Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 10

Advertisement

parvathi

Active member
Member

அத்தியாயம் 10​

அன்று காலை எழுந்து வழக்கம் போல் நர்ஸிங்ஹோம் கிளம்பிய நந்தகுமாரனுக்கு மாலையில் ஒரு இனிய சந்திப்பு நிகழப் போவது தெரியாது.​

கன்ஸல்டேசன் ஹவரில் கடைசி நோயாளியாக உள்ளே வந்தவர் ராஜசேகர் நகரின் பெரிய புள்ளிகளில் முக்கியமானவர்.​

"என்ன டாக்டர் ரொம்ப பிஸி போல. இப்படி இலவச வைத்தியம் பண்ணினால் கூட்டம் தன்னால வரும் இல்லையா? ஆமா இப்படி வர்றவங்களுக்கெல்லாம் இலவச வைத்தியம் பண்ணினால் இந்த நர்ஸிங்ஹோமை எப்படி நிர்வகிக்க முடியும்? சிரமம் இல்லையா,,? "​

"அதற்கு தான் உங்களை மாதிரி பெரிய. மனுசங்களோட ஆதரவு இருக்கே அப்புறம் என்ன சிரமம்,?"​

"பேஷ் ! பேஷ்! இல்லாதவர்களுக்கு இலவச சிகிச்சை செய்ய என்னை மாதிரி ஆட்களிடம் இரட்டிப்பு வசூலா,? ரொம்ப நல்ல பாலிசி டாக்டர்."​

அவர் உண்மையில் பாராட்டுகிறாரா இல்லை பரிகாசம் செய்கிறாரா என்று நந்தகுமாரனுக்குப் புரியவில்லை​

அவருக்கு வழக்கமான ஹெல்த் செக்கப் செய்தவனிடம் ராஜசேகர் விசாரித்தார்.​

"அடையாரில் புது வீடு கட்டி குடி போனீர்களே டாக்டர். வீடு கன்பஃர்டபில்லா இருக்கா ? அந்த ஏரியா பிடிச்சிருக்கா?"​

"ஏரியாவுக்கென்ன? அதெல்லாம் நல்லாதானிருக்கு...ஆனால் அது உங்களை மாதிரி பெரிய மனுசங்க இருக்கற போஷ் ஏரியா இல்லையா? அக்கம்பக்கத்தில் யாரும் பேசமாட்றாங்க அம்மா தான் பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் சிரமப்படறாங்க."​

"அதற்கு தான் அம்மாவுக்கு பேச்சுத்துணைக்குக்காவது ஒரு மருமகள் வேணும்றது என்ன டாக்டர் ஏற்பாடு பண்ணிடுவோமா? "​

ராஜசேகருக்கு அவனை தன் மாப்பிள்ளையாக்கி கொள்வதில் விருப்பம். ஆனால் நந்தகுமார் அவர் தூண்டிலில் சிக்கி கொள்ளாமல் நழுவவே விரும்பினான்​

"அதை அப்புறம் பார்க்கலாம் சார் இப்ப உங்களால் முடிந்தால் இங்கே என் ஹாஸ்பிட்டல் பக்கத்தில் நல்ல ரெசிடென்சியல் ஏரியாவில் வீடு இருந்தால் சொல்லுங்க. முக்கியமா எங்கம்மா பேசி பழகறதுக்கு நல்ல மனுசங்க பக்கத்தில் இருக்கற மாதிரி வீடு இருந்தால் சொல்லுங்க.விலைக்கோ இல்லை வாடகைக்கோ எதுன்னாலும் ஒ கே தான்."​

"விலைக்கு வீடு உடனே கிடைக்கறது கஷ்டம். வாடகைக்குன்னா என்னிடம் கைவசம் ஒண்ணு இருக்கு. எங்க காலனியில் என் ஆபீஸ் மேனேஜர் சுந்தரத்தோட வீட்ல மேல் மாடி காலியாயிருக்கறதா சொன்னார் பிருந்தாவனம்னு பெரிய வீடு.ரெண்டு க்ரவுண்ட் நிலத்தில் சுற்றி தோட்டத்தோடு பெயருக்கேற்ற மாதிரி அழகான வீடு. நல்ல மனுசாளா வாடகைக்கு விடனும்னு நாலு மாசமா காலியா வெச்சிருக்கார். நீங்க வேணா அங்கே முயற்சி பண்ணி பாருங்க."​

