Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 12

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் 12​

"மீனு….மீனு"​

கீழே ராதா மீனுவை அழைக்கும் குரல் கேட்டும் நந்தகுமாரன் பிடிவாதமாக மீனுவை தன்னருகில் இருத்திக் கொண்டான்​

'வரட்டும் மீனுவை அழைக்கும் சாக்கிலாவது மாடியேறி வரட்டும் இந்த வீட்டிற்கு வந்த நாளாய் ஒரு முறை கூட என் பார்வையில் படாமல் நழுவுகிறாள் இல்லையா? இப்போது என்ன செய்கிறாள்? பார்க்கலாம் .'​

மனதிற்குள் ஓடிய எண்ணங்களை மீனு கலைத்தாள்​

"அங்கிள் கீழே ராதாக்கா கூப்பிடறா நான் போய்ட்டு வரேன்."​

"நோ நோ சாப்பிட்டு நானே உன்னை கொண்டு விடறேன் வா சாப்பிட போகலாம் அம்மா மீனூவிற்கும் சேர்த்து இலை போடு."​

"ஐயோ வேண்டாம் அங்கிள் .அக்கா திட்டுவா."​

முரண்டு பிடித்த மீனூவை இழுத்து கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தான் நந்தகுமார்​

"பாவம் சின்ன பொண்ணை ஏண்டா இப்படி கஷ்டப்படுத்தறே?"​

சிரித்துக்கொண்டே கேட்ட தேவகி மேஜையில் இலைகளை விரித்து தண்ணீர் தெளித்தாள் மீனூவை நாற்காலியில் உட்கார வைத்த நந்தகுமார் செல்லமாய் அவள் கன்னத்தில் தட்டினான்​

"ஏன் மீனு அங்கிள் உன்னை கஷ்டப்படுத்தறேனா?"​

"இல்லை அங்கிள் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."​

"கடுகத்தனை இருந்துண்டு தோரணையாய் பதில் சொல்ற அழகை பாரேன் உன்னை ரொம்ப பிடிச்சிருக்காமே என்ன சொக்குபொடிடா போட்டே?."​

"ஞாபகம் இல்லம்மா ஏன் உனக்கும் வேணுமா?"​

குறும்பாக சிரித்த மகனை பெருமையுடன் பார்த்தாள் தேவகி கலகலப்பான ஸ்பாவத்தால் எவரையும் எளிதில் கவர்ந்து விடும் மகனின் குணநலன் அவள் அறியாததல்ல என்றாலும் பழகிய ஒரே வாரத்தில் அங்கிள் அங்கிள் என்று அவனையே சுற்றி வந்து அட்டை போல் ஒட்டி கொண்ட மீனுவை பார்க்கையில் அதிசயமாகத் தான் இருந்தது​

"சார் …."​

வெராண்டாவில் குரல் கேட்டு வெளியே வந்தாள் தேவகி .வந்தது பாலசந்தர்.தேவகியை பார்த்து புன்னகையுடன் கரம் குவித்தான்​

"வணக்கம் மாமி நான் பாலசந்தர் ஆபீஸ் விசயமா டூர் போய்ட்டு இன்னிக்கு கார்த்தால தான் வந்தேன் இப்ப தான் அப்பா நீங்க புதுசா குடி வந்திருக்கறதா சொன்னார்."​

"உட்காருங்கோ "​

என்று தேவகி உபசரித்து கொண்டிருக்கும் பொழுதே நந்தகுமார் மீனுவுடன் வந்துவிட்டான்​

"ஹய்….பாலுஅண்ணா எப்போண்ணா ஊர்லருந்து வந்தாய்? ."​

கன்றுகுட்டியாய் ஓடி வந்த தங்கையை அணைத்து தூக்கியவன் நந்தகுமாரிடம் திரும்பினான்.​

"ஹலோ..ஐ ஆம் டாக்டர் நந்தகுமார்"​

கைகுலுக்கிய நந்தகுமாரனை பார்த்து புன்னகைத்தான் பாலசந்தர்​

"உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி டாக்டர் .அப்புறம் வீடு எப்படியிருக்கிறது? சவுகரியமாக இருக்கிறதா?"​

"ஓ எஸ் எனக்கும் அம்மாவிற்கும் இந்த வீடும் சுற்றியிருக்கும் மனுசாளும் ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்ன நீங்க நான் முகஸ்துதிக்கு சொன்னதாய் நெனச்சுக்கப்படாது அது தான் நிஜம்."​

