்லை ஷ்ரவன் வேற இல்லைன்னு' பெருந்தன்மையாக பேசி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சது மட்டும் இல்லை அத்தை சீரும் சிறப்பா செய்தாள்!"

"அப்பவும் இந்த அப்பா ஒன்னுமே சொல்லவே இல்லையேம்மா!"

"ஒவ்வொரு முறை சண்டை போட்டுட்டு நீ கோபமா வரும் போதும் உன்மேல் தப்பு இருக்குன்னு தெரிஞ்சும் மாப்பிள்ளையை கூப்பிட்டு பேசின அப்பா உன்னை ஏன் இப்படி செய்தேன்னு கேட்கலையேம்மா!?"

"அப்ப எல்லாம் அமைதியா இருந்ததை உன்னால ஏத்துக்க முடிஞ்சுது இல்ல வீணாம்மா அதே போல இதையும் ஏத்துக்கோ!" என்றவர் தான் மகளிடம் அதன்பின் எதுவும் பேசுவதில்லை.

"என்னங்க நம்ம பொண்ணுங்க!" என்ற மனைவியை பார்த்து

"இதுக்கு எல்லாம் யாரு காரணம் தேவி. மகளுக்கு வாழ வழி சொல்லி தரவேண்டிய நீயே மருமகனை அடிமை படுத்த பாடம் எடுத்த இல்லையா அப்போ இப்படித்தான் இருக்கும்!"

"அதுக்காக விவாகரத்து கேட்கறது எல்லாம் அதிகம் அவ்வளவுதான் நான் சொல்வேன்!?" என்றார் தேவி.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது உனக்கு இப்போ புரியும்னு நினைக்கிறேன்!" என்றவர் வாசல் நோக்கி செல்ல.

"என்னங்க நான் பண்ணினது தப்பா இருந்தாலும்; இந்த தண்டனை அதிகம் இல்லையா!?" என்றார்.

மனைவியின் மனம் அழுத்தம் கொண்டது என்பதை அறிந்த ஶ்ரீனி இன்னும் அவரை கரைக்க முயன்றார்.

'இல்லை' என்றால் மகளின் வாழ்வை மனைவி நட்டாற்றில் தள்ளிவிடும் அபாயம் உள்ளதே

மனைவி ஷ்ரவனுக்கு மகளை கொடுக்க மறுக்க.

மகளோ, "ரக்ஷனை காதலிப்பதாக கூறியதை கேட்டு பெரும் நிம்மதி கொண்டது என்னவோ ஶ்ரீனி தான்!"

"மகளின் அடாவடிக்கு ஏற்றவன் அவன் தான்!" என்று நிறைவாக தான் அவனுக்கு மகளை கொடுத்தார்.

ஆனால் மனைவியின் துர் போதனை மகளை புத்தியற்று செயல்பட செய்ய.

"இப்படியேவிட்டால் குடும்பம் எனும் கூடு முற்றிலும் கலைந்து சுடுகாடாக மாறலாம்!" என்பதால் தானே களத்தில் இறங்கினார் அந்த அன்புத் தந்தை.

மகளின் மனதிற்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவராக மாறினார் ஶ்ரீனி.

"என்னங்க...!" இன்னும் தயங்கிய தேவியை பார்த்து

"இந்த வயசில என்னை விவாகரத்து கேட்டு நீ கோர்ட்க்கு போக வைக்கமாட்டன்னு நினைக்கிறேன்!?"

அத்துடன் 'பேச்சு முடிந்தது' என்பதாக அங்கிருந்து அருகில் இருக்கும் சிறுவர் பூங்காவை நோக்கி சென்றிருந்தார்.

அன்று நடந்ததை நினைவில் கொண்டவள்
இன்று வரை தனக்காக தந்தை எந்த அடியும் எடுக்காததால் இதற்கும் மேல் தந்தை உதவப்போவது கிடையாது என்ற உண்மை வாணிக்கு முகத்தில் அடிக்க.

தன்னால் இந்த வயதில் தாய் தந்தைக்கு கருத்து வேறுபாடு வருவதை அவள் விரும்பவில்லை.

எனவே தன் வாழ்விற்கு தானே பொறுப்பை ஏற்றவள்.ரக்ஷனை சேரும் வரை ஓய்வதில்லை என்ற சபதம் ஏற்றாள்.

**********************************

"என்னடி சொல்ற!?"

"அட ஆமாம் கிறிஸ்டி அந்த அக்கா அப்படித்தான் தினமும் வந்து வந்து போய்ட்டு இருக்கு. ரக்ஷன் அண்ணா இருக்காங்க இல்ல அவங்க திரும்பி கூட பார்க்கவே இல்லைடி!"

