Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான்எந்தன்அந்தாதி..! - அத்தியாயம்-36

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-36

வன விலங்குகளான யானை, சிறுத்தை, கரடி, புலி, காண்டாமிருகம் போன்றவை சகஜமாக உலாவிக் கொண்டிருக்கும் வால்பாறை காட்டினை கண்காணித்து, கட்டிக்காக்கும் வனவர் பதவியில் இருக்கும் சுகந்தி, தேவி இருவரின் உதவியோடு காவல்துறையினர் கலெக்டர் அபிநயாவை தேடும் படலத்தை தீவிரப்படுத்தி இருந்தனர். அந்த போலீஸ் ஜீப்பில் மொத்தம் ஐந்து பேர் அமர்ந்து இருந்தார்கள். அதில் கார்த்திக்கும் ஒருவன். அவனுடைய சிந்தனை எல்லாம் வேழவேந்தனை பற்றியே இருந்தது. காரணம் காலையிலிருந்து அவனை ஆளையே காணோம் போன் பண்ணினால் போனும் ரீச்சாகவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனான் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

சூரியன் எட்டிப் பார்க்க முடியாத அடர்ந்த காட்டுக்குள் அவர்களின் பயணம் திரில்லிங்கான தேடுதல் வேட்டையோடு தொடங்கியது. மெல்லிய சிலிர்ப்புக் காற்றும், மரம் செடிகளின் வினோத வாசனைகளும், பேர் தெரியாத பூக்களின் வகையறாக்களும் சுவாசத்துக்குள் நுழைந்து இதயத்தை படபடக்க வைத்தது. ஜன்னல் கதவுகளை எப்போதும் சாத்திவையுங்க, மிரட்டும் தொனியில் வேண்டுகோள் வைத்தார் போலீஸ் ஜீப் ஓட்டுநர். மிகவும் குறுகிய பாதையில் ஜீப் வேகமாகச்செல்லும் போது பல மரக்கிளைகள் ஓரங்களில் உரசும் நிலையில், ஜன்னல் திறந்திருந்தால் சாமுராய் வாளைப்போல் தம்மை தாக்கும் என்பதால் அந்த எச்சரிக்கை சரிதான். எதிரே ஒரு சிறு கார் வந்தால் கூட உரசல் ஏதுமின்றி மிகவும் மெதுவாகவும் லாவகமாகவும் ஓட்டுநர் தனது திறமையைக் காட்டினார். சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அபிநயாவின் காரோ அல்லது அபிநயாவோ தென்படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே சென்றனர்.
வனவர் சுகந்தி., பாதை துண்டாக நின்ற ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்திவிட்டு கவனித்தார்கள். அந்த வெறிச்சோடிய காட்டுப்பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஏதோ அரிய வகை செடிகளை சேகரித்து கொண்டு இருந்தார்கள். இங்கு என்ன மாதிரி வேலை அவர்களுக்கு என்று தெரியவில்லை. போலீஸ் ஜீப் அவர்களை கடந்து சென்ற போது திடீரென்று ஜீப்பை நிறுத்துமாறு சொன்னாள் தேவி.

குழப்பத்தோடு அனைவரும் தேவியை பார்க்க அவள் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி அந்த இளைஞர்களை நோக்கி சென்றாள்.

"இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க..." என்று அவள் கேட்க,

" அவர்கள் இருவரும் போலீஸ் ஜீப்பை பார்த்துவிட்டு பயந்த முகத்தோடு நின்றிருந்தனர். திரும்பவும் தேவி அதே கேள்வியை கேட்டாள். இருவரில் ஒருவன் மட்டும் குரலை சரி செய்துக்கொண்டு பதில் கூறினான்.

" நாங்க சாப்புடுதுக்கு கெழங்கு வெட்ட வந்தோம்..." என்றான்.

"என்ன சொல்றாங்க மேடம்...?" கேட்டுக்கொண்டு ஜீப்பில் இருந்து கீழே இறங்கினான் கார்த்திக்.

"கஞ்சன்கோரை, கருணைக்கிழங்கு; கல்உறிஞ்சி, குதிரை தோண்டி, கூர்த்தை கிழங்கு,.." என்று அவர்கள் இருவரும் மாறிமாறி சொல்ல ஓகே ஓகே உங்க வேலையை நீங்க பாருங்க என்றபடி ஜீப்பில் வந்து ஏறினார்கள்.

சற்று தூரம் ஜீப் சென்றவுடன் என்ன மூலிகைச்செடிகள் பறிக்கிறார்கள் என்று என்று விசாரித்தாள் சுகந்தி. அதற்கு அவர்கள் சொன்ன பெயரை அடுக்கினாள் தேவி.

" என்னது இல்லையே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையே அங்கே கிழங்கெல்லாம் விளையாது. எனக்கு என்னமோ அவங்க மேல சந்தேகமா இருக்கு... சார் ஜீப்பை கொஞ்சம் திருப்புங்க அந்த ரெண்டு பசங்க இருந்த இடத்திற்கே திரும்பவும் போகணும்." என்றாள் சுகந்தி. குழப்பத்தோடு மற்றவர்கள் அவளை நோக்கினார்கள்.

"இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது அங்கே... போயிட்டு அவங்கள விசாரிக்கணும். அதுக்கப்புறம் தான் எதுவாயிருந்தாலும் தீர்மானமா சொல்ல முடியும்..." என்ற சுகந்தியின் குரல் எதையோ வலியுறுத்துவது போல் இருந்தது.

சற்று நேரத்தில் ஜீப் அந்த இரண்டு இளைஞர்கள் இருந்த இடத்திற்கு அருகே வந்து நின்றது. ஜீப் வந்து நின்றதை கவனித்த அவர்கள் மெல்ல ஓட்டம் எடுக்க ஆரம்பித்தனர். ஜீப்பில் இருந்து கீழே குதித்த போலீஸ்காரர்கள் நாலே பாய்ச்சலில் ஓடிச்சென்று வளைத்துப் பிடித்தனர்.

சுகந்தி அவனுடைய சட்டையை பற்றிக்கொண்டு

" டேய் உண்மைய சொல்லுங்க... இங்கே மலைச்சார் கிராமத்து பசங்க தானே? இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? சொல்லலைன்னா இங்கேயே சுட்டு பொசுக்கி டுவாங்கள்...இவங்கெல்லாம் யாருன்னு தெரியுதா...?" என்று மிரட்டும் தொனியில் கேட்டாள் வனவர் சுகந்தி,

" எங்களுக்கு ஒன்னும் தெரியாது எங்களை விட்டுடுங்க..." என்று அவர்கள் நடுங்கும் குரலில் பதில் சொன்னார்கள்.

" சரி உங்களுக்கு ஒன்னும் தெரியாது ஆனா கையில வச்சிருக்குற ஒடியன் பச்சிலை செடி அடிபட்ட காயத்துக்கு போடுற மூலிகை. யாருக்கு அடிபட்டு இருக்கு எங்க அடிபட்டு கிடக்குறாங்க... உண்மையை சொல்லுங்க?" என்றாள் சுகந்தி.

" இப்படி எல்லாம் கேட்டா இவனுங்க உண்மைய சொல்ல மாட்டானுங்க கொஞ்சம் இப்படி வாங்க சிஸ்டர் என்று ஒரு இளைஞனின் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார் இன்ஸ்பெக்டர். அவன் கன்னத்தில் குத்து பலமாக இறங்க ஐயோ அம்மா என்று கத்திக்கொண்டே சுருண்டு கீழே விழுந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு இளைஞன் கைகளை மேலே தூக்கி சரணடைந்தான்.

அந்த இளைஞனை மிரட்டி கேட்டதில் அவன் எல்லா உண்மைகளையும் சொன்னான். அதாவது அபிநயா வந்த காரை பள்ளத்தில் உருட்டி தள்ளியதாகவும் அடுத்து அவளை கடத்திட்டு போய் ஒரு கோவிலுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும் இரவெல்லாம் அந்த ஊர் மக்களின் பிரச்சினைகள் அவளோடு பேசி அவளுக்கு புரிய வைப்பதற்கான முயற்சி என்றும் இதற்கு ஒரு தலைவன் இருப்பதையும் சொன்னான். அவங்களேட கையில கட்டின கயிறு இறுகியதால் வெட்டுக்காயம் உண்டாகி ரத்தம் நிற்காமல் வந்துகிட்டே இருக்கு அதுக்காகத்தான் இந்த மூலிகைச் செடியை பறித்துவிட்டு வரச் சொன்னாங்க.. என்றான் அந்த இளைஞன்.

" சரி... எங்க கூட வந்து அந்த இடத்தை காட்டு..." என்று அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு அவர்கள் சுட்டிக்காட்டிய அந்த மலை கிராமத்தை நோக்கி பயணப்பட்டனர்.

