Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 34

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 34

அந்த பெரிய பங்களா வீட்டின் விண்ணைமுட்டியது போன்ற பெரிய கேட்டின் முன்னர் டாக்ஸி நின்றதும் மூவரும் ஆச்சரியமாக அருணைப் பார்த்தனர்..

“என்ன அப்படி பார்க்கறீங்க ,இது எங்க வீடு தான் வெல்கம்..” என்றுவிட்டு வாட்ச்மேனை அழைத்து கேட்டைத் திறக்க சொல்லிவிட்டு காரை உள்ளே விட சொன்னான் அருண் ,கேட்டிலிருந்து வீட்டின் முகப்பிற்கு செல்லவே அரை கிலோமீட்டர் தூரம் இருந்து.பெரிய தோட்டம் பச்சை பசேலென்றிருந்த புல்வெளி,விதவிதமான வண்ண மலர்கள் அழகாக வைக்கப்பட்டு பராமரிக்கபட்டு கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது..அபி விழியகல ஆச்சரியத்துடன் பார்த்துகொண்டே வந்தாள்..

வீட்டின் உள்ளே இன்னும் பிரம்மாண்டம் அதிகமாக இருந்தது.சினிமாவில் வரும் பணக்கார்களின் வீடு போல் பளபளவென்று இருந்தது.. கலைநயத்துடன் செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகள் அழகுணர்ச்சியுடன் சேர்த்து அதன் ஆடம்பரத்தையும் பறைசாற்றியது....

வீட்டினுள் சென்றதும் அருணின் பெற்றோர் இவர்களை இன்முகமாக வரவேற்றனர்.
அப்பா ராஜாராம் கனரகவாகனங்களுக்கு உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் வைத்திருந்தார்..அந்த ஊரில் பேர் சொல்லும் அளவுக்கு பெரிய செல்வந்தர் ..அம்மா சித்ரா தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தார்.

ராஜாராம் ,அருண் இன்னும் 25 ஆண்டுகளில் எப்படி இருப்பானோ அதன் நிகழ்கால நகலைப் போன்று இருந்தார்...8 மணிக்கெல்லாம் கிளம்புவதற்கு தயாராக பான்ட் மற்றும் சூட் சகிதம் கட்சிதமாக இருந்தார்.

அவருக்கு தனக்கு பிறகு அருண் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசை ஆனால் அவன் கம்ப்யூட்டர் தான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து அவனது எதிர்காலத்தை அவனுக்கு பிடித்த துறையில் அமைத்துக்கொண்டான் ..

அதில் அவருக்கு சிறிது வருத்தம் தான் என்றாலும் தன் மகன் அடுத்தவர் போட்ட பாதையில் நடக்காமல் தனக்கான பாதையை தானே உருவாக்குவது குறித்து அவர் பெருமிதமும் கொண்டிருந்தார்.

அருண் “அப்பா…என்று அவரை ஆசையுடன் கட்டிக்கொள்ள,பதிலுக்கு அவரும் அவனை அணைத்து ஒரு கணம் நெகிழ்ந்து போனார்..

அனைவரும் சிறு அறிமுகப் படலத்திற்கு பின்னர் ,ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர்.

விக்கி அருணினிடம் “டேய் மச்சான் ,நீ இவ்ளோ பெரிய ஜமீன் பரம்பரைன்னு சொல்லவே இல்லையே..”என்றான் ஆச்சரியத்துடன் ..

டேய் ஜமீன்லாம் ஒன்னும் இல்லை ,இதெல்லாம் எங்க அப்பாவோட உழைப்பு, இதுல நான் பெருமையா சொல்ல என்ன இருக்கு ?நான் உழைச்சி சொந்தமா வாங்கினது சென்னைல இருக்கற என்னோட டூ பெட் ரூம் அபார்ட்மென்ட் தான் அதுக்கும் இன்னும் 20 வருஷம் ஈஎம் ஐ கட்டணும்..” என்றான் விளையாட்டாக..

