Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 33

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 33

ஷர்மா அவரது அலுவலக அறையில் தனது பணியில் ஆழ்ந்திருந்தார்,அப்போது அவரது செகரெட்டரி அவரைத் தொடர்பு கொண்டு , “சார் உங்களைப் பார்க்க ஏசிபி ராகவன் வந்திருக்காரு ,வர சொல்லவா?”என்று கேட்டாள்.

கணநேர யோசனைக்குப்பின் “வர சொல்லு ..”என்றார் ஷர்மா..

சில வினாடி தாமதத்திற்கு பின், ஏசிபி ராகவன் உள்ளே வந்தார்.

நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதர்,கட்டுகோப்பான உடலை இன்னும் எடுப்பாக காட்டும்படி உடலை ஒட்டிஅணிந்திருந்த டீ ஷர்ட் மற்றும் கார்கோ பான்ட் நாணேற்றியது போல் விரைப்பான உடல்,போலீஸிற்கே உரிய வெட்ட ஒட்டிய தலைமுடி,மொழுமொழுவென்று சவரம் செய்த முகத்தில் மெல்லிய முருக்கு மீசை,எதிரிலிருப்பவரை குத்திகிழிக்கும் கத்தி பார்வையுடன் கம்பீரமாக இருந்தார்.

“ஹல்லோ சார், ஐ யம் ராகவன் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ், சைபர் க்ரைம்”என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“ஹல்லோ சார்..என்ன விஷயம்..?நீங்க சொல்லியிருந்தா நான் அப்பாயின்ட்மென்ட் போட்டுவைக்க சொல்லியிருப்பேனே..” ஷர்மா அவரை வரவேற்றபடி சிரித்தமுகமாக இருந்தாலும்,, உள்ளூர “இவர் எதற்கு வந்திருக்கிறார் “என்று மனம் அதன் போக்கில் சிந்தித்துக்கொண்டிருந்தது.

“நான் இப்போ ஆஃப் டியூட்டியில வந்திருக்கேன் ..அதான் ஃபார்மலா சொல்லிட்டு வரலை..”

“சரி சொல்லுங்க என்ன விஷயம் ..?சும்மா இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டீங்க..”

“அருண் எனக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் அவன் நேத்து என்னை வந்து பார்த்து,உங்க வால் மார்ட் ப்ராஜெக்ட்ல எதோ பிரச்சனை,அதுல அவன் மேல பழி விழிந்திருக்கு,ஆனா தன் மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்லி எங்கிட்ட ஹெல்ப் கேட்டான் ,அவன் ரொம்ப நல்ல பையன் சார்..தப்பு பண்ணி இருக்க மாட்டான்ன்னு எனக்கு தெரியும் ,அதான் அவனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக என்னோட பக்கத்துல இருந்து கொஞ்சம் விசாரிச்சேன், அதுல அருண் மேல தப்பு இல்லை ,வேற ஒருத்தர் தப்பு பண்ணிட்டு அருணை பலியாடு ஆக்கி இருக்காங்கன்னு தெரிஞ்சது ,நீங்க அனுமதிச்சா என்னோட விசாரணை விவரங்களை ஆதாரத்தோட நிரூபிக்கிறேன்..”
என்றார்.

ஷர்மா சம்மதமாக தலையாட்ட

ராகவன் தொடர்ந்தார்,
“சார் முதல் குற்றச்சாட்டு ,அருணோட மெயில் ஐடில இருந்து டீடைல்ஸ் லீக் ஆகி இருக்கு ,நீங்க இருக்கறது ஐ டி ஃபீல்டு உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை ,மெயில் ஐடிய ஹேக் பண்றது ஒன்னும் குதிரைக் கொம்பு இல்லை ,கொஞ்சம் சாஃப்ட்வேர், கம்பியூட்டர் அறிவு இருந்தாலே போதும் ,அப்புறம் மெயில் போனது அருணோட வேலை பார்த்த பழைய ஃப்ரெண்டுக்கு ,ரெண்டு பேர் இவ்வளவு பெரிய திட்டம் போடுறாங்கன்னா அவங்க ஒருத்தரை ஒருத்தர் பலதடவை தொடர்பு கொண்டு பேசியிருக்கனும் ,நீங்க பார்த்தீங்கன்னா அருணோட லாஸ்ட் ஒரு மாசத்துக்கான ஃபோன் கால்ஸ்,வாட்ஸாப் ச்சாட்ஸ்,ஃபேஸ் புக் மெசேஜஸ்,மெயில்ஸ் எதுலையுமே அந்த நடராஜோட தொடர்ப்பு வச்சிக்கவே இல்லை ,அதுக்கான டீடைல்ஸ் இங்க இருக்கு ..”என்று தன் ஃபைலில் இருந்து பிரின்ட் செய்யப்பட்ட ஆதாரத்தை அவர் முன் வைத்தார்.

