Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-21

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம் 21

கார்த்திக் கொடுத்த அந்த பார்சலை பிரித்து பார்த்த ராகவன் அதிர்ச்சி அடைந்தார்.

"இது . . இது . . இது எப்படி உங்ககிட்ட வந்துச்சு ? உங்ககிட்ட யாரு இத கொடுத்தா ப்ளீஸ் ப்ளீஸ் கார்த்திக் சார் உண்மையை சொல்லுங்க நீங்க சொல்ல போற உண்மையில் தான் என்னுடைய மீதி வாழ்க்கையும் அடங்கி இருக்கு . . ப்ளீ ஸ் . . . . சொல்லுங்க சார் . . . " என்று கெஞ்சியவரின் கண்களில் கண்ணீர் கசிந்து நின்றது."

ராகவனின் கண்ணீர் தோய்ந்த விழிகளை கண்ட கார்த்திக்கின் மனம் நெகிழ்ந்தது.

"சார்... ராகவன் சார் ரிலாக்ஸ் ரிலாக்சா இருங்க... எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க?" கார்த்திக் ராகவனின் தோள்களைத் தட்டி சமாதானப்படுத்த முயன்றான்.

"கார்த்திக் சார் ப்ளீஸ்.. சொல்லுங்க? உங்களுக்கு இது எப்படி கிடைச்சது..??"

" சொல்றேன்... சொல்லத்தானே வந்திருக்கேன்... நீங்க ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க இந்தாங்க தண்ணி குடிங்க..."என்று கார்த்திக் அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.

"இப்பவாவது சொல்லுங்க கார்த்திக் சார்..."

இதற்குமேல் அவருடைய பொறுமையை சோதித்தால் நல்லா இருக்காது என்ற எண்ணத்தோடு விஷயத்தை சொல்லத் தொடங்கினான் கார்த்திக்.

"ராகவன் சார் உங்க மனைவியை முதல் முதலில் எங்க சந்தித்தீங்க?அவங்க எந்த நாட்டை சேர்ந்தவங்க..."

"நான்தான் ஏற்கனவே உங்ககிட்ட என்னுடைய மனைவியைப் பற்றியும் பிள்ளைகளைப் பற்றியும் சொல்லி இருக்கேனே கார்த்திக் சார்...மறந்துட்டீங்களா...? என்னுடைய மனைவி வெளிநாட்டை சேர்ந்தவங்கதான், நாங்க ரெண்டு பேரும் காதலித்து கல்யாணம் பண்ணிகிட்டோம். எங்க கல்யாணம் வித்தியாசமான முறையில் நடந்தது. அதாவது லண்டன்ல இருக்கிற ஒரு சர்ச்சில் அவள் எனக்கு மோதிரம் போட்டாள். நான் அங்க இருந்த இந்து கோவில்ல வச்சி அவள் கழுத்தில் ஒரு செயின் போட்டுவிட்டேன்."

"அந்த செயின்தான் உங்க கையில இருக்கிற இந்த செயினா...?" ராகவன் பார்சலை பிரித்து கையில் வைத்திருந்த அந்த செயினை காட்டி கேட்டான் கார்த்திக்.

"ஆமா சிலுவை கோர்க்கப்பட்ட இந்த பிளாட்டினம் செயின்தான் அவ கழுத்துல நான் போட்ட செயின்..." என்று சொன்னவரின் கண்களில் சொல்லில் அடங்கா ஒரு சோகம் தெரிந்தது. மனைவியின் ஞாபகம் வந்திருக்கும் என்று கார்த்திக் எண்ணினான்.

"நல்ல வேலை தங்கத்துல போடல இல்லன்னா இதை இந்நேரம் விற்று பணமாக்கி இருப்பாங்க!! இதன் மதிப்பு தெரியாததால்தான் விட்டு வச்சிருக்காங்க...!!" என்றான் கார்த்திக்.

"யார்... யாரை சொல்றீங்க.. " ஆர்வத்தோடு கேட்டார் ராகவன்.

"இதோ பாருங்க ராகவன் சார் உங்க பெரிய பொண்ணு மட்டும் தான் உயிரோட இருக்குறாங்கன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க, ஆனா இன்னொரு பிள்ளையும் உயிரோட இருக்கிற விஷயம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தெரியாமலேயே இத்தனை நாட்களும் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க, அதாவது உங்க மனைவி சாகறதுக்கு முன்னாடி பிரக்னண்டா இருந்தாங்க இல்லே... அவங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்ததும் அந்த குழந்தை இப்போ உயிரோட இருக்கிற விஷயமும் உங்களுக்கு தெரியுமா...?" என்று கார்த்திக் கேட்ட அடுத்த நிமிடம் இருக்கையிலிருந்து பட்டென்று எழுந்தே விட்டார் ராகவன்.