வீட்டின் முகவரியை சொல்லிவிட்டு ராஜசேகர் போய்விட்டார். ஆனால் நந்தகுமாரனால் அவ்வளவு சுலபமாக வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் யாரையாவது விசாரித்தால் நல்லது என்று தோன்றி விட, காரை ஓரமாக நிறுத்தி விட்டு சுற்றுப்புறத்தில் விசாரிக்க யாரும் இருக்கிறார்களா என்று பார்க்க ஆரம்பித்தான்.​

ஏறக்குறைய இதே நேரத்தில் தான் ராதாவும் ஜானகியும் கோவிலிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்த பார்வை நந்தகுமாரனை சங்கடப்படுத்தியது.​

"ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ "​

மீண்டும் அவன் கேட்ட மன்னிப்பில் திக்கி திணறினாலும் முதலில் சமாளித்தவள் ராதா தான்.​

"எஸ்..சொல்லுங்க.."​

"இங்கே சுந்தரம்ன்றவர் வீடு எங்கேயிருக்குனு சொல்ல முடியுமா? வீட்டின் பெயர் கூட பிருந்தாவனம்னு சொன்னதாக ஞாபகம்…"​

"அப்படி யாரும் இங்கே இல்லையே"​

ராதாவின் உள்ளங்கையில் நறுக்கென்று கிள்ளினாள் ஜானகி.​

"என்னடி, கற்பனையில் வர்ணிச்சவன் நேரிலேயே வந்தவுடன் மயங்கிட்டியா? இல்ல புத்தி கித்தி பிசகிடுச்சா? அவர் கேட்கறது உங்கப்பாவை தான். மயக்கத்தில் அப்பா பேர் கூடவா மறந்து போகும்? கடவுளே! உங்க வீட்டு பெயர் தான் பிருந்தாவனம். அதுவுமா மறந்து போச்சு."​

காதருகில் ஜானகி கிசுகிசுக்கவும், தன் தவறை உணர்ந்தவளாக உதட்டை கடித்துக் கொண்டு நந்தகுமாரனை ஏறிட்டாள் ராதா. சிவந்த இதழ்களில் வெண்முத்துக்களாய் பதிந்த பற்களை வாலிப வயசுக்கே உரிய ரசனையுடன் கவனித்த நந்தகுமாரன், தன்நிலை உணர்ந்து சட்டென்று தன்னை கட்டுபடுத்திக்கொண்டான்​

"சாரி சார் நீங்க தேடற சுந்தரம் இவளோட அப்பா தான் .ஏதோ ஞாபகத்தில் உளறிட்டா. நீங்க வாங்க நான் வீட்டை காட்டறேன் ஏண்டி, வீடாவது எங்கேயிருக்குன்னு ஞாபகம் இருக்கோல்லியோ?"​

ஜானகியின் கேலியில், ராதாவின் முகம் அந்திவானமாக சிவந்ததையும், இதழ்களில் குறுநகை விரிந்ததையும்,விழிகள் நயன மொழியில் தோழியை செல்லமாக கண்டித்ததையும் ஆர்வத்துடன் ரசித்தான் நந்தகுமாரன்.​

சுந்தரம் அப்பொழுது தான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தார்.ஜானகி நந்தகுமாரனை அழைத்து கொண்டு விடுவிடுவென்று அவர் முன் சென்று நின்றாள்.​

"மாமா முதல்ல உங்க பொண்ணுக்கு உங்க பெயரை சொல்லிக் கொடுங்க இல்ல இந்த மக்குக்கு கையில் பச்சை குத்தி விடுங்க."​

"பச்சை குத்தறதா என்னம்மா சொல்ற நீ? ஆமா..சார் யாருன்னு சொல்லாமல் வேற என்னவோ சொல்லிட்டிருக்க.."​

"நான் டாக்டர் நந்தகுமார்"​

புன்சிரிப்புடன் கை நீட்டினான் நந்தகுமாரன்.​

"யு மீன் த சீஃப் டாக்டர் அஃப் தேவகி நர்ஸிங்ஹோம்."​

வியப்புடன் விசாரித்த சுந்தரத்திடம் ஆமாம் என்று தலையசைத்தான் நந்தகுமார்​

நகரின் பிரசித்திப் பெற்ற டாக்டர்களில் ஒருவரான நந்தகுமாரன் தன்னை தேடி வரவேண்டிய அவசியம் என்ன என்று வியந்த சுந்தரம், அவன் வந்த விவரம் தெரிந்ததும் பிரமித்து போனார்.​

பங்களாவில் வசிக்க கூடிய வசதி படைத்தவன் வாடகைக்கு வீடு தேடுவதாவது என்று திகைத்து போனார் அவர்.​

