Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 28

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே பொன் வசந்தன்
அத்தியாயம் 28

அபி கண்ணாடியில் அப்புறமும் இப்புறமும் உடலை திருப்பி தன் அலங்காரத்தை சரி பார்த்தாள்.. ஆழ்ந்த நீல நிற டிசைனர் புடவை மற்றும் பொருத்தமான வைர மாலை மற்றும் மற்ற அணிகலங்களோடு தேவதையாக ஜொலித்தாள்.. மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருந்தனர்..அபி தனது தோற்றத்தில் மிகுந்த சிரத்தை எடுத்து தயாராகி இருந்தாள்..

“இவ்வளவு கஷ்டப்பட்டு ரெடி ஆகி இருக்கேன் அருணுக்கு பிடிக்குமா ?”என்ற எண்ணம் மனதில் ஓடும் போதே..

“கல்யாணப்பொண்ணு நான், நானே இத்தனை முறை கண்ணாடி பார்க்கலை…போதும் அபி நீ அழகா தான் இருக்க ,உன்னை பார்க்கறவங்க அப்படியே மயங்கி விழப்போறாங்க பாரு ..” திடீரென்று பின்னாலிருந்து கேட்ட அனுவின் குரலில் திடுக்கிட்டு போனாள் அபி.

அனு மாலை வரவேற்பிற்கான தன் முழு அலங்காரத்துடன் அங்கு நின்றிருந்தாள்..ரோஜா வண்ண பட்டு சேலை,அழகான அணிமணிகள்,பியூட்டி பார்லர் அலங்காரம் இயற்கை அழகிற்கு மேலும் மெருகேற்ற அப்ஸரசாக மிளிர்ந்தாள்..

அனுவின் வார்த்தைகளால் ஏற்பட்ட முக சிவப்பை மறைக்க அவளை முறைப்பது போல் நடித்தாள் அபி..அதே சமயம் அறையின் கதவு தட்டப்படவே ..அனுவை முந்திக்கொண்டு அபி கதவை சென்று திறந்தாள்..அங்கு பூர்ணாவைக் கண்டதும்,ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போனாள்..

“ஹே …பூர்ணா..?என்னால நம்பவே முடியல..”என்று கண்களை அகலவிரித்தாள்..

“எப்படி நம்ப முடியும் ?நீதான் அட்ரெஸ் கூட குடுக்காம எஸ்கேப் ஆகிட்ட்டியே..”என்று பொய் கோபம் காட்டி அவளை கன்னத்தில் கிள்ளியபடி.

“ இப்ப நம்பமுடியுதா ?” என்று கேட்டாள் பூர்ணா.

“ஆஆ..பூர்ணா வலிக்குது “என்று கத்தினாள் அபி..

“நல்லா வலிக்கட்டும் ஃப்ரெண்ட் கிட்ட கூட சொல்லாம கிளம்பி வந்தல..”

“ஸாரி பூர்ணா,நான் அப்போ இருந்த நிலமையில எதையுமே யோசிக்க முடியலை.அது ஒரு பெரிய கதை நான் அப்புறமா சொல்றேன்.இப்போ வா என் சிஸ்டர உனக்கு காட்டுறேன்
..”என்று உள்ளே அழைத்துப்போய் ,அனுவிற்க்கு அறிமுகம் செய்து வைத்தாள்..

“அனு இது என்னோட ஃப்ரெண்ட் பூர்ணா..”

“ஹல்லோ,ஐ அம் அனுராதா..”


கல்யாணப் பொண்ணு கரெக்டா..”என்று கேட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தாள் பூர்ணா.

“ஆமா, நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்,உங்களை ஃபார்மலா இன்வைட் பண்ணலைன்னு தப்பா எடுத்துக்காதீங்க,நீங்க கண்டிப்பா ஃபங்க்ஷன் அட்டெண்ட் பண்ணனும் பிளீஸ்..”என்றாள் அனு.

