Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-12 (வீதியின் விளையாட்டு -1)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
காந்தமணி அவசரமாய் மேடையை விட்டு இறங்கிச் சென்று விட்டாள்.

அனுஷ், இப்படி நடக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

தளர்ந்த நடையுடன் தலையைத் தொங்கப் போட்டபடி இறங்கி விட்டான்.

இசை அமுதன் அதிர்சி எழுந்து போய்விட்டார்.

கூட்டமா வாரம் செய்து கரவொலி எழுப்பி கொண்டிருந்தபோது. காந்த மணி அவர் அருகே வந்தாள்.

அ.... அண்ணா! மனசு திடமும் வச்சுக்கோங்க... உங்களுக்கு பி.பி.யும் சுகரும் இருக்கு.... ஷாக்லே இருந்து விடுபட்டு வாங்க அண்ணா என்று ஆறுதலாய் பேசியவர் கரத்தை பற்றினாள்.

அவர் தன் தம்பியின் கையை ஆறுதலாய் பிடித்துக் கொண்டு... மௌனமாய் அரண்மனைக்குள் சென்றுவிட்டார் இசை அமுதன்.

அவரை சோபாவில் அமர வைத்துவிட்டு அவசரமாய் தண்ணீரை கொண்டு வந்தாள் காந்த மணி.

"இந்தாங்க அண்ணா ! இந்த மாத்திரையை போட்டுக்கோங்க..."

அவரை வற்புறுத்தி மாத்திரை உட்கொள்ள வைத்தால் காந்தமணி.

அகத்தியன் இப்படிப் பண்ணிட்டானே வந்த மணி அவன் ஒரு தேயிலை பறிக்கிற பொண்ணை விரும்புறேன் சொன்னால் கூட நான் சந்தோஷப்பட்டுருப்பேன்.

நான் காசு பணத்தை பார்க்க மாட்டேன் என்று உனக்கே தெரியும் போயும் போயும் ஒரு நாட்டியக்காரி .... அதுவும் அந்த மாதிரி குலத்தில் பிறந்தவளை.... எப்படி மருமகளை ஏத்துக்க முடியும்?"

அந்தப் பொண்ண பார்த்தா.... ரொம்ப நல்ல டைப் தான் தெரியுது. எனக்கு என்னமோ....
இவ ஒரு நெருப்பா தான் இருந்திருப்பாள்னு தோணுது."

உன்னுடைய யூகம் சரியாக இருந்தா.... என்ன விட சந்தோஷப்படறவன் வேற யாரும் இருக்க முடியாது ஆனா...."

உங்க சந்தேகத்தை நிவர்த்தி பண்ண வைக்க என்னால முடியும் அண்ணா...!

அவ சுத்தமானவள் தான்.... நிருபனம் ஆயிட்டா...

காந்தாமணி பேசி முடிப்பதற்குள் அவசரமாக குறுக்கிட்டார் இசை அமுதன்.

"மணப் பூர்ணா சொல்கிறார் இந்த கருவியானது உடனே நடத்தி வச்சுடுவேன்....!"

ரொம்ப சந்தோஷம் அண்ணா! அகத்தியன் ஒரே பையன்... அவனோட ஆசைக்கு என்னைக்கும் நீங்க தடை போட்டதில்லை. கல்யாணத்தையும் அவன் விருப்பப்படி நடத்தி வச்சிருங்க அவன் ஆனந்தமாய் வாழ பார்த்து கடைசி காலத்துல நம்ம சந்தோஷப்படலாம் பாருங்க.... உங்க மனசு யாருக்கு வரும் ?"

"காந்தமணி ....! நீ அந்தப் பொண்ணை..."

அது ஏன் பொறுப்பு அண்ணா....! என்ன படிக்க வச்சுவரு நீங்க.... இந்த டாக்டர் தொழிலை தெய்வமாக நினைக்கிறேன்.

என் மனசாட்சிக்கு விரோதமில்லாம.... உண்மை எதுவோ.... அதை மறக்காம "உங்க கிட்ட சொல்லிடுவேன் . என்னை நம்புங்க அண்ணா....!"

பைத்தியம் மாதிரி பேசறே காந்த மணி ? உன்ன நம்பாம வேற யாரும் நம்ப போறேன் ? நீ டெஸ்ட் எடுக்கிற விஷயம். அகத்தியனுக்கு தெரிஞ்சா.'

