Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 26

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 26

சென்னைக்கு வந்து இன்ஃபொடெக்ல சேர்ந்தேன் ..அந்த ஒரு சம்பவம் என் வாழ்கையை முழுமையா புரட்டிப்போட்டுடுச்சி..நான் எனக்குள்ளேயே சுருங்க ஆரம்பிச்சேன் ..என்னை சுற்றி ஒரு சுவர் எழுப்பிகிட்டு யாரையும் உள்ளே விடாம எந்த மனுஷங்களோடவும் பழகாம என்னை நானே தனிமைப் படுத்திகிட்டேன் .. யாரோடவும் நெருங்க பயம் , ஒருவேளை அவங்க ஒரு நாள் என்னை வெறுத்து ஒதுக்கிட்டா?அவனோட அந்த ஒரு நிராகரிப்பு என்னோட கடைசி சொட்டு தன்னைபிக்கை வரை அழித்துவிட்டிருந்தது..

காதல், அன்பு, உறவு ஏன் வாழ்க்கைமேல இருந்த நம்பிக்கையும் கூடபோச்சி..

என்னொட இந்த பலவீனத்தை எல்லாம் கடுமையான வெளித்தோற்றதையும் , கோபத்தையும் கொண்டு மறைத்துகொண்டிருந்தேன் ..மனதின் கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு ஒரு இயந்திரம் போல வாழ்ந்துகொண்டிருந்தேன், உன்னை பார்க்கற வரைக்கும் …”என்று நிறுத்திவிட்டு அவனை விழிமலர பார்த்தாள் ..
அவள் சொல்லாமல் விட்ட வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தவனாக ..அவனும் கண்கள் கனிய அவளைப் பார்த்து புன்னகைத்தான் ..

அபி பழைய நினைவுகளைக் கிளறி மீண்டும் அந்த வேதனையை எல்லாம் திரும்ப அனுபவித்துகொண்டிருப்பதை பார்த்து ,அவளை அப்படியே அள்ளி தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும் போல் ஓர் உந்துதல் ஏற்ப்பட்டது ..அவன் தன் சிந்தனையை செயலாக்கும் முன் அபி தொடர்ந்து பேசினாள்..

நான் சென்னைக்கு வந்தப்புறம் என் வீட்டு ஆளுங்க என்னை பலமுறை தொர்பு கொண்டு என்னை சமாதானப்படுத்த முயற்சி செஞ்சாங்க ,என் அப்பா நெறைய வாட்டி வீட்டுக்கு வந்து கொஞ்சி இருக்கார் ..அம்மாவும் அனுவும் டெய்லி ஃபோன் செஞ்சி என்னை வீட்டுக்கு வரசொல்லி மன்றாடியிருக்காங்க ..ஆனால் நான் பிடிவாதாம இருந்தேன் ..

ஆறுமாசம் என்னோட சம்மதத்துக்காக காத்திருந்தாங்க ,ஆனா கார்த்திக்கு
யூ எஸ் ல வேலை கிடைச்சிருக்காம் அவன் ஊருக்கு போறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடணும்ன்னு மாப்பிள்ளைவீட்டு பக்கம் ரொம்ப அழுத்தம் கொடுத்ததால வேற வழியில்லாம நான் இல்லாமலேயே கல்யாணம் பண்ணபோறாங்க..நாளைக்கு முகூர்த்தம் ..

அம்மாவும் அனுவும் கல்யாணத்துக்கு வரசொல்லி அவ்ளோ அழுதாங்க ..நேத்து நைட் கூட அப்பாதான் கால் பண்ணார் ..அவரை மன்னிச்சிட சொல்லி கதறி அழுதுட்டாரு ..

என்ன தான் அவங்க மேல கோபம் இருந்தாலும்" ப்ளட் ஈஸ் திக்கர் தேன் வாட்டர்"ன்னு சொல்ற மாதிரி என்னொட மனசும் அவங்களுக்காக இறங்க தான் செய்யுது..அவங்களை மன்னிச்சிடலாம்ன்னு நான் முடிவு பண்ற நேரம் அவங்க பண்ண துரோகம் கண்முன்னாடி வந்து நின்னு என்னைத் தடுக்குது..இப்படியே என் மனசு கல்யாணத்துக்கு போலாமா வேணாமான்னு அலைபாஞ்சிட்டே இருக்கு அருண்.

