Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 8

Advertisement

parvathi

Active member
Member

அத்தியாயம் 8​

கண்ணாடி முன் நின்று படிய வாரிய தலைமுடியை சற்று சிலுப்பி விட்டு மீசையை பிரஷ் செய்து, உடையில் யார்ட்லியை சீறவிட்டு, ஓரளவு திருப்தியாக இருப்பதாக தோன்றியதும் உற்சாகமாக ஒரு சினிமா பாட்டை ஹம் செய்தபடி அறையை விட்டு வெளியே வந்தான் முரளி.​

"எங்கடா கண்ணா கிளம்பிட்ட?"​

ஹாலில் இருந்த தாய் கௌரி கேள்வி கேட்டாள்​

"போச்சு...என்னம்மா நீ வெளியே கிளம்பறப்ப போய் எங்க போறேன்னு கேட்கறியே சே! போச்சு போற காரியம் உருப்பட்டாப்ல தான்"​

"உருப்படியான காரியம் கூட சார் பண்றதுண்டா ?"​

கேலியாக கேட்ட தந்தையை முறைத்து பார்த்தவன் பதில் சொல்லும் முன் தாய் அவன் கையைபிடித்துக் கொண்டாள்.​

"சாரிடா கண்ணா ஆபீஸ் விட்டு வந்ததும் வராததுமாக சித்த நாழி ஓய்வு கூட எடுக்காமல் கிளம்பறியேன்னு கேட்டேன்"​

"ப்சு! என்னம்மா நீ சாரினு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு...ஓகே நான் இப்ப எங்கே போறேன்னு உனக்கு தெரியனும் அவ்வளவு தானே,? ஒரு ப்ரெண்ட பார்க்க போறேன்"​

"கர்ல் ப்ரெண்டா ? இல்ல பாய் ப்ரெண்டா?"​

கேலியாக கேட்ட தந்தையை முறைத்து விட்டு வெளியேறினான் முரளி.​

"ஏன்னா சித்த சும்மாயிருக்க கூடாதா? உங்களுக்கும் அவனுக்கும் தான் ஏழாம் பொறுத்தமாச்சே. ஏன் வீணா அவன் கிட்ட பேசி வம்பை வளர்க்கறிங்க? அவன் ஆத்துல இருக்கற கொஞ்ச நாழியும் அவனை பேசியே விரட்டியடிச்சுடுவிங்க போல.."​

"நீ சும்மா இரு கௌரி இப்படியே அவனுக்கு செல்லம் கொடுத்து தான் அவனை கெடுத்து குட்டிச்சுவராக்கி வெச்சிருக்க. அப்பான்ற மரியாதை துளியாவது இருக்கா உன் பிள்ளை கிட்ட? அது இல்லேன்னாலும் போறது ஆனால் ஊர்ல இருக்கற அத்தனை கெட்ட பழக்கமும் இருக்கே. உன் பிள்ளை சிநேகிதனை பார்க்க போகல ஊர்ல எந்த பொண்ணு அழகாயிருக்கானு ஆராய்ச்சி பண்ண போயிருக்கான் .சிநேகிதன்னு சொல்லிக்கற அந்த தீவட்டி தடியன்களோட ஊர் சுற்ற போயிருக்கான் .இதோ பார் கௌரி இப்படியே அவனை விட்டேன்னா இந்த ஜென்மத்தில் அவன் உருப்பட மாட்டான்."​

"ஏன்னா அவனை இப்படியே கரிச்சு கொட்டிண்டிருக்கிங்க? அவன் எனக்கு மட்டும் தான் பிள்ளையா? உங்களுக்கும் அவன் தான் பிள்ளை ஞாபகம் இருக்கோல்லையோ?"​

