Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்-24

Advertisement

daisemaran

Well-known member
Member
"நீதான் எந்தன் அந்தாதி!"

அத்தியாயம்-24


தன் இருக்கையில் வந்து அமர்ந்ததும் கூட அபிநயாவால் இயல்பாக அலுவலக வேலைகளில் ஈடுபட முடியவில்லை. திரும்பத் திரும்ப கண்முன்னால் வந்து போனது அவனுடைய அந்த ஏளன சிரிப்பு.

அவன் இவளுடைய அறையை விட்டு வெளியேறியதும் ஓடிச்சென்று ஜன்னலுக்கு அருகே நின்று பார்த்தது அவன் மேல் உள்ள தீராத காதலாலோ? அல்லது முன்னாள் காதலனை கண்குளிரக் கண்டு களிக்கவேண்டும் என்ற எண்ணத்தாலோ?... அல்ல."

தன்னை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விட்டு வேறு ஒரு பெண்ணை மணந்து இருக்கிறானே, அந்தப் பெண் எப்படி இருக்கிறாள் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவலும், அவனுடைய சாயலில் அவனுக்கு பிறந்த வாரிசை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவலும்தான் அதற்கு காரணம். மனதை கல்லாக்கி கொண்டு அந்த பால்கனி ஜன்னல் அருகே சென்று நின்றாள்.

அவனோடு வேறு யாரும் வரவில்லை அவன் மட்டும் தனியாகத்தான் வந்திருக்கிறான் என்று தெரியவே சோர்ந்த முகத்தோடு, திரும்ப நினைத்த போது தான் தற்செயலாக திரும்பிய அவனின் பார்வை வளையத்துக்குள் இவள் சிக்கிக்கொண்டாள்.

ஆனால் அவனுடைய பார்வையை தவிர்த்து விலகிட நினைத்த சமயம் அவனுடைய பார்வை வேறுபட்டு இருக்கவே தான் அபிநயாவின் மனதில் வேதனை படர்ந்தது. காரணம் அவன் உதட்டோரத்தில் தெரிந்த அந்த ஏளன சிரிப்பு .

தனக்காகவே ஏங்கி கிடப்பவள் தானே? தன்னைப் பிரிய மனம் இல்லாதவளாய் என்னைத்தேடி ஓடியவள் தானே?, இழந்த காதலை முழுவதுமாக மறந்து விட இயலாமல் ஓடி வந்து அவனை பார்ப்பதாக எண்ணி விட்டானோ? என்று மனது எண்ணி எண்ணி வேதனைப்பட்டது.

பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு இதயத்துடிப்பை சீராக்கினாள். கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பார்வை ஊசிபோல் இவளுக்குள் இறங்கியது. கண்களைத் பட்டென்று திறந்து பார்த்து எதிரில் அவன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அதன் பிறகுதான் நிம்மதி மூச்சு விட்டாள். எல்லாம் மன பிரமை.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் மறைந்து வாழ்ந்தவன் இத்தனை நாட்கள் கழித்து எதற்காக என்னை தேடி வர வேண்டும் என்ற கேள்வி அவள் மனதில் எழத்தான் செய்தது.

இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வருவதாக சொல்கிறானே அப்படி என்றால் இவளை இவள் வகிக்கும் பதவியைப் பற்றி தெரிந்து தானே வந்திருப்பான்.

பி ஏ விடம் இவளுடைய நம்பரை வாங்கி கால் பண்ணி பேசி இருக்கலாமே? குறைந்தபட்சம் பேச முயற்சித்திருக்கலாம். ஆனால் திரும்பத் திரும்ப வந்து போனதாய் சொல்கிறான்.

ஒருவேளை மனு கொடுக்க வந்தவனுக்கு இவள் தான் இந்த மாவட்ட ஆட்சியாளர் என்பது தெரியாமல் கூட வந்திருக்கலாம்.