“ஐயோ.ப்ளீஸ் லாம் எதுக்கு சொல்றீங்க?ஃப்ரெண்ட்ஸ் குள்ள எதுக்கு இந்த ஃபார்மாலிடீஸ்லாம் ?நாங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு இருப்போம் ..அபி உடம்பு சரி இல்லாம கிளம்பி வந்தாளேன்னு பார்த்துட்டு போலாம்ன்னு வந்தோம் ..அவ நல்லா இருக்கறதே ரொம்ப சந்தோஷம் ..”

“ஹே..நாங்கன்னா?விக்கியும் வந்திருகாரா?அவரு எங்க?வேற யாரும் வந்திருகாங்களா..?”என்று உற்சாகமாக கேட்டாள் அபி..

“ஆமா விக்கியும் நானும் மட்டும் தான் வந்தோம் வேற யாரும் வரலை .. அவன் அருணோட ரூம்ல இருக்கான் ..”என்றாள் பூர்ணா..

“நல்ல வேளை நீங்க வந்தீங்க ..இங்க எல்லாரும் இவளோட ஃப்ரெண்ட்ஸ் தான் இருக்காங்க..என்னோட ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொல்லிக்க நீங்களாவது வந்தீங்களே.”என்று நிம்மதி பெருமூச்செறிந்தாள்..

“பூர்ணா நீங்க என்னோட ஃப்ரெண்ட் நிஷா கூட ரூம ஷேர் பண்ணிகிறீங்களா?லாஸ்ட் மினிட் னால எல்லா ரூமும் ஃபில் ஆகிடுச்சி..”என்றாள் அனு சங்கடத்திற்காக வருந்தும் குரலில்.

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்று பூர்ணா தெரிவிக்க ,அபி அவளுக்கு அவளது அறையை காட்ட அழைத்துச் சென்றாள்..

போகும் வழியில் அபி ஓரளவுக்கு பூர்ணா விஷயத்தை கிரகித்துக்கொள்ளும் அளவுக்கு தேவையான விவரம் மட்டும் கூறினாள்..

பூர்ணா அபியின் கதையை அறிந்து அவளுக்காக மனம் இறங்கினாள்,,இருப்பினும் அவளது நல்ல மன நிலையை கெடுக்க விரும்பாமல் ,

“ஹே அபி உன்னோட சாரீ ரொம்ப அழகா இருக்கு “என்று பேச்சை மாற்றினாள்..

“என் சிஸ்டர்,எனக்கு சாரீ ,மாட்சிங்க் பிளவுஸ் எல்லாம் எடுத்து தச்சி வச்சிட்டா நான் எப்படியும் வந்துடுவேன்னு அவ்வளவு நம்பிக்கை “என்றாள் பெருமிதமாக
“ரொம்ப லவ்லி ஃபேமிலி..” என்றாள் பூர்ணா.

அபியின் முகம் பளிச்சிட்டது..

“பூர்ணா உனக்கு ஃபன்ங்க்ஷனுக்கு கட்டிக்க சாரீ இருக்கா ?”என்றாள்.

“என்ன விளையாடுறியா?நான் எந்த இடத்துல இருந்து வரறேன் தெரியுமில்லை."

“ஐயோ இப்ப என்ன பண்ணுவ ?நான் வேணா என்னோட சாரீய தரவா?”

“டோன்ட் வொர்ரி அபி, நான் வர்ற வழியில ஒரு கடையில அனார்கலி சூட் எடுத்துட்டேன் ,சாரீ லாம் எனக்கு சரிபட்டு வராது..
”என்று சிரிதாள் பூர்ணா..

கவலை நீங்கியவளாக அபி பூர்ணாவிற்கு அவளது அறையை காட்டிவிட்டு ,

“நீ ரெடி ஆகிட்டு கீழ வா பூர்ணா,நான் கிளம்பறேன் “என்று கிளம்பினாள் அபி.
----------------------------------------------------------------------------------------------------------------------
“அருண்,அருண்…”என்று கதவை லேசாக தட்டிப் பார்த்தாள்..கதவு திறந்திருந்தது, உள்ளே தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தாள் அபி.. அறையில் யாருமில்லை .. குளியலறையில் தண்ணீர் விழும் ஓசை கேட்ட து..தயக்கத்துடன் உள்ளே வந்தவள்..

