Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 13

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
"மாசறு பொன்னோ
மதுர சுவையோ
தேனார் கனியோ
கனியின் அமுதோ
கொண்டலின் துமியோ
துமியின் தூரலோ
திகட்டா தெளு
தேனின் திரவியமோ
நீ அன்பே..."

எளிதில் கிட்டா கொம்புத் தேனாய் அழகு கொஞ்சும் பூந்தேராக அரக்கு சிவப்பில்
சேலை சூடிய சோலையாக அவள் மிளிர.

நகைகள் எல்லாம் தோற்றன அவள் புன்னகையில் என்று உள்ளம் ஈர்த்தவனே உயிரின் சரிபாதி ஆவதை எண்ணி உள்ளம்
களிப்பாட்டம் ஆட.

அதன் வெளிப்பாடாக மாறாத புன்னகையுடன் அவள் வலையவர.



கட்டுடை காளையனோ
காட்டாற்று வெள்ளமிவனோ
கிரியுடை தோளனோ
கீர்த்தன கற்பனோ
குறுமொழி பேச்சிவனோ
கூர்விழி அம்பகனோ
கெடா தீயிவனோ
கேண்மையின் நாயகனோ
கையடை பேராண்மையோ
கொடையின் கேள்வனோ
கோபத்தின் குமரனோ
கௌரிய வேந்தனே!!!"

கட்டுடல் கொண்ட காளை அவனோ, "அவளுக்கு உண்மையாகவே தன்னை பிடிக்குமா!?" எனும் யோசனைக்குள் மூழ்கி நாட்களை கடத்தியவன்.

அவளின் விரித்த இதழும், பூரித்த முகமும் கண்டு தன்னையும் திருமண விழாவில் இன்பமாய் இணைத்துக் கொண்டான்.

"ஏய் ரித்து நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லணும்டி!"

"எதுக்கு கிறிஸ்டி!?"

"நான் மட்டும் அன்னைக்கு உன்னை அந்த ரெஸ்டாரன்ட்க்கு போக சொல்லலைன்னா நீ போயிருக்க மாட்ட இல்ல!?"

பெருமை பீற்ற..

அப்துல்லாவின் மனைவி ரம்ஜானோ

"அப்படி பார்த்தா நானும் தான் அவங்க ரெண்டு பேரையும் லவ்வர்ஸ்னு சொன்னேன். அப்போ எனக்கும் கூட தாங்க்ஸ் சொல்லணும் இல்ல!?" என்றிட.

"ஹோ இவ்வளவு எல்லாம் நடந்திருக்கா அக்கா நீ சரியான அமுக்கினி தான்!" என்றபடி வந்த வெண்ணிலா என தன்னை சுற்றி நின்ற பெண்கள் கூட்டம் கேலி செய்ய.

"ஹையோ வேண்டாம் இப்போ என்ன எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றி!"
பெரிய கும்பிடாக போட.


ரபீக்கின் வருங்கால மனைவி ஃபாத்திமா மட்டும்

"எனக்கு உங்க நன்றி இப்போ வேண்டாம்!" என்க

"ஏன்!?" என்றனர் பெண்கள் கூட்டம்

"எப்படியும் அடுத்த வருஷம் அவங்களுக்கு பையன் பிறப்பான் இல்ல அப்போ சொல்லுங்க எனக்கு நன்றி!" என்று இவள் ஒன்றை பற்ற வைக்க.

எண்ணமே வண்ணமாய் மாற.கனவுகள் எல்லாம் கனல்முகனே வந்து நின்றான்.

"ஹேய் சும்மா இருங்கப்பா...!"

"என்னை ஒட்டினது போதும்...!"

"என்னால முடியலை...!"

எத்தனை விதமாக கெஞ்சியும் அடங்காத அரட்டை "பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ!"என்ற ஐயரின் வார்த்தையில் தான் மட்டுபட்டத்தே தவிர,அப்போதும் அடங்கவில்லை.

