Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே - மொழி 12

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 12

"ம்ம்... இந்த சூட் உனக்கு பெர்ஃபெக்டா இருக்கும்" என்று நீல நிற கோட்டை உயர்த்திப் பிடித்தபடி சொன்ன இஷியிடம் மறுப்பாக தலையை அசைக்க நினைத்தவன் அவள் கண்கள் சுருக்கி முறைக்கவும் சமாளிக்க முயன்றான் ஹர்ஷா. "ப்ச்... என்ன ஹர்ஷா நீ. இத்தோட பத்து ட்ரஸ ரிஜெக்ட் பண்ணிட்ட. உனக்கு ஃபங்ஷன் போற ஐடியா இருக்கா இல்லையா?" இடுப்பில் கை வைத்தபடி முகத்தை தூக்கி பிடித்தவளாக கேட்க எழுந்து அவள் அருகில் சென்றவன் "இதுல ஸ்பெஷலா என்ன இருக்கு இஷி. இதுவும் நார்மல் டே தான" என்றவனை ஏலியனை போல பார்த்து வைத்தாள் தங்கை.

"ஹர்ஷா.... நீ போறது ஏபிசி..அவன் அவன் அங்க போக ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு ஏங்குறாங்க. நீ நார்மல் தானன்னு ஈசியா சொல்ற. பட் உனக்கு அது செட் ஆகாது. யூ நோ வாட் ஹர்ஷா.. நீ ஸ்பெஷல் கெஸ்ட் ஹர்ஷா..கொஞ்சம் ஸ்பெஷலா போகலாம் தப்பில்ல" என்றாள்.

ஹர்ஷா புருவம் உயர்த்தி பார்த்தவன் "தப்பில்ல தான்.. பட் மொத்த காலேஜ்க்கும் நான் ஸ்பெஷலா இருக்குறதுல எனக்கு விருப்பமில்ல இஷி." என்றவனை குறும்பாக பார்த்தவள் "அப்போ யாருக்கு மட்டும் ஸ்பெஷலா தெரியனும் பிரதர்?" என்றவளின் உதடுகளுக்கு நடுவே புன்னகை ஒளிந்து கிடந்தது. ஹர்ஷா தோளை குலுக்கியவன் " மே பி சம் ஒன் ஸ்பெஷல்" என்றவனின் மனக்கண்ணில் காரணமின்றி வந்து சென்றாள் காதம்பரி.

மென்னகை மன்னனாக அசையாமல் நிற்கும் தனையனின் தோளில் கை போட்டபடி அவன் அருகில் நின்றவள் "அடடா..நான் கூட உன் சாதாரணமா நினைச்சேன். நீ வேற ட்ராக்ல ட்ரைன் விட்டுட்டு இருக்கன்னு எனக்கு தெரியாம போச்சே" என்றதும் " இஷி...உன்ன சுத்தி நடக்குற எல்லாத்தையும் இந்த குட்டி மூளையில ஏத்திக்க பார்க்காத. அது அவ்ளோ ஈசி இல்ல. அண்ட்.. நான் கெளம்புறது இருக்கட்டும்... நீ என்ன ஐடியால இருக்க.. அருள் அறை மணி நேரத்துல வரேன்னு சொன்னான். அவனுக்கு பொறுமை ரொம்ப கம்மி.. பார்த்துக்கோ" என்றவனுக்கு அழகு காட்டினாள் இஷாரா.

ஆனால் ஹர்ஷாவின் கூற்று நியாயமாக படவே "அருள்ன்னு சொன்னா பயந்து போய் நான் அப்டியே பம்மிடணுமாக்கும்...பிரதர் இப்போ நீ தப்பிச்சிருக்கலாம். ஆனா ஒரு நாள் வசமா மாட்டுவ.. அன்னிக்கு உனக்கு ஹெல்ப்க்கு அருள் எப்டி வரான்னு நானும் பார்க்குறேன்" என்றவள் சற்று தூரம் நடந்து சென்றபடி மீண்டும் ஹர்ஷாவை பார்த்தவள் "ஆனா கவலை படாத இஷி இஸ் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ" சிரித்தபடி சொன்னவள் அங்கிருந்து வெளியேற ஹர்ஷா அவளை கண்களால் அனுப்பி வைத்து விட்டு அதே குறுநகையுடன் எழுந்தவன் தனக்கான உடையை தேர்வு செய்ய மனதின் ஒரு ஓரத்தில் காதுவின் பிம்பமும் மறையாமல் தான் இருந்தது.

