Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 16

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
"அம்மா..."

"வர்ணி..."

"அப்பா..."

குடும்பத்தினரை அழைத்தபடி அவளை அழைத்து வந்தான் சாத்விக்.

"ஆரு விடுங்க ஆரு நம்ம இப்படியே போயிடலாம் அங்கில், ஆண்ட்டி எதும் நினச்சுக்க போறாங்க!?"

"அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க அவங்க ரெண்டு பேரும் செம கபில்.நம்மை ஏத்துப்பாங்க!"

தைரியம் கொடுத்தவாறு மீண்டும் அனைவரையும் அழைக்க.

ஒரு பெண்ணின் கரம் பிடித்து மகன் அழைத்து வரும் போதே தெரிந்தது.

கண்டிப்பாக மகனின் போக்கில் மாற்றம் கொண்டு வந்த மலர்மகள் இவள் தான் என்று.

"வாடா சாத்வி..!" என்ற சங்கீதா ரேமாவின் முகத்தை பாருங்கள்.

"அம்மா இவதான் ரேமா உங்க மருமகள்!"

பட்டென்று கூறியவன்

"டேய் சாத்வி டாடியை நீ கண்டுக்கவே இல்லையே மேன்!" என்ற தந்தையிடம்

"அம்மாக்கு பிடிச்ச எதையாவது நீங்க அப்ஜெக்ட் பண்ணி இருக்கீங்களா அப்பா!?"

"நோ மை சன்..!"

"அதனால் தான் அம்மாக்கிட்டவே அப்பிளிக்கேஷன் போடுறேன்!"

"வாங்க வந்து உட்காருங்க!" என்றார் சங்கீதா.

"வெல்டன் மை பிரதர்!" என்றபடி வந்த வர்ணி.

ரேமா புறம் திரும்பி,"உங்களுக்கு கண்ணுல எதும் பிரச்சனை இல்லையே!?" என்க

'ஏன் அவ்வாறு கேட்கிறாள்!?' என்று மற்றவர்கள் பார்க்கவும்.

'கண்டிப்பாக தன்னை ஏதோ கலாய்க்க தங்கை தலைப்பை தேர்வு செய்துவிட்டாள்!' என்பது புரிந்து சாத்விக் தடுக்க வர.

ரேமாவோ,"ஏன் அப்படி கேட்கறீங்க!?" ஆர்வமாக வினவ.

"இவ்வளவு அழகா இருக்க உங்களுக்கு எப்படி என் அண்ணனை பிடிச்சுது!?"

அவ்வளவு தான் "வர்ணி...!" என்று இரண்டு புறங்களில் இருந்து ஆக்ரோஷ கத்தல் வர.

அண்ணனும்,அன்னையும் கத்திய கத்தலுக்கு 'காதை குடைந்து' கொண்டே எழுந்து சென்றாள்.

ரேமாவை சங்கீதாவிற்கு பிடித்தே இருந்தது.மகனுக்கு பிடித்துள்ளது அல்லவா.

வாகீசனுக்கும் அவளை பிடித்தது நல்ல பெண்ணாக இருப்பதோடு.

தங்கள் ஆய்வில் தான் கொஞ்ச நாட்களாக வேலை செய்கிறாள்.அவளின் பேரில் 'நன்மதிப்பீடுகள்' இருக்கு.அவள் மருமகள் என்பதில் அவருக்கு பெருமை தான்.

வர்ணிக்கு,"அண்ணன் கல்யாணம் என்றால் பர்சேசிங் செல்லலாம்; அண்ணன் பர்ஸை காலி செய்யலாம்!" இதுதான் அவளின் எண்ணம்.

வீட்டில் அவளை அறிமுகம் செய்தவன் சிறிது நேரத்தில் அவளுடன் வெளியே கிளம்பி இருந்தான்.

"என்னங்க..!"

"என்னம்மா....!?"

"எனக்கு என்னவோ நீங்க கொஞ்ச நாளா ஏதோ யோசனையா இருக்குது போலவே இருக்குங்க!?"