"உங்களுக்கு வீடுபிடிச்சிருக்கோ இல்லையோ எங்க மீனுவிற்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு போல சதா இங்கே வந்து லூட்டியடிக்கறானு அம்மா வருத்தப்படறா."​

"லூட்டியா சே! சே ! மீனு ரொம்ப சமர்த்து தெரியுமா? "​

சமர்த்தா? போக போக அவ எவ்வளவு நாட்டினு நீங்க புரிஞ்சுப்பிங்க. ஓகே நான் வரட்டுமா ஆபீஸ்க்கு நாழியாறது மீனு வா போகலாம் கீழே ராதாக்கா உன்னை தேடிண்டிருக்கா நீயானா இங்கே சார் கூட விளையாடிண்டிருக்கே."​

பாலசந்தர் மீனுவுடன் கீழே இறங்க, நந்தகுமாரும் ஹாஸ்பிட்டல் செல்ல ஆயத்தமானான் தோளில் கோட்டும் கையில் மெடிகல் கிட்டுமாக அவன் கீழே இறங்கிய போது வாசலில் படர்ந்திருந்த பவளமல்லி பூக்களின் நறுமணத்தை ஆழ நுகர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள் ஜானகி​

"ஹலோ டாக்டர் குட்மார்னிங்"​

நந்தகுமாரின் அழைப்பில் திரும்பி பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன​

"என்ன டாக்டர் சார் என்னையெல்லாம் கூட ஞாபகம் இருக்கா என்ன? மறந்திருப்பிங்கனு நினைத்தேனே"​

"அதெப்படி உங்களை மறந்தால் என் நண்பன் ஸ்ரீராமையே நான் மறந்தது போலாகாதா? கமான் ஜானகி நீங்க தான் ஸ்ரீராமோட வுட்பீனு எனக்கு ஏற்கெனவே தெரியும் உங்களைப் பற்றி என்னிடம் நிறைய சொன்ன ஸ்ரீராம் என்னை பற்றி உங்களிடம் கொஞ்சமாவது சொல்லியிருப்பான்"​

"கொஞ்சம் என்ன நிறையவே சொல்லியிருக்கார் நீங்க ஒரு கார்டியாக் ஸ்பெசலிஸ்ட் அனாலும் சைக்காலஜியிலும் ஆராய்ச்சி பண்ண ஆசை உண்டு அதற்கான ஆயத்தங்களில் இருப்பதாக சொல்லியிருக்கார் என்ன டாக்டர் அந்த ஆராய்ச்சி எந்த லெவலில் இருக்கு?"​

அப்போது கைக்கடிகாரத்தில் மணி பார்த்தபடி அவசரமாக வெளியே வந்த ராதா நந்தகுமாரை கவனிக்காமலே பேசினாள்.​

"சாரி ஜானா ரொம்ப லேட்டாக்கிட்டேன் இல்லையா? எல்லாம் மீனூவால் வந்தது கார்த்தால அவளை ஸ்கூலுக்கு ரெடி பண்றதுன்னாலெ பிரமபிரயத்தனம் தான். அதுவும் மேலே அவங்க குடித்தனம் வந்தப்புறம் அவ கீழே இருக்கறதில்ல எப்பவும் மேல தான் அப்படி அங்கே என்ன தானிருக்குமோ தெரியல"​

"அங்கே என்னயிருக்குனு நீங்களும் தான் வந்து பாருங்களேன்"​

கொஞ்சம் கிண்டலுடன் ஒலித்த நந்தகுமாரின் குரலில் வெலவெலத்து போனவளாக திரும்பினாள் ராதா முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் துளிர்த்தன​

'மை குட்நெஸ்...இவ்வளவு நாழி இவர் இங்கு தானிருந்தாரா? அது தெரியாமல் நான் கண்டபடி உளறி விட்டேனே'​

உதட்டை கடித்து கொண்டாள் ராதா சிவந்த இதழ்களில் வெண்முத்துக்களாய் பற்கள் பதிந்திருந்த அழகை நந்தகுமார் ரசனையோடு கவனிப்பதை கண்ட ஜானகி குறும்பாக சிரிக்க, சட்டென்று கூச்சத்துடன் தன் பார்வையை திருப்பி கொண்டான்​

"வா ஜானா போகலாம்"​

சின்ன குரலில் முணுமுணுத்த ராதா நடக்க தொடங்க அவளை புன்னகையுடன் பின் தொடர்ந்த ஜானகியை தடுத்தான் நந்தகுமார்.​

