Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 27

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 27

அபி காரின் ஜன்னலை திறந்துவிட்டு தன் முகத்தில் மோதிய காற்றை ஆழ்ந்து நுகர்ந்தாள்…மண்ணின் வாசம் அவளது பிறந்த ஊரின் தனி வாசம் ஒரு சிலிர்ப்பை தந்தது ..ஊரைவிட்டு வெளியூருக்கு சென்று வேலை பார்த்துவிட்டு நெடுநாள் கழித்து ஊர்திரும்பும் ஒவ்வொருவரும் உணரக்கூடிய அந்த பூரிப்பு..அந்த இன்பம் அலதியானது..

அருகில் அமர்ந்து அவளது மலர்ந்த முகத்தையே அமைதியாக ரசித்துகொண்டிருந்தவனிடம் இது தான் நான் படிச்ச ஸ்கூல் ,நாங்க எப்பவும் சாப்பிடும் ஹோட்டல், சிவன் கோவில் ..பஸ் ஸ்டாண்ட், ரெயில்வே ஸ்டேஷன்..என்று ஒவ்வொன்றாக காட்டி குதூகலத்துடன் கூறிக்கொண்டே வந்தாள்..அருண் புன்னகையுடன் கேட்டுக்கொண்டான்..

“இப்பவாது சொல்லு அருண் ,என்ன சொல்லி என்னை கேம்ப்ல இருந்து கூட்டி வந்த ?” என்று கேட்டாள் அபி
“அது எதுக்கு விடு “

சரியான காரணம் சொல்லாம விட்டிருக்க மாட்டாங்க,நான் மட்டும்ன்னா கூட பரவால்ல ,நீயும் சேர்ந்து வர்றது தான் கொஞ்சம் இடிக்குது..சொல்லு அருண் என்ன சொன்ன..?”

“பொய் சொன்னேன் போதுமா..?”
என்றான் அவன் சுருக்கமாக

“அது தெரியுது என்ன பொய் சொன்ன?”என்றாள் அவள் விடாமல்

“காலங்காலமா எல்லாரும் சொல்ற பொய் தான் ..”

“என்னது ?”

“உங்க பாட்டி யாரும் இப்ப உயிரோட இல்லையே ?”

“வாட்?”
என்று அதிர்ந்தாள் அபி..

“உன்னோட பாட்டி இறந்துடாங்கன்னு நியூஸ் வந்ததால நீ அழுது அழுது வீஸிங் வந்துடுச்சின்னு சொன்னேன் ,சாட்சிக்கு நம்ம டாக்டர் வேற இருந்தாரு ..நீ தனியா போறது ரிஸ்க்ன்னு சொன்னேன் ,என்னையும் கூட போக சொல்லிடாங்க “என்று அவன் கூறி முடிக்க,

“சரியான கேடி தான் நீ…”என்று அவனை கிண்டலடித்தாலும் மனதிற்குள் எப்படியோ பிரச்சனையின்றி சுமூகமாக முடித்துவிட்டானே என்று பெருமையாக தான் உணர்ந்தாள்..

“டிரைவர் அண்ணா ..இந்த ரைட்ல நிறுத்திக்கோங்க..” என்று வழிகாட்டியவளுக்கு தன் வீடு நெருங்கியதும் உடல் தானாக விரைத்தது..

கார்லிருந்து இறங்கி அந்த பெரிய பங்களா வீட்டின் கேட்டின் முன்னர் நிற்க்கும்போது மனம் படபடத்தது.

அருண் அவள் கையைப் பற்றி அழுத்தி நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக கண்சிமிட்டினான்..

அவன் தந்த தைரியத்தில்.கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றாள்..பெரிய வீடு ..கேட்டிலிருந்து வீடு வரை ஒரு நூரு மீட்டர் தொலைவு இருந்தது..பச்சை பசேலென்றிருந்த புல்வெளி, நன்றாக பராமரிக்கப்பட்ட தோட்டம் என்று பார்ப்பதற்கே கண்ணைக்கவருவதாக இருந்தது..