சங்கீதா கணவனை கேட்க.

"அப்படி ஒன்னும் இல்லம்மா ஐ.எம்.ஏ ல நம்ம சப்மிட் பண்ணின ரிப்போர்ட்க்கு ரிசல்ட் என்ன வரும்னு இருக்கு.அதுதான் யோசிக்கிறேன்!"

"உண்மையா அதுதானே..!?"

"உண்மையா அதுதான்மா..!" என்றவர் மனைவியின் பாதத்தை வெதுவெதுப்பான நீரால் ஒத்தடம் கொடுக்க தொடங்கினார்.

*************************************
"மாப்பிள்ளை...!"

மெதுவாக அழைத்தார் ஷ்ரீனி

வேறு எதற்கு அவர் பெற்ற மகள் செய்து வைக்கும் ஊழல் வேலைகளுக்கு எல்லாம் உருள்வது என்னவோ இவர் தலைதான்.

இப்பொழுது என்ன சண்டை என்றால்..

அவளின் தோழியாருடன் வெளியே சென்ற போது கொஞ்சம் அதிகமாக செலவு வந்துவிட்டதாம்.

அதுவும் கொஞ்சமே கொஞ்சமாக.. தொகை என்னவென்றால் 'நான்கு இலக்கத்தில்' தான் வந்திருந்தது.

கணவனிடம் கேட்க அவன் மறுக்க.அங்கு தொடங்கிய சண்டையில் தேவி இடைப்புகுந்து.

"ஏன்டி இது எல்லாம் ஒரு காசுன்னு கொடுக்கமாட்டேன் சொல்லிட்டாரா.நல்ல ஆளா பார்த்து லவ் பண்ணி இருக்க பாரு!?" என்றவர் இன்னும் 'என்னென்னவோ?' சொல்லிவிட.

அவர் அடித்த வேப்பிலையில் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள் பெட்டியோடு.

இங்கு வந்தால் அவள் சந்திக்கும் பெரும் பிரச்சனை காலை காஃபியும்,உணவும் நேரத்திற்கு கிடைக்காதது தான் அவளின் கவலை.

மற்றபடி,'பணம் எல்லாம் அன்னை கொடுப்பார்!' எனும் அழுத்தம் அவளுக்கு.

நண்பர்கள் அனைவரும் அவரவர் இணையத்துடன் உணவகத்தில் ஒன்று கூட.

"தான் மட்டும் தனியே போவது சரியாய் இராது!" என்று தான் அவளையும் அழைத்து செல்ல அதுவும் மாமனார் அழைத்த பிறகுதான்,வந்திருந்தான் ரக்ஷன்.

"வாங்க மாப்பிள்ளை!" என்ற மாமனாரை பார்த்தவன்

"ஆமாம் மாமா!" என்றவன் மனைவியின் அறைக்குள் செல்ல.

கணவன் வருவது உணர்ந்து கைபேசியை கீழே வைத்தவள் அவன் முகம் பார்க்க.

இவனோ எதுவுமே பேசாது நின்று கொண்டான்.

"என்னடா? வந்துட்டு ஒன்னுமே பேசாம இருக்க!"

"இது உனக்கு கடைசி வினு!"

"ஏன்!? எதுக்கு!?"

"இதுக்கும் மேல நம்ம சண்டைக்கு உங்க அம்மா அப்பா வீட்டுக்கு வந்தன்னா நான் வந்து கூப்பிட மாட்டேன்!"

"ஏனாம்!?"

"ஆமாண்டி உன்மேல தப்பை வச்சுட்டு நீ கோச்சுட்டு வா.நான் உன் பின்னாடியே வர்றேன். நாளப்பின்ன பிள்ள குட்டின்னு வந்தா அதுகளையும் நீ கைல பிடிச்சுட்டு இங்க வந்து நிப்ப நல்லா இருக்குமடி குடும்பம்!" கோபமாய் அவன் கூற.


இவளோ,"எங்க இருக்கு புள்ளகுட்டி!?" என்க

அவனுக்கு சிரிப்பு வரும் போல் இருந்தது அவளின் தோரணை.

