Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 38

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 38
அருண் சொன்னதனால் கண்ணை மூடி இருந்தாளே தவிர அபியால் சற்றும் உறங்க முடியவில்லை ,அருண் என்ன செய்துகொண்டிருக்கிறானோ ,கட்டுக்கு மீறிப் போன நிலைமையை எப்படி சமாளிக்கிறானோ..என்று நெஞ்சு தடதடத்துக் கொண்டிருந்தாள்.எல்லாவற்றிக்கும் மேல் தான் உண்மையை சொல்லாமல் மறைத்ததையும் அதன் காரணத்தையும் அவனிடம் கூறி மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்ற உந்துதலும் அவளை அலைக்கழித்தது..
கண்ணை திறந்து பார்த்தாள்..அறையில் இருள் சூழ்ந்திருந்தது.இருள் கண்ணுக்கு பழகியதும் அறையில் தான் மட்டுமே இருப்பது தெரிந்தது, பூர்ணா இல்லை . .அவள் இருந்தாள் என்னை போக விடமாட்டாள் இது தான் சரியான சமயம் என்று எண்ணி …மெதுவாக எழுந்து வெளியேறினாள்.
அருண் எங்கே இருப்பான் என்று எப்படி தெரிந்து கொள்வது என்று யோசனையுடன் நடந்தவளை..
“அங்கையே நில்லு ..”என்ற அதிகாரக் குரல் திடுக்கிட்டு நிற்கசெய்தது.
அருணின் தாயார் அங்கே கண்களில் மிதமிஞ்சிய கோபத்துடன் நின்றிருந்தார்.
அவரது கண்களில் தெரிந்த வெறுப்பும் குரோதமும் அபியின் நெஞ்சில் ஊசியாக தைத்தது.
”என்ன தைரியம் இருந்தா ,உன் சொந்த வீடு மாதிரி நடு ராத்திரில உலா வருவ?”என்று வெறுப்பை உமிழ்ந்தார்.
“இல்லை ஆன்ட்டி,அருண்..”என்று தட்டுத்தடுமாறி பேசத்தொடங்கியவளை
“ஆன்ட்டியா? என்னை அப்படி கூப்பிடாத..உன்னையெல்லாம் நல்ல பொண்ணுன்னு நம்பி என் வீட்டுல சேர்த்ததுக்கு ,ஊரு சிரிக்கற மாதிரி பண்ணிட்ட ல?”
“நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க ,ஆன்..”
என்று தொடங்கியவள் கடைசிவார்த்தையை சொல்லமால் பாதியிலேயே விழுங்கினாள்.
“இப்ப தான் சரியா புரியுது எனக்கு..இவ்வளவு சொத்துக்கும் ஓரே வாரிசு அப்படியே வந்து ஒட்டிக்கலாம்ன்னு நினைச்சியா?நான்விட மாட்டேன்..இது எல்லாமே இவரோட சொந்த உழைப்பு ,தர்ம காரியத்துக்கு எழுதி வச்சாலும் வைப்போமே தவிர சொல்பேச்சு கேட்காத பிள்ளைக்கு குடுக்கமாட்டோம்,மனசுல வச்சிக்கோ..”என்றவரை அபி புரியாமல் பார்க்க..
“ஆஹா என்ன பிரமாதமான நடிப்பு,இப்படி அப்பாவி மாதிரி நடிப்புக்கெல்லாம் என் பையன் வேணா ஏமாறுவான் நான் ஏமாறாமாட்டேன்.”என்றார் சூடாக
அப்போது அங்கு வந்த அருணின் அப்பா..
“சித்ரா..இப்ப எதுக்கு அந்த பொண்ண திட்டுற?நம்ம பையன் மேல தப்ப வச்சிகிட்டு அடுத்தவீட்டு பொண்ணை எதுக்கு குறைசொல்லனும்?என்று மனைவியை கண்டித்தவர் ,அபியிடம் திரும்பி..
“இங்க பாரும்மா உனக்கும் எங்களுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை,உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு..”
அப்பாடா இவராவது கொஞ்சம் நியாயமாக பேசுகிறாரே.. என்று ஆறுதலாக உணரும் போதே அவரது அடுத்தடுத்த வார்த்தைகள் அவளது தலையில் கூடைதணலைக் கொட்டியது போல் இருந்தது..