“யாராக இருக்கும்?அருணா?இல்லை விக்கியா? விக்கியா இருந்தா ரொம்ப தர்ம சங்கடமா போய்டுமே..பேசாம எழுந்து போய்டலாமா ?என்று அவள் எண்ணும் போதே ,குளியலறைக் கதவை திறந்து கொண்டு அருண் வெளியே வந்தான் … தண்ணீர் சொட்ட சொட்ட ,வெறும் இடையில் கட்டிய டவலுடன் அவன் இருப்பதை கண்டு ,அவனது வெற்றுடம்பை பார்க்க நாணி,சட்டென்று திரும்பி கண்களை இறுக மூடிக்கொண்டு அவனுக்கு முதுகுகாட்டி நின்றாள்.

அருணும் அபியை அங்கு எதிர்பார்க்காமல் சற்று திகைத்துபோனான் என்றாலும், அபியின் அனிச்சையான செய்கையில் அவனுக்கு சிரிப்பி வந்தது.அவளை சீண்டிப்பார்க்கும் எண்ணமும் சேர்ந்து வந்தது..

“சாரி ,நான் வெளிய போய் வெயிட் பண்றேன்..”என்று அவசரமாக மொழிந்து விட்டு ,கண்ணை மூடிய வாறே வெளியேற முயன்றாள்..

பரவால்ல,நீ இங்கயே இருந்தாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.”என்று குறும்பாக உரைத்தான்..

ஆவனது சீண்டலில் அதிர்ந்து சட்டென்று கண் திறந்து பார்த்தவள்..அவனது பரந்த மார்பை கண்டதும் நாணத்தில் முகம் சிவந்து மீண்டும் தன் கையை வைத்து கண்களை மூடிக்கொண்டாள்..

“ஷேம்லெஸ்..” என்று முணுமுணுத்துவிட்டு..கதவை நோக்கி ஒரு அனுமானத்தில் நகர்ந்தாள்..

சட்டென்று அவள் கையை சுண்டி இழுத்து தன் கைவளைவில் கொண்டுவந்தான் ..

“விடு அருண் என்ன பண்ற?”என்று அவனது பிடியிலிருந்து விடுவித்துகொள்ள முயன்றாள்..

“கண்ணைத் திற அபி..”என்று அவள் காதருகில் கிசுகிசுத்தான்..

“ம்ம்ஹூம்..” என்று தலையை ஆட்டினாள்..

வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது..

“அட பாரு மா..ரொம்ப தான் ..”என்றான் அருண்..

அவள் ஒற்றைக் கண் திறந்து அவனை லேசாக பார்த்தாள்,அவனது பாதி திறந்த உடலை எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக ஒரு டீ ஷர்ட் மற்றும் டிராக் பான்ட்டுடன் இருந்தான் .. இருந்தாலும் அவனது அருகாமை ,ஃப்ரெஷான சோப்பின் மணம், தலைமுடியிலிருந்து சொட்டும் நீர் இவை அனைத்தும் அவளுக்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது.

இமைக்கவும் மறந்து அவனது முகத்தினை பார்த்து கிட்டத் தட்ட வழிந்தாள்..
“அழகன் டா நீ ..”என்று மனதிற்குள் ரசித்தவள்..அதற்காக “ஷேம்லெஸ்” என்று தன்னையே திட்டியும் கொண்டாள்..

அபியின் அண்மையில் அவளது அழகு பன்மடங்காக பெருகியது போல் இருந்தது அவனுக்கு ..அவளையே விழுங்கிவிடுவான் போல பார்த்தவன் ..

“உன்னை பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா?என் கையில மட்டும் தாலி இருந்தா இப்பவே கட்டிடலாம் போல தோணுது.” என்று கூறிக்கொண்டே அவளது இதழ்களை நோக்கி குனிய,அவனை தள்ளிவிட்டு எட்டி நின்று..

“ஆசை ,தோசை ,அப்பளம் வடை..”என்று அவனுக்கு பழிப்பு காட்டினாள்..

