Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-13 (காதல் வெளிப்படுத்துதல்)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அந்த அக்னி பரீட்சையில் வெற்றிகரமாகத் ஏறிவிட்டால் கனி ஸ்ரீ.

ஆனால் வேறு அக்னிகுண்டத்தில் அவளைத் தள்ளிவிட துடித்துக்கொண்டிருந்தது விதி....!

மறுநாள் காலை:

காலையில் 6 மணிக்கு கெஸ்ட் ஹவுஸில் இருந்து தொலைபேசி மூலம்‌.... கனி ஸ்ரீ விடம் பேசினான் அகத்தியன்.

ஸ்ரீ காலத்துல நாங்க வந்து வந்து வந்துடுவேன். தயாரா இரு....! காபி டீ எதுவும் சாப்பிடலையே?

இல்ல சாப்பிடல.... எ... எங்கே போறோம் சார்?

சார்னு கூப்பிட்ட..... வந்து தலையில கொட்டு வைப்பேன். கிட்டத்தட்ட நம்ம கல்யாணத்துக்கு அப்பா சம்மதிச்சாச்சு தெரியுமா ?

மை காட் ....!நிஜமாவா? மேடைல நீங்க திடீர்னு அப்படி பண்ணுவீங்க நான் சத்தியமா எதிர்பார்க்கல..‌‌..

சபை ஜனங்கள் மத்தியில்...... அதுவும் பெரிய ஜமீன்தார் கண்ணெதிரே ...... உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.

"இதற்கான காரணத்தை நேர்ல சொல்றேன் ஹாஸ்பிடலுக்கு மாஸ்டர் செக்கப் பண்ணப் போறோம். தண்ணி கூட குடிக்காத. .... எங்க அத்தையோட ஹாஸ்பிடலுக்கு நாம்ப போறோம்...."

"நான் எதுக்கு அங்கே?"

இதே கேள்வி தான் நான் அத்தை கிட்ட கேட்டேன். கனி ஸ்ரீ இந்த வீட்டு மருமக... குடும்பத்துல அவளும் ஒருத்தி அவளோட ஹெல்த் நல்லபடியாக இருக்கான்னு செக் பண்ணி பாக்குறேன் நல்ல தானே மக்குப் பயலே? ன்னு பார்த்துகேட்டாங்க தெரியுமா?"

"நிஜமாவா?"

"உன் தலையில அடிச்சு சத்தியம் பண்ணாத நம்புவியா?"

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...."

"எனக்கும் தான் .... சரி.....சரி! சீக்கிரமாக ரெடியாகு..... நம்ம நேர்ல பேசிக்கலாம்...."

ரிசீவரை மறுமுனையில் வைத்துவிட்டான் அகத்தியன். ஸ்ரீ மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருந்தாள்.

கடவுளே! அகத்தியன் என்ன கல்யாணம் செய்து கொள்ள போகிறாரா?

இவர் காதலுடன் உருகி உருகி பேசும்போதெல்லாம் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள பார்க்கிறார் என்று சந்தோஷப்பட்டேன் ?

இவர் ஆத்மார்த்தமான காதலை நேசத்தை பிரியத்தை புரிந்து கொள்ளாமல் சந்தேகப்பட்டு விட்டேனே?

ஒரு உத்தமர் போய் நான் சந்தேகப்பட்டேன்?

பெரிய ஜமீன்தார் கிட்டத்தட்ட சம்மதித்து விட்டாராமே?

அது எப்படி ? இந்தக் குலத்தில் பிறந்த பெண்ணை.... ஜமீன் வம்சத்துக்கும் மருமகளாக சம்மதித்தார்?

சாதன பட்டவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்?

இவர் பெருந்தன்மையுடன் என்னை மருமகளாக ஏற்க சம்மதம் தந்திருக்கிறார்.

எப்படி? என்ன காரணம்?

அகத்தியன்.... ஒரே பையன் அல்லவா?

அன்பின் மகன் விருப்பத்திற்கு தடை சொல்லாமல் அவரது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.....

இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்? அவரை தெய்வமாய் மதித்துப் போற்றி.... காலம் முடிசூடும் சேவை செய்ய வேண்டும்.....

அகத்தியன்! ஐ லவ் யூ அகத்தியன்...! ஒரு நாட்டியக்காரி க்கு இவ்வளோ பெரிய வாழ்க்கை தரப் போகிறீர்களே?

உங்களுக்கு பாதி பூஜை கோடி முறை செய்தாலும் என் மனம் நிம்மதி பெறும் அகத்தியன்.

அவளது விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

சொன்னதுபோல் சிறுது நேரத்தில் அகத்தியன் வந்துவிட்டார்.

அவனை கார் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.

முன்பக்க கதவு திறந்து விட்டான்.

அமைதியாவை ஏறிக்கொண்டாள்.