அதற்குள் கதவு திறக்கும் ஓசையைக் கேட்டு யார் என்று பார்ப்பதற்காக வெளியே வந்த அபியின் அப்பா ..அபியைக்கண்டதும் .ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடி போய்விட்டார்.

“அபி கண்ணு..” என்று பாசமாக அழைக்க ..அதுவரையிலும் கூட ஒட்டிக்கொண்டிருந்த சிறு தயக்கமும் நீங்கி அபி பாய்ந்து சென்று அவரைக் கட்டிக்கொண்டாள்.

“அப்பா..”என்று அவர் மார்பில் சாய்ந்து கதறினாள்..

“என் தங்கம் வந்துட்டியா கண்ணு..?இப்ப தான் எனக்கு உயிரே வந்தது..”

“அப்பா.. சாரி பா..”

“நீ எதுக்கு மா சாரி சொல்ற நான் தான் சொல்லணும் ..”
என்று அவளது தலையை வருடிக்கொடுத்தார்..அபி சலுகையாக அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்..

அருணுக்கு அந்த இடத்தில் பொருந்தாமால் தான் தனியாக தெரிவது போல் இருந்தது..
சற்று ஆசுவாசமடைந்த பின் தன் மகளுடன் வந்த அந்த நெடியவனை கவனித்தார் அப்பா..

அவர் கேள்வியாக நோக்கும்போதே அபி .. “அப்பா இது அருண் ,என்னோட வேலை பார்க்குறவர்.. என் கூட துணைக்கு வந்திருகாரு..”என்று இருவருக்கும் அறிமுகப்படுத்திவைத்தாள்..

“வாங்க தம்பி ,உள்ள வாங்க…” என்று இன்முகமாக வரவேற்றுவிட்டு.. “அபி கண்ணு.. நீயும் உள்ள வா..”என்றவர்..”லட்சுமி இங்க பாரு யாரு வந்திருக்கான்னு…” என்று உற்சாகமாக கூவிக்கொண்டே உள்ளே ஓடினார்.

அருண் வளர்ந்த குழந்தை போல அவர் துள்ளிக்கொண்டு ஓடுவதை ஆச்சரியமாக பார்த்தான் ..அபி அவனை பார்த்து மன நிறையவுடன் புன்னகைத்தாள்..
அவர்களின் அந்த சிறு பார்வைப் பரிமாற்றத்தில் இடையூறாக,

“அபி…..”என்ற பெருங்கூச்சலுடன் ஓடிவந்து அனு அவளைக் கட்டிக்கொண்டாள்.
அபி சற்று தயங்கிய போதும் திரும்ப அவளை அணைத்துக்கொண்டாள்,அவளுக்கும் அந்த இதம் தேவைப்பட்டது.

அருண், அபியின் அச்சு அசலாக இன்னொரு பெண்ணைப் பார்த்து திகைத்துபோய் நின்றுவிட்டான் ..

அனுவின் அணைப்பிலிருந்து விடுபட்டு அருணின் முகத்தை பார்த்த அபிக்கு சிரிப்பு வந்தது..இது அவர்களுக்கு பழகியது தான்.. சிறு வயது முதலே அவர்கள் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்க்கும் பார்வை ஒன்றும் புதியதில்லை..
அருண் திகைப்பிலிருந்து விடுபட்டு .

“பார்த்துங்க ..ரொம்ப கத்தாதீங்க ..மாப்பிள்ளை பயந்து ஓடிடபோறாரு..”என்றான் கிண்டலாக..

அப்போது தான் அந்நியன் ஒருவன் இருப்பதை கவனித்த அனு ,அவனை புதிராக பார்த்தாள்..இருப்பினும் அவன் அவளை நக்கலடித்ததற்கு பதிலடி கொடுக்காமலும் இருக்க முடியவில்லை..

“அதெல்லாம் அவரு ஒன்னும் ஓடமாட்டார்..”என்று அதிகாரமாக அறிவித்தவள்..
“ஆமா நீங்க யாரு ?என்று அவனை கேட்டாள்.

“நான் உங்க அபியோட ..”என்று இழுத்தவன் அபியைப் பார்த்தான் ..