“உன் மேலையும் தப்பில்லை,பையன் பார்க்க நல்லா இருக்கான் சொத்துபத்தும் இருக்குன்னு ஆசைபட்டுட்ட..ஆனா இங்க நிலைமை உனக்கு தெரியாது ரம்யா தான் எங்க குடும்பத்துக்கு ஏத்த மருமக,அவங்க குடும்பத்தோட எங்க குடும்பம் கொடுக்கல் வாங்கல் எல்லாவிதத்துலையும் தொடர்பு இருக்கு..இப்ப இந்த கல்யாணம் நடக்கலைன்ன தொழில் குடும்பம் ரெண்டையுமே அது பாதிக்கும்,அது மட்டுமில்லாம நான் ரம்யாவோட அப்பாவுக்கு வாக்கு குடுத்துட்டேன் ,குடுத்த வாக்குங்கறது எங்கள மாதிரி வியாபாரிகளுக்கு உயிர் மூச்சு மாதிரி,நான் இதுவரைக்கும் வாக்குதவறியதில்லை.அதுவும் என் மகனால,இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா அவன் என் மகனே இல்லைன்னு நான் தலை முழுகிடுவேன்.அப்புறம் ஒரு குடும்பத்தை பிரிச்ச பாவம் உன்னை தான் வந்து சேரும் ,அதுமட்டுமில்லை எங்களை மீறி நடக்குற கல்யாணத்தை நாங்க எந்த காலத்துலையும் ஏத்துக்க மாட்டோம்..புரிஞ்சி நடந்துப்பன்னு நினைக்கறேன்.”.
என்று கூறி நிறுத்திவிட்டு அபியை ஆழப்பார்த்தார்.வியாபாரி அவர் ,அவருக்கு தெரியாதா யாரிடம் எப்படி பேசி காரியம் சாதிக்க வேண்டும் என்று,அவருடைய இந்த தந்திரங்கள் எல்லாம் அவரது மகனிடம் செல்லுபடியாகாது என்று தெரியும் அதனால் அபியைப் பிடித்தார்,அவளாகவே விலகி போய்விட்டால் அருணால் ஒன்றும் செய்ய முடியாதே.
“உனக்கு பணம் எதாவது வேண்டும் என்றாலும் கேளுமா ஒன்னும் தப்பில்லை..”என்று தூண்டில் போடவும்
அபிக்கு உள்ளமெல்லாம் பதறிவிட்டது.ச்ச என்ன மாதிரி நினைத்துவிட்டார்கள்..அருணை நான் பணத்திற்காகவா விரும்பினேன் ,இப்படி கொச்சை படுத்திவிட்டார்களே..
அவளது முகத்தில் அடிவாங்கிய தோற்றம் கண்டு அவர் சிறிது தயங்கினார்.பணத்திற்காக வந்தவளில்லை என்பது அவளது முகம் மாறியதிலேயே தெரிந்தது..
அபி பேசாமல் திரும்பி நடக்க தொடங்கினாள்.
“அருண் குடும்பத்தோட இருக்கறதும் அனாதை ஆகுறதும் உன்கையில தான் இருக்கு ..என்ற அவரது கடைசி வார்த்தைகள் அவளது காதில் பட்டு அந்த வீடு முழுவதுமாக எதிரொலிப்பதாக ஒரு மாயை தோன்றியது.
பணத்துக்காக வந்தவள் என்று அவர்கள் கூறியபோதே இந்த உயிர் ஏன் பிரியவில்லை…என்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருந்தால் இப்படி கேட்டிருப்பார்கள்..?
“ச்ச என்ன மனிதர்கள்.. அருணின் பெற்றோர் இப்படி கொடூரமாக பேசக்கூடும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.அந்த வீட்டில் நிற்கும் ஒவ்வொரு கணமும் ஏதோ பெரிய பாரம் அவளை அழுத்தி,மூச்சு முட்ட செய்வது போல் உணர்ந்தாள்..தன்னை மகா மட்டமாக நினைத்த மனிதர்களுடன் ஒரே வீட்டில் அவர்கள் சுவாசிக்கும் காற்றையே தானும் சுவாசித்து உயிர்வாழ்வது கூடபாவம் என்று தோன்றிவிட ஒருநிமிடம் கூட அங்கிருக்க கூடாது என்று முடிவெடுத்தாள்.