"என்ன சொல்றீங்க.. ஐயோ.... என்ன சொல்றீங்க கார்த்திக் சார் அப்படின்னா என்னுடைய மனைவியும் குழந்தையும் உயிரோட இருக்காங்களா? சொல்லுங்க எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க?... ப்ளீஸ் என் மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு..." தலையை இரண்டு கைகளாலும் பற்றியபடி சத்தமாக கூறினார்.

'" சொல்றேன்... சொல்றேன்... அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெரியனும்..." கார்த்திக் தெள்ளத்தெளிவாக கூறினான்.

" என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க...?'" என்று பதறினார் ராகவன்.

" அன்னைக்கு ஒரு பொண்ணோட உங்கள ஹோட்டல பார்த்தேனே அந்தப் பெண்ணுக் கூட உங்க நண்பரோட பொண்ணுன்னு சொன்னீர்களே அது பொய்யின்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் உங்க கிட்டேயிருந்து எப்ப உண்மையை வர வைக்கலான்னு காத்துக்கிட்டு இருந்தேன்.

இப்பதான் அதற்கான சந்தர்ப்பம் சரியா அமைஞ்சிருக்கு, இப்ப சொல்லுங்க அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தன்னு சொன்னீங்கன்னா இந்த விஷயத்தை பற்றி நான் சொல்றேன்."

இப்படியெல்லாம் அவரை மடக்கி அவர் கிட்டேயிருந்து உண்மையை வரவைக்கிறது கார்த்திக்கு சங்கடமாகத்தான் இருந்தது ஆனாலும் வேற வழி தெரியல.

" கார்த்திக் சார்... இது உங்களுக்கே நல்லா இருக்கா? ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்டு நொந்து போய் வாழ்ந்து கிட்டு இருக்குற ஒருத்தனை மேலும் மேலும் நோகடிக்கிறீங்களே??... இது உங்களுக்கே நல்லா இருக்கா? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் சார்...? என்னை இதுக்கு மேலும் கஷ்டப்படுத்தாம விஷயத்தை சொல்லுங்க??"

" சம்மந்தம் இல்லன்னு எப்படி சொல்றீங்க கண்டிப்பா சம்பந்தம் இருக்கு. நீங்க உண்மையை சொல்லுங்க அதுக்கப்புறம் நானும் உங்களுக்கு இத்தனை நாளும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்லுறேன் வேணான்னா விட்டுடுங்க..."

" பிளாக்மெயில் பண்றீங்களா கார்த்திக் சார்... எதிர்த்து போராடுற அளவுக்கு எனக்கு தெம்பும் இல்லை, நான் உண்மையை சொல்லிடுறேன்..."

"ம்ம்...சொல்லுங்க..." ராகவன் சொல்ல போகிற விஷயத்தை கேட்கத் தயாரானான் கார்த்திக்.

"என் பெரிய பெண் ஷேலி இருக்காளே அதான் அபிநயா...அவளுடைய கல்லூரி தோழிதான் நீலவேணி. என் மகளைப் பற்றிய விஷயம் எல்லாம் இவள் மூலமாகத்தான் நான் தெரிந்து கொள்வேன். என் மகள் என்ன படிக்கிறாள், எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாய்?? என்ன பதவில் இருக்கிறாள் இப்படிப்பட்ட தான எல்லா விஷயத்தையும் எனக்கு சொல்பவள் இந்த நீலவேணி தான். அபிக்கும் அவளுக்கும் எட்டாத தூரம் தான் ஆனாலும் அவளைப் பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்ள எனக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது அதனால் தான் அவளோடு அடிக்கடி பேசுவேன்.

இந்த அன்புள்ளம் முதியோர் இல்லத்துக்கு அவளுடைய அப்பா அடிக்கடி உதவி செய்வார் ஆதலால் அவர்களின் குடும்ப நண்பராகவே மாறினேன். உரிமையோடு வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு வரும் அளவுக்கு எனக்கும் அவர்களுக்கும் ஒரு நல்ல நட்பு இருந்தது. இதற்கிடையில்தான் அதாவது எட்டு வருஷத்துக்கு முன்பு சிலை கடத்தல் வழக்கில் நீலவேணி அப்பா ஜெயிலுக்கு போயிட்டார் அதிலிருந்து அவர்களிடம் இருந்து எனக்கு வர வேண்டிய உதவி நின்று போனது.