ஆனா அதே சமயம் உங்க ஆஃபிஸ்ல இருந்து இன்னொருத்தர் ,அந்த நடராஜ் கிட்ட இந்த ஒரு வாரத்துல மட்டும் டெய்லி ரெண்டு ,மூனு முறை பேசி இருக்கார் அவரொட மொபைல் ஸ்டேட்மென்ட்டும் இருக்கு..,
அவரு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ,அந்த நடராஜை பார்பீக்யூ நேஷன்ல மீட் பண்ணி பேசினதுக்கான வீடியோ ஆதாரமும் இருக்கு
”என்று விவேக்கும் நடராஜும் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சியை தன் மொபைலில் ஓடவிட்டு காட்டினார் ராகவன் ,அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் உணர்ச்சிதுடைத்த முகத்துடன் பார்த்திருந்தார் ஷர்மா..

அடுத்து,நாங்க விவேக்கோட லாஸ்ட் நைட் ஃபோன் கால ட்ராக் பண்ணதுல பதிவு செய்யப்பட்ட உரையாடல் இது …என்று ஆடியோவை ப்ளே செய்தார்.
“ஹல்லோ விவேக் ,நான் பிரச்சனைல இருக்கேன் ..”

“என்ன பிரச்சனை..?”

“நீங்க சொல்லி தான் நான் இந்த காரியம் பண்ணினேன்,நீங்க தான் அந்த அருணை பழிவாங்கனும்ன்னு என்னை இப்படி பண்ண சொன்னீங்க,..”

இங்க பாரு, எனக்காக தியாகம் பண்ண மாதிரி பேசாத ,உனக்கு உன்னோட மேனேஜ்மென்ட் கிட்ட நல்ல பேர் வாங்கி குறுக்குவழியில முன்னேறனும்ன்னு ஆசை,அதுக்கு நான் வழி சொன்னேன் அவ்வளவு தான் ..இது ரெண்டுபேருக்குமே லாபமான ஒரு உடன்படிக்கை மறந்துடாத”
“நான் ப்ரோமோஷன் கிடைக்கும்ன்னு ஆசைப்பட்டது உண்மைதான் ஆனா இப்ப எல்லாமே தலை கீழா மாறிப்போச்சி,நீங்க குடுத்த ப்ராஜக்ட் டீடெய்ல்ஸ்ஸ என் பாஸ்கிட்ட குடுத்து வால் மார்ட் கிட்ட பேச சொன்னேன் ,ஆனா அவங்க அப்படி ஒரு ப்ராஜக்ட் பண்ணவே இல்லைன்னு சொல்லிடாங்களாம் ,அதுமட்டுமில்லாம இப்படி குறுக்குவழியில டீல் பேசுறோம்ன்னு எங்க கம்பெனியவே ப்ளாக் லிஸ்ட் பண்ணிடாங்க,இப்ப எனக்கு எப்போ வேலை போகுமோங்கற நிலைமையில இருக்கேன் ..எனக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க..உங்களை நம்பிதானே நான் இதுல இறங்கினேன்..”

“இங்க பாரு நட்ராஜ்.. இங்க எனக்கும் பிரச்சனையா தான் போய்ட்டு இருக்கு ,அந்த அருணை உடனே வேலைய விட்டு தூக்குவாங்கன்னு பார்த்தா ,அவனுக்கு ஒரு நாள் டைம் குடுத்திருக்காங்க,இதுல என்ன உள்குத்து இருக்கோ தெரியலை ..இந்த நிலமையில நாம ரெண்டு பேரும் ஃபோன்ல பேசுறதுகூட நமக்கு வினையா முடியும்,அதனால இப்படி சும்மா சும்மா கால் பண்ணாத ..”