அவனது நினைவை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்திருப்பவளோ கல்லூரி வளாகத்தில் கால்களை ஆட்டியபடி அமர்ந்துகொண்டு ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளை ஏற இறங்க பார்த்தபடி இருந்தாள் ஹேமா. "என்னடி அப்டி பார்க்குற?" என்றவளுக்கு தலையசைப்பில் பதில் சொன்னவள் "இல்ல ஒன்னும் இல்ல. நீ என்ன இன்னிக்கு பயங்கர ஹாப்பி மூட்ல இருக்க மாதிரி தெரியுது" என்றாள்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்த காது "ஐஸ்கிரீம் சாப்பிடுறதுல என்ன டி புது ஹாப்பினஸ கண்டுட்ட? ஐஸ்கிரீம் என்றாலே ஹாப்பினஸ் தானே" கேள்வி புரியாமல் விளையாடியவள் மீண்டும் சுவைக்க "ம்ம்.. இன்னிக்கு ஃபங்ஷனுக்கு சீஃப் ஹெஸ்ட் யாருன்னு தெரியுமா?" என்றாள் ஹேமா. காதம்பரி ஐஸ்கிரீமில் கண்ணும் கருத்துமாக இருந்தவள் "யாரு.. ப்ரைம் மினிஸ்டரா?" என்றபடி கோனின் அடி பகுதியை கடித்து உள்ளே ஒழுகும் சாக்லேட்டை உறிஞ்சினாள்.

"அப்போ உனக்கு உண்மையாவே தெரியாது.. வாசல்ல அவ்ளோ பெரிய பேனர் இருக்கு அதுல இருக்க நேம் கூட நீ பார்க்கல? அப்டி தான" என்ற தோழியை நிமிர்ந்து பார்க்காமல் "அட போடி நீ வேற.. நானே அவதியா கெளம்பி வந்து இப்போ தான் அப்பாடான்னு உக்காந்திருக்கேன். நீ என்னடான்னா பேனர பார்த்தியா பேர பார்த்தியான்னு." சொல்லிவிட்டு ஐஸ்கிரீமின் கடைசி துண்டை வாயில் திணித்துக் கொண்டாள்.

"அப்டியா சொல்ற... சரி விடு இதுக்கும் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லன்னா எனக்கு அது ஹாப்பி தான் " என்றவள் தோழியை தோழோடு அணைத்துக்கொண்டாள். 'இவளுக்கு என்ன ஆச்சு' என்று எண்ணியபடி காது அமைதியாக "ஹாய் காதும்மா" என்று கையசைத்தான் ஒருவன்.

அவனை பார்த்த நிமிடத்தில் முகம் கடுகடுப்பை தத்தெடுக்க "என்ன அப்டி கூப்பிடாதன்னு எத்தன தடவ சொல்லுறது ரோஹன்." என்றவள் அமர்ந்திருந்த கல் திண்டில் இருந்து கீழே இறங்கினாள். ஹேமாவும் அந்த ரோஹனை முறைக்க அவனோ அதை சட்டை செய்ததாக தெரியவில்லை.

"சரி நான் வேணும்னா உன்ன பேபின்னு கூப்பிடவா?" என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளுக்குள் தீ மூட்ட பற்றி எறிய துவங்கியது. "அப்டியா.. உன் மனசுல நீ என்ன நெனச்சுட்டு இருக்க.. உன் இஷ்டத்துக்கு எனக்கு பேர் வச்சு கூப்பிட நீ யாரு." என்றவள் மூச்சு முட்ட முறைக்க அவனோ அசரவில்லை.

"என்ன பேபி மறந்துட்டியா.. நம்ம ரெண்டு பேரும் எவ்ளோ குளோஸ்ன்னு நம்ம காலேஜ் மொத்தத்துக்கும் தெரியுமே" என்றவன் பின்னங்கழுத்தை தேய்க்க "அது தான் நான் செஞ்ச தப்பு. உன்ன ஒரு நல்ல ஃபிரண்டா இருப்பன்னு நினைச்சேன் பாரு என் புத்திய செருப்பால அடிச்சுக்கனும். உன்னலாம்... ச்ச" என்று முகத்தை சுழித்தவள் அங்கிருந்து வேகமாக நடக்க ஹேமாவும் அவளை அழைத்தபடி பின்னால் சென்றாள்.