அருணை நினைத்து கொஞ்சம் தயங்கிய போதும் ,இது அவளுடைய தன்மான பிரச்சனை அதை அருணுக்காக கூட விட்டுக் கொடுக்க முடியாது ,அருண் சென்னை வந்ததும் அவனிடம் பேசிக்கொள்ளலாம் இப்போது இந்த வீட்டிலிருந்து கிளம்புவது தான் முக்கியம் என்று முடிவெடுத்தாள்,இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் அவள் மூச்சடைத்தே செத்துவிடுவாள்.என்று நினைத்தவள் அதே வேகத்தில் அறைக்கு சென்று அங்கே கைக்கு கிடைத்த துணிகளை பையில் அடைத்துகொண்டு கிளம்பிவிட்டாள்.
வெளி கேட் வரை நடக்கும் போதே ரயில் நிலையத்திற்கு டாக்ஸி புக் செய்துவிட்டாள்.கேட்டின் அருகே நின்ற வாட்ச்மேனிடம் என்ன சாக்கு சொல்வதென்று அவள் யோசிக்கும் போதே அவன் அவளைப்பார்த்தும் மறுபேச்சின்றி கதவை திறந்துவிடவே சற்று திகைத்தாள்.ஒரு வேளை இதுதான் இந்த பணக்காரர்கள் வழக்கமோ என்று ஏளமனாக எண்ணி கசப்புடன் தோள்குலுக்கி அந்த உணர்வை புறந்தள்ளினாள்.ஆனால் அவள் அறியாதது ராஜாராம் வாட்ச்மேனுக்கு ஃபோன் செய்து அபி வந்தால் கதவை திறந்துவிடுமாறு கட்டளையிட்டிருந்தார் என்று.
அபி ரயில் நிலையம் சென்று சேரும் வரையிலும் எல்லாம் சரியாக நடந்தது..அவளது உள்ளே எரிந்த தீயே அவளை உந்தித்தள்ளியது..ஆனால் அங்கே சென்று சென்னைக்கு ரயில் எதுவும் இல்லை இனி வண்டி காலை 4 மணிக்கு தான் என்று அறிந்தும் ,முதல் தடங்கல் ஏற்பட்ட து..அப்போது தான் நேரம் பதினொன்றை கடந்திருந்தது..காலைவரை எப்படி நேரத்தை ஓட்டுவது?என்ற கவலை ஏற்பட்டது..ரயில் நிலையத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை அங்கங்கே வெறுந்தரையில் படுத்திருந்த சில முகங்கள் இவளை அசுவாரஸ்யமாக பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் வேலையில் ஆழ்ந்தன.
திரும்ப கிளம்பிச்செண்டு பஸ்நிலையம் செல்லாம் என்றாலும் இரவில் தனியே போவது எவ்வளவு தூரம் பாதுபகாப்பானது என்று தெரியவில்லை, வாணலிக்குத்தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிடக்கூடாது..ரயில் நிலையத்தில் ஆட்கள் இருப்பர்கள் ,இரவு முழுவதும் வெயிட்டிங்க் ரூமில் அமர்ந்திருந்துவிட்டு நாலு மணி வண்டியில் கிளம்பிவிடலாம் என்று தீர்மானித்தாள்.
வெயிடிங்க் அறையில் ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தனர்.மருந்துக்கு கூட ஒரு பெண் இல்லை,இருந்த சிலரும் ஆண்களே..அபிக்கு உள்ளுக்குள் உதைப்பாக இருந்தாலும் பந்தய குதிரையாக ஓடிய இதயத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.அந்த அறையிலிருந்த எல்லா கண்களும் அவளையே வெறிப்பதாக தோன்றியது..
நேரம் ஆக ஆக அவளுக்கு படபடப்பு அதிகரித்த து..யாரோ புதிதாக ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க எல்லாரும் சொல்லிவைத்தார் போல் அவளை பார்த்துவிட்டு சென்றனர்.சாய்ந்து அமரவும் பயந்து உடல் இரும்பென இறுகிப்போய் நத்தை வேகத்தில் ஊரும் கடிகாரமுள்ளை பார்த்திருந்தாள்.