கார்த்திக்கை பொருத்தவரை கிட்டத்தட்ட அபிநயாவை நெருங்கிவிட்டோம் என்று சந்தோஷம் பரவியது. அந்த நேரத்தில்தான் அபிநயாவின் உண்மையான அப்பா ராகவன் கால் பண்ணினார்.யோசனையோடு போனை ஆன் பண்ணி ஹலோ என்றான்.

"கார்த்திக் சார் நான் ராகவன் பேசுறேன். என்ன சார் நடக்குது நியூஸ பார்த்ததிலிருந்தே என்னால நிம்மதியா இருக்க முடியல... அபிநயாவுக்கு என்ன சார் ஆச்சு? இத்தனை நாளும் என் பொண்ணும் என் பையனும் எங்கேயோ ஒரு மூலையில் நல்லா இருக்காங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்போ நியூஸை பார்க்கும்போது என் பொண்ணை நினைச்சி ரொம்ப பயமாயிருக்கு, நான்தான் அவ அப்பான்னு அவளுக்கு தெரியாது தெரியவும் வேணாம். ஆனா அவதான் என் பொண்ணுன்னு என் மனசுக்கு தெரியுமில்லையா? அவளுக்கு ஒரு ஆபத்துன்னு சொன்னவுடனே இந்த மனசு சும்மா இருக்கமாட்டுதே' நீங்க எங்க இருக்கீங்க நான் வரட்டா..." என்று பதட்டத்துடன் பேசிக்கொண்டே போனார் ராகவன்.

"அவசரப்படாதீங்க ராகவன் சார் அபிநயாவை தேடி கிட்டு இருக்கோம் அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்துல கண்டுபிடிச்சிடுவோம். அதுக்கு அப்புறம் உங்களுக்கு கால் பண்றேன்..."

" கார்த்திக் சார் நீங்க நேத்து பேட்டி கொடுத்ததை நியூஸ்ல பார்த்தேன் அதுமட்டுமல்ல உங்க பக்கத்துல அந்தத் தம்பி் வேழவேந்தன் நின்னுட்டு இருந்துச்சு அப்படின்னா..." அடுத்து ராகவன் சொன்ன அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியில் பேச்சிழந்து போனா்ன் கார்த்திக். இத்தனைநாளும் தெரியாமல் இருந்த காதல் கதையை ராகவன் வாயால் கேட்டபோது கார்த்திக்கின் தலையில் இடி விழுந்ததுப்போல் இருந்தது.

கார்த்திக்கின் வெளிறிப்போன முகத்தைப் பார்த்த இன்ஸ்பெக்டர் "சார் என்ன ஆச்சு சார்...?" என்று மெல்ல கேட்க,

"ஒண்ணுமில்ல ஒரு சின்ன ஃபேமிலி பிராப்ளம்..." என்று சமாளித்தான்.

பயணம் முழுதும் வளைந்து வளைந்து பறக்கும் போலீஸ் ஜீப்புக்குள் கைப்பிடியை விடாது பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு மைலுக்கு ஒருமுறை ‘இது விலங்குகள் கடக்கும் பகுதி’ என்று யானை, புலி படங்களுடன் போர்டுகள் இருந்தன. திடீரென ஜுராசிக் பார்க் போல ஏதும் வந்து தாக்குமோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

சரேலென்று ஒரு ஒற்றையானை எதிரே வந்தால் என்ன ஆகும் என்று மனம் குயுக்தியாக யோசிக்கத் தொடங்கியது.

கரடு முரடான அந்தப் பாதையை கடக்க முடியாமல் போலீஸ் ஜீப் பாதியிலேயே நின்றுவிட மொத்த பேரும் அந்த இளைஞர்களோடு நடந்து சென்றனர்.

அந்தக் மலை கிராமத்துக்குள் இருந்த காளிகோயில் சுற்றிலும் முட்புதர்கள் நடுவில் கோவில் பார்ப்பதற்கு சற்று பயத்தை உண்டாக்கும் விதத்தில் இருந்தது. இவர்கள் போன சலசலப்பு கேட்டிருக்க வேண்டும் கோவில் உள்ளே இருந்து ஒருவன் வெளியில் வந்தான். அவனுடன் ஒரு இளம்பெண்ணும் உடன் வந்தாள். போலீஸ்காரர்களை பார்த்தவுடன் அவர்கள் ஆளுக்கு ஒரு திசையை நோக்கி ஓடத் தொடங்கினர் ஆனால் விடாமல் அவர்களை துரத்திக் கொண்டு போனார் இரண்டு போலீஸ்காரர்கள். கார்த்திக் கோவிலுக்குள் நுழைந்த போது அங்கே மர இருக்கை ஒன்று உடைந்த நிலையில் இருந்தது. அவிழ்த்து போடப்பட்ட தாம்புக்கயிறு ஒன்று கிடந்தது. அப்படி என்றால் அபிநயா இங்கே இல்லை ஒன்று வேறு இடத்திற்கு அவளை மாற்றி இருக்க வேண்டும் அல்லது தப்பித்துப் போய் இருக்க வேண்டும் என்று நினைத்த மறு நிமிடமே வெளியில் வந்தவன் பாக்கெட்டில் இருந்த கண்ணை கையில் எடுத்தான் அதற்குள் ஊர்க்காரர்கள் ஓரிருவர் ஒன்று கூட அபிநயாவை பற்றி அவர்களிடம் விசாரித்தான். அதற்குள் துரத்திக்கொண்டு போன இரண்டு போலீஸ்காரர்களும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்தார்கள் துப்பாக்கி முனையில் அவர்களை விசாரித்தபோது மொத்த உண்மையும் வெளிவந்தது.

அதாவது தங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்காததால் அரசாங்கத்தை மிரட்டும் விதமாக அந்த ஊர் இளைஞர்கள் திட்டம் தீட்டி அபிநயாவை கடத்தி இருக்கிறார்கள் அதற்கு உடந்தையாக இருந்தது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாயனின் மகள் பூவரசி. அபிநயாவும் தைரியத்துடன் தான் இருந்தார்கள் எங்கள் ஊர் மக்களின் பிரச்சினைகளை கேட்டு ஒவ்வொன்றாக தெரிந்துகொண்டார்கள் ஆனாலும் அவர்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் கட்டிப் போட்டு வைத்திருந்தோம் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயலவில்லை எங்களுடைய கோரிக்கை எல்லாம் ஒரே ஒருநாள் எங்களோடு தங்கியிருந்து எங்க பிரச்சனைகளை நேரில் கண்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அப்படியே அவங்கள துன்பப்படுத்தும் மிரட்டி பணம் கேட்க நாங்கள் எந்த விதத்திலும் முயலவில்லை என்று அங்கிருந்த அந்த இளைஞர்கள் எல்லாம் போலீசில் சரண் அடைந்தார்கள்.

அப்படின்னா அபிநயா மேடம் எங்க என்று மற்றவர்களின் கேள்விக்கு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இரவு வரை அவங்க இங்க தான் இருந்தாங்க விடிய காலையில கூட நாங்க அவங்களை பாத்துட்டு அவங்களுக்கு சாப்பிடறதுக்கு திணை வகைகளை எடுத்துட்டு போகலாம் வந்துட்டோம் காவல் காத்து இருந்த ஒரு பையன் திடீர்னு யாரோ அவனை அடிச்சு போட்டுட்டு அவங்கள காப்பாத்திட்டு போயிட்டாங்க இந்த காட்டிலிருந்து அவ்வளவு சீக்கிரமா தப்பித்துப் போக முடியாது காட்ட பத்தி தெரிஞ்சவங்கதான் உங்கள பாத்து இருக்காங்க அவங்க யாரு என்னன்னு தெரியல போற வழியில சிங்கம் புலி யானை நிறைய விலங்குகள் இருக்கும். இதில் இருந்து எப்படி காப்பாற்றி அவங்கள கூட்டிட்டு போனாங்க சத்தியமா எங்களுக்கு தெரியாது என்று ஊர்மக்கள் மொத்த பேரும் கூக்குரலிட்டு சொல்ல ஒரு முறை சந்தேகத்தின் பெயரில் எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு சோர்வோடு அருகில் இருந்த மரக்கட்டை மேல் அமர்ந்தான் கார்த்திக்.

***
அதிகாலை வேளையில்.., பாதங்கள் படாத காடுகளில் சூழ்ந்திருக்கும் பனிப் பொழிவுகளுக்குள் நுழையும் தருணங்கள் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாகவே கொள்ளலாம். மழை விரட்ட ஓடி விளையாடும் சிறு பிள்ளைகளின் ஞாபகத்தில் காடு விரிந்து கொண்டே இருக்கிறது.

மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வெளியே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சிகளென இது எதுவும் அந்த இருவரின் கருத்தை கவரவில்லை. மாறாக தங்கள் மனதுக்குள் ஆயிரமாயிரம் போராட்டத்தோடு அமர்ந்திருந்தனர்.

