Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - spl epi

Advertisement

:love: :love: :love:

ஒரு தோடுக்கேவா :D :D :D
நல்ல மாமியார்....... வேலையும் மட்டும் வாங்காமல் வேலைக்கு கூலியும் கொடுக்குறாங்க........
பொம்பளைங்க கிட்ட எப்போவும் காசு தனியா இருக்கணும் (y)(y)(y)
அதுவும் reserve பேங்க் மாதிரி தான்........ அவசரத்துக்கு உதவும்..... எப்போ முழுகும்னும் தெரியாது.........

மாமியார் ஒரு நாள் சொன்னா இவன் வாழ்க்கை fullலா ஓயிலேயே டீ குடிப்பான் போலவே........

இன்னும் எதனை எபி???
Niraivan kadai
K & K Purithal super
 
பூவாசம் மேனி வீசுதம்மா..

சில மாதங்களுக்குப் பிறகு...

கமலக்கண்ணன் முதல் நாளே சொல்லியிருந்தான் “மில்லுல ஆடிட்டிங். நான் சீக்கிரம் போகணும்..” என்று.

சொன்னதுபோலவே சீக்கிரம் கிளம்பியும் வந்துவிட, அம்மாவையும் காணோம், மனைவியையும் காணோம்.

“ம்மா... கஸ்தூரி...” என்றழைக்க, சப்தமே இல்லை.

வெளித் திண்ணையில் சந்திரபாண்டி அமர்ந்திருக்க, “எங்க யாரையும் காணோம் ப்பா..” என, “காலையில இருந்து ஒரு காப்பி கொடுக்கல இன்னும்..” என்றார்.

நல்லவேளை கஸ்தூரி அவனுக்கு காலையில் காப்பி கொண்டு வந்து கொடுத்துவிட்டு தான் கீழே வந்திருந்தாள்.

கமலக்கண்ணன் வீட்டின் பின்புறம் போய் பார்க்க, அங்கேயும் இல்லை. ‘இதென்னடா..’ என்று பார்க்க, அவனுக்கு பின்னே இருந்த அறையில் இருவரின் பேச்சுக்குரலும் கேட்க, உள்ளே எட்டிப்பார்த்தான்.

முருகேஸ்வரி பணம் எண்ணிக்கொண்டு இருக்க, கஸ்தூரி நோட்டில் எழுதிக்கொண்டு இருந்தாள். பணத்தை எண்ணி முடித்தவர் “இந்தா இது உனக்கு.. இது எனக்கு... புது சீட்டு அடுத்த மாசம் நல்ல நாள் பார்த்து ஆரம்பிச்சா போதும்..” என்று சொல்லிக்கொண்டு இருக்க,

“நான் என்ன செஞ்சுட்டேன்னு எனக்கு இப்போ காசு..” என்றாள் கஸ்தூரி.

“அ..!! அதுசரி.. நீ வந்து எம்புட்டு கணக்கு எனக்கு எழுதி கொடுத்திருக்க.. உம்புருசன எழுதித் தாடான்னு சொன்னா ஓடிருவான்.. அவனுக்கெல்லாம் காசு கொடுக்காத.. நீயே வச்சுக்க..” என,

“அப்போ நீங்க என்ன செய்வீங்க இத வச்சு..” என்றாள் கஸ்தூரியும்.

“உம்மாமா கண்ணுல கூட காட்டமாட்டேனே. பொம்பளைங்கக்கிட்ட எப்பவும் தனியா காசு இருக்கணும். அதுவே ஒரு தைரியம் கொடுக்கும்..” என்று முருகேஸ்வரி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

“கொடுக்கும் கொடுக்கும்.. மாமியா மருமக ரெண்டுபேரும் கூட்டுக் களவாணிக..” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, அறை வாசலில் கண்ணன் நிற்கவும், முருகேஸ்வரி வேகமாய் அவரின் கையில் இருந்த பணத்தினை மறைத்துக்கொள்ள, கஸ்தூரியோ புன்னகைத்து பார்த்தாள்.