மகள் மேடைக்கு அழகு மயிலாய், எழில் கொஞ்சும் ஏந்திழையாய் வருவதை கண்ட பெற்றோர்கள் உள்ளம் பூரிக்க.

இந்த நாளுக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்திருப்பர்.

எத்தனை பேரின் கேலிக்கும் கேள்விக்கும் ஆளாகி இருப்பர்.

இத்தனை நாள் சுமந்த மனக்கிலேசம் எல்லாம் இன்று ஆனந்த கண்ணீராய் உருகி ஓடியது.

மாங்கல்ய தாரணம் என்றதோடு மாப்பிள்ளையாக ஷ்ரவன் இருக்க அவன் பாதியாக அருகே அமர்ந்த ரித்துவை நிமிர்ந்து பார்த்தான் பாதுகன்.

முன்பே வெட்க பூக்களை அரும்ப செய்த அணங்கவள் அவற்றை வெடிக்க செய்து மனம் பரப்ப.

செந்தூரம் பூசிய கன்னக் கதுப்புகள் எல்லாம் அவனை 'வா'வென்று அழைக்கும் அழைப்பிதழை சுமக்க.

தன்னை கட்டுபடுத்த முடியாது அவன் தவித்த நேரம்

மாங்கல்யத்தை அவன் கைகளில் கொடுத்தார் ஐயர்.அதனை வாங்கி
பார்வையால் 'உனக்கு சம்மதமா?' என கேட்க

விழித்திரை மூடி திறந்து தன் 'விருப்பம்' கூற.

ஆஜித் ஷ்ரவனின் உற்றவள் ஆனால் பிரீத்தா ராகவன்.

ஷ்ரவனை தவிர்த்து தான் மட்டும் பெரியவர்கள் பாதம் பணிந்தாள் ரித்து.

நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கும் போதும், பாதியாக அவன் மீது சரிந்த போதும் சரி, பால் பழம் கொடுக்கும் போது அவன் உண்ட மிச்சத்தை உண்ணும் போதும் மோட்சம் தொட்ட போதையில் பேதை மனம் தள்ளாட இருந்தாள்.

ஷ்ரவனால் நிற்கமுடியாது என்பதால் மணமக்கள் இருவரும் அலங்கார நாற்காலியில் தான் அமர்ந்திருந்தனர்.

சந்தனம், பன்னீர்,குங்குமம் தேன் நிறைந்த மலர் மாலைகளின் மணம் என திருமண வாசம் அவ்விடம் எங்கும் வீச ஏங்காந்தத்தை பரப்பியது.

"நமக்கு எப்போ இப்படி நடக்கும்!?" காதோரம் கேட்ட கேள்விக்கு

ஏதோ ஞாபகத்தில்" எங்க வீட்ல ஒத்துக்கிட்டா!" என பதில் வழங்கிய பிறகு தான் கீர்த்தி சிந்தித்தாள் 'தான் என்ன!?' கூறினோம் என்பதை.

இக்கேள்வியை கேட்டிருந்த ஶ்ரீ கண்டிப்பாக கீர்த்தியின் ஒப்புதல் பதிலை எதிர்பார்க்கவில்லை.

அவன் எதிர்பார்த்தது எல்லாம் அவளின் முறைப்பான பார்வையும், காலில் ஒரு மிதியும் தான் எதிர்பார்த்தான்.

சூழலின் இதத்தில் உண்மையை உலறிய தன்னை தானே கடிந்த கீர்த்தி அங்கிருந்து விலக பார்க்க.

"பிடிக்கலையா!?" என்றான் ஶ்ரீ.

அவ்வாறு அவன் கேட்பது ஏதோ போலாக.

மெதுவாக யாரும் பார்க்காமல் அவன் சுண்டு விரலில், தன் விரலைக் கோர்த்தாள் கீர்த்தி.

முகம் எல்லாம் பல்லாக நின்றிருந்த நண்பனை கண்ட ரபீக் அவன் கைகளை பார்க்க அதுவோ திருட்டு தனமாக கீர்த்தி கையோடு இணைந்து கிடக்க.

