Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தானே என் பொன் வசந்தன்-நிறைவு பகுதி

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீ தானே என் பொன் வசந்தன்

நிறைவு பகுதி



ஒரு வருடம் கழித்து


அருண் அறையின் குறுக்கும் நெடுக்குமாக குட்டிபோட்ட பூனையைப் போல் பொறுமையின்றி நடந்து கொண்டிருந்தான் ..

“ஃபோன் பண்ணுறாளா பாரு ..?இங்க ஒருத்தன் லூசு மாதிரி வெயிட் பண்ணிட்டு இருக்கேன், அம்மையார் அப்படியே எஞ்சாய் பண்ணிகிட்டு இருக்காங்க..இருக்கட்டும் இந்த முறை நான் விட்டுத்தர மாட்டேன் அவதான் ஃபர்ஸ்ட் கால் பண்ணனும்..”என்று உள்ளுக்குள் சபதமெடுத்தான்.

“நிஜமாவே அபி இந்த ஒரு வாரத்துல என்னை சுத்தமா மறந்துட்டா..யாரு கண்டுபிடிச்சா இந்த சடங்கு கிடங்கு லாம்?ஒரு வாரமா அபியை பார்க்க விட மாட்டேங்குறாங்க..இவளும் ஒரு ஃபோன் கூட பண்ணமாட்டேங்குறா.நான் இங்க தவிக்கறது யாருக்காவது புரியுதா..?”என்று தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான் அருண்.

சிலநிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவன் அதற்குமேல் முடியாமல் ஃபோனை கையிலெடுத்து அபிக்கு டயல் செய்தான்..”நான் அவகூட சண்டைப் போட தான் கால் பண்றேன்..” என்று தன்னைப் பார்த்து சிரிக்கும் மனசாட்சியிடம் சப்பை கட்டு கட்டிவிட்டு..

மறுமுனையில் “அருண்..”என்று அபியின் குரல் கேட்டதும் ஐஸ்கட்டியாய் உருகிவிட்டான்.

“அபி..”என்று முகம் முழுவதும் பல்லாக திருப்பி அழைத்தான்.

அபி லேசாக இருமினாள்.

“என்ன ஆச்சு ஆர் யூ ஓகே..?”

“ம்ம்..ஐ யம் ஓகே..”
என்றாள் மெதுவாக

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“மெஹந்தி வச்சிட்டு இருக்கேன்..”

“என்னோட பேரு போடுவ தானே?”

“ம்ம்.. “
என்றாள் வெட்கத்துடன்..அவனுக்கு அவளது நாணியமுகம் மனதில் தோன்றி கிளர்ச்சியூட்டியது.

“எனக்கு உடனே வந்து பார்க்கனும் போல இருக்கு..”

“விளையாடாத அருண் வீடு முழுக்க சொந்தக்காரங்க இருக்காங்க…எல்லாம் நீ நாளைக்கு பார்த்துக்கோ..”
என்றாள் அவசரமாக..

“உங்க அப்பா ஒத்துக்கிட்டாலும் ,நீ ஒத்துக்க மாட்டியே ..ராட்சஸி..”

“சரி நீ எப்படி இருக்க..?”
என்று பேச்சை மாற்றினாள் அபி..

“உன்னை பார்க்காம எப்படி இருப்பேன் ..தாடி வைக்காத தேவதாஸ் மாதிரி இருக்கேன் .ஹே அழகி ஐ மிஸ்யூ டீ..”என்றான் காதலுடன்.

“ம்ம்..”

“என்னது ம்ம்ம் ஆ?அவ்வளவு தான் உன்னோட ஃபீலிங்க்ஸ் ஆ?இங்க ஒருத்தன் பிரிவு துயரத்துல தவிச்சிட்டு இருக்கேன் ,நீ என்னடான்னா வேண்டா வெறுப்பா பேசிட்டு இருக்க?”

“புரிஞ்சிக்கோ அருண்..”
என்று அவள் குரல் மன்றாடியாது..

சட்டென்று உணர்ந்தவனாக

“பக்கத்துல ஆட்கள் இருக்காங்களா?”என்று வினவினான்..

“ம்ம்..”

“சரி அப்ப நீ ஒன்னும் பேசாத நான் பேசுறதை மட்டும் கேளு..”