எது எப்படியோ மிஞ்சி இருந்த கொஞ்சம் நஞ்சம் நிம்மதியும் அடியோடு போய் விட்டது. இவனை பார்த்த பிறகும் ஒன்றுமே இல்லை எல்லாம் முடிந்து விட்டது என்று எப்படி கார்த்திக்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? அபிநயாவின் மனதுக்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. இனி என்னால் எப்போதும் போல இயல்பாக இருக்க முடியும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் அவனை சந்தித்த பிறகு எனக்குள் எல்லாமே மாறிப் போனது.

மற்றவர்களிடம் என்னை நானே காட்டிக் கொடுத்து விடுவேன் போலிருக்கு, அவனை முழுவதுமாக மறக்க வேண்டுமென்றால் அவன் இருக்கும் இந்த ஊரை விட்டு எங்காவது போய் விட வேண்டும் அப்போதுதான் ஓரளவுக்காவது அவனை மறந்து என்னால் என் வாழ்க்கையோடு இணைந்து வாழ முடியும்.

அதுமட்டுமல்ல வேழ வேந்தனை பற்றிய விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்லியே ஆகவேண்டும். அதைக் கேட்ட பிறகும் கார்த்திக் என்னை ஏற்றுக்கொண்டால் இந்த கல்யாணம் நடக்கட்டும். இல்லை என்றால் ஒரேடியாக விலகி என் பாதையில் நான் பயணிப்பதை தவிர வேறு எந்த வழியுமில்லை.

இத்தனை நாள் காணாமல் போனவன் காணாமல் போனதாகவே இருந்திருக்கலாம். கடவுள் ஏன் இப்படி எல்லாம் என் வாழ்க்கையில் மட்டும் விளையாடுகிறார்? அவரின் விளையாட்டுக்கு ஒரு அளவில்லையா? பட்ட துன்பங்கள் போராடின போராட்டங்கள் அடைந்த வேதனைகள் மன உளைச்சல்கள் எல்லாமே அளவுக்கு அதிகமாகவே என்னை என் மனதை வதைத்துக் கொண்டு இருக்கிறது.

என்று வேதனையோடு அமர்ந்திருந்தவளின் கண்களில் டேபிள் மேல் இருந்த அந்த மனு பட்டது. மெல்ல அதை எடுத்து பிரித்து மேலோட்டமாக பார்வையை ஓடவிட்டாள். அது அவனுடைய கையெழுத்து தான்.. தன் கைப்பட அழகாக எழுதி இருந்தான். அவளுக்கு அவனுடைய எழுத்துக்கள் மிகவும் பரிச்சயமானவை. முத்துக்களை கோர்த்து வரிசை வரிசையாய் அடுக்கி வைத்தது போல் இருக்கும். மெல்ல அந்த எழுத்துக்களை விரல்களால் தொட்டுப் பார்த்தாள். அவளின் பார்வை, எழுத்துக்களை தாண்டி பேப்பருக்கு மேல் படிந்திருந்த இடதுகை மோதிர விரலை நோக்கியது.

நேற்று மாலை இவளின் கரங்களை பற்றி கார்த்திக் போட்டுவிட்டிருந்த மோதிரம் விரலில் கவ்விக் கிடந்தது.


கார்த்திக் ரொம்ப நல்லவன் தான் ஆரம்பத்திலிருந்தே அவனோடு நெருங்கிப் பழகாமல் விலகியே இருந்தாள். காரணம் வேழ வேந்தனை நேசித்த மனது அவனை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.


தூரத்து உறவினர் என்றாலும் நெருங்கிய குடும்ப நண்பர் போல் பழகும் அவனுடைய குடும்பத்தாரை அடியோடு வெறுக்கவும் முடியாமல் ஒரேடியாக விலகவும் முடியாமல் பட்டும் படாமல் பழகியப்படி நாட்களை நகர்த்தி கொண்டிருந்தாள். அவனுடைய அம்மா சுந்தரவல்லி அம்மா ரொம்ப பாசமா இவ கூட பேசுவாங்க அதுபோன்ற நேரங்களில் அவங்க மனசு நோகாதபடி சிரித்துப் பேசி அவர்கள் சொல்வதை செவிமடுத்து புன்னகை மாறாத முகத்தோடு பை சொல்லி போனை வைத்து விடுவாள்.