ஆனால் கண்டிப்பாய் சொல்லிவிடும் முடிவில் இருந்தான் அவன்.அவனுக்கு இது போல வருவதில் உடன்பாடு இல்லை.

எல்லாம் அவள்மீது வைத்த அன்பு ஒன்று தான் அவளிடம் இறங்கி போக காரணமாக இருந்தது.

'இதுவே முறையானால் எங்கே காதல் கரைந்து வெறுப்பு மட்டுமே நிலைக்குமோ!?' பயப்பந்து நெஞ்சை முட்ட.

"இதுவே கடைசியா இருக்கட்டும் விணு. அடுத்த முறை நீ ரொம்ப பண்ணினன்னு வை.. நான் எடுக்கற முடிவு நீ எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்ப பெருசா இருக்கும்னு பார்த்துக்கோ!?"

கணவன் கோபம் முகம் கண்டு தணிந்து வந்தாள் வீணா.

"ஓகே ஓகே ரொம்ப பேசாத வா கிளம்பலாம்!" பையுடன் வர.

மாமனாரிடம் சென்று 'வருகிறேன்' என்றவன் மாமியார் புறம் மறந்தும் திரும்பவில்லை.

எதற்கு அவரின் புறம் சென்று 'வீண் அவமானம் தேவையா!?' என்ற எண்ணம் தான் 'வேறு என்ன!?'

தங்கள் வீட்டிற்கு சென்று அங்கிருந்து உணவகம் செல்லும் திட்டத்தில் இருந்தவன் மனைவியோடு 'பார்த்த முதல் நாளே!' பாடிக்கொண்டே வாகனத்தை இல்லம் நோக்கி செலுத்தினான்.

†*******†*******†*********†*********†

"அடியே நிலா நீ எப்போடி வருவா!?"

"அக்கா இதோ பக்கத்துல வந்துட்டேன்..!"

"நாங்க உனக்காக தான்டி காத்துட்டு இருக்கோம்"

"இதோ சிக்னல் கிட்ட இருக்கேன் பாருங்க!"

"அப்பாடா உன்னை பார்த்துட்டோம் வா... வந்து வண்டில ஏறு..!" என்றாள் கீர்த்தி.

ரித்துதுவின் பயிற்சி முடிந்த பின் அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர் தோழியர்.


கிறிஸ்டி வாகனத்தில் ரித்து இருக்க. கீர்த்தி வாகனத்தில் நிலா ஏறிக்கொள்ள பிரபல உணவகம் ஒன்றினை நோக்கி வாகனங்கள் படையெடுத்தது.

"எல்லாம் ஐ. எம். ஏ வில் இவர்களின் ஆராய்ச்சியை சமர்பித்ததன் வெற்றிக் கொண்டாட்டம் தான்!" காரணம்.

ஆய்வகத்தில் இருந்து அப்துல்லா, ரபீக் இருவரும் அவரவர் துணையுடன் வந்திருக்க.

ரக்ஷன் உடன் வீணா வந்திருக்க.

ஜோ உடன் ஒரு வேலையாக வெளியே சென்ற ஷ்ரவன் திரும்பி வரும் போது இயக்கியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

ஆக சிறியவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி இருந்தனர்.

பிரவீனுக்கும் கூட அழைப்பு சென்றிருக்க. அவனும் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான்.

அனைவரும் அவரவர் துணையுடன் அமர.

தம்பி ஒருபுறம் கணவன் ஒரு புறம் என்று ரித்து அமர.

பிரவீன் அருகே அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்தாள் நிலா.

'போடி!' எனும் பார்வை அவளை பார்த்த பிரவீன் திரும்பிக் கொள்ள.

அந்த வட்ட வடிவ மேசையில் அனைவரும் ஜோடி ஜோடியாக அமர.

திவ்ரீ அருகே எதேர்யாக அமர சென்ற கீர்த்தியை அனைவரும் குறுகுறுவென்று பாருங்கள்.

