Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம் - 30

Advertisement

daisemaran

Well-known member
Member
“நீதான் எந்தன் அந்தாதி…!”
அத்தியாயம்-30

அபிநயா, வேழவேந்தனை பார்க்கப் சென்றதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதல் காரணம் அந்த நிகழ்ச்சிக்கு கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர் இவர்களுடன் இவளும் சென்றிருந்தபோது அந்த விபத்து நடந்ததால் கலெக்டர் அதை உடனடியாக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து இருந்தனர்.

இந்த விபத்து நடந்த அன்று இரவே எல்லா தொலைக்காட்சிகளிலும் இதை ஒளிபரப்பினார்கள் அடுத்த நாள் எல்லா செய்தித்தாள்களிலும் இந்த விபத்து பற்றின செய்தி தலைப்புச் செய்தியாகவே வந்தது. இப்படி இருக்கும்போது நேரடியாக இவள்அவனை சென்று பார்த்தால் அதையும் பத்திரிகைகளில் பிரகடனப்படுத்தி விடுவார்கள் என்பதற்காக தனிப்பட்ட முறையில் பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்தாள்.

இரண்டாவது விஷயம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள விரும்பினாள்.

"அம்மா யாரு வந்திருக்கா...? " மேலே இருந்து வேழவேந்தனின் குரல் கணீரென்று ஒலித்தது.

மேல் தளத்திற்கு செல்ல ஹாலில் இருந்து படி அமைத்திருந்தார்கள். அந்த வீட்டின் உள்ளே அமைப்பை பார்த்தவுடன் இவளுக்கு தன்னுடைய சென்னை வீட்டின் நினைவு வந்தது. அங்கும் மேல் தளத்திற்குச் செல்ல இதுபோன்ற போன்ற அமைப்பில் தான் கட்டியிருந்தார்கள்.

அவன் மேலிருந்து கேட்டது ஹாலில் அமர்ந்திருந்த இவளுச நன்றாக கேட்டது.

" நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்கள் தான்பா மேல கூட்டிட்டு வர்றேன்...!"

அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சற்று நேரத்தில் இரண்டு குழந்தைகளும் கீழே இறங்கி வந்தார்கள்.

அப்போதுதான் அபிநயா அந்த பிள்ளைகளை கவனித்தாள். இரண்டுமே ஒரே உயரத்தில் ஒரே வயதை ஒத்திருந்தது. இரட்டைப் பிள்ளைகள் என்பது அவர்களைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடிந்தது.

இவளை ஏதோ வேற்று கிரகவாசியை பார்ப்பதுபோல் அதுங்கள் இவளை பார்த்தது தான் அபிநயாவுக்கு சிரிப்பை வரவழைத்தது.

" இங்க வாங்க உங்க பேரு என்ன...?" என்று இவள் மெல்ல கேட்க இரண்டுமே இவளை சட்டை பண்ணாமல் பாட்டியிடம் சென்றது.

"ஆன்ட்டி கூப்பிடுறாங்க பாருங்க அவர்களுக்கு வணக்கம் சொல்லுங்க." என்று வேழவேந்தனின் அம்மா சொன்ன போது,

" எங்க ரெண்டு பேருக்குமே இவங்களை தெரியும். நாங்க இவங்களை முன்னாடியே பார்த்திருக்கிறோம்." என்று கோரசாக சொன்னார்கள்.

" அப்படியா விஷயம்.., ரெண்டுபேரும் இவங்களை எங்க பாத்தீங்க எப்ப பாத்தீங்க...?"

" நானும் டாடியும் மால்க்கு போனோம் இல்ல...பாட்டி அங்கதான் இவங்களை பார்த்தேன். என்று அந்த குட்டிப்பெண் சொல்ல, அவளை முந்திக்கொண்டு நான் இவர்களுடைய ஆபீஸ்லேயே போய் பார்த்தேன் டீ..." என்றான் அந்த குட்டி பையன்.

"அப்படியா..? அந்த விஷயம் எனக்குத் தெரியாதே!!. அப்போ ரெண்டு பேருக்குமே இவங்களை தெரியுமா?"

" ஓ...நல்லாவே தெரியும்.! எங்களுக்கும் தெரியும் எங்க டாடிக்கும் தெரியும். " என்று சொல்ல,

"ஆனா... இன்னும் நீங்க பேரை சொல்லவே இல்லையே?" என்றாள் அபிநயா.