இவளின் விலகலை கண்டு கார்த்திக் கொஞ்சமாவது நிலமையைப் புரிந்து கொள்வான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அப்படி எந்த ஒரு புரிதலும் அவனிடம் இல்லை என்பதுதான் மன வருத்தத்தை உண்டாக்கியது.

குறைந்தபட்சம் இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமா இல்லையா அப்படின்னு அவன் வாய் திறந்து கேட்டிருக்கலாம். அல்லது இதற்கு முன் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என்று இயல்பாக ஒரு வார்த்தையையாவது கேட்டிருக்கலாம். அப்படி அவன் கேட்டிருந்தால் இவள் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்து இருப்பாள்.

இல்லை இல்லை அவன் மேல் மட்டுமே தப்பு சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இவளாவது அவனை அழைத்து பேசி இருக்க வேண்டும். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லி அவன் விருப்பத்தை கேட்டு இருக்கவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு கார்த்திகை மட்டுமே குறை சொல்வது இவளுடைய இயலாமை கோழைத்தனத்தை தான் சுட்டிக் காட்டுகிறது.

கடைசிவரை அவனும் இவளை புரிந்துகொள்ளவில்லை. இவளும் அவனிடம் தன் மனதில் உள்ளதை சொல்ல முயற்சிக்கவில்லை.

கார்த்திக் பலமுறை இவளை நெருங்கி நெருங்கி வந்து பேசி இருக்கிறான். ஒரு காலகட்டத்தில் வேழ வேந்தனை பற்றி சொல்லி விடுவது தான் நல்லது என்று இவள் நினைக்கத்தான் செய்தாள் ஆனால்,

" அப்படி எதையும் சொல்லிடாதே அபிநயா முடிந்துபோனது முடிந்து போனதாகவே இருக்கட்டும். புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்க போகிறே.. பழசை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு கார்த்திக்கோடு நிம்மதியான ஒரு வாழ்க்கை ஆரபிக்க பார். ஒருவரை காதலித்து விட்டு அந்த காதல் கைகூடவில்லை என்றால் இன்னொருவரை மணந்து கொள்வது சமுதாயத்தில் நடக்கக்கூடிய விஷயம்தானே?!! அதுமட்டுமல்ல மனசார அவனை நேசிச்சே அதைத்தவிர வேறு எந்த தப்பையும் நீ செய்யல.. அப்படி இருக்கும்போது, வேழவேந்தன் தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சு கிட்ட பிறகும் அவனையே நினைத்துக் கொண்டே இருக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு. இனி உன்னோட பாதை என்ன அதுல எப்படி போகணும்னு அதை பத்தி மட்டும் யோசி தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காதே!! இத்தோட அந்த வேழவேந்தனை ஒரேடியா தலைமுழுகிடு. என்று கண்டிப்புடன் சொல்லியிருந்தாள் மேகலா.

ஆனாலும் வேக வேந்தனை நேரில் சந்தித்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறிப் போனது ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தாள் அபிநயா. தன்னுடைய பழைய காதலை கார்த்திக்கிடம் மறைக்கக்கூடாது அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் அதுவும் திருமணத்திற்கு முன்பு என்ற முடிவில் தெளிவாக இருந்தாள்.

குறைந்தபட்சம் நிச்சயத்திற்கு முன்பாவது அவனிடம் சொல்லி விட வேண்டும் என்று எண்ணி இருந்தாள் ஆனால் அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது. நேரில் பேசவும் இயலவில்லை.

