Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 15

Advertisement

parvathi

Active member
Member
அத்தியாயம் 15

Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻





தொலைபேசி கிணுகிணுக்க, முக்கியமான எக்ஸ்ரேயை பார்வையிட்டு கொண்டிருந்த நந்தகுமார் நர்ஸ் நிர்மலாவை தொலைபேசியை எடுத்து பேசுமாறு சைகை காட்டினான்

அவள் எடுத்து பேசிவிட்டு

"உங்கம்மா பேசறாங்க டாக்டர்" என்று அவனிடமே நீட்ட, வேறு வழியின்றி ரிஸீவரை தன் கையில் வாங்கினான் நந்தகுமார்.அவன் ஹலோ என்று சொன்ன அடுத்த கணமே மறுமுனையில் தேவகி படபடத்தாள்.

"ஏண்டா நந்தூ நீ மனசுல என்ன தான் நினைச்சுண்டிருக்கே? நேத்திக்கு காலையில் வீட்டை விட்டு கிளம்பியவன், இன்னிக்கு சாயரட்சை வரை சாப்பிட கூட வராமல் அப்படி என்ன தான் பண்ணின்டிருக்கே? நானும் காலையிலிருந்து போன் மேல போனா பண்ணின்டிருக்கேன்.எப்ப பாரு டாக்டர் வார்ட் ரவுண்டிங் போயிருக்கார், டாக்டர் ஆபரேசன் தியேட்டரில் இருக்கார் அதுவும் இல்லேன்னா டாக்டர் கன்சல்டேசனில் இருக்கார்னு மாற்றி மாற்றி சொல்லிண்டிருக்கா உன் அஸிஸ்டென்ட். இன்னும் கொஞ்சம் போனால் உன்னை பார்க்க நானே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு தான் வரனும் போலிருக்கு கஷ்டகாலம்…"

"ஈஸிம்மா ஈஸி..ஏன் இப்படி கோபப்படற? உனக்கு ஏற்கெனவே பிரஷர் இருக்கு. இப்படி டென்சனாகி உன் ஆரோக்கியத்தை நீயே ஏன்மா கெடுத்துக்கறே?"

"அது சரி என் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படறவன் தான் ரெண்டு நாளா ஆத்துக்கே வராமல், ஒரு போன் கூட பண்ணாமல் இருந்தாயாக்கும்? இன்னிக்காவது வீட்டுக்கு வர்ற ஐடியா இருக்கா இல்லையா? அதை முதலில் சொல்லித் தொலை…. "

"சாரிம்மா என் வேலைப்பளூ உனக்கு தெரியாதா? அட்டெண்ட் பண்ண வேண்டிய எமர்ஜென்ஸி கேஸ் இருக்கும்மா.அதனால நாளைக்கு கார்த்தால கட்டாயம் வந்துடறேன்."

"நாளைக்கா அப்போ இன்னிக்கும் வர்றதா உத்தேசமில்லையா? என்னடா என்னை இப்படி தனியா தவிக்க விடறே? "

"கூல் கூல்மா அப்படி தனியா தூங்க பயமாயிருந்தால் கீழ்வீட்டு மீனுவையோ இல்லை சந்தியாவையோ துணைக்கு கூப்பிட்டு கொள். சரியா?."

தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு நிமிர்ந்த நந்தகுமாரின் எதிரில் ராஜசேகரன் நின்றிருந்தார்.அவர் அருகில் ஒரு அழகான இளம் பெண்.

"என்ன டாக்டர்,நாங்க உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோமா?"

"நோ நோ கன்சல்டேசனுக்கு வர்றவங்களை பார்க்கும் கடமை டாக்டர்ஸுக்கு உண்டு இல்லையா? உட்காருங்கள்.."

தொழில் நிமித்தமாக மட்டுமே அவரை பார்ப்பதாக அவன் நாசூக்காக அறிவுறுத்திய பின்னும், ராஜசேகரன் அசரவில்லை.

"இவள் தான் என் பெண் சுஜாதா டாக்டர்.."

"ஹலோ க்ளாட் டூ மீட் யூ."