அப்போது அவளது பார்வை வட்டத்தில் அருகில் யாரோ அமர்வது போல் தெரிய .. ஒருகணம் இதயம் நின்றுபோனது அவளுக்கு.அத்தனை இருக்கைகள் காலியாக இருக்க இவன் ஏன் தன்னருகில் வந்து அமர வேண்டும்?உறைந்து போய் அமர்ந்திருந்தாள் அபி..


அபியை காணவில்லை என்றதும் அருணுக்கு ஒன்றுமே புரியவில்லை,அவள் எங்கு போக முடியும் அதுவும் இந்த நேரத்தில் எதற்காக போக வேண்டும்,அவளுக்காக இங்கே நான் எல்லாரையும் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறேன், அது போதாது என்று என்னை இன்னும் பித்தம் பிடிக்கசெய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாளா?
அருண் அவசரமாக விரைந்து நடந்துகொண்டிருந்தான் அவனது மனதில் அதைவிட வேகமாக சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது..
அவனது வீட்டை அடந்ததும் அங்கே பூர்ணாவும் விக்கியும் கவலையும் பதற்றமுமாக நின்றிருந்தனர்.
“என்னா ஆச்சு பூர்ணா?”என்றான் அருண் அவசரமாக.
தெரியல அருண் எனக்கு மனசே சரி இல்லைன்னு விக்கி கூட வாக்கிங் போலாம்ன்னு வெளிய வந்தேன் ,அப்போ அபி நல்லா தூங்கிட்டு இருந்தா ,ஆனா வந்து பார்த்தா அவளைக் காணோம் ..ஃபோனும் சுவிட்ச் ஆஃப் ன்னு வருது.அவளோட பெட்டியையும் காணோம் அதான் பதறிப்போய் உன்னை கூப்பிடோம் ..
அருண் வேகமாக வீட்டினுள் சென்று கார் சாவியை எடுத்து வந்தான்,விக்கியும் கூட செல்ல பூர்ணா கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்திருந்தாள்.கேட்டின் முன் நிறுத்தி வாட்ச்மேனிடம் அபியைப் பற்றி விசாரித்தான்
“ஆமா தம்பி அந்த பொண்ணு,டாக்ஸி வரவழைச்சி போச்சிங்க ..என்றார்
“ஏன்ண்ணா. இந்த நேரத்துல போனா ஏன் எதுக்குன்னு கேக்க மாட்டீங்களா?என்று எறிந்துவிழுந்தான்
“நான் என்ன தம்பி பண்றது பெரிய ஐயா தான் ஃபோன் பண்ணி அந்த பொண்ணு வந்தா கதவ தொறந்து விட சொன்னாரு என்றார் வினையமாக.
இவரிடம் கோபத்தை காட்டி என்ன பிரயோஜனம்.என்று விரைந்து வெளியேறினான் அருண்..
அருணின் இறுகிய முகத்தை பார்த்த விக்கி “கவலைப் படாத டா அபிக்கு ஒன்னும் ஆகி இருக்காது..என்றான் ஆறுதலாக
எப்படி டா கவலைப் படாம இருக்கறது?தெரியாத ஊருல ,ராத்திரி நேரத்துல தனியா கிளம்பி போய்யிருக்கா…எப்படி கவலைப் படாம இருக்கறது?
அபி ஒன்னும் முட்டாள் கிடையாது ,அவங்களை பார்த்துக்க அவங்களுக்கு தெரியும் ..”
மண்ணாங்கட்டி ..எத்தனை நியூஸ் பார்க்குறோம்..கொஞ்சம் கூட அறிவு வேண்டாம் ? நாடு இருக்கற நிலமையில இந்த ராத்திரில கிளம்பி போற அளவுக்கு என்ன பிரச்சனை..? காலையில வரைக்கும் காத்திருக்க முடியாதா?

“எனக்கு இருக்கற பிரச்சனை போதாதா?இவ வேற ஏண்டா இப்படி பண்றா?இவளை காணாம நான் எவ்வளவு டென்ஷன் ஆவேன்னு கூட நினைச்சி பார்க்க மாட்டாளா?என்னை கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விட கூடாதுன்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்கா டா அவ?
கோபத்தில் ஸ்டியரிங்க் வீல் மீது ஓங்கி அறைந்தான் .
விக்கி செய்வதறியாது விழித்தான்..