"அடேய் என்னடா பண்றீங்க ஒரு கல்யாணத்துக்கு வந்த இவனுங்க வளைகாப்புக்கு ரெடி ஆவுறானுங்களா இன்ஷா அல்லாஹ்...!" என்றபடி பாத்திமாவின் தோளில் கை போட்டு கொண்டான்.

ஐஸ்கிரீம் இருக்கும் இடத்தில் கூட்டத்தை விளக்கி மனைவிக்காக ஐஸ்கிரீம் வாங்க கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட பல்லியாய் நசுங்கி இருந்தான் அப்துல்லா.

"பேபி வா நம்மளும் கூட பண்ணிக்கலாம்!"

"என்னடி பண்ணிக்கலாம் நான் நல்ல பையன்டி!" என்றான் ஜோ 'பகீர்' பார்வையுடன்.

"அது தான் எனக்கு தெரியுமே நீ பேபி பாய் அதுக்கு எல்லாம் சரிபட்டு வரமாட்டேன்னு. நான் அதை சொல்லலை கல்யாணம் பண்ணிக்கலாமா கேட்டேன்!?"

"அதை அதோ அங்க பந்திக்கு ஆளுங்களை அனுப்பிட்டு இருக்காரு பாரு உங்க அப்பா அவர்கிட்ட போய் கேளுடி சொல்லுவாரு!" என்க.

"எங்க டாடி இங்க இல்லையே!" என்று கூவிக் கொண்டே திரும்பிய கிறிஸ்டியின் கண்களில் விழுந்தார் அவளின் தந்தை அருள் தாஸ்.

"ஐயோ டாடி!" என்றவள் ஜோவை தள்ளிவிட்டு கீர்த்தி அருகே நிற்க.

இப்போது திடுக்கிட்டு விலகினர் புதிதாய் இணைந்த காதல் புறாக்கள்.

அனைவரும் ஒவ்வொரு வேலையில் இருக்க.

ரபீக்,அப்துல்லா இருவரும் உணவை முடித்துக் கொண்டு வேலை இருப்பதாக கூறி கிளம்பிவிட.

அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் வந்தார் புரோஃபஷர் ரகோத்வா.

தம்பதிகளை வாழ்த்த

"ரிது.." என்றான் ஷ்ரவன் ரித்துவை

அவன் பிரத்யேக அழைப்பு இன்பமாய் கொல்ல.

"சொல்லுங்க ஆஜித்.." என்றாள் அவள்

அவளின் குரலில் தன்பேரை கேட்பதே 'வரம் தான்!' என நினைத்தவன்

"இவரு தான் எங்க அப்பாவோட கிளாஸ் பிரெண்ட் ரகோத்வா!" என்க

"வணக்கம் அங்கிள்!" என்றாள் மரியாதையாக கரம் கூப்பி.

அவரோ அவளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கிவிட்டு பிள்ளையாய் சிரித்து
"வாழ்த்துக்கள்மா பிரீத்தா காட் பிளஸ் யூ மை சைல்ட்..!" என்றார் பெரியவர்.

புன்னகை உடன் தம்பதியர் அதனை ஏற்றுக்கொள்ள.


அவரும் வேலை என்று கூறி அங்கிருந்து விரைந்தார்.


"என்ன எல்லாரும் வேலை வேலைன்னு ஓடிட்டாங்க!?" என்றாள் ரித்து.

"அவங்களுக்கு வேலை அதுதான்!"

என்றான் கணவன்.

"ஆகா என்ன தெளிவான விளக்கம்!" அவன் காதுபட கூறிவிட்டு தோழியர் புறம் திரும்ப.

அங்கே ஓடிய புது படத்தை கண்டு கொண்டாள் ரித்து.

"என்னங்க அங்க பாருங்க!" என்றவள் அவன் காதுப்புறம் சரிந்து இரகசியம் பேச.