“ஆனா எனக்குல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா வேலையே செய்யாம லைஃப ஜாலியா என்ஜாய் பண்ணி இருப்பேன் ..”என்று பெருமூச்சுவிட்டான் விக்கி..

“அப்படி சொல்லு விக்கி ,நமக்கு கீழ நூறுபேர் வேலை பார்க்குறாங்க நாம எதுக்கு இன்னொருத்தர் கீழ வேலை செய்யனும் ?”என்று வாதாடினார் அப்பா..

“அப்பா நான் உங்க கிட்ட பல முறை சொல்லிட்டேன் எனக்கு உங்க பிஸ்னஸ்ல இன்டரெஸ்ட் இல்லைன்னு..”

“எங்களுக்கு இருக்கறது இவன் ஒரே பையன்,எங்க காலத்துக்குப் பின்னாடி பிஸினஸை யாரு பார்க்கறது?இதை நம்பி எத்தனை குடும்பங்கள் பிழைக்குது?அப்புறம் அவங்க கதி என்ன ?இதெல்லாம் சொன்னா இவனுக்கு புரியமாடேன்ங்குது..நீங்க கொஞ்சம் சொல்லுங்க பா
..” என்று மற்றவர்களையும் சம்பாஷணையில் இழுத்தார்....

“ஆமாடா அருண் அப்பா சொல்றதும் கரெக்ட் தான் ,இங்க ராஜா மாதிரி வாழறத விட்டுட்டு ஏன்டா எவனோ ஒரு வெளிநாட்டுக் காரனுக்கு அடிமை மாதிரி வேலை செய்யணும்..?” என்றான் விக்கி.

“நல்லா சொல்லுப்பா..” என்று மேலும் ஊக்கினார் அப்பா..

“அப்பா..உங்க காலத்துக்கு பின்னங்கற கதையெல்லம் எங்கிட்ட விடாதீங்க, உங்களுக்கு இருக்கற தெம்புக்கு இன்னும் 25 வருஷத்துக்கு நீங்க பிஸ்னஸ்ஸ பார்த்துப்பீங்க .அதுக்கப்புறம் உங்க பேரனோ பேத்தியோ வந்து டேக் ஓவர் பண்ணிக்குவாங்க,கவலைய விடுங்க…
டேய் விக்கி என்ன சொன்ன..? ராஜா மாதிரி வாழ்க்கையா?உனக்கு தெரியுமா எனக்கு சின்ன வயசா இருக்கும்போது எங்கப்பா நாய் மாதிரி வேலை பார்ப்பாரு…அவரை நான் வீட்ல பார்த்ததே இல்லை ..பேய் மாதிரி நடுராத்திரி தான் வீட்டுக்கு வருவாரு..பெத்த பிள்ளைய கூட பார்க்க முடியாம எதுக்கு இப்படி உழைக்கணும்?அப்படி சம்பாதிக்கற பணத்தால யாருக்கு என்ன பிரயோஜனம்? நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன் என்ன ஆனாலும் பிஸினஸ் மட்டும் பண்ணக்கூடாதுன்னு..”
என்றான் அருண் .

“உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?சந்தடி சாக்குல என்னை நாய் பேய் ன்னு திட்டு வேற, இதுக்கு மேல எதாவது சொன்னா இன்னும் மோசமா திட்டினாலும் திட்டுவான் “என்று வெற்றிகரமாக பின்வாங்கினார் அவர்..

அபியும் பூர்ணாவும் வெறும் பார்வையாளர்களாக பார்த்துக்கொண்டிருந்தனர்..

அதற்குள் ,அனைவருக்கும் காஃபி கொண்டுவந்த அருணின் அம்மா சித்ரா ..ஒவ்வொருவராக கோப்பையை கொடுத்தபடியே பேசினார்..

