Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 32

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE




அத்தியாயம் 32

தைத்திங்கள் பன்னிரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை சிரஞ்சீவி முரளிதரனுக்கு சௌபாக்கியவதி ராதாவை பாணிக்கிரகணம் செய்து கொடுப்பதாய் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு….



அதற்கு மேல் பத்திரிக்கையை படிக்க முடியாமல் விழிகளில் வெந்நீர் தளும்ப, கல்யாணப்பத்திரிக்கையை டீபாயில் வீசி எறிந்து விட்டு கண்களை மூடிக் கொண்டான் நந்தகுமாரன்.மனசின் ஏதோ ஒரு மூலையில் வலித்தது. ஓவென்று கதற வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.



ராதாவிற்கு கல்யாணம்

அவனுடைய ராதாவிற்கு கல்யாணம்

யாரை உயிருக்குயிராய் காதலித்தானோ அவளுக்கு இன்று கல்யாணம்

யாரை தனக்கு மட்டுமே உரியவளாக நினைத்திருந்தானோ அவள் இனி அவனுக்கில்லை.அவனிடமிருந்து நிரந்தரமாகவே விலகிவிட்டாள்.



எப்படி அவளால் இவ்வளவு சுலபமாக விலக முடிந்தது?அவனால் அவளை அப்படி சுலபமாக மறக்க முடியவில்லையே.



"ஏண்டா நந்து முகூர்த்தத்துக்கு நாழியாச்சே இன்னும் கிளம்பாமல் உட்கார்ந்துண்டிருக்கே?"



தேவகி அருகில் வந்து மூன்றாவது முறையாக நச்சரிக்கவும் எரிச்சலுடன் நிமிர்ந்தான் நந்தகுமாரன்.



'இந்த அம்மா என்ன என்மனதை புரிந்து கொண்டு தான் பேசுகிறாளா? இத்தனைக்கு பிறகும் நான் கலயாணத்திற்கு வருவேன் என்று எப்படி எதிர்பார்க்கிறாள்? டாமிட்!!உன்னால தான்மா நான் என் ராதாவை இழந்து நிற்கிறேன்.நீ மட்டும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிருந்தால் இன்னிக்கு ராதா பக்கத்திலே மாப்பிள்ளையா நான் தானே நின்றிருப்பேன்.என் வாழ்க்கையையே பாழடிச்சுட்டே….'



மனசுக்குள் ஆயிரம் வருத்தம் இருந்தாலும்

அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

நான் வரலைம்மா.நீ போய்ட்டு வா..

என்று அவன் சொல்ல தேவகி மகனின் வேதனை கண்டு கலங்கி நின்றாள்.



"அவளை மறந்துடேன் நந்து…."



சடாரென்று நிமிர்ந்து அம்மாவைக் கூர்மையாகப் பார்த்தவன் விழிகளில் வேதனை படர்ந்திருந்தது.



"சுலபமாச் சொல்லிட்டேம்மா.நீ சொல்லி நான் எதை கேட்காமல் இருந்திருக்கிறேன்?

ராதாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு சொன்னே .உன் சொல்லை நான் மீறலை.இப்போ அவளை மறந்துடுங்கறே.முயற்சி பண்றேம்மா. ஆனால் அது மட்டும் என்னால முடியற காரியமா தெரியல."



அம்மாவின் முன் அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் உதட்டைக் கடித்துக் கொண்டு பேசியவன் கண்ணோரங்களில் தேங்கிய கண்ணீரை மறைக்க தலையை குனிந்து கொண்டான்.



மகனின் வேதனை புரிந்து மேலும் பேச்சை வளர்த்தாமல் நகர்ந்தாள் தேவகி.