கண்டிப்பாக இந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்லணும் ஒருவேளை யார் மூலமாவது கார்த்திக்கு இந்த விஷயம் தெரிய வந்தா,

அபிநயா இதைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? கடைசிவரை சொல்லாமலே மறைச்சிட்டியே?? அப்படின்னு ஒரே ஒரு வார்த்தை கேட்டுட்டான் என்றால், அதை தாங்கிக்கிற சக்தி இவகிட்ட இல்லை. என்கேஜ்மென்ட் நடந்திருந்தாலும் பரவாயில்லை. கண்டிப்பாக கார்த்திக்கிடம் இந்த விஷயத்தை சொல்லி விடவேண்டும் என்ற முடிவோடு அந்த மனுவை எடுத்து அருகில் இருந்த பைலில் வைத்தாள்.

அன்று மாலை வீடு சென்று பிறகும் யாரிடமும் பேச பிடிக்காமல் தன் அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டாள். இரண்டுமுறை மேகலாவுக்கு கால் பண்ணலாம் என்று நினைத்து அந்த நினைப்பைக் கை விட்டாள். மேகலாவிடம் வேழவேந்தனை பற்றி சொன்னால் கண்டிப்பாக கோபப்படுவாள் அவனோடு பேசுவதை நிறுத்திக் கொள் அவனை பார்க்காதே என்று தடை பண்ணுவாள். அது இவளுடைய நன்மைக்காகத்தான் என்றாலும் அலுவலக நிமித்தமாக அவன் தேடி வரும்போது இவள் அவனை அவாய்ட் பண்ண முடியாது. காரணமே இல்லாமல் திரும்பத் திரும்ப வர முயற்சித்தான் என்றால் நாசுக்காக சொல்லி தவிர்த்துவிடலாம். இது ஒரு பெரிய விஷயமே இல்லை. என்று மேகலாவிடம் சொல்வதை முற்றிலுமாக தவிர்த்தாள் அபிநயா.

அடுத்தநாள் எப்போதும்போல ஆபீசுக்கு கிளம்பியவள் கட்டியிருந்த புடவையை களைந்துவிட்டு வேறு ஒரு புடவையை எடுத்து கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்றாள்.

அதுவும் பிடிக்கவில்லை என்றவுடன் திரும்பவும் வேறு ஒரு சேலையை எடுத்து உடம்பில் வைத்து பார்த்துவிட்டு அதையும் தூக்கி வீசிவிட்டு, சுமார் கால் மணி நேர தேடுதலுக்கு பிறகு கடைசியாக அந்த இளம் மஞ்சள் நிறத்தில் அடர் கருப்பு நிற எம்ராய்டிங் பண்ணிய காட்டன் புடவையை எடுத்து அணிந்துகொண்டாள். அவளுடைய சிவந்த நிறத்திற்கு அந்த மஞ்சளும் கருப்பும் கலந்த வண்ணத்தில் அணிந்திருந்த புடவை அழகை சற்று தூக்கலாகவே எடுத்துக்காட்டியது.

காரைவிட்டு இறங்கி அலுவலகத்துக்குள் நுழைந்தபோது ஒரு சில கண்கள் இவளை திரும்பிப் பார்ப்பதை உணரமுடிந்தது. எப்போதும் இல்லாத அந்தப்பார்வைகளின் தொடரல் இவளை ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது. என்னிடம் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? என்று தன்னைத்தானே கவனித்தபடி தன் அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

அந்த பைல் இவளுடைய பார்வைக்காக டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்தது.

இருக்கையில் அமர்ந்தவுடன் ஃபைலை எடுத்து புரட்டிப்பார்த்தாள். ஜெய்லரிடம் இருந்து வந்திருந்த கடிதம் அதில் இருந்தது. ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு திரும்பவும் ஃபைலுக்குள் வைத்து மூடி வைத்தாள்.

இடது கையைத் திருப்பி மணி பார்த்தவளுக்கு நேற்று இந்நேரம் எல்லாம் அவன் வந்துவிட்டது ஞாபகம் வந்தது. இன்று இன்னமும் காணவில்லையே என்று மனம் எண்ணியது.