என்ன சொல்றது,ஒத்த பிள்ளை ,பெத்தவங்க கூட இல்லாம இப்படி கண்காணாம எங்கையோ இருக்கறதை நெனைச்சி என் மனசு எப்படி வேதனைப் படுது தெரியுமா?சும்மாவா பெரியவங்க சொன்னாங்க பெத்த மனசு பித்து,பிள்ளை மனசு கல்லுன்னு ..”என்று தன் பங்கிற்க்கு குறை கூறிவிட்டு பெருமூச்செறிந்தார்.

அவர் பார்ப்பதற்கு எளிமையாக பாந்தமாக இருந்தார். ஐம்பது வயதை கடந்திருந்த போதும் அருணுக்கு அக்கா என்று கூறும் அளவிற்கு இளமையாக தெரிந்தார்.ஒப்பணை மற்றும் உணவுக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார் போலும்..

“அம்மா,உங்களுக்கு என் கூட இருக்கனும்ன்னா கிளம்பி சென்னைக்கு வாங்க , அதைவிட்டுடு இப்படி எதுகை மோனையா வசனம் பேசாதீங்க..என்ன சொல்றீங்க இன்னிக்கு நைட்டே டிக்கெட் புக் பண்ணட்டுமா?என்றான் கேலியாக புருவம் உயர்த்தி..

டேய் உனக்கு வாய் ரொம்ப ஓவர் ஆகிடுச்சி,உன்னை எல்லாம் திருத்தவே முடியாது..போடா..”என்றார் அலுப்பாக.

“என்னம்மா அவ்ளோதானா?நான் இன்னும் உங்கிட்ட இருந்து நெறைய எதிர் பார்த்தேனே.சோ சாட்..”.என்று ஏமாற்றத்துடன் கூற அங்கு ஒரு சிரிப்பலை பரவியது..

அபிக்கு இதெல்லாம் பார்க்க ரொம்ப வியப்பாக இருந்தது..அருணும் அவன் பெற்றோரும் எவ்வளவு சாதாரணமாக சினேகிதர்கள் போல் பேசிக்கொள்கிறார்கள்...என்ன தான் அபியின் வீட்டில் பாசமாக இருந்தாலும் அப்பாவிடம் இப்படி எல்லாம் பேசிவிட முடியாது ..ஆனால் அருணின் வீட்டினரின் இப்படி சஜகமாக ஒருவரை ஒருவர் காலாய்த்துக்கொள்வதும் அடுத்தவர் காலைவாரி அதில் சிரிப்பதெல்லாம் அவளுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது ,இந்த வீட்டில் தான் எப்படி பொருந்துவோம் என்ற ஐயம்மும் கூடவே எழுந்தது.

கொஞ்ச நேரம் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்துவிட்டு அருணின் பெற்றோர் தங்கள் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றுவிட ..அருண் தன் நண்பர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை காட்ட கிளம்பும் போது ..

“அருண்ண்ண்..”என்ற கூச்சலுடன் ..”ஒரு பெண் ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள்..
மற்ற மூவரும் திகைத்துப்போய் பார்க்க ,அருண் மட்டும் புன்னகை மாறாமல் அவளை திரும்ப அணைத்து, “ஹே ..ரம்மி எப்படி இருக்க?” என்றான்.

அபி அதிர்ச்சியில் பிளந்த வாய் மூடாமல் அவர்களைப் பார்க்க ,அவர்கள் இருவரும் விலகி நின்று ஒருவரை ஒருவர் பார்த்து கலகலவென்று சிரித்தனர்.அந்த பெண்ணின் அழகிய முகம் அபியின் கண்களுக்குத் தெளிவாக தெரிந்த போது அவள் மேலும் ஆச்சரியத்தில் கண் விரித்தாள்.

அருண் ரம்மி என்று அவன் அழைத்த அந்தப் பெண்ணை தன் நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தினான்.