"அபிநயா இதையாவது கொஞ்சம் சாப்பிடு... ரொம்ப சோர்வா இருக்கே எழுந்து நடக்கக் கூட முடியாத சூழ்நிலையில் எப்படி இங்கிருந்து போவது...?" என்று அருகிலிருந்த மரத்தில் இரண்டு பேரிக்காய்களைப் பறித்து அவளிடம் நீட்டினான் வேழவேந்தன்.

அவள் வேண்டாம் என்று மறுத்தாள். அவளின் பார்வை இலக்கற்று எங்கோ வெறித்தபடி இருந்தது.

" இந்த நடு காட்டிலே இப்படியே உட்கார்ந்து இருந்தால் என்ன அர்த்தம்? ரெண்டு பேரோட போனும் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு... இங்க இருந்து யாரையும் நாம தொடர்பு கொள்ளவும் முடியாது. பக்கத்துல தான் என்னுடைய கார் இருக்கு கொஞ்சம் ஒத்துழைச்சா மெல்ல நடந்து போய்விடலாம்."

"என்னால் நகரக் கூட முடியவில்லை தயவு செய்து தொந்தரவு பண்ணாதீங்க..." என்று முணுமுணுத்தாள் அபிநயா.

" அப்படினா உன்னை நான் தூக்கிட்டு தான் போகணும் வேற வழி இல்லே என்ன சொல்றே...?"

" இல்ல பரவாயில்ல உங்க தோளைப் பிடிச்சிக்கிட்டு நடக்க முயற்சி பண்றேன்." என்றவள் அவனுடைய கரங்களைப் பற்றி மெல்ல எழுந்தாள். அவளின் இடதுகையில் கசிந்த ரத்தத்தின் மேல் தன்னுடைய கர்சீப்பால் கட்டி இரத்தத்தை நிறுத்தியிருந்தான்.

அபிநயாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் முன் இருக்கையில் அமர வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் பண்ணினான்.

கரடுமுரடான சாலைகளை கடந்து மலை உச்சியில் இருந்து உருக்கிய வெள்ளியாய் கொட்டிக் கொண்டிருந்த அருவிக்கு அருகில் சென்று தண்ணீர் பிடிச்சிட்டு வந்து குடிக்க கொடுத்தான். மறுக்காமல் வாங்கி ஒரு மிடறு விழுங்கியவள் சற்று தெளிந்த முகத்தோடு நிமிர்ந்து அமர்ந்தாள்.

அடுத்து காரின் கண்ணாடியை மேலே ஏற்றி விட்டுவிட்டு,

"இப்போ சொல்லு அபிநயா அந்த ஊர்ல என்னதான் நடந்துச்சு?" என்றான்.

" அவர்கள் என்னை திட்டம் போட்டு கடத்தியது சட்டப்படி குற்றம் தான். ஆனால் எந்த நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் மேல் குற்றம் சாட்ட எனக்கு விருப்பமில்லை. மாவட்ட ஆட்சியாளர் அப்படின்னா மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் மக்களுடைய குறைகளை நேரில் சென்று விசாரித்து அதற்கான தீர்வையும் நிறைவேற்ற வேண்டும். அந்த விஷயத்துல எனக்கு முன்னாடி இருந்த கலெக்டர் இவர்கள் கொடுத்த எந்த மனுவையும் கன்சிடரே பண்ணவில்லை. அந்த கோபம் அந்த மலைகிராமத்து மக்களுக்கிடையே வேரூன்றி இருந்திருக்கிறது. நான் வந்த பிறகாவது இந்த பிரச்சினைகளை தீர்த்து இருக்கலாம் ஆனால் நானோ அப்போது நிம்மதி இல்லாத மனநிலையில் இருந்தேன். இதெல்லாம் கவனிக்காமல் விட்டது என்னுடைய கவனக் குறைவு தான். அவர்கள் என்னை கடத்தினார்கள் என்று சொல்வதைவிட அவர்களோடு ஒருநாள் இருந்து அவர்களின் குறைகளை நேரில் அறிந்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்."

" பிறகு ஏன் உன்னைக் கட்டிப் போட்டு இருந்தாங்க..."

" அது நான் அங்கிருந்து தப்பித்து போய் விடுவேன் என்று அவங்களுக்கு ஒரு பயம். நல்லவேளை பூவரசி உங்கள கூட்டிட்டு அங்க வந்தா... அவ உதவி செய்யவில்லைன்னா அங்கிருந்து வந்திருக்கவே முடியாது. ஆமா பூவரசிக்கும் என்னைக் கடத்தினவங்களுக்கும் கனெக்ஷன் இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க... போலீஸ்க்கு கூட தெரியாத இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிந்தது வேழவேந்தன்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

" அதுவா அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கோயமுத்தூர் மால்ல ஒரு பிரேஸ்லெட் வாங்குனீயே ஞாபகம் இருக்கா? அதைக்கூட கடையிலேயே விட்டுட்டு வந்துட்டியே? அந்த பிரேஸ்லெட்டை பூவரசி கையில பார்த்தேன். அப்படின்னா அவ தான் உன்னை கடத்தி இருக்கணும்னு நினைச்சேன். ஆனால் அவளுடைய காதலன் கடத்தி இருக்கிறான். அவளை மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டு விடுவேன் என மிரட்டி உருட்டி கேட்டபிறகுதான் உண்மைய சொன்னாள். அவளுடைய காதலன் தான் இவளுக்கு உன் கையில் இருந்த பிரேஸ்லெட்டை கழட்டி அன்பளிப்பாக கொடுத்திருக்கிறான்."

" இந்த விஷயத்தை நீங்க கண்டுபிடிச்சது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கு..." என்றாள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தபடி,

"ம்ம்... அபிநயாவுக்கு ஒன்னும் ஆகாதுன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.., ஆனாலும் அந்த காட்டுவாசி பசங்க போலீசுக்கு பயந்துகிட்டு எங்காவது நடுகாட்டில் விட்டிருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும்.., புலியோ சிங்கமோ அடிச்சு சாப்பிட்டு இருக்கும். அன்னைக்கு அதுகளுக்கு நீ இறையாகி இருப்பே..." என்று சொல்லிவிட்டு அவளின் முகத்தை கவனித்தான்.

உண்மையாகவே அவளுக்குள் ஒரு பயம் ஊடுருவத்தான் செய்தது.

"நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு அதுவே பரவாயில்லை என்று நினைக்கிறேன்" என்றாள் விரக்தியுடன்.

"அப்படி என்ன உனக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை..?" அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக காத்திருந்தான்.

" காரணமானவனே கேள்வி கேட்டால் என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?"
என்று பட்டென்று சொல்லிவிட்டு கண்ணீரை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் வாயிலிருந்து வரும் அந்த ஒற்றை வார்த்தைக்காகவே இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்தவன் போல மனதில் உள்ளதை அவளிடம் கொட்டினான்.

"அபி... என்ன சொல்றே அப்படின்னா நீ இவ்வளவு நாளும் என்னை வெறுக்கிற மாதிரி பேசினதெல்லாம்...!!"என்று கேட்டுக் கொண்டே அவளுடைய கரத்தை மெல்லப் பற்றினான்.

பற்றிய அவனின் கரத்தை தட்டிவிட்டாள் அபிநயா.

"நீங்க வேறு ஒருத்தியோட கணவன்... உங்களை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த ஜென்மத்தில் அது நடக்கவே நடக்காது... இப்படியே பிரிஞ்சு போய் விடுவோம். தயவுசெய்து என்ன ரிசார்ட்டில் இறக்கி விட்டுடுங்க..." அவள் கண்கள் கலங்கி இருந்தன.

அதைக் கேட்ட அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"அபி இதுவரை வேறு எந்த ஒரு பெண்ணையும் மனசால கூட நான் நினைத்ததுமில்லை, என் விரல்கள் எந்த பெண்ணையும் தீண்டியதுமில்லை. காரணம் என் வாழ்க்கையில் வந்த ஒரே பெண் நீ மட்டும் தான்.

அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா 'அப்பா மேல் சிலை கடத்தல் வழக்கு' பதிவான போது அதற்கு உடந்தையாக இருந்ததா என்னையும் பொலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு. விசாரணையில் அப்பா மட்டும்தான் சிலையை எடுத்துட்டு போனாருன்னு தெரியவர அவரை மட்டும் ஜெயில்ல போட்டாங்க, நான் வெளியில வந்துட்டேன். திரும்பவும் சொந்த ஊருக்கு வர எனக்கு விருப்பமில்லை. என்ன தனியா விட மனசு இல்லாம அம்மாவும் என் கூடவே வந்துட்டாங்கள். கோயம்புத்தூர் வந்து அங்க நகைகடை வைத்திருந்த ஒருவரிடம் டிரைவராக வேலையில சேர்ந்தேன். எனக்கும் அம்மாவுக்கும் அவங்க வீட்டிலேயே ஒரு சின்ன அறையையும் கொடுத்தார். ஒரு முறை ஊட்டியிலிருந்த அவருடைய பெண்ணையும் மருமகனையும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்தேன். வரும் வழியில் கொஞ்ச நேரம் நான் காரை ஓட்டுறேன்னு என்னிடமிருந்து காரை வாங்கி அவருடைய மருமகன் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த பஸ் எங்கள் காரில் மோதி அந்த விபத்து ஏற்பட்டது. நாற்பதடி பள்ளத்தில் உருண்டு விழுந்த காரில் நகைக் கடைக்காரரின் மகளும் மருமகனும் ஒரே நேரத்தில் இறந்துவிட, அந்த விபத்திலிருந்து நானும் அவங்க இரண்டு குழந்தைகளும் உயிர் பிழைத்தோம். அன்றிலிருந்து அந்த வீட்டுக்கு தத்துப் பிள்ளையாய் ஆகிப்போனேன். குழந்தைகளும் என்னை தான் அப்பா என்று என்று அழைக்க தொடங்கினார்கள். தாய் தகப்பன் இல்லாத அந்த குழந்தைகளை விட்டுடுட்டு வர மனதில்லாமல் அவருடைய பிஸ்னஸ்சையும் நானே பார்க்கத் தொடங்கினேன். இப்போ நீ தங்கியிருக்கிற ரிசார்ட்டோட ஓனர் கூட அவர்தான். வயதான காலத்தில் பிசினஸ்சையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவருக்கு கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்காக ஒரு ஷோரூம் வைத்து கொடுத்திருக்கிறார்... அதில் ஊரில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் சிலைகளையும் வாங்கி விற்று கொண்டிருக்கிறேன். உன்னை வைத்து நான் வடித்த சிலை மட்டும் அப்படியே என் அறையில் இருக்கிறது. நீ என்றாவது ஒருநாள் வருவாய் அதை உன்னிடம் காட்டலாம் என்று வைத்திருக்கிறேன்" என்று பெருமூச்சோடு கூறினான் வேழவேந்தன்.

" அப்புறம் எதற்கு என்னை வெறுப்பது போல்.. அதாவது உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று உங்க அக்கா கூட சொன்னார்களே ஏன் அந்த நாடகம்..."?"

"அதுக்கு முழுக்க முழுக்க காரணம் உன்னுடைய பெற்றோர்கள் தான் கொலை மிரட்டல் விடுத்தார்கள். என் சொந்த ஊருக்கே ஆளனுப்பி அபிநயாவை மறந்துவிட வேண்டும். மீண்டும் தேடி வந்தால் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். பயந்துபோன எங்க மாமா அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று சத்தியம் வேறு வாங்கிக் கொண்டார். மாமா இப்போது உயிரோடு இல்லை அந்த சத்தியமும் செல்லப்போவது இல்லை. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று அதுக்காக சொன்ன பொய் தான்."

அபிநயா மௌனமாக அமர்ந்திருந்தாள் அவள் முகத்தில் புயலடித்து ஓய்ந்த அமைதி தெரிந்தது.

அப்போது காரை கடந்துசென்ற இளம் ஜோடிகளை கவனித்தான் வேழவேந்தன். "கண்டிப்பா அவங்க கிட்ட செல்போன் இருக்கும் ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்று காரின் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினான்.

சற்று நேரத்தில் அந்த இளைஞனிடம் இருந்து போனை வாங்கிக்கொண்டு காருக்குள் வந்தவன் போனை ஸ்பீக்கரில் போட்டு கார்த்திக்கிடம் பேசினான்.

" ஹலோ கார்த்திக் சார் நான் வேழவேந்தன் பேசுறேன் சார்... அபிநயா மேடத்தை காப்பாத்தியாச்சி... அவங்க இப்போ எங்கூட தான் இருக்குறாங்க.. இந்த குரங்கு அருவிக்கு அடுத்து இன்னொரு அருவி இருக்கு இல்லையா அங்கதான் இப்போது இருக்கிறோம். நீங்க வந்தீங்கன்னா உங்ககிட்ட ஒப்படைத்து விடுவேன்." என்றான்.

மறுமுனை சற்று நேரம் அமைதியாக இருந்தது.

" ஹலோ சார் லைன்ல இருக்கீங்களா...?"

" லைன்லதான் இருக்கேன் வேழவேந்தன்.. அபிநயாவை என்கிட்ட ஒப்படைக்க வேண்டாம். நீங்களே பத்திரமா கூட்டிட்டு போங்க வழித்துணையாவும், வாழ்க்கைத் துணையாகவும், அவ கூட கடைசி வரை போக போறது நீங்க தான். என்னுடைய சீன் முடிஞ்சிடுச்சு... என்னுடைய டிராக்கில் வராத ரயிலுக்காக இத்தனை நாள் நான் காத்துகிட்டு இருந்துட்டேன். அது என்னுடைய முட்டாள்தனம். நான் ஹீரோவுமில்லை வில்லனுமில்லை என்னுடைய ரோல் கெஸ்ட் ரோல். கெஸ்ட் ரோல்னா வந்துட்டு உடனே போயிடனும். கடைசி வரைக்கும் வந்தா அது ஹீரோவா இருக்கணும் இல்லே வில்லனா இருக்கணும். நான் ரெண்டுமே இல்லை. நீங்கதான் ஹீரோ அபிநயாவோட ஹீரோ. இந்த விஷயம் தெரியாம இத்தனை நாள் இருந்தது என்னுடைய தப்புதான். உங்களுடைய காதலியை பத்திரமா உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். இனிமே அபிநயாவை பாக்கனும்னா மிஸஸ் வேழவேந்தனாகத்தான் பாக்கணும். ஓகே வாய்ப்பு இருந்தா உங்க கல்யாணத்துக்கு கெஸ்ட்டா கூப்பிடுங்க ஐமீன் சீப் கெஸ்ட் கூப்பிடுங்க கண்டிப்பா வரேன் குட் பை..." என்று போனை கட் பண்ணினான்.

கேட்டுக்கொண்டிருந்த இருவரின் கண்களும் கலங்கியது. உண்மையிலேயே கார்த்திக் வெரி கிரேட் என்றான் வேழவேந்தன்.

"அம்மாவுக்கு ஒரு போன் பண்ணி சொல்லிடறேன் அபிநயா.. அவங்க ரொம்ப பயந்து கிட்டு இருந்தாங்க." என்றவன் தன்னுடைய அம்மாவுக்கு கால் பண்ணி,

"அம்மா உங்க மருமக அபிநயா கிடைச்சுட்டா அவளை காப்பாத்தி கூட்டிட்டு வரேன்... கவலைப்படாம இருங்க" என்றான்.

அம்மாவின் சந்தோஷம் குரலில் வெளிப்பட்டது. போனை அந்த இளைஞனிடம் கொடுத்து கைகுலுக்கி நன்றி சொல்லிவிட்டு வந்தான்.

"அபிநயா கிளம்பலாமா இந்த அருவியும் அதனுடைய அழகையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்று தான் தோணுது. ஆனா நீ ஒண்ணுமே சாப்பிடலை பசியோட இருக்கே.., அதனால இன்னொரு நாளைக்கு இங்கே வரலாம்."

" கண்டிப்பா வரணும் வேழவேந்தன்... நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஹனிமூனுக்கு இதே வால்பாறைக்குதான் வரணும்..." என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு முகத்தை கவிழ்த்துக்கொண்டாள்.

"ஓ....!அத மறந்துட்டேனே?? என்றவன் அவளை நெருங்கி ஆவலோடு இறுக அணைத்து இதழ் பதித்தான். காட்டில் தனிமையும் காற்றுப்புகாத அந்த நெருக்கமும், அவர்களின் ஆழமான காதலை அழகுபடுத்தி ரசிக்க வைத்தது.