நீலவேணியின் அப்பா ஜெயிலுக்குப் போன விஷயம் எனக்கு தெரியாது. நேரில் போய் விசாரிக்கலாம் என்று போன போதுதான் அந்த விஷயம் தெரிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு வக்கீல் உதவியோடு அவரை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்தேன். அவரும் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். அதன் பிறகு ஓரிரு மாதத்தில் திரும்பவும் பழைய சிலை கடத்தல் கேசில் உள்ளே போய் விட்டார். அது விஷயமாக அடிக்கடி அவள் என்னிடம் வந்து பேசுவாள். நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த வக்கீலைப் பார்க்க போவோம் அவ்வளவுதான்." என்று சொல்லிவிட்டு கார்த்திக்கின் முகத்தை ஏறிட்டார் ராகவன்.


கார்த்திக்கின் முகம் தெளிவாக இருந்தது. நாம சொன்ன விஷயத்தை அப்படியே கார்த்திக் நம்பி விட்டான். நல்ல வேளை அபிநயாவின் காதலன் வேழவேந்தனை பற்றி சொல்லாமல் மறைத்து விட்டோம். அப்படி சொல்லி இருந்தால் என்னால் என் மகளுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் எழலாம். அவளே அந்த விஷயத்தைப் பற்றி கார்த்திக்கிடம் சொல்வதுதான் முறை. நாம சொல்ல போய் அவளுடைய வாழ்க்கையை நாமளே கெடுத்ததா இருக்க வேண்டாம், என்பதற்காகத்தான் வேழவேந்தனை பற்றியே மொத்த விஷயத்தையும் மறைத்து விட்டார் ராகவன்.


மனைவியையும் அவள் வயிற்றில் பிறந்த குழந்தையையும் பார்க்கும் ஆவலில் மனுஷன் கண்டிப்பா பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்று நம்பினான் கார்த்திக். அவர் முகத்தை ஒருமுறை ஏறிட்டு ஆராய்ந்து பார்த்தான். அதில் பொய்க்கான சுவடு எதுவும் தெரியவில்லை. அப்படி என்றால் அவர் சொல்வது முற்றிலும் உண்மை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.


பிறகு அந்த விஷயத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.


" ராகவன் சார்... அந்த சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி உங்க குடும்பம் நாலு திசையிலும் சிதறிப் போயிட்டதாகவும் அதில் உங்க பெரிய மகளைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கடலுக்கு இரையாகி விட்டாங்கன்னு நீங்க முடிவு பண்ணி இருக்கீங்க அப்படித்தானே...?"


" ஆமாம் நீங்க சொல்றது சரிதான்..."


" ஆனா உங்க மனைவி சுழலில் சிக்கி ஒரு ஓரமா கரை ஒதுங்கி இருக்காங்க, அங்கே இருந்த மீனவர்கள் அவங்கள காப்பாத்தி இருக்காங்க, அங்கே அவங்களுக்கு பிரசவம் ஆயிருக்கு பிரசவத்திலேயே அவங்க உயிர் புரிஞ்சிடுச்சு அதே இடத்திலேயே அவங்க இறந்துட்டாங்க." சொல்லிவிட்டு ராகவனின் முகத்தை பார்த்தான்.


" அப்போ குழந்தை என்னுடைய குழந்தை...?" பாசமுள்ள தகப்பனின் பரிதவிப்பை உணர முடிந்தது.


"உங்க குழந்தை உயிரோட தான் இருந்திருக்கு... குழந்தையை ஒரு மீனவர் தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு போயிருக்கார். நாலைந்து நாட்கள் குழந்தையை வைத்து பாதுகாத்து இருக்கார். அதன் பிறகு போலீஸ் கேஸ் என்று ஏதாவது வந்துவிடுமோ என்ற பயத்தில், அதே சுனாமியில் தன் ஒரே குழந்தையை பறிகொடுத்த ஒரு தம்பதிக்கு தத்து கொடுத்து விட்டார். அன்றிலிருந்து அவங்க வீட்ல தான் உங்க குழந்தை வளருது.


"இப்போ பதினேழு வயசு இருக்கு... ஆம்பளப் புள்ளையா பொம்பள புள்ளையா...?" என்றார் குரல் நடுக்கத்தோடு.