"என் பேரு ஷானு, இவன் பேரு ஷியாம்..."

" ஓ... ஓகே... ஓகே.. ரெண்டு பேரோட பேரும் சூப்பரா இருக்கு..."

" தேங்க்ஸ் ஆன்டி... யார் வந்து இருக்கான்னு அப்பா பார்த்துட்டு வர சொன்னாரு இந்த ஆன்டியோட பேரு என்ன? ஆன்ட்டி உங்க பேர் என்னன்னு சொல்லுங்க...? என்றாள் அந்த குட்டி பெண் ஷானு.

" அவங்க பெயர் அபிநயா. அபிநயா வந்திருக்காங்கன்னு போய் சொல்லு போ..." என்றாள் வேழவேந்தனின் அம்மா.

குழந்தைகள் இருவரும் படியில் ஏறி மேலே செல்லும் வரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநயா.

"அபிநயா உன்கிட்ட நெறைய பேசனும்னு நினைக்கிறேன் ஆனா... இப்ப சூழ்நிலை சரியில்லை பேசமுடியாது உன்னுடைய நம்பரை எழுதி கொடுத்துட்டு போ நானே உனக்கு கால் பண்றேன். இவன் இப்படி ஆனதிலிருந்து எனக்கு நேரமே இருக்குறது இல்ல. நீ...இந்த ஊர்ல கலெக்டர் வேலை பாக்குறதா என் பையன் சொன்னான். அபியோட நம்பர் குடுடான்னு கேட்டேன் நம்பர் தெரியாதுன்னு சொல்லிட்டான். என்ன பண்றது அவனோட மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும் ? இன்னார்க்கு இன்னாருன்னு ஆண்டவன் முடிப்போட்டு வச்சிருக்கான். நாம நெனைக்கிறது எல்லாம் நடக்கவா செய்யுது?" என்று பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினார் அந்தம்மா.

"நடக்கிறது எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோங்க வேற என்ன பண்ண முடியும்...?" என்று விரக்தியோடு கூறினாள் அபிநயா.

மேலே ஏறி போன குழந்தைகள் போன வேகத்திலேயே திரும்பி கீழே வந்தார்கள்.

"ஆன்ட்டி... ஆன்ட்டி... அப்பா இப்ப யாரையும் பார்க்க மாட்டாராம். அவருக்கு ரொம்ப டயர்டா இருக்கு தூக்கம் வருதாம் தூங்க போறாராம். அதனால உங்கள பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு..." என்று மழலை கொஞ்சும் குரலில் குழந்தைகள் சொல்ல அபிநயாவின் முகம் பேயறைந்தது போலானது.

வேழவேந்தன் அம்மாவும் இதை சற்றும் எதிர்பார்க்காததால்,

"நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத கண்ணு... இந்தப் பிள்ளைங்க இப்படித்தான் ஏடாகூடமா சொல்லுங்க, நான் போயி என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வரேன். கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு மேல போயிட்டு வரேன் முட்டிவலி... ரொம்ப அதிகமா இருக்கு அதனால மேலே ஏறதே இல்லை. ஆனாலும் இதுங்க பண்ற பாட்டுல ஒரு நாளைக்கு நாலு முறை ஏறி இறங்க தான் செய்றேன். என்ன பண்றது எல்லாம் என் மகனுக்காகதான். இவனை இந்த நிலமையிலே விட்டுட்டு எங்க போறது? என் பொண்ணு வீட்டுக்கு கூட நான் போறது இல்லே, கையை அசைக்க முடியாமல் கெடக்குறான் இவனை விட்டுட்டு யாரு வீட்டுக்கும் போக முடியல.." என்று புலம்பியபடி படிக்கட்டு ஏறி மேலே போனாள்.

அந்த கேப்பில் இரண்டு குழந்தைகளையும் அருகில் அழைத்து,

" உங்க பேரு... ரொம்ப அழகா இருக்கு!! எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்க..?" என்று மெல்ல பேச்சு கொடுத்தாள்.