முற்றும்
 
Last edited:
என்னப்பா அதுக்குள்ளே கதையை முடிச்சுட்டீங்க?
நான் நினைத்த மாதிரியே வேழவேந்தனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை
ஓகே
கார்த்திக்கிடம் ராகவன் என்ன சொன்னார்?
கடைசிவரை ராகவன்தான் தன்னோட அப்பான்னு அபிநயாவுக்கு தெரியலையே
ஏதோ கொஞ்சம் குறைவது போலவே இருக்கு
முடிவு நிறைவாக இல்லைன்னு தோணுது, டெய்ஸி டியர்
 
Last edited:
அத்தியாயம்-36

வன விலங்குகளான யானை, சிறுத்தை, கரடி, புலி, காண்டாமிருகம் போன்றவை சகஜமாக உலாவிக் கொண்டிருக்கும் வால்பாறை காட்டினை கண்காணித்து, கட்டிக்காக்கும் வனவர் பதவியில் இருக்கும் சுகந்தி, தேவி இருவரின் உதவியோடு காவல்துறையினர் கலெக்டர் அபிநயாவை தேடும் படலத்தை தீவிரப்படுத்தி இருந்தனர். அந்த போலீஸ் ஜீப்பில் மொத்தம் ஐந்து பேர் அமர்ந்து இருந்தார்கள். அதில் கார்த்திக்கும் ஒருவன். அவனுடைய சிந்தனை எல்லாம் வேழவேந்தனை பற்றியே இருந்தது. காரணம் காலையிலிருந்து அவனை ஆளையே காணோம் போன் பண்ணினால் போனும் ரிலீசாகவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனான் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

சூரியன் எட்டிப் பார்க்க முடியாத அடர்ந்த காட்டுக்குள் அவர்களின் பயணம் திரில்லிங்கான தேடுதல் வேட்டையோடு தொடங்கியது. மெல்லிய சிலிர்ப்புக் காற்றும், மரம் செடிகளின் வினோத வாசனைகளும், பேர் தெரியாத பூக்கள் வகையறாக்களும் சுவாசத்தைக் உள்நுழைந்து இதயத்தை படபடக்க வைத்தது. ஜன்னல் கதவுகளை எப்போதும் சாத்திவைக்க, மிரட்டும் தொனியில் வேண்டுகோள் வைத்தார் போலீஸ் ஜீப் ஓட்டுநர். மிகவும் குறுகிய பாதையில் ஜீப் வேகமாகச்செல்லும் போது பல மரக்கிளைகள் ஓரங்களில் உரசும் நிலையில், ஜன்னல் திறந்திருந்தால் சாமுராய் வாளைப்போல் தம்மை தாக்கும் என்பதால் அந்த எச்சரிக்கை சரிதான். எதிரே ஒரு சிறு கார் வந்தால் கூட உரசல் ஏதுமின்றி மிகவும் மெதுவாகவும் லாவகமாகவும் ஓட்டுநர் தனது திறமையைக் காட்டினார். மலைவாழ் பெண்கள் இருபதுபேர் காட்டுக்குள் இருந்த காளி கோவிலில் நின்றிருந்தனர். சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அபிநயாவின் கார் அல்லது அபிநயா தென்படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே சென்றனர். வனவர் சுகந்தி., பாதை துண்டாக நின்ற ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்திவிட்டு அடர்ந்த கட்டுக்குள் இறங்கினாள். அந்த வெறிச்சோடிய காட்டுப்பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஏதோ அரிய வகை செடிகளை சேகரித்து கொண்டு இருந்தார்கள். இங்கு என்ன மாதிரி வேலை அவர்களுக்கு என்று தெரியவில்லை. போலீஸ் ஜீப் அவர்களை கடந்து சென்ற போது திடீரென்று ஜீப்பை நிறுத்துமாறு சொன்னாள் தேவி.

குழப்பத்தோடு அனைவரும் தேவியை பார்க்க அவள் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி அந்த இளைஞர்களை நோக்கி சென்றாள்.

"இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க..." என்று அவள் கேட்க,

" அவர்கள் இருவரும் போலீஸ் ஜீப்பை பார்த்துவிட்டு பயந்த முகத்தோடு நின்றிருந்தனர். திரும்பவும் தேவி அதே கேள்வியை கேட்டாள். இருவரில் ஒருவன் மட்டும் குரலை சரி செய்துக்கொண்டு பதில் கூறினான்.

" நாங்க சாப்புடுதுக்கு கெழங்கு வெட்ட வந்தோம்..." என்றார்.

"என்ன சொல்றாங்க மேடம்...?" கேட்டுக்கொண்டு ஜீப்பில் இருந்து கீழே இறங்கினான் கார்த்திக்.

"கஞ்சன்கோரை, கருணைக்கிழங்கு; கல்உறிஞ்சி, குதிரை தோண்டி, கூர்த்தை கிழங்கு,.." என்று அவர்கள் இருவரும் மாறிமாறி சொல்ல ஓகே ஓகே உங்க வேலையை நீங்க பாருங்க என்றபடி ஜீப்பில் வந்து ஏறினார்கள்.

சற்று தூரம் ஜீப் சென்றவுடன் என்ன மூலிகைச்செடிகள் பறிக்கிறார்கள் என்று என்று விசாரித்தாள் சுகந்தி. அதற்கு அவர்கள் சொன்ன பெயரை அடுக்கினாள் தேவி.

" என்னது இல்லையே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையே எனக்கு என்னமோ அவங்க மேல சந்தேகமா இருக்கு... சார் ஜீப்பை கொஞ்சம் திருப்புங்க அந்த ரெண்டு பசங்க இருந்த இடத்திற்கே திரும்பவும் போகணும்." என்றாள் சுகந்தி. குழப்பத்தோடு மற்றவர்கள் அவளை நோக்கினார்கள்.

"இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது அங்கே... போயிட்டு அவங்கள விசாரிக்கணும். அதுக்கப்புறம் தான் எதுவாயிருந்தாலும் தீர்மானமா சொல்ல முடியும்..." என்ற சுகந்தியின் குரல் எதையோ வலியுறுத்துவது போல் இருந்தது.

சற்று நேரத்தில் ஜீப் அந்த இரண்டு இளைஞர்கள் இருந்த இடத்திற்கு அருகே வந்து நின்றது. ஜீப் வந்து நின்றதை கவனித்த அவர்கள் மெல்ல ஓட்டம் எடுக்க ஆரம்பித்தனர். ஜீப்பில் இருந்து கீழே குதித்த போலீஸ்காரர்கள் நாலே பாய்ச்சலில் ஓடிச்சென்று வளைத்துப் பிடித்தனர்.

சுகந்தி அவனுடைய சட்டையை பற்றிக்கொண்டு

" டேய் உண்மைய சொல்லுங்க... இங்கே மலைச்சார் கிராமத்து பசங்க தானே? இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? சொல்லலைன்னா இங்கேயே சுட்டு பொசுக்கி டுவாங்கள்...இவங்கெல்லாம் யாருன்னு தெரியுதா...?" என்று மிரட்டும் தொனியில் கேட்டாள் வனவர் சுகந்தி,

" எங்களுக்கு ஒன்னும் தெரியாது எங்களை விட்டுடுங்க..." என்று அவர்கள் நடுங்கும் குரலில் பதில் சொன்னார்கள்.

" சரி உங்களுக்கு ஒன்னும் தெரியாது ஆனா கையில வச்சிருக்குற ஒடியன் பச்சிலை செடி அடிபட்ட காயத்துக்கு போடுற மூலிகை. யாருக்கு அடிபட்டு இருக்கு எங்க அடிபட்டு கிடக்குறாங்க... உண்மையை சொல்லுங்க?" என்றாள் சுகந்தி.

" இப்படி எல்லாம் கேட்டா இவனுங்க உண்மைய சொல்ல மாட்டானுங்க கொஞ்சம் இப்படி வாங்க சிஸ்டர் என்று ஒரு இளைஞனின் கண்ணத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் இன்ஸ்பெக்டர். அவன் கன்னத்தில் குத்து பலமாக இறங்க ஐயோ அம்மா என்று கத்திக்கொண்டே சுருண்டு கீழே விழுந்தான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு இளைஞன் கைகளை மேலே தூக்கி சரணடைந்தான்.

அந்த இளைஞனை மிரட்டி கேட்டதில் அவன் எல்லா உண்மைகளையும் சொன்னான். அதாவது அபிநயா வந்த காரை பள்ளத்தில் உருட்டி தள்ளியதாகவும் அடுத்து அவளை கடத்திட்டு போய் ஒரு கோவிலுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும் இரவெல்லாம் அந்த ஊர் மக்களின் பிரச்சினைகள் அவளோடு பேசி அவளுக்கு புரிய வைப்பதற்கான முயற்சி என்றும் இதற்கு ஒரு தலைவன் இருப்பதையும் சொன்னான். அவங்களேட கையில கட்டின கயிறு இறுகியதால் வெட்டுக்காயம் உண்டாகி ரத்தம் நிற்காமல் வந்துகிட்டே இருக்கு அதுக்காகத்தான் இந்த மூலிகைச் செடியை பறித்துவிட்டு வரச் சொன்னாங்க.. என்றான் அந்த இளைஞன்.

" சரி... எங்க கூட வந்து அந்த இடத்தை காட்டு..." என்று அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு அவர்கள் சுட்டிக்காட்டிய அந்த மலை கிராமத்தை நோக்கி பயணப்பட்டனர்.

கார்த்திகை பொருத்தவரை கிட்டத்தட்ட அபிநயாவை நெருங்கிவிட்டோம் என்று சிறு சந்தோஷம் பரவியது. அந்த நேரத்தில்தான் அபிநயாவின் உண்மையான அப்பா ராகவன் கால் பண்ணினார்.யோசனையோடு போனை ஆன் பண்ணி ஹலோ என்றான்.