"அதுக்கு எல்லாம் இது தேவை தான்டி!"

"ஹேய் என்னடி இப்படி சொல்ற!?"

"வேற எப்படி சொல்ல.அதை பத்தி சொல்ல ஏதாவது ஒரு நல்லது இருக்கா சொல்லுடி!?"

"அதுக்காக அவங்களை இப்படி சொல்லாதே.ஆமாம் இந்த கீர்த்தி என்னடி பண்றா!?"

"அவளுக்கு என்ன அந்த ஶ்ரீ கூட அவுடிங் போறதுக்கே 24 மணி நேரம் பத்தலைன்னு சொல்லிட்டு இருக்கா!"

"இருடி அவளுக்கு கால் பண்ணி பார்க்கலாம்!" என்றாள் ரித்து.

"ஹலோ ரித்து பேபி என்னடி பண்ற எப்படி இருக்க!?"

"அவ பண்றது இருக்கட்டும் நீ என்னடி பண்ணிட்டு இருக்க!?"

"நான் என்னத்தடி பண்றேன் ஃபீவர் வந்து எழுந்துக்க முடியாம கிடக்கேன்..!" என்றாள் சோர்வாக.

"என்னடி சொல்ற!? இந்த கிறிஸ்டி நீயும் ஶ்ரீயும் அவுட்டிங் போயிருக்கதா சொன்னாளேடி!" அதிர்ந்தபடி கேட்டிருந்தாள் ரித்து.

"ஆமாம் நான்...! அவன் கூட...! அவ்டிங் போயிருக்கேன்... இந்தோ இந்த கிறிஸ்டி இருக்கா இல்ல.. அவ.. அந்த ஜோ கூட.. சுத்திட்டு இருக்கா.நீ இருக்க இல்ல...உன் புருசன் கூட ஹனி மூன் போயிருக்க...!" கோபமாக இழுத்து நீட்டி முழக்க.

"ஏன்டி தெரியாமல் ஒரு கேள்வி கேட்டது குத்தமா!?"
தன்னையே நொந்து கொண்டாள் ரித்து.

"ஹேய் கீர்த்தி அப்போ ஶ்ரீ கூட நீ போகலையா!?"

"வேணாம்டி எனக்கு பின்னாடி போறதை நிறுத்த முடியாம நானே தன்னால தவழ்ந்துட்டு கிடக்கேன்.இதுல காய்ச்சல் வேற வந்து பாடாபடுத்துது. நீவேற எதையாவது கேட்டு என் கோபத்தை கிளராத!!"

"அப்பறம் ஏன்டி இந்த ஜோ என்கிட்ட ஶ்ரீ அவுட்டிங் போய்ட்டான்.அவனோட வேலையும் இப்போ நான் தான் பார்க்குறேன்னு சொல்லிட்டு ஃபோன் பண்ண கூட நேரம் இல்லாம சுத்திட்டு இருக்கான்!"

"ஐயோ கொஞ்சம் போனை வைங்கடி எனக்கு வந்துடுச்சு!" என்றவாறு ஓட்டமாய் கீர்த்தி ஓடும் ஓசை கேட்டது.

கிறிஸ்டிக்கு மனம் உருத்த, அந்த சந்தேகம் எதுவும் இல்லை போல ரித்துவிற்கு.

"அடியே கிறிஸ்டி அண்ணனும்,அவரும் ரக்ஷன் அண்ணாவும் சேர்ந்து ஏதோ முக்கியமான வேலையா இருக்காங்கடி. ரொம்ப சீக்ரட்டா இருக்கு என்னனு எனக்கும் தெரியலை ஆனால் பாவம் ரெஸ்ட் எடுக்க கூட நேரம் இல்லாமல் அலஞ்சுட்டு இருக்காங்க!" என்று புரியவைக்க.

"ஏதோ நீ சொல்ற நானும் கேட்கறேன்!" என்றாள் அவள்.

"என்னடி இந்த ஐ எம் ஏ சர்டிஃபிகேட் வாங்கற வரைக்கும் தான் கிறிஸ்டி அவங்களின் கனவுக்கு நம்மால எந்த உதவியும் பண்ண முடியலை இட்ஸ் ஓகே. ஆனால் நம்மால அவங்க வேலைக்கு ஒரு டிஸ்டர்பன்ஸ் வர காரணமா இருக்க வேண்டாம்!" என்றிட.

"ஓகே டி !"

இப்போதும் சுரத்தை இல்லாது வந்த தோழியின் குரலை கேட்டு

'இப்போ என்ன உனக்கு அண்ணன் இந்த ஒர்க்கை முடிச்ச பின்னாடியும் இதே மாதிரி சுத்தினா நம்ம அப்போ ஒரு கை பார்த்துக்கலாம் என்ன சொல்ற!?"

