Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்- 13

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம் - 13

கார்த்திக் தன்னுடைய லேப்டாப்பில் பதினேழு வருஷத்துக்கு முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் புகைப்படங்களை எடுத்து மேலோட்டமாக பார்வையை பதித்தவன் அதிலிருந்த ஒரு பெண் பிள்ளையின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அவன் நெற்றி சுருங்கியது.


அடுத்த செகண்ட் அவன் முகத்தில் ஒரு ஆச்சரியம் பரவியது. எதையோ கண்டு பிடித்துவிட்ட தெளிவு அவன் முகத்தில் தோன்றியது . தன்னுடைய செல்போனை எடுத்து ஆன் பண்ணி எதையோ தேடின விரல்கள் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் தயங்கி நின்றன.


அவனையே பார்த்துக்கொண்டிருந்த வள்ளி என்னாச்சுங்கையா என்றாள் யோசனையோடு,

“அதுவா எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு உங்கள வீட்ல டிராப் பண்ணிட்டு நான் உடனே கிளம்பனும்…” என்றான் சற்று பதட்டத்துடன்.


"சரிங்க போகலாம்... உள்ளாற போன வினோத்தை காணுமே... நான் போய் பார்த்துட்டுட்டு வரேன்..."

இவள் பேசிக்கொண்டிருக்கும்போதே ட்ரையல் ரூம்மில் இருந்து வெளியில் வந்தான் வினோத்.


"ரெண்டுமே சரியா இருக்குங்க சார்...'


"ஓகே... அங்கே கொடு பில் போடுவாங்க."
பில் போடுவதற்குள் கார்த்திக் பொறுமையிழந்து குறுக்கு நெடுக்குமாக நடந்தபடி இருந்தான். சில நிமிடங்களில் பணத்தை கொடுத்து விட்டு துணியை வாங்கியவன் அவர்களை இருவரையும் அழைத்துக் கொண்டு துரித கதியில் வெளியில் வந்தான்.


வாகன நெருக்கடி நிறைந்த அந்த சாலையை தவிர்த்துவிட்டு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து காரை நிதானமாக செலுத்தினான். அவன் மனசெல்லாம் அந்த வாட்ஸ்அப்பில் வைக்கப்பட்டிருந்த 'டிபி' யை சுற்றியே வந்தது. அந்த 10 வயது குழந்தையின் முகம் தான் அவன் கண்ணில் நிலைத்திருந்தது. எங்கேயோ பார்த்திருக்கிறோம் எங்கே பார்த்தோம்? என்று மூளையை போட்டு கசக்க வேண்டிய அவசியமில்லை. அந்த முகம், பார்த்தவுடன் பளிச்சென்று நினைவுக்கு வரக்கூடிய முகம்.


அதுவும் கொஞ்ச நாட்களாக தான் அந்த டி பியில் இந்தப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி அதை பார்த்ததாலோ என்னவோ அந்த படம் இவன் மனதில் ஆழப் பதிந்திருந்தது. அதனால்தான் இவனால் உடனே கெஸ் பண்ண முடிந்தது. இதோடு ஒத்துப் போகிற அந்த முகம் அவனுக்கு நினைவுக்கு வந்து அந்தப் பெண் யார் என்று அடையாளப்படுத்தியும் காட்டியது.


உடனே கால் பண்ணி அந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள எண்ணிய தன்னுடைய மனதை அடக்கிக் கொண்டான். முதலில் இது சம்பந்தமாக சில விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகுதான் இந்த விஷயத்தை அவளிடம் சொல்லவேண்டும். எதையும் அரைகுறையாக அவசரப்பட்டு சொல்லிவிட்டு பின் வருத்தப்படக்கூடாது. ஒரு போலீஸ்காரனா இருந்துகிட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் பண்ணக்கூடாது. இந்த விஷயத்தை பொருத்தவரை ரொம்பவும் நிதானமாக செயல்பட வேண்டும் என்று எண்ணினான்.


சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பிறகு வீட்டில் வந்து இருவரையும் இறக்கி விட்டான்.


"அம்மாகிட்ட நான் போனில் பேசுறேன்னு சொல்லுங்க... அர்ஜெண்டா ஒரு இடத்துக்கு போகணும் அது எந்த இடம்னு வந்து சொல்றேன்னு சொல்லுங்க." என்று வள்ளியையும் வினோத்தையும் பார்த்து பொதுவாக சொல்லிவிட்டு உடனே காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பி சென்றார்.


அவன் போகும்போது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கால் பண்ணி சில விஷயங்களை கலெக்ட் பண்ணி உடனே அனுப்பும்படி கூறினான். அவன் கேட்ட மாதிரி அவரும் அனுப்பினார். அவர் அனுப்பிய செய்தி அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தது.


மற்றொரு நபருக்கு கால் பண்ணி ஒருவரின் முகவரியை கண்டுபிடிக்க சொன்னான். இவன் எதிர்ப்பார்த்த மாதிரியே அவரிடம் இருந்தும் சற்று நேரத்தில் பதில் வந்தது. அதில் அவன் தேடிய நபரின் முகவரி கிடைத்தது. இந்த முகவரிக்கு சென்று அந்த நம்பரை சந்தித்தால் எல்லாவற்றிற்கும் விடை கிடைத்துவிடும் குறிப்பாக பிரிந்தவர்கள் சேர்ந்து விடுவார்கள்.


எல்லாமே ஒரு மணி நேரத்தில் நடந்திருக்கிறது என்று எண்ணும் போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது தன்னைத்தானே ஒருமுறை தட்டிக்கொடுத்து கொண்டான் அப்பாடா ஒரு வழியா எல்லாமே முடிஞ்சிடுச்சு என்று பெருமூச்சு விட்டவன் காரை ஓரம்கட்டி ஒரு 5 மினிட்ஸ் ரிலாக்ஸ் பண்ணினான். பிறகு அந்த முகவரியை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு சென்ற போது பகல் மங்கி இருள் பரவத் தொடங்கியிருந்தது.


‘அன்புள்ளம்’ என்ற இந்த முதியோர் இல்லத்தை ஒருமுறை கூர்ந்து பார்த்தான். இங்குதான் ராகவன் இருக்கிறார். ஆனால் எந்த நிலையில் எப்படி இருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.


கார்த்திக் யோசனையோடு காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றான்.


“வணக்கம் சார்....” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து கரம் கூப்பி வணங்கினான் அந்த செக்யூரிட்டி.


என்னதான் மப்டியில் வந்தாலும் போலீஸ்காரன் என்பதை கண்டுபிடித்து விட்ட அந்த செக்யூரிட்டியை உள்ளுக்குள் பாராட்டினான்.


“சார் வணக்கம் சார் யாரை பார்க்கணும் சார்...?” மீண்டும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு தணிந்த குரலில் கேட்டான்.


“வணக்கம்....இந்த இல்லத்தோட மேனேஜரை பாக்கணும்.”


“வாங்க சார்... கூட்டிட்டு போறேன்.” என்று முன்னே நடந்த செக்யூரிட்டியை பின்தொடர்ந்தான் கார்த்திக்.


இரண்டு நிமிட நடைக்குப் பின் இடது புறமாக இரண்டாவது அறையைத் சுட்டிக்காட்டினான்.


“சார் மேனேஜர் இந்த அறையில் தான் இருக்காரு உள்ள போய் பாருங்க....”


கார்த்திக் திறந்திருந்த அறைக்கதவை ஒரு முறை தட்டிவிட்டு உள்ளே சென்றான். அங்கே சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் மிகவும் கம்பீரமாக அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

“சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன வேணாலும்...?” யாரையாவது இல்லத்துல சேர்க்க வந்திருக்கீங்களா?”

இல்லை...ஒரு சின்ன இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்திருக்கேன்? என்று வாய் வரை வந்த வார்த்தையை அடக்கினான்.