"எங்கே காலேஜ்க்கு தானே? வாங்க நான் ட்ராப் பண்றேன்"​

ஜானகியின் பதிலுக்காக கூட காத்திருக்காமல் தோட்டத்து நிழலில் நிறுத்தியிருந்த தன் வெள்ளை நிற நிசான் காரை கிளப்பி கொண்டு வந்து அவர்கள் ஏறுவதற்கு வசதியாக காரின் பின் கதவை திறந்து விட்டான்​

"கெட் இன்…."​

ஜானகி தயக்கத்துடன் ஏறி கொண்டு ராதாவின் கை பற்றி அழைத்தாள்​

"உங்க ப்ரெண்டுக்கு தனியா இன்னொரு முறை சொல்லனுமா ஜானா?"​

நந்தகுமாரன் சிரித்துக்கொண்டே தான் கேட்டான் என்றாலும் ராதாவிடமிருந்து பளிச்சென்று வந்தது பதில்.​

"தேவையில்லை ஜானா நான் வழக்கம் போல் பஸ்லயே போய்க்கறேன் நீ வேணா கார்ல போ…"​

விருட்டென்று நகர்ந்தவளை தடுத்த ஜானகி தானும் காரிலிருந்து இறங்கி கொண்டாள்​

"சாரி டாக்டர் உங்க உதவியை ஏற்று கொள்ள முடியாத சூழ்நிலை நினைத்து வருந்துகிறேன்"​

இக்கட்டான சூழலை வார்த்தைகளால் இலகுவாக்க முயன்ற ஜானகியைப் பார்த்து தலைசைத்தான் நந்தகுமாரன்​

"இட்ஸ் ஆல்ரைட் ஜானகி ஆனால் நீங்க சொன்ன மாதிரி நான் சைக்காலஜி படிச்சிருக்கலாமோன்னு இப்போ தோண்றது சிலரோட மனசுல என்னயிருக்குனு புரிஞ்சுக்கறது ரொம்ப கஷ்டமாயிருக்கு சைக்காலஜி தெரிஞ்சிருந்தால் மத்தவங்க மனசை புரிஞ்சுக்கறது சுலபமாயிருக்கும் இல்லையா?."​

ராதாவை நோக்கி ஒரு அர்த்தம் செறிந்த பார்வையை வீசி விட்டு நந்தகுமாரன் காரை கிளப்பி செல்ல,அவன் சென்ற மறுகணமே ஜானகி கோபத்துடன் வெடித்தாள்.​

"நீ ஒரு முட்டாள் ராதா.. "​

"இருந்துட்டுப் போறேன்…"​

ராதாவும் கோபமாகவே பதில் சொல்ல, அயர்ந்து போன ஜானகி மேலே எதுவும் பேசவில்லை. சற்று பொறுத்து ராதாவே மெதுவாக கேட்டாள்.​

"ஏன் ஜானா இவர் இப்படித்தான் எல்லா பெண்களுக்கும் லிப்ஃட் கொடுப்பாரா?"​

"அவர் லிப்ஃட் கொடுத்தால் என்ன கொடுக்காமல் போனால் என்ன? உனக்கென்னம்மா வந்தது? வொய் சுட் யூ பாதர்? இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்"​

ஜானகி சூடாகவே பதிலளித்தாள்​

"அது என் பிரச்னை இல்லை தான் ஆனால் பாவம் அவர் மனைவி அவர் மீது சந்தேகப்பட மாட்டாளா? "​

"மனைவியா?"​

சட்டென்று உதட்டை கடித்துக் கொண்டாள் ஜானகி . அன்றொரு நாள் ராதாவின் ஆழ்மனதில் இருப்பதை கண்டுபிடிக்க தான் நந்தகுமாரன் கல்யாணமானவன் என்று சொல்லி ஆழம் பார்த்தது இப்பொழுது நினைவில் வந்தது​

'அடி அசடே !அவர் கல்யாணமானவர் என்று நினைத்தா அவரை புறக்கணிக்கிறாய்? ஹி இஸ் ஸ்டில் அன் எலிஜிபில் பாச்சுலர்'​

உண்மையை சொல்லிவிட சொல்லி பரபரத்த உள்ளத்தை சிரமத்துடன் அடக்கினாள் ஜானகி​

'நான் ஏன் உண்மையை சொல்ல வேண்டும்? அவளுக்கு உண்மையிலேயே டாக்டரிடம் ஈ்டுபாடிருந்தால் தானே விசாரித்து தெரிந்து கொள்ளட்டும்'​

