Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 17

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
தனக்கு தேவையான முக்கியமான ஃபைலை வீட்டில் விட்டுவிட்டு சென்றிருந்தான் ஷ்ரவன்.

'கண்டிப்பாக தேவை' எனும் சூழல் என்பதால் திரும்பி வந்தவன் மனைவி சமையல் அறையில் இருந்ததை கவனித்துவிட்டு தான் தங்கள் அறைக்குள் நுழைந்தான்.


ஒவ்வொரு இடமாக பொறுமையாக தேடியவன்,அங்கு கிடைக்காது போகவும் மனைவியின் பக்கம் ஏதார்தமாக 'பார்க்கலாம்!' என திறக்க.

ஒவ்வொரு கிளோசெட்டையும் திறந்து பார்க்க..

அதில் ஒரு இடத்தில் இரண்டு கோப்பைகள் இவனைப் பார்த்து பல்லைக் காட்டியது.

'கணவன் வந்தான்' என்பதை அறிந்து கைவேலைகளை முடித்துக் கொண்டு வந்த ரித்து,"கணவன் தன் கிலோசெட்டில் என்ன காண்கிறான்!?"

குழப்பத்தில் வந்த வாடாமல்லியின் மண்டையில் மணி அடிக்க ஓடி சென்று அதை மூடுவதற்குள் எல்லாம் கைமீறீ.. சென்றது.


"இது என்னடீ..!?"

மனைவியிடம் தனக்கு முன் இருந்த கோப்பைகளை காணவில்லை என்று கேட்டிருந்தான் ஷ்ரவன்

தான் மாட்டிக்கொண்டது உணர்ந்து "இல்லங்க அது.. இது ஒன்னும் இல்லையே பவுல்!" என்றாள் பதட்டத்தை மறைத்த குரலில்.

"ஓ இது பவுல் தெரியுது. ஆனா இதை பத்திரமா ஏன் வாட்ராப் உள்ள இருக்க கிளோசெட்டில் வச்சிருக்க!?"

"நீங்க ஏன் அதை திறந்தீங்க!?" கோபமாய் ஆரம்பித்து பௌலை அவனிடம் இருந்து பறிக்க செல்ல.

அவள் இழுப்பதற்கு முன்பே இவன் வழுவாக இழுக்க.

பாவையோ பரமன் அவன் 'மடி' சேர்ந்தாள்.

எழுந்துகொள்ள அவள் முயல கண்ணாடி பௌலை மேசையில் வைத்தவன் அவளை வளைத்து பிடிக்க.

"என்ன பண்றீங்க!?"

"ஏன் என்ன பண்ணணும்!?"

"இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்ன விடுங்க!"

"முடிஞ்சா எழுந்துக்கோ!" சவால் விட்டான் அவன்.

அவளே 'நேரம் வாய்க்காதா?' என காத்திருப்பவள் எழவா செய்வாள். இன்று வாகாய் அமர்ந்து அவன் கழுத்தை கட்டிக்கொள்ள.

"ஏய் என்னடி பண்ற!?"

இப்பொழுது இவன் முறை போல;

"என்ன பண்ணணும்.நான் எதும் பண்ணலையே ஆஜுத் கண்ணா!"என்றாள் கொஞ்சலாய்.

"இறங்குடி கீழ!"

அவனால் அவளின் அருகாமை தரும் இதமான இம்சையை பொறுக்க முடியவில்லை.

"நீங்க என்னை கீழ இறக்கி விடுங்க!" வீம்பாய் அமர்ந்துகொள்ள.

"சீ.... ரிது!"

"அதை தான் உங்களை பார்த்ததுல இருந்து பண்ணிட்டு இருக்கேனே அப்பறம் என்ன? தனியா சீ... ரிது டி.. ரிதுன்னு!"

சலிப்பாய் வந்தது அவள் குரல்.

"ஏய் என்னடி ரொம்ப சலிக்கிற!?"

"ஆமாம் சலிக்கிறாங்க இவரு மண்ணு இவரை அப்படியே சலிச்சுட்டாங்க.இங்க தான் அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லையே ஹிம்..!' ஒனக்கமாய் வக்கணை செப்ப.

அவளின் கூற்றில் கரைந்தவன் கன்னத்தை தன் இதழால் ஒற்றி எடுக்க.

பட்டும் படாத ஒற்றலில் சிக்குமுக்கியாய் பற்றிக் கொண்டது பருவ மனது.

அதிர்வில் வந்தது 'ஹா..' எனும் குரல்.

"என்னடி இங்க வாய்ப்பு இல்ல!? எதைடி சொல்ற திருடி!?"