“ஆமாம்...சார் மிஸ்டர் ராகவன்னு இங்க யாராவது இருக்காங்களா அவருக்காகத்தான் நான் வந்திருக்கேன். அவரைக் கொஞ்சம் பார்க்க முடியுமா?”


“என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா ஏன்னா அந்த ராகவனே நான்தான் சார்...”


“அது நீங்க தானா....? நான் என்னமோ படுத்த படுக்கையாக இருப்பார் ரொம்ப வயசானவரா இருப்பான்னு நெனச்சேன். இவ்வளவு ஆரோக்கியமா இளமையா இருப்பாருன்னு யோசிக்கல ஓகே வந்த வேலை ரொம்ப சுலபமாயிடுச்சு...”


“சொல்லுங்க என்ன விஷயன்னு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் ஈசியா இருக்கும்...”


'எங்க அப்பாவ இந்த முதியோர் இல்லத்துல சேர்க்கலாம் என்ற ஐடியாவுலத்தான் வந்தேன். மந்திலி எவ்வளவு பே பண்ணனுன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்."


“முதல்ல முதியோர் இல்லன்னா என்ன என்பதை நீங்க தெரிஞ்சிக்கணும். அதன் பிறகும் நீங்க உங்க அப்பாவை இங்க சேர்க்கனுன்னு நினச்சீங்கன்னா நான் தாராளமா சேர்த்துக்குறேன்.”


என்றவர் தன் மனதில் நினைத்த கருத்துக்களை சொல்ல தொடங்கினார்.


“தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற பொன்மொழிகளை குழந்தை பருவத்திலேயே கற்பித்தாலும், மனைவி, குழந்தைகளுக்கு அடுத்த நிலையில் தான் பெற்றோர் மதிக்கப்படுகிறார்கள். நம் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அவர்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். தாயின் அன்பு கண்ணீராகவும், தந்தையின் அன்பு உழைப்பு, வியர்வையாகவும் வெளிப்படும். அந்தளவிற்கு கண் துஞ்சாது கூலிவேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர் ஏராளம். தாம் பெற்ற பிள்ளைகளை அன்பு, ஆசையுடன் வளர்க்கும் பெற்றோரை முதுமை காலத்தில் தவிக்க விடுவது நியாயம் தானா? மனிதன் முதுமையில் ஒரு குழந்தையாகவே மாறிவிடுகிறான். மனித மூளையானது 20 வயதிற்கு மேற்பட்டு அதன் செல்கள் குறைய துவங்குவதால் செயல்பாடு, கண்பார்வை, கேட்கும் திறன், ஞாபக சக்தி, நினைவாற்றலில் வித்தியாசம் தெரிய வரும். 70 வயதிற்கு மேற்பட்டவர்களின் செயல் குழந்தை தனமாகவே இருக்கும். முதுமையில் கட்டுப்பாடில்லாத உணவு, இயற்கை உபாதைகளை அடக்க முடியாத நிலை ஏற்படும்.


முதுமை பருவத்தை முழு மனிதனாக நினைக்காமல் குழந்தையாகவே அவர்களை நினைத்து பாவிக்க வேண்டும். இதற்கு பெற்றோர் மேல் அன்பும், பெருந்தன்மையும் தேவை. தெருவோர முதியோர்இன்றைய நவீன உலகில் தெருக்களில் ஆதரவற்று திரியும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகம். அழுக்கு உடையுடன், அலங்கோலமான உருவில் தள்ளாத வயதில் பசிமயக்கத்தோடு அலையும் முதியோர்களை அன்றாடம் நாம் பார்க்கிறோம். இவர்கள் பற்றி விசாரித்தால் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பர். காற்று, மழை, வெயில் என பாராமல் பிள்ளைகளுக்காக உழைத்தவர்கள் இன்று தெருவோரம் கிடக்கின்றனர்.


