Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 18

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
"அவமானம் பெரும் அவமானம் தாங்க முடியா வேதனை!" ஷ்ரவனிடம்.


"இன்று காலை நடைபெற்ற ஐ .எம். ஏ அறிவிப்பில் இவர்களின் கண்டுபிடிப்பை ஒத்த கண்டு பிடிப்பு ஒன்று அங்கீகாரம் பெற்றது!"

அதனை மேடை ஏறி வாங்கிய சாத்விக் முகத்தில் இருந்த பெருமிதம்.

ஷ்ரவனை ஏளனமாய் பார்த்த பார்வை அனைத்தும் அவனை பாடாய் படுத்தி இருந்தது.

"ஹா..........!" எனக் கத்தி இருந்தான்.

உச்சம் தொட்ட விரக்தி அவனுள். சௌந்தர்யா கூட நெருங்க அஞ்சி தயங்கி நின்றார் மகனிடம்.

"இது சாதாரணம் அல்ல பல ஆண்டுகள் சேமித்த கனவின் முதல் படி.ஆனால் அதுவே நிறைவேறாத கோபம்!"

"தந்தையின் கனவிற்கு செயல் வடிவ கொடுக்க முடியாது போன வெறி!"

"தந்தை காலத்தில் இருந்து போராடி வரும் ரகோத்வாவின் திறமைக்கு அங்கீகாரம் இல்லது போன ஆத்திரம்!"

"ஆறு இளைஞர்களின் எதிர்காலம் சூனியமான சினம் கொடுஞ்சினம் அவன் முகத்தில் தாண்டவமாட.வீட்டிற்கு வந்தது முதல் யாரிடமும் பேசாது அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்!"

"எங்கே இதனை வைத்து வீட்டில் இருப்பவர்களின் மனதை நோகடிக்க செய்வோமோ!?" எனும் பயத்தில் அறையை தாழிட்டு இறுகி பூட்டினான் அவன் மனதை போல.

மகனிடம் கேட்க முடியாத சூழலில் சௌந்தர்யா ரக்சனை நாட.

அவனோ இடிந்து போய் அமர்ந்திருந்தான்.

"ரக்சா..!" என்ற சௌந்தர்யாவின் அழைப்பில் திரும்பியவன்

"எங்க கனவு எல்லாம் கனவாய் போய்ட்டே ம்மா....!" வார்த்தையில் திரும்பி எழ முடியாத விரக்தி விரவிக் கிடக்க.

"முதல்ல என்ன நடந்தது அதை சொல்லுடா கண்ணா!?" அன்பாக கேட்டார் பெரியவர்.

அவரின் கேள்விக்கு நடந்ததை கூறத் தொடங்கினான் அவன்.

இந்திய மருத்துவ குழுவின் சான்றுகள் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்த புற்று நோய்க்கான மருந்து ஒன்று மறுத்தளிக்கபட்டதாம்.

"அதுவும் சாதாரணமாக அல்ல இவர்கள் வேறு ஒருவரின் மருந்தை திருடிக் கொண்டு அதற்கு வர்ணம் தீட்டி அவர்களுக்கு அனுப்பியது என்றும் கூறி தங்களுக்கு தடைவிதிக்கும் அபாயம் கூட வரலாம்!" என்ற நிலை.

இப்பொழுது புரிந்தது "மகன் ஏன் இத்தனை ஆக்ரோஷம் கொண்டுள்ளான்!?" என்று.

இரவு பகல் பாராது உழைத்த உழைப்பை 'திருட்டு' என்று கூறியதும் அல்லாது; அவர்களுக்கு தடையும் விதிக்கப்படுகிறது என்றால் அவனுக்கு கோபம் வருவதில் 'ஆச்சர்யமோ? தவறோ?' ஒன்றும் இல்லை.

ஆனால் இதை பற்றி எண்ணிய மகன் "இதிலே மூழ்கினால் என் செய்வது!?"

'ஏனென்றால்!?'

தோல்வியை வென்றவர்கள் வெகு சிலரே.தோல்வி நம்மை மூழ்கடிக்கும் மூலாதாரம்.மீண்டு வருவது கடினம்.

நம் மனம் நினைத்தால் எதற்கும் செயல் வடிவம் கொடுக்கும்.அதுபோல் இந்த தோல்விக்கு செயல் வடிவம் கொடுத்து மகனை முடக்கிடுமோ

"கிடையாது! என்ன நினைக்கிறாய் சௌந்தர்யா அவன் யார் உன்னை செதுக்கிய சிற்பி.கணவனை இழந்து அடுத்த வேலை வாழ வழி இல்லாமல் நின்ற உனக்கு ஊக்கம் கொடுத்து எழுந்து நடக்க செய்த நவீலன்!"