டே விக்கி.. அவ ஊருக்கு தான் போயிருப்பா..நான் ரெயில்வே ஸ்டேஷன் போறேன். நீ டாக்ஸில பஸ் ஸ்டாண்ட் போய் பாரு அபியை பார்த்ததும் எனக்கு கால் பண்ணு..நல்லா தேடு டா..”என்று அவனை இறக்கிவிட்டுவிட்டு ரயில் நிலையம் சென்றான்.
அங்கே சென்று சென்னைக்கு ரயில் எப்போது என்று விசாரித்ததில் ,காலை தான் என்றனர்.அபி அதுவரை எங்கிருப்பாள் என்று யோசித்தவனுக்கு சட்டென்று தோன்றியது வெயிடிங்க் அறை
அபி யாரோ எதற்கு தன் அருகில் அமர வேண்டும் என்று உடல் விரைத்து எழுந்து ஓட தயாராக இருந்த நேரம்..
“சென்னைக்கு காலைல தான் ட்ரெயின்னு சொன்னாங்க,இப்பவே வந்து ,விடிய விடிய வெயிடிங்க் ரூம்ல காத்திருக்கனும்ன்னு வேண்டுதலா?”என்ற ஏளனக் குரலில் அபி விழுக்கென்று தலை நிமிர்த்தி பார்த்தாள்.
“எங்க போறதா உத்தேசம்?ஒரு வேளை வீட்டைவிட்டு ஓடிவந்த மாதிரி ஊரை விட்டே ஓடிப் போற மாதிரி எதாவது ப்ளான் இருக்கா?
“அருண் ப்ளீஸ்..”
என்றாள் அபி மன்றாடும் குரலில்
அவன் புருவங்களை ஆச்சரியமாக உயர்த்தி”தாங்க் காட் ,உனக்கு என் பேர் நியாபகம் இருக்கு ,நான் மொதல்ல இருந்து ஆரம்பிக்கனும்ன்னு நினைச்சேன்.”என்றான் இன்னும் எகத்தாளமாக..
“அருண்.”என்று கண்ணீர் குரலில் அழைத்துவிட்டு மேலும் பேசமுடியாமல் தொண்டை அடைத்தது அபிக்கு..
“சோ.. உனக்கு முன்னாடியே எல்லாம் தெரியும் ?”என்றான் கூர்மையாக அவளைப் பார்த்து குற்றம்சாட்டும் குரலில்.
அபி எந்த வித்திலும் தன்னை நியாயப்படுத்த முடியாததால் வார்த்தை எழாமல் திணறினாள்
“ஏன் சொல்லல?”என்றுகேட்டான் பாறையைவிட கடினமாக
“அருண்.அது..ஐ யம் சாரி..”என்று திக்கினாள்
“கோ டூ ஹெல் வித் யுவர் சாரி..”என்று அடிகுரலில் சீறினான்.
“உனக்கு இந்த நிச்சயதார்த்த விஷயம் முதல்லயே தெரிஞ்சிருந்தும் எங்கிட்ட ஏன் சொல்லல?சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனையும் சிக்கலும் வந்திருக்காதுல?நான் அப்பவே எங்க அப்பாகிட்ட பேசி சரி பண்ணி இருப்பேனே..நான் எவ்ளோவாட்டி கேட்டேன் ,என்ன ஆச்சு ன்னு அப்பலாம் உனக்கு சொல்லனும்னே தோணலையா?அவ்வளவு தான் நீ என் மேல வச்சிருக்கற அன்பா?
“அருண் இப்படிலாம் பேசாத ப்ளீஸ் “
என்று கெஞ்சினாள் அபி
“வேற எப்படி பேசுறது?சரி நீ உண்மைய தான் சொல்லல,ஆனா அதனால வந்த பிரச்சனையை எல்லாம் நான் தனி ஒருத்தனா சமளிச்சிட்டு இருக்கேன்,நீ எனக்கு ஹெல்ப் கூட பண்ண வேண்டாம்.. சும்மா இருந்திருந்தாலே போதும் ஆனா நீ இப்ப என்ன பண்ணி இருக்க ?இப்படி நடு ராத்திரில வீட்ட விட்டு கிளம்பி வந்திருக்க?என்னை பத்தி கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கமாட்டியா?நீ காணோம்ன்னு தெரிஞ்சதும் எவ்வளவு துடிச்சி போனேன் தெரியுமா?உனக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சதுக்கு இது தான் நீ செய்யுற கைமாறு இல்ல..?”