கௌரி சொல்லி வாய் மூடவில்லை​

அதற்குள் வெங்கட்ராமன் சீறினார்​

"எனக்கு பிள்ளையாடி அவன்? அவனை என் பிள்ளைனு சொல்லிக்கவே எனக்குவெட்கமாயிருக்கு. ஸ்டூடண்ட்ஸ்க்கு ஒழுக்கம் கத்து கொடுக்கிற எனக்கு ஒழுக்கமேயில்லாமல் இப்படி ஒரு பிள்ளை தேவையா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்னு சொல்வாங்க. ஊகூம் என் பிள்ளை தானா வளரவில்லை. தண்டமா தான் வளர்ந்திருக்கான்.கடவுளே! புரபசர் வெங்கட்ராமன் பிள்ளைனு இவனை யாராவது நம்புவார்கள்?"​

"இப்ப என்ன ஆயிடுச்சுனு இப்படியெல்லாம் பேசறிங்க? வயசுகோளாறு கொஞ்சம் இப்படி அப்படி இருக்கிறான். ஒரு கால்கட்டு போட்டால் தானா சரியாயிடுவான் நீங்க தான் நான் சொல்றதை காதிலேயே வாங்க மாட்டேன்றிங்க."​

"நான் என்ன பண்ணனும்றே? வீடுவீடாக போய் இவனுக்கு பொண்ணு கேட்க சொல்றியா? இவன் அயோக்கியத்தனம் தான் ஊரெல்லாம் தெரிஞ்சிருக்கே எந்த முகத்தை வெச்சுகிட்டு இவனுக்கு நான் பொண்ணு கேட்பேன்? இல்ல உன் அருமை பிள்ளையை நம்பி எந்த முட்டாள் தன் பொண்ணை தாரை வார்த்து கொடுப்பான்?"​

வெங்கட்ராமன் ஏளனமாக பேசவும் கௌரி முறைத்தாள்.​

"உங்களை யார் பொண்ணு கேட்க சொன்னாங்க? ஏன் எங்க அண்ணா பொண்ணு சரண்யா இல்ல? அண்ணா ரொம்ப நாளா கேட்டு கொண்டு தான் இருக்கிறார். நீங்க தான் பிடி கொடுத்து பேசமாட்டேன்றிங்க"​

"உங்க அண்ணாவுக்கு உன் பிள்ளை வாங்கிட்டு வர்ற சம்பளம் மட்டும் தான் இப்போ கண்ணுக்கு தெரியும். ஆனால் அத்தனை ஆயிரங்களும் ஆத்துக்கு வர்றதில்ல ரம்மிக்கும் பொண்ணுகளோட ஊர் சுற்றி வர்றதுக்கும் சம்பளம் மொத்தமும் காலியாயிடுதுன்னு எதற்கும் ஒரு வார்த்தை சொல்லி வை. உங்க அண்ணா துண்டை காணாம் துணியை காணாம்னு ஓடியே போய்விடுவார்."​

"ம்.....இப்படியே நக்கலும் நையாண்டியுமாவே பேசிட்டிருங்க உருப்பட்டாப்ல தான். நம்ம பிள்ளையை நாமே மட்டம் தட்டி பேசினா மத்தவங்க எப்படின்னா அவனை மதிப்பாங்க? இருக்கிறது ஒரு பிள்ளை அவனுக்கு நல்லதொரு வழி பண்ணாமல் இப்படியே வெட்டியா நாளை விரயம் பண்ணிண்டிருந்தால் எப்படி?"​

மனைவியின் கெஞ்சல் பற்றி கவலைப்படாமல், வெங்கட்ராமன் செய்திதாள்கள் படித்த வேளை, அவருடைய சீமந்த புத்திரன் நண்பர்களின் கெஞ்சலை அலட்சியப்படுத்தி விட்டு ராதாவிற்காக காத்திருந்தான்.​