“ஹே என்ன இது? சின்ன குழந்தை மாதிரி பேசுற? நாலு மாசத்துக்கு முன்னாடி நான் பார்த்த அபியா இது ?என்று அதிசயித்தான் ..

அவளுக்கும் இவன் முன்னாடி இப்படி சிறுபிள்ளை போல் நடந்து கொண்டோமே என்று கொஞ்சம் சங்கோஜமாகி போனது,..தலை குனிந்து,சேலை நுனியை விரலால் முடிச்சிட்டு கொண்டிருந்தாள்..

அவள் முகம் மாறுவது பொறுக்காமல் .ஒற்றை விரலால் அவள் முகத்தை உயர்த்தி.
“என்ன ?”என்று கேள்வியாக அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்

பதிலுக்கு “என்ன ?”என்று அவளும் திருப்பி கேட்க..

“என்ன வா?நீ தானே என்னை பார்க்க வந்த ?ஏன் என்னைப் பார்த்ததும் வந்த விஷயம் மறந்து போச்சா?”என்று கிண்டலாக கேட்கவும்

அவளுக்கு கோபம் வந்தது..இவன் மட்டும் எப்படி நிலை தடுமாறாமல் இருக்கிறான்? நான் மட்டும் இவனது அருகாமையினால் பாதிக்கபட்டு வாயடைத்து போகிறேன்..என்று உள்ளுக்குள் குமைந்தாள்..
அதெல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு நியாபகம் இருக்கு ,இதை கொடுத்துட்டு போக தான் வந்தேன் ..”என்று ஒரு துணிப்பையை அவனிடம் நீட்டினாள்..

“என்ன இது..?” என்றான் அதை கையில் வாங்காமல்..

“நீயே ஓப்பன் பண்ணிபாரு

கையில் வாங்கியவன் பையை பார்த்துவிட்டு “டிரெஸ் மாதிரி இருக்கு, யாருக்கு ?” என்றான்

“என்ன கேள்வி இது ?உனக்கு தான் டா “

“எனக்கு எதுக்கு ?”

“பின்ன உன்னோட ட்ராக் பன்ட்டோட ரிசெப்ஷன்னுக்கு வர்றதா ஐடியா வா?”

“மொதல்ல நான் எதுக்கு ரிசெப்ஷனுக்கு வரணும்? உன்னை வீட்ல விட வந்தேன் அவ்ளோதான் ..நான் நைட்டு ட்ரெயின்ல ஊருக்கு கிளம்பறேன்
..”

அபியின் முகம் சட்டென்று வாடியாது..அவன் சொல்லுவதும் சரி தான் ,அவன் எதுக்கு என் தங்கை கல்யாணத்திற்கு வரணும் ?சொல்ல போனால் நான் அவனை முறையாக அழைக்க கூட இல்லை ..ஆனால் அப்படி ஃபார்மலாக அவனை அழைக்க வேண்டும் எங்கிற அளவுக்கு அவன் வெளியாள் என்றெல்லாம் அவளுக்கு தோணவே இல்லையே..

அவள் செய்வதறியாமல் அவனை பார்த்து..
“சாரி அருண்… என்னோட தப்பு தான் நான் உன்னை முறையா அழைச்சிருக்கணும்..” என்றாள் முகம் வாட..

“அபி..அபி..யாரும் கூப்பிடாம கூட நான் இந்த கல்யாணத்துக்கு வருவேன்,உனக்காக..உனக்காக மட்டும்..

“நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நீ உடனே மூஞ்சிய தூக்கி வச்சிகற…”
“நான் நிஜமாவே பயந்துட்டேன் தெரியுமா ?”

“உன்கிட்ட மறுக்கறதுக்கு எங்கிட்ட ஒன்னுமே இல்லை “
என்றான் குரலில் தீவிரத்துடன் ..
அவள் வாயடைத்து போய் அவனை பார்த்துக்கொண்டிருக்கும் போதே ..

“சரி வா என்ன டிரெஸ் கொண்டுவந்திருகேன்னு பார்க்கலாம் ,”என்று ஆர்வமாக பெட்டியை திறந்தவனின் முகம் சுருங்கிப் போனது.