அவனுடைய குரலும் முகமும் அத்தனை வலியையும் வேதனையையும் பிரதிபலித்தது.
“நான் ஏன் வீட்டை விட்டு கிளம்பினேன் தெரியுமா?உங்க அப்பா அம்மா எவ்வளவு கேவலமா பேசினாங்க தெரியுமா?எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருந்தது ,என்னை பத்தி தப்பா நினைக்கறவங்க வீட்ல நான் எப்படி இருக்க முடியும் அதான் கிளம்பி வந்தேன்..”
“இவன் எப்படியோ போகட்டும்ன்னு..”
என்று முடித்தான் அருண்..
“அப்படி இல்லை அருண்..புரிஞ்சிக்கோ”
“ஏன் எப்பவுமே நான் தான் புரிஞ்சிக்கனுமா?ஒரு முறை கூட நீ புரிஞ்சிக்க கூடாதா? அவங்க பெரியவங்க அவங்களுக்கு ஏற்ப்பட்ட அவமானம் ஏமாற்றத்துனால எதாவது பேசி இருப்பாங்க,நீ எங்கிட்ட சொல்லி இருக்கனும் அதை விட்டுட்டு வீட்டை விட்டு வந்தா என்ன அர்த்தம் ?நான் வேணம்ன்னு முடிவு பண்ணிட்டேன்னு தானே அர்த்தம்..?
உனக்கு எப்பவும் உன்னோட ஃபீலிங்க்ஸ் உன்னோட வலி ,இது மட்டும் தான் முக்கியம் ..நான் எப்படி ஃபீல் பண்ணுவேன் எனக்கு எப்படி இருக்கும் எதுவும் நினைச்சி பார்க்க மாட்ட ,உனக்கு பிரச்சனைன்னதும் என்னை விட்டுட்டு வந்துடுவ?இதே உனக்கு ஒரு பிரச்சனைன்னா நான் இப்படி வருவேனா அபி சொல்லு?
அப்பவே ரம்யா சொன்னா அபி ஒரு சுயநலவாதின்னு,அவகிட்ட பெருசா உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினேன் ..ஆனா இப்ப யோசிச்சிபார்த்தா அவ சொன்னது தான் சரி போல்,நான் எது செஞ்சாலும் உன்னை ,உன்னோட சந்தோஷத்தை முன்னிறுத்தி தான் செய்வேன் ஆனா உனக்கு எப்பவுமே நான் லாஸ்ட் பிரையாரிட்டி தான் ,இதுக்கு நான் அந்த ரம்யாவையே கல்யாணம் பண்ணிக்கலாம்.அட்லீஸ்ட் எங்க அப்பா அம்மாவாது சந்தோஷமா இருப்பாங்க..”என்றவனை
சட்டை காலரைப்பிடித்து இழுத்து தன் புறம் திருப்பினாள் அபி..
“என்னடா சொன்ன?அந்த ரம்யாவை கல்யாணம் பண்ணிப்பியா?இன்னொரு முறை சொல்லிப்பாரு உன்னை கொன்னுடுவேன்..ஆமா நான் சுயநலவாதிதான் நீ எனக்கு மட்டும் தான்ன்னு நினைக்கறதுல சுயநலவாதிதான் ..மனசு சரியில்லைன்னு கிளம்பி வந்தா உடனே நீ வேணாம்ன்னு முடிவுபண்ணிட்டதா அர்த்தமா?
ஆமாடா நான் தப்பு பண்ணிடேன் தான்.. என்னென்னமோ யோசிச்சி உங்கிட்ட உண்மைய சொல்லாம பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டேன்.அதுக்காக எனக்கு உன்மேல அன்பு இல்லைன்னு அர்த்தமா?இந்த உலகத்துலையே நான் அதிகமா நேசிக்கறது உன்னை தான் டா.இதுக்கூட தெரியாம பெரிய இவன் மாதிரி பேச வந்துட்டான் .என்ன சொன்ன?நீ வேணம்ன்னு விட்டுட்டு வந்தேன்னா?அது நான் சாகும் போதுதான் நடக்கும்..உனக்கு நான் தகுதியானவளான்னு கூட நினைச்சிருக்கேன் ஆனா ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டு போகனும்ன்னு நினைச்சதில்லை டா..நான் தப்பு பண்ணா என்னை வெறுத்துடுவியா?அந்த ரம்யாவ கட்டிக்கறேன்னு சொல்லுவியா?
