Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-17 திருமணம் வைபோகம்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
கண் மூடி கண் திறப்பதற்குள் மளமளவென்று எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

"பரம்பரை பரம்பரையாய் அரண்மனையில் தான் எங்க வம்சத்தில் கல்யாணம் நடத்துவாங்க.

நம்ம கல்யாணம் அரண்மனையில தான் நடத்த போறாங்க....

ஐப்பசி மாதத்தில் முதல் முகூர்த்தத்துலேயே கல்யாணம் முதல் நாள் நிச்சயத் தாம்பூலம்...

கல்யாணத்துக்கு உடனே வச்சுட்டாங்க..‌.. சொந்தக்காரன் உங்களுக்கு தகவல் அனுப்பியச்சு....

முக்கியமானவர்களை நேரில் போயி அழைக்கனும்.... இனி நாம அடிக்கடி சந்திக்க முடியாது...

போன்ல பேசிக்கலாம்.... கல்யாணம் முடிஞ்சதும்.... காலம் முழுவதும் நம்ம சேர்ந்து தான் இருக்கா போறோம்.

ஊர் மெச்சும் படி சீரும் சிறப்புமாய் கல்யாணத்தை நடத்தலாம்...‌‌. அப்பாவும் அத்தையும் பிரியப் படுறாங்க....

தேனி மாவட்டத்தில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வால் போஸ்டர்கள் ஓட்டணும் வட்டார பத்திரிக்கையாளர் திருமண அழைப்பிதழ் உள்ள அச்சடிக்கப்படும்....

எனக்கு தலைக்கு மேல நிறைய வேலை இருக்கு என்று பரபரப்பாய் பேசினால் அகத்தியன்.

"முதல்ல மேலே கவனிங்க... நேரத்துக்கு சாப்பிடுங்க... அடிக்கடி சந்திக்க முடியலை வருத்தப்படாதீங்க..... நான் உங்களை விட்டு எங்கே போயிடப் போறேன்?

"வெளில போகும்போது வரும்போது பத்திரமா நிதானமா கவனமா கார் ஓட்டுங்க..." என்றாள் கனி ஸ்ரீ.

"ஓகே டார்லிங்..... எப்படா கல்யாணம் நான் வரும்னு ஏக்கமா இருக்கு டார்லிங் என்று தழைத்த குரலில் அவன் கூறியதும்" ஸ்ரீ வின் முகம் செக்கச் சிவந்த வானம் சிவந்து போனது.

அவன் சொன்னது போல்.... அடுத்து வந்த ஒரு வாரத்தில்...‌ அவர்கள் சந்திக்க முடியவில்லை.

????????????????????????????????????

அந்த சுபயோக சுப தினத்தில்... கனி ஸ்ரீ வின் கழுத்தில் மங்கல நாண் சூட்டினான் அகத்தியன்.



எத்தனை எத்தனை பிரமுகர்கள்?

எத்தனை வி.ஐ.பி.க்கள்?

அப்பப்பா.... இது போன்ற திருமணத்தை.... இதற்கு முன் எங்கும் கண்டதில்லை என்றும் அனைவரும் விமர்சித்த வண்ணம் விமரிசையாக நடத்தி விட்டார் இசைஅமுதன்.

திருமணம் முடிந்ததும்.... அன்று சாயந்திரம் காரில் புறப்பட்டு விட்டாள் துர்கா.

"கல்யாணத்தை கண்குளிரப் பார்த்துவிட்டேன். கிளம்புகிறேன்... அவர்கள் போக சொல்றதுக்கு முன்னாடி... நான் புறப்படுவதற்கு மரியாதை இல்லையா? நா வரேன்.." என்றாள்.

"கொஞ்சம் பொறுங்க... இந்தாங்க பேங்க் பாஸ்புக்...! அஞ்சு லட்சம் டெபாசிட் பண்ணி இருக்கோம்

இல்லத்திற்கு அஞ்சு லட்சம் கட்டியாச்சு.... உங்களுக்குத் தேவைப்படும் மருந்து மாத்திரை உட்பட்ட எல்லா செலவையும் அவர்களே பார்ப்பாங்க...

பேங்கில் அந்த பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போட்டு இருக்கோம்.
ஸ்ரீ அடிக்கடி போன் பண்ணுவா... இந்தாங்க...." என்று நீட்டினாள் காந்த மணி.

சுண்டி போன முகத்துடன் பாஸ்புக் வாங்கிக்கொண்டு விடைபெற்றாள் துர்கா.

அந்தக் கார் பார்வையிலிருந்து மறையும் வரை.... விழிகள் கலங்கி பார்த்துக் கொண்டிருந்தாள் கனி ஸ்ரீ.

இன்னைக்கு தான் வாழ்க்கை தொடங்க போறீங்க... கண்கலங்க கூடாது செல்லம்...!

அவங்க எங்க போறாங்க ? நம்ம டிரஸ்ட் நடத்துற இல்லத்துக்கு தானே?"

அவளது உச்சந்தலை வருடி விட்டு... உள்ளே அழைத்துப் போனாள் காந்தாமணி.

"எப்பேர்ப்பட்ட சொர்க்க வாழ்வு?

இப்படிப்பட்ட திருமணத்தை அவள் படங்கள் கூட கண்டதில்லை?