“அப்போ எனக்கு சொன்னமாதிரி பணத்த குடுத்து செட்டில் பண்ணுங்க ..”
“இப்படி திடீர்ன்னு கேட்டா நான் எங்க போறது ?"

“அது எனக்கு தெரியாது ,நீங்க பணம் தரலைன்னா நான் உங்க
பாஸ் கிட்ட எல்லாத்தையும் சொல்லவேண்டி இருக்கும் ..”
“என்ன ப்ளாக் மெயில் பண்றியா..?எனக்கு தேவைதான் உன்னை எல்லாம் நம்பினேன் பாரு “

அதெப்படி என்னை யூஸ் பண்ணி உங்க எதிரிய நல்லா பழிவாங்கிட்டு என்னை அம்போன்னு விட்டா?நான் என்ன ஈனா வானா வா?”
“சரி ,சரி, நான் பணம் ரெடி பண்ணிட்டு கால் பண்றேன் அதுவரைக்கும் என்னை தொல்லைப் பண்ணாத ..”

என்பதுடன் அந்த ஆடியோ நின்றது ..
ஷர்மா “விவேக்..”என்று நரநரவென்று பற்களைக் கடித்தார்..
அருண் ஷர்மா சார் அறையின் வெளியில் நின்றிருந்தான் ,அங்கு வந்த விவேக் அவனைப் பார்த்து எளனமாக “என்ன அருண் இங்க சுத்திட்டு இருக்க..?போலீஸ்லாம் வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன் ,ஒரேடியா மாமியார் வீட்டுக்கு தான் அனுப்புவாரு போல ஷர்மா சார்..”என்று நமட்டு சிரிப்பு சிரித்தான்..
அருண் உதட்டில் ஏளன வளையுடன் ,”யாரு மாமியார் வீட்டுக்கு போக போறாங்கன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்..” என்றான் நக்கலாக..
அப்போது ஷர்மாவின் அறையிலிருந்து வெளியே வந்த ராகவன் அருணைப் பார்த்து சினேகமாக சிரித்தார்.
“ஹாய் அருண்..”
“ஹாய் சார்..”
“யங் மேன் ..நான் எல்லாம் பேசிட்டேன் இனிமேல் உனக்கு ஒரு ப்ராப்ளமும் வராது..கூடிய சீக்கிரமே அந்த கருப்பு ஆடு எங்கிட்ட தான் பிரியாணிக்கு வரும்ன்னு நினைக்கிறேன் ..”
என்று விவேக்கை ஓரக்கண்ணால் பார்த்து கூறிவிட்டு போனார்..
விவேக் அவரது பார்வையில் நெற்றி வியர்த்துப் போனான் ,அப்போது அவனது மொபைல் சிணுங்கியது அதில் ஷர்மாவின் பெயரைப் பார்த்தும் அனிச்சையாக கை உதறலெடுத்தது அவனுக்கு ..