"இப்போ சொன்ன பாரு அதுதான் சரி!" என்றதோடு இணைப்பை துடித்தாள்.

இரவு உறங்க சில நேரம் இல்லம் வரும் ஷ்ரவன் பல நேரம் வருவதே கிடையாது.

ஷ்ரவன் தந்தை சுந்தர் எல்லாம் ஷ்ரவனை விட மோசமாம் மாதங்கள் கூட இல்லம் வராது ஆய்வகத்தை கட்டிக் கொண்டு சுற்றுவாராம்.

அதனால் தான் ஷ்ரவன் அறிவியல் எடுக்காது பொறியியல் எடுத்தானாம் சௌந்தர்யா கூறினார்.

**********************************

"டேய்... ரக்ஷா..."இதோ மாதங்கள் கடந்தாலும் கூட கணவனை விடாது துரத்துகிறாள் வீணா.

முதலில் அவள் பின்னால் வந்தது கோபத்தை கொடுத்தது.

"என் பின்னால் வராதே!" என்று எத்தனை கூறினாலும் அவள் கேட்பதாக இல்லை.

அவன் விரட்ட விரட்ட துரத்தி வந்தது அவளின் முரட்டு காதல். இவனுக்கு வேலைகள் ஆளை மூழ்கடிக்கும் அளவிற்கு இருக்க.

அவளோ அதை எல்லாம் புரிந்து கொள்ளாது பின்னால் வர.

"ஹேய் இப்போ என்னடா வேணும் உனக்கு!?" மிரட்டலாக வந்தது அவளிடம் இருந்து.

"என்னடி வாய் நீளுது!?"

"அப்படித்தான் நீளும் என்ன செய்வ!?"

"வாயை இழுத்து வச்சு...!"

"சொல்லுடா மை சாக்லேட் பாய்..!" கணவனை ஊக்குவிக்க.

அவனோ, "வாயை இழுத்து வச்சு கோனு ஊசியால தச்சுடுவேன்னு சொல்ல வந்தேன்.கண்ட நினைப்போட சுத்தாம ஒழுங்கா வீடு போய் சேருடி!" என்றுவிட்டு நகர.

"வீட்டு சாவி உன்கிட்ட இல்ல இருக்கு.!"

"நான் உன் வீட்டுக்கு போக சொன்னேன்!"

அவளுடன் பேச்சை வளர்க்க வேண்டும், அவள் பேசும் அழகை ரசிக்க வேண்டும். தன்மீது அவளின் காதல் ஊற்றாக ஊற வேண்டும்.அதில் தான் மூழ்கி முத்துக்குளிக்க வேண்டும்.

"ஆசை தான் சாதாரண ஆசை அல்ல; அவள் மீதான அவன் காதலால் உண்டான பேராசை!"

முதன்முதலாக அவள் காதலை சொன்ன தருணம் மறுக்கத்தான் நினைத்தான்.
ஆனால் அவனே அறியாது அவன் உடலே அவனுக்கு எதிரியாக மாற.

சாலையோர காற்றுக்கு தலை அசைக்கும் அரளி செடியாக அசைந்தது ஆணின் தலை.



**********************************


"நோ ரேமா ஐ கான்ட்!" மறுப்பை கூறினான் சாத்விக்.

"இல்லை ஆரு உனக்கும் எனக்கு செட்டே ஆகாது.நம்ம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்!" என்ற ரேமா அதற்குமேல் அங்கே அமராது எழுந்து சென்றுவிட்டாள்.

அவனால் தாங்கவே முடியவில்லை.

"தன் அனைத்து வெற்றிக்கு பின்னும் அவள் இருப்பாள்.தான் தோல்வியில் துவழும் போது தோள் தாங்க அவள் இருப்பாள். தன் காதலுக்கு அரசியாக;தன் பிள்ளைகளுக்கு அன்னையாக அவளே இருப்பாள்!" அவனுள் கனவுகள் ஆயிரமாயிரம்.

"பல நேரம் அவன் செய்யும் சிறு தவறுகளை கூட அவள் தான் திருத்தம் செய்வாள். அவளுடனான தன் வாழ்வு அழகாய் அமையும் என்றும்;தன் தாய் தந்தை போல தானும் அவளும் இணைபிரியாது பல காலம் வாழ்வோம்!" என்று நம்பினான் அவன்.


அவனுக்கும், அவளுக்கும் வேலைகள் அதிகமாகி இருந்தது.லேபில் இருந்து அசையமுடியாத அளவிற்கு வேலைகள் நெட்டி தள்ளியது.


அவளாக வெளியில் செல்லலாம் என்று அழைக்கவும் ஆர்வமாக வந்திருந்தான்.