"தன்னை தோல்வியில் மூழ்க விடமாட்டான். கட்டாயம் வெற்றித் திருமகனாக மீண்டு வருவான் என் பிள்ளை!"

சௌந்தர்யாவிற்கு மனம் முழுதும் "கணவன் நினைவு உண்டாக அவரின் கனவுகள் கூட இன்று உயிரற்று போன நிலை!"

ரக்சன் சொல்வது புரிய அமைதியாக அமர்ந்திருந்தாள் ரித்து.

அவளுக்கு கணவனின் ஆசைகள் தெரியாதா என்ன ஆராய்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் வரும் போது எல்லாம் அவன் கண்கள் காதலியை கண்ட காதலனாக மின்னும் அழகை அவள் பார்த்திருக்கிறாளே.

அவள் ஒன்றும் பேசவில்லை.என்ன செய்வது "இப்பொழுது அமைதியாக இருப்பதே சாள சிறந்தது!" வாயை பூட்டிக் கொண்டாள்.

ரக்சன் தன் இல்லம் சென்றான்.இவன் வருகைக்காக காத்திருந்தாள் போல வீணா.

சோஃபாவில் அமர்ந்து கையில் இருந்த பாப் கானை ருசித்துக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்திருந்தவள்
இவன் வருகை உணர்ந்து

"என்ன தம்பி கப்பு கொடுத்தாங்களா!?" என்றாள் வந்ததும் வராததுமாக.

இவனுக்கு பதில் கூற விருப்பம் இல்லை அவளிடம் பேசி சண்டையிட்டு புரிய வைத்து என்று எதற்கும் இன்று அவனிடம் தெம்பு இல்லை.அதனால் அமைதியாக நகர.

"ஒன்னும் பண்ண முடியலை அப்பறம் எதுக்கு லவ் கல்யாணம் எல்லாம் பேசாம சன்யாசியா போயிருக்கலாம்! இந்த லட்சணத்தில் குழந்தை வேற.உன்னை மாதிரி ஒரு முட்டாளுக்கு அது ஒன்னு தான் இங்க குறைச்சலா இருக்கு. ச்சீ...!!"முகம் சுண்டி அவனை நோக்கினாள் வீணா.

"இதுவும் ஒரு பொழப்பு அதுக்கு தெரு ஓரம் போய்...!" என்று வாயிற்கு வந்தபடி பேசலானாள்.

இந்த நாளுக்காகவே காத்திருந்தவள் போல பேச ஆரம்பிக்க.


எல்லாம் தேவி, ரக்ஷன் பற்றி கூறி உருவேற்றி இருந்த வார்த்தைகள். அவற்றை அப்படியே கொண்டுவந்து இங்கே இறங்குகிறாள் மகள்.

அவளின் வீண்வாதம் எல்லாம் ஆணவனை நொருங்க செய்ய.இத்தனை நாள் அடக்கிய மனது இன்று வெடித்தது.

"ஹேய் என்ன சொன்ன தெரு ஓரம்.. சொல்லுடி! என்ன சொன்ன!? உனக்கு எல்லாம் பகட்டு பகுமானம் தான முக்கியம்.
என்னை மாதிரி உண்மையான அன்பெல்லாம் காட்டினா உங்களுக்கு பிடிக்காதுடி.காசு பணத்தை மூஞ்சில விட்டென்றிஞ்சு உங்களை நாய் மாதிரி நடத்துவான் பாரு அவன் தான் உங்களுக்கு செட்டாவான்!"


"என் காசுலையே சாப்பிட்டு, என் காசுலையே எல்லாம் பண்ணிட்டு, என்னையே இந்த பேச்சு பேசிட்டு இருக்க உனக்கு எவ்வளவு திமிரு!?"

"ஹேய் என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு பின்னாடி வரும்போதும் கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போதும் உனக்கு அது தெரியாதா!?"

"நானாடி உன் பின்னாடி வந்தேன் நீதானே வந்த!?"

"ஆனா நீ நல்ல வேலையில இருக்க நிறைய சம்பாறிப்ப நினைச்சேன்!"

"நீ பணம்னா அலையுவியா...!?"

"ஆமாம் நாங்கள்லாம் பணம் பணம்னு அலையுறோம் இவரு மட்டும் சித்தர் சீராளன் மாதிரி பணம் காசு ஆசை எல்லாம் துறந்துட்டாரு!"என்றிட.

"உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு அதையே நான் பண்ணி இருக்கலாம் நல்லா இருந்திருக்கும்!" என்றான் அவன்.