தங்கள் ஸ்கூலின் பெயரைச் சொன்ன ஷியாம் 'ஆன்ட்டி உங்க ஆபீஸ் பக்கத்துல தானே எங்க ஸ்கூல் இருக்கு. ஒருவாட்டி கூட எங்க டாடி உங்க ஆபீஸ்கு என்னை கூட்டிட்டு வந்தாரே மறந்துட்டீங்களா?" என்று மடக்கினான்.

"ஓகே... ஓகே... இப்ப ஞாபகம் வந்துடுச்சு. ஆமாம் ஷ்யாம்... ஸ்கூலுக்கு எல்லாம் உங்க டாடி தான் கூட்டு போவாரா? உங்க மம்மி உங்கள கூட்டிட்டு போக மாட்டாங்களா?" என்றாள் அடுத்த கேள்வியாக.,

"ஐயோ ஆன்டி... உங்களுக்கு ஒண்ணுமே தெரியல, எங்க டாடி மட்டும் தான் எங்களை கூட்டிட்டு போவாரு. எங்க மம்மி கூட்டிட்டு போக மாட்டாங்க.., ஏன் தெரியுமா எங்க மம்மிக்கு ரொம்ப உடம்பு சரி இல்லை அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கிறாங்க. எப்பவாவது எங்க கூட போன்ல பேசுவாங்க அவ்வளவுதான்..." சொல்லும்போதே குழந்தைகளின் முகங்களில் கவலை தென்பட்டது.

அபிநயாவுக்கு குழந்தைகளைப் பார்க்கும் போது மனசுக்கு என்னமோ போலானது. இந்த இரண்டு குழந்தைகளையும் பார்க்கும்போது ரொம்ப பாவமாத்தான் இருந்தது. தாய் இருந்தும் கவனிக்க முடியாத சூழ்நிலையில் இந்த பிள்ளைங்க இருக்குதுங்களே.

இதற்கு மேலும் தோண்டித் துருவி இந்த குழந்தைகளிடம் கேட்பது சரியில்லை என்ற முடிவுக்கு வந்தவள் இடதுபுற மணிக்கட்டை திருப்பி பார்த்தாள். டைம் ஆயிடுச்சு வீட்டுக்கு கிளம்ப வேண்டுமே என்று பதற்றமாக இருந்தது. காரணம் இவளுடைய போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப்பாகி இருந்தது. ஆபீஸ்ல இருந்து இங்க வர்ற விஷயம் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ தெரியாது. ஒருவேளை எனக்கு கால் பண்ணி பார்த்துவிட்டு எடுக்கவில்லை என்றதும் அடுத்து டிரைவருக்கு கால் பண்ணினாங்கன்னா பிரச்சனையாகிவிடும்.

ஓரிரு நிமிடங்களில் அபிநயா தான் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தே விட்டாள்.

அந்த சமயத்தில் மாடிப்படிக்கட்டில் இருந்து அவசரமாக இறங்கி வந்தாள் வேழவேந்தனின் அம்மா.

" அம்மா அபிநயா என்ன எழுந்திருச்சுட்டே..கொஞ்ச நேரம் இரு...ஏதாவது சாப்பிட்டு போ..." என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்தாள்.

"இல்ல ஆன்டி... ரொம்ப டைம் ஆயிடுச்சு நான் கிளம்பனும். இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம். அவர் என்ன சொன்னார் ரொம்ப முடியலைன்னா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நான் இப்படியே கிளம்பிடுறேன்."

அந்த அம்மா கையை பிசைந்து கொண்டு நிற்கும்போதே மேலே என்ன நடந்திருக்கும் என்று இவளால் யூகிக்க முடிந்தது.

அபிநயாவை பார்க்க முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுங்க அவ எதுக்கு இங்க வந்தா? அவளுக்கும் எனக்கும் எந்த ஓட்டும் உறவும் இல்லன்னுதான் ஆயிடுச்சே, பிறகு அவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் ஆகப்போகுது இந்த நேரத்துல அவ எதுக்கு என்ன தேடி இங்கே வரணும்,? அப்படி. இப்படின்னு கண்டிப்பா எதையாவது சொல்லி இருப்பான்.