"கார்த்திக் சார் நான் ராகவன் பேசுறேன். என்ன சார் நடக்குது நியூஸ பார்த்ததிலிருந்தே என்னால நிம்மதியா இருக்க முடியல... அபிநயாவுக்கு என்ன சார் ஆச்சு? இத்தனை நாளும் என் பொண்ணு எங்கேயோ ஒரு மூலையில் நல்லா இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா இப்போ நியூஸை பார்க்கும்போது ரொம்ப பயமாயிருக்கு நீங்க எங்க இருக்கீங்க நான் உங்கள பாக்க வரட்டா..." என்று பதட்டத்துடன் பேசிக்கொண்டே போனார் ராகவன்.

"அவசரப்படாதீங்க ராகவன் சார் அபிநயாவை தேடி கிட்டு இருக்கோம் அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்துல கண்டுபிடிச்சிடுவோம். அதுக்கு அப்புறம் உங்களுக்கு கால் பண்றேன்..."

" கார்த்திக் சார் நீங்க நேத்து பேட்டி கொடுத்ததை நியூஸ்ல பார்த்தேன் அதுமட்டுமல்ல உங்க பக்கத்துல அந்தத் தம்பியும் நின்னுட்டு இருந்துச்சு அப்படின்னா..." அடுத்து ராகவன் சொன்ன அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியில் பேச்சிழந்து போனாள் கார்த்திக்.

கார்த்திக்கின் வெளிறிப்போன முகத்தைப் பார்த்த இன்ஸ்பெக்டர் "சார் என்ன ஆச்சு சார்...?" என்று மெல்ல கேட்க,

"ஒண்ணுமில்ல ஒரு சின்ன ஃபேமிலி பிராப்ளம்..." என்று சமாளித்தான்.

பயணம் முழுதும் வளைந்து வளைந்து பறக்கும் போலீஸ் ஜீப்புக்குள் கைப்பிடியை விடாது பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு மைலுக்கு ஒருமுறை ‘இது விலங்குகள் கடக்கும் பகுதி’ என்று யானை, புலி படங்களுடன் போர்டுகள் இருந்தன. திடீரென ஜுராசிக் பார்க் போல ஏதும் வந்து தாக்குமோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

சரேலென்று ஒரு ஒற்றையானை எதிரே வந்தால் என்ன ஆகும் என்று மனம் குயுக்தியாக யோசிக்கத் தொடங்கியது.

கரடு முரடான அந்தப் பாதையை கடக்க முடியாமல் போலீஸ் ஜீப் பாதியிலேயே நின்றுவிட மொத்த பேரும் அந்த இளைஞர்களோடு நடந்து சென்றனர்.

அந்தக் மலை கிராமத்துக்குள் இருந்த காளிகோயில் சுற்றிலும் முட்புதர்கள் நடுவில் கோவில் பார்ப்பதற்கு சற்று பயத்தை உண்டாக்கும் விதத்தில் இருந்தது. இவர்கள் போன சலசலப்பு கேட்டிருக்க வேண்டும் கோவில் உள்ளே இருந்து ஒருவன் வெளியில் வந்தான். அவனுடன் ஒரு இளம்பெண்ணும் உடன் வந்தாள். போலீஸ்காரர்களை பார்த்தவுடன் அவர்கள் ஆளுக்கு ஒரு திசையை நோக்கி ஓடத் தொடங்கினர் ஆனால் விடாமல் அவர்களை துரத்திக் கொண்டு போனார் இரண்டு போலீஸ்காரர்கள். கார்த்திக் கோவிலுக்குள் நுழைந்த போது அங்கே மர இருக்கை ஒன்று உடைந்த நிலையில் இருந்தது. அவிழ்த்து போடப்பட்ட தாம்புக்கயிறு ஒன்று கிடந்தது. அப்படி என்றால் அபிநயா இங்கே இல்லை ஒன்று வேறு இடத்திற்கு அவளை மாற்றி இருக்க வேண்டும் அல்லது தப்பித்துப் போய் இருக்க வேண்டும் என்று நினைத்த மறு நிமிடமே வெளியில் வந்தவன் பாக்கெட்டில் இருந்த கண்ணை கையில் எடுத்தான் அதற்குள் ஊர்க்காரர்கள் ஓரிருவர் ஒன்று கூட அபிநயாவை பற்றி அவர்களிடம் விசாரித்தான். அதற்குள் துரத்திக்கொண்டு போன இரண்டு போலீஸ்காரர்களும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்தார்கள் துப்பாக்கி முனையில் அவர்களை விசாரித்தபோது மொத்த உண்மையும் வெளிவந்தது.

அதாவது தங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்காததால் அரசாங்கத்தை மிரட்டும் விதமாக அந்த ஊர் இளைஞர்கள் திட்டம் தீட்டி அபிநயாவை கடத்தி இருக்கிறார்கள் அதற்கு உடந்தையாக இருந்தது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாயனின் மகள் பூவரசி. அபிநயாவும் தைரியத்துடன் தான் இருந்தார்கள் எங்கள் ஊர் மக்களின் பிரச்சினைகளை கேட்டு ஒவ்வொன்றாக தெரிந்துகொண்டார்கள் ஆனாலும் அவர்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் கட்டிப் போட்டு வைத்திருந்தோம் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயலவில்லை எங்களுடைய கோரிக்கை எல்லாம் ஒரே ஒருநாள் எங்களோடு தங்கியிருந்து எங்க பிரச்சனைகளை நேரில் கண்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அப்படியே அவங்கள துன்பப்படுத்தும் மிரட்டி பணம் கேட்க நாங்கள் எந்த விதத்திலும் முயலவில்லை என்று அங்கிருந்த அந்த இளைஞர்கள் எல்லாம் போலீசில் சரண் அடைந்தார்கள்.

அப்படின்னா அபிநயா மேடம் எங்க என்று மற்றவர்களின் கேள்விக்கு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இரவு வரை அவங்க இங்க தான் இருந்தாங்க விடிய காலையில கூட நாங்க அவங்களை பாத்துட்டு அவங்களுக்கு சாப்பிடறதுக்கு திணை வகைகளை எடுத்துட்டு போகலாம் வந்துட்டோம் காவல் காத்து இருந்த ஒரு பையன் திடீர்னு யாரோ அவனை அடிச்சு போட்டுட்டு அவங்கள காப்பாத்திட்டு போயிட்டாங்க இந்த காட்டிலிருந்து அவ்வளவு சீக்கிரமா தப்பித்துப் போக முடியாது காட்ட பத்தி தெரிஞ்சவங்கதான் உங்கள பாத்து இருக்காங்க அவங்க யாரு என்னன்னு தெரியல போற வழியில சிங்கம் புலி யானை நிறைய விலங்குகள் இருக்கும் இதில் இருந்து எப்படி காப்பாற்றி அவங்கள கூட்டிட்டு போனாங்க சத்தியமா எங்களுக்கு தெரியாது என்று ஊர்மக்கள் மொத்த பேரும் கூக்குரலிட்டு சொல்ல ஒரு முறை சந்தேகத்தின் பெயரில் எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு சோர்வோடு அருகில் இருந்த மரக்கட்டை மேல் அமர்ந்தான் கார்த்திக்.

***
அதிகாலை வேளையில்.., பாதங்கள் படாத காடுகளில் சூழ்ந்திருக்கும் பனிப் பொழிவுகளுக்குள் நுழையும் தருணங்கள் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாகவே கொள்ளலாம். மழை விரட்ட ஓடி விளையாடும் சிறு பிள்ளைகளின் ஞாபகத்தில் காடு விரிந்து கொண்டே இருக்கிறது.

மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வெளியே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சிகளென இது எதுவும் அந்த இருவரின் கருத்தை கவரவில்லை. மாறாக தங்கள் மனதுக்குள் ஆயிரமாயிரம் போராட்டத்தோடு அமர்ந்திருந்தனர்.

"அபிநயா இதையாவது கொஞ்சம் சாப்பிடு... ரொம்ப சோர்வா இருக்கே எழுந்து நடக்கக் கூட முடியாத சூழ்நிலையில் எப்படி இங்கிருந்து போவது...?" என்று அருகிலிருந்த மரத்தில் இரண்டு பேரிக்காய்களைப் பறித்து அவளிடம் நீட்டினான் வேழவேந்தன்.

அவள் வேண்டாம் என்று மறுத்தாள். அவளின் பார்வை இலக்கற்று எங்கோ வெறித்தபடி இருந்தது.

" இந்த நடு காட்டிலே இப்படியே உட்கார்ந்து இருந்தால் என்ன அர்த்தம்? ரெண்டு பேரோட போனும் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு... இங்க இருந்து யாரையும் நாம தொடர்பு கொள்ளவும் முடியாது. பக்கத்துல தான் என்னுடைய கார் இருக்கு கொஞ்சம் ஒத்துழைச்சா மெல்ல நடந்து போய்வ
டலாம்."