"யாரு திருடி நானா!?"

"ஆமாம் நீதான்..!"

"நான் எதை திருடினேன்!?"

"அந்த பவுல் ரபீக் எங்கஜ்மென்ட்ல நான் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தது எனக்கு நல்லா தெரியும்!" என்றான் அவன்.

"ஐயோ நல்லா வகையா சிக்கிட்டியேடி ரித்து அன்னைக்கு வாங்கின பல்ப் பத்தாதுன்னு.இப்போ நல்லா டன் கணக்குல பல்ப் வாங்கற!"மானசீகமாக தன்னையே வசவு பாட.

அவளின் எண்ணங்களை தன்னிடம் திருப்பினான் ஷ்ரவன்.

அவன் கைகள் அவளின் முகவடிவை அழகு.கைகளுக்கு ஓய்வு கொடுத்து இதழ்கள் அலங்காமல் பற்றிக் கொண்டது அவ்வேலையை.

"ஏன்...ன... ப்பா...!?" வார்த்தையை கூட முழுதாய் முடிக்க முடியாது முல்லைக் கொடியள் தள்ளாட.

இதழ்கள் ஈரமாக, மூச்சு சூடாக அறையை நிறைத்த பருவத்தின் பாவனைகள் எல்லாம் கள்ளமாய் ரகசியம் உடைக்க.

மனைவி உடன் தன் நாற்காலியை நகர்த்தியவனை அவள் இறுக்கிக் கொள்ள.

இருவருமாய் படுக்கையில் சரிந்தனர்.

"உனக்கு...?" அவன் தயங்கி அவளின் விருப்பம் அறிய முற்பட.

அவன் கண்களை அவளின் கரங்கள் மூட அனுமதி வழங்கி இதழ்கள் இணைய சேர்ந்தது.

தடைப்பட்டு கிடந்த உணர்வுகள் வெடிக்க.
பின்னிப் பிணைந்த கொடிகளில் பேதம் ஏது.

இளமையின் தாழ் தானாக திறக்க. ஒன்று கொஞ்சிய ஏகாந்த குருவிகள் இரண்டும் இணைந்து இல்லறம் பயின்றது அங்கே!

காலை உறக்கம் கலைந்து எழுந்தவள் தன்னை இறுக்கி இருந்த இரும்பு கரத்தை விலக்கினாள்.

பிரவீன் சொல்வது போல இவன் உண்மையாகவே அயர்ன் மேன் 'இரும்பு மனிதன்' தான்.

அனுபவசாலிகள் பகிர்ந்த அனுபவப் பாடல்களில் இருந்து வேறாக இவன் கற்பித்த பாடம் அவளின் உணர்ச்சிகளின் பிடியில் இப்பொழுதும் அல்லவா தீப்பிடிக்க வைக்கிறது.

"அப்பப்பா என்ன வேலை செய்துவிட்டான் சேட்டைக்காரன்!" என்று அவனை செல்லமாக திட்டிக் கொண்டே எழுப்பினாள்.

"என்னங்க எழும்பலையா!?"

"போடி தூங்கனும்..!"

"உங்களை யாரு வேண்டாம் சொன்னா தூங்குங்க ஆனா...!" ஏதோ கூற வந்து வாயை மூடிக்கொண்டாள் கூச்சம் கொண்டு.

"என்னடி வேணும் எதையோ சொல்ல வந்த அப்புறம் நிறுத்திட்ட உன்னோட பொருள் எதும் என்கிட்ட இருக்கா..!?" என்றான்

தெரிந்தே அவளிடம் விளையாட நினைக்கும் மலைக்கள்ளனிடம் போராட சக்தியற்று

"ஹப்பா என்னால முடியலை நான் குளிச்சுட்டு கீழ போறேன் நீங்க மாதவன் அண்ணாவை வர சொல்லுங்க!" என்றிட.

"ஏய் அறிவு கெட்டவளே!"

பட்டென்று கணவன் திட்டிவிட 'கண்ணே கலங்கும்' போல இருந்தது அவளுக்கு

"ஏன் இப்போ திட்டுறீங்க!?"

'அப்பறம் நான் இருக்கதை கொஞ்சம் பாரு!" என்ற உடன் பார்த்தவள்

"என்ன எப்பவும் போல தானே இருக்கீங்க....!" என்று சொல்லிக் கொண்டே வந்த குரல் மெதுவாய் தேய்ந்தது.

"இப்போ புரியுதா!? என் டிரஸை எடுத்து கொடு முதல்ல!" என்ற கணவனை அன்றைக்கு தானே குளிக்க வைத்து சிகை அலங்காரம் செய்து ரசிக்க.