“ஃப்ரெண்டஸ் இது ரம்யா ,நான் மட்டும் ரம்மின்னு தான் கூப்பிடுவேன், என்னோட சைல்ட் ஹூட் ஃப்ரெண்ட்.இவங்க அப்பாவும் எங்க அப்பாவும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ்..சோ எங்க ரெண்டு குடும்பமும் ரொம்ப க்ளோஸ்..”என்றான்.
பிறகு ரம்யாவிடம் திரும்பி .

“ரம்மி இவங்க என்னோட கொலீக்ஸ் கம் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.. பூர்ணா,விக்கி அப்புறம்..”

“அபி..”
என்று முடித்தாள் ரம்யா.
அருண் ஆச்சரியமாக அவளைப் பார்க்க ..
ரம்யா அபியை கட்டிக்கொண்டு “எப்படி இருக்க அபி ?பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு..?”என்றாள்

அபியும் புன்சிரிப்புடன் ..”நல்லா இருக்கேன் ரம்யா..நீ எப்படி இருக்க ?”என்று விசாரிக்க மற்ற மூவரும் அவர்களை வைத்த கண்வாங்காமல் பார்த்திருந்தனர்.

“ஹெல்லோ என்ன அப்படி பார்க்குறீங்க..?நானும் அபியிம் காலேஜ்மேட்ஸ்..கோயம்புத்தூர்ல பீஈ ஒன்னா படிச்சோம் ..நான் ஹாஸ்டல், அவ டேஸ்ஸ்காலர்..”என்றவள் மீண்டும் அபியிடம் திரும்பி .. “ரெண்டு வருஷம் இருக்குமா?பார்த்து ,அப்ப பார்த்த மாதிரியே இன்னும் இருக்க ..”என்று அதிசயித்தாள்.

“நீயும் அப்படியே தான் இருக்க.. சொல்ல போனா இன்னும் அழகாகிட்ட..” என்றாள் அபி மெச்சுதலாக..

சட்டென்று நினைவு வந்தவளாக “அச்சோ டைம் ஆகிடுச்சி ,எனக்கு உங்கிட்ட நெறைய பேசனும் அபி ,ஆனா இன்னிக்குன்னு பார்த்து ஃபுல்லா மீட்டிங்க்ஸ் இருக்கு ,நான் கிளம்பறேன் ,ஈவினிங்க் மீட் பன்றேன்..பை..”என்று அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வந்த வேகத்திலேயே சென்றுவிட்டாள்.

“அப்பாடா புயலடிச்சி ஓய்ஞ்ச மாதிரி இருக்கு..” என்றான் விக்கி..

“ஏண்டா மொக்கை போடுறதுக்கு உனக்கு போட்டியா ஆளு வந்துடுச்சேன்னு உனக்கு வயிறு எரியுதா ?”என்று அவன் காலை வாரினாள் பூர்ணா..

“பூர்ணா அவ கொஞ்சம் அதிகமா பேசுவா ஆனா நல்ல பொண்ணு..” என்று அவளுக்காக பரிந்தாள் அபி..

“சரி, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ரெடி ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்..” என்று அருண் அபிக்கும் பூர்ணாவுக்கும் அவர்களது அறையைக் காட்டினான் ..

விக்கி “மச்சான் என் ரூம் எங்கடா..?என்று ஆவலாக கேட்க..

“உனக்கெல்லாம் தனி ரூம் தர முடியாது என் ரூமிலையே ஒரு ஓரமா படுத்துக்கோ..” என்று கூறி சிரித்தான் ..

விக்கி பதிலுக்கு அவனை முறைக்க ..”மச்சான் கோச்சிக்காதடா, உன்னை விட்டுட்டு நான் எப்படி டா இருப்பேன்..? அதான் என்கூடவே இருன்னு சொல்றேன்...”என்று அவனைத்தோளோடு அணைத்து அழைத்துப்போனான் .