தீண்டாது தீண்டி, அவன் ஆசைகளை தூண்டி சென்ற அவளின் வஞ்சகத்தை முழுதாய் வெறுத்தான் ஷ்ரவன்.

'கடனே' என்று அவள் காண்பித்த திசையில் பார்க்க அங்கோ கீர்த்தி விரலில் விரல் சேர்த்து நின்றான் ஶ்ரீ.

"இவங்க அதுக்குள்ள டெவலப் ஆகிட்டாங்க பாருங்க!" என்றாள் அவனிடம்.

"ஏன் பதிலே வரவில்லை!?" என திரும்பி அவன் முகம் பார்க்க இவள் பாதி சரிந்து அமர்ந்த உரிமையில் தன்னை மறந்த நிலையில் அவளை மட்டுமே அல்லவா அவன் பார்த்திருந்தான்.

ஒவ்வொருவரின் கள்ளத்தனமும் கேமரா மேனால் படமாக்கப்பட்டு நாளை வரும் சந்ததிக்கு குறும்படமாக ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு இருந்தது இவர்களின் நாடகம்.

மருமகனின் நலனை முன்னிறுத்தி ராகவன் கொஞ்சம் பேரை மட்டும் தான் அழைத்திருந்தார்.

ஆனால் சௌந்தர்யா தொழில், நட்பு இணைந்த கைகள் எனும் காப்பகம் பள்ளி பயிற்சி மையம் என எங்கும் விடாது அனைவரையும் அழைத்திருந்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் மேகலா வந்தவர் ரித்துவை வாழ்த்தி அவளை அணைத்து வாழ்த்துகூற என்று சௌந்தர்யா பக்க கூட்டத்தால் தான் நிரம்பி வழிந்தது மண்டபம்.

"பார்! என் மகனுக்கு நான் ஊர் மெச்ச நடத்தும் திருமணத்தை பார்!!" என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.


"எங்க கூப்பிட்டு போற ஶ்ரீ!?"

"வாடி கொஞ்சம் டிராவல் போய்ட்டு திரும்ப உன்ன இங்கவே வந்து விட்டுடுறேன்!" என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு வாகன தரிப்பிடம் வந்தான் ஶ்ரீதரன்.

அந்நேரம் வாகன தரிப்பிடத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் சாத்விக்.

தன் காருக்குள் கீர்த்தியை அமர்த்தி நிமிர்ந்தவன் சாத்விக்கை தானும் முறைத்தான்.

"இரண்டு அரிமாக்கள் ஒன்றை ஒன்று சமர் செய்து யார் காட்டிற்கு ராஜா!?" என்பதை வீரத்தால் நிரூபிக்க

'போர்க்களம் காணுமே!' அதுபோல இருந்தது அங்கே நிலவரம்.

"ஆரு.." என்ற குரலில் கோபம் தணிந்தவன் ரேமாவின் கைபிடித்து அழைத்து சென்றான்.

இவனோ இன்னும் கோபம் குறையாமல்
"இந்த நல்ல நாள்ல இவன் மூஞ்சில போய் முழிக்கற நிலை ஆகிடுச்சு பாரு!" என்றவாறு அனலை பொழிய.

"என்னடா ஏன் இவ்வளவு கோபமா இருக்க!?" என்று கீர்த்தி கேட்ட பிறகு பிடரி முடியை கோதிவிட்டு,சினத்தை குறைக்க முயன்றான் ஶ்ரீ.

"யாரு டா உன்னை இவ்வளவு டென்ஷன் பண்ணினது!?"

"அவன் ஒரு பைத்தியம் சரி நீ சொல்லு நம்ம எங்க போகலாம்!?"

"எனக்கு எங்கேயும் போக பிடிக்கலை!" என்றாள் கீர்த்தி.

"சரி வா நான் உன்னை ஒரு இடத்துக்கு கூப்பிட்டு போறேன்!" என்றவன் அவளிடம் நீண்ட நெடும் பயணம் தொடங்கினான்.