“சீக்கிரம் கிளம்பனும்னு நேத்தே சொன்னேன்ல..” என்று இருவரையும் பார்க்க,

“டிபன் செஞ்சு அங்கன எடுத்து வச்சிருக்கு.. போட்டு சாப்பிட்டு கிளம்பிப் போடா....” என்று முருகேஸ்வரி அவனை விரட்ட,

“ம்ம் அப்பாக்கு ஒரு காப்பி கொடுக்கக் கூட ஆள் இல்லையாம்..” என்றபடி உள்ளே வந்தவன், முருகேஸ்வரி கையினில் சுருட்டி வைத்திருந்த பணத்தினை பிடுங்க, “டேய் விடுடா.. இது எங்காசு..” என,

“உன்னோடது எல்லாம் என்னோடது தாம்மா..” என்றவன், மொத்த பணத்தையும் எடுத்துவிட, கஸ்தூரி அப்போதும் அதனை ஒரு சிரிப்போடு தான் பார்த்து அமர்ந்திருந்தாள்.

முன்னைவிட இப்போது இன்னமும் கொஞ்சம் பூசினார் போலிருந்தாள். அதுவே அவளின் அழகை இன்னமும் மேல் காட்டியது. லேசாய் மேடிட்ட வயிறும், தாய்மை அடையப் போகும் பொலிவும், நிறைவான வாழ்வு கொடுத்த சந்தோசமும் அவள் முகத்தினில் எப்போதும் இப்படியொரு புன்னகையாய தவழ விட்டது. இப்போது ஐந்தாவது மாத ஆரம்பம்.

“டேய் கண்ணா.. குடு டா..” என்று முருகேஸ்வரி சொல்ல, “எம் பொண்டாட்டிக்கு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லித் தரல போ நான் தரமாட்டேன்..” என்றவன், பணத்தினை தன ஜோப்பினில் வைத்துக்கொண்டு வெளியே வந்திட,

“பாரேன்.. இவனை..” என்று சொன்ன முருகேஸ்வரிக்கும் கோபமெல்லாம் இல்லை.

மகன் தன்னிடம் வம்பு செய்வதை எப்போதுமே ரசிக்கும் அம்மாதான் அவர். அப்பாவினோடு அதிகம் ஒட்டாது, அம்மாவிடம் ஒட்டும் மகன்கள் என்றுமே அம்மாக்களுக்கு விருப்பமானவர்கள் தானே.

“உங்கபாடு அவர்பாடு..” என்ற கஸ்தூரியும் எழுந்து நடந்துவர,

“ம்ம் அந்தமட்டும் உன்னோட காச விட்டு வச்சானே..” என்றபடி வந்தவர், சந்திரபாண்டிக்கு காப்பி கலந்து கொடுக்க, கஸ்தூரி கண்ணனுக்குப் பரிமாற,

“இந்த சீட்டு அது இதுன்னு எங்கம்மாவோட சேர்ந்துட்டு நீயும் பண்ற..” என்று கண்டிக்க,

“சரியா பண்ற எதையும் தைரியமா பண்ணலாம்..” என்றாள் கெத்தாய்.

“அஹான்..!!” என்றவன், அவளின் கையில் இருந்த காசையும் பிடுக்கிக்கொள்ள “வேணும்னு சொன்னா கொடுக்கப் போறேன்..” என்றவள், அப்படியே கொடுத்துவிட்டாள்.

அவளுக்குத் தெரியும், இருவரின் பணத்தையும் வைத்து, கூட அவனின் பணமும் போட்டு, ஏதாவது இருவருக்கும் வாங்கிவருவான் என்று. அதனால் தான் முருகேஸ்வரியும் அமைதியாய் விட்டது.

அதேபோல்தான் இரவு வருகையில், கமலக்கண்ணன் அம்மாவிற்கும், மனைவிக்கும் அரை அரை பவுனில் தோடுகள் வாங்கி வந்திருக்க, அவர்களிடம் இருந்த பணத்திற்கு ஒரு அரை பவுன் கூட வாங்கியிருக்க முடியாது என்று தெரியும்.

“பரவால்லா நல்லா எடுத்திருக்கான்..” என்ற முருகேஸ்வரி, சந்திரபாண்டி வரவும் “பாத்தீங்களா.. எம்மவன், எனக்கும் அவன் பொண்டாட்டிக்கும் வாங்கி வந்திருக்கான்.. நீங்களும் தான் இருக்கீங்களே..” என,

‘எனக்கு இது தேவைதான்..’ என்று ஒரு பார்வை பார்த்து வைத்தார் சந்திரபாண்டி.