"இந்த சுஜாவை கைபேசியில் அழைத்து இங்கே வந்து என்னையும் கூப்பிட்டுகொண்டு போகும்படி சொன்னேன். வர்றாளோ இல்லையோ தெரியல.அதான் நீ வந்தா துணையாயிருக்குமேன்னு …"



போகிறபோக்கில் தேவகி முணுமுணுக்க, நந்தகுமாரன் அதிர்ச்சியுடன் அம்மாவை வெறித்தான்.



'சுஜாவை அம்மா இங்கு வரச் சொன்னாளா? எப்படி வருவாள்? நான் ராதாவை காதலிப்பதாக சொன்ன நாளிலிருந்து இங்கே எட்டிக் கூட பார்க்காதவள் இப்போ மட்டும் எப்படி வருவாள்? நிச்சயமாக வரமாட்டாள்.'

கூடவே மனதின் குரல் வேறு சேதி சொன்னது.



'ராதாவை இழந்த உன் நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காவது அவள் வந்தால் நீ என்ன செய்வாய்? எந்த முகத்தோடு அவளை பார்ப்பாய்? நீங்க என்னை ஏமாற்றியது போல ராதா உங்களை ஏமாற்றி விட்டாளே என்று பார்வையால் கொல்லாமல் கொல்வாளே. என்ன செய்யப் போகிறாய்?'



நந்தகுமாரன் நினைத்ததற்கு மாறாக, அரக்கு நிற பட்டுப்புடவையில் மிதமான அலங்காரத்துடன் வந்த சுஜாதாவிடம், ஏமாந்தீர்களா என்று எள்ளி நகையாடும் ஏளனப் புன்னகை இல்லை.என்னை ஏமாற்றிய உங்களுக்கு இது தகுந்த தண்டனைதான் என்ற வக்கரித்த பார்வையுமில்லை. அதற்கெல்லாம் மாறாக பரிவு கலந்த அன்பு தான் விழிகளில் பளிச்சிட்டது.



"ஐ ஆம் சாரி…"

தழைந்த குரலில் மன்னிப்பை யாசித்தவளை அடிபட்ட பார்வையுடன் ஏறிட்டான் நந்தகுமாரன்.



"என்னை நானே தேத்திண்டு, நிதானமா சிந்திச்சு அம்மாவிடம் உங்க விருப்பத்தை சொல்ல நெனச்சப்போ தான் ராதா கல்யாணப்பத்திரிக்கையோட வீட்டுக்கு வந்தாள்.அவ மனசை மாற்ற நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.ஆனால் அவ பிடிவாதமா மறுத்துட்டா.அவளோட முடிவு நிச்சயமா எனக்கு சந்தோஷத்தை தரல.சத்தியமா சொல்றேன்.நீங்க எனக்கில்லேனு தெரிஞ்சப்போ ஏமாற்றமும் வேதனையும் எனக்கு இருந்தது வாஸ்தவம் தான்.ஆனால் உங்களையும் ராதாவையும் பிரிக்கனும்னு நான் கனவில் கூட நினைத்ததில்லை. வில் யூ பிலீவ் மீ இஃப் ஐ டெல் யூ தெட் ஐ டின்ட் விஷ் பார் திஸ்?"



தேவகி உடை மாற்ற சென்ற நாழிகையில் சுஜாதா இத்தனையும் சொல்ல, என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நந்தகுமாரன் திகைத்துப் போனான்.



பின் வலுகட்டாயமாக வரவழைத்த புன்னகையுடன் " இட்ஸ் ஆல்ரைட் "என்று அவன் சொன்னபொழுது அவன் குரலே அவனுக்கு அந்நியமாக தோன்றியது.