இருவரின் பயணம் முடியாது நீளட்டும்.

சாத்விக்கை கண்ட ஷ்ரவன் உடல் விரைத்தது.

கணவன் செயலில் மாறுதல்கள் கண்டவள்

"என்ன ஆச்சு ஆஜித்!?" என்க

எதிரே வந்தவனை கண்களால் காண்பித்து இவன்தான் காரணம் என சொல்லாமல் சொல்ல.

இவர்கள் அருகே வந்தவனோ "வாழ்த்துக்கள் சிஸ்டர்!" என்றிட

மரியாதைக்காக "நன்றி" கூறி அவன் கொடுத்த போக்கேயை வாங்கி வைத்தாள் ரித்து.

எல்லா நிறுவனங்களுக்கும் அழைப்பு சென்றது போல; இவர்களுக்கும் சென்றிருக்க தன் நிறுவனத்தின் சார்பாக வந்திருந்தான் சாத்விக்.

அனைவரும் வந்து கூட்டம் ஓய மணி மதியம் இரண்டாகி இருந்தது.

மணமக்களை புதிதாய் ஷோ ரூமில் இருந்து அப்பொழுது தான் டெலிவரி எடுத்த ரோல்ஸ் ராய்ஸில் ஏற்றிவிட்டு மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

வலது அடி எடுத்து வைத்து வாசல் வந்த வண்ணப் புறாவை விழியால் கண்டான் வித்தாரன்.

அறையே சொர்கலோகம் போல் அலங்கரித்து இருக்க.

"மணம் பரப்பும் பல பெயர்தெரியா மலர்களின் அறிமுகம் அங்கே கிடைத்தது!" ரித்துவிற்கு.

கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் அவள்.

காத்திருந்த நேரம் எல்லாம் பார்வதி வழங்கிய அறிவுரைகள்,தோழியர் கூறிய விளையாட்டு பேச்சுக்கள்,அவளுக்குள் தோன்றிய இளமையின் கற்பிதங்கள் என ஒவ்வொன்றாய் மின்னி மறைய.

அவளால் ஓரிடத்தில் இருப்பதே கடினமாகி போனது சூடு கண்டதோ பெண்மையின் ஈர மூச்சுக்கள்.

அவனின் மீதான காதலை சொல்ல வேண்டும் அவனிடம் மனம் மயங்கிய கதையை கூறி தான் பட்ட சுகமான வலிகளை அவனையும் சுமக்க செய்திட வேண்டும்.

இப்படி ஆயிரம் கனவுகளுக்கு மத்தியில் பெண்மை நாட்டியமாட.

"அவளுக்கு உன்னை பிடிக்குமா!?"

"நீ இருக்க நிலமைக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கையை கல்யாணம் பண்ணி அழிச்சுட்டியா!"

"காலம் முழுக்க உனக்கு தொண்டு பண்ண கல்யாணம் ஒரு நாடகமா!?"

அவனுக்குள் தாட்டியம் பேசிடும் மனதின் கேள்விகள் ஆயிரமாயிரம் இருந்தும் கூட

அவனின் ஆசை மனம் அவனுக்காக ஒன்றே ஒன்று மட்டும் கூறியது.

"உன்னால் அவளை அன்றி வேறு ஒருத்தியை சிந்தையில் நிறுத்த முடியுமா!?"


சரியாக அவன் அடிமனத்தை நோக்கி எறிந்த அம்பில் ஆஜித் ஷ்ரவன் எனும் ஆட்சியாளன் 'க்ளீன் போல்ட்'


அறைக்குள் வந்தவன் தன் மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்து பெயர் அறியா வண்ணமலர் ஒன்றை வைத்து முகர்ந்து.

அதன் இதழை தொட்டு.. தடவி.. தன் கன்னத்தோடு இழைய செய்திருந்த கன்னி மலரைத்தான் கண்டான்.