"என்னால் நகரக் கூட முடியவில்லை தயவு செய்து தொந்தரவு பண்ணாதீங்க..." என்று முணுமுணுத்தாள் அபிநயா.

" அப்படினா உன்னை நான் தூக்கிட்டு தான் போகணும் வேற வழி இல்லே என்ன சொல்றே...?"

" இல்ல பரவாயில்ல உங்க தோளைப் பிடிச்சிக்கிட்டு நடக்க முயற்சி பண்றேன்." என்றவள் அவனுடைய கரங்களைப் பற்றி மெல்ல எழுந்தாள். அவளின் இடதுகையில் கசிந்த ரத்தத்தின் மேல் தன்னுடைய கர்சீப்பால் கட்டி இரத்தத்தை நிறுத்தியிருந்தான்.

அபிநயாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் முன் இருக்கையில் அமர வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் பண்ணினான்.

கரடுமுரடான சாலைகளை கடந்து மலை உச்சியில் இருந்து உருக்கிய வெள்ளியாய் கொட்டிக் கொண்டிருந்த அருவிக்கு அருகில் சென்று தண்ணீர் பிடிச்சிட்டு வந்து குடிக்க கொடுத்தான். மறுக்காமல் வாங்கி ஒரு மிடறு விழுங்கியவள் சற்று தெளிந்த முகத்தோடு நிமிர்ந்து அமர்ந்தாள்.

அடுத்து காரின் கண்ணாடியை மேலே ஏற்றி விட்டுவிட்டு,

"இப்போ சொல்லு அபிநயா அந்த ஊர்ல என்னதான் நடந்துச்சு?" என்றான்.

" அவர்கள் என்னை திட்டம் போட்டு கடத்தியது சட்டப்படி குற்றம் தான். ஆனால் எந்த நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் மேல் குற்றம் சாட்ட எனக்கு விருப்பமில்லை. மாவட்ட ஆட்சியாளர் அப்படின்னா மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் மக்களுடைய குறைகளை நேரில் சென்று விசாரித்து அதற்கான தீர்வையும் நிறைவேற்ற வேண்டும். அந்த விஷயத்துல எனக்கு முன்னாடி இருந்த கலெக்டர் இவர்கள் கொடுத்த எந்த மனுவையும் கன்சிடரே பண்ணவில்லை. அந்த கோபம் அந்த மலைகிராமத்து மக்களுக்கிடையே வேரூன்றி இருந்திருக்கிறது. நான் வந்த பிறகாவது இந்த பிரச்சினைகளை தீர்த்து இருக்கலாம் ஆனால் நானோ அப்போது நிம்மதி இல்லாத மனநிலையில் இருந்தேன். இதெல்லாம் கவனிக்காமல் விட்டது என்னுடைய கவனக் குறைவு தான். அவர்கள் என்னை கடத்தினார்கள் என்று சொல்வதைவிட அவர்களோடு ஒருநாள் இருந்து அவர்களின் குறைகளை நேரில் அறிந்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்."

" பிறகு ஏன் உன்னைக் கட்டிப் போட்டு இருந்தாங்க..."

" அது நான் அங்கிருந்து தப்பித்து போய் விடுவேன் என்று அவங்களுக்கு ஒரு பயம். நல்லவேளை பூவரசி உங்கள கூட்டிட்டு அங்க வந்தா... அவ உதவி செய்யவில்லைன்னா அங்கிருந்து வந்திருக்கவே முடியாது. ஆமா பூவரசிக்கும் என்னைக் கடத்தினவங்களுக்கும் கனெக்ஷன் இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க... போலீஸ்க்கு கூட தெரியாத இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிந்தது வேழவேந்தன்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

" அதுவா அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கோயமுத்தூர் மால்ல ஒரு பிரேஸ்லெட் வாங்குனீயே ஞாபகம் இருக்கா? அதைக்கூட கடையிலேயே விட்டுட்டு வந்துட்டியே? அந்த பிரேஸ்லெட்டை பூவரசி கையில பார்த்தேன். அப்படின்னா அவ தான் உன்னை கடத்தி இருக்கணும்னு நினைச்சேன். ஆனால் அவளுடைய காதலன் கடத்தி இருக்கிறான். அவளை மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டு விடுவேன் என மிரட்டி உருட்டி கேட்டபிறகுதான் உண்மைய சொன்னாள். அவளுடைய காதலன் தான் இவளுக்கு உன் கையில் இருந்த பிரேஸ்லெட்டை கழட்டி அன்பளிப்பாக கொடுத்திருக்கிறான்."

" இந்த விஷயத்தை நீங்க கண்டுபிடிச்சது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கு..." என்றாள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தபடி,

"ம்ம்... அபிநயாவுக்கு ஒன்னும் ஆகாதுன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.., ஆனாலும் அந்த காட்டுவாசி பசங்க போலீசுக்கு பயந்துகிட்டு எங்காவது நடுகாட்டில் விட்டிருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும்.., புலியோ சிங்கமோ அடிச்சு சாப்பிட்டு இருக்கும். அன்னைக்கு அதுகளுக்கு நீ இறையாகி இருப்பே..." என்று சொல்லிவிட்டு அவளின் முகத்தை கவனித்தான்.

உண்மையாகவே அவளுக்குள் ஒரு பயம் ஊடுருவத்தான் செய்தது.

"நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு அதுவே பரவாயில்லை என்று நினைக்கிறேன்" என்றாள் விரக்தியுடன்.

"அப்படி என்ன உனக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை..?" அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக காத்திருந்தான்.

" காரணமானவனே கேள்வி கேட்டால் என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?"
என்று பட்டென்று சொல்லிவிட்டு கண்ணீரை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் வாயிலிருந்து வரும் அந்த ஒற்றை வார்த்தைக்காகவே இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்தவன் போல மனதில் உள்ளதை அவளிடம் கொட்டினான்.

"அபி... என்ன சொல்றே அப்படின்னா நீ இவ்வளவு நாளும் என்னை வெறுக்கிற மாதிரி பேசினதெல்லாம்...!!"என்று கேட்டுக் கொண்டே அவளுடைய கரத்தை மெல்லப் பற்றினான்.

பற்றிய அவனின் கரத்தை தட்டிவிட்டாள் அபிநயா.

"நீங்க வேறு ஒருத்தியோட கணவன்... உங்களை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த ஜென்மத்தில் அது நடக்கவே நடக்காது... இப்படியே பிரிஞ்சு போய் விடுவோம். தயவுசெய்து என்ன ரிசார்ட்டில் இறக்கி விட்டுடுங்க..." அவள் கண்கள் கலங்கி இருந்தன.

அதைக் கேட்ட அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"அபி இதுவரை வேறு எந்த ஒரு பெண்ணையும் மனசால கூட நான் நினைத்ததுமில்லை, என் விரல்கள் எந்த பெண்ணையும் தீண்டியதுமில்லை. காரணம் என் வாழ்க்கையில் வந்த ஒரே பெண் நீ மட்டும் தான்.

அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா 'அப்பா மேல் சிலை கடத்தல் வழக்கு' பதிவான போது அதற்கு உடந்தையாக இருந்ததா என்னையும் பொலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு. விசாரணையில் அப்பா மட்டும்தான் சிலையை எடுத்துட்டு போனாருன்னு தெரியவர அவரை மட்டும் ஜெயில்ல போட்டாங்க, நான் வெளியில வந்துட்டேன். திரும்பவும் சொந்த ஊருக்கு வர எனக்கு விருப்பமில்லை. என்ன தனியா விட மனசு இல்லாம அம்மாவும் என் கூடவே வந்துட்டாங்கள். கோயம்புத்தூர் வந்து அங்க நகைகடை வைத்திருந்த ஒருவரிடம் டிரைவராக வேலையில சேர்ந்தேன். எனக்கும் அம்மாவுக்கும் அவங்க வீட்டிலேயே ஒரு சின்ன அறையையும் கொடுத்தார். ஒரு முறை ஊட்டியிலிருந்த அவருடைய பெண்ணையும் மருமகனையும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்தேன். வரும் வழியில் கொஞ்ச நேரம் நான் காரை ஓட்டுறேன்னு என்னிடமிருந்து காரை வாங்கி அவருடைய மருமகன் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த பஸ் எங்கள் காரில் மோதி அந்த விபத்து ஏற்பட்டது. நாற்பதடி பள்ளத்தில் உருண்டு விழுந்த காரில் நகைக் கடைக்காரரின் மகளும் மருமகனும் ஒரே நேரத்தில் இறந்துவிட, அந்த விபத்திலிருந்து நானும் அவங்க இரண்டு குழந்தைகளும் உயிர் பிழைத்தோம். அன்றிலிருந்து அந்த வீட்டுக்கு தத்துப் பிள்ளையாய் ஆகிப்போனேன். குழந்தைகளும் என்னை தான் அப்பா என்று என்று அழைக்க தொடங்கினார்கள். தாய் தகப்பன் இல்லாத அந்த குழந்தைகளை விட்டுடுட்டு வர மனதில்லாமல் அவருடைய பிஸ்னஸ்சையும் நானே பார்க்கத் தொடங்கினேன். இப்போ நீ தங்கியிருக்கிற ரிசார்ட்டோட ஓனர் கூட அவர்தான். வயதான காலத்தில் பிசினஸ்சையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவருக்கு கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்காக ஒரு ஷோரூம் வைத்து கொடுத்திருக்கிறார்... அதில் ஊரில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் சிலைகளையும் வாங்கி விற்று கொண்டிருக்கிறேன். உன்னை வைத்து நான் வடித்த சிலை மட்டும் அப்படியே என் அறையில் இருக்கிறது. நீ என்றாவது ஒருநாள் வருவாய் அதை உன்னிடம் காட்டலாம் என்று வைத்திருக்கிறேன்" என்று பெருமூச்சோடு கூறினான் வேழவேந்தன்.