என்று பெண்புலியாய் சீறிய அபியின் குரல் உடைந்து
“எங்கிட்ட எப்படிடா அப்படி சொல்ல முடிஞ்சது உன்னால..?”என்று விம்மலாக வெடித்தது.அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்
அருண் சுற்றும் முற்றும் பார்த்தான் எல்லோருக்கும் காட்சிப்பொருளாக தாங்கள் இருப்பதை கண்டு
“ஷ் அபி ,,எல்லாரும் பார்க்கறாங்க”என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்,ஆனால் அவளது அழுகை நின்றபாடில்லை..
அதனால் அவளை மெல்ல எழுப்பி நட த்திச் சென்று..`ஆள் நடமாற்றம் இல்லாத ப்ளாட்பாரத்தில் ஒரு இருக்கையில் அமர்த்தி தானும் அமர்ந்து கொண்டான்.
“சாரி அபி ..”என்றான் மெதுவாக
“எதுக்கு?”
“நான் அப்படி பேசி இருக்க கூடாது,நீ காணமல் போனதும் பைத்தியம் பிடித்தவன் மாதிரி ஆகிட்டேன்,அதான் நான் அவ்ளோ கோபமா பேசிட்டேன்..”
.என்று மன்னிப்பு கேட்டான்..
“பரவால்ல,உன்னோட இடத்துல யார் இருந்தாலும் அப்படி தான் பேசி இருப்பாங்க,நான் பண்ணதும் தப்பு தானே..”என்றாள் சமாதானமாக..
சற்று தயக்கத்துடன் அருண் ..”அபி என் பேரன்ட்ஸ் அவங்க கோபத்துல பேசினதுக்கு அவங்களுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்..அவங்க இயல்புல கெட்டவங்க கிடையாது சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்க அப்படி பேசிட்டாங்க அதுக்காக அவங்களை வெறுத்துடாத..”என்றான் கன்றிய முகத்துடன்
அபிக்கு புரிந்தது அவள் அவர்களை வெறுத்துவிடுவாளோ என்று அஞ்சுகிறான்
கவலைப்படாத அவங்க எவ்வளவு மோசமா பேசினாலும் நான் அவங்களை வெறுக்க மாட்டேன் .”என்று உறுதியளித்தாள்.
“ஏன்?”
“ஏன் ன்னா?அவங்க உன்னோட பேரன்ட்ஸ்..உன்னோட சம்பந்தப் பட்ட எதையுமே என்னால வெறுக்க முடியாது அருண்..”
“ஏன் அப்படி?”
என்றான் கண்களில் ஆசை மின்ன
“ஏன்னா..ஐ லவ் யூ டா ,ஐ லவ் யூ சோ மச்..”என்றாள் இதயத்தின் காதல் அத்தனையும் அந்த மூன்று வார்த்தைகளில் நிரப்பி..
அருண் கண்மூடி அந்த ஆனந்த தருணத்தை மனதினில் சிறைபிடித்த கணம் ,அங்கே மணிக்கூண்டில் சரியாக பன்னிரெண்டு காட்டியது..அருணுக்கு அவனது பிறந்த நாள் பரிசும் கிடைத்தது..
பூங்காற்று மலர்கொடியை வாரியணைப்பது போல ..அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து..
“ஐ லவ் யூ டூ டியர்..”என்றான்..அருண்
அபி என்றுமில்லா காதலுடனும் நேசத்துடனும் அவன் அணைப்பில் சரணடைந்தாள்.


Epilogue onnu podalaam nu irukkuen, innikkku dhaane last date .. inikkulla type panna mudinjaa , epilogue kattaaayam post pannuren .. konjam wait pannunga ..??
 
Last edited:
ஜூலை 20 வரை டேட் இருக்குனு சொல்லிருந்தாங்களே??????
தெரியலை ,ரிஸ்க் எடுக்க வேண்டாம்ன்னு பார்க்கறேன்.இன்னிக்குள்ள எபிலாக் போடுறேன்.
 
Top