"பரவாயில்ல சுஜா.உங்களை நான் நம்பறேன். நீங்களே அம்மாவிடம் விஷயத்தை சொல்லி, ஏன் ஒருவேளை அம்மாவே என் காதலுக்கு சம்மதித்திருந்தாலும் எனக்கும் ராதாவுக்கும் கல்யாணம் நடக்கறது சந்தேகம் தான்.ஏன்னா எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம்னு ஒண்ணு வேணுமில்லையா? எனக்கு ராதாவை மனைவியா அடைய கொடுத்து வைக்கல.அவ்வளவு தான்.நடந்ததுக்கெல்லாம் யார் மேலயும் தப்பு சொல்லவும் முடியாது.அப்படியே குற்றம் சொல்வதாகயிருந்தாலும் விதியை தான் குற்றம் சொல்ல முடியும். தேர் இஸ் ஆல்வேஸ் எ திங் லைக் பேஃட்."



அவன் சொல்லி முடிக்கவும் உள்ளேயிருந்து தேவகி கிளம்பி வரவும் சரியாகயிருந்தது.



"கிளம்பலாமா சுஜா?"

சுஜாதா தர்மசங்கடத்துடன் அவனை பார்க்க, நந்தகுமாரனோ சலனமேயின்றி சிரித்தான்.



"போய்ட்டு வாங்க சுஜாதா .கன்வே மை பெஸ்ட் விஷ்ஷஸ் டூ ஹர்…அப்படியே மாப்பிள்ளை உங்க ப்ரெண்டுக்கு பொருத்தம் தானானு பார்த்துட்டு வந்து சொல்லுங்க…"



'இவரால் எப்படி இப்படி நிர்மலமாய் அனைத்தையும் தாங்கிக் கொண்டு சிரிக்க முடிகிறது? மனசை தாமரை இலைத் தண்ணீராக எப்படி வைத்துக கொள்ள முடிகிறது? நந்தா!!ப்ளீஸ் எனக்கும் அந்த

வித்தையைக கற்றுக் கொடுங்களேன்.'



அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து நந்தகுமாரன் அழகாக சிரித்தான்



"லாஃப்டர் இஸ் த பெஸ்ட் மெடிசின்னு நீங்க கேள்விப்பட்டதில்லையா சுஜாதா? மனக்கவலைக்கு மருந்து எப்பவுமே சிரிப்பு தான். சிரிக்க பழகிட்டா அப்புறம் வாழ்க்கையில் எதற்குமே அழ வேண்டிய அவசியமிருக்காது. எல்லாத்துக்கும் சிரிக்கத் தான் தோணும்…"



"ரியலி?..."என்று விழிகளை அகல விரித்த சுஜாதா சட்டென்று குரலைத் தழைத்துக் கொண்டு கெஞ்சும் தொனியில் சொன்னாள்.



"அந்த மருந்து ஓவர்டோஸாக போய்டாமல் பார்த்துகுங்க நந்தா.ப்ளீஸ்….நான் வரேன்."



மாடிப்படிகளில் இறங்கி மறைந்தவளை பின் தொடர்ந்த தேவகி ஒரு நிமிடம் நின்றாள்



"டைனிங் டேபிளில் சாதம் கூட்டு கறி பண்ணி வெச்சிருக்கேன்.மனசுல துக்கம்னு வயித்தை காயப் போடாதே. சாப்டுட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பறப்போ வீட்டை பூட்டிட்டு சாவியை கையோடு எடுத்துண்டு போ. என்கிட்ட தான் இன்னொரு சாவி இருக்கே…"



மகனின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதை உணர்ந்தவள் மெதுவாக அவன் கை பற்றி அழுத்தினாள்.



"பழகின தோஷத்துக்கு தலையை காட்டிட்டு கொஞ்ச நாழியிலேயே திரும்பி வந்துடறேன் நந்து. உன்னை இந்த நிலையில் விட்டுட்டு போக எனக்கு மனசேயில்ல."



"ப்ச்சு!! என்னம்மா நீ? என்னால தான் வர முடியலன்னா நீயும் போகாமல் இருந்தால் நல்லாயிருக்குமா? போய்ட்டு வாம்மா. நீ சொன்ன மாதிரி நான் சாப்டுட்டே ஹாஸ்பிட்டல் கிளம்பறேன். போதுமா? நீ கவலைப்படாமல் முகூர்த்தம் முடிஞ்சு நிதானமாகவே வா. சரியா?"