"ஹேய் இப்போ என்ன உங்களுக்கு!? என்ன தெரியணும்!?"

"ஆமாம்! இவனை நான் லவ் பண்றேன் போதுமா!? உடனே குறுகுறுன்னு பார்க்கிறது, ஓரக்கண்ணால பார்க்கிறது இதெல்லாம் வேண்டாம்!"

என்றவள் மிரட்டல் விடுக்க.

"சரிம்மா ரௌடி நீ பண்ணின வேலையால எங்க பையன் அரண்டு போய் இருக்கான் பாரு வேப்பிலை தான் அடிக்கணும் போல!"

ரபீக் கூற.

"அப்போ ஃபாத்தி நீங்க பேசறதை கூட ரபீக் அண்ணா அப்படி தான் சொல்லுவாங்களோ!?"

"யாரு இவரா!? அவ்வளவு கெத்து எல்லாம் இல்ல உங்க அண்ணன்!" என்றவள் பங்கம் செய்ய.

'இது உனக்கு தேவையா!?' என ஆண்கள் அவனை பார்க்க,அமைதியானான் ரபீக்.

"அனைவருக்கும் என்ன வேண்டும்!?" என்று கேட்க.

அமைதியாக இருந்தாள் வீணா

"வீணா அக்கா உங்களுக்கு என்ன வேணும் சொல்லவே இல்லை!?" என்று அன்பாய் ரித்து கேட்க

"எனக்கு எது வேணுமோ அதை வேணும்ன்றப்போ சொல்லிப்பேன்!" என முகத்தில் அடித்தவாரு பேசிட.

அத்தோடு அமைதியாகிய மனைவியின் கையோடு கை கோர்த்தான் ஷ்ரவன்.

அனைவரும் ஒன்றாக 'கொண்டாட' என்று வந்துவிட்டு தங்கள் சந்தோசத்தை கெடுக்க அவன் தேவை.ஆதலால் அமைதியாக இருந்தான்.

கிறிஸ்டி,கீர்த்தி இருவருக்கும் அவளின் மீது கோபம் பயங்கரமாக வந்தது.
மற்றவர்களுக்கும் கூட முகம் வாட்டம் கண்டது.ஆனால் இடம் கருதி அமைதிகாக்க வேண்டிய சூழல்.


அனைவரும் வரிசைகட்டி வந்த உணவை வஞ்சனை செய்யாது முடித்து கடைசியாக அவரவர் இணைகளுக்கு 'டெசர்ட்டை' எடுத்து ஊட்டிவிட.

கீர்த்தியோ, முன்பு தன் வாயை திறந்து காட்டி அவன் கிண்ணத்தில் இருந்த 'ஜாமுனை' கண்காண்பிக்க.

"மச்சான் நாங்க யாரும் உன்னை கவனிக்கவே இல்ல நீ நடத்துடா!" என்றிட.

புன்னகையும்,கூச்சமும் போட்டி போட.. இயக்கி கீர்த்திக்கு ஊட்ட செல்ல.

"வர்ணி.....!!!" என்றபடி இயக்கியின் ஸ்ப்பூனை தட்டிவிட்டான் சாத்விக்.

"அண்ணா என்ன பண்ற..!?" கீர்த்தியின் கேள்வி அங்கிருந்த அனைவரையும் அதிரச் செய்தது.

"என்னது அண்ணனா..!?"

இதுதான் அனைவரின் முதல் கேள்வி.

"இது என்ன வர்ணி!?" என்றான் சாத்விக்.

"ஏன் உனக்கு தெரியலையா!? நான் இவனை தான் லவ் பண்றேன்!"

உடன் பிறந்த அண்ணனிடம் கூட அதே 'பட்'டென்ற வெட்டு பேச்சு தான் அவளிடம்.

சுத்தி அமர்ந்திருந்தவர்கள் முகங்களை கண்டவன் தங்கையை இழுத்து கொண்டு செல்ல.

"என்ன பண்றடா!?" என்றபடி இயக்கி வர.