நந்தகுமாரனோ தன் அம்மாவின் ஆசார அனுஷ்டானங்களுக்கு இப்பொழுது இருக்கும் வீட்டில் தடைகள் ஏற்படுவது பற்றி, பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் அம்மா சிரமப்படுவது பற்றி, அதிகம் ஜனப்புழக்கம் உள்ள இடத்தில் குடியிருக்க அம்மா ஆசைப்படுவது பற்றி, மேலும் தன்னுடைய நர்ஸிங்ஹோம் இப்போது இருக்கும் வீட்டிலிருந்து மிக தொலைவில் இருப்பது பற்றி எல்லாம் விளக்கமாக விவரித்த பொழுது சுந்தரம் நம்பாமலிருக்கவும் முடியவில்லை.​

மாடி வீட்டை அவர் வாடகைக்குவிட நல்ல குடும்பமாக பார்த்து கொண்டு தான் இருந்தார்.ஆனால் ஒரு மேல்தட்டு டாக்டருக்கு நடுத்தர வசதியுடைய தன் வீடு வசிக்க தோதானது இல்லை என்றே அவர் நினைத்தார். வீட்டை பார்த்தால் ஒருவேளை அவன் மனதை மாற்றி கொள்ளலாம் என்று நினைத்து பூட்டியிருந்த மாடிவீட்டை திறந்து காண்பித்தார்.​

ஆனால் அவர் நினைத்ததற்கு நேர்மாறாக நந்தகுமாரனுக்கு காற்றோட்டமும் வெளிச்சமுமாய் இருந்த அந்த மாடிவீடு மிகவும் பிடித்து போய், அடுத்து வரும் நல்ல நாளில் குடிவந்து விடுவதாக சொல்லி கை நிறைய முன்பணம் கொடுத்து சுந்தரம் எதிர்பார்க்காத அளவிற்கு வாடகையும் தருவதாக சொல்லி அனைத்து விசயங்களையும் முடிவு செய்து விட்டே நந்தகுமாரன் கிளம்பினான்.​

வீட்டை விட்டு கிளம்பிய பொழுது கட்டுபாட்டை மீறி விழிகள் ராதாவை தேடி அலைய, சிரமத்துடன் மனதை அடக்கி வெளியே வந்தான். கேட் வரை வழியனுப்ப வந்த சுந்தரத்திடம் விடைபெற்றுக் கொண்டு வீதியில் இறங்கிய பொழுது, தற்செயலாக பார்வை ஜன்னலில் பதிய,அங்கே அவனை பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்த ராதாவை கண்டதும் மேனி முழுக்க அருவியில் நனைந்தாற் போல ஒரு கிளுகிளுப்பு பரவி ஓடியது​

பார்வைகள் ஒன்றையொன்று கவ்வி கலந்தன. நந்தகுமாரன் வலிய வரவழைத்து கொண்ட தைரியத்துடன் லேசாக இதழ் விரித்து சிரித்த பொழுது,ராதா பயம் கலந்த நாணத்துடன் ஜன்னலை விட்டு விலகினாள்.​

ராதாவின் சந்திப்பு நந்தகுமாரனின் வாலிப மனதில் வசந்த கால உற்சவமாய் வலம் வந்தது. வேலை செய்த அலுப்பில் படுக்கையில் படுத்தவுடனேயே தூங்கி விடும் வழக்கம் உடையவன் அன்று மட்டும் ஏனோ உறக்கம் வராமல் தவித்தான். தூங்குவதற்கு முயற்சி செய்தாலும், மூடிய விழிகளினூடெ ராதாவின் மோகன உருவம் தான் தெரிந்தது.​

நித்திரை இல்லாமல் சிவந்திருந்த விழிகளைப் பார்த்து அம்மா தேவகி கவலைபட்டாள்.​

"என்னடா உடம்பு சரியில்லையா? கண்ணெல்லாம் சிவந்திருக்கு ராத்திரி தூங்கினாயா இல்லையா?"​

அம்மாவின் கேள்விக்கு பதிலாய் வெறுமனே தலையசைத்தான் .​

"இந்த பக்கத்து வீட்டு ஷர்லியோட விஷமம் வரவர ஜாஸ்தியாயிண்டு இருக்குடா தாங்க முடியல."​

காபி கோப்பையை மகனின் கையில் கொடுத்து விட்டு, தேவகி சொல்ல நந்தகுமார் காபியை நாசூக்காக உறிஞ்சியபடி கேட்டான்​