கமலக்கண்ணனோ கஸ்தூரியிடம் “உனக்கு பிடிச்சிருக்கா..??” என,

“நீ பண்றது எதுதான் எனக்கு புடிக்காம இருக்கு..” என்றாள் அவளும்.

‘இப்படியே கடைசிவரைக்கும் மெய்ன்டைன் பண்ணிடுடா கமலக்கண்ணா..’ என்று எண்ணியவன் “ம்ம் போட்டுக் காட்டு..” என,

“சாமி முன்னாடி வச்சிட்டு நாளைக்கு வெள்ளன போட்டுக் காட்டுறேன்..” என்று இருவரும் பேச,

‘பார்த்துக்கோங்க..’ என்று முருகேஸ்வரி சந்திரபாண்டியை சடைத்துவிட்டுப் போனார்.

சந்திரபாண்டி இப்போதும் கஸ்தூரியோடு நேருக்கு நேரே எதுவும் பேசிக்கொள்வது இல்லை. சிறு வயதில் மாமா மாமா என்று அவள் ஓடிவருகையில் எல்லாம் கண்டுகொள்ளாது உதறித் தள்ளிவிட்டு, இப்போது வீட்டு மருமகளாய் அவள் வரவும் மட்டும் என்ன பேச்சு என்ற குற்றவுணர்வு அவருள்..

பாசம் இருந்தது. அதனை அவ்வப்போது செயல்களில் காட்டினார்.

கஸ்தூரி உண்டாகியிருக்கிறாள் என்று தெரியவுமே, இன்னும் மாற்றம் அவருள்.

வெளியூர் போக நேர்ந்தால், திரும்பி வருகையில் ஏதாவது வாங்கி வருவார். “இந்தா அந்த புள்ளைக்கிட்ட கொடுத்துட்டு..” என்று முருகேஸ்வரியிடம் தான் கொடுப்பார்.

அவரின் மாற்றம் அனைவருக்கும் புரிந்திருக்க, கஸ்தூரியும் முன்னே நடந்ததை எல்லாம் இப்போது பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. இவர் இப்படியெனில் செல்லப்பாண்டியோ மகளை தங்கத் தட்டில் தாங்காத குறைதான். சிறு வயதில் அவளிடம் காட்டாத பாசத்தினை எல்லாம் இப்போது காட்டினார்.

கமலக்கண்ணனை சொல்லவே வேண்டாம். இருவருக்கும் இடையில் அவ்வப்போது சிறு சிறு பூசல்கள் வந்தாலும் கூட, இருவருமே அதனைப் பெரிதாய் எடுப்பதில்லை. முகத் திருப்பல்கள் இருந்தாலும் மிஞ்சிபோனால் அது ஒரு நாள் அளவில் மட்டுமே.

ஆக மொத்தம் கஸ்தூரிக்கு மனதில் நிறைவு எப்போதும் இருந்தது..

“ஏ கஸ்தூரி.. போட்டுக் காட்டு..” என்று விடிந்ததில் இருந்து ஆரம்பித்துவிட்டான் கமலக்கண்ணன்.

“அடடா.. உன்னோட பெரிய இம்ச.. எதையாவது வாங்கிட்டு வந்துட்டு அப்புறோ போட்டுக்காட்டு போட்டுக்காட்டுன்னு..” என்று அவள் சலிப்பது போல் சொல்ல,

“ரொம்ப பண்ணாத டி..” என்றான் வீராப்பாய்.

“பின்ன போன வாரம் ஒரு சசுடிதாரு வாங்கிட்டு வந்து இப்போவே போட்டுக் காட்டுன்னு படுத்துனல..”

“அது போன வாரம் டி..”

“அதுசரிதான்...”

“சரி தான்.. வா வா போட்டுக் காட்டு..” என்றவன், அவன் வாங்கி வந்திருந்த தோடினை போட்டுக் காட்டவும் தான் விட்டான் அவளை.

அழகாய் இருந்தது. அவளுக்கு சும்மாவே எது போட்டாலும் நன்றாய் இருக்கும்தானே.

