Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி Final

Advertisement

விஜயலட்சுமி கதைகள் எல்லாம் விரும்பி தேடி தேடி படிப்பேன்.அவரின் கதைகள் எல்லாம் இயல்பான நடையில் அருமையாக இருக்கும்.இந்த தொடரும் அப்படியே.வாழ்த்துக்கள் விஜிமா
 
👌👌👌
விஜி Ma'am இந்த கதைக்கு கொடுத்த ஹீரோ ஒரு ஒழுக்கமான, சரியாக சிந்தித்து செயல்படும், நேர்மையான, பெண்ணை மதிக்க விழையும் ஹீரோ.

இந்த விஷயம் தான் எனக்கு இந்த கதையை ஆர்வத்துடன் படிக்க, comment செய்ய and நிறைய விவாதம் செய்ய ஒரே driving factor.

கதையோட தொடக்கம் முதல் இறுதி வரை ஹர்ஷா மேல எங்கையுமே "இப்படி செஞ்சுட்டானே இவன்"-என்று எந்த வகையிலும் தோண வைக்கலை அவன்.
(ஒன்னுமே செய்யலையேன்னு தான் தோண வெச்சான் ஆனால் அதிலும் ஜோதிக்கு தான் முதலிடம் )

ஜோதி நல்ல காலம் author இதுவரை கொடுத்திருக்கும் 'சாத்விகா' characters போல படு மோசமா ஏமாறலை. அப்பப்போ தன்னை தன் விருப்பத்தை செயல்படுத்துவதில் உறுதியா தான் இருக்கா.
என்ன ஒன்னு final epi-ல final stage-ல ஹர்ஷாகிட்ட கேட்ட கேள்வியை கொஞ்சம் முன்னாடியே கேட்டு, அதுக்கு ஹர்ஷாவும் சரியா respond பண்ண, எங்களுக்கும் atleast நாலு romantic episodes கிடைச்சுருக்கும்.
(இது அவளோட தப்பில்லைனும்
author-ரோட சதின்னும் மனசுக்கு புரியுது.)

கமலேஷ் -ஜோதி நட்பு incomplete-ஆ விடப்பட்ட feel. அதையும் கொஞ்சமா சீர்படுத்தி I mean அப்படி சில conversations அமைச்சு காமிச்சுருக்கலாம் என்று தோணுது. ஆமாம் அவனுக்கு மேனகா தான் மாமியாரா இல்லை மாமியாரை பிடிக்காமல் பொண்ணை மாத்திட்டான்னா?
Agreed ji... நான் படிச்ச விஜி sis stories லயே ஹர்ஸ் மட்டும் தான் எந்த திருகு தாளமும் பண்ணாத ஒழுக்கமான ஹீரோ.....ஹீரோ பண்ற/பண்ண எல்லாத்தையும் சகிச்சுட்டு இல்லை மறந்திட்டு லவ் லைஃப் லீட் பண்ற நிலைமை ஹீரோயினுக்கு இல்லை....
இங்கு இரண்டு பேருமே சூழ்நிலையால் பெத்தவங்களால்,உறவுகளால் வஞ்சிக்கப்பட்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டவங்க....

நீங்க சொன்னது போல கமலேஷ் உடனான நட்பை கத்தரித்தது போல இல்லாம தொடர்ந்து இருக்கலாம்.....
அவனோட நட்பு உண்மையானது நேர்மையானது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது
 
Top