காதலன் கணவன், உள்ளங்கவர் கள்வன் வருவதை உணர்ந்து மலரை கீழே வைக்க.

அவனுக்கோ,"மலரிருந்த இடமெல்லாம் தனக்கு பாத்தியம் செய்தது!" எனும் கோபம் உண்டாக மெதுவாக நாற்காலியில் இருந்து மெத்தைக்கு மாற.

முதன்முறை அவன் இவ்வாறு ஒரு வேலை செய்வதை கண்டவள் கைகொடுக்க முன்வர.

"நோ...."

அவனோ பட்டென்று மறுத்திருந்தான்

"இல்லப்பா நான் எப்படி பார்த்திட்டு இருக்க!?" மெதுவாக கூற

"டோண்ட் டேக் அடவாண்டேஜ்!"

அவளுக்கு "காலம் முழுதும் தான் பாரமாய் ஆவோமோ!?" எனும் அச்சத்தில் வந்த இயலாமையை கோபமாய் அவளிடம் வார்த்தையை விட.


அவன் பேச்சே அவளுக்கு ஆரூடம் சொல்லிவிட்டது.

"உனக்கு அவன் மீது தோன்றும் எண்ணங்கள்,உணர்வுகள், ஆசை,காதல் எல்லாம் உன் மீது அவனுக்கு துளியும் கிடையாது.அதனால் அடக்கி வாசி ரித்து...!"


ஒன்றும் பேசாது அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

மெத்தைக்கு மாறியவன் அவளின் சுருங்கிய முகம் பொறுக்காது

"ரிது.."என்க

அவளிடமோ "இம்ம்..." எனும் இம்காரம் மட்டுமே வர.

"எனக்கு யாரும் ஹெல்ப் பண்ண வர்றது பிடிக்காதுடி.சோ..!"

தன்னிலை விளக்கம் அவன் கொடுக்க.

"என்னால வேடிக்கை பார்த்துட்டே இருக்க முடியாதுப்பா.!"

இவள் பட்டென்று பதில் தந்தாள்.

அமைதியின் சொரூபமாக வலம் வந்த அவன் காதல்கிளி; வெட்டிக் கிளியாக மாறும் அழகை கண்டு உள்ளுக்குள் ரசித்திருந்தான்.

"அப்போ என்னடி செய்யலாம்!?"

"என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்!?"

"சரி சரி நோ மோர் அர்க்யூமென்ட்ஸ் ஓகே!"

சமாதானக் கொடியும் அவனே பறக்க செய்ய

"ஓகே!" என்றவள் அமைதியாக

"என்னடி சைலண்ட் ஆகிட்ட!?"

"எதுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ண கூடாதுன்னு சொன்னது போல; பேசறது கூட பிடிக்கலை சொல்லிட்டா அதுக்கு தான் சைலண்ட்டா இருக்கேன்!"

'வெடுக்'கென்று வந்த அவள் அவனைக் கோபம் கொள்ளச் செய்யாது எரியும் விளக்கின் திரியை தூண்டுவதைப் போல தூண்டிவிடத் தோன்ற.

"அப்போ பேசாத சொன்னா கேட்டுப்பியா? இப்போ ஹெப் பண்ணாத சொன்ன உடனே அமைதியா உட்கார்ந்த மாதிரி!"

"ஹலோ உங்களுக்கு ஹெல்ப் வேண்டாம் சொன்னது உங்க பிரைவசி. பட் என்னை பேசாதன்னு நீங்க எப்படி சொல்லுவீங்க!?"

"ஹோ... பெமினிசம்!"

"இது பெமினிசம் கிடையாது அடிப்படையான சுதந்திரம்!"

"அப்பா... பட்டாசா வெடிக்கிற!"

"ஆமாம் இவரு மட்டும் குளுகுளு கூழை பொழியுறாரு; நாங்க பட்டாசா இருக்கோம்!"

அவனிடம் அவளுக்கு மட்டுமே உள்ள உரிமை உணர்வு, ரித்துவை இவ்வாறு பேசத் தூண்டு.

