Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-16(சில நிபந்தனைகளை)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
இன்று பண்ணை வீட்டில் இருந்தவரை.... நெஞ்சு கொள்ளா பூரிப்புடன் இருந்தாள் கனி ஸ்ரீ.

அந்த காந்த மணி அம்மா என்னை பார்த்து என்ன சொல்ல போறாங்க?

அந்தம்மா பேசும் நேரத்தில்... அகத்தியின் அருகில் இருந்தால் தேவலாம் போல் இருக்கிறது ?

அகத்தியின்னை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்னிடம் பேச அந்தம்மா பிரியப்படவில்லை என்று தெரிகிறது? ஏன்? எதற்கு?

என்னிடம் தனிமையில் பேச என்ன இருக்கிறது ?

பேசும் போது.... பெரிய ஜமீந்தார் அருகில் இருப்பாரோ?

பீடிகை பலமா இருக்கிறதே ? பயத்தில் நடுக்கமாய் இருக்கிறதே?

எஸ்டேட் குளிரில் அவளுக்கு வியர்த்தது போனது. செல்போன் ஒலித்தது.

"ஹலோ...!"

"ஹலோ... நான் காந்த மணி பேசுறேன்..."

"வணக்கம் அம்மா...! சொல்லுங்கம்மா..." பவ்யமாக பேசினாள்.

"அரண்மனைக்கு கார்லே வந்துடறியா ? உங்க அம்மா‌.... அது உங்க அம்மா தானே?"

"இல்ல... அவங்க என் பெரியம்மா".

"பெரியம்மான்னா?"

"அவங்களோட தங்கச்சி பொண்ணு தான் நான் பிறந்ததும் எங்க அம்மா இறந்தும் டால்... இவங்க எடுத்து வளர்த்திருக்காங்க...."

ஒ....! ஒகே... உங்க பெரியம்மாவையும் கூட்டிட்டு வா... நான் பேச வேண்டியது இருக்கு.

"சரிங்கம்மா.... நாங்க உடனே புறப்பட்டு வருரோம்" துர்கா விடம் விஷயத்தை சொல்லி காரில் அழைத்துப் போனாள்.

துர்காவுக்கு வாயெல்லாம் பல் தான்....

உன்னோட அழகும் கலைத்திறனும் உனக்கு அதிர்ஷ்டம் வாழ்வு கிடைக்கும் நான் எப்பவே யூகித்தேன்.

நான் ஆசைப்பட்டது நடக்கப் போகுது... நீ ஆசைப்பட்டாது... போல் உனக்கு சமுதாய அங்கீகாரம் கிடைக்கிறது....

என்னதான் இளைய ஜமீன்தார் ஆகப் போறா... முதல்லே.‌‌... இந்த விஷயத்தை எங்க அக்கா
ஞானகுமாரிக்கு போன் பண்ணி சொல்லணும்..."

"அம்மா போதும் கொஞ்சம் அடக்கி வாசி...! நீ அங்கே வந்து வாயைத் திறக்காமல் இருந்தால் நல்லது..! காந்த மணி அம்மா கிட்ட இந்த மாதிரி தத்துபித்து என்று ஏடாகூடமாக பேசியதை... நான் சொல்லிட்டேன்...

இந்தப் குலத்துல பிறந்துட்டு... அவங்களை பேஸ் பண்ணவே... உள்ளுறை வெட்கமா இருக்கு... நானே பயந்து இருக்கிறேன்... நீ வேற...

அவளது குரலில் இல்ல தோன்றிய கடுமையும் எரிச்சலும் பார்த்துவிட்டு துர்கா அமைதியாக பயணித்தால்.

அரண்மனைக்குச் சென்றதும்.... ஒரு வேலைக்காரி அவர்கள் ஹாலில் மறுகோடியில் இருந்த அறைக்கு கூட்டி கொண்டு போனாள்.

இவர்கள் அறைக்குள் நுழைந்ததும் கதவைச் சாற்றி விட்டு அவள் வெளியேறி விட்டாள்.

"உட்காருங்க."

காந்தி மணி, துர்காவை பார்த்த பார்வையில் அருவருப்பும் வெறுப்பும் மண்டிக்கிடந்தது.

இது பாரம்பரியமான ஜமீன் வம்சம் ...! எங்க அண்ணி அன்புக்கொடி வெள்ளிமலை ஜமீன்தாராக மூத்த மகள்.... இந்த ஜமீனுக்கு தனி கௌரவம் அந்தஸ்து இருக்கு...

எங்க அண்ணியோட அண்ணன் மகளைத் தான் அகத்தியன்க்கு கட்டி வைக்கலாம்னு இருந்தோம்.

அவன் கனி ஸ்ரீ ஆசைப்பட்டால் உள்ள சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டை போட கூடாதுன்னு எங்க அண்ணா சம்மதித்திருக்க

அது சம்மதித்து பெரிய விஷயம்...! பெத்த பிள்ளைக்காக அவர் இறங்கி வந்து இருக்காரு...‌

அதே மாதிரி.... நீங்களும் நடந்துக்கணும்....