"ஏன் என்ன பண்றா அந்த பொண்ணு?"​

"அட கடவுளே ஷர்லின்றது பொண்ணில்லடா அவாத்து நாய் பேர் தான் ஷர்லி."​

"நாயா? "அடக்க முடியாமல் சிரித்த சிரிப்பில் புரைக்கேற தேவகி அவசரமாய் அவன் தலையை தட்டினாள்​

"நாயை சங்கிலி போட்டு கட்டி வைக்க மாட்டாளோ அது பாட்டுக்கு எல்லா இடத்திலும் எச்சில் பண்றது இன்னிக்கு கார்த்தால மடியா துளசி பூஜை பண்ணின்டிருக்கேன் அபச்சாரமா முட்டை ஓடு மேல வந்து விழறது. மனுசாள் விஷமமா இல்ல நாய் பண்ண வேலையான்னு தெரியல இன்னொரு முறை குளிக்க வேண்டியதா போச்சு நாய்க்கு தான் அறிவில்லேன்னா மனுஷாளுக்குமா அறிவில்லாமல் போகும்? அந்த ஆங்கிலோ இந்தியன் பார்த்து சிரிச்சுண்டிருக்கா ஏதாவது சொன்னால் தஸ்ஸுபுஸ்ஸுங்கறா எனக்கு ஒரு எழவும் புரிய மாட்டேன்றது கஷ்டகாலம் இவாகிட்ட எல்லாம் காலம் தள்ளனும்னு பகவான் என் தலையில எழுதி வெச்சுட்டான் போல"​

அம்மா ஒரு பாட்டம் அழுது ஓய்ந்ததும் காபிகோப்பையை டீபாயில் வைத்த நந்தகுமார் சிரித்து கொண்டே அம்மாவின் கை பிடிக்க போக, தேவகி விருட்டென்று விலகினாள்.​

"தொடாதடா...ஏற்கெனவே ரெண்டு முறை குளிச்சாச்சு நான்"​

"ஓகேம்மா பீ கூல் இனிமேல் உனக்கு இந்த கஷ்டமெல்லாம் இருக்க போறதில்ல. நம்ம ஹாஸ்பிட்டல் பக்கத்திலேயே அழகா ஒரு வீடு பார்த்திருக்கேன் மாடியில் ஒருபெரிய ஹால் ரெண்டு பெட்ரூம் கிச்சன் ஸ்டோர் பூஜையறை,அப்புறம் நீ வடாம் காய வைக்க, துணி உலர்த்த பெரிய வெராண்டா, எனக்கு வீடு ரொம்ப பிடிச்சு போயிடுச்சும்மா.வீடு பெயர் கூட பிருந்தாவனம்.பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் நல்லா ரைமிங்கா இருக்குல்லம்மா…"​

'அடப்பாவி! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் வீடு பிடிச்சுதா வீட்ல இருந்த பொண்ணு பிடிச்சுதா இஷ்டத்துக்கு அள்ளி விடற.'​

கேள்வி கேட்ட மனசாட்சியை புறந்தள்ளி விட்டு அம்மாவை கேட்டான்​

"என்னம்மா உனக்கு இந்த ஏற்பாடு பிடிச்சிருக்கு தானே?"​

"எல்லாம் சரிதான் ஆனால் சொந்த வீடு இருக்கறச்சே வாடகைக்கு குடி போகனுமான்னு தான் யோசனையாயிருக்கு ."​

அம்மாவின் தயக்கம் நந்தகுமாரனின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. ராதாவுடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பை அம்மா கெடுத்து விடுவாளோ என்ற பயம் வரவும்,அம்மாவை சமாதானம் செய்ய முற்பட்டான்​

"ஹாஸ்பிட்டலுக்கு தினம் இங்கிருந்து போறதுன்னா சிரமமாயிருக்கும்மா கார்த்தால பீக் ஹவர் ட்ராபிக்ல காரில் போறது இன்னும் ரொம்ப கஸ்டம் ஏதும் எமர்ஜென்ஸி கேஸ் அட்டெண்ட் பண்ணனும்னா நேரத்தோட போக முடியல. அதான் ஹாஸ்பிட்டல் பக்கமா வீடு பார்த்தேன் அதுவும் தவிர நம்ம ரெண்டு பேருக்கு இவ்வளவு பெரிய வீடு இப்போ தேவையில்ல தானே தனி வீடுன்றதால நல்ல வாடகைக்கு போகும் நாம அந்த வீட்டிற்கு சொற்ப வாடகை தான் கொடுக்க போறோம் அதனால நமக்கு எப்படி பார்த்தாலும் லாபம் தான் அங்கே அக்கம்பக்கத்திலும் எல்லாரும் நம்ம ஆளுங்க தான் இங்கே மாதிரி ஆங்கிலோ இந்தியன்ஸ் கிடையாது.உனக்கு பேச்சுத்துணைக்கு நிறைய பேர் இருக்காங்க என்னம்மா ஒகே தானே."​