" பையன் தான் உங்க சாயல்ல கிட்டத்தட்ட உங்கள மாதிரி தான் இருக்கிறான்...?"

ராகவனின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. அதற்கு காரணம் அவருடைய மனைவி தனக்கு மூன்றாவது பிறக்கப்போவது கண்டிப்பா ஆண் குழந்தை தான் என்று தெள்ள தெளிவாக சொன்னாள். ஒருவேளை இதுவும் பெண்ணா இருந்தா என்ன பண்ணுவே என்று இவர் கேட்ட போது... இல்ல உங்கள மாதிரியே ஒரு ஆண்குழந்தை கண்டிப்பா பிறக்கும் என்று அன்று இவர் மனைவி தீர்மானமாய் சொன்னது அவருக்கு ஞாபகம் வந்தது.


" இப்போ அந்த பையன் எங்க இருக்கான் எந்த ஊர்ல இருக்கான்?" என்றார்.


" இங்கதான் சென்னையில தான் அதுவும் எங்க வீட்டுல தான் இருக்கான்."

கார்த்திக்கின் மனம் காலையில் ராஜேந்திரனை அழைத்து வரும் போது நடந்த விஷயங்களை தேடி ஓடியது.

ராஜேந்திரன் உங்க பையன் தான் நீங்க இல்லாம ரொம்பத் தவிச்சுப் போயிட்டான். அப்பா எப்ப வருவாரு அப்பா எப்ப வருவாருன்னு அவன் கேள்விக்கு என்னால பதில் சொல்லவே முடியவில்லை. இந்த அளவுக்கு அவன் பாசமா இருப்பான்னு நான் நினைச்சு கூட பாக்கல..."

"ஆமாங்க ஆமாங்க அப்பான்னா அவனுக்கு உசுரு...ம்ம்... என்ன பண்றது என் பொண்ணு கூட எம்மேல ரொம்ப பாசமா தான் இருந்துச்சு ஆனால் அது வாழத்தான் கொடுத்து வைக்கலியே..."

"ராஜேந்திரன் உங்க மனைவி உங்க பொண்ணப் பத்தியும் பையனை பத்தியும் சொன்னாங்க...மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு..."

"ஆமாங்க பெத்த புள்ள கூட இந்த அளவுக்கு பாசமாக இருக்குமான்னு தெரியல?? எனக்கு அவன் கடவுள் கொடுத்த பிள்ளை, எந்த சுனாமியில என் பொண்ண காவு கொடுத்தேனோ அதே சுனாமியில கிடைச்சவன்தான் என் பையன் இதெல்லாம் என் மனைவி உங்க கிட்ட சொன்னாங்களா நான் ஏதாவது ஒளறிக்கிட்டு இருக்கேனா...?"

" எல்லா விஷயத்தையும் உங்க மனைவி வள்ளி சொல்லிட்டாங்க இராஜேந்திரன். அந்த குழந்தையை உங்ககிட்ட கொடுக்கும்போது அந்த குழந்தையோட அம்மா போட்டு இருந்ததா ஒரு செயினை உங்ககிட்ட கொடுத்தாங்களாமே..."

" ஆமா சார் இத்தனை வருஷமா அந்த செயினை என் கழுத்துல தான் போட்டு இருக்கே இதோ இதுதான்..." என்று தன் கழுத்தில் இருந்த அந்த செயினை கழற்றி கார்த்திக்கிடம் கொடுத்தான்.

'...…......'

"கார்த்திக் சார் எதுவும் பதில் சொல்ல மாட்றீங்களே என் மகன் உங்க வீட்டிலேயா இருக்கா..." ராகவன் வெகுநேரமாக இவனிடம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் அவர் குரல் பொறுமை இழந்து காணப்பட்டது.

"சாரி...சாரி ராகவன் சார்... ஏதோ ஞாபகத்துல இருந்துட்டேன். உங்களுக்கு அவனை பார்க்கணும்னு தோணுதுதானே..? என்கூட வாங்க உங்கள உங்க பையன பார்க்க கூட்டிட்டு போறேன்." அவர் சரி என்று தலையசைப்பார் அவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை பார்க்கவேண்டும் என்று காத்திருந்தான் கார்த்திக்.


ஆனால்...


" வேண்டாம் அவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் நான் அவனை பார்க்க விரும்பல..." என்று படபடப்போடு பேசியவர் அந்த அறையை விட்டு எழுந்து வெளியேறினார்.
 
Last edited:
Top