“ஏன் அருண் பிடிக்கலையா?”என்று ஏமாற்றத்துடன் கேட்டாள் ,அவனது முகத்தையே ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த அபி ..

“யாரு செலக்‌ஷன் இது ?”

“எங்க அப்பா தான் ஏன் நல்லா இல்லையா?”

“ச்ச ச்ச..யாரு சொன்னா ?நல்லா இல்லைன்னு ,நல்ல மஞ்ச கலர்ல எம்ப்ராய்டரி டிசைன்லாம் போட்டு குர்தா செமையா இருக்கு..ஆனா என்ன ராமராஜனுக்கு அப்பறமா இப்படி ஒரு டிரெஸ்ஸ போடுற ரெண்டாவது ஆள் நானா தான் இருப்பேன்..:”

அவனது குரலில் நக்கலை உணர்ந்து

“விளையாடாத அருண்” என்றாள் கோபமாக ..

“யாரு விளையாடுறது ,இப்படி ஒரு டிரெஸ்ஸ போட சொல்லி நீ தான் காமெடி பண்ற..உங்க அப்பா என்ன அவரு பொண்ணுங்களுக்கு டிரெஸ் வாங்குற நினைப்புல வாங்கிட்டாரா?”

“இங்க பாரு, அவ்ளோ பிஸியிலையும் உனக்கு டிரெஸ் வாங்கி இருக்காரு அந்த மரியாதைக்காவது போடு ..”

“உன்னை யாரு அவர்கிட்ட துணி வாங்க சொல்ல சொன்னது? எனக்கு டிரெஸ் வாங்கிக்க எனக்கு தெரியாதா?நான் விக்கி கிட்ட வாங்கிட்டு வர சொல்லி அனுப்பி இருக்கேன் அவன் வாங்கிட்டு வருவான் “

“அப்போ இந்த டிரெஸ்ஸ என்ன பண்றது?”

“ம்ம் ஆல்டர் பண்ணி நீயே போட்டுக்கோ..” என்றான் ஏளனமாக..


அவ்வளவு தான் அவளுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது..

“ஒருத்தர் மதிச்சி ஒரு டிரெஸ் வாங்கி குடுத்தா அதை போட்டுகணும்ங்கற மரியாதை கூட இல்லை உங்கிட்ட… போ ..போய் அந்த விக்கி வாங்கிட்டு வர்ற அந்த கோணி சாக்கையே போட்டுக்கோ..”என்று எரிந்து விழுந்து விட்டு வேகமாக வெளியேற எத்தனித்தவளை அருணின் அவசர குரல் அவளைத் தடுத்தது..

“ஹே அபி எங்க போற ,இந்தா இந்த டிரெஸை எடுத்துகிட்டு போ..”என்றான் .

அவன் அவளை சமாதானப் படுத்தான் கூப்பிடுகிறான் என்ற நப்பாசையில் நின்றவள் அவனது வார்த்தையில் மேலும் கோபம் கொண்டு,தரையை காலால் உதைத்துவிட்டு ..

“குடுத்த பொருளை திருப்பி வாங்குற பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாது..அதை நீயே வச்சிகோ ,பிடிகாட்டி தூக்கி குப்பையில போடு..”
என்றாள்..
அருண் அலுப்புடன் கண்ணைமூடித் திறந்தான் .

வேகமாக சென்று அவளது கையை பற்றி தடுத்து..
இப்ப என்ன இந்த டிரெஸ்ஸ நான் போடனும் அவ்வளவு தானே? சரி நான் போட்டுக்கறேன் போதுமா?”

அவளது மனதிற்குள் குளுகுளுவென்றிருந்தாலும் வெளியே வீராப்பாக
“எனக்காக நீ ஒன்னும் தியாகம் பண்ண வேண்டாம் “என்றாள்..

“அப்படிலாம் ஒன்னும் இல்லை இங்க பாரு நான் சந்தோஷமா தான் இருக்கேன் ..” என்று வலுக்கட்டாயமாக உதட்டை காதுவரை விரித்து சிரித்தான்..