"சரிடா அங்கே போறது நமக்கு பலவிதத்திலும் சௌகரியம்னா நான் ஏன் வேண்டாம்னு சொல்லப்போறேன்? உன் இஷ்டப்படியே செய்வோம்."​

தேவகி காபி கோப்பையை எடுத்துக் கொண்டு நகர நந்தகுமாரன் நிம்மதியாக உணர்ந்தான். பிருந்தாவனத்திற்கு குடி போகும் அந்த நல்ல நாளுக்காக மனம் ஏங்க ஆரம்பித்தது.​

 
Last edited by a moderator:
கனவுக் காதலன் கண்முன்னே வந்து நிற்க,
கலங்கி நிற்கிறாள் குமாரி!
குடியேற வீடு தேடி வந்த இடத்தில்,
குலமகளை கண்டதும் காதல் கொண்டான் குமாரன்;
காவியமாய் ஒரு காதல் ஜோடி,
காலம் சேர்த்து வைக்குமா....
 
அடேய் இது அநியாயம் பத்தாது அத்தியாயம் படிச்சிட்டு பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
ராதா நந்தகுமார் முதல் சந்திக்கிற பொழுது படிச்சிட்டு சந்தோஷமா கதை படிக்க தொடங்கினா
முதல் அத்தியாயத்திலயே அவ கல்யாணம் ஆகி போயிட்டா இவன் தனித்து நிற்கிற சோகத்தில் ஆரம்பிக்குது என்னடா நடக்குது இங்க 😭😭😭😭😭
 
கனவுக் காதலன் கண்முன்னே வந்து நிற்க,
கலங்கி நிற்கிறாள் குமாரி!
குடியேற வீடு தேடி வந்த இடத்தில்,
குலமகளை கண்டதும் காதல் கொண்டான் குமாரன்;
காவியமாய் ஒரு காதல் ஜோடி,
காலம் சேர்த்து வைக்குமா....
பிரிச்சு வெச்சுட்டு..... சேர்த்து வைக்குமாவா???? ரொம்ப கஷ்டம்.....
 
அடேய் இது அநியாயம் பத்தாது அத்தியாயம் படிச்சிட்டு பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
ராதா நந்தகுமார் முதல் சந்திக்கிற பொழுது படிச்சிட்டு சந்தோஷமா கதை படிக்க தொடங்கினா
முதல் அத்தியாயத்திலயே அவ கல்யாணம் ஆகி போயிட்டா இவன் தனித்து நிற்கிற சோகத்தில் ஆரம்பிக்குது என்னடா நடக்குது இங்க 😭😭😭😭😭
உண்மையை சொன்னா படிக்க வர மாட்டீங்களே. அப்புறம் யார் எனக்கு கம்பெனி கொடுப்பாங்க. அதான் கண்ணன் வரும் வேளையை மட்டும் சொல்லி கவிக்குயிலை பிருந்தாவனத்துக்குள் இழுத்தேன்:love::love::love:

நல்லது கெட்டது நிறைந்த வாழ்க்கை என்று ஆத்தர் சொல்லியிருக்காங்க. ராதா நந்து இருவரின் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தை கொடுப்பாங்க என்று நம்பி படிப்போம்.
 
உண்மையை சொன்னா படிக்க வர மாட்டீங்களே. அப்புறம் யார் எனக்கு கம்பெனி கொடுப்பாங்க. அதான் கண்ணன் வரும் வேளையை மட்டும் சொல்லி கவிக்குயிலை பிருந்தாவனத்துக்குள் இழுத்தேன்:love::love::love:

நல்லது கெட்டது நிறைந்த வாழ்க்கை என்று ஆத்தர் சொல்லியிருக்காங்க. ராதா நந்து இருவரின் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தை கொடுப்பாங்க என்று நம்பி படிப்போம்.
என்ன ஒரு (வில்லத்தனம்) புத்திசாலித்தனம்😂😂😂😂....
 
கனவுக் காதலன் கண்முன்னே வந்து நிற்க,
கலங்கி நிற்கிறாள் குமாரி!
குடியேற வீடு தேடி வந்த இடத்தில்,
குலமகளை கண்டதும் காதல் கொண்டான் குமாரன்;
காவியமாய் ஒரு காதல் ஜோடி,
காலம் சேர்த்து வைக்குமா....
நன்றிமா🙏🏻
 
Top