அவள் ஒன்று பேச அவன் ஒன்று கூட பெரும் போரே மூண்டது அங்கே.

"நீ எல்லாம் உண்மையாவே ஆம்பள தானா!?"வார்த்தையை அவள் விட்டுவிட

"ஆமாம் நான் ஆம்பளை இல்லதான். அதனால நீ என்ன பண்ற கோர்ட்ல பெட்டிசன் போடு சரியா.ரெண்டு பேரும் ம்யூட்சுவல் டிவர்ஸ் வாங்கிக்கலாம்.எனக்கு கூட உன்னை மாதிரி ஒரு 'அகம்பாவிய' ஒரு ஆணவக்காரியை வேதாளம் மாதிரி காலம் முழுக்க முதுகுல சுமக்க பிடிக்கலை!"

அவனும் பதிலுக்கு சாடினான்.

கையில் இருந்த பாப் கார்ன் நிறைந்த கண்ணாடி கிண்ணத்தை ஓங்கி தரையில் எறிய.

அதுவோ 'நங்'கென்று சத்தமிட்டு ரக்சன் மனம் போல் சுக்கல் சுக்கலாக நொறுங்கி போனது.

பெரும் தோல்வியை கண்டு வந்த கணவனை,"மடி சாய்த்து உன் துவண்ட மனதிற்கு மருந்தாக நான் இருக்கிறேன்!"

"இன்று கண்ட தோல்வி நாளைய வெற்றிக்கு வித்து எழுந்து ஓடு.உன் பின்னால் நான் இருக்கிறேன்!"

"இது அல்ல எதுவந்த போதும் உனக்காக நான் இருப்பேன்!" எனும் மனைவியின் வார்த்தை கொடுக்கும் உந்து சக்திக்கு 'ஈடு உண்டா என்ன?'

இவளோ அவ்வாறு ஆறுதல் உரைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

ஆனால்,"தோல்வியில் துடிக்கும் நிலை கண்டு சிரிக்கிறாள் என்றாள் எத்தனை பெரிய கல் மனம் வேண்டும்!?" அவளுக்கு.


"நீ சொன்ன சொல்யூசன் ரொம்ப நல்லா இருந்தது மேன்.அதையே எக்சிக்யூட் பண்ணிடலாம் ரெடியா இரு!" என்றவள் எப்பொழுதும் செல்வது போல அவள் அன்னை வீட்டிற்கு பெட்டியை கட்டினாள்.

இந்த முறை,"அவள் மனம் எதை நினைக்கிறது!?" என்று தான் புரியவில்லை.

ஆனால்," எங்கோ ஓர் மூலையில் மனம் அடிவாங்கியது என்னவோ உண்மை!"

"என்ன? அதை உணரத் தான் அவளுக்கு அனுபவமில்லை!"

அவளை 'செல்' என்றவனும் விடுதலையை உணரவில்லை; மாறாக 'இறுக்கம்' கொண்டான் இதயத்தில்.

"அம்மா...!"

என்ற அழைப்புடன் மகள் கையில் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்ததை கண்ட தேவி கணவனின் முகத்தை சிரிப்பாக நோக்கினார்.



"கண்டிப்பாக இன்று மகள் பெட்டியை கட்டிக் கொண்டு வருவாள்!"என கட்டியம் கூறிய மனைவியை முறைத்துக் கொண்டிருந்தார் ஶ்ரீனிவாசன்.

"என்னங்க என்னை முறைக்கிறீங்க நான் தான் சொன்னேன் இல்ல உங்க மக இன்னைக்கு கண்டிப்பா வருவான்னு.நான் சொன்னது மாதிரியே வந்துட்டா பாருங்க!"

யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைப்பது போல பெற்ற மகள் தன் வாயால் அமைந்த நல் வாழ்வை கெடுத்துக் கொண்டு வந்து நிற்பது தெரியாது.

தான் கூறியதை போல பெட்டியும் கையுமாய் வந்ததை கண்டு சிரிக்கும் மனைவி கண்டு ஆத்திரமாக வந்தது மனிதருக்கு.

மனைவியை 'கைநீட்ட கூடாது' எனும் கொள்கை கொண்டவர் என்பதால் தன்னை அடக்க சிரமம் கொண்டு அமர்ந்திருந்தார்.

வந்தவளோ நடந்ததை கூறி தந்தை முகம் கண்டாள்.

எப்பொழுதும் மகள் செய்யும் குளறுபடிகள் அனைத்திற்கும் பொறுப்பேற்று மருமகனை சமாதானம் செய்யும் ஶ்ரீனிவாசன் இந்த முறை மௌனம் சாதித்தார்.