விக்கி ,பூர்ணா,அபி மூவரும் கேன்டீனில் அமர்ந்திருந்தனர்,
அபி முகத்தில் கவலையுடன் வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தாள்..
“அபி உங்களுக்கு கோல்டு காஃபி தான் வேணும்ன்னு சொல்லியிருந்தா நான் ஆர்டர் பண்ணியிருப்பேனே ,இப்ப பாருங்க சூடா காஃபி வாங்கிட்டு அதை ஆறவைக்க கஷ்டபடுறீங்க..”என்று அவள் காஃபியை குடிக்காமல் இருப்பதை கிண்டலடித்தான்..
“விளையாடாதீங்க விக்கி ,நானே அருண் ஷர்மா சார பார்க்க போயிருக்கான் என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன் நீங்க சீரியஸ்னஸ் இல்லாம காமெடி பண்ணிட்டு இருக்கீங்க ..”என்றாள் எரிச்சலாக..
“என்ன கவலை அதான் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடுச்சே..”என்றான் .
“ஆனா இவ்ளோ நேரமாச்சே..”என்றாள் முகத்தில் கவலைதோய..
ஷர்மா சார் சும்மா நாள்லையே வளைச்சி வளைச்சி அட்வைஸ் பண்ணுவாரு .இப்ப நிலைமை கலவரமா இருக்கு ..விடுவாரா..ஃபுல் மீல்ஸ் போட்டு தான் அனுப்புவாரு”என்று கூறி சிரித்தான்..
“விளையாடாதீங்க விக்கி “என்றாள் அபி கோபமாக
அப்போது விக்கி “தோ அருணே வந்துடானே..” எனவும் அபி மின்னல் வேகத்தில் கண்கள் மின்ன திரும்பிப் பார்த்தாள்..
அருண் முகமெல்லாம் சிரிப்பாக நடந்து வந்து அபியின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்த வாரே..
“டேய் ஒரு டீ சொல்லுடா ”என்றான்.
அபி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கவனித்து...
“என்ன எனக்கு புதுசா எதாவது கொம்பு முளைச்சிருக்கா இப்படி பார்க்கற?”என்றான் கேலியாக
“நான் இங்க டென்ஷனா இருக்கேன் நீ பாட்டுக்கு சிரிக்கற?”என்று குறைகூறினாள் அபி.
“ஏன் டென்ஷன் அதான் எல்லா ப்ராப்ளமும் சரி ஆகிடுச்சே..”என்று கேள்வியாக நோக்கினான் .
“டேய் மச்சான் ..நீ ஷர்மா சார பார்க்க போனதுல இருந்து அபி நீ எப்ப வருவன்னு கேட்டு கேட்டு என் காதுல ரத்தம் வருதுடா..நீ சீக்கிரம் அங்க என்ன நடந்தது ன்னு சொல்லு “என்றான் விக்கி.
“மொதல்ல ஷர்மா சார் ,உன்னை தப்பு பண்ணலைன்னு ப்ரூவ் பண்ண சொன்னா இப்படி தான் வெளியால கம்பெனிக்குள்ள கொண்டுவர்றதான்னுநல்லா டோஸ்விட்டாரு..”
நான் எனக்கு வேற வழி தெரியலை சாரின்னு சொல்லி சமாளிச்சேன் ..
அவரும், ஏதோ உன்னோட இந்த முயற்சியால உண்மை வெளிய வந்து நல்லது தான் நடந்திருக்கு ,அதனால இந்த ஒரு முறை மன்னிச்சி விடுறேன்னு சொல்லிட்டாரு ..
அப்புறம் விவேக் சீட்ட கிழிச்சிட்டாங்க ,அவனை ப்ளாக் லிஸ்ட் பண்ணிட்டாங்க இனிமே வேற எந்த கம்பெனிலயும் வேலை கிடைக்காது.. ன்னு சொல்லிட்டு ,
“சரி இப்ப விவேக் போய்ட்டதால இனிமேல் ப்ராஜெக்ட் ஒர்க் நீ தான் பண்ணனும்ன்னு சொன்னாரு ..
எந்த ப்ராஜெக்ட் டா?
என்று மூவரும் கேட்க
“நானும் இப்படியே தான் ஷாக் ஆகிக் கேட்டேன் ..”
வால் மார்ட் ப்ராஜெக்ட் தான் ,அது நம்ம கையவிட்டு போகலையாம் ..நாம இந்த பிரச்சனையெல்லாம் சரி செய்யறவரைக்கும் ஹோல்ட்ல போட்டிருந்தாங்கலாம் ..இப்ப நாம திரும்ப ப்ராஜெக்ட் பண்ணப்போறோம்