அறையினுள் வந்த பூர்ணாவும் அபியும் விசாலமான அந்த அறையையும் அதில் ஆங்காங்கே ரசனையாக வைக்கப்பட்டிருந்த அழகாக அலங்கார பொருட்கள்,சுவரில் மாட்டப்பட்ட வண்ணச்சித்திரங்கள் இவற்றின் வேலைப்பாடுகளையும் ரசித்தனர்.

“ரூம் ரொம்ப அழகா இருக்குல?கெஸ்ட் ரூமே இப்படி இருந்தா ,வீட்டுல இருக்குறவங்களோட ரூம் எப்படி இருக்கும்..” என்று மலைத்தாள் பூர்ணா..

அபி எதுவும் பேசாமல் ஜன்னலின் வெளியே தெரிந்த பரந்த தோட்டத்தை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள் ..

அவள் அருகில் வந்து பூர்ணா..”என்ன யோசனை அபி?”என்றாள்.

“அருண் இவ்ளோ பெரிய பணக்கரானா இருப்பான்னு நான்
நினைக்கலை..”
என்றாள் கவலையாக..

“அதுக்கு இப்ப என்ன?”என்று கேட்டாள் பூர்ணா சாதாரணமாக.

“இல்லை ,எனக்கும் அவனுக்கும் ஒத்துவருமான்னு சந்தேகமா இருக்கு,எங்க அப்பாவும் ஊருல பெரிய ஆளுதான் ஆனா இவ்வளவு வசதியெல்லாம் வாய்ப்பே இல்லை..”என்றாள்.

“லூசு மாதிரி பேசாத அபி,அருண் பணம், காச பெருசா மதிக்கற ஆளுகெடையாது ,அது உனக்கே தெரியும் அப்புறம் எதுக்கு இப்படி தேவையில்லாம யோசிச்சி மனச கெடுத்துக்கற?”என்றாள் சற்று அதட்டலாக..

அப்போதும் அபியின் முகம் தெளியாதது கண்டு பேச்சை மாற்றினாள் பூர்ணா..
“சரி அதைவிடு ..என்ன கிஃப்ட் வாங்கின?”என்று விசாரித்தாள்..அபி புரியாமல் பார்க்க,

“அருண் பர்த்டே க்கு என்ன கிஃப்ட் வாங்கியிருக்க ன்னு கேட்டேன்..”
என்று விளக்கினாள். அபியின் முகம் சட்டென்று பிரகாசமடைந்ததை கண்டும் காணாதவள் போல் நடித்து..

“ஓ அதுவா,இன்னும் எதுவும் வாங்கலை பூர்ணா..”

“அப்போ இனிமேல் தான் வாங்க போறியா?நானும் உங்கூட வரவா?
” என்றாள் பூர்ணா..

“இல்லை பூர்ணா..அருணுக்கு நான் குடுக்கற பர்த்டே கிஃப்ட் ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும்ன்னு நினைக்கறேன் ..விலை மதிக்க முடியாததா இருக்கணும்”

அப்படி என்ன கிஃப்ட் அது?”என்று ஆச்சரியமாக வினவினாள் பூர்ணா.

லேசாக முகம் சிவந்து ..”அவனுக்கு என்னோட காதலை பரிசாகத் தரபோறேன்..” என்றாள் அபி.

நம்ப முடியாத தலையசைப்புடன் “ஹே..தயவு செஞ்சி நீங்க ரெண்டு பேரும் இன்னும் கன்ஃபெஸ் பண்ணலைன்னு மட்டும் சொல்லிடாத டீ ..”என்றாள் பூர்ணா..

அபி உதட்டை கடித்து கன்றியமுகத்துடன் அமைதியாக இருப்பதை பார்த்து
“நீங்க ரெண்டுபேரும் லவ் பண்றது ஊர் உலகத்துக்கே தெரியும் ,உங்களுக்கு மட்டும்தெரியாதா?என்ன அநியாயம் இது?”என்று வியந்தாள்.