" சொல்றதுக்கு சங்கடமா இருக்கு அபிம்மா, தம்பி...வலி மாத்திரை போட்டுட்டு தூங்கிக்கிட்டு இருக்கு. அதுதான் இன்னொரு நாளைக்கு வந்தேன்னா ஆற அமர பார்த்துட்டு போகலாம் தப்பா எடுத்துக்காதே.., இவ்வளவு தூரம் வந்துட்டு திருப்பி அனுப்புறதுக்கு எனக்கும் மனசுக்கு சங்கடமா தான் இருக்கு..."

"பரவாயில்லை ஆன்டி இன்னொரு நாளைக்கு வரேன் கொஞ்சம் ஃப்ரூட்ஸ் ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன்... இந்தாங்க பசங்களுக்கு குடுங்க..." என்றவள் பக்கத்தில் வைத்திருந்த அந்த கவரை எடுத்து கொடுத்து விட்டு சோபாவில் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகளிடமும் கையசைத்து பாய் சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வெளியில் வந்தாள்.

வீட்டை விட்டு வெளியில் வந்து கேட்டுக்கு அருகே வந்தபோது வெளியிலிருந்து உள்ளே வந்தாள் அந்த அம்மா.

அவர்களைப் பார்த்தபோது தமிழர் அல்லாது வேறு மாநிலத்தார் போல் தோன்றியது. அவர்களும் இவளை கேள்விக்குறியோடு பார்த்தார்கள்.

பின்னாலிருந்து குழந்தைகள் "அம்மம்மா...!" என்று கத்திக்கொண்டு ஓடிவர அந்த இரு குழந்தைகளையும் அணைத்துக்கொண்டான் அந்தம்மா. இவளுக்கு அவர்கள் யாராக இருப்பார்கள் என்பது நன்றாகவே புரிந்தது.

வேழவேந்தனின் மாமியார் அதாவது மனைவியோட அம்மாவாகத்தான் இருக்க வேண்டும். என்று எண்ணியபடி கேட்டைத் திறந்து வெளியில் வந்து வெயிட் பண்ணிக்கொண்டு இருந்த காரில் ஏறி அமர்ந்தாள்.

வீட்டுக்கு வரும் வழியில் அவன் தன்னை பார்க்க விருப்பமில்லாமல் என்று திருப்பி அனுப்பியதை நினைத்துப்பார்த்தவளுக்கு கோபத்துக்கும் பதிலாக அவன் மீது பரிதாபம் தான் தோன்றியது. அவனுடைய இயலாமை வீடு தேடிவந்த இவளை திருப்பி அனுப்பி தன்னுடைய கோபத்தை தீர்த்துக் கொள்கிறான் அவ்வளவுதான். இவளை தொடர்ந்து தேடித்தேடி வந்தவனே நோஸ்கட் பண்ணி அனுப்பியதன் விளைவுதான். அன்று கண்காட்சி மேடையில் பரிசுப் பொருளை வேண்டாம் என்று முகத்துக்கு நேராக மறுத்ததின் பிரதிபலிப்புதான் பார்க்க முடியாது என்று இப்போது திருப்பி அனுப்புவதற்கான காரணம்.

வீட்டிற்குள் நுழைந்த போது வால்பாறையில் இருந்து அத்தை மகள் சாந்தாவின் கணவர் பாஸ்கர் வந்திருந்தார்.

இவளைப் பார்த்த உடனே எழுந்து நின்று வணக்கம் சொன்னவரை உட்காரச் சொல்லிவிட்டு, புன்முறுவலோடு எதிரில் வந்து அமர்ந்தாள்.

" சொல்லுங்க அண்ணா நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளுக்கப்புறம் இப்பதான் வந்திருக்கீங்க எதுனா முக்கியமான விஷயமா...?"

" ஆமாம் அபிநயா எங்க பொண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா பண்றோம். அதான் பத்திரிக்கை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்." என்றார்.

"ஆமா... அம்மா சொன்னாங்க அண்ணா, மது ரொம்ப குட்டி பொண்ணாச்சே அதுக்குள்ள பெரியவளா ஆயிட்டா... மது என்ன படிக்கிறா?"

" எய்த் படிக்கிறாள்..."

" ஓகே ஓகே அண்ணா நான் கொஞ்சம் பிரஸ்சாயிட்டு வரேன். நாளைக்கு தானே போறீங்க?"