“என்றான் குதூகமாக..
“உண்மையிலையே இது ரொம்ப நல்ல விஷயம் அருண் ..”என்றாள் பூர்ணா..
“ஆமா பூர்ணா.. என்னதான் என்மேல குற்றமில்லைன்னு நிரூபிச்சாலும் ப்ராஜெக்ட் கைய விட்டு போயிடுச்சேன்னு கவலையா இருந்தது, இப்ப அந்த கவலையும் தீந்தது ,மோஸ்ட்லி தீபாவளி ஹாலிடேஸ் முடிஞ்சி நாம ஒர்க் ஆரம்பிக்க வேண்டி இருக்கும்ன்னு சொன்னாரு..
என்றான் நிம்மதியுடன் ..
கெட்டதுலையும் நல்லது இருக்குன்னு சொல்லுவாங்கயில்ல அதுமாதிரி …இந்த சோதனையிலையும் ஒரு நல்லதா அருணுக்கு ஒரு லெவல் மேல போக வாய்ப்பு கெடைச்சிருக்கு..” என்று மகிழ்ந்தாள் அபி
“ஆமாண்டா மச்சான் ,உன்னோட எதிரி ஒளிஞ்சான் ,நீயும் வேலை போய்டுமோன்ற கவலையில இருந்து தப்பிச்சி ,பி எம் லெவல்க்கு முன்னேற போற ..இது எல்லாத்துக்கும் தனித்தனியா ட்ரீட் வைக்கணும் ..”என்றான் கராராக
“இவன் ஒருத்தன் எப்ப பாரு ட்ரீட் கேட்டுட்டே இருப்பான் ..பி எம்ன்னுலாம் ஒன்னும் சொல்லல ,விவேக்குக்கு பதிலா வேற ஆள் வர்ற வரைக்கும் என்னை அந்த பொஷிஷன்ல இருந்து பார்த்துக்க சொல்லி இருக்காங்க அவ்வளவு தான் “
“பார்ரா இவனோட தன்னடக்கத்த..இப்படிலாம் சொல்லி தப்பிக்க முடியாது கண்டிப்பா பெரிய ட்ரீட் வேணும் மச்சி..”
என்றான் விக்கி விடாமல் ..
“சரிடா ..இந்த முறை தீபாவளியும் என்னோட பர்த்டேவும் சேர்ந்து வருது நாம பெங்களூருல என்னோட வீட்டுக்குப் போய் கொண்டாடுறோம் சரியா?”என்றான் அபியை பார்த்தபடியே..
“டபிள் ஓகே..” என்றனர் விக்கியும் பூர்ணாவும் ..
அபி யோசனையாக அவனைப்பார்த்தாள்..
அந்த தனியார் விரைவு பேருந்து சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது.
குளிரில் அபியின் உடல் லேசாக சிலிர்ப்பதைக் கண்டு அருண் தனது பையிலிருந்து ஒரு ஷாலை எடுத்து அவளுக்கு கொடுத்தான் ..அதை வாங்கியவள் அவனிடம் ஏதோ கேட்க எண்ணிதயங்கினாள் ..அவளது மனதை படித்தவன் போல
“என்ன கேக்கணுமோ கேட்டுடு அபி ..”என்றான்
“அருண், உங்க அப்பா அம்மாவுக்கு என்னை பிடிக்குமா?”என்றாள் கவலையாக..
ஹேய் ,உன்னை எப்படி பிடிக்காம போகும் ?என்றான் அவன் பதிலுக்கு,
“ஒருவேளை பிடிக்காம போய்ட்டா?”என்றாள் அப்போதும் கவலை நீங்காமல்..
அவங்களுக்கு உன்னை கண்டிப்பா பிடிக்கும் ,அப்படியே பிடிக்காம போய்ட்டாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை ..பார்த்துக்கலாம் விடு.. நீ தேவையில்லாம எதையும் மண்டைகுள்ள போட்டு உருட்டாம தூங்கு ..”என்றான் சிறு கண்டிப்புடன் …

மனதின் ஓரம் சிறு துணுக்கம் ஒட்டிகொண்டிருந்த போதும் அருண் கூறுவது போல தேவையில்லாமல் கவலைக்கொள்ள கூடாது என்று எண்ணி கண்களைமூடி உறங்க முயன்று அப்படியே தூங்கியும் போனாள்.
தொடரும்..






 
ரொம்ப அருமையான பதிவு
அருண் தப்பு செஞ்சவனுக்கு சரியான
தண்டனை வாங்கி குடுத்துட்டான்
 
Top