பெண்களுக்கு சொத்து உரிமை இல்லாத காலங்களில், ஆண் பிள்ளைகள் நிலபுலன்களை எடுத்துக்கொண்டு பெற்றோர்களை காக்க வேண்டும் என்ற நியதி இருந்தது. ஆண்,பெண் இருவருக்கும் சொத்துரிமை வந்த பின் பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்ற நிலை வந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்றவர்கள், யாரிடம் இருப்பது என்ற பிரச்னை வருவது உண்டு. வேலை வாங்கும் நோக்கில் ஆரோக்கியமான பெற்றோரை வீட்டில் வைத்துக்கொள்வது, பென்ஷன் வாங்கும் பெற்றோருக்கு பிள்ளைகளிடம் ஓரளவுக்கு மதிப்பு இருப்பது எல்லாம் சமூகத்தின் அவலம்.எந்த வருவாய், சொத்து இல்லாத பெற்றோர் சில ஆண்டில் மரணத்தை தழுவிவிடுகின்றனர். சிலர் பெற்றோரை புண்ணியஸ்தலங்களில் விட்டுவிட்டு வருவதும் உண்டு.


'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்'-என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, தமக்கும் தன் பிள்ளைகளால் இதே நிலை வரும் என்று அவர்கள் எண்ண வேண்டும்.மனித வாழ்வானது நீர்க்குமிழி போன்றது. இளமை, செல்வம், உறவுகள், உடமைகள் நிலையில்லாதது என்பதை உணர்ந்தோர் முதுமையானவர்களை கைவிட மாட்டார்கள்.கூட்டுக்குடும்பம்தமிழக மக்களின் வாழ்க்கை கட்டமைப்பு கூட்டுகுடும்பத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் இன்றைய தலைமுறையில் தனிக்குடித்தனத்தையே விரும்புகின்றனர். இதுபோன்ற குடும்பங்களில் நல்லது, கெட்டதை எடுத்து சொல்ல முதியோர் இருப்பதில்லை. துன்பம், தோல்வியை எதிர்கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போடவும் ஆற்றுப்படுத்தவும் பெரியோர்கள் வீட்டில் இல்லை.


இதனால் இளைய தலைமுறை விவாகரத்து, தற்கொலை முடிவை எடுக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் இல்லாத சூழலில் தான் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் எளிதாக நடக்கின்றன. அக்கால பாட்டி வைத்தியம் இக்கால குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. முதியோருடன் இருக்கும் குடும்பங்களில் அன்பு, பாசம், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், வாழ்க்கை அனுபவம் கிடைக்கும். ஆனால் பணி நிமித்தம், குழந்தைகள் கல்வி என்ற போர்வையில் கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கிசெல்கின்றனர். அப்படியே பெற்றோரை கிராமங்களில் விட்டு செல்கின்றனர். நகர வாழ்வில் உதவிக்கு யாரும் வருவதில்லை.


முதியோர் இல்லங்கள்''வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்,'' என்ற வரிகளில் நாகரிக காலத்தில் தோன்றிய அறிவியல் சொல் முதியோர் இல்லம். நகர வாழ்வில் ஏற்படும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டும், சொகுசான வாழ்வை தேடிக்கொண்டும், பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இயந்திர வாழ்வில் இதயமும் இரும்பாகிறது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள், சென்னையில் மட்டுமே 180 இல்லங்கள் இருக்கின்றன. முதியோர் வாழ தகுந்த நாடுகளில் நார்வே முதலிடம், இந்தியா 69 வது இடத்தில் இருக்கிறது. அனாதையாக உள்ள முதியோர்களுக்கு செய்யும் தொண்டு, கடவுளுக்கு செய்யும் தொண்டு என்பதை உணர்வோம்.


முடிந்தமட்டும் உங்க அப்பாவை வீட்டில் வைத்து பாராமரித்தால் நல்லா இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். நல்லா யோசிங்க நல்ல முடிவாய் எடுங்க. அதன் பிறகு உங்க விருப்பம்.”


“ரொம்ப தேங்க்ஸ் சார்... உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லனும். நான் எங்க அப்பாவை இங்க சேர்கிறதுக்காக கேட்க வரலை. ஒரு விசாரணைக் காக தான் இங்க வந்தேன். இந்தாங்க இது என்னுடைய ஐடி கார்டு.”