சம்பிரதாயமாய் வரவேற்ற நந்தகுமாரிடம் இயல்பாய் பேசினாள் சுஜாதா.

"உங்களை பற்றி அப்பா நிறைய. சொல்லியிருக்கார் டாக்டர் ஆனால் இப்ப தான் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது."

'நந்தூ பீ அலர்ட் உன்னை தூண்டிலில் சிக்க வைக்க இப்ப மகளோட வந்திருக்கார்..'

நந்தகுமாரின் மனம் தன் போக்கில் யோசிக்க சுஜாதாவோ தலையில் அடிபட்டு அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தன் தம்பியை பற்றி விசாரித்தாள்.

தேங்க் காட் இந்த பெண் தன் தம்பியை பார்க்க வந்திருக்கிறாள்

நந்தகுமார் நிம்மதியாக உணர்ந்தான்.

"உங்க தம்பிக்கு தலையில் அடிபட்டிருப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு அவன் எங்கள் அப்சர்வேஸனில் இருப்பது நல்லது. ஆனால் நீங்க அவனை பற்றி கவலைப்பட வேண்டாம். ஹி வில் ரெக்கவர் சூன்.."

"தாங்க்யூ டாக்டர் இப்போ நாங்க அவனை பார்க்கலாமா,?"

"வொய் நாட்? தாராளமாய் பார்க்கலாம் நான் கூட இப்போ வார்ட் ரவண்டிங் தான் போகனும் நீங்களும் வரலாம்..கமான் லெட்ஸ் கோ…"

எதிர்பட்ட அத்தனை பேருக்கும் சளைக்காமல் மாலை வணக்கம் சொல்லிக் கொண்டு புன்னகையுடன் நடந்த நந்தகுமாரை சுஜாதா விழிவிரிய பார்த்து ரசித்தாள்.

"ஹலோ மிஸ்டர் சிவராம் எப்படியிருக்கிங்க?"

"நல்லாயிருக்கேன் டாக்டர் எனக்கு எப்போ ஆப்பரேசன் பண்ண போறிங்க?"

"ஆப்பரேசன் தானே பண்ணிடுவோம். உங்க சுகர் கன்ட்ரோல்ல இருக்கனும் பிரஸர் நார்மலாகனும் அதெல்லாம் சரியான அடுத்த நிமிடம் ஆப்பரேசன் தான் சோ நீங்க தான் கோவாப்பரேட் பண்ணனும் சரியா?"

சிரிப்புடன் நகர்ந்தவன் அடுத்து பார்த்தது ஒரு மொடாக்குடியரை.

"என்ன தாத்தா இப்ப எப்படியிருக்கிங்க?"

"உங்க புண்ணியத்தில் நல்லாயிருக்கேன் டாக்டரைய்யா நர்ஸம்மா நாளைக்கு நான் வூட்டுக்கு போகலாம்னு சொன்னாங்க..போகலாங்களா அய்யா? "

"ம் போகலாம் ஆனால் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிங்கன்னா உங்க உயிருக்கு நான் உத்தரவாதம் தர முடியாது."

நந்தகுமார் மேலே எதுவும் சொல்லும் முன் அந்த கிழவர் பதறிப் போய் குறுக்கிட்டார்.

"ஆங்...சத்தியமா குடிக்க மாட்டேனுங்க.நீங்க என் பேரப்புள்ள மாதிரி அவ்வளவு தூரம் புத்தி சொன்னபொறவும் குடிச்சேன்னா நான் மனுசப்பயலேயில்லிங்க."

"ம் ..தெட்ஸ் குட்"

"குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சுனு சொல்வாங்களே டாக்டர். அவர் சொல்றதை நீங்க நம்பறிங்களா?"

"அவர் இப்ப குடிச்சுட்டு பேசல. குடிச்சதால வந்த கஷ்டத்தை அனுபவிச்சுட்டு பேசறார்.அந்த கஷ்டத்தை மறுபடியும் படக்கூடாதுன்ற பயத்திலாவது அவர் திருந்தனும் அப்படி பட்டும் திருந்தலேன்னா நான் செய்யறதுக்கு ஒண்ணுமில்ல.அந்த கடவுள் தான் அவரை காப்பாற்றனும்."