அவள் மூச்சுவிடவும் மறந்து அவன் அடுத்து என்ன சொல்ல போகிறானோ என்று அச்சத்துடனும் கூடவே சிறுஎதிர்பார்ப்புடனும் காத்திருந்தாள்..

“அபியோட..”என்று உந்தினாள் அனு

“அபியோட கொல்லீக்..கம் ஃப்ரெண்ட் ..அருண்”

என்று காதுவரை நீண்ட சிரிப்புடன் முடித்தான் அருண்..

“ப்பூ..இவ்ளோ தானா?இதுக்கு தான் இந்த பில்ட்டப் ஆ?”
என்று ஏளனமாக கேட்டவள்..

“சரி வா அபி.. உள்ள போகலாம்..” என்று அவளை இழுத்துக்கொண்டு போனாள்..
அவர்கள் வீட்டினுள் நுழையும் முன்னர் அபியின் அம்மா ஆரத்தி தட்டோடு வந்து,

“அபி மா… கொஞ்சம் இரு ,நான் ஆலம் சுத்தினதும் உள்ள போலாம் ,ஹேய் அனு அந்த பக்கம் தள்ளுடி ” அவளை என்றார்..

“அம்மா எதுக்கு மா இதெல்லாம் நான் என்ன கல்யாணப்பெண்ணா?”
என்று சிணுங்கினாள் அபி.

“அப்படி சொல்லாத அபி,யாரு கண்ணுபட் டதோ நீ இவ்ளோ கஷ்டப் பட்டுட..இனிமேல் உனக்கு எல்லாமே நல்லா தான் நடக்கும் ..”என்று ஆலம் சுற்றினார்..

அருண் அபியின் பின்னால் சற்று தள்ளி நிற்க ,பார்ப்பதற்கு அவர் இவர்கள் இருவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுப்பது போல் இருந்தது..

உள்ளே சென்றதும்

“அருண்.. நீ உட்காரு நான் போய் உனக்கு குடிக்க எதாவது கொண்டுவறேன்” என்று சமையலறைக்கு சென்றாள்..

“அபி எப்படி இருக்க?” என்று அம்மா கண்களில் நீருடன் விசாரித்தார் ..

“நல்லா இருக்கேன் மா ..” என்று ஆதரவாக அவரைக் கட்டிகொண்டாள் அபி..

“சாப்பிடுறியா இல்லையா ..?இப்படி பாதி உடம்பா இருக்க ?” என்று அங்கலாய்தார் அம்மா..

“அம்மா ..”என்று சலித்துகொண்டாள் அபி..

இருவரும் சிறிது நேரம் சாதாரணமாக பேசிகொண்டனர் ,கசப்பான பழைய நினைவுகளை இருவருமே கவனமாக தவிர்த்தனர்..

அம்மா சூடாக தயாரித்த காஃபியை எடுத்துகொண்டு வரவேற்பறையை நெருங்கியவள் அருணும் அனுவும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்டு தானும் புன்னகைத்தாள்..ஆனால் அவனின் கடைசி வார்த்தைகள் காதில் விழுந்து அவளை அப்படியே உறைய செய்தது..

“சான்ஸே இல்லை அனு ,நீங்க மட்டும் அபியோட கார்பன் காப்பி மாதிரி இல்லாம இருந்தா ,நீங்க அபியோட சிஸ்டர்ன்னு சத்தியம் பண்ணா கூட நான் நம்பி இருக்க மாட்டேன்..எவ்ளோ பேசுறீங்க?கொஞ்சம் மூச்சுவிட கேப் விடுங்க..உங்க அக்கா என் கிட்ட முழுசா மூனு வார்த்தை பேச மூனு நாள் ஆச்சு.கார்த்திக் உங்க காலடியில சரணாகதி அடைஞ்சதுல ஆச்சரியமே இல்லை …”

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை கூறு கூறாக கிழிப்பது போல் இருந்தது..
சரித்திரம் மீண்டும் திரும்புகிறதா? இனம் புரியாத பயம் அடிவயிற்றை கவ்விப் பிடிக்க அவளது கைகள் நடுங்கியது..கையிலிருக்கும் தட்டு எப்போது கீழே விழுமோ என்றிருந்தது..
“அருண் நீயுமா ?என்னையும் அனுவையும் ஒப்பிட்டு பார்க்கிறானா?என்னை தேர்ந்தெடுத்ததற்காக வருந்துகிறானா?எனக்கு முன்னால் அனுவைப் பார்த்திருந்தாள் இவனும் அந்த கார்த்திக் போல தான் நடந்துகொண்டிருப்பானா..?”