அவன் தன்னுடைய ஐடி கார்டை எடுத்து நீட்டினான் அதை கைகளில் வாங்கியவர் அடுத்த நிமிடமே எழுந்து நின்றார்.


“முதல்ல உட்காருங்க சார் ரிலாஸ்சா பேசலாம்னு அப்படிங்கறதுக்காகத்தான் உங்ககிட்ட உண்மையை சொல்லல, ஓகே ஸ்டெய்ட்டா விஷயத்துக்கு வரேன். பதினேழு வருஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு என்ன நடந்துச்சு அதாவது உங்க குடும்பத்தோட இந்தியாவுக்கு வந்தீங்களே அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு? உங்க பேமிலி எங்க உங்க பிள்ளைகள் எல்லாம் என்ன ஆனாங்க? அதப்பத்தி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அதைப் பத்தின டீடெயில்ஸ் எங்க கிட்ட இருக்கு ஆனா அது எந்த அளவுக்கு சரியா இருக்குன்னு தெரியல அதான் நேரடியாவே உங்களை பார்த்து விசாரிச்சுட்டு போகலான்னு வந்தேன்.”


அவர் முகம் இயல்பு நிலையிலிருந்து முற்றிலுமாக மாறியிருந்தது.


“அது...வந்து, அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் சார் அதை எதுக்கு திரும்பவும்....”


“இல்ல...இல்ல...நீங்க என்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது எல்லாத்தையும் சொல்லணும். நீங்க சொல்ல போற உண்மையிலிருந்து தான் ஒரு பெண்ணுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டாக போகுது...”


சற்று நேரம் யோசித்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராக நிமிர்ந்து அமர்ந்து தொண்டையை சரி செய்து கொண்டு பேசத் தொடங்கினார்.


நாகப்பட்டினம் கடற்கரை...காலை எட்டுமணி…!

உலகவரலாற்றில் காலத்துக்குகாலம் ஏதாவது ஒரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்ப்படுத்தவே செய்கிறது. அதாவது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது. கொள்ளைநோய்கள், சூறாவளிகள், நிலஅதிர்வுகள், எரிமலை வெடிப்புகள், கடும்மழை, கரைபுரண்டோடும் வெள்ளம், பெரும் வறட்சி இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட இயற்க்கை சீற்றங்களில் ரணத்தை பதித்துவிட்டு போனதுதான் சுனாமி என்னும் பேரலை.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துயரத்தின் எல்லைக்கு கொண்டு செல்லும் அந்த கோரசம்பவம் நடந்தேறியது. மனித குலம் காணாத இந்த பெரும் பேரழிவு பல்வேறு நாடுகளை சார்ந்த இரண்டு லட்சத்துக்கு மேற்ப்பட்டோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலை என்பதை வரலாற்றில் மட்டுமே படித்திருந்த மக்களுக்கு முதல் முறையாக அதை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்துவிட்டது இயற்கை.


தன் தாய்தந்தையரோடு கடற்க்கரை மண்ணில் கால் புதைய நடந்து சென்றது அந்த இரண்டு குழந்தைகளின் பாதங்களும். அழகான குடும்பம். ஐந்து வருடங்களாக தாய்மண்ணை மறந்திருந்த ராகவன் எட்டு மாத கர்ப்பிணியான தன் வடநாட்டு மனைவியுடன் சொந்த மண்ணுக்கு வந்திருந்தான். சொந்த ஊர் கானாடுகாத்தான். ஒரே ஒரு சித்தப்பாவை தவிர உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை அவரிடமே எல்லா சொத்துகளையும் ஒப்படைத்துவிட்டு கடல் தாண்டிப்போனவந்தான் பனிரெண்டு வருடத்திற்கு பிறகு தன் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளுடனும் திரும்பி வந்திருக்கிறான்.