"சரி…"என்று தலையசைத்து விட்டு மாடியிறங்கினாள் தேவகி.



பால்கனியில் நின்று சுஜாதாவின் கார் கிளம்பி தெருமுனையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த நந்தகுமாரனுக்கு முன்தினம் இதே பால்கனியில் நின்று ராதா பேசியது நினைவில் ஓடியது.



"இளம் வயசுல சாத்திய அசாத்தியங்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் நமக்குள்ளே கனவுகளையும் ஆசைகளையும் வளர்த்துக்கறோம். கற்பனை உலகில் மிதக்கிறோம். அதிலிருந்து மீண்டு வர்றப்போ தான் நிஜத்தோட நிதர்சனம் தெரியுது. இதுவரை கற்பனையில் உங்களோட வாழ்ந்துண்டிருந்த என்னை அப்பா இப்போ நிஜ உலகிற்கு வரச் சொல்றார். வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க எனக்கு மனசில் தைரியமில்ல.ஆண்பிள்ளை நீங்களே அம்மாவின் சொல்லை மீற முடியாமல் தவிக்கும்பொழுது பெண் ஜென்மம் என்னால் என்ன செய்ய முடியும்? சொல்லுங்க. அப்பாவோட விருப்பத்துக்கு கட்டுப்பட்டதன் அடையாளம் தான் நான் இப்போ கையில வெச்சுண்டிருக்கற கல்யாணப் பத்திரிக்கை. கல்யாணங்கறது சொர்க்கத்தில நிச்சயிக்கப்படற புனிதமான பந்தம்னு பெரியவா சொல்லுவா.ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த கல்யாணம் எனக்கு நானே விதிச்சுகிட்ட தண்டனை. என் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் மேல எட்டாத உயரத்தில் இருக்கற உங்க மேல ஆசைப்பட்ட என் தப்புக்கான தண்டனை தான் இது.நான் அடியெடுத்து வைக்கப்போறது மலர்பாதையா இல்ல முள்வேலியானு எனக்கு தெரியாது.அது எப்படியிருந்தாலும் நான் கவலைப்படவும் மாட்டேன்.ஆனால் உங்களையே நெனச்சு ஏங்கிட்டிருக்கற சுஜா ஏமாந்துடக் கூடாது.அது மட்டும் தான் என் கவலை. சுஜாவை ஏத்துகுங்கோனு சொல்ல எனக்கு உரிமையில்ல.ஆனால் என்னை மறந்துடுங்கோனு சொல்ல எனக்கு உரிமையிருக்கு. நடந்ததை எல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுங்கோ.

லெட்டஸ் பஃர்கெட் த பாஸ்ட் அன் லிவ் அப் த ப்ரசென்ட். நான் வரேன்…"



கல்யாணப்பத்திரிக்கையை கையில் கொடுத்துவிட்டு பிரசங்கம் போல் பேசி விட்டுச் சென்றவளின் வார்த்தைகள் மனசில் இன்னும் பிரளயமாய்….



அவள் கேட்டுக் கொண்டதைப் போலவே

அவனும் அவளை மறக்கத் தான் முயற்சி செய்கிறான்.அவள் நினைவுகளை ஒதுக்கத் தான் நினைக்கிறான். ஆனால் அவன் மனம் அவனுக்கு கட்டுப்பட மறுக்கிறதே.அவளை மறக்க முடியாது என்று சண்டித்தனம் செய்கிறதே. என்ன செய்யப் போகிறான்?



வீட்டிலிருந்தால் ராதாவின் நினைவுகளே அவனை சுற்றிச் சுழலுமோ எனற பயத்தில் அவசரமாய் ஹாஸ்பிட்டல் கிளம்பினான் நந்தகுமாரன்.
 
Top