“நீ ஒன்னும் பேச வேண்டாம் நான் வைக்கறேன் பை..”


என்றாள் அபி

என்ன இது கெட்ட பழக்கம் ஃபோன் பேசிட்டு இருக்கும்போதே கட் பண்றது?வருங்கால ஹஸ்பண்ட் மா.. ஷோ சம் ரெஸ்பெக்ட்..”

“இப்ப என்ன பண்ண சொல்ற?”

“நீ என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்க சொல்லு..”

“ரெட்”

“ஆஹா ரெட் கலர்ல நீ செமையா இருப்பியே..எனக்கு இப்பவே உன்னை கிஸ் பண்ணனும் போல இருக்கு..”

“டேய் சும்மா இருடா… இங்க ஸ்பீக்கர் ஃபோன் ஆன்ல இருக்க ,நாம பேசுறதை ஒரு கும்பலே கேட்டுட்டு இருக்கு..”
என்றாள் அவசரமாக சங்டகத்தில் நெளிந்த படி

அதைத்தொடர்ந்து பலர் கிளுக்கி சிரிக்கும் சத்தம் கேட்டது.

“அடடே செம ரொமான்டிக் சீனா இருக்கே அருண்..”என்று பூர்ணாவின் கேலிக்குரல் கேட்ட து..

“ஆமா பூர்ணா ,ஒரே லவ்ஸ் தான்..”என்று அனுவின் குரலும் கேலியில் சேர்ந்துகொண்டது.

“அருண் மாமா நீங்க கன்டினியூ பண்ணுங்க நாங்க எதையும் கேக்கல..”என்று அவன் இதுவரையிலும் கேட்டறியா குரல் ஒன்று அவனை உறவு சொல்லி அழைத்து கலாய்த்தது.

அருண் அவமானத்தில் முகம் சிவந்து லைனை துண்டித்தான்..

“ச்ச பொண்ணுங்களா இவங்க..இப்படி கலாய்க்குறாங்க..?கடைசியில என்னை ஃபோன்லயும் பேசவிடாம பண்ணிடாங்களே..”என்று எரிச்சலானான்.

அருண் ஒருவருடம் பொறுமை காத்து, தொடர்ந்து அவனது பெற்றோரை கெஞ்சியும் கொஞ்சியும் பிடிவாதம் பிடித்தும் எப்படியோ அவர்கள் மனதை இளகச் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டான்.பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் சந்தோஷத்தைவிட வேறு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது ,அவர்களும் தங்களது வீராப்பிலிருந்து இறங்கி வந்திருந்தனர்..

ஆச்சரியத்தக்க விதத்தில் அருணின் அம்மாவும் ,அபியின் அம்மாவும் பள்ளித்தோழிகளாக இருந்தனர்.அது போதாதா இருவரும் சட்டென்று ராசி ஆவதற்கு,அப்பாக்களுக்கும் ஒருவரது இயல்பு மற்றவருக்கு பிடித்துவிடவே ,அதற்கு மேல் எந்த தடங்கலும் இல்லாமல் இருவரது திருமணமும் முடிவாகியது.

இதோ நாளை இருவருக்கும் திருமணம்,அபியின் சொந்த ஊரான கோயம்புத்தூரில் பெரிய திருமண மஹாலில் நடைபெறவிருந்தது.அருணின் குடும்பத்தினர் அந்த ஊரிலியேயே ஒரு பெரிய வீட்டை திருமணம் முடியும் வரை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.எல்லாம் நல்ல படியாகத் தான் முடிந்தது.அவன் குறைபட ஒன்றும் இல்லை ஒன்றைத் தவிர..ஏதோ சடங்கு சம்பிரதாயம் என்று ஒரு வாரமாக அபியை அவன் பார்க்க கூடாது என்றுவிட்டனர்.அவனுக்கு அவளை பார்க்கமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை.இருவரும் தினமும் பார்த்து பழகிவிட்டதால்.இந்த ஒரு வாரப் பிரிவைகூட அவனால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

“இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது யார் என்ன சொன்னாலும் சரி நான் இப்போது அபியை பார்த்தே தீருவேன்..” என்ற தீர்மானத்துடன்..

நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த விக்கியை எழுப்பி..

“டேய் எந்திரி டா.. காலங்காத்தால என்னடா தூக்கம் ?”

“டேய் நைட் ஃபுல்லா பொலம்பி என்னை தூங்கவிடாம செஞ்ச,இப்ப தான் கொஞ்சம் கண் அசந்தேன் அது உனக்கு பொறுக்கலையா?முடியலைடா உன்னோட சோக கீதத்த கேட்டு காதுல ரத்தம் வருதுடா..”

“இனிமேல் நோ சோக கீதம் ஒன்லி ஆக்ஷன் தான்..”
என்றான் அருண்.

“என்னடா பண்ணப்போற?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன் நீ மொதல்ல கிளம்பு..”

“இருடா குளிச்சிட்டு வறேன்..”

“பாடி ஸ்ப்ரே பண்ணிட்டு வாடா..”

“ப்ரஷ் ஆவது பண்ணிட்டு வரேன் டா..

“என்னமோ தினமும் பல்லு விலக்குறவன் மாதிரி பேசுற வாடா..”
என்று அவனை இழுத்துச் சென்றான் ..

வெளியே ஹாலில் அருணின் அம்மா ஒரு நகைப் பெட்டியை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார்.

அருண் வருவதை பார்த்தும் அவனை அழைத்தார்

“அருண் “

“என்ன மா ..பிரேக்ஃபாஸ்ட் ஆ..? எனக்கு வேணாம்..”
என்று சொல்லி கிளம்ப முயன்றவனைத் தடுத்து

“அதில்லைடா..இந்த நகையை பாரு ..அபிக்காக ஆர்டர் பண்ணது, இப்பதான் வந்தது..நல்லா இருக்கா பாரு..”என்று ஆர்வமாக அழைத்தார்.

“அம்மா நீங்க செலக்ட் பண்ணது நல்லா இல்லாம போகுமா?ரொம்ப நல்லா இருக்கு..நாளைக்கு அபி இந்த வைர மாலையில ஜொலிக்க போறா பாருங்க..”என்றான்..

அவர் முகம் பிரகாசமடைந்தது..

“சரி டா எங்க கிளம்பிடீங்க ?”என்றார் சந்தேகமாக..

“அது பார்லர்க்கு மா..உங்க மருமக மட்டும் ஜொலிச்சா போதுமா உங்க பையனும் பளபளப்பா இருக்க வேணாமா அதுக்கு தான் ..”

“சரி பார்த்து போயிட்டு சீக்கிரம் வாங்க ..விக்கி அவனை பார்த்துக்கோ..”
என்று மறைமுகமான மிரட்டலுடன் அவர்களை அனுப்பி வைத்தார்..

காரில் செல்லும் வழியில் “எப்படிடா உன்னோட அம்மா இப்படி மாறினாங்க?என்றான் விக்கி ஆச்சரியமாக

“அபி கூட பழகிட்டு அவளை யாருக்காவது பிடிக்காம போகுமா?என்னோட பேரன்ட்ஸ்க்கு அன்புன்னாலும் சரி வெறுப்புனாலும் சரி ரெண்டு எக்ஸ்டிரீம் தான் நடுவுலலாம் கிடையாது..”

“சரி இப்பவாவது சொல்லுடா எங்க போறோம் அம்மா கிட்ட சொன்ன பார்லர் கதைஎல்லாம் உண்மை மாதிரி தெரியலையே..?”என்றான் விக்கி..

பதிலாக கண்ணடித்து குறும்பாக் சிரித்தான் அருண்.

“டேய் உன்னோட முழியே சரி இல்லை, என்னை எதாவது பிரச்சனையில கோர்த்துவிட போறன்னு தோணுது..என்னை இறக்கிவிட்டுடு நான் நடந்தே சென்னைக்கு போய்க்கறேன்..” என்றான் விக்கி

“டேய் பொலம்பாதா வாடா..அப்படி உன்னை எதுலையும் மாட்டிவிட மாட்டேன்..”என்று கூறும் போதே வண்டி ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது..

“இந்த வீட்டை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே..ஐயோ இது அபி வீடு..டேய் இங்க எதுக்கு டா வந்த ,உங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னை லெஃப்ட் செவுல்லயே விடுவாரு டா..”