அபி அவனது கன்னங்கள்இரண்டையும் பிடித்து செல்லம் கொஞ்சியபடி
“யூ ஆர் சோ கியூட் அருண்..” என்றாள்.

அவன் முகத்தை சுளித்து, “என்னை அப்படி சொல்லாத..”என்றான்..

அபி வேண்டுமென்றே “கியூட்டி..கியூட்டி..” என்று அழைத்து அவனை வெறுப்பேற்றினாள்..
பதிலுக்கு அவன் முறைப்பதை பார்த்து,

“சரி சரி நீ டிரெஸ் சேஞ்ச் பண்ணு “என்றாள்..

“டிரெஸ் சேஞ்ச் பண்ண சொல்லிட்டு நீ இங்கயே நின்னா என்ன அர்த்தம்?நீ கிளம்பு மா அப்பதானே நான் சேஞ்ச் பண்ண முடியும். .இல்லை இங்கயே இருந்து பார்க்கறது தான் உன்னோட விருப்பம்ன்னா எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றான் குறும்பு சிரிப்புடன் ..

“ச்சீ ச்சீ கருமம் கருமம் ..நீ வர வர ரொம்ப அடல்ஸ் ஒன்லியா பேசுற ..சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா நான் கிளம்பறேன்…” என்று விழுந்தடித்துகொண்டு வெளியேறினாள்..
----------------------------------------------------------------------------------------------------------------------
மேடையில் அனுவும் கார்த்திக்கும் முகத்தில் புன்னகையை பூசியபடி, வந்த விருந்தினர்களுக்கு வணக்கம் கூறிகொண்டிருந்தனர்.. இருவர் முகத்திலும் காதல் கைகூடிய நிறைவு கண்கூடாக தெரிந்தது..

அபி வாசலில் நின்றுகொண்டு தனது நண்பர்களின் வரவை எதிர்நோக்கியிருந்தாள் குறிப்பாக அருணின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்தாள் எனலாம்..
அதே நேரம் வருகை தரும் மற்ற உறவினர்களையும் இன்முகத்துடன் புன்னகை வாடாமல் வரவேற்றாள்…ஏதாவது வம்படியாக இவளை சீண்டி அதில் அல்ப சந்தோஷம் அடையலாம் என்று பார்த்த சில குறுக்கு புத்திகாரர்களும் அபியின் பளிச்சிட்ட முகத்தையும் பளீரென்ற சிரிப்பையும் பார்த்து வாயடைத்து போயினர்.

ஒரு வழியாக அவர்கள் மூவரும் வந்து சேரவே அவள் முகம் தாமரையாக மலர்ந்தது…
“வாங்க விக்கி.. எங்க உங்களை பார்க்கவே முடியலை..” என்று குதூகலமாக வரவேற்றாள்..

“ஏங்க நீங்க அபியா? அனுவா? அதை மொதல்ல சொல்லுங்க“ என்றான் விக்கி குழம்பிய பார்வையுடன் .

“என்ன விக்கி நக்கலா..?”என்று மிரட்டும் தொனியில் கேட்டாள் அபி..

ஐயோ இல்லைங்க அபி ,இந்த பூர்ணா கொடுத்த பில்டப் தாங்க முடியல,நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஈ அடிச்சான் காப்பி மாதிரி இருப்பீங்களாமே..எனக்கு ஒரே ஆர்வமா இருக்கு நான் மொதல்ல உள்ள போய் உங்க டிவின் சிஸ்டர பார்க்கறேன்..” என்று விட்டு உள்ளே போனான் ,அவனைத் தொடர்ந்து பூர்ணா வும் செல்ல,அருணும் அவளும் மட்டும் தனித்து நின்றனர்..

அருண் மெச்சுதலாக அவளைப் பார்த்து கண்களிலே பாராட்ட ,அவள் லேசாக முகம் சிவந்தாள்..அவனும் பளபளக்கும் ஷெர்வானி உடையில் கம்பீரமாக இருந்தான் .

“என்னை இந்த டிரெஸ்ஸ போட வச்சிடல்ல..இரு உன்னை எப்படி பழிவாங்குறேன்னு..”என்றான் அப்போதும் மனம் ஒப்பாமல்..