“நான் இதுவரை அதை ஒரு பெரிய விஷயமா நினைக்கலை..நான் அவன்மேல வச்சிருக்கற அன்பை அந்த மூனு வார்த்தையால அளந்திட முடியும்ன்னு எனக்கு தோணலை பூர்ணா..அந்த அன்பை மனசார உணர முடியுமே தவிர ..வார்தையால உணர்த்த முடியாதுன்னு நினைச்சேன்..ஆனா இப்போ எனக்கு சொல்லனும் போல தோணுது..முன்னாடி ஒருமுறை அருண் என்கிட்ட சொல்ல வந்தான், ஆனா நான் தடுத்திட்டேன் ..இனிமேல் அவனா சொல்லமாட்டான்..நானா சொல்லணும்ன்னு எதிர்பார்க்கறான்..நான் எதாவது சீரியஸா பேச ஆரம்பிக்கும்போது அவன் முகம் எதிர்பார்ப்புல பிரகாசமாகுறதும் நான் வேற எதாவது பேசிடும் போது ஏமாற்றத்துல முகம் வாடி சொத்துன்னு ஆகிபோறதும் ,நானே நிறைய வாட்டி கவனிச்சிருக்கேன்..பாவம் அவனை ரொம்ப சோதிச்சிட்டேன்..இனிமேலும் காக்க வைக்க கூடாது ,என்னோட காதலை சொல்ல அவன் பிறந்த நாளைவிட சிறப்பான தருணம் வேற என்ன இருக்க முடியும் ..அதான் நாளைக்கு அவன் கிட்ட சொல்ல போறேன் எந்த வித ஒளிவுமறைவும் இல்லாம தங்கு தடையும் இல்லாம முழுசா அவனை மனசார ஏத்துக்க போறேன்..”என்று ஏதோ தனக்குள்ளே பேசிக்கொள்பவள் போல் கண்களில் கனவு மிதக்க அபி பேசுவதை ,கண்கள் கனிய பார்த்திருந்தாள் பூர்ணா.

“ஆமா கேட்க மறந்துட்டேன் ,அந்த ரம்யா எப்படி ?”

“அவ ரொம்ப நல்ல பொண்ணு,படிப்புல சூப்பர்ன்னு சொல்ல முடியாது ,பட் கொஞ்சம் பொறுமையா சொல்லிகுடுத்தா புரிஞ்சிக்குவா..எதாவது டவுட் கேப்பா நான் சொல்லி தருவேன் ,அதுக்கே என் மேல அவ்வளவு பிரியமா இருப்பா.கொஞ்சம் உடம்பு பூசினா மாதிரி இருப்பாளா..நான் என்ன சாப்பிடுறேன் ,என்ன முகத்துக்கு போடுறேன்னுலாம் கேப்பா..ஆனா இப்ப பார்த்தா ,மாடல் மாதிரி ஆகிட்டா.என்னாலையே நம்ப முடியலை
..”என்று வியந்தாள் அபி

“பார்த்து டீ..எதுக்கும் கொஞ்சம் ஜாக்கறதையா இரு,அவ அருண் மேல பாய்ஞ்சதை பார்த்தா எனக்கு ஒன்னும் சரியா படலை ,உனக்கு போட்டியா வந்துட போறா..”என்று விளையாட்டுபோல எச்சரித்தாள் பூர்ணா..

“ச்ச,ச்ச அவ ரொம்ப இன்னசென்ட் ..”என்றாள் அபி

“அவ நல்லவளாவே இருக்கட்டும் நீ எதுக்கும் அருண் மேல ஒரு கண்ணுவச்சிக்கோ..”என்றாள் .

“ஹே என்ன பேசுற பூர்ணா?அருண் ஒன்னும் ச்சீப்பானவன் கெடையாது..”