“அதுக்கு முன்னாடி என்னோட மாமனார் ரைட்டு செவுல்ல விடுவாரு வாங்கலாம் வா..”
என்று உள்ளே அழைத்துப்போனான்.

அருணை அங்கே கண்டதும் சற்று திகைத்துதான் போனார் அபியின் அப்பா…

அங்கே இருந்த பல உறவினரது புருவம் உயர்ந்தது.

என்னது மாப்பிள்ளை வந்திருக்காரு?என்ன விஷயமா இருக்கும்..?”என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

வாங்க மாப்பிள்ளை என்ன திடீர்ன்னு?”என்று வினவினார் தனது பதற்றத்தை மறைத்து.

“என்ன மாமா உள்ள கூப்பிட மாட்டீங்களா?வெளியவே நிக்க வச்சி பேசுறீங்க?”

“உள்ள வாங்க மாப்பிள்ளை..”
என்று அரை மனதாக அழைத்து சென்று அமரவைத்தார்...”அதற்குள் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கிறார் ..”என்ற செய்தி வீடு முழுவதும் பரவ ,அங்கங்கே மறைவிலிருந்து பல முகங்கள் எட்டி பார்த்தது..அருண் கண்களை வீடுமுழுவதும் ஓட்டினான் அவனது ஆசை முகம் மட்டும் தென்படவில்லை..

உள்ளே இருந்து அனுவின் கணவன் கார்த்திக் வந்தான்.

“என்ன அருண் ,திடீர்ன்னு வந்து கல்யாணவீட்டையே கலகலக்க வச்சிடீங்க?”

“ஐயோ அப்படிலாம் ஒன்னுமில்லை..என்னோட ஃப்ரெண்ட்ஸ் இன்னும் கொஞ்ச பேர் வருவாங்க போல இருக்கு ,அவங்களுக்கும் தங்கறதுக்கு இடம் அரேஞ்ச் பண்ணனும்..”

“பண்ணிடலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை,ஆனா இதை நீங்க ஃபோன்லயே சொல்லி இருக்கலாம்,இவ்வளவு தூரம் வரத்தேவையில்லை..”
என்றான் நமட்டு சிரிப்புடன் ..

முகம் லேசாக கன்றியபோதும் சமாளித்துக்கொண்டு..

“அப்புறம் நைட் டின்னர்ல ஐஸ்க்ரீம் வென்னிலா ஃப்ளேவரா?சாக்கோலேட் ஆ?”ஏன்று வாய்க்கு வந்ததை உளறினான்,

“அதெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஃபைனல் பண்ணி ஈவென்ட் மேனேஜ்மென்ட் காரங்ககிட்ட குடுத்தாச்சி அத்தான் ..ஒருவேளை மறந்துட்டீங்களோன்னு நியாபகப் படுத்தினேன்..”என்று குறுஞ்சிரிப்புடன் கூறினாள் அப்போது அங்கு வந்து சேர்ந்த அனு..

சட்டென்று பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து,

“அம்மா கோவிலுக்கு போயிருந்தாங்க ..குங்குமம் அபிகிட்ட கொடுக்கணும்..” என்றான்.அதை கையில் வாங்கிய அனு,”நான் வச்சிவிட்டுடறேன் அத்தான் நீங்க கவலைப் படாதீங்க..”என்றாள் சிரிப்பைஅடக்கிய குரலில்.

விக்கி அவனை முழங்கையால் லேசாக இடித்து,”டேய் இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு மரியாதை இல்லை,அவங்க அடிச்சி விரட்டுறதுக்குள்ள கிளம்பு “ என்றான்..

அருணும் அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியாமல், சோர்வுடன் கிளம்ப எத்தனித்த போது,

அபியின் அப்பா கார்த்தின் காதில் ஏதோ சொல்ல அவன் சரி என்று தலையாட்டினான் .