நிதானமாக ஆனால் உறுதியாக சொன்ன நந்தகுமாரன் சுஜாதாவின் மதிப்பில் உயர்ந்து நின்றான். ஒரு சலுகைக்காக கூட ராஜசேகரனின் மகனை அவளுடைய தம்பியை முதலில் பார்க்காத நந்தகுமாரின் நேர்மை சுஜாதாவிற்கு பிடித்திருந்தது.

அடுத்து அவர்கள் அவள் தம்பியை பார்க்க போனபொழுது அவன் தலையில் பெரிய கட்டுடன் படுக்கையில் சாய்ந்து டெலிவிசனில் கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஹலோ சுரேஷ் எப்படியிருக்கே?"

"ஐ ஆம் பைஃன் டாக்டர் நான் வீட்டுக்கு போகலாமா?"

விட்டால் அப்போதே ஓடிவிடுவான் போலிருந்தான் சுரேஷ். அப்பாவும் அக்காவும் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்ல தான் வந்திருப்பதாக நினைத்து அவன் பேச, நந்தகுமார் சிரித்தான்.

"நீ நல்லாயிருக்கேனு நான் தான் சொல்லனும் சுரேஷ். தலைகாயம் குணமானால் நானே உன்னை வீட்டுக்கு அனுப்பிடுவேன்."

சுஜாதா சுரேஷ் அருகில் வந்து அவன் தலையை வருடினாள்.

"நீ இல்லாமல் வீடே வெறிச்சுனு இருக்கு தெரியுமா? நம்ம ஸீசர் கூட உன்னை ரொம்ப மிஸ் பண்ணுது.உன்னை தேடி அது வீடு முழுவதும் அலையறதை பார்க்க முடியல."

அக்கா தம்பியின் அன்பு பரிமாற்றத்தை வேடிக்கை பார்த்து கொண்டே, நந்தகுமார் இன்ஜெக்க்ஷன் சிரிஞ்சுடன் அவர்கள் அருகில் நெருங்கினான்.

"வேண்டாம் டாக்டர் ப்ளீஸ் " என்று சுரேஷ் மன்றாட, நந்தகுமார் சிரித்தான்

"என்ன சுரேஷ் நீ பெரிய கிரிக்கெட் ப்ளெயர்னு உங்கப்பா பெருமைப்படறார். நீயானால் ஒரு சின்ன இன்ஜெக்க்ஷனுக்கு இப்படி பயப்படறியே? "

"பயமெல்லாம் இல்ல.எனக்கு ஊசின்னாலே அலர்ஜி.பிடிக்காது "

"ஆனால் கிரிக்கெட் பிடிக்கும் இல்லையா? "

புன்னகையுடன் கேட்ட நந்தகுமாரை எரிச்சலுடன் பார்த்தான் சுரேஷ்.

கிரிக்கெட் விளையாடி மண்டையை உடைத்துக் கொண்டிருப்பவனிடம் கேட்கிற கேள்வியா இது என்ற எரிச்சல் அவன் பார்வையில் தெரிய, நந்தகுமார் மீண்டும் கேட்டான்

"நீ தோனி விராட் கோஹ்லி மாதிரி பெரிய பேட்ஸ்மேன் ஆவேன்னு நான் நம்பலாமா?"

இந்த டாக்டர் என்ன என்னை பரிகாசம் பண்ணுகிறாரா? என்று கோபம் வந்தாலும் அலட்சியமாக. பதில் சொன்னான்.

"வொய்நாட்?"

"அப்படியா? திறமையான பேட்ஸ்மேன் அவேன்னு சொன்னால் மட்டும் போதுமா? நல்லபடியா சிகிச்சை எடுத்துண்டு ஆரோக்கியமா இருந்தால் தானே நீயும் பெரிய ஆளாக வரமுடியும்.ஒரு ஊசி போட்டுக்க இப்படி முரண்டு பிடிச்சா தலைகாயம் எப்படி குணமாகும்,?"