'கண்டிப்பாக அன்னை வீட்டில் இருக்கமாட்டார்!' என்பதை அறிந்தவன் அவரை அலைபேசியில் அழைத்து பேசிவிட்டு,

அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டவன் மனைவியுடன் இல்லத்தில் உல்லாசமாக நேரத்தை கழித்தான்.


காலை முதல் கீழே வராத தம்பதியரின் நிலையை செவ்வந்தி சௌந்தர்யாவிற்கு தகவல் ஒளிபரப்பு.

அண்ணன் குடும்பத்துடன் தானும் ஆன்மீக சுற்றுலா செல்ல முடிவு செய்தார் நாகரீகம் தெரிந்த பெரியவர்.

கணவன் வாசத்தில் நாகலிங்க மலரில் மயங்கும் பெண்நாகமாய் இவள் மாற.தாழம் பூவின் மணத்தில் மயங்கும் ஆண் நாகமாய் அவன் மாறினான்.

அவளை உரசி தான் தெய்வத்தில் அப்படி என்ன கண்டானோ.அறைக்குள் தன் நாற்காலியில் அவளை தன் மடியில் அமர்த்தி அறையை நகர்வலம் வர.இவளோ பொங்கி சிரித்தாள் அவன் கற்றுத்தந்த பிள்ளை விளையாட்டில்.

"ஐயோ உங்களுக்கு கால் வலிக்கும் விடுங்க!"

"அதுக்கு தான் நீ இருக்கியே!"

"நான் என்ன பெயின் கில்லரா!?"

"கண்டிப்பா நீ பெயின் கில்லர் இல்லடி நீ க்ருவலான சீரியல் கில்லர்!"

"ஏனாம் அப்படி!?"

“அங்க நின்னு,இங்க நின்னு பார்த்து பார்வையாலேயே கொல்லுவ.அப்பறம் தூங்கும் போது கழுத்தை இறுக்கி குழந்தையா கொல்லுவ.சரி பாவம்னு விட்டா எங்க அம்மா கூப்பிட்டதும் ஓட்டமா ஓடி அவங்க முன்னாடி நின்னு பொறாமையால கொல்லுவ.உனக்கு ஆயுதம் ஏதும் வேண்டாம்டி சும்மா எதையாவது யோசிக்கிற மாதிரி உட்கார்ந்து அப்படியே மடிச்சு உன் புருவ சுழிப்புல ஒழிச்சுக்கு. .!"

மேலும் அவன் கூற வர..

"போதும் இதுக்கு மேல கேட்க எனக்கு தெம்பில்லை!" என்றவளை மேலும் தெம்பிழக்க செய்தான் கள்வன்.

††††††††††††††††††††††††††††††††††††††

"எங்க டாடி கிட்ட வந்து நம்ம விசயத்தை பேசு பேபி..!"

"என்னடீ சொல்ற!?"

"ஆமாம் எங்க அப்பா அலைன்ஸ் பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டாரு ஜோ!"

"சரிடி பார்க்கட்டும்.ஆனா இப்போவே பேசுன்னு நின்னா என்னடி செய்யட்டும்!?"

"அவரு நாளைக்கு அவரோட பிரெண்ட் பையனை இன்றோ பண்றேன்.பேசுன்னு சொல்றாரு நான் என்ன செய்யட்டும்!?"

"நீ போய் ஒரு ஹாய் பாய் சொல்லிட்டு வா!"

"என்னால அதெல்லாம் முடியாது ஜோ!"

"ஏன்டி!?"

"உன்னை தவிர வேற யாரு கூட நான் விளையாட்டுக்கு கூட ஜோடி சேர விரும்பலை.நீ வருவியா மாட்டியா!?"

"வர்றேன் பிரின்ஸ்.ஆனா அதுக்கு கொஞ்சம் நாளாகும் அதுவரைக்கும் சமாளிடி தங்கம்!" என்றான் அவன்.

அவன் சூழல் அவளுக்கு புரிகிறது.ஆனால் அவளின் நிலையும் கூட கவலைக்கிடமாக உள்ளதே.

இதில் அவளுக்கு இவனைத் தவிர வேறு யாரால் உதவிட முடியும்.

“பிளீஸ் பிரின்ஸ் இது உன்னோட என்னோட மட்டும் இல்ல நம்ம எல்லாருக்கும் ரொம்ப முக்கியமான நேரம்.

ஷ்ரவன் முழு நேரமும் இங்க தான் இருக்கான்.வேள்வி வீட்டுக்கே போகல.ரம்ஜான் அன்னிக்கு குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு அப்துல்க்கு கால் பண்ணிச்சு ஆனா அவனால போக முடியலை.