உள்ளே அபிக்கு பரபரப்பு தாங்கவில்லை,அருண் வந்திருக்கிறான் என்று தெரிந்ததிலிருந்து அவள் மனம் அவனை ஓடோடிப்போய் பார்க்கவேண்டும் என்று துடித்தது.. ஆனால் வீடு நிறைந்திருக்கும் உறவினர் முன்னே கல்யாணப் பெண் அவள் தானாக போய் நின்றால் நன்றாக இருக்காது ,அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ளவேண்டும், என்று எதிர்பார்ப்பார்கள்.அவள் பொறுமையின்றி தவித்துகொண்டிருக்கையில் கள்ளச்சிரிப்புடன் அனு அங்கே வந்து அவளை வா என்று அழைத்தாள்.

“எங்க?”

“உன் ஆள பார்க்கனும்ன்னா?பேசாம என் கூட வா..”
என்று சொல்ல மறுபேச்சின்றி, அவள் பின்னோடு சென்றாள் அபி ,

பெரிய வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளி தோட்ட வீடு போல் இருந்த அறைக்கு அழைத்துச்சென்றாள் அனு..

அங்கே ஏற்கனவே அருண் கார்த்திக்குடன் நின்றிருந்தான்.

அருணை ஏதோ பார்த்து பல வருடம் ஆனது போல அவளுக்கு கண்களில் நீர்முட்டியது..

“சரி சரி பேசுங்க ..உங்களுக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம்..” என்றுகூறினாள்அனு..

“அவங்க பேசுவாங்க நீ அவங்க டைம வேஸ்ட் பண்ணாம வா..”என்று கார்த்திக் அவளது கையைப்பற்றி அழைத்துப்போனான்...

அருணைப் பார்த்ததும் எங்கேயோ இருந்து நாணம் வந்து அவளைக்கவ்விக்கொள்ள,தலை கவிழ்ந்து நின்றாள். அருண் மெதுவாக நடந்து வந்து அவளைக் கடந்து சென்று பின் புறமாக நெருங்கி அவளை அடைகாக்கும் பறவைப்போல மறைத்துநின்று,காதோரம் குனிந்து “அபி..”என்றான்..

அவள் உடல் முழுவதும் பரவச அலை பாய்ந்தது சிலிர்க்க வைத்தது.

பின்னர் மருதாணி பூசிய அவள் கைகளை தன் கைகளில் பிடித்து உயர்த்திப் பார்த்தான்.

“ரொம்ப அழகா இருக்கு ..”என்று மீண்டும் காதோரம் கிசுகிசுத்தவன் ,

என்னோட பேரு எங்க இருக்கு பார்க்கலாம்..” என்று தேட த் தொடங்கினான் ..”A”..”R””என்று அவன் அடுக்கத் தொடங்க,சட்டென்று கையை இழுத்துக் கொண்டு விலகி நின்றாள்.

அருண் புதிராக அவளைப் பார்க்க

“இப்ப பார்க்காத..நாளைக்கு தான் பார்க்கனும் “என்றாள்.

“சரி உன் இஷ்டம் ஆனா அதை அப்படி தள்ளி நின்னுதான் சொல்லனுமா?பக்கத்துல இருந்தே சொல்லலாம்ல?”

“உன்னை யாரு இல்லாத கதையெல்லாம் சொல்லிகிட்டு இங்க வரசொன்னது? நீ போனதுக்கு அப்புறம் இங்க ஒரு பூகம்பமே வெடிக்கப் போகுது..”

“ஷ்ஷ்..அபி..இன்னிக்கு தான் நமக்கு லாஸ்ட் டே அஸ் லவ்வர்ஸ்,இதுக்கப்புறம் நாமே நினைச்சாலும் இந்த கணத்த திரும்ப கொண்டு வரமுடியாது, அதனால இதை ஒரு நல்ல நியாபகார்த்தமா மாத்தனும்ன்னு நினைச்சேன், அதான் யார் என்ன சொன்னாலும் பரவால்லன்னு கிளம்பி வந்துட்டேன்..”

“நீ சொல்றதை பார்த்தா..கல்யாணத்துக்கு அப்புறம் என்னை லவ் பண்ண மாட்டபோல..”
என்றாள் விளையாட்டாக..

“அதை நீயே பார்க்க தானே போற..”என்றாண் கண்களில் சவாலுடன்..

அவன் பார்வையில் நாணியவள்.