ரோஹனின் பார்வை அவளை பின்தொடர "போடி..போ.. நீ என்னிக்கு இருந்தாலும் எனக்கு தான். அத யாராலையும் மாத்த முடியாது." என்றவனின் உதடுகளின் விழும்பில் குரூர சிரிப்பு.

காதுவின் வேக நடைக்கு பழக்கப்படாத அவளது காலணி வழு இழந்து கால்களை விடுத்து பறக்க "இது வேற நேரம் காலம் தெரியாம" என்றவள் அதை கையில் எடுத்தபடி நிமிர்ந்தும் அவளது பார்வை வட்டாரத்தில் விழுந்தது அந்த பேனர். கூடவே ஹர்ஷாவின் பெயரும் கண்களுக்கு குளுமையாக தோன்றவே முகவாய் மலர்ந்தாள் காதம்பரி.

சீரான வேகத்தில் காரை இயக்கியபடி இருந்தவனின் கண்கள் அவ்வப்போது இஷியை தொட்டு மீழ அதை உணர்ந்தவள் "எதுக்கு அப்டி பார்க்குற. ஏதாச்சும் கேட்க இருந்தா கேளு" என்றாள் இஷாரா.

"இல்ல உனக்கு நான் ட்ரைவர். உன்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற சாதாரண மனுஷன். என்கூட சரிக்கு சமமா உக்காந்து வரியே... அதான் என்னன்னு... உனக்கு தலையில எதுவும் அடி படலையே நல்லா தான இருக்க?" படபடப்பாக கேட்டவனை முறைத்து பார்த்தபடி முகவாயை வெட்டி திருப்பிக்கொண்டாள் இஷாரா.

"ஓவரா பேசாத.. நீ எனக்கு ஹெல்ப் பண்ணிருக்க.. அதுனால உன்ன ஈகுவலா ட்ரீட் பண்ணனும்னு நெனைக்கிறேன். அவ்ளோதான்.... உனக்கு வாய் ரொம்ப நீளுது மேன். யூ ஆர் ஸ்டில் மை பாடி கார்ட்.. அத மறந்துறாத" என்றவள் கூந்தலை காதோரம் ஒதுக்கினாள்.

" ரைட்டு விடு.. இப்போ எங்க போனும்?"

"ஆர்.ஆர்..ஃபேஷன்ஸ்" என்றவள் வெளி காற்றை சுவாசிக்க "வழி சொல்லு" என்றான் அசட்டையாக. அவள் அவனை கண்கள் இடுக்கி பார்க்க "முன்ன பின்ன செத்திருந்தா தான சுடுகாட்டுக்கு வழி தெரியும்" என்றபடி பாதையில் கண்களை பதித்தான். தலையில் அடித்துக்கொண்ட இஷி வழிகாட்ட சில நிமிட பயணத்திற்கு பிறகு பொண்ணிற எழுத்துக்கள் மின்ன வானை முட்ட முயற்சிக்கும் மூன்றடுக்கு கட்டிடத்தின் முன் காரை நிறுத்தினான் அருள்.

இஷாரா கீழே இறங்கியவள் "என்ன அப்டியே உக்காந்து இருக்க.. கீழ இறங்கி வா" என்றவளை கண்களை கூர்மையாக்கி பார்த்தவன் " எதுக்கு? " என்றான். இடுப்பில் கைவைத்த இஷி "எதுக்கா.. ஹலோ உனக்கு என்ன அம்னீசியாவா. நான் தனியா போய் பப்ல நடந்தது மறந்து போச்சா? நீ இல்லாம தனியா எங்கேயும் போக கூடாதுன்னு ஹர்ஷா ஸ்டிரிக்டா சொல்லிருக்கான்..இந்த விளக்கம் போதுமா.. இப்போ இறங்குறியா?" கையை நீட்டி பில்டிங்கை சுட்டி காட்ட வேறு வழியின்றி கீழே இறங்கி அவளுடன் நடந்தான் அருள்.

உயரமான பில்டிங்கின் சீலிங்கில் பளிங்கு சாண்ட்லியர் கொத்தாக தொங்கி கொண்டிருந்தது. ஏசி உடலின் உஷ்ணத்தை விரட்டியடிக்க வெளியில் பற்றி எறியும் வெயிலின் தாக்கம் மட்டுப்பட இருவரும் ரிஷப்ஷனை அடைந்தனர்.