அப்போது உள்ளே நுழைந்த அவளுடைய பிஏ அவளுக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு,

" மேடம் நேத்து வந்தாரே ஒருத்தர் அவர் வந்து ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கார் உள்ளே அனுப்பவா...?" என்றான்.

"என்ன சந்தானம் இவ்வளவு நேரமா காக்க வச்சிட்டு இருக்கீங்களே..? உடனே என்னுடைய அறைக்கு அனுப்புங்க, அவருடைய பைல் ரெடியாயிடுச்சு அத அவர் கிட்ட கொடுக்கணும் இல்லையா?" என்றாள் அபிநயா.

இதோ ஒரு நிமிஷத்துல அனுப்புறேன் மேடம் என்று பரபரப்புடன் வெளியில் சென்றார் பிஏ சந்தானம்.

அவர் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தான் வேழவேந்தன். இந்தமுறையும் அவனைப் பார்த்தவுடன் அதிர்ந்துதான் போனாள். ஆனால் இந்த முறை அவள் மட்டும் அதிர்ந்து போகவில்லை அவனும் சேர்ந்து அதிர்ச்சியடைந்தான். இருவருமே அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

காரணம் இவளைப் போலவே இளம் மஞ்சள் நிறத்தில் டீஷர்ட்டும் கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தான் வேழவேந்தன்.

வேழவேந்தனுக்கு எப்போதும் இளம் சிவப்பும், மஞ்சள் நிறமும் ரொம்ப பிடிக்கும் அதில் கருப்பு கலந்தால் மிகவும் சிறப்பு என்பான்.

தன்னுடைய அதிர்ச்சியை மறைத்தபடி உட்காருங்க என்று இருக்கையை சுட்டிக்காட்டினாள்.

"வந்து ரொம்ப நேரம் ஆகுதா உடனே வந்து இருக்கலாமே...?" என்று இவள் வாய்க்குள் முனுமுனுக்க,


"நீங்க வந்ததைப் பார்த்தேன் மே...மேடம் ஆனா பின்னாடியே வந்து உங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து இருந்தேன்.!"

" ஆபீஸ் டைம் பத்து மணிதான் நீங்க பத்து மணிக்கு பிறகே வந்து இருக்கலாமே...?"

"இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வந்துட்டேன் பையனை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஸ்ட்ரைட்டா இங்கே வந்ததால அரை மணி நேரம் முன்னாடியே வந்துட்டேன்." என்றான்.

பையன் என்று சொன்னவுடன் இவளின் உடல் மெல்ல அதிர்ந்தது.

மேற்கொண்டு அவனிடம் எதையாவது கேட்க போய் பலகீனமான தன்னுடைய குரலை அவன் கண்டுகொண்டு விட கூடாது என்பதற்காக உதட்டை பற்களால் அழுத்தி அழுகையை கட்டுக்குள் கொண்டுவந்தாள் அபிநயா.

"மேடம்…அப்பாவோட விஷயம்...?"

"எல்லாம் கிளியர் ஆயிடுச்சு... நான் ஒரு லெட்டர் தர்றேன் அதை எடுத்துட்டு போய் ஜெயிலர் கிட்ட கொடுங்க ட்ரீட்மெண்ட் உரிய எல்லா ஏற்பாடும் அவங்களே பண்ணுவாங்க, இல்ல நீங்க விரும்பிய இடத்துக்கு அவங்க கூட்டிட்டு வருவாங்க.." என்றாள் ஜன்னல் பக்கமாய் வெறித்தபடி.

"ஓகே ரொம்ப தேங்க்ஸ் இந்த ஹெல்ப்ப நான் கண்டிப்பா மறக்க மாட்டேன்." என்றான் மெல்லிய குரலில்.