“உனக்குன்னே செஞ்சது போல இருக்கு டி..” என, “யப்பா.. நீ ஒவ்வொரு தடவயும் இதையே தான் சொல்ற..” என்றவள் “நா போயி இத எங்கப்பாட்ட காட்டிட்டு வரவா..” என,

“நீயும் ஒவ்வொரு தடவையும் இதையே தான் சொல்ற..” என்றவன், “வா நானும் கூட வர்றேன்..” என்று கமலக்கண்ணன் கஸ்தூரியைக் கூட்டிச் செல்ல,

செல்லப்பாண்டி கடையினில் நின்று மரிக்கொழுந்தினை கத்திக்கொண்டு இருந்தார்.

“ஏலேய்.. நீ செய்யிறது சரியே இல்லடா..” என,

“எனக்குத் தெரியாது சித்தப்பா.. உன் சம்பந்தியம்மா தான் உங்கடையில காப்பி வாங்கிக் குடிக்கச் சொல்லுச்சு.. காசு குடுத்து வாங்கி குடின்னு எல்லாம் சொல்லல..” என,

“ஒருநாள்னா சரி.. ஒவ்வொரு நாளுமாடா..” என்று அவரும் கேட்க, “போயி உம்மைக உம்மக மாமியாகிட்ட கேளு..” என்றவன் அங்கிருந்த வடையையும் எடுத்து விழுங்க, அந்நேரம் தான் வந்தனர் கஸ்தூரியும் கமலக்கண்ணனும்.

செல்லப்பாண்டி வரவேற்க “என்னடா இங்க எனன் பண்ற..” என்றான் கமலக்கண்ணன் மரிக்கொழுந்துவிடம்.

“ம்ம் பார்த்தா தெரியல..” என, “யப்பா.. புது தோடு..” என்றாள் கஸ்தூரி.

செல்லப்பாண்டி தோடினைப் பார்த்தாரோ இல்லையோ, மகள் முகம் பார்த்தே “உனக்கு எது போட்டாலும் நல்லாருக்கும்..” என, கஸ்தூரியோ இப்போது கண்ணனைப் பார்த்து சிரிக்க,

“சரி சித்தப்பா வர்றேன்..” என்று மரிக்கொழுந்து கிளம்ப,

“எலேய் காசு கொடுத்துட்டு போ டா..” என்றார் செல்லப்பாண்டி.

“அப்போவே சொல்லிட்டேன் உன் சம்பந்தியம்மாட்ட வாங்கிக்கன்னு..” என்றவன் “ஒருவாய் காப்பி கேட்டதுக்கு அன்னிக்கு குடும்பமே சேர்ந்து விரட்டுனீங்கல்லடா..” என்று கமலக்கண்ணனை முறைத்துவிட்டு செல்ல,

“யப்பா.. விடுப்பா..” என்றாள் கஸ்தூரி.

“தினமும் இதான்மா செய்யிறான்...” என,

“ஒரு காப்பி வடைல நம்ம என்ன கொறஞ்சிட போறமா..” என்றவள், மேலும் இரண்டொரு நொடி நின்று பேசிவிட்டு கிளம்ப,

இருவரும் நடந்து வரும்போதே, எதிரே ஒரு சிறுவனும், அவனின் அக்காவும் வர இவர்களைப் பார்த்து நின்றனர்.

“என்னடா..” என்று கண்ணன் கேட்க,

“அண்ணே.. எந்தம்பிக்கு ஸ்கூலு பீஸ் கட்டனும்..” என்று அப்பெண் சொல்லவும்,

“அதுக்கென்ன கட்டிடுவோம்..” என்றவன் “நீ படிக்கலையா..” என,

“இல்லண்ணே..” என்று அப்பெண் சொல்ல, “ம்ம் நாளைக்கு வந்து ஸ்கூல்ல கட்டிவிடுறேன்..” என்று கண்ணன் சொல்லவும், அவர்கள் ஓடிவிட்டனர்.

கஸ்தூரியோ “இவ நல்லா படிப்பா.. அவங்கம்மா தான் அனுப்பல.. நீ படிக்க வையேன்...” என்றபடி நடக்க,

“ம்ம் சொல்லிடல்ல செஞ்சிடலாம்..” என்று கண்ணனும் சொல்ல, கஸ்தூரி அவனைப் பார்த்தவளின் முகத்தினில் அப்படியொரு புன்னகை.. நிறைந்த மலர்ந்த புன்னகை..!!





Lovely story
இவ்வளவு நாட்களாக இதை miss பண்ணியிருக்கேன்
அழகான புரிதலுடன் நல்ல குடும்ப கதை
 
Top