அவளின் பேச்சைக் கேட்டு வாணலியில் வெடிக்கும் சோளமாய் அவளை மேலும் வெடிக்கச் செய்வதில் அவனுக்கு திருப்தியாக இருந்தது.

"இங்க பாரு ரிது..!"

"அதை மட்டும் தான பண்ணிட்டு இருக்கேன்!" தனக்குள் முணுமுணுக்க

"என்னடீ முணுமுணுப்பு!?"

"இல்லையே... ஒன்னுமே இல்ல..!" என்றவள் அவன் முகம் தீவிரமாக மாறுவதை கண்டு கவனத்தை முழுதாய் அவன் மீது வைக்க.

"நம்ம மேரேஜ் சீக்கிரமா நடந்துட்டு ரிது. எனக்கும் வேலை நிறைய.இப்போதைக்கு என்னால எங்கயும் நகர முடியாது.ஆனா கொஞ்ச நாள் பொறுத்துக்கோ கண்டிப்பா உனக்கு எங்க போகணும் தோன்றுதோ அங்க எல்லாம் போகலாம்!"

"அப்பறம்...!" என்றவன் நிறுத்த

'இன்னும் என்ன!?' என்பதாய் மேல் பார்வை வீச..

கயல் விழியில் தொக்கி நின்ற கேள்விக்கு பதிலாக தன் இதயத்தை இடமாற்றினான் ஷ்ரவன்.

"அப்பறம் பொறுமையா நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்த பின்னாடின்னு சொல்லலை; ஆனா உன்னை நான் உணர்ந்த பின்னாடி இது எல்லாம் தானா நடக்கும்!" என்றான் வாக்கு கொடுப்பதை போல.

பாத்திரத்தில் பொங்கி வழியும் பாலை போல் பெண் மனதில் பொங்கிய உணர்வுகள் எல்லாம் அவன் வார்த்தையில் வடிந்து போனது.

அவளுக்கும் இதுதான் சரியாக இருக்கும் என்று அவனாகவே முடிவு செய்து கொண்டான் ஷ்ரவன்.

'சரி அவன் மனம் உணரும் வரை காத்திருக்கலாம்!' என்ற முடிவுக்கு வந்தவள் உறங்க தயாராக.

தன் பக்கம் இருந்த விளக்குகளை அணைத்து தானும் படுத்துக் கொண்டான்.

விட்டத்தை பார்த்தவாறு கைகளை மடக்கி கொண்டு கண்களை மூடி அவன் படுத்திருக்கும் தோரணை இரவில் வழியும் நிலவின் வெளிச்சத்தில் கோட்டோவியமாக தெரியும்.

அதில் தன் கைகளை தூரிகைகளாக்கி வரைந்து கொண்டே உறங்கிப்போனாள் பிரீத்தா.

அவளின் மூச்சு சீராக வருவதை உணர்ந்து கண்களில் பதித்த கைகளை விலக்கியவன் அவளை காண.

'கொழு கொழு பொம்மை ஒன்று உருகொண்டு வந்ததோ!?' எனும் தேகமும்,கால் முட்டியை தீண்டும் நீண்
ட கூந்தலும் பார்த்தவன்

"இன்னுமா பொண்ணுங்க இவ்வளவு முடி வளர்க்கறாங்க!? ஒருவேளை சவுரியா இருக்குமோ!?" என்றவன் மீண்டும் தன் பார்வை ஆடலை தொடங்கினான்.

கழுத்துக்கு அடியில் கைகளை பொத்தி உடலை குறுக்கிக் கொண்டு அவளின் நான்கடி உயரத்தை மேலும் சுருக்கி கிடக்க.

அதை காணும் போதே அவனுக்கு சிரிப்பு வர

செல்லமாய் அவளை "குள்ளி" என்றவன் அவளை நெருங்கி இணையின் வாசம் படும் தூரத்தில் படுத்து உறங்கினான்.
 
Top