"என் தங்கச்சி நான் கூட்டிட்டு போறேன் உங்களுக்கும்,எங்களுக்கும் செட்டே ஆகாதுன்னு தெரிஞ்சு என் தங்கச்சியை லவ் பண்ணி இருக்க.இதுக்கு நீங்க எல்லாரும் ஹெல்ப் இல்ல.!?"

"எதுக்குடா இந்த வேலை எங்க புராஜக்ட்டை திருட உங்களுக்கு வழியே இல்லைன்னு இந்த வழியை யூஸ் பண்ணலாம் ஐடியாவா!?"

அவ்வளவு தான் ஷ்ரவனுக்கு கோபம் வந்திருந்தது.

"உங்களை மாதிரின்னு நினச்சுட்ட போல.. நாங்க யாரும் உன் தங்கச்சி வர்ணின்னு தெரிஞ்சு அவ கூட பேசல.என் ஒய்ஃபோட பிரெண்ட் சோ..எனக்கு பிரெண்ட் எங்க எல்லாருக்கும் அவ கீர்த்தி மட்டும் தான் அதனால் ரொம்ப சீன் போடாம போ முதல்ல!" என்று விரட்ட.

தங்கையை முறைத்து கொண்டே ரேமாவை அழைத்து கொண்டு சென்றான்.

தலைகுனிந்து நின்றாள் கீர்த்தி

"இப்ப நீ எதுக்கு இப்படி இருக்க!?" ரித்து கேட்க

"சாரி உங்களுக்கு எங்க அப்பா, அண்ணாவை பிடிக்காதுன்னு அன்னிக்கு ரித்து சொன்னதை கேட்ட பின்னாடி தான் தெரியும்.உங்க பிரெண்ட்ஷிப் கட்டாகிட கூடாதுன்னு நினைச்சேன் அதுதான் சொல்லலை.உங்க புராஜக்ட் பத்தி எல்லாம் நான் எட்டப்பி வேலை பார்க்கலைப்பா நானு!" என்றாள் கீர்த்தி.

"அதுக்கு எல்லாம் நீ சரிபட்டு வரமாட்ட வா வந்து உன் ஆளு கிண்ணத்தில இருக்க ஜாமுனை காலி பண்ணு வா!!" என்றான் ரபீக்.

அதன் பிறகு சூழல் பழைய படி திரும்பி இருந்தது.

அவர்களுக்கு தெரியும் கீர்த்தியோ, வர்ணியோ அவளின் குணம் பசும் பால் என்பது.

அதனால் அவளை இன்னாரின் மகள் என்றோ; இவனின் தங்கை என்றோ குறிப்பிட்ட பேதம் பார்க்க விரும்பாது
தங்களின் கீர்த்தியாகவே அவளை ஏற்றுக்கொண்டார்.

'எனக்கும் வேணும்..!' என்பதாக செய்கை செய்தாள் நிலா பிரவீனிடம்.

அவனோ 'தீயாய்' முறைக்க

'தரலாட்டி போடா!' என வாயசைத்து தன் இனிப்பை உண்டிருந்தாள் அவள்.

தன் இனிப்பை தன்னவளுக்கு ஊட்டி முடித்து அவளை உண்டிருந்த ஷ்ரவன் நிமிரவில்லை

"நிலா..!" என்க.

அவளோ "அண்ணா..!"என்றாள்.

ஏதோ வருகை பதிவு செய்ய ஆசிரியரின் அழைப்பிற்கு மாணவி எழுவதை போல எழுந்து நின்று.

"காலேஜ் தானே!?" என்றான்

"ஆமாம் அண்ணா..!"

"இம்... நல்லா படி..!" என்றதோடு நிறுத்திக் கொண்டான்.

"படிப்பது தான் இப்போதைக்கு முக்கியம் அதை பார்!" என்று சூசகமாக அவன் கூற.

அதன்பின் பிரவீன் மட்டுமல்ல வேறு யாரையும் கவனிக்காது உணவை முடித்துவிட்டு தான் செல்வதாக கூறி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவரவர் இல்லங்களுக்கு செல்ல.