வந்தவர்களை வரவேற்று வாழ இலையில் நீர் தெளித்து உணவு பரிமாறினார் சித்தி. நான் கடல் கடந்துப்போனாலும் உங்களை அடிக்கடி நினைத்துகொள்வேன் என்று தன் மனதில் உள்ளதை பகிர்ந்துகொண்டான் ராகவன். சொந்த மண்ணுக்கு வந்திருக்கோமே என்று மனைவி பிள்ளைகளுக்கும்கூட சந்தோஷம்.


“வீட்டு சாவியை கொடுங்க சித்தப்பா. இவர்களுக்கு வீட்டை காட்டிவிட்டு வருகிறேன்.” என்று இவன் கேட்ட பிறகுதான் அந்த விஷயமே தெரியவந்தது.


சித்தப்பா தன் பொண்ணு கல்யாணத்துக்காக இவன் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்த வீட்டை வித்துவிட்ட செய்தி. அதிர்ச்சியோடு எழுந்து நின்றான். சித்தப்பாவின் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்களில் இருந்து பொல பொல வென்று கண்ணீர் கொட்டியது. தமிழ் தெரியாத மனைவி ஏதோ பிரச்சனை என்பதை கொஞ்ச நஞ்சம் புரிந்துக்கொண்டு கணவனின் கரத்தை பற்றி இழுத்து வீட்டை விட்டு வெளியில் வந்தாள். மனைவியிடம் சித்தப்பாவின் துரோகத்தை எடுத்து சொன்னான். இனி இங்கு இருக்க வேண்டாம். எங்காவது போய் விடலாம் என்று அவன் மனைவி அவனை அங்கிருந்து அழைத்துவந்துவிட்டாள்.


போகும் இடம் தெரியாமல் திசையற்று நின்ற ராகவன் தன் பால்ய நண்பன் சரவணனின் நினைவு வரவே அவனுக்கு கால் பண்ணினான். சரவணன் ஊரில் இருக்கும் தன் மாமியார் வீட்டில் இருப்பதாகவும் இரண்டு நாட்களில் வந்துவிடுவதாகவும் எதிர் வீட்டில் சாவி இருக்கிறது வாங்கி திறந்து இரு என்று கூறினான். ராகவனிடம் குறைவாகத்தான் பணமிருந்தது. அதை வைத்துகோடு வெளியில் தங்குவது சிரமம் அதனால் நண்பனின் வீட்டில் தங்குவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.


அன்று மாலையே குடும்பத்துடன் நாகப்பட்டினத்துக்கு வந்து சேர்ந்தனர். இரவு உணவு ஓட்டலில் முடிந்துவிட காலை சன்பாத்துக்காக கடற்கரைக்கு வந்தனர். அப்போது மீன்களை சுமத்துக்கொண்டு ஒரு போட் வரவே பிள்ளைகள் இருவரையும் மணல் திட்டில் அமரவைத்துவிட்டு, மீன் வாங்குவதற்கு போட் அருகே சென்றனர். பெரிய வஞ்சரம் மீனை விலைபேசியபோது எடுத்துட்டு போங்க சார் இருக்குற காசை கொடுங்க என்றான் அந்த மீனவன். ஆயிரம் ரூபாய் மதிக்கதக்க மீனை வெறும் முண்ணூறு ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு கொடுத்த அந்த மீனவனின் பெயரை கேட்டார்கள்.


“என் பெயரா சார் என் பெயர் ராஜேந்திரன்.... ராசு ராசுன்னு கூட்டாளிங்க எல்லாம் கூப்பிடுவாங்க...உங்களுக்கு எத்தனை பிளைங்க சார்?”


“எனக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க...அதோ அங்க உட்கார்ந்திருக்குங்க பாருங்க அதுங்கதான்”


“எனக்கும் உங்க பொண்ணு மாதிரியே ஒரு பொண்ணு இருக்கு சார். சரி சார் ஊட்டுக்கு போய் நல்லா சமைச்சி சாப்பிடுங்க...”