இது கனவா நினைவா ? என்று இன்னும் சந்தேகம் தலை தூக்கிய வண்ணம் இருக்கிறதே?

கடவுளே...! இந்த சந்தோஷம் எனக்கு கடைசிவரை நிலைக்கணும்...'

உள்ளுக்குள்ளே வேண்டிக் கொண்டாள் கனி ஸ்ரீ.

????????????????????????????????????????????????????????????

?முதலிரவு ?

டெல்லி சொம்பை கையில் ஏந்தி அன்னம் போல் நடந்து வந்தாளை... ஆசையாக எதிர்கொண்டான் அகத்தியன்.

செம்பை டேபிளில் வைத்து விட்டு... அவனது பாதம் தொட்டு பணிந்தால்.

அவனது பாதங்களில் சூடான கண்ணீர்த்துளிகள் பட்டதும்... திகைத்துப் போய் அவளை தூக்கி நிறுத்தினான்.

எதுக்கு போய் கண் கலங்குற கனி ஸ்ரீ?"

இது... ஆனந்தக் கண்ணீர் அகத்தியன்..! ஒரு நாட்டியக்காரி க்கு எப்பேர்பட்ட வாழ்க்கை தந்து இருக்கீங்க..."

"நாட்டியத் தாரகை என்ன சொல்லு...! நீ பேசுறத பார்த்தா... நித்தமும் சதா ஆனந்த கண்ணீர் விட்டு இருப்பியா? நோ.... டார்லிங்...! கன்ட்ரோல் யுவர் செல்ப்...! எமோஷனல் ஆகாதே என்னால தாங்கிக்க முடியல டா...! ஐ லவ் யூ டார்லிங்...!"

"ஓகே... நான் நீங்க சொன்னபடியே நடந்துக்குறேன்... அகத்தியன்... உங்க மனசு நோகும்படி என்னைக்கும் நான் நடந்துக்க மாட்டேன்.."

புறங்கையால் கண்ணீரை துடைத்துவிட்டு புன்னகைத்தாள்.

முத்துப் பல்வரிசை பளிச்சென்று மின்னி.... அவள் அழகை பன்மடங்காக்கியது.

"முத்து முத்தாய் சிரிப்பிற்கு பாடம் வேண்டுமா...?

முத்தமிழே... முக்கனியே... மோக வண்ணமே!"

மலர்ந்த முகத்துடன் அவளை அளவெடுத்த படி இரண்டு வரி பாடினான்....

ஆஹா... கிளாசிக்! ரொம்ப பிடித்தமான பாடல் அற்புதமா பாடுறீங்க அகத்தியன்...! ஐ லவ் யூ சோ மச்...! என்றாள் கனி ஸ்ரீ.

"எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்...
ஒரு இரவினிலே... முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? இது பூவாடை வீசி வர பூத்த பருவமா...? ""

அழகாய் பாடினார்

என்ன அகத்தியன் இது? அன்னைக்கு பேசின மாதிரி இன்னிக்கும் மறைய போறதை பத்தி பாடுறீங்க?

இனிமே அந்த வார்த்தை உங்க வாயிலேருந்து வரக் கூடாது.

நான் தீர்க்க சுமங்கலியா கண்ணை மூடுவேன் அத்தை மாதிரி... அதுதான் என் பிரார்த்தனை...!

உங்களுக்கு ஓன்ணுன்னா.... நான் தாங்குவேன் மாட்டேன் அகத்தியன்....! பட்டுன்னு என் உயிர் பிரிஞ்சுடும்."

அட.... என்னது இது? ரெண்டு பேரும் மாறி மாறி போறதைப் பத்தி பேசிட்டு இருக்கோம்....? சந்தோஷம் தாங்காமல் தத்து பித்து உளறிக் கொண்டிருக்கும் இல்ல?"

இருவரும் 'களுக்' என்று சிரித்து விட்டானர்.

சிரிக்கும் போது உன்னோட அழகு பன்மடங்காகிடுது. அதனால் சதா சிரித்த முகத்துடன் நீ இருக்கணும் கனி ஸ்ரீ...! என்று இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவனுக்கு பிடித்தமான மனோ ரஞ்சிதம் மலர்களைத் தொடுத்து பாரமாய் சூட்டிக் கொண்டு இருந்தாள்.

அந்த வாசனையில் கிறங்கி... தோள்பட்டையில் முகம் புதைத்தான். அவளது தளிர்க்கரங்கள் இரண்டும் அவனது கழுத்தில் மாலை ஆக்கினார்.

அதன்பிறகு இருவரும் பின்பு சந்தோஷத்தில் இனிதாக வாழ்க்கை தொடங்கினார்கள்.

இனி விதியின் விளையாட்டு ஆரம்பம்.

? எல்லாருக்கும் சாரி சின்ன அப்டேட் போட்டதுக்கு . கல்யாணம் சிம்பிளா முடிச்சு சென்னை யாரும் கொடுக்க வேண்டாம் என்னால முடிஞ்ச அளவுக்கு கொண்டு வந்து இருக்கேன் நான் என்னால முடியல என் நிலைமை அப்படி புரிஞ்சிப்பீங்க நினைக்கிறேன்?

?கூடிய சீக்கிரம் சந்தோஷமான விஷயத்தை சொல்லுமே அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ?
 
Top