“சரி சரி டைம் ஆச்சு நீ கிளம்பு”என்றாள்

“அடிப்பாவி ,உன்னை பார்க்க ஏழு கடல்,ஏழு மலை தாண்டி வந்திருக்கேன் ,இப்படி விரட்டுற?”

“அதான் பார்த்துட்டல போ..”

“டெம்போலாம் வச்சி கடத்தி இருக்கோம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க மேடம் “

“என்ன வேனும் உனக்கு?”

“ஒரு கிஸ்..”

“ஹே விளையாடுறியா?மெஹந்திலாம் கலைஞ்சிடும்..”


உன்னை என்ன கையாலயா கிஸ் பண்ண சொன்னேன் ?”

“போடா நாளைக்கு குடுக்கறேன்..”

“நாளைக்கெல்லாம் உங்கிட்ட பர்மிஷன் யாரு கேக்க போறா?அதெல்லாம் இன்னியோட முடிஞ்சது..”

“முடியாது போடா..”

“சரி இங்க வா?”
என்று அழைத்தான்.

“எதுக்கு ?”என்று சந்தேகமாக கேட்டாள்.

“அட ஒன்னும் பண்ண மாட்டேன் வா மா?”

என்று அவளை அருகே அழைத்து ,தோளை சுற்றி தன் கைகளை மாலையாக்கி அவளைத் தனக்கு நெருக்கமாக நிறுத்திக்கொண்டான்..

“கொஞ்ச நேரம் இப்படியே இரு..”

அருண்..”என்றழைத்து அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

“ம்ம்..”

“என்னோட மருதாணி நல்லா சிவக்கனும்..”

“கண்டிப்பா சிவக்கும் இதுல உனக்கு என்ன சந்தேகம்?”

“மருதாணி எந்த அளவுக்கு சிவந்திருக்கோ அந்த அளவுக்கு வரப்போற ஹஸ்பண்ட் நம்ம மேல அன்பா இருப்பாங்களாம்..அனுக்கெல்லாம் நல்லா சிவந்திருந்தது தெரியுமா?எனக்கு அவளை விட அதிகமா சிவக்கனும் ,இல்லாட்டி மகனே நீ செத்த..”

“இது என்ன வம்பா போச்சி,நீ முன்னாடியே சொல்லி இருந்தா நான் மருதாணியோட கொஞ்சம் கேசரி கலர மிக்ஸ் பண்ணி இருப்பேனே..”


அவள் விளையாட்டாக முழங்கையைக்கொண்டு அவனது வயிற்றில் இடித்தாள்.

அருணுக்கு புரிந்தது,என்ன இருந்தாலும் அபிக்கு அனுவுடன் இந்த மறைமுக பனிப்போர் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று ..விளையாட்டுபோல் கூறினாலும் அவளது மனத்தின் சஞ்சலத்தை அறிந்து அதை போக்க எண்ணி..

“கவலைப்படாத ,நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு நீ உன் கையில பார்ப்ப..”என்று அவளுக்கு திடமூட்டினான் .

அபி விழியுயர்த்தி அவனைப்பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக்கொனடிருந்தான்.

இருவர் விழியும் கலக்க ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல அவளது முகம் நோக்கி குனிந்தான் ,சிவந்திருந்த அவள் மொட்டு இதழ்களை மென்மையாக முத்தமிட்டான்.

முதலில் சிற்றோடையாக சலசலத்த நதிநீர் வேகமெடுத்து அருவியாக வீழ்வது போல் இருவரது உணர்ச்சிகளும் பிரவாகமெடுத்து ஓடத்தொடங்கியது..அருண் அவளது இடையை ஒருகையால் வளைத்து தன்புறமாக இழுத்து மறுகையை அடந்த கேசத்தில் நுழைத்து தலையை வாகாக வளைத்த்து இன்னும் ஆழமாக அழுந்த முத்தமிட்டான்..அந்த உணர்வு பேரலையில் தக்கப்பட்டு அபி கால்கள் பலமிழந்து என்நேரமும் விழுந்து விடுவாள் போல தொய்ந்தாள்,அவளது நிலையை அறிந்த அருண் அபியின் உடல்எடை முழுவதையும் தாங்குவது போல் அவளைத் தன் மீது சாய்த்து ,உதட்டி கடித்து உள்நுழைய அனுமதி வேண்டினான் .அபி “ஆ..என்று லேசாக சினுங்கி அவனுக்கு தேவையான நுழைவுச்சீட்டை வழங்கினாள்.