"இல்லம்மா நான் இப்பவே கிளம்பனும். பிரண்ட்ஸ்ங்களுக்கெல்லாம் கார்டு கொடுக்கணும் ...உன்ன பாத்துட்டு போலாம்னு தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.... அடுத்த மாதம் ஏழாம் தேதி தான் கண்டிப்பா வந்துடும்மா"

"கண்டிப்பா வந்துடுறேன் அண்ணா..."

"அப்பா அம்மாகிட்ட கார்டு கொடுத்துட்டேன்... அப்போ அவங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லிட்டு நான் கிளம்பறேன் மா..."

" ஓகே அண்ணா..."

அபிநயாவுக்கு வால்பாறை என்றவுடன் பிளஸ் டூ படிக்கும்போது நிம்மி அத்தை பெண்ணு சாந்தாவோட கல்யாணத்துக்கு போனது நினைவுக்கு வந்தது. அங்கு சென்ற நாட்கள் ரொம்ப சந்தோஷமான நாட்கள். என்று அந்த நினைவுகளில் சற்று நேரம் ஆழ்ந்து போனாள்.

பிறகு...

இரவு சாப்பாட்டின் போது, "கண்டிப்பாக அந்த விழாவுக்கு நாம குடும்பத்தோட போக வேண்டும்." என்று அப்பா அம்மா இரண்டு பேரும் சொல்ல இவளும் சரி என்று தலை அசைத்தாள்.

இரண்டு வாரத்திற்கு பிறகு...

போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் சூடு அதிகமப்பா... ஏ.சி. போட்ட ரூம்ல கூட வேர்த்து கொட்டுது. ஒன்னும் தாக்கு பிடிக்க முடியல. ஒரு வாரம் லீவு போட்டுட்டு காடு, மலை, அருவினு சுத்திவரணும். தவளை மாதிரி தண்ணிக்குள்ளாற கிடக்கணும். அப்பத்தான் இந்த சென்னையோட சூடு தணியும்...!" - கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல், சென்னையில் இருக்கும்போது அலுவலகங்களில் நண்பர்களுக்கிடையே இதுமாதிரியான பேச்சுக்களை கேட்க நேரிடும்.

சரி... இது கோடை சீசன்... ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கும்மி அடிக்கும். போக்குவரத்துக்கு வாகனங்கள், ரூம் கிடைக்கிறது குதிரைக்கொம்பு. வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு சென்றால் பட்ஜெட் எகிறிடும். எளிமையாக, அதேசமயம் அதிக செலவில்லாமல் சுற்றுலா போறதுக்கு ஒரு இடம் சொல்லணும்னா அதுக்கு வால்பாறை நல்ல தேர்வு.

குளு... குளு... சூழலையும், அருவிகளையும், பசுமை மாறா காடுகளையும் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது வால்பாறை. பொள்ளாச்சிக்கு பக்கத்தில் இருக்கிற சொர்க்கம்னு இதை சொல்வாங்க. சூரியனுக்கே ஸ்வெட்டர் போடும் ஊர். மலைச் சிகரங்ளில் மேகங்கள் சடுகுடு விளையாடும். காயப்போட்ட பச்சை ஜமுக்காளங்களாக காட்சி தரும் தேயிலைத் தோட்டங்கள். ஆள் நடமாட்டம் இல்லாத அடர் வனங்கள் எல்லாமாக சேர்ந்து நம்மை பூலோக சொர்க்கம் இதுதான் என்று சொல்ல வைக்கும்.

அபிநயா நான்கு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு தன் பெற்றோர்களோடு வால்பாறைக்கு சென்றாள். பங்க்ஷன் அடுத்த நாள் என்பதால் பாஸ்கர் தன்னுடைய ரிசார்ட்டில் அபிநயா தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கொடுத்திருந்தார்.

அன்று முழுவதும் ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்ற முடிவோடு உறவினர் நான்கு பேரை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினாள் அபிநயா.

ஆயுளைக்கூட்டும் அற்புத வனங்கள்.

பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் மலைமேல் இருக்கும் அழகிய ஊர் வால்பாறை. வளைந்து நெளிந்து செல்லும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது சாலை. துவக்கத்தில் வருவது ஆழியாறு அணை. அதை ஒட்டிய பசும்புல் பூங்கா, குழந்தைகள் விளையாட சறுக்கு பலகை, ஊஞ்சல், தூரி, பெரியவர்கள் அமர நிழல் இருக்கைகள் என்று கும்மாளம் போட்டு வெளியே வந்தால், வரிசைக் கட்டி நிற்கும் மரத்தடி கடைகள். அதில் கற்கண்டுபோல் இனிக்கும் பொள்ளாச்சி இளநீர், இளம் நுங்கு, பதநீர், சுடசுட அணை மீன் வறுவல் என்று ஒரு கட்டு கட்டிவிட்டு, வண்டியேறி இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் வரும் இடம் ஆழியாறு செக்போஸ்ட. இதன் அருகில்தான் உலக புகழ் பெற்ற அறிவுத்திருக்கோயில் பல ஏக்கரில் விரிந்து கிடக்கிறது. அமைதி தவழும் மலைச்சாரலில் அமைந்திருக்கும், இந்த தியான மண்டபத்தில் சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து இருந்தவளுக்கு மனம் துடைத்த கண்ணாடி போல மாறியது.

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அங்கிருந்து மலைமேல் பயணித்து, சாலையின் இரண்டு புறங்களிலும் வானுயர மரங்களை கொண்ட பள்ளத்தாக்குகள், சாலை கடந்து ஓடும் சிற்றோடைகள், துள்ளி ஓடும் புள்ளிமான்கள், தடுப்பு சுவர்களின் மேல் தவமிருக்கும் குரங்கு கூட்டங்கள் என்று பயணிக்கும் சாலையில் ஆர்ப்பாட்ட சத்தம் எழுப்பி நம்மை கைதட்டி அழைக்கும் இடம்தான், மங்கி பால்ஸ் என்கிற குரங்கு அருவி. மினரல் வாட்டரை மிஞ்சும் சுத்தமான அந்த அருவி நீரில் ஒரு சுகமான குளியல் போட்டு, ஈரம் காய சிறிது நடந்து வந்து பிறகு வால்பாறை நோக்கிய பயணம்.

இருபுறமும் பகலில் ஒரு இரவு காட்டும் அடர் வனம் முடிந்து, திடீர் என்று கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சை புடவைகளை காயப்போட்டது போல காட்சி அழிக்கும் தேயிலைத் தோட்டங்கள். அதில் கொழுந்து கிள்ளும் முக்காடு பெண்கள் என்று கடந்தால் ஒரிடத்தில் ஒரு வெள்ளைக்காரரின் சிலை. அவர்தான் இந்த வால்பாறை மலை பிரதேசத்திற்குள் காலடி எடுத்து வைத்த முதல் மனிதராம் பெயர் மார்ஷல்.

இப்படி பல தகவல்களை சொல்லி அந்த ஊரின் பெருமைகளை பறைசாற்றியப்படி இவளுடன் பயணித்தார் அந்த ஒண்ணுவிட்ட தூரத்து
சொந்தமான பெரியப்பா.

அபிக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. காரணம் சதா அலுவலக வேலை என்று இருந்தவளுக்கு இங்கு வந்தது சற்று வித்தியாசமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

சாந்தாவின் கணவர் பாஸ்கர் அங்கிருந்த தங்கும் விடுதி ஒன்றின் மேலாளராக இருந்தார்.
சுற்றுலா வருபவர்கள் குடும்பத்தோடு தங்குவதற்கு, தனியாக வருபவர் தங்குவதற்கு என்று அழகாக வடிவமைக்கப்பட்ட அறைகள், ரிசார்ட்டுகள் என அந்த தங்கும் விடுதிக்கு நல்ல வரவேற்பும் வருமானம் இருந்தது.

எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தபோது அங்கே அபிநயாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
 
Last edited:
இதுக்கு மேலயுமா அவளுக்கு அதிர்ச்சி காத்திருக்கு...வேந்தன் வந்திருப்பானோ இங்கையும்
 
அந்த மிகப் பெரிய அதிர்ச்சி என்ன?
ஒருவேளை வேழவேந்தன் இங்கேயும் வந்துட்டானா?
இல்லை கார்த்திக் வந்தானா?
 
Romba suspension ah pothu sis.. Abinaya kum vela venthanukkum marriage akuma??? I think vela venthan marriage panniruka matanu ninaikken antha babies ellam vera yorada kulanthaiya irukumo?? This is my thought.. Romba excitement ah iruku
 
Top