“ஹே ரொம்ப பண்ணாத.. நல்லா தான் இருக்கு வா உள்ள போலாம் ..”

என்றுவிட்டு அவள் முன்னால் நடக்க அவன் பின் தொடர்ந்தான் ..

உள்ளே நுழையும் சமயம் அபியின் பெயர் காதில் விழவே அவர்களது நடையின் வேகம் தளர்ந்து தேய்ந்தது…

“உனக்கு விஷயமே தெரியாதா?இந்த மாப்பிள்ளை பையன் மொதல்ல அபியை தான் பொண்ணு பார்க்க வந்தான், ஆனா என்ன நடந்ததோ?ஏது நடந்ததோ தெரியில, தங்கச்சிய தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டான்..இவங்களும் கொஞ்சம் கூட மானம் ரோஷம் இல்லாம தங்கச்சிய கட்டி வைக்கறாங்க..எனக்கு என்னமோ அக்காகாரிக்கு எதாவது குறை இருக்குமோன்னு தோணுது..இல்லைனா நிச்சயத்தப்ப யாராவது வேணாம்ன்னு சொல்லுவாங்களா?இனிமேல் அவளை யாரு கட்டப் போறா?ஊர் முழுக்க பேர் நாறிப் போச்சி,அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில என் பொண்ணை கட்டுங்கன்னு இவங்க அப்பன் என் கால்ல தான் வந்து விழணும்..”என்று தடித்த சரீரம் கொண்ட ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணி யாரோ ஒருத்தியிடம் கொக்கரித்துக் கொண்டிருந்தாள்..

அருண் அதற்கு மேல் ஒரு கணம் கூட தாமதியாமல் ,சிலையாகி நின்ற அபியை நடத்தி கூட்டிசென்று ஒரு இருக்கையில் அமர வைத்தான் ..

அபியினால் அதிர்ச்சியிலிருந்து மீழ முடியவில்லை,பார்க்காமலேயே தெரிந்தது அந்த வெங்கல குரலுக்கு சொந்தகாரர் யார் என்பது..அவளுடைய தாய்மாமாவின் மனைவி சுரெஷின் அம்மா .. “தன் சொந்த உறவை பற்றி இப்படி இழிவாக பேச எப்படி மனம் வருகிறது இவர்களுக்கு? என்று மனம் கொதித்தது..

அருண் அவள் தோளைப் பற்றி உளுக்கி.
“அபி இங்க பாரு,அந்த ஸ்டுப்பிட் லேடி பேசினதையெல்லாம் மனசுல வச்சிக்காத,நீ யாருன்னு உனக்கு தெரியும் இல்லையா?மத்தவங்கள விட்டு தள்ளு..”

அபி என்ன தான் முயன்றாலும் அவள் மனம் சமாதானம் ஆக மறுத்தது கண்களில் நீர் நிறைந்து பார்வையை மறைக்க ..
“இதுக்குதான் நான் வராம இருந்தேன். .ஒருத்தர் பேசுறது தான் நமக்கு தெரிஞ்சிருக்கு, இன்னும் மத்தவங்களாம் என்ன என்ன பேசுறாங்களோ..நினைச்சாலே உடம்பெல்லாம் கூசுறமாதிரி இருக்கு அருண்..”

“பைத்தியம் மாதிரி பேசாத ,,அந்த லேடி ஏதோ வயித்தெரிச்சல்ல பேசுற மாதிரி இருக்கு..அதெல்லாம் உண்மை ஆகிடுமா?இதெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்தது தானே ? எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணலாம் ,நான் உங்கூட தானே இருக்கேன்?
அவங்களோட ஓரே நோக்கம் உன்னை பலவீனமாக்கி அழவைக்கறது தான், நீ என்ன இப்ப அவங்களை ஜெயிக்க வைக்க போறியா? இல்லை உன்னோட சிரிப்பால அவங்களை எல்லாம் பொறாமையில பொசுங்க செய்ய போறியா? “
என்றான் அழுத்த துடன் …

கண்களில் மீண்டும் உறுதியும் தெளிவும் குடியேற அபி நிமிர்ந்து அமர்ந்தாள்..
“ஆமா நான் அழக்கூடாது ,நான் அழுதா என்னை ஏளனப்படுத்த துடிக்கறவங்க ஜெயிச்ச மாதிரி ஆகிடும் ..அவங்க ஜெயிக்க கூடாது,நான் இனிமேல் அழமாட்டேன் அருண்…என்னோட சிஸ்டரோட கல்யாணம் நான் சந்தோதமா இருக்க வேண்டிய தருணம் இது..”