"அவளின் அருகாமையில் மனம் சற்று அமைதியுறும்!" என்ற காதலின் அபரிமிதமான போதை அது.

எல்லா நோய்க்கும் மருந்து காதலின் அருகாமையே என்ற மாய தோற்றம் ஒன்றை உருவாக்கி மலரின் மதுரத்தில் மயங்கும் ஞிமிலியாக மாற்றி இன்பமாய் மூழ்கடித்து இதமாய் கொல்லும்.

கோடி கோடி மின்னலை மனதில் சுமந்து வந்தவன் மீது விஷத்தில் தோய்ந்த
அம்பை எறிய.

காற்று நிறைந்த பலூனாக மனம் அவள் எறிந்த அம்பால் பட்டென்று வெடித்து சிதறியது.

அவள் கூறிய,"இல்லை ஆரு உனக்கும் எனக்கு செட்டே ஆகாது.நம்ம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்!"

இந்த வார்த்தை காற்றில் கலந்து அவனையே வட்டமிட்டது தூபம் கொண்ட புகை போல.

அவள் சென்று பலமணி நேரம் அங்குதான் அமர்ந்திருந்தான்.

"சார் கிளோசிங் டைம்..!" என்று தயங்கி தயங்கி வந்து நின்ற வெய்டரின் குரலில் சூழல் உணர்ந்தவன் உயிரற்ற வெறும் கூடாக இல்லம் சென்றான் சாத்விக்.

மகன் இரண்டு நாட்களாக எங்கும் செல்லாமல் வீட்டில் அடைந்து கிடப்பதை கண்ட சங்கீதா கணவனை அனத்தி இருந்தார்.

"என்னங்க பாவம் பையன் ரூமுக்குள்ளவே கிடக்கான் என்னனு கேளுங்க!?" என்றார் சங்கீதா.

"இரும்மா சாப்பிட்டு போய் கேட்கறேன்!"

"அதெல்லாம் கிடையாது என் பிள்ளை அங்க கவலையா இருக்கான் நீங்க இங்க சாவகாசமாக சாப்பிட்டு போய் எப்ப கேட்பீங்க என்றார்!?" அன்பான அன்னையாய்.

"சரி" என்று உணவு மேசையில் இருந்து எழுந்தவர் மகன் அறைக்கு சென்று நாசுக்காக தட்டிவிட்டு காத்திருக்க.

கலைந்த தலையும் நலுங்கிய உடையும் என வந்து நின்ற மகனை கண்டு வாகீசனே ஓர் நொடி மிரண்டுவிட்டார் என்றால் சங்கீதாவின் நிலை சொல்லவா வேண்டும்.

அவரின் கண்களில் கண்ணீர் கோலம்.

நல்லவேளையாக வர்ணிகா வீட்டில் இருந்திருந்தாள் என்றால் அண்ணன் நிலை கண்டு ஆர்ப்பாட்டம் செய்து அதற்கு காரணமான ரேமாவை ஒருவழி ஆக்கி விடுவாள்.

"என்ன ஆச்சு சாத்விக் ஏன் இப்படி இருக்க கண்ணா!?" சங்கீதா வேதனையாக கேட்க.

'ப்ரேக் அப்' கதையை மகன் கூற கேட்ட வாகீசன் கொஞ்ச நாட்கள் வீட்டில் இருக்கும்படி கூற.

"எப்படியும் தன்னால் வேலையில் கவனம் செலுத்த முடியாது தந்தையின் சொல்படி நண்பர்களுடன் நேரம் செலவிடுவது என முடிவு செய்தான்!" அவன்.

"இரவின் நீளங்கள் அவளால் முடியாது நீள்வதாய் ஓர் பிம்பம்!" அவனை மொய்க்க.

இரவு நேரம் நண்பன் ஒருவனின் தேநீரகம் வந்திருந்தான் சாத்விக்.

இருண்ட வானை வெறித்தவன் யோசனை எங்கோ பயணிக்க.


நண்பனிடம் சொல்லிக் கொண்டு தன் பயணத்
தை தொடர்ந்தவன் எந்த போதி மரத்தின் நிழலில் அமர்ந்தானோ ஞானம் வரபெற்று தந்தையின் ஆய்வுக்கூடம் செல்வதற்கு தொடங்கினான்.


ஒரு மாதம் கடக்க ஆய்வு கூடம் மிகவும் பரபரப்பாக செயல்பட தொடங்கியது.

ஷ்ரவனின் ரகசிய ஆய்வுக் கூடமும் யாருக்கும் தெரியாது ரகசியமாய் தன் ஆய்வை தொடங்கி இருந்தது.
 
Top