இவ்வளவு ஏன் இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆனா இந்த ரபீக் இன்னும் இங்ககிடந்து அல்லாடுறான்.

கொஞ்சம் யோசி இத்தனை பாண்டமிக் பீரியட்ல நான் மட்டும் எப்படி நகர முடியும்னு சொல்லு!?"

"அது எனக்கு புரியுது பேபி.சரிவிடு நான் நாளைக்கு எப்படியாவது சமாளிச்சுடுறேன் இப்போ வைக்கிறேன் டேக் கேர்!" என்றவளும் சூழல் உணர்ந்து அமைதியாக அழைப்பை துண்டித்தாள்.

அவளின் தந்தை அருள் தாஸின் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாமல் தள்ளாடினாள் மாது.

காலை,தந்தையே அவரின் நண்பன் மகனை சந்திக்க வேண்டிய காஃபி ஷாப்பிற்கு சென்று இறக்கிவிட்டு வேலைக்கு செல்ல.

'விதியே!'என்று உள்ளே சென்றவள் அங்கே அமர்ந்திருந்தவனை அடையாளம் கண்டு அருகே செல்ல.

அவனும் எழுந்து நின்று மரியாதையாக தன்னை "வின்சென்ட் ஜாக்சன்" என்று அறிமுகம் செய்தான்.

"நான் கிறிஸ்டினா பிரின்ஸ்" என்று அறிமுகம் செய்து இருவரும் அருகே வந்த பேரரை நோக்கி

ஒரே நேரத்தில் ஒன்றாக "ஒரு கேப்பர் சீனோ!"என்க.

இருவருக்கும் ஒரே போன்ற ரசனை என்பது புரிந்தது.

நண்பர்களாக பேசிட தொடங்கிய நேரம் அருகே நிழலாட

நிமிர்ந்த கிறிஸ்டி ஆனந்தமாய் அதிர்ந்து தன்னருகே நின்ற ஜோவின் கரத்தில் தன் கரத்தை பூட்டுக் கொண்டு

"ஹேய் வின்ஸ் இவன்தான் என் பேபி!"என அறிமுகம் செய்திட.

"ஹாய் ப்ரோ நீங்க தானா அது!? பிரின்ஸ் இப்போ வரைக்கும் உங்களை பத்திதான் ஒரே பேச்சு!" என்றான் ஜோவை பார்த்து.

நண்பர்களாக பேசினாலும், பொறாமை துளிர்விட்டது ஜோவிற்கு.

"தான் மட்டுமே அழைக்கும் அழைப்பை அவன் எப்படி அழைக்கலாம்!?" எனும் காதலின் செல்லக்கோபம் அது.

அழகான உரிமையும் கூட.

"ஓகோ..ஓகே ப்ரோ இப்போ நாங்க கிளம்பறோம்!" என்றவன் பில்லை செலுத்திவிட்டு அவளோடு நடந்தான்.

"என்னடி உனக்கு அப்படி சிரிப்பு அவனை பார்த்து!?" ஜோ கேட்க.

'காதலன் கோபம்; காதலின் அழகு! என்று கண்டாளோ என்னவோ?'

"டேய் பேபி உண்மையா பேபி மாதிரியே இருக்க இப்போ.அவனுக்கும் எனக்கும் ஒரே டெஸ்ட் சோ பிரெண்ட்லியா பேசிட்டு இருந்தேன் அவ்வளவு தான்.அப்பவும் கூட உன்னைதான்டா அவன்கிட்ட பேசிட்டு இருந்தேன் செல்ல கிறுக்க!" என்றவள் அவன் வாகனத்தின் பின்னால் ஏறுவதற்கு முன்பு

"ஆமாம் வரவே முடியாது பேண்டமிக் அப்படின்னு சொன்ன இப்போ எதுக்கு வந்த!?"

"நான் சிட்சுவேஷன் சொன்னேன் அவனுங்க மாப்ள போய் தங்கச்சிய பார்த்து மேட்டரை சால்வ் பண்ணிட்டு டூ அவர்ஸ்ல வான்னு சொன்னானுங்க நானும் வந்துட்டேன்!" விளக்கம் கொடுக்க.

ஜோவின் இருசக்கர புரவியில் ஏறி அவனின் பிரின்ஸ் பின்னிருந்து இறுக்கிக் கொள்ள இயந்திர புரவி வேகம் எடுத்தது.

*************************************

"டார்லிங்...!"

"என்ன ஆரு..!?"

"ஏய் டார்லி..!"