இப்படி மனம் ஏதேதோ நினைத்து குழம்பியது..இது வெறும் வேடிக்கை பேச்சுதான் என்று புத்திக்கு உறைத்தாலும் ,ஒருமுறை சூடுபட்ட பூனையாக மனம் மீண்டும் தவிக்கத்தொடங்கியது..

உள்பக்கமாக அரவம் உணர்ந்து திரும்பிய அருண் அபி நிற்பதை பார்த்த மறுகணம் உதடு விரிய கண்கள் பளபளக்க சிரித்தான்..

அபியின் கலங்கிய மனம் சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்த து..இந்த சிரிப்பு ..கண், முகம், மனம் மலர்ந்து அவன் சிரிக்கும் இந்த சிரிப்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது,வேரு யாருக்கும் கிடைக்காத தனி சிரிப்பு ..அபியை காணும் போது மட்டும் வரும் பிரத்தியேகமான சிரிப்பு..

அவளது அலைபாய்ந்த மனதிற்கு அருமருந்தாக இருந்தது அவனது அந்த சிரிப்பு..சந்தேகங்க சஞ்சலங்கள் நீங்கி மனம் தெளிவு பெற..என்றுமில்லா தது போல் இன்று அவனை மையலுடன் பார்த்து வசீகர புன்னகை பூத்தாள் அபி..

அவளது பார்வையில் மாற்றத்தை உணர்ந்த அருண்,என்ன என்பது போல் ஒற்றை புருவம் உயர்த்தினான்..

அபி ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு மேலும் புன்னகை விரிய அழகாக முகம் சிவந்தாள்.இதை பார்வையாளராக அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அனு ஆச்சரியமாக புருவம் உயர்த்தினாள்..

அனு அபியிடம் தனிமையில் பேச துடித்துகொண்டிருந்தாள்..அவர்களுக்கு நடுவே ஏதேதோ நடந்து அவர்களது உறவு எப்படியெப்படியோ திரிந்து விட்டது..அதனால் அவள் பக்கத்து கதையை சொல்ல கூட முடியாமல் அனு தவித்துப்போனாள்..

அவள் தோழி ஒருத்தியின் கல்யாணதிற்காக பெங்களூரு சென்ற போது தான் அவள் முதன்முதலில் கார்த்திக்கை சந்தித்தாள்.. அவன் மணமகனின் தோழன்..இவர்கள் சினேகிதர்கள் பட்டாளமாக சேர்ந்துகொட்டமடித்து கொண்டிருந்தனர்..தூரத்தில் பார்த்த போதே அனுவுக்கு அவன் மேல் ஒருவித ஈர்ப்பு இருந்தது.. ஆனால் கார்த்திக் இவளிடம் வந்து பெயர் கேட்டு பேச முயலவும், பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வில் அவன் யாரோ எவரோ என்று, இவள் தன் பெயரை மாற்றி அபி என்றுவிட்டாள். பிறகு அவன் நல்ல விதமாக நடந்து கொள்ளவே அவன் மேல் ஒரு நன்மதிப்பு ஏற்ப்பட்டு முதலில் ஏற்பட்ட தயக்கம் நீங்கியது..ஆனால் அவன் இவள் தான் என்று எண்ணி அபியை பெண் கேட்டு வருவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை..

இந்த விஷயம் கார்த்திக் வீட்டிற்கு வந்து கூறிய போது அனு ஒரேடியாக மறுத்துவிட்டாள்..அபியை தான் அவன் திருமணம் செய்ய வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினாள்..ஆனால் அப்படி செய்தாள் அது அபிக்கும் செய்யும் துரோகம் என்று கார்த்திக் பிடிவாதம் பிடித்து நிச்சயத்தை நிறுத்திவிட்டான்..