அவள் சிறு தலையசைபோடு அருகில் இருந்த அந்த ஃபைலில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து கீழே சைன் போட்டு அவனிடம் நீட்டினாள். திரும்பவும் அவன் பார்வையை சந்திக்க இவளுக்கு விருப்பம் இல்லை. ஒருவேளை நேற்று போல அந்த சிரிப்பில் ஏளனம் கலந்து இருக்கலாம். கேட்டவுடன் உதவி செய்கிறாள் அதற்குக் காரணம் அவள் என் மேல் கொண்ட காதல் தான் என்று எண்ணத்தில் கூட அவன் முகத்தில் இளக்காரம் தோன்றலாம். அப்படி எண்ணிய தாலோ என்னவோ அவன் பார்வையை தவிர்த்துவிட்டு கடிதத்தை மட்டும் அவன் புறமாக நீட்டினாள்.

ஆனால் அவள் கைகளிலிருந்து அவன் கடிதத்தை வாங்கவில்லை. ஓரிரு நொடிகளுக்குப் பிறகு முகத்தை திரும்பி இந்தாங்க என்று அவனிடம் நீட்ட,

அவன் தன்னுடைய கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு புன்னகை மாறாத முகத்துடன் அவளையே பார்த்தப்படி நின்றிருந்தான்...!!




 
Last edited:
அடேய் வேழவேந்தன்
நீ சரியில்லைடா
உன்னோட வேலையை அவள் முடிச்சுட்டாள்ள
அப்புறம் உனக்கு வேற என்ன வேணும்?
அபி கொடுத்த லெட்டரை கொண்டு போய் கொடுத்து உன் அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற வழியைப் பாரு, வேந்தன் தம்பி
போப்பா போ போய் பொழப்பைப் பாரு, வேந்தா
இல்லாத பையனை ஸ்கூலில் விட்டுட்டு வந்தாயா, வேழவேந்தன்?
இவன் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் வந்திருக்கான்
நீ ஏமாந்துடாதே, அபிநயா
வேந்தனை ஓரம் கட்டிட்டு கார்த்திக்கிடம் எல்லாவற்றையும் சொல்லும் வழியைப் பாரு, அபி
 
Last edited:
அடேய் வேழவேந்தன்
நீ சரியில்லைடா
உன்னோட வேலையை அவள் முடிச்சுட்டாள்ள
அப்புறம் உனக்கு வேற என்ன வேணும்?
அபி கொடுத்த லெட்டரை கொண்டு போய் கொடுத்து உன் அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற வழியைப் பாரு, வேந்தன் தம்பி
போப்பா போ போய் பொழப்பைப் பாரு, வேந்தா
இல்லாத பையனை ஸ்கூலில் விட்டுட்டு வந்தாயா, வேழவேந்தன்?
இவன் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் வந்திருக்கான்
நீ ஏமாந்துடாதே, அபிநயா
வேந்தனை ஓரம் கட்டிட்டு கார்த்திக்கிடம் எல்லாவற்றையும் சொல்லும் வழியைப் பாரு, அபி
Ha ha
 
Inda punnagai eDuko
அடியேய் கூமுட்டை கலெக்டர் அபிநயா காதலி
எனக்கு கல்யாணமாயிடுச்சுன்னு என்னோட அக்கா கிழிஞ்ச சொக்கா சொன்ன பொய்யை நம்பி மோசம் போனாயே
நீயெல்லாம் என்னத்த படிச்சு என்னத்த கலெக்டர் ஆகி என்னத்த யூஸ்ஸுன்னு நினைச்சிருப்பானோ?
 
அடியேய் கூமுட்டை கலெக்டர் அபிநயா காதலி
எனக்கு கல்யாணமாயிடுச்சுன்னு என்னோட அக்கா கிழிஞ்ச சொக்கா சொன்ன பொய்யை நம்பி மோசம் போனாயே
நீயெல்லாம் என்னத்த படிச்சு என்னத்த கலெக்டர் ஆகி என்னத்த யூஸ்ஸுன்னு நினைச்சிருப்பானோ?
Ha ha ❣️❣️❣️❣️❣️
 
Top