சுரேஷ் மறு பேச்சு பேசாமல் ஊசியை போட்டுக் கொண்டான்

யார் என்ன சொன்னாலும் நீங்க சொல்லி நான் என்ன கேட்கறது என்று எதிர் வழக்காடும் சுரேஷ், இன்று நந்தகுமாரிடம் மகுடிக்கு கட்டுபட்ட நாகமாய் நடந்து கொண்ட விதம் பெற்றவருக்கு வியப்பை அளித்தது

"என்னால நம்ப முடியல டாக்டர்.ஏட்டிக்கு போட்டியா பேசற என் பையனையே வழிக்கு கொணடு வந்துட்டிங்க.நிஜமாகவே நீங்க பெரிய ஆளு தான்."

"ப்ச்சு இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை சார்.உங்க பையனுக்கு கிரிக்கெட்டில் நல்ல ஆர்வம் இருக்கு. அந்த ஆர்வத்தையே காரணமா பயன்படுத்தி காரியத்தை சாதிச்சுக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை ."

நந்தகுமாரன் முதல் சந்திப்பிலேயே சுஜாதாவின் மனம் கவர்ந்த மணாளன் ஆகிவிட்டான் .

"உங்க டாக்டர் ரொம்ப கெட்டிக்காரர்தான்ப்பா."

காரில் வீடு திரும்பும் பொழுது, சுஜாதா சொல்ல, ராஜசேகரன் புன்னகையுடன் மகளைத் திரும்பி பார்த்தார்.

"அப்போ அப்பாவோட சாய்ஸ் உனக்கும் பிடிச்சிருக்கு அப்படித்தானே சுஜா?."

அப்பாவின் கேள்விக்கான அர்த்தம் புரிந்து சுஜாதா வெட்கத்துடன் தலையசைத்தாள்.

ராதாவின் காதலுக்கு அவள் தோழியே போட்டிக்கு வந்து விடுவாளோ?
 
மனிதர்களின் மனம் புரிந்து மருத்துவம் பார்க்கும்
மருத்துவரை பிடித்து விட்டது
மங்கைக்கு....
மணாளன் என எண்ணும்
மாய உலகத்தில் சுஜாதா ....
மருத்துவனுக்கு பிடிக்க வேண்டுமே....
மனதில் ராதை இருக்கும் போது....
மங்கையின் எண்ணம்
நிறைவேறுமோ ????
மனங்கள் போராட்டம் தொடரும்.....
 
அப்போ சுஜாவுக்காகத் தான் நந்து வேண்டாம்னு ராதா சொல்லிட்டாளா! அட ராமா🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

டாக்டரே! இப்படி ஆஸ்பத்திரியே கதின்னு இருந்தால், உங்க அம்மா வேணும்னா அனுசிரிச்சுப்பா; ஆத்துக்காரி அனுசரிப்பாளா சொல்லுங்கோ🤨🤨🤨
 
மனிதர்களின் மனம் புரிந்து மருத்துவம் பார்க்கும்
மருத்துவரை பிடித்து விட்டது
மங்கைக்கு....
மணாளன் என எண்ணும்
மாய உலகத்தில் சுஜாதா ....
மருத்துவனுக்கு பிடிக்க வேண்டுமே....
மனதில் ராதை இருக்கும் போது....
மங்கையின் எண்ணம்
நிறைவேறுமோ ????
மனங்கள் போராட்டம் தொடரும்.....
முக்கோணக் காதல் என்றுமே போராட்டம் தான்
 
அப்போ சுஜாவுக்காகத் தான் நந்து வேண்டாம்னு ராதா சொல்லிட்டாளா! அட ராமா🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

டாக்டரே! இப்படி ஆஸ்பத்திரியே கதின்னு இருந்தால், உங்க அம்மா வேணும்னா அனுசிரிச்சுப்பா; ஆத்துக்காரி அனுசரிப்பாளா சொல்லுங்கோ🤨🤨🤨
பாய்ண்ட்! நந்தகுமார் இதை நோட் பண்ணியே ஆகனும்.WILL HELP IN FUTURE 😀
 
Top