மகள் வாழ்வு சிறக்க அவளை சற்று விட்டு பிடிக்க வேண்டும்.

இல்லை என்றால் தன் வாழ்வை மட்டுமல்ல முட்டாள் தனமாக கணவன் மனதை நோகடித்து அவன் உயிரையும் குறைத்து விடுவாள்.

ஒரு ஆணாக மருமகன் மனம் புரிந்தது அவருக்கு.ஆதலால் இந்த முறை மௌனம் சாதிக்கும் முடிவில் மட்டும் உறுதியாக இருந்தார்.

அதற்காக மகளின் வாழ்வை விட்டுவிடும் எண்ணமும் அவரிடம் இல்லை.

**********************************

தன் அறையில் இருந்து வெளியே வந்தான் ஷ்ரவன்.

வேகமாக தன் கருங்களிறை தந்தையின் அறைக்குள் செலுத்தி கதவை தாழிட்டான்.

அந்த அறையில் தான் அவன் தந்தை சுந்தர் லேப்பில் வேலை இல்லாத நேரம் எல்லாம் இருப்பார்.

எதையாவது சிந்தித்துக் கொண்டும், படித்துக் கொண்டும்,எழுதிக் கொண்டும் குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார்.

ஒரு நொடியும் 'வீணாக' விட்டதில்லை அவர்.

மனைவி,மகனுடன் அவருக்கு நேரம் செலவிட முடியவில்லை என்பதை விட; அவருக்கே இருபத்தி நான்கு மணி நேரம் போதாத போது எங்கிருந்து குடும்பத்தை எண்ணி நேரம் ஒதுக்குவார்.

ஆனால் சௌந்தர்யா அவரை புரிந்து கொண்டு மகனை கணவன் நிலையை புரிய வைத்து வளர்க்க.

மகனும் புரிந்து வளர்ந்தான் என்றாலும் தந்தை இறந்த பின்பு தந்தை போல அறிவியல் அல்லாது பொறியியல் தேர்வு செய்தான்.

அதற்கு எல்லாம் சௌந்தர்யா மறுப்பு சொல்லவில்லை.

ஆனால் அவன் கணவனின் கனவை நனவாக்கும் பயணத்தை தொடங்க.

மகனின் மன உறுதி அறிந்து ஒரு தாயாய் உண்மை அறிந்த அன்றே அவனை தனியே அழைத்து எச்சரித்தார் பெரியவர்.

"இங்க பாரு ஷ்ரவா இதை நீ தொடங்கினா உனக்கான நேரம்னு ஒன்னு இருக்காது எல்லா நேரத்தையும் அட்டை மாதிரி தனக்குள்ள இழுத்துக்கும் செய்வதற்கு முன்னாடி யோசி!?" என்றிட.

"கண்டிப்பா இதில் இருந்து நான் பின்வாங்கவே மாட்டேன்மா!" என்றவன் அன்று கொண்ட உறுதி இன்று உருகுழைந்தது கண்டு வேதனை சுமந்தார் பெண்மணி.

தந்தையின் கண்ணாடி இருந்த டப்பாவை கைகளில் எடுக்க.அதில் இருந்த கண்ணாடி அவனை வாவென்று அழைத்தது.

"அந்த கண்ணாடி மீது அவனுக்கு என்றுமே தனி பிரேமை உண்டு!"

அதனை அணிந்து அவன் தந்தை படிக்கும் போதும், அவர் எழுதும் போதும், அவரின் மடியில் அமர்ந்து பார்த்த பிள்ளை பருவ நாட்கள் பல உண்டு.

வளர்ந்த பிள்ளையான பின்பு அந்த அறையில் சென்று அமைதியாக நின்று தந்தையை பார்த்த ஞாபகம் மாறாது மனதில் சாமரம் வீச.

தந்தை இல்லாத சமயம் திருட்டு தனமாய் அறைக்குள் சென்று அந்த கண்ணாடியை அணிந்த காலமும் உண்டு.

இப்பொழுது இந்த அழுத்த சூழலில் நினைத்தாலும் 'புன்னகை' தோற்றுவிக்கும் அற்புத காலம் அது.

மகனுக்கு தன் கண்ணாடி மீது உள்ள பிரியம் உணர்ந்த சுந்தர் அவனுக்கு அது போல் ஒன்றை கொடுக்க.

அவனோ அதனை மறுத்தான்

"ஏன் கண்ணா வேண்டாம் சொல்ற!?"

"அப்பா எனக்கு உங்க கண்ணுல இருக்கும் போது மட்டும் தான் கண்ணாடியை பிடிக்கும்.அதனால் எனக்கு கண்ணாடி எல்லாம் வேண்டாம்!" என்றிட.