அபி தன்னைமறந்து எங்கோ மூழ்கிய நிலையில் கையுயர்த்தி அவன் கன்னத்தைத் தொட,அந்த ஈர மருதாணியின் குளிர்ச்சியில் ஒருகணம் சிலிர்த்தவன்,

அபியை முழுவதுமாக தன் மீது படரவிட்டு அந்த அணுக்கமும் போதாமல் மேலும் அணைப்பை இறுக்கினான்.

ஈருடல் ஓருடலாய் பின்னியிருக்க ,இதழ்கள் இணைந்து அவர்கள் மெய்மறந்திருந்த தருணத்தில்

“ஷ்ஷ்..சாரி..”என்ற அவசர குரலும் வேகமாக மூச்சை உள்ளிழுக்கும் சத்தமும் இருவரையும் சுயநினைவிற்கு இழுத்துவர,நொடியில் விலகி நின்றனர்.

அனு இவர்களுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள்.

உணர்ச்சி பிரவாகத்திலிருந்து முழுவதுமாக மீளாத இருவரும் ஆழ்ந்தமூச்செடுத்து தங்களை சமனப்படுத்த முயன்றனர்.

“திரும்பலாமா?”என்றாள் அனு குறும்பாக..

“ம்ம்..ம்ம்..”என்று முணுமுணுத்தான் அருண்..

“உங்க அஞ்சு நிமிஷம் முடிஞ்சிடுச்சி அதை சொல்லதான் வந்தேன்.ஆனாலும் இப்படி எதிர்பார்க்கலை.”என்று சிரித்தாள்.

தர்மசங்கடமாக உணர்ந்த அருண்..கடைசியாக அபியின் மீது ஒரு பார்வையை செலுத்திவிட்டு மடமடவென்று வெளியேறினான்.

அபி அவனது முதுகையே வெறித்துபார்த்திருக்க.அனு

“அம்ம்ம ம்மா..வாட் ஏ ரொமான்டிக் கிஸ்?எனக்கே பொறாமையா இருக்கு அபி..”என்றாள்.

“அனு அடிவாங்க போற நீ,இப்படி தான் திறந்த வீட்ல ஏதோ நுழையற மாதிரி வர்றதா?”

“ஐயோ உன்னோட எக்ஸாம்பிளே தப்பு ,சிவ பூஜையில கரடின்னு தானே சொல்லனும்?

“போடி..”
என்று சிணுங்கலுடன் முகம் சிவந்தாள் அபி.

“ஆனாலும் கதவை பூட்டிக்கணும்ன்னு கூடவா தெரியாது?கல்யாணத்துக்கு அப்புறமாவது கதவை லாக் பண்ணிகோங்க.”. என்று மேலும் சீண்ட.அவளை அடிக்க கை ஓங்கினாள் அபி..

“அப்போது அவளது கையில் மருதாணி கலைந்திருப்பதைக் கண்ட அனு..ஹே அபி என்னடி மெஹந்தி கலைஞ்சிருக்கு?:என்று கேட்க

அபிக்கு சட்டென்று தான் அருணின் கன்னத்தைத் தொட்டது நினைவு வந்தது,

பரபரப்புற்று..”ஐய்யோ..அருண் முகத்துல அப்பிட்டேன் “

“அப்படியேவா போறாரு?அப்பா பார்த்தா அவ்வளவு தான்”

“ஹே அனு போய் சொல்லுடி..”
என்று அவசரப்படுத்தினாள் அபி

“நான் எப்படி டீ சொல்லுறது?நீ ஃபோன் பண்ணி சொல்லு..”என்றாள் அனு

“நான் ஃபோன் கொண்டுவரலையே”என்றாள் அழாக்குறையாக..

அருண்வெளியேவந்து அபியின் அப்பாவிடம்

“வரேன் மாமா..” என்றான்..

அவர் அவன் முகத்தை வினோதமாக பார்ப்பதைக் கண்டு,

“என்ன என் மூஞ்சியில எதாவது இருக்கா ?இப்படி பார்க்கறாரு?”என்று வியந்தான்..