" ஹலோ மேடம்.. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ" அழகாக சிரித்தபடி கேட்ட பெண்ணிடம் " மனிஷா மேம பார்க்கனும்." என்றாள் இஷாரா. "ஸ்யோர்.. அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கா?" என்றாள் அந்த பெண். இஷி தலையை இடம் வலமாக ஆட்டியவள் "அப்பாய்ண்ட்மெண்ட் இல்ல.. பட் உங்க பொட்டிக்கோட லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்ட் இருக்கு" என்று கார்டை நீட்ட அதை வாங்கி விவரத்தை குறித்துக் கொண்ட பெண் "மேடம் இப்போ வந்துருவாங்க.. நீங்க வெயிட்டிங் ஹால்ல இருங்க.. நான் அவங்க வந்ததும் இன்ஃபார்ம் பண்ணுறேன்" என்று சிரித்த முகம் வாடாமல் சொல்ல இஷியும் புன்னகையுடன் விடைபெற்றவள் சற்று தள்ளி நின்று கண்ணாடியின் தன் சொந்த பிம்பத்தை ரசித்தபடி இருந்த அருளிடம் சென்றாள்.

அருள் அதுவரை தலை முடியை கோதியபடி இருந்தவன் "முடிஞ்சுதா.. போலாமா?" என்றதும் புருவம் சுருக்கி அவனை வேற்று கிரக வாசியை போல பார்த்து வைத்தாள் இஷாரா. "நீ முன்ன பின்ன லேடிஸ் கூட கடைக்கு வந்திருக்கியா?" என்றாள்.

அருள் அசட்டையாக தோளை குலுக்கியவன் "எனக்கு என்ன கிரகமா.. வாழ்க்கையில எதெல்லாம் பார்க்க கூடாதுன்னு நெனச்சேனோ அத எல்லாம் வரிசையா பார்க்க வேண்டிய நிலைமை எனக்கு. சத்திய சோதனை.. அடுத்து என்ன?" என்றவனின் புலம்பலை கேட்டவளின் உதடுகள் தானாக வளைய "ஸ்டைலிஸ்ட் வர டைம் ஆகுமாம்.. வெயிட் பண்ண சொல்லிருக்காங்க" என்றதும் பெருமூச்சுடன் தலையை சிலுப்பியவன் " கண்டிப்பா வெயிட் பண்ணியே ஆகனுமா?" என்றதும் தோளை உயர்த்தினாள் இஷாரா.

"ஏம்மா பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?" என்று கேட்க "உனக்கு வேற ஆப்ஷன் இல்லப்பா" முகத்தை பாவமாக வைத்து கொண்டு பரிதாபம் காட்டி சொன்னாள் இஷாரா. அருள் " சரி.... வெயிட் பண்ணி தொலைக்கிறேன்.. எல்லாம் என் நேரம் " என்றான்.

அவன் இருக்கையில் அமர போக ஜூஸுடன் வந்த பெண் ஒருத்தி " மேம்.." என்று சிரித்த முகமாக ஏந்த "ஓஹ்..தேங்க்ஸ்" என்றபடி அதை கையில் வாங்கிக் கொண்டவள் அருளை எடுத்துக் கொள்ளுமாறு சைகை செய்தாள்.

அவனும் மறுக்காமல் வாங்கிக் கொள்ள "மனிஷா இஸ் ஆன் தி வே மேம் இஃப் யூ போர்ட்.. நியூ கலெக்ஷன்ஸ் டிஸ்பிளேல இருக்கு... ட்ரை பண்ணி பாருங்களேன்" என்று ஃபிரீயாக அட்வைஸை அள்ளித் தெளிக்க அது போதுமே என்று உடனே தயாரானாள் இஷாரா
மூன்று கண்ணாடி சுவர்களின் நடுவே உயிரற்ற மேனேக்கன் பொம்மைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்க இஷாராவின் கண்களில் இரசனை பொங்கி வழிந்தது "இது நல்லா இருக்குல்ல?" அவள் கண்களில் மின்னல் வெட்ட கேட்க "அய்ய.. என்ன டேஸ்ட் உனக்கு" ஓர கண்ணால் பார்த்தபடியே பதில் தந்தான் அருள்.