“ஓகே...தேங்க்ஸ்...” என்று மீனை வாங்கிக்கொண்டு அவர்கள் திரும்பும் நேரம்தான் அந்த கோரவிபத்து இயற்கையின் பேரழிவு நடந்தேறியது.


பெரியபெண் ஷேலிக்கு பத்து வயது அவளுக்கு அடுத்த பெண் செலின்னுக்கு ஏழு வயது. மூன்றாவது எட்டுமாதம் வயிற்றில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள் ராகவனின் மனைவி ஷீலா.


ஷேலி தங்கையோடு விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென்று கடலில் பேரிரைச்சல் கேட்கவே அதிர்ந்துப்போய் பார்த்தார்கள். கடல் வான உயரத்துக்கு எழும்பி வந்தது. அதிர்ச்சியோடு இவள் கத்த புரியாத செலின் உடன் சேர்ந்து அலறினான். கண் இமைக்கும் நேரம் கை சொடக்கும் நேரம் என்பார்களே அதுபோல அந்த ஒரு நிமிடத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.


பார்த்துகொண்டிருக்கும் போதே அப்பா அம்மாவை அலைகள் அள்ளிக்கொண்டு போனது. அதை பார்த்த அடுத்த நொடி தங்கை மயங்கி சரிந்தாள். இவள் அலறி அடித்துக்கொண்டு முன்னோக்கி ஓட இவளை தடுத்து யாரோ கொத்தாக தூக்கி தூர விசினார்கள். மனித கூட்டங்கள் ஒருவர் மீது ஒருவர் என மிதித்துக்கொண்டு ஓடின. மலங்க மலங்க விழித்தவளுக்கு யாரோ ஒருவர் ஒரு தண்ணீர் பாட்டிலை திறந்து அவள் வாயில் ஊற்றினார்கள்.


ஒரு மினருகூட அவளால் விழுங்க முடியவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்று அவளுக்கு மட்டுமல்ல வேறு யாருக்குமே தெரியாது. கண் திறந்த ஷேலி கடல் திசையில் கைகாட்டி எதையோ சொல்ல முயன்றாள் அவளுக்கு பேச்சி வரவில்லை. மீண்டும் மீண்டும் பேச முயன்று முடியவில்லை என்பதை செய்கையால் சொல்லி கண்ணீர் வடித்தாள். தனக்கு பேச்சி வரவில்ல்லை என்பதி ஷேலிக்கு புரிந்துவிட்டது. அப்போது ஏதோ நினைவு வரவே பயத்துடன் கடலை சுட்டிக்காட்டி கண்ணீர் வடித்தாள். இறந்த ஒரு உடலை வைத்துகொண்டு வேறு யாரோ அழுதுக்கொண்டிருந்தார்கள்.


“ஐயோ...ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டாள். இவளின் பேச்சி அங்கிருந்த யாருக்கு புரியவில்லை. கதறியப்படி சுற்றிலும் ஓடித் தேடினாள். கண்ணீரோடு தங்கை நின்ற இடத்திற்கு ஓடிவந்தாள் அங்கு தங்கை செலினை காணவில்லை. இங்கும் அங்கும் ஓடி தேடிப்பார்த்து மண்ணில் புரண்டு அழுதாள். இவளின் மொழி புரியாவிட்டாலும் உணர்வை புரிந்துகொண்ட மக்கள் இவளுக்கு அன்புக்கரம் நீட்டினார்கள். உன் சொந்தத்தை கண்டுபிடித்துவிடலாம் கவலைப்படாதே என்று தைரியம் சொன்னார்கள். ஒரு சிறுவர் காப்பகத்தில் இரண்டு நாட்கள் இவளை தங்க வைத்தார்கள்.