இந்த விஷயத்தையெல்லாம் கூரிவிட்டு “சாரி அபி நான் சொன்ன அந்த ஒரு பொய் இவ்ளோ தூரத்துக்கு வந்து நிக்கும்ன்னு தெரியாம போச்சி..என்னால நீ எவ்ளோ கஷ்டப் பட்டுட்ட..?உன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் எப்படி குற்றவுணர்வில் தவித்தேன் தெரியுமா..?”என்று கண்ணீர் விட்டு அழுதாள்..

“விடு அனு ,இதெல்லாம் நடக்கனும்ன்னு இருக்கு ..இப்ப தான் நான் வந்துடேன்ல ..இனிமேல் இதை பத்தி பேச வேண்டாம் ..நீ கல்யாணப் பொண்ணு அழலாமா?கண்ணைத்தொடை.."என்று அவளை அணைத்துகொண்டாள்..இதை பார்த்து பெற்றவர்கள் இருவரும் விழியில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டனர்..

திருமணம் ஒரு பெரிய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த மண்டபத்தில் விருந்தினர் தங்கும் அறைகளில் ஒன்றை அருணுக்கு ஒதுக்கி இருந்தனர்..அவன் படுக்கையில் படுத்துகொண்டு அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டு கொண்டிருந்த போது ..அறைக்கதவு தட்டப்பட்டது..

வெளியே ஒடிசலான தேகத்துடன் நெடுநெடுவென்று ஒரு இளைஞன் நின்றிருந்தான்..அப்பாவியான முகத்தோற்றதுடன் பக்கத்துவீட்டு பையன் போல் இயல்பாய் இருந்தான் ..
அருண் அவனை கேள்வியாக பார்க்க

அவன் இவனைப் பார்த்து சிநேகமாக சிரித்தபடி
“மிஸ்டர் அருண்?”

“யெஸ்..”

“நான் கார்த்திக் அனு வோட வுட் பீ..”

“ஓ..மாப்பிள்ளை சார்..உள்ள வாங்க”
என்று வரவேற்றான்..

“சார் லாம் சொல்லாதீங்க.. நாம ஒரே ஏஜ் குரூப்பா தான் இருப்போம், சோ ஃப்ரெண்ட்லியாவே பேசலாம் “என்றான் கார்த்திக்.

அருண் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதை பார்த்து..

“நீங்க என் மேல கோபமா இருகீங்கன்னு நெனைக்கறேன்…”

“நீங்க யாருங்க எனக்கு ?நான் ஏன் உங்க மேல கோபப்படணும்?”

“அபிக்கு துரோகம் பண்ணிட்டேன்னு..”
அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னமே இடை புகுந்து ..

“இதை எல்லாம் எங்கிட்ட வந்து எதுக்கு சொல்லிட்டு இருகீங்க?”

“நான் சாரி கேட்கணும்


“ஹல்லோ.. எங்கிட்ட எதுக்கு சாரி கேக்குறீங்க ..?”

“அபிகிட்ட கேக்க தைரியம் இல்லை ,அது மட்டும் இல்லாம இப்ப தான் திரும்ப வந்திருக்காங்க ,அவங்ககிட்ட பழசு எதையும் பேசி அப்செட் பண்ணவேணாம்ன்னு அனுவும் ஃபீல் பண்றா..”

“நான் தான் அபியோட ரெப்ரசென்டேடிவ்ன்னு நான் சொல்லவே இல்லையே..”
என்றான் அருண் ஏளனமாக..