" அப்புறம் எதற்கு என்னை வெறுப்பது போல்.. அதாவது உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று உங்க அக்கா கூட சொன்னார்களே ஏன் அந்த நாடகம்..."?"

"அதுக்கு முழுக்க முழுக்க காரணம் உன்னுடைய பெற்றோர்கள் தான் கொலை மிரட்டல் விடுத்தார்கள். என் சொந்த ஊருக்கே ஆளனுப்பி அபிநயாவை மறந்துவிட வேண்டும். மீண்டும் தேடி வந்தால் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். பயந்துபோன எங்க மாமா அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று சத்தியம் வேறு வாங்கிக் கொண்டார். மாமா இப்போது உயிரோடு இல்லை அந்த சத்தியமும் செல்லப்போவது இல்லை. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று அதுக்காக சொன்ன பொய் தான்."

அபிநயா மௌனமாக அமர்ந்திருந்தாள் அவள் முகத்தில் புயலடித்து ஓய்ந்த அமைதி தெரிந்தது.

அப்போது காரை கடந்துசென்ற இளம் ஜோடிகளை கவனித்தான் வேழவேந்தன். "கண்டிப்பா அவங்க கிட்ட செல்போன் இருக்கும் ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்று காரின் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினான்.

சற்று நேரத்தில் அந்த இளைஞனிடம் இருந்து போனை வாங்கிக்கொண்டு காருக்குள் வந்தவன் போனை ஸ்பீக்கரில் போட்டு கார்த்திக்கிடம் பேசினான்.

" ஹலோ கார்த்திக் சார் நான் வேழவேந்தன் பேசுறேன் சார்... அபிநயா மேடத்தை காப்பாத்தியாச்சி... அவங்க இப்போ எங்கூட தான் இருக்குறாங்க.. இந்த குரங்கு அருவிக்கு அடுத்து இன்னொரு அருவி இருக்கு இல்லையா அங்கதான் இப்போது இருக்கிறோம். நீங்க வந்தீங்கன்னா உங்ககிட்ட ஒப்படைத்து விடுவேன்." என்றான்.

மறுமுனை சற்று நேரம் அமைதியாக இருந்தது.

" ஹலோ சார் லைன்ல இருக்கீங்களா...?"

" லைன்லதான் இருக்கேன் வேழவேந்தன்.. அபிநயாவை என்கிட்ட ஒப்படைக்க வேண்டாம். நீங்களே பத்திரமா கூட்டிட்டு போங்க வழித்துணையாவும், வாழ்க்கைத் துணையாகவும், அவ கூட கடைசி வரை போக போறது நீங்க தான். என்னுடைய சீன் முடிஞ்சிடுச்சு... என்னுடைய டிராக்கில் வராத ரயிலுக்காக இத்தனை நாள் நான் காத்துகிட்டு இருந்துட்டேன். அது என்னுடைய முட்டாள்தனம். நான் ஹீரோவுமில்லை வில்லனுமில்லை என்னுடைய ரோல் கெஸ்ட் ரோல். கெஸ்ட் ரோல்னா வந்துட்டு உடனே போயிடனும். கடைசி வரைக்கும் வந்தா அது ஹீரோவா இருக்கணும் இல்லே வில்லனா இருக்கணும். நான் ரெண்டுமே இல்லை. நீங்கதான் ஹீரோ அபிநயாவோட ஹீரோ. இந்த விஷயம் தெரியாம இத்தனை நாள் இருந்தது என்னுடைய தப்புதான். உங்களுடைய காதலியை பத்திரமா உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். இனிமே அபிநயாவை பாக்கனும்னா மிஸஸ் வேழவேந்தனாகத்தான் பாக்கணும். ஓகே வாய்ப்பு இருந்தா உங்க கல்யாணத்துக்கு கெஸ்ட்டா கூப்பிடுங்க ஐமீன் சீப் கெஸ்ட் கூப்பிடுங்க கண்டிப்பா வரேன் குட் பை..." என்று போனை கட் பண்ணினான்.

கேட்டுக்கொண்டிருந்த இருவரின் கண்களும் கலங்கியது. உண்மையிலேயே கார்த்திக் வெரி கிரேட் என்றான் வேழவேந்தன்.

"அம்மாவுக்கு ஒரு போன் பண்ணி சொல்லிடறேன் அபிநயா.. அவங்க ரொம்ப பயந்து கிட்டு இருந்தாங்க." என்றவன் தன்னுடைய அம்மாவுக்கு கால் பண்ணி,

"அம்மா உங்க மருமக அபிநயா கிடைச்சுட்டா அவளை காப்பாத்தி கூட்டிட்டு வரேன்... கவலைப்படாம இருங்க" என்றான்.

அம்மாவின் சந்தோஷம் குரலில் வெளிப்பட்டது. போனை அந்த இளைஞனிடம் கொடுத்து கைகுலுக்கி நன்றி சொல்லிவிட்டு வந்தான்.

"அபிநயா கிளம்பலாமா இந்த அருவியும் அதனுடைய அழகையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்று தான் தோணுது. ஆனா நீ ஒண்ணுமே சாப்பிடலை பசியோட இருக்கே.., அதனால இன்னொரு நாளைக்கு இங்கே வரலாம்."

" கண்டிப்பா வரணும் வேழவேந்தன்... நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஹனிமூனுக்கு இதே வால்பாறைக்குதான் வரணும்..." என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு முகத்தை கவிழ்த்துக்கொண்டாள்.

"ஓ....!அத மறந்துட்டேனே?? என்றவன் அவளை நெருங்கி ஆவலோடு இறுக அணைத்து இதழ் பதித்தான். காட்டில் தனிமையும் காற்றுப்புகாத அந்த நெருக்கமும், அவர்களின் ஆழமான காதலை அழகுபடுத்தி ரசிக்க வைத்தது.

முற்றும்
Thanks நண்றி
 
என்னப்பா அதுக்குள்ளே கதையை முடிச்சுட்டீங்க?
நான் நினைத்த மாதிரியே வேழவேந்தனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை
ஓகே
கார்த்திக்கிடம் ராகவன் என்ன சொன்னார்?
கடைசிவரை ராகவன்தான் தன்னோட அப்பான்னு அபிநயாவுக்கு தெரியலையே
ஏதோ கொஞ்சம் குறைவது போலவே இருக்கு
முடிவு நிறைவாக இல்லைன்னு தோணுது, டெய்ஸி டியர்
என்னப்பா அதுக்குள்ளே கதையை முடிச்சுட்டீங்க?
நான் நினைத்த மாதிரியே வேழவேந்தனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை
ஓகே
கார்த்திக்கிடம் ராகவன் என்ன சொன்னார்?
கடைசிவரை ராகவன்தான் தன்னோட அப்பான்னு அபிநயாவுக்கு தெரியலையே
ஏதோ கொஞ்சம் குறைவது போலவே இருக்கு
முடிவு நிறைவாக இல்லைன்னு தோணுது, டெய்ஸி டியர்
முதலில் உங்களுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் மேடம்.

ராகவன் என்ன சொன்னார் என்பதை இன்னொருமுறை படித்துப் பாருங்கள் மேடம்.

அடுத்து கடைசிவரை அபிநயாவிற்கு அவளுடைய அப்பா யார் என்று தெரியாது ஏன்னா சின்ன வயசிலேயே அவள் தன்னுடைய பழைய நினைவுகளை இழந்துவிட்டாள். தெரிய வேண்டாம் மகள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று ராகவனும் விலகி சென்று விட்டார். இதற்கு முன்னாடி உள்ள அத்தியாயங்களை நினைவுகூர்ந்தால் புரியும்.

கடைசியில் பிரிந்துபோன பழைய காதலர்கள் இணைந்து விட்டார்கள் இதுதான் கதையின் முடிவு.
 
Last edited:
Top