மூன்றாவது நாள் இவளை அழைத்துசென்று சிதைந்த இரு உடல்களை காட்டி அடையாளம் சொல்ல சொன்னார்கள். அழுகிய நிலையில் அந்த உடலை பார்த்தவுடன் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. கண்டிப்பாக இது என் அப்பா அம்மா இல்லை என்று முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டாள். ஆனால் அதுதான் அவளுடைய அப்பா அம்மா என்பது அவளுக்கு ஊர்ஜிதமாகி இருக்க வேண்டும். அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த நிலையில் அவர்களை பார்க்க அவளுக்கு மனது ஒப்பவில்லை என்பதுதான் உண்மை.


தான் தங்கிருக்கும் காப்பகத்துக்கு வந்தவள் திடிரென்று மயங்கி சரிந்தாள். சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் ஏத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஐ சி யூ வில் சேர்க்கப்பட்டவளுக்கு உடனே ஆபரேசன் பண்ண வேண்டும் மூளையில் ரெத்த கசிவு என்றார்கள்.


அடுத்தநாள் ஆபரேசன் அவளுக்கு எ பி பாஸிட்டிவ் ரெத்தம் தேவைப்பட்டது. என்னிடம் வந்து ஒரு குழந்தைக்கு ரெத்தம் கொடுக்க முடியுமா? என்றார்கள்.


‘சரி' என்று உடனே ஓடினேன். அப்போதுதான் அது என் குழந்தை என்பதே எனக்கு தெரிந்தது.


“இது என் குழந்தை. என் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடுங்கன்னு கத்தினேன் கதறினேன். முதலில் ட்ரீட்மென்ட் முடியட்டும் பிறகு பார்க்கலாம் என்றார்கள். என் ரெத்தத்துக்கு என்னுடைய ரெத்தத்தை கொடுத்தேன். ஆபரேஷனும் நல்ல படியாக முடிந்தது. ஆனால் நினைவு திரும்பதான் இரண்டு நாட்கள் ஆனது. என்னை அழைத்துப்போய் அவள் அருகில் நிறுத்தினார்கள்.


“என்னை காட்டி இவரை தெரியுமா என்றார்கள்?” அவள் தெரியாது என்று தலையசைத்துவிட்டாள். அவளுக்கு தமிழ் சரியாக தெரியாது ஆங்கிலத்தில் கேளுங்கள் என்றேன். ஆங்கிலத்தில் கேட்டும் தெரியவே தெரியாது என்று ஒரேடியாக மறுத்துவிட்டாள்.”


“நான் அழுதுக்கொண்டே அந்த இடத்திலிருந்து வந்துவிட்டேன்.”


“ஏன் உங்க பொண்ணு வேணான்னு வந்துட்டீங்களா?”


“அப்படியெல்லாம் இல்லை எல்லாத்தையும் இழந்து நிற்கும்போது என் பொண்ணாவது கிடைச்சதேன்னு நான் சந்தோஷப்பட முடியல காரணம் ஆபரேசன் பண்ணியதில் பழசெல்லாம் மறந்து போய்விட்டதாம். அப்பா என்ற உணர்வு இல்லாவிட்டாலும் எனக்குன்னு இருக்குற ஒரே சொந்தம் அவள் மட்டும் தானே? அந்த இடத்துல எம் பொண்ணு நல்ல குடும்பத்துல வளரனும். அவள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தா போதுன்னுதான் தோணியது. மகள் சரியாகிற வரை ஆஸ்பத்திரி வாசலிலேதான் தவம் கிடந்தேன்.’


“அப்புறம்...?”


“அப்புறம்...அதுக்கு ஒரு நல்ல வாழ்கை கிடைத்த சந்தோஷத்தோட வேற இடத்துக்கு போயிட்டேன்...”

“உங்க பொண்ணு இப்ப எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?”


“தெரியும்....” என்று சொன்னவரை அதிர்ச்சியோடு ஏறிட்டான் கார்த்திக்.
 
Last edited:
அப்போ அபிநயா ராகவனின் மகளா?
ராகவன் பாவம்ப்பா
மனைவி இரண்டு பிள்ளைகள்ன்னு சுனாமியில் பறிகொடுத்துட்டு பெற்ற ஒரே மகளையும் விட்டு விலகியிருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்
 
Last edited:
Top