"சொல்லுங்க ஆரு..?"

தன் முகத்தை நிமிர்ந்து பார்க்காது கையில் இருந்த கோப்பையை மட்டுமே கவனமாய் கவனித்த சாத்விக்கு கோபம் வந்தது.

"ரேமா!" என்றான் அவன்.

"இப்போ உங்களுக்கு என்ன வேணும் எவ்வளவு முக்கியமான வேலை போய்ட்டு இருக்கு இப்போ வந்து கொஞ்சிட்டு இருக்கீங்க!?"

கத்தி தீர்த்தாள் அவள்.

ஆனால் அவன் அவளை அழைத்தது என்னவோ அவன் வீட்டில் இருவருக்குமாய் வந்திருந்த உணவை உண்பதற்கு அவனை திட்டி முடித்த பின்புதான் உணர்ந்தாள் ரேமா.

"சாரிங்க ஆரு.நான் நீங்க சாப்பிட கூப்பிட்டத கவனிக்கலை!" என்றவள் கோப்பையை மூடிவைத்து சங்கடமாக எழுந்து நிற்க.

அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தன் அலுவலக அறைக்குள் இருக்கும் கழிவறை சென்றவன் அந்த வாயிலில் அவளை இறக்கிவிட.

நேற்று முழுவதும் லேபில் நின்ற கால்கள் பலம் இழந்து உண்பதற்கு கூட செல்ல முடியாது அமைதியாக வேலையை பார்த்தவளின் வலியை அவள் கூறாமலே புரிந்து கொண்டவள் உணவும் கொண்டுவந்து.

அவளை பிள்ளை போல கைகளில் ஏந்தியது அவளின் மனதை தாக்கியது.

"நீ அவனுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்!? அவன் உனக்கு என்ன செய்கிறான் பார்த்தாயா!?" என்ற மனதின் கேள்வி எல்லாம் ஆய்வை பற்றிய எண்ணமதில் மூழ்கிவிட.

கைகளை கழுவிக்கொண்டு வெளியே வந்தாள் அவள்.

மீண்டும் தூக்கிக் கொண்டு உணவு மேசை சென்றவன் அவளுக்கு பரிமாறிய பின்பே தனக்கு வைத்துக்கொண்டு உண்ணத் தொடங்கினான்.


அவனின் இந்த அன்பு தான் அவளை அவனிடம் காற்றில் பறக்கும் துகளாய் சேர்க்கிறது.

"ஆரு" அன்பாய் அழைத்தவள் நன்றி நவிழ

"அவனோ பைத்தியம் லவ் யூ சொல்லணுமே தவிர மத்த தாங்க்ஸ் சாரி எல்லாம் நமக்கு இடையில வேண்டாம் ஓகே வா!" என்க

பதில் கூறாமல் உணவை கொறிக்க தொடங்கிட.

"அதுதானே இந்த மாதிரி ஏதாவதுன்னா மட்டும் உனக்கு எங்க இருந்து தான் வருமோ அந்த பொல்லா வெட்கம்!?" என்றவன் சாப்பிட்டு முடித்து கைகளை கழுவ சென்றான்.

அவன் 'அன்பு' ஒன்று தான் அவளை அசைத்து பார்த்தது.

அமைதியாக உணவை முடித்தவள் அவன் பாத்திரங்களை சுத்தம் செய்து அடுக்குவதை கண்டு பின் அணைத்துக் கொண்டாள்.

"காதலின் செல்ல அவஸ்தையில் மெல்லமாய் சிக்கினான்!" சாத்விக்.

"ஹேய்...!"

என்றவன் திரும்பும் முன்பே அறையை விட்டு வெளியேறி தன் கோப்பைகளை எடுத்துக் கொண்டு ஆய்வுக்கூடம் செல்வதற்கு தயாராகினாள்.

"இவளுக்கு என்ன ஆனது ஏன் மாறி மாறி இயல்புகளை வெளிப்படுத்துகிறாள்!?" புரியவிட்டாலும் அவள் தான் அவனின்
காதல்.

அவளைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்கிக் கொண்டு தன் வேலைகளில் மூழ்கினான் சாத்விக்.

இந்த முறை கண்டிப்பாக 'எஸ் த்ரீயை' எப்படியும் முந்திவிட வேண்டும் எனும் வேட்கை அவனுள்.

"அதுமட்டுமா!?"

"அவனவளின் இரவு பகல் பாராது உழைக்கும் உழைப்பிற்கு பலன் வேண்டும் அல்லவா? அதற்காகவும் சேர்த்தே உழைத்தான்!" அவன்.
 
Top