“இது தான் என்னோட அபி”
என்று அவளை உற்சாகப்படுத்திவிட்டு,தன்னுடைய பையிலிருந்து ஒரு ஜுஸ் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து,

“இந்தா இதை குடி ,கொஞ்சம் எனர்ஜி வரும் “என்றான்.

அதை வாங்கி சில கடகடவென்று அருந்தியவள்..அவனைப் பார்த்து..
“தாங்க்ஸ் அருண் ..” என்றாள் மனமார..

“ஜுஸ் விக்கி தான் வாங்கிட்டு வந்தான் “என்றான் அவன் புன்னகையுடன்.

“நான் எதுக்கு தங்க்ஸ் சொன்னேன்னு உனக்கே தெரியும்”என்றாள் அவனை நேராக பார்த்து..பதிலுக்கு அவன் தன்னுடைய வழக்கமான வசீகர புன்னகை பூத்தான் ..

யாருடைய பார்வையினாலோ வார்த்தையினாலோ பாதிப்படைய கூடாது என்று முடிவெடுத்த பின்னர் அபி மனம் லேசானது போல் உணர்ந்தாள்,ஏனோ கால் தரையில் நில்லாமல் காற்றில் மிதப்பது போல் இருந்தது..தேவையில்லாமலேயே சிரிக்கத் தோன்றியது..உதட்டை காதுவரை இழுத்து வைத்து சிரித்தபடி வளைய வந்தாள் அபி..

அருண் விருந்தினருக்கான பகுதியில் அமர்ந்திருந்தாலும் அவன் கண்கள் காந்தம் போல் அபியை விட்டு விலாகமல் அவளைத் தொடர்ந்தது..என்னதான் அவன் அவளை உற்சாகமாக இருக்க சொல்லி ஊக்கப்படுத்தி இருந்தாலும் ,அவளது சிரிப்பு சற்று அதிகபடி என்றுதான் அவனுக்கு தோன்றியது,மேலும் அவளது நடவடிக்கையிலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரியவே..என்ன என்று அறிவதற்காக அவள் அருகில் சென்றான் ..
அபி அவனைப் பார்த்தும் அசட்டு சிரிப்பு சிரிக்கவும் ,அதிர்ந்து போய்..

“அபி என்ன ஆச்சு உனக்கு ?”என்றான்.

தெரியலை அருண்..எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு ..”என்று விட்டு அவள் தருமாறி விழப்போகவும், அருண் சட்டென்று அவளை விழாமல் தாங்கிப்பிடித்தான்..

நிலை தடுமாறிய அபி அருணை அப்படியே அணைத்துக் கொண்டு அவனுடன் அட்டையாக ஒட்டிகொள்ள,அவன் பதறிப்போய் அவளை விலக்கி நிறுத்தினான் ..

அனிச்சையாக யாரேனும் பார்த்துவிட்டார்களா என்று அறிய சுற்றிலும் சுழன்ற பார்வை இருபதடி தூரத்தில் அவனையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த அபியின் அப்பாவின் முகத்தில் வந்து நிலைத்தது..
அந்த பார்வையில் என்ன இருந்ததோ அருணுக்கு ஒரு கணம் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது…
தொடரும் …













 
Last edited:
அய்யய்யோ
அந்த ஜூஸில் என்னத்தைடா கலக்கி வைச்சே, விக்கி?
மதுவா?
உன்னாலே இப்போப் பாரு அபியின் அப்பா அருணை முறைக்கிறார்
 
Top