உங்க பரம்பரை எப்படிப்பட்டது என்று எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பரம்பரையில் இருந்து வந்த பொண்ணு.... அரண்மனைக்கும் மருமகள் ஆயிட்டான்னு...‌ காதுபட பேசுற போறாங்க....

கனி ஸ்ரீ பொருத்தவரை உத்தமமான பொண்ணு நாங்க நம்புறோம்.

அவ இந்த வீட்டு மருமகள்... அவளோட கௌரவம் எக்காரணம் கொண்டும் ஃபியூச்சர் குறையக்கூடாது.

கல்யாணத்துக்கு நீங்க மட்டும் வரலாம். அவளை வளர்த்து இருக்கீங்க.... அவளை மனதார வாழ்த்தி விட்டுப் போங்க... உங்க சொந்த பந்தங்க .....உறவுக்காரங்க யாரும் வரக்கூடாது.

உங்களுக்குப் ஒரு கணிசமான தொகை தர்றோம் . எங்க ஜமீன் பல முதியோர் இல்லங்களை நடுத்திட்டு வருது..‌‌..

ஆதரவற்ற முதியோர்களுக்கு தனி இல்லம்... பணம் கட்டி சேர்க்கிறவங்களுக்கு தனி இல்லம் அங்கங்கே இருக்கு...

உங்களுக்கு இன்னும் சில லட்சங்கள் கட்டிடறோம். நீங்க தேனில் இருக்கிற இல்லத்தில் சேர்ந்திருக்கலாம்.

ராணி மாதிரி உங்களை கவனிச்சுப்பாங்க... நீங்க இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கணும்.

ஒத்துக்கிட்டா..... வர முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சுக்கலாம்.

துர்கா அதிர்ந்து போய்விட்டாள்.

கனி ஸ்ரீ வுக்கு அவமானமாய் இருந்தது இப்படி நடக்கும் என்று ஓரளவு எதிர்பார்த்து தான்...!

பெரிய இடம் இப்படி எதிர்த்து பேசுவாள் துர்கா? வளர்த்த மகள் அவளுக்கு சாதகமா இல்லை....
இந்த லட்சணத்தில் எப்படி வாதாட முடியும்?

வேறு வழி இல்லை....

சம்மதித்து தலையாட்டி ஒதுங்கிப் போனாலாவது.... ஏதோ கணிசமான தொகையும், முதியோர் இல்லத்தில் இடம் கிடைக்கும்.

வாயைத் திறந்தால்.... மொத்தத்துக்கும் நஷ்டப்பட்டு நிற்க வேண்டியது தான்...

என் மக கனி ஸ்ரீ நல்லா இருந்தா போதும் நான் நீங்க சொன்னபடியே நடந்துக்குறேன் என்று கூறியபடி நீலிக் கண்ணீர் வடித்தாள்.

பொண்ணோட ஞாபகம் வந்துவிட்டது என்று கிளம்பி இங்க வந்து விட வேண்டாம்... எப்பயாவது ஸ்ரீ உங்களை வந்து பார்ப்பார்... அப்பப்போ அவளே போன் பண்ணவா... சரியா?

சரிங்கம்மா...‌

கனி ஸ்ரீவிக்கு , காந்த மணி சொல்வதிலிருந்து நியாயம் புரிந்தது.

இந்த அரண்மனைக்கு மருமகள் ஆயிட்டா ஒட்டுமொத்த உறவும் விட்டுட்டு வரணும். தாய் வீட்டைப் பத்தியே நினைத்துக்கூட பார்க்கக்கூடாது" என்று காந்தாமணி கூறியிருந்தாள்..
கனி ஸ்ரீ அதில் உடன்பாடு இருக்கிறது.

வளர்த்த பெரியம்மாவை அம்போ என்று தவிக்க விட.... அவளுக்கு மனம் இருக்காது.

ஆனால் காந்தாமணி, துர்காவை கைவிட சொல்லவில்லை.

கணிசமான தொகையை கையில் தந்து சில லட்சங்கள் இல்லத்துக்கு கட்டி.... ஜம்மென்று துர்காவை நிம்மதியாக காலம் கழிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப் போகிறாள் காந்த மணி.

இதை மறுப்பதற்கு யாருக்கும் மனம் வரும்?

என்ன ஸ்ரீ ? நான் சொல்வது சரிதானே? உனக்கு ஏதாச்சும் ஆட்சேபனை இருக்கா ?

"நீங்க சொல்றது சரிதாம்மா.... எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல..."

"ஒகே... நீ போய் ஹால்ல வெயிட் பண்ணு ஸ்ரீ....! நான் இவங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..."