ஜானகியின் நினைப்பு வீண் போகவில்லை. ராதாவிற்கு உண்மையில் நந்தகுமாரனின் மீது ஈடுபாடு இருக்க தான் செய்தது. மூளை என்ன தான் விவேகத்துடன் அவனை மறந்து விடு அவன் மணமானவன் என்று கண்டித்தாலும் மனம் அதற்கு கட்டுப்படாமல் பிடிவாதமாக அவனை தான் நினைப்பேன் என்று சண்டித்தனம் செய்தது​

நந்தகுமாரன் அதற்குபின் அவளிடம் அவ்வளவாக பேசாவிட்டாலும், தற்செயலாக நிகழும் சந்திப்புகளில் ஆர்வமும் ரசனையுமாய் பதியும் அவன் பார்வை அவளை குழப்பியது​

அவன் கண்களில் தெரிந்த காதல் அவன் மனதை இனம் காட்ட நந்தகுமாரன் உண்மையில் மணமானவன் தானா என்ற சந்தேகம் அடி மனதில் நெருட தொடங்கியது​

தேவகி ராதாவிடம் அருமையாக பேசுவாள் ஆனால் மருமகளைப் பற்றி ஒரு வார்த்தை அவள் வாயிலிருந்து வராது ஒரு மாமியாராகப்பட்டவள் தன் மருமகளை பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்லாவிட்டாலும் நிச்சயம் தூஷணையாகவாவது ஒரு வார்த்தை சொல்வாளே​

தேவகி ஏன் சொல்லவில்லை?​

ராதாவின் சந்தேகம் வலுத்தது ஜானகியிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள தயக்கம்​

'இப்பொழுது வந்தாயா வழிக்கு? டாக்டர் கல்யாணமானவரா இல்லையானு தெரிஞ்சுக்கறதில் உனக்கென்னம்மா அவ்வளவு இன்ட்ரெஸ்ட்?....'என்று கேலி பேசுவாள் நிச்சயம்.​

குழம்பி தவித்து கொண்டிருந்த ராதாவின் சந்தேகம் தீர்கின்ற நாளும் வந்தது. அன்றொரு நாள் இரவு பதினொரு மணிக்கு ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளை, ராதா தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்​

காம்பவுண்ட் கேட் திறக்கப்படும் ஓசையும் காரொன்று உள்ளே நுழையும் ஓசையும் அடுத்தடுத்து கேட்க விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் ராதா தொடர்ந்த பூட்ஸ் காலடிகளின் சப்தம் வந்திருப்பது நந்தகுமார் தான் என்று தெரிவித்தது.இந்த ஒரு மாதத்தில் அவனுடைய ஒவ்வொரு அசைவும்தான் அவளுக்கு நன்றாக தெரியுமே​

'வழக்கமாக பத்து மணிக்கெல்லாம் வந்துவிடுவாரே இன்று ஏன் இவ்வளவு லேட்? மாமி வேறு நல்லா தூங்கியிருப்பாங்க பாவம் '​

ராதா நினைத்ததை போலவே தேவகி மகன் காலிங்பெல் அடிக்கும் சப்தம் கூட கேட்காத ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்​

'ஹய்யோ.. மாமி இன்னும் எழுந்துக்கல போலிருக்கே அவர் பெல்லடிக்கற சப்தம் கூட கேட்காமல் அப்படியென்ன தூக்கம்? பாவம் அவர் வெளியிலே பனியிலே எத்தனை நாழி நின்று கொண்டிருப்பார்,? இந்த மாமி சீக்கிரம் எழுந்தால் என்னவாம்?'​

மனதின் ஒருபுறம் கிடந்து தவியாய்த் தவித்தது இன்னொரு புறமோ நீ ஏன் இப்படி தாலி கட்டி கொண்ட மனைவியை போல மாய்ந்து போகிறாய்? அவன் கால் கடுக்க நின்றால் உனக்கு ஏன் வலிக்கிறது? என்று விவேகம் பேசியது​

விவேகம் பேசிய மனதை லட்சியம் செய்யாமல் எழுந்து சப்தமில்லாமல் நடந்துவந்து கதவை திறந்து பார்த்த பொழுது நந்தகுமாரன் காலிங் பெல்லை அழுத்தி சலித்து போனவனாக படியில் அமர்ந்திருந்தான் ராதா கதவை திறந்தவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்​

"மாமி நல்லா தூங்கறாங்க போல நீங்க வேணா எங்காத்து வழியா மாடிக்கு போகலாம்."​

ராதா தயக்கத்துடன் கூற நந்தகுமார் நன்றி சொல்லி விட்டு உள்ளே வந்தான் ராதா மாடிக்கு போகும் கதவை திறந்து விட்ட பின் அவளை சிரமப்படுத்தியதற்காக அவன் மன்னிப்பு கோர,ராதா புன்னகைத்தாள்​