தன் இல்லம் சென்றாள் கீர்த்தி.

"இதோ வர்ற பாருங்க நம்ம எதிரின்னு தெரிஞ்சும் என்ன வேலை பார்த்திருக்கா!?"

"இல்ல எனக்கு தெரியாது.அவங்க குலோபல் குரோத் பத்தி மட்டும் தான் எனக்கு தெரியும் 'எஸ் த்ரீ' பத்தி எனக்கு தெரியவே தெரியாது!" என்றவள்

"நீங்களும் ஏன் எனக்கு சொல்லவே இல்ல அப்பா!?" என்க


"நான்தான் உனக்கு அங்க வேலைக்கு போக பிடிக்குதுன்னு சொன்னதால,
அவளை தடுக்க வேண்டாம் சொல்லிட்டேன்!" என்றார் சங்கீதா.

இவளோ கட்டினால் 'ஷ்ரீ மட்டுமே!' என்று பெற்றோரின் முன்பே கூறி விட்டு அறைக்குள் சென்று அடைய.

மக்களுக்காக கணவன் முகத்தை பார்க்க.

அவரோ மனைவியின் முகம் வாடப்பொறுக்காது

"சரி சரி விடு சாத்வி உன் லவ்வை ஓகே பண்ணிட்டு.அதே நாள்ல கீர்த்தியோட லவ்வை அப்ஜெக்ட் பண்ண சொல்றது கொஞ்சம் கூட சரியே கிடையாது சாத்வி!" என்றார் வாகீசன்.

"என்னவோ பண்ணுங்க!?" என்றவன் தானும் கோபமாய் சென்றுவிட்டான்.

*************************************

"நிலா என்ன பண்ணினா நீங்க எதுக்கு அவளை வார்ன் பண்றீங்க!?"

"நான் எங்கடி வார்ன் பண்ணினேன். என்ன பண்ற அப்படின்னு கேட்டேன் அது ஒரு குத்தமா!?"

"இல்லை எனக்கு தெரியும் நீங்க அவளை வார்ன் பண்ணீங்க.எதுக்கு அப்படி சொன்னீங்க!?"

மனைவி 'அறிவாளி' என்றால் கணவன் நிலை 'திண்டாட்டம்' தான் போல.

"உனக்கு நான் பேசற எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியுமா!?"

"ஏன் தெரியாம!? நல்லா தெரியுமே!"

"அப்போ எங்க அம்மா அன்னைக்கு சொன்னாங்க இல்ல...!"

"என்னைக்கு? என்ன சொன்னாங்க!?"

"அதுதான் ரெண்டு வருசம் ஜாலியா இருந்துட்டு... அப்பறம்....!"

இழுவையாக அவன் இழுப்பதே 'வில்லங்கம் வீடுகட்டி வருகிறது!' என்பதை உணர்த்த.

"ஐயா சாமி! தெரியாம கேட்டுட்டேன் இப்போ பேசாம இருங்க இதுக்கு தானே நீங்க சொல்லவே வேண்டாம் நான் அவகிட்டயே கேட்டுப்பேன்!"

“இல்லடி அவ எப்பவுமே படிக்காம விளையாட்டு தனமாக சுத்திட்டு இருக்க ஃபீல் எனக்கு.அதுதான் படிக்க
ணும் அப்படின்னு டைரக்டரா சொல்லாம, கொஞ்சம் இன்டைரக்டா சொன்னேன். அதுக்குள்ள சண்டைக்கு வர்றடி ஒரு சின்ன பையன்கிட்ட!"

"யாரு சின்ன பையன்..!?"

"நான் தான்! வேற யாரு!?"

"என்ன புது உருட்டா இதெல்லாம் யாரு நம்புவா!?"

"எங்க அம்மா நம்புவாங்கடி..!"

இருவரும் வார்த்தையாடிக் கொண்டே வீடு சென்று சேர.


ஐ.எம்.ஏவின் அழைப்பு வந்து சேர்ந்தது இவர்களுக்கு
 
Top