“இந்த விஷயத்துல எந்த ஆம்பளைங்களையும் நம்ப முடியாது அபி,நான் ஏன் இன்னும் விக்கிக்கு ஓகே சொல்லாம இருக்கேன்னு நினைக்கற?எனக்கு இன்னும் அவன் மேல கொஞ்சம் டவுட் இருக்கு..”
என்றாள் பூர்ணா.
“உன்னோட விக்கிய பத்தி நீ என்ன வேணா சொல்லிக்கோ ஆனா என் அருண் ஸ்ரீராமன்..”என்று வாதாடினாள் அபி.

“உன் ஆளு மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தா நல்லது தான் ..”என்று கூறி சிரித்தாள் பூர்ணா.

எப்படியோ அபியின் மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி அவள் அருணின் மீது கொண்ட காதலில் உறுதியுடன் இருப்பதை அவள் வாய் மூலமாகவே அவளை சொல்ல வைத்த திருப்தி அவளுக்கு..

அன்று காலை உணவிற்கு பின் பயணக்களைப்பு நீங்க நன்றாக ஓய்வெடுத்துவிட்டு பிறகு ,வீட்டை நன்றாக சுற்றிவிட்டு மதிய உணவிற்கு பின் குட்டி தூக்கம் என்று பொழுது போக்கினர்..சாயந்திரம் ஆனதும் ரம்யா அலுவலகத்திலிருந்து நேராக அபியைத்தேடி வந்தாள்..

“ஹாய் அபி..”

“ஹாய் ரம்யா..”

“எங்க யாரையும் காணோம்..”

“அவங்கலாம் சும்மா வாக் போயிருகாங்க,நான் நீ வரேன்னு சொன்னதால போகலை..”
என்றாள் அபி.

“உங்கிட்ட நெறைய பேசனும் அபி ,நம்ம காலேஜ் கதைலாம் நியாபகம் இருக்கா .ஸ்ம்போசியம் டேஸ்..அந்த கொரியன் பையன் மிங் தமிழ்ல பேசுறேன்னு சொல்லி கொலைபண்ணினானே..

“அதை மறக்க முடியுமா ?”வாழ்த்து” ன்னு சொல்றதுக்கு பதிலா “வாத்து” ன்னு சொல்லி, அப்போ இருந்து அவன் பேரே வாத்துன்னு ஆகி போச்சே..”
என்று கூறி சிரித்தாள் அபி..சிறிது நேரம் அவர்களது கல்லூரி நினைவுகளில் திழைத்தார்கள்,அப்படியே பேச்சு அவர்களின் தற்போதைய நிலைக்கு திரும்பியது

“ நீ என்ன பண்ற ரம்யா,,?” என்றாள் அபி

“நான் இங்க ஒரு ஐ டீ கம்பனில குப்பை கொட்டுறேன்..அப்பாவுக்கு நான் அவரோட பிஸ்னஸுக்கு வரணும்ன்னு ஆசை ,எனக்கும் அருண் மாதிரி தான் பிஸ்னஸ்ல இன்டரெஸ்ட் இல்லை ..”என்று ஸ்டைலாக தோளைக் குலுக்கினாள்.

இதை பலமுறைகண்ணாடி முன் நின்று பயிற்சி செய்து பார்த்திருப்பாளோ என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றி மறைந்து அபிக்கு..

“சரி அபி ,அருணை பத்தி சொல்லு?அவன் ஆஃபிஸ்ல எப்படி ஒழுங்கா இருக்கானா இல்லை அப்படி இப்படின்னு எதாவது..” என்று கேட்டு கண்ணடித்தாள் ரம்யா.

அபிக்கு அவள் கேட்ட விதமே பிடிக்கவில்லை ,இருப்பினும் அமைதியாக
“நீ தான் அவனோட சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்டா இருக்க உனக்கு தெரியாதது என்ன எனக்கு தெரிய போகுது ?”என்றாள் அபி

பசங்க வீட்ல இருக்க மாதிரியே வெளியவும் இருக்க மாட்டாங்க..என்னை பொருத்த வரைக்கும் அருண் சொக்க தங்கம் ,ஆனா அங்க எப்படி இருக்கான்னு எனக்கு எப்படி தெரியும் ?”என்று மீண்டும் அதே தோள் குலுக்கல்..