உதட்டை குவித்தவள் "அப்போ இது? " என்று காட்ட வெள்ளை நிற மெல்லிய துணியால் ஆன அந்த டாப்பை பார்த்ததும் முகத்தை சுளித்தான் அருள். அவனது முகத்தை பார்த்த மட்டில் புரிந்து கொண்டவள் "ஆன்... அது?" என்றாள்.

இஷாரா தேர்வு செய்த ஆடைகள் எதுவும் அவனது மனதை கவரவில்லை. தலையை ஆட்டி ஆட்டி மறுத்தவன் அவளது ரெத்த அழுத்தத்தை சோதித்து பார்த்தான். "ப்ச்.. என்ன நீ.. பார்க்குறத எல்லாம் வேணாங்குற. பார்டிட்டி இன்னிக்கு நைட்..நீ இப்டியே பண்ணிட்டு இருந்தா எத நான் சூஸ் பண்ணுவேன். இத்தன ட்ரெஸ்ல உனக்கு ஒன்னு கூடவா பிடிக்கல?" என்றவளின் முகம் வதங்கி போனது.

அவளது உடையை அவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதை இருவரும் மறந்திருக்க "நீ காட்டுற எதுவும் ட்ரெஸுங்குற லிஸ்டுலயே வராது. பொண்ணுங்க மார்டனா இருந்தா அழகு தான்.. நான் இல்லன்னு சொல்லல்ல.அதுக்காக கர்சீஃப ட்ரெஸ்ன்னு சொன்னா எப்டி ஏத்துக்க முடியும்" என்றான்.

" ஓஹ்.. அப்டியா உனக்கு பொண்ணுங்கல பத்தி அவ்ளோ தெரியுமா.. அப்போ நீயே செலக்ட் பண்ணு. நீ எத ஓகே பண்ணுறியோ அதையே நான் போட்டுக்குறேன்" என்றவள் அங்கிருந்த இருக்கையை நாடி சென்றவள் அவனை முறைப்படி அமர்ந்துகொள்ள அருள் "டீலா..பேச்சு மாற மாட்டியே?" என்று உரக்கக் கேட்க "பக்கா டீல்.." பற்களை கடித்தபடி சொல்ல சட்டையின் ஸ்லீவை மடித்து விட்டபடி அவளுக்கு உடையை தேர்வு செய்யும் முயற்சியில் தீவிரமாக இருங்கியிருந்தான் அருள்.

பத்து நிமிடங்கள் கடக்க "இது எப்டி இருக்கு" என்றபடி கையில் ஒரு சிவப்பு நிற பார்ட்டி வியர் கவுனுடன் அவள் முன் வந்து நின்றான் அருள். மேற் பகுதி மொத்தமும் வெள்ளை கற்கள் அழகாக கோர்க்கப்பட்டடிருக்க நீளமோ தரையை தொட்டு நிற்க அதன் நிறமும் நேர்த்தியும் இஷாராவின் மனதை நொடி பொழுதில் கவர்ந்தது.

சரியாக உள்ளே நுழைந்து மனிஷா " சோ.. உனக்கு என்ன விட பெட்டரா ஒரு ஸ்டைலிஸ்ட் கெடச்சுட்டார் போல இருக்கே?" என்றபடி உள்ளே நுழைய இருவரும் ஒரு சேர திரும்ப இஷாரா சற்றும் அலட்டிக் கொள்ளாமல் "ஃபாக்ட்" என்றபடி கண்களை உருட்டினாள்.
"யாராவது இருக்கீங்களா.. நான் உள்ள மாட்டிக்கிட்டேன். டோர ஓப்பன் பண்ணுங்க.. மூச்சு முட்டுது..ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க" என்றபடி கையில் அணிந்திருக்கும் வளையல் தேய்யும் அளவிற்கு தட்டி தீர்த்தவள் நா வரண்டு போக கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது. நெஞ்சை கைவைத்து பிடித்தபடி கீழே சரிந்து அமர்ந்தாள் காதம்பரி.

 
அச்சோ காதுவ யாராவது காப்பாத்துங்க. பூட்டுனவன் எவன்டா?. அருளூ நல்லாவே துணி செலக்ட்டு பண்ணறே.
 
அருமை... இஷி அருள் என்ன நடக்குது உங்களுக்குள்ள

ரெண்டு portion கதைக்கு இடையில்ஒரு பிரேக் விடுங்க இதை படிக்கும் போதே அது வருது...
 
Top