கனி ஸ்ரீ துர்கா ஒரு தரம் ஏறிட்டுப் பார்த்துவிட்டு.... மவுனமாய் அறையை விட்டு வெளியேனாள்.

அந்த பரந்த ஹாலில் யாருமே இல்லை. மெல்ல சோபாவில் அமர்ந்தாள்.

20 நிமிடங்கள் நத்தையாய் நகர்ந்து.

பெட்டிப் பாம்பாய் அடங்கி, தலையைத் தொங்கப் போட்டபடி அறையை விட்டு வெளியே வந்தாள் துர்கா.

சச்சின் மலர்ந்த முகத்துடன் காந்தாமணி... உள்ளிருந்து வந்தாள்.

கனி ஸ்ரீ சட்டென்று எழுந்தாள்.

அப்போ நாங்க புறப்படலாமா ? அம்மா?

"உம்.... போயிட்டு வாங்க...."

இருவரும் காரில் அமர்ந்ததும் .... கனி ஸ்ரீ ஆர்வமாய் துர்காதேவி ஏறிட்டாள்.

டிரைவருக்கும் முன்... எதையும் கேட்பது நல்லது அல்ல என்று தோன்ற.... மௌனமாய் இருந்து விட்டாள்.

கெஸ்ட் ஹவுஸுக்கு வந்ததும்... துர்கா அருகில் வந்தாள்.

தழைந்த குரலில் "என்னம்மா பேசினீங்க?" என்று கேட்டாள்.

"உம்.... மண்ணாங்கட்டி...! எல்லாம் என் தலைவிதி.... நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்.... எதைப்பற்றியும் என்கிட்ட கேக்காத."

வெடுக்கென்று கூறினால் துர்கா.

"சரி... கேட்கலை..."

தன் அறைக்குள் புகுந்து கதவை சாத்த போனாள் கனி ஸ்ரீ.

"இதோ பாரு.... அந்த காண்டாமணி சர்வாதிகாரி மாதிரி நடந்துக்குறா.... அரண்மனை வாழ்வு கிடைத்தது பெரிய ஒரேடியா சந்தோஷப்படாத.....

அந்த காந்தமணி உன்னை ஆட்டிப்படைக்க போகிறா.... மாமியார் இல்லாத பொழுது இவர் தீர்த்து வைத்து விடுவாள் போல இருக்கு..‌‌..

தாலி கழுத்தில் எறினதும்... அந்த காந்தமணியை அரண்மனையை விட்டு துரத்தியடிக்கப் பாரு... இல்லன்னா.... அவ உன்ன மேயச் சுட்டுப் போயிருவா..... உன் புருஷனை கைக்குள்ள போட்டுக்கிட்டு முதல்ல அவளை விரட்டி அடி... அப்பதான் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும என்றால் துர்கா.

நிறுத்தறியா ? இந்த மாதிரி துர்போதனையைக் கேட்கறதுக்கே எனக்கு நாராசமா இருக்கு. காந்தமணி அம்மா... அகத்தியினனா தூக்கி வளர்த்தாங்க....

எனக்கு அம்மா ஸ்தானம்....! அவங்க இன்னைக்கு பேசினது நடந்துக்கிட்டடது எல்லாம் நியாயமாத்தான் எனக்குப் படுது....

அவங்களை துரத்தியடின்னு பேசுறியே உன்னோட பியூட்டி எடுத்து பல லட்சங்கள் செலவு செஞ்சு இல்லத்துக்கு சேர்க்கப் போறாங்க...‌

நீ அங்க ராணி மாதிரி ஜம்முனு இருக்காம்னு சொன்னாங்க.... நீ என்னடான்னா.... நன்றி துளிகூட இல்லாம.... அவர்களை விரட்டியடித்து உபதேசம் பண்ற....

சே! உன் காத்து போடாமலேயே இருக்கிறது எவ்வளவு நல்லது.... காந்தி காந்த மணியம்மா சமயோஜிதமாக நன்மைக்கு யோசித்து பண்ணிருக்காங்க...

காலத்துக்கும் நான் அவங்களுக்கு விசுவாசத்தோடு இருப்பேன்....

உன் கிட்ட போய் அக்கறையா பேச வந்தேன் பாரு.... என் புத்தியை செருப்பால அடிக்கணும்.

நீ இதுகாலம் வரை என்னை சேத்துல அமுக்க தான் பார்த்த... ஆனா காந்தாமணி அம்மா... நெல் முனை அளவு கூட எனக்கு கவுரம் பங்கம் வந்து விடக்கூடாதுன்னு.. எவ்வளவோ யோசித்திருக்காங்க...

நிஜமாகவே இனிமே எனக்கு அவங்க தான் அம்மா....!

படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள் கனி ஸ்ரீ.

? துர்கா முதியோர் இல்லத்திற்கு செல்வார் ??
? அந்த இருபது நிமிடம் என்ன நடந்தது? ?
 
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
Top