"அவங்கிட்ட சாக்கு போக்கு சொல்லி... அவன் கிட்ட கனி ஸ்ரீ ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வர சொல்லுவேன் ‌

இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ள தான் இருக்கும்... அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க அண்ணா...!"

"அந்தப் பொண்ணுக்கும் தெரிந்துவிட கூடாது இல்லையா?"

"நிச்சயமா தெரியாது அண்ணா...."

"சரிம்மா நீ பாத்துக்கோ...."

நீண்ட பெருமூச்சுடன் இசை அமுதன் அவர் அறைக்கு சென்றார்.

என்ன அண்ணா? எதைப்பற்றியும் நினைத்து வீணா கவலைப்படாதீங்க. நடக்க எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து.... கடவுள் மேல் பாரத்தை போடுங்க.

நம்ம பையன் சந்தோசம் தான் முக்கியம் ?

அகத்தியின் எங்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்த பையன். அவளை சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டை போட கூடாதுன்னு தான்.... நான் பொறுத்து போறேன்...

உங்க அண்ணி அன்புக்கொடி எப்பேர்ப்பட்ட உத்தமி ? மகாலட்சுமி மாதிரி இந்த அரண்மனை வளைய வந்தா...

இதோ அரண்மனைக்கு... சே ! அந்தக் குலத்தில் பிறந்தவள் அடியெடுத்து வைக்கப் போற நினைச்சாலே.... மனசுக்கும் குமுறுது காந்த மணி....!

யாரையும் தப்பா நம்ம எடைபோடக்கூடாது அண்ணா! எனக்கு என்னமோ.... அந்த பொண்ணு பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது..."

அது எப்படி ? அவங்க குலத்து பரம்பரை பரம்பரையாக இந்த மாதிரி போல பொழுக்கும்போது.... இவ மட்டும் எப்படி ?"

இதற்கு மேல் பேசுவதற்கு நாவு கூறியவாறு.... பார்வையைத் திருப்பிக்கொண்டு சோகமாக எங்கேயோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார் இசைஅமுதன்.

நீங்க சொல்றது வாஸ்தவம்தான் அண்ணா ! ஆனா ....சேர்த்துல செந்தாமரை முளைக்கிறது நம்ம கண்கூடாக பார்த்து இருக்குமே ?

நத்தை சிப்பி வயித்துல நல்ல முத்து உருவாகும் நாம்ப கேள்விப்பட்டு இருக்குமே ?

"கோத்திரம் பார்த்து பொண்ணை எடு... பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற பழமொழி இருக்கே காந்த மணி ? "

இருக்கலாம் ஆனால்..... குலத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லங்கிறது என்னோட ஆணித்தரமான கருத்து....!

தேவதாசி குளத்தில்தான் மாதிரி இருந்தா அவ கற்பு நெறியோடு வாழ்ந்த சிலப்பதிகரம் சொல்லுதே ?

"அது குலத்தில் பிறந்த மணிமேகலை... துறவறம் பூண்டு மணிமேகலை காப்பியத்தில் காவிய நாயகி யாக ஆகியிருக்காளே?"

சரி நான் உன் வழிக்ககே வர்றேன்.. அவ உத்தமியா இருந்தா.... மொத்த மகிழ்ச்சி தான் ஆனா நா பயப்படுற மாதிரி இருந்துட்டா...? என்ன பண்றது ? நீயே சொல்லு காந்தி மணி....!

"ஒருவேளை அப்படி இருந்தா... கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒதுக்க வேண்டாம். இந்த விஷயமா நான் அகத்தியன் என்கிட்ட எடுத்துப் பேசி.... அவள வளர்ந்திட சொல்றேன் போதுமா?"

"அப்பாடா... இது போதும் காந்தமணி ...!"

நிம்மதிப் பெருமூச்சு கிட்டார் இசை அமுதன்.

அரண்மனை வளாகத்தில் இருந்து கார் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது.

"அந்தப் பொண்ண கார்ல அனுப்பி வச்சுட்டான் போலிருக்கு அகத்தியன் வந்துட்டு இருக்கான்..."

மெல்ல முனுமுனுத்தாள் காந்தாமணி.

கனி ஸ்ரீ வையும் அவளது குருப்பையும் அனுப்பி வைத்துவிட்டு அவசரமாய் அரண்மனைக்குள் வந்தான் அகத்தியன்.