மகனை எண்ணி பூரிப்பு கொண்டார் அந்த அன்பு தந்தை.

"என்ன அந்த அறைக்குள் வந்து கண்ணாடி தவிர அவன் வேறு ஒன்றையும் தொட்டதில்லை. அதற்கு சுந்தர் அவனை அனுமதித்ததும் இல்லை!"

பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் சுந்தர் தன் படைப்பு குழந்தைக்கு ஒன்று என்றால் எரிமலை தான்.

அறிந்ததால் தான் சௌந்தர்யா மகனை கண்டிப்பாக அனுமதிப்பது கிடையாது.இவனும் சமத்து பையனாக தந்தை விரும்பும் மகனாகவே இருந்தான்.

எல்லாம் அந்த கொடூர விபத்தால் தலைகீழாக மாறிவிட்டது.

தங்கள் வாழ்வு மட்டுமல்ல இன்று தந்தையின் கனவும் கூட இல்லாதது எல்லாம் தலைகீழானது.

கண்ணாடி இருந்த பேழையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் ஷ்ரவன்.

அவனுக்காக மனைவியும் அன்னையும் காத்திருப்பது புரிந்தது.ஆனால் 'என்ன பேசுவது!?' என்றே புரியாத நிலை.

யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.
அவன் அறைக்குள் சென்றவன் கதவை தாழிடாது விட்டுவிட மகனை நோக்கி மருமகளை அனுப்பினார் சௌந்தர்யா.

"ரித்து அவன் என்ன செய்றான் போய் பாரும்மா!"

"சரிங்க அத்தை..!" என்றவள் அறைக்குள் நுழைய.

அவனோ ஓய்வறை சென்றிருந்தான்.

அவன் கையில் கொண்டு வந்த கண்ணாடி இருந்த பேழையை எடுத்து திறந்து பார்க்க அழகாக இருந்தது கண்ணாடி.

அதில் ஏதோ ஒரு வித்தியாசம் உணர்ந்தவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்து சோதிக்க.

என்ன வித்தியாசம் என்பது தான் புரியவில்லை.

"அதை எதுக்கு எடுத்த முதல்ல வை அதை!" என்று திடீரென ஒலித்த கணவன் குரலில் அரண்டு அந்த கண்ணாடியை கைதவறி கீழே விட.

"கணவன் கோபத் தாண்டம் தான் ஆடப்போகிறான்!" என்றெண்ணி

"ஐயோ வேணும் எல்லாம் பண்ணலைங்க நீங்க திடீர்னு வந்து கூப்பிட்டதும் பயத்துல கைநழுவி விழிந்துட்டுங்க சாரி சாரிங்க!"

தன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு மன்னிப்பை ஜமாய் ஜெபித்தாள்.

அவளை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தவன் குனிந்து அதனை எடுக்க முயல.

இவளே அதை எடுத்து அவன் கரத்தில் வைக்க.

"ஆக்ரோசம் கொள்வான்!" என நம்பிய அவளின் கணவன் அவளை இழுத்து அணைத்து கொண்டான்.

"ஏன் இவ்வாறு செய்கிறான்!?" என்றவள் உணரும் முன்பே சிறு துளி விழி நீர் அவள் கன்னம் தீண்டிட.

கணவனை பார்த்தாள் ரித்து.

"சிறு மூரல் விரவியதோ அவன் அதரங்களில்!?"

நெற்றி முட்டி, கன்னம் உரசி அவளை சிலிர்க்க செய்திட.

"இருக்கும் சூழலில் தான் செய்ததற்கு தன்னை அடுக்கும் வாய்ப்பு தான் அதிகம்!" என எண்ணி இருக்க அவனோ ஆலிங்கனம் செய்தான்.

மனைவியின் சுமையை தன் கருங்களிற்றில் ஏற்றி மடியில் சாய்த்து மெத்தை வரை அவளின் இதழை கொய்து.

படுக்கையில் பதுமை சேர்த்து புதுமை செய்ய.

"அவனுக்கு தானே மருந்தாவது கண்டு நாணமும், பெருமையும் கொண்டாள்!" ரித்து.

என்றுமில்லாத மென்மை அவனிடம். "கோபம் கொண்டு வன்மை செய்வான்!" என அவள் எண்ண.

அவனோ மாறாக மென்மையிலும், மென்மை "மலர் நாடும் வண்டு மலரை தீண்டுமே அப்படி ஒரு தீண்டல்!" செய்து அவளை சிலிர்க்க செய்தான்.
 
Top