வாசல் வரை வந்து பார்த்த துர்காவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

நேற்றுக்கு மேடையில்.... திடீரென அகத்தியன் தனது கழுத்தில் இருந்த செயினை கனி ஸ்ரீவுக்கு போட்டு விட்டதும்.... சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் விட்டாள் ‌

சபை ஜனங்கள் முன்னாடி.... பெத்த தகப்பன் எதிரிலே இளைய ஜமீன்தார் அவளை அரவணைத்துக் கொண்டார்?

பரவாயில்லை! என் மக.... விவரமா தான் அவரை வளைச்சுப் போட்டு இருக்காளே ? என்று பெருமிதப்பட்டுக் கொண்டாள்.

இதைப்பற்றி அவளிடம் பேசுவதற்கு பயமாக இருந்தது.

காரில் கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்பி வரும்போது.... கனி ஸ்ரீவின் முகத்தை ஏக்கத்திற்கும் சோகத்திற்கும் இடையில் சிக்கி தவித்தாள்.‌

மகளிடம் எதாவது கேட்டாள்..... கோபத்தில் திட்டி விட்டால் என்ன செய்வது? என்று அமைதியாக இருந்தாள் துர்கா.

விடிந்தும் விடியாத மாக இதை ஜமீன்தாரை கார் ஓட்டிக் கொண்டு வந்ததையும்....
முன்பக்கத்தில் அவருக்கு அருகே ஜோடியாய் கனி ஸ்ரீ அமர்ந்து போவதும் பார்த்தவளுக்கு..... மனம் பொங்கிப் பூரித்து விட்டது.

சாலையில் இரு பக்கமும் பச்சை பசேலென்று இருந்தது வேடிக்கை பார்த்தபடியே வந்த கனி ஸ்ரீ.

என்ன கனி ஸ்ரீ? ஒன்னும் பேச மாட்டிக்கிற என்றவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அந்த விசாலமான விழிகளில் கண்ணீர் தளும்பி நின்றது பார்த்துவிட்டு துணுக்குற்றான் அகத்தியன்.

என்ன ஆச்சு? ஏன் கண் கலங்கி இருக்கு? வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு கேட்டான் அகத்தியன்.

நான் ஒரு சாதாரண டான்ஸ்... அதுவும் எங்க குலத்தில் பிறந்த பெண்களுக்கு..... சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது இல்லை....

அப்படிப்பட்ட பரம்பரையில் வந்த எனக்கு... மனைவி என்கிற அந்தஸ்தை அதுவும் இளைய ஜமீன்தார்ரோட மனைவி என்கிறது என்கிறது கௌரவத்தை தரப் போகிறீர்களே?

எப்பேர்ப்பட்ட மனசு உங்களுக்கு? உங்க அன்பை காதலை நான் உள்ளுக்குள்ளே சந்தேகப்பட்டேன் சாரி...!

"என்னென்ன சந்தேகப்பட்ட? தெளிவா சொல்லு!"

"இல்ல...... என்னை..... கீப்பா வச்சுக்க பிரிய படறீங்கன்னு..." வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.

"சே...! இப்ப என்ன எடை போட்டுட்டியே?"

புன்னகைத்தபடி வண்டியை எடுத்தான் அகத்தியன்.

என்மேல் உங்களுக்கு கோபம் வரவில்லையா?

"என்னோட கனி ஸ்ரீ மேல எனக்கு அளவு கடந்த காதல்.... அதனால கோபம் வரல..."

என்ன மன்னிச்சிடுங்க அகத்தியன்....!

"எ.....என்ன சொன்ன?"

"என்ன மன்னிச்சிடுங்க ன்னு சொன்னேன்...."

"வேறு ஏதோ காதுல விழுந்தா மாதிரி இருந்துச்சு?"

"ஓ... உங்க பேர் சொல்லிட்டேன் என்னையும் அறியாமல்..."

அவள் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.

"அது காதல் தந்த உரிமை.... உரிமை வந்ததும் அழகாய் பேர சொல்லிட்டே.... பிடிச்சிருக்கு... நீ உரிமையா "அகத்தியன்"னு தனிமை கூப்பிடனும் அதான் எனக்கு பிடிக்கும்...."

"லவ் யூ அகத்தியன்.....! என்ன மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க....

இந்தக் குலத்தில் பிறந்தாலும்.... நான் இன்னைக்கு வர நெருப்பாக தான் இருக்கிறேன்.... அதே நம்புகிறீர்களா அகத்தியன்?"

என்ன நம்பலைன்னா.... நான் என்னையே நம்பலைன்னு அர்த்தம்....!

என் கனி ஸ்ரீ எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவள் எனக்குத் தெரியும்.

"அ.. க.. த்..தி..ய..ன்."

உணர்ச்சிப் பெருக்கில் தேம்பி அழுதவளை.... இழுத்து அணைத்துக் கொண்டான்.

காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு.... அவளது கண்ணீரை துடைத்து உச்சிமுகர்ந்து கன்னத்தில் இதழ் பதித்தான்.

"சபை ஜனங்கள் மத்தியில் அப்படி நடந்துகிட்டது உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்னு நீ சொன்னியே?"

"ஆமா..... சொன்னேன். அதற்கான காரணத்தை நேர்ல சொல்றேன் னு சொன்னீங்களே?"

ஆர்வமாய் அவளது முகத்தில் ஊன்றிப் பார்த்தால்.

வேதனை துயர் இனி நான் சாகியேனே....
பெரும் கல்லோ...?

அந்த மணம் கணிந்துருகாதோ? ன்னு .... பிரிவு துயரால் காவிய நாயகி எப்படி எல்லாம் அல்லல் படுகிறாய் என்ற உணர்வு பூர்வமாய் நவரசத்தோட அபிநயிச்சே?

அவ்வளவுதான்.... என்னால தாங்க முடியல... அதோட எவனோ ஒருத்தன் மேடையேறி... உனக்கு சன்மானம் தரேன்னு முரண்டு பண்ணினான்.

நான் கொஞ்சம் பொசசிவ்(possive) டைப்....! என் கனி ஸ்ரீ..... எனக்கு மட்டும்தான் சொந்தம்னு பகிரங்கமா எல்லோருக்கும் புரிய வைக்கணும்னு தோணுச்சு.... அப்படியே நம் காதலும் அவங்க வெளிப்படையா புரிஞ்சு கட்டும்னு.... துணிந்து தான்... அப்படி பண்ணினேன்.

"நம் காதல் என்ன சொல்றீங்களே? நான் ஓப்பனா எதையும் உங்ககிட்ட சொல்லலையே? அப்புறம் எப்படி நான் உங்களை லவ் பண்றேன்னு.... புரிஞ்சுக்கிட்டீங்க?"

நீ ஓப்பனா சொல்லாட்டியும்.... உன் முகம் எனக்கு காட்டிக் கொடுத்துடுச்சு கனி ஸ்ரீ....!

உன் முகம் இருக்கே? அது கண்ணாடி மாதிரி உலகத்தில் என்ன இருக்கும்னு தெளிவா காட்டிடுச்சு.....

நவரசங்கள் நாட்டியத்தில் அழகை வெளிப்படுத்த முகம்.... அதே சமயத்தில் மனசுல என்ன இருக்கோ? பளிங்குக் கண்ணாடி மாதிரி அப்பட்டமாக வெளிப்படுத்திடுச்சு....

கோடியில ஒருத்தருக்கு தான்.... இந்த மாதிரி முகம் அமையும். கள்ளம், கபடம், சூது, வாது, பொறாமை, அதை பிரதிபலிக்கிறது பளிங்கு கண்ணாடி முகம்....!

அவள் முகத்தைத் தனது இரு கைகளாலும் பொக்கிஷமாய் ஏந்தினான்.

மிக மிருதுவாய் அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.

"கொடை வள்ளல், அதீத கலை ரசனை, கண்ணியம், நேர்மை ஆளை எடை போடுவதில் ஆகாய சூரர், நினைத்ததை சாதிக்கணும்கிற வைராக்கியம், பிடிவாதம், பெருந்தன்மை, கலைக்கும், கலைஞர்களுக்கும் காட்ட மரியாதை இந்த பணிவு பண்பு ,ஒரு துளிகூட பந்தா இல்லாத பங்கு..... இன்னும் எத்தனையோ குணாதிசயங்கள் ஒளிச்சு வச்சு இருக்கீங்க அகத்தியன்? ஐ ரியலி லவ் யூ சோ மச்...!"

நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கேன்... என்ற படி அவனது தோளில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள்...

அவன் ஏதோ சொல்ல நினைத்த தருணத்தில்..‌ அவனது செல்போன் செல்லமாய் சிணுங்கியது.

"அட....! காந்த மணி அத்தை! ஹாஸ்பிடலுக்கு போகணும்னு மறந்தே போயிட்டேன்? சொல்லப் போனா..... எனக்கு நீ பக்கத்துல இருந்தா போதும் . இந்த உலகமே மறந்து விடும்..... என்றான்.

செல்போனை ஆன் செய்து.. "அத்தை இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நாங்க அங்கே இருப்போம்" என்று கூறிவிட்டு..... காரை வேகமாக கிளம்பினான்.

இனி என் வாழ்வில் கவலைக்கு இடம் இல்லை. காலம் மூச்சுவிடும் இனிமேல்..... வசந்தம் காலம் தான்....

இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

?விதி சிரித்தது.?

?அவளது வாழ்வில் சூறாவளி வீசி..... அவளை அலைக்கழித்து கவலைக் கடலில் முழகடிக்க சதி வலை மின்னியது.?
 
Top