“அருண் உள்ள ஒரு மாதிரி வெளிய ஒரு மாதிரின்னு நடிக்கற ஆள் கிடையாது,ஒரு டீ எல் லா அவன் ரொம்ப ஃப்ரெண்ட்லியா ,ஹெல்பிங்க் மைண்ட ட்டா இருக்கான்..”

“வேலைய பத்தி யாரு கேட்டா..?பர்சனலா சொல்லு,லவ், டேட்டிங் ,ச்சாட்டிங் இந்த மாதிரி எதாவது இருக்கா?
”என்று குடைந்தாள் ரம்யா..

“அதெல்லாம் நீ அருண் கிட்டதான் கேட்கணும்..”என்றாள் அபி பட்டென்று,

“அவன் கிட்ட கேட்டா இருக்கறது ,இல்லாதது எல்லாத்தையும் சொல்லி என்னை தலை சுத்தவச்சிடுவான் ,அவன் சொல்றதுல எது உண்மை எது பொய்ன்னே கண்டுபுடிக்க முடியாது..அப்படி சூப்பரா நடிப்பான்..” என்று குறைகூறினாள் ரம்யா.

“அவன் யாரையும் லவ் பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும், ஆனா அவனை யாராவது லவ் பண்றாங்களா ?அபி உனக்கு எதாவது தெரியுமா?”என்று விசாரித்தாள்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது..” என்று கூறி சமாளித்தாள் அபி,
இவள் ஏன் அருணின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு துடிக்கிறாள் என்று அபிக்கு எரிச்சல் எட்டி பார்க்கத் தொடங்கியது.
“போடீ நீ வேஸ்ட்டு..இதுக்கு நான் பூர்ணாவை தான் பிடிக்கணும்..”என்றாள் ரம்யா..

அபி அவளை யோசனையாக பார்த்தாள்,”ஒருவேளை அருண் மீது இவளுக்கு ஏதேனும் ஈர்ப்பு இருக்குமோ,அப்படியே இருந்தாலும் அது எந்த அளவுக்கு தீவிரமானது ?”என்றெல்லாம் எண்ணிக் குழம்பினாள்.

திடீரென்று ஏதோ தோன்ற அபி “ஆமா ,அருண் யாரையும் லவ் பண்ன மாட்டான்னு நீ எப்படி அவ்வளவு உறுதியா சொன்ன?”என்று கேட்டாள்.

அதுவா,மூனு வருஷம் மும்பைல இருந்தான் அங்கயே எந்த பொண்ணும் பிடிக்கலைன்னு சொல்லிட்டான் ,இங்க வந்து இந்த ஆறுமாசத்துல என்ன அதிசயம் நடந்திருக்க போகுது ?அதான் அப்படி சொன்னேன் ..”

“அதிசயம் நடந்துடுச்சே ..”
என்று அவள் மனம் கதறியது..

“அபி உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ,நீ யார்கிட்டையும் சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு..” என்று கை நீட்டினாள்..

அபி தயங்கவும் அவளே அபியின் கையை எடுத்து தன் கைமீது வைத்து அழுத்திவிட்டு ,

“நீ யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு தெரியும், இருந்தாலும் இது ரொம்ப ரகசியமான விஷயம் அதான் …”என்றாள் சமாதானமாக.

அபிக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை,இந்த பூடகமான பேச்சு எங்கு போய் முடியுமோ என்று அவளுக்கு உள்ளுக்குள் தட தடக்கத் தொடங்கியது.

“அபி நாளைக்கு எனக்கும் அருணுக்கும் நிச்சயம் நடக்க போகுது..”என்றாள் உற்சாகத்துடன்..
எதிரிலிருபவளின் ,இதயத்தில் இடியை இறக்கியதை அறியாமல்.
தொடரும்..
 
Last edited:
Top