அப்பா...! ஐ அயாம் சாரிப்பா... மேடையில என்னை அறியாமல் ஏமோஷனல் ( emotional) ஆயிட்டேன்.

நீங்க சொன்னது மேல்சபை அறிய என்னோட செயின் அவ கழுத்தில் போட்டேன்.

ஏதோ வேகம் என்ன செய்றான் கூட தெரியாம ? படக்குன்னு அப்படி பண்ணிட்டேன்.

கனி ஸ்ரீ நான் மனசார நேசிக்கிறேன் அப்பா...!

அவளோட கலைக்கு நான் அடிமையாகி விட்டேன் அவள் இல்லாத வாழ்க்கையை... என்னால நினைச்சு கூட பாக்க முடியல ஆசைக்கும் வேண்டும் நீங்க தடை போட்டதில்லை....

ப்ளீஸ் அப்பா எங்களை சேர்த்து வைங்கப்பா நீங்க மருத்துவ நான் இங்க வச்சு கண் காணாமல் போய் விடுவேன் என்னை மாய்ச்சுப்பேன். அந்த அளவுக்கு அவரை நான் காதலிக்கிறேன் அப்பா ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீன் டாடி (plz understand me daddy)

அவர் அருகில் நெருங்கி வந்து மன்றாடி அமர்ந்து தழுதழுத்த குரலில் பேசிவிட்டு.... அவரது கரங்களை இறுகப் பற்றியபடி... பரிதாபமாய் முகத்தை ஏறிட்டான்.

எனக்கு யோசிக்க ரெண்டு நாள் டைம் கொடு என்று கூறிவிட்டு இசைஅமுதன் சீரியசான முக பாவனையுடன் எழுந்து சென்றுவிட்டார்.

அத்தை..‌‌.! என்று ஏதோ பேச முயற்சித்தான்.

அப்பதான் சொல்லிட்டருல்ல ? கொஞ்சம் வெயிட் பண்ணு ! எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

தேங்க்ஸ் அத்தை... ! அப்பா என் கிட்ட கோபப்படாமல் இருக்கும்போதே நான் கெஸ் பண்ணிட்டேன்.

காந்த மணி அத்தை அவரை கன்வின்ஸ் பண்ணி வச்சிருக்காங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன்.

தேங்க்யூ சோ மச் அத்தை...!

என்னப்பா இது? நான் என்ன மூணாவது மனுஷியா ? தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்க ? சரி நான் சொல்ற படி கேட்பே இல்ல?"

"கண்டிப்பா அத்தை.... நான் என்ன செய்யணும்? "

"நாளைக்கு காலையில வெறும் வைத்த உடனே ஹாஸ்பிடலுக்கு வந்தோம் கூடவே அந்த கனி ஸ்ரீ யும் கூட்டிட்டு வரணும்."

"எதுக்கு அத்தை?"

"மாஸ்டர் செக்கப் பண்றது தான்... வருஷத்துக்கு ஒரு வாட்டி இந்த மாதிரி எல்லாம் டெஸ்ட் எடுத்து பார்ப்போம் மறந்துட்டியா?"

ஆமா அத்தை ? கனி ஸ்ரீ எதுக்கு?

"மக்கும்‌....! அவ இந்த வீட்டு மருமகளாக ஆகப் போறா .... அவளோட ஹீழ்த் கண்டிஷன் நல்லபடியா இருக்கணும் பாக்க வேணாமா? அவளும் இந்த வீட்டில் ஒருத்தி தானே?"

ஆஹா... தேங்க்ஸ் அத்தை! அதனால்தான் நாளைக்கு காலையில அவள கூட்டிட்டு வந்துடறேன் சந்தோஷமாய் காந்தம் அண்ணியின் முகத்தை வருடி விட்டு.... மாடிப்படிகளில் தாவி ஏறினான்.

நாளைக்கு உன்னோட கனி ஸ்ரீ க்கு அக்னி பரிட்சை நடக்கப் போகுது.

அதுல அவ பாஸாகி (pass) வரணும்?

கவலையுடன் தனக்குள் நினைத்துக் கொண்டாள் காந்த மணி.

? இந்த அக்னி பரிட்சை தேர்ச்சி பெருவாள ? ?

? விதியின் விளையாட்டு என்னவாக இருக்கும் ??

? இசையமுதம் திருமணத்திற்கு சம்மதிப்பாரா ??



 
Top