அவன் கிளம்ப எத்தனித்தபோது,அவர் அவனைத்தடுத்து

மாப்பிள்ளை..இந்தாங்க துடைச்சிகோங்க..”என்று மேல் துண்டை எடுத்து நீட்டினார்..

அப்படியா அசடு வழியுது?”என்று சட்டென்று முகத்தில் கைவைத்துப் பார்த்தவன் .. பிசுபிசுவென்று இருந்ததை வேகமாக தேய்த்துஉதிர்த்துவிட்டு.அவரது பார்வையை தவிர்த்து விரைந்து வெளியேறினான் .

காரில் அமர்ந்து கண்ணாடியில் முகத்தைபார்தவனுடைய கன்னம்லேசாக சிவந்திருக்க அவன் முகமோ அதைவிட அதிகமாக வெட்கத்தில் சிவந்திருந்தது.

கல்யாண வைபோகம்

அருணும் அபியும் தங்கள் வாழ்வில் மிக முக்கியமான தருணத்தில் இருந்தனர்.உறவும் நட்பும் சூழ்ந்து வாழ்த்த ,அபியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டி அவளது மருதாணியில் சிவந்த கரத்தைப்பற்றி அக்னியை வலம்வரும் போது அவனுக்கு இந்த அற்புத தேவதை ,அழகிய நிலவு தன்னுடையவள் என்ற எண்ணத்தில் மனம் பூரிப்படைந்து சிறு கர்வமும் கொண்டான்..அவனது வாழ்வு அப்போது தான் முழுமையடைவதாக உணர்ந்தான்..

அபியின் இதயமோ விம்மி வெடித்து விடும் அளவிற்கு பெருமிதத்தில் திழைத்தது..அருண் அவளுடையவானகும் அந்த கணத்திற்காக தான் தான் இத்தனை காலமும் வாழ்ந்ததாகத் தோன்றியது.

பூந்தூரல்கள் தேடும் பாலையில்

அடித்து பொழியும் மாரியாய் வந்தாய்

நிறம் வெளுத்த மேகத்திடை கதிராய் புகுந்து

வான்வில்லாய் வண்ணங்கள் வரைந்தாய்

குட்டையாய் தேங்கிய மனதை குடைந்து

ஓடையாய் வழிநடத்தி சலசலக்க செய்தாய்

வேனில் அன்றி ஒரு பருவம் அறியாத

இப்பேதைக்கு வசந்தமே நிரந்தர பரிசாய் தந்தாய்

என் பொன் வசந்தனே..!!!




மேடையில்ம்அருணும் அபியும் அக்னி வலம் வருவதை வைத்த கண் எடுக்காமல் பார்த்த பூர்ணாவின் அருகில் வந்த விக்கி

“ஹே பூர்ணா..என்ன அவங்களை அப்படி பார்க்கற?”என்றான் ஆச்சரியமாக

“ விக்கி,அவங்க ரெண்டு பேரையும் பாரேன் எவ்வளவு பொருத்தமா இருக்காங்க..உருவத்துல மட்டும் இல்ல ,உள்ளத்துலையும்…அவங்களைப் பார்த்தா எனக்கும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் போல் இருக்கு..”

“அப்பாடா…இப்பவாது வழிக்கு வந்தியே..”

“என்ன வழிக்கு வந்தாங்க?”

“ஆதான் சொன்னியே ..லவ் பண்ணனும் கல்யாணம் பண்ணனும்ன்னு?”

“சொன்னேன் ஆனா அது உன்னைன்னு சொன்னனா?”
என்று அவள் திருப்பிக் கேட்க..

“அப்போ அது நான் இல்லையா ?”என்று ஏமாற்றத்துடன் அவன் முகம் திருப்பும் போது

“நீ இல்லைன்னும் சொல்லல?”என்று முடித்தான் பூர்ணா,,

“பூர்ணா ..!!”என்று அவன் கண்கள் விரிக்க ..

அவள் மொபைலில் “நீதானே..நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம் ..”என்ற பாடலை ஒலிக்கவிட ..அவன் இன்பமாய் அதிர்ந்து போனான்..

சுபம்​
 
Top