"பரவாயில்லை இன்று ஒரு நாள் தானே இனிமேல் உங்க மனைவி டெலிவரி முடிந்து வந்து விட்டால் அவர்கள் உங்களை கவனித்து கொள்வார்கள் அம்மாவுக்கு பாவம் வயசானதால அவங்களால காத்திருந்து கதவை திறக்க முடியல நீங்க இன்னொரு சாவி ஏக்ஸ்ட்ராவாக. வைத்துக் கொள்வது இன்னும் நல்லது அப்பா இரண்டு சாவி கொடுத்திருப்பாரே.."​

வழக்கத்திற்கு மாறாக நீளமாய் பேசியவள் கொசுறாக அட்வைஸ் வேறு கொடுக்க, நந்தகுமாரன் முதலில் ஒன்றும் புரியாமல் ஸ்தம்பித்துபோனான்​

'மனைவியா? இவள் என்ன என்னை மணமானவன் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்னிடம் இருந்து விலகுவதற்கு அது தான் காரணமா?'​

ஆச்சரியத்தில் ஸ்தம்பித்தவன் அடுத்த நிமிடத்தில் சுதாரித்தான்​

"வெல் .ஒரு பெண்ணை காக்க வைத்து கஷ்டப்படுத்த கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் இதுவரை திருமணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை இனிமேல் யோசிக்க தடை ஒன்றுமிருக்காது என்று நம்புகிறேன்"​

'நந்தூ பேசியது நீ தானா? சும்மா பின்றியேடா இப்படியெல்லாம் கூட உனக்கு பேச வருமா?'​

மைண்ட் வாய்ஸ் பாராட்டியதை பொருட்படுத்தாமல்,தன் பதிலில் ராதாவின் முகம் பூவாய் மலர்வதை திருப்தியுடன் பார்த்தான் நந்தகுமாரன்.​

 
எப்பா நந்து இப்பவாவது ராதாவோட மனசை தெளியவச்சியே.
பாவம் ராதா இந்த ஜானாவால குழம்பி ஆராய்ச்சி பண்ணறளவுக்கு போயிட்டா.
கண்டிப்பா டாக்டர் இதயத்தைப் பத்தி படிச்சது மட்டும் பத்தாது.
மனசைப்பத்தியும் படிங்க டாக்டர்.
 
எப்பா நந்து இப்பவாவது ராதாவோட மனசை தெளியவச்சியே.
பாவம் ராதா இந்த ஜானாவால குழம்பி ஆராய்ச்சி பண்ணறளவுக்கு போயிட்டா.
கண்டிப்பா டாக்டர் இதயத்தைப் பத்தி படிச்சது மட்டும் பத்தாது.
மனசைப்பத்தியும் படிங்க டாக்டர்.
படிச்சு என்ன பண்ண
பிடிச்சு என்ன செய்ய....
பறந்து போய்டுத்தே
பைங்கிளி....... 😭
 
மனதை படிக்கும்
மார்க்கம் புரியலை
மருத்துவன் புலம்ப...
மனதுக்குள் குடைந்த
மனகேள்விக்கு விடை புரிய
மங்கை முகம் புன்னகையில்
மலர..... 🤩🤩🤩🤩
 
படிச்சு என்ன பண்ண
பிடிச்சு என்ன செய்ய....
பறந்து போய்டுத்தே
பைங்கிளி....... 😭
ஆத்தர் ஹேப்பி எபிசோட்ஸ் தர வரைக்கும் நாமளும் சந்தோஷமா படிக்கலாமே கவிக்குயிலே…. எதுக்கு இந்த சோக கீதம்👊🏽👊🏽
 
மகனின் காதலை மனதார ஏற்று,
மகிழ்ந்து சிரித்து, ரசித்து நெகிழ்ந்து,
மானசீகமாக வாழ்த்தும் தேவகியின் குணம்,
மாஸ்! மாஸ்! மாஸ்! ஆத்தரே🤩🤩🤩
 
எப்பா நந்து இப்பவாவது ராதாவோட மனசை தெளியவச்சியே.
பாவம் ராதா இந்த ஜானாவால குழம்பி ஆராய்ச்சி பண்ணறளவுக்கு போயிட்டா.
கண்டிப்பா டாக்டர் இதயத்தைப் பத்தி படிச்சது மட்டும் பத்தாது.
மனசைப்பத்தியும் படிங்க டாக்டர்.
பெண்ணின் மனம் ஆழம்னு சும்மாவா சொன்னாங்க😀
 
Top