“நீங்க அபியோட ஃப்ரெண்ட் அவங்களுக்காக என் மேல கோபப்படுறது நியாயம் தான் .பட் என்னோட பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க.நான் பெங்களூருல பார்த்து விரும்பின பொண்ணுன்னு நெனைச்ச பொண்ணு அபி இல்லை ,அனு தான் ..அந்த நேரத்து அதிர்ச்சியில என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப தப்பா அந்த சூழ்நிலையை கையாண்டுட்டேன்..
அனுவும் அக்காவுக்காக என்மேல இருந்த ஃபீலிங்க்ஸ ஒத்துக்காம அபியை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு அடம் பிடிச்சா…அபிகிட்ட உண்மைய சொன்னா தற்கொலை செஞ்சிப்பேன்னு மிரட்டினா..
ஆனா நான் ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன்..அனு சொல்றதுக்காக நான் அபியை கல்யாணம் பண்ணினா எங்க மூனு பேரோட வாழ்க்கையும் வீணாப்போயிடும்ன்னு தெரியும் ,அதனால தான் துணிஞ்சி நிச்சயதார்த்தத்த நிறுத்தினேன் .
கொஞ்சநாள்ல எல்லாம் சரியா போய்டும்ன்னு நெனைச்சேன் ..ஆனா இந்த சம்பவம் அபியை இந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு நான் கனவுலையும் நெனைக்கலை..
அனுவை அதுக்கப்புறம் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க நான் படாத பாடு பட வேண்டி இருந்தது..
எப்படியோ ஒரு வழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது..எங்க கல்யாணத்துல அபி இல்லாம போயிருந்தா அது என்னிக்கும் ஒரு தீராத வலியா இருந்திருக்கும் ..இப்போ அபிய இங்க கூட்டி வந்து அந்த குறையையும் தீர்த்துவச்சிடீங்க ,ரொம்ப தாங்க்ஸ்..”
என்றான் கார்த்திக்..

“எப்படி இப்படி ஒருவன் சுயநலத்துடன் தன்னிலேயே மூழ்கி இருக்க முடியும் ? என்று வெருப்புடன் நினைத்துகொண்டான் அருண்..

“நாம பண்ண தப்ப நியாயப் படுத்த நம்ம கிட்ட ஆயிரம் காரணம் இருக்கும் ,ஆனா அதனால ஒரு அப்பாவி ஜீவன் அனுபவிச்சவலி ஒன்னுமில்லாம போய்டாது” என்றான் சிறு கோபத்துடன் ..

கார்த்திக்கின் முகம் தொங்கிப் போனது .

அருணுக்கு அவனைப் பார்த்தாலும் பாவமாக தான் இருந்தது..என்ன இருந்தாலும் கல்யாண மாப்பிள்ளை.அவனை சங்கடப்படுத்தவும் மனம் வரவில்லை..எனவே பேச்சை மாற்ற எண்ணி..

“அது சரி ,நீங்க என்னை பார்க்க வந்த உண்மைக் காரணத்தை இன்னும் சொல்லவே இல்லையே..”என்றான் அருண்.

“உங்களைப் பார்த்து நன்றி சொல்ல வந்தேன் ..”

“எனக்கு எதுக்கு நன்றி ?”

“அபியை சமாதானப்படுத்தி இங்க கூட்டி வந்ததுக்கு..”

“நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருகீங்கன்னு நெனைக்கறேன் ,நான் அபி கூட துணைக்கு வந்தேன் அவ்வளவு தான் “

“அது எனக்கு தெரியாது ..ஆனா அனு அபியை நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்கன்னு உறுதியா நம்புறா..அதனால எங்க ரெண்டு பேர் சார்பாகவும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..”எ
ன்றான்

இந்த கார்த்திக்கும் அவனோட வுட் பீ யோட தொல்லையும் தாங்கலை..” என்று மனதில் நினைத்துக்கொண்டு

“சரி அதான் தாங்க்ஸ் சொல்லிடீங்களே..கிளம்புங்க..” என்றான் அருண்..
கதவருகே சென்றவன் நின்று இவன் புறமாக திரும்பி ..

“ஆனா அருண் உங்க கிட்ட இருந்தும் ஒரு தாங்க்ஸ் எனக்கு வரவேண்டி இருக்கு..”

“இது என்ன கதை ?நான் எதுக்கு தங்க்ஸ் சொல்லனும் ?”


“அபிய வேண்டாம் ன்னு சொன்னதுக்கு..” என்று கண்ணடித்துவிட்டு போனான் .

என்ன தைரியம் என்று முதலில் பொங்கினாலும் ..லேசாக தணிந்து ..கார்த்திக் கண்ணுக்கு மறையும் முன் அவனிடம்“தாங்க்ஸ்..” என்றான் லேசாக முக சிவப்புடன் ..
தொடரும்
 
Top