"ஏய்! என்ன ஆச்சுடா இவனுக்கு? அவ கிட்ட செருப்படி வாங்காமல் வரமாட்டான் போல"​

கிரிதரன் சலித்து கொண்டான்.​

"ஏண்டா அவ தான் உன்னை சட்டை பண்ணவே மாட்டேன்றாளே. அப்புறம் ஏண்டா அலையற?"​

"டேய்! நாங்கள் சொல்வதை கொஞ்சம் கேளு. அந்த ராதா ஒரு யூஸ்லெஸ் கேஸ் நான் கூட அவளை பாலோ பண்ணி வாங்கி கட்டிகிட்டேன. அவகிட்ட இல்ல அவளோட ஆறு வயது தங்கை கிட்ட. வெளியே சொன்னால் வெட்கக்கேடுடா"​

புலம்பிய சந்துருவின் தோளை தட்டினான் மோகன்​

"ஏண்டா என்ன ஆச்சு?"​

"அதை ஏன் கேட்கறே? ஒரு லவ் லெட்டர் எழுதி அவளோட குட்டிதங்கையை பிடித்து ஆயிரம் தாஜா பண்ணி சாக்லெட் ₹கொடுத்து லெட்டரை அக்கா கிட்ட கொடுத்துடும்மான்னு கெஞ்சினேன். அந்த குட்டிசாத்தான் அசால்டா லெட்டர் வாங்கிட்டு கேட்டது பார் ஓரு கேள்வி. லெட்டர் யாருக்கு சந்தியாக்காவுக்கா இல்ல ராதாக்காவுக்கானு கேட்டுது நானும் ராதாவுக்குனு சொன்னேனா. அதோடு லெட்டர் எடுத்துக் கொண்டு போகாமல் பெரிய மனுஷி போல, ராதாக்கா நேத்து தான் பேட்டால புது செருப்பு வாங்கிட்டு வந்திருக்கா. அடி தாங்குவியானு இத்தினியூண்டு கோட்டான் என்னைப் பார்த்து கேட்டுச்சுடா .கடுகத்தனை இருந்து கொண்டு கேள்வியை பார்த்தாயா? தங்கைக்கு இவ்வளவு திமிர் இருந்தால் அக்கா எப்பேர்பட்டவளா இருப்பா? இது படியாத கேஸ்டா மச்சான் விட்டுடு."​

சந்துருவின் வயிற்றெரிச்சலில் முரளிக்கு சிரிப்பு தான் வந்தது​

"உனக்கு பெண்களை அப்ரோச் பண்ணவே தெரியலை மச்சான். அப்புறம் எப்படி படியும்? அக்காவோட காதலுக்கு நீ தங்கச்சிக்கு அப்ளிகேஷன் போட்டால் அதோ கதி தான்."​

"சரிடா நீ ராதாவை படிய வைப்பாயோ இல்ல அடியை தான் வாங்கிட்டு வருவாயோ எங்களுக்கென்ன வந்தது எப்படியோ போ. ஆனால் எங்களை மட்டும் எந்த சிக்கலிலும் மாட்டி விட்றாத ஏற்கனவே அந்த ரேகாவோட தொணதொணப்பு தாங்க முடியவில்லை ஆமா அந்த ரேகாவோட சாப்டர் க்ளோஸா? கை கழுவிட்டியா?"​

"ஆமாண்டா. அதெல்லாம் சும்மா ஜாலிக்கு மட்டும் தான் .ஜஸ்ட் டைம் பாஸ் அவ்வளவு தான்."​

"அடப்பாவி! அப்போ ராதா என்ன ஜாலிக்கா இல்ல தாலிக்கா?"​

"ஜாலிக்கு தாலிக்கு நல்லா ரைமிங்கா பேசற மச்சான்…"​

முரளி கண் சிமிட்டினான்​

"தாலி கட்டினால் தான் அவள் தயவு கிடைக்கும்னா நான் அதற்கும் தயார் ஆனால் அந்த சம்பிரதாயம் இல்லாமல் அவளை அடைய வேறு வழிஇருந்தால் சொல்லு."​

"ஆமாண்டா இப்ப அது தான் நம்ம தலையாய பிரச்சனை போவியா…"​

மோகன் தாங்க முடியாத எரிச்சலில் பேச, வெகுண்ட முரளியை சங்கர் சமாதானப்படுத்தினான்​

"டேய் ! மோகனை விடுடா இப்ப உன் ஸ்வீட் ஹார்ட்டை கவனி. அதோ பஸ் வந்தாச்சு.."​

சேலையை நாசூக்காக உயர்த்திப் பிடித்துக் கொண்டு பளீரென்ற வெண்மையில் பாதங்கள் பளிச்சிட பஸ்ஸில் இருந்து இறங்கிய ராதாவை கண்டவுடன் முரளியின் கோபம் மறைந்து மந்தஹாச புன்னகை மலர்ந்தது​

நான் முத்தமிட விரும்பும் பாதங்கள் உலகிலேயே உன் ஒருத்தியிடம் தான் இருக்கின்றன​

யாரோ எழுதிய கவிதை முரளிக்கு கைகொடுக்க, அதுவரையில் சற்றே உயர்ந்திருந்த ராதாவின் புடவை இப்பொழுது கீழிறங்கி பாதங்களை மறைத்தது.​

"வாவ்! வாட் எ லவ்லி பிகர்! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ ? ராதா! காதல் வராதா?"​

மெல்ல விசில் அடித்தவனை திரும்பிப் பார்த்த ராதா முறைத்தாள்​

"இப்படி பொறுக்கி மாதிரி பின்னால் சுற்றினால் கோபம் தான் வரும்"​

"அம்மணி என்ன கண்ணகிக்கு கொள்ளு பேத்தியா? பார்வையாலே எரிக்கறே. சும்மா சொல்ல கூடாது. கோபத்திலும் நீ அழகாவே இருக்க."​

"உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஆனால் அழகை பாராட்டவும் ஒரு தகுதி வேணும் அந்த தகுதி நிச்சயம் உங்க கிட்ட இல்ல ஏன் மிஸ்டர் பார்த்தால் படித்தவர் மாதிரி இருக்கிங்க. நாகரீகமா டிரஸ் பண்ணிக்கறிங்க அந்த நாகரிகம் நடத்தையிலும் இருக்க வேண்டாமா? நான் எட்டிப் போக போக, குட்டி போட்ட பூனை மாதிரி என்னையே சுத்தி சுத்தி வந்தால் நீங்க எதிர்பார்க்கற காதல் எனக்கு உங்க மேல வந்துவிடுமா? சத்தியமாக வராது. ஆனால் நீங்க இப்படியே மிஸ்பிஹேவ் பண்ணினால் நான் ரொம்ப அநாகரீகமா நடந்துக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!​

படபடவென பொரிந்து கொட்டிவிட்டு போன ராதாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த முரளியின் மனதுக்குள் பூகம்பம்​

அந்த பூகம்பம் ராதாவின் வாழ்க்கையை புரட்டிப் போடுமா?​

காத்திருங்கள்…​

 
Last edited by a moderator:
அடேங்கப்பா நல்ல அம்மா . பையன் தடம் மாறுனா கண்டிக்கனும் அதைய வுட்டுபோட்டு சப்போர்ட் பண்ணுனா குட்டி செவுராதான் போகும்
 
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கவனமுடன் வளர்த்தால் மட்டும் போதாது. ஆண்பிள்ளைகளை அதிகவனத்துடன் வளர்க்க வேண்டியது அவசியம்
 
கண்டிக்க வேண்டிய பெற்றவர்கள் கண்டிக்கவில்லை என்றால்,
கட்டியவளின் பாடு திண்டாட்டம் தான்!!!
ஐந்தில் வளைக்கவில்லை என்றால் ஐம்பதிலும் அவதிப்படுவது அவன் தாரம் தான்
 
Thanks ma 😘
அடேங்கப்பா நல்ல அம்மா . பையன் தடம் மாறுனா கண்டிக்கனும் அதைய வுட்டுபோட்டு சப்போர்ட் பண்ணுனா குட்டி செவுராதான் போகும்
வாஸ்தவமான உண்மை.
 
Top