உனக்கு தெரியுமா குன்னூர் எனக்கு பிடிச்ச இடம் ..கோயமுத்தூர்ல இருந்து சில மணிநேரத்துல வந்திடலாம், எங்களுக்கு இங்க கொஞ்சம் இடமும் வீடும் இருக்கு ..எல்லா ஹாலிடேஸ்க்கும் இங்க வந்து டேரா போட்டுடுவோம் ..இப்ப இந்த இடத்தை பார்க்கும் போது பழைய நியாபகங்கள் எல்லாம் வந்து வீட்டுக்கு போய்டலான்னு என்னை உந்தித் தள்ளுது ..ஆனாலும் போக விடாம ஏதோ ஒன்னு இன்னும் என்னைத் தடுக்குது ..ஒருவேளை அந்த காயம் ஆறவே முடியாத அளவுக்கு ஆழமா பதிஞ்சிருக்கு போல ..என்ன இருந்தாலும் என்னோட தங்கச்சி கல்யாணம் ..போகவும் முடியாம ..போகாம இருக்கவும் முடியாம என்ன பண்றதுன்னே தெரியாம குழம்பித் தவிக்கிறேன் அருண்…

அவள் கையைப் பற்றி ஆறுதலாக அழுத்திவிட்டு

“உன்னை தடுக்கற விஷயம் எதுன்னு எனக்கு தெரியும் ..ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெளிவாகனும் ..கேக்கலாமா ?”

என்ன கேள்வி இது என்பது போல் அவனைப் பார்த்தாள் அபி ..அவனிடம் மறைக்க இனி அவளிடம் என்ன இருக்கிறது ?
சம்மதமாக தலையாட்டினாள்..

“நீ அவனை அந்த ஆஆ..அவன் பேரு என்ன? கார்த்திக் ..அவனை லவ் பண்ணியா?என்றான்.

ஒருகணம் அவன் என்ன கேட்கிறான் என்று குழம்பியவள் முகத்தில் மறுகணம் குறும்பு கூத்தாடியது..
அவள் இவ்வளவு சொன்னதில் இவனுக்கு இதை தெரிந்து கொள்ளுவது தான் முக்கியமாக இருக்கிறாதா ?என்று எண்ணி சிரித்தாள்..

என்ன சிரிப்பு ?”என்று எரிந்து விழுந்தான் அருண்..அவன் முகத்தில் சிறு பதற்றத்தை கண்ட அபி தன் விளையாட்டை விட்டுவிட்டு அவனது கேள்விக்கு உண்மையாக பதிலளித்தாள்..
“இல்லை அருண் ,நான் லவ் லாம் பண்ணலை,அது ஒரு அரேஞ்ச்டு அலையன்ஸ்ங்கறாதால அந்த ஃபீலிங்லாம் வரலை ..என்னால முடிஞ்ச வரைக்கும் சகஜமா பேச முயற்சி செஞ்சேன் ,அதுவும் ஒரு வாரத்துக்கு கூட நிலைக்கலை ..ரொம்ப நாள் பேசி பழகி இருந்தா அந்த மாதிரி தோணி இருக்குமோ என்னவோ..அப்பவுக்காக ஒத்துகிட்ட கல்யாணம் அந்த ஃபீல் தான் இருந்தது அவ்வளவுதான்…”

அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை பெருமூச்சாக வெளியேவிட்டான் அருண்.
அபி, நான் சொல்லட்டுமா ?உன்னை தடுக்கறது நீ நினைக்கற மாதிரி அந்த கார்த்திக்கோட நிராகரிப்போ.. உன்னோட தங்கையோட நம்பிக்கை துரோகமோ.. உன்னோட அம்மாப்பாவோட ஒருதலைபட்சமான முடிவோ இல்லை ..

உன்னை தடுக்கறது உன்னோட ஈகோவும்…தாழ்வுமனப்பான்மையும் தான் ..”

“இல்லை அருண் ..”
என்று மறுத்துபேச தொடங்கியவளை..இடைமறித்து

“ஆமா அதான் உண்மை… உன்னோட சிஸ்டர் உன்னை விட பெட்டர்ங்கற எண்ணம் உனக்கு எப்பவுமே இருந்திருக்கு, அதுக்காக நீ அவளை வெறுக்கறேன்னு கிடையாது ஆனா இந்த தாழ்வுமனப்பான்மை உன் ஆழ்மனசில பதிஞ்சிருக்கு,அதனால தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை உன்னை விட்டுடு உன் சிஸ்டரை தேர்ந்தெடுத்தப்ப அந்த வலியை உன்னால தாங்க முடியலை ..

மொதல்ல நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கனும் நீ எந்தவிதத்துலையும் உன்னோட சிஸ்டரை விட குறைஞ்சவ கெடையாது..அவன் உன்னை வேண்டாம்ன்னு சொன்னா நஷ்டம் அவனுக்குதான் ,உனக்கில்லை புரியுதா ?உன்னை மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்ணதுக்காக அவன் தான் ஃபீல் பண்ணனும்… நீ ஏன் ஃபீல் பண்ற?

அபி நான் ஒரு விஷயத்தை உறுதியா நம்புறேன் ..வாழ்க்கையில நமக்கு ஒரு விஷயம் கிடைக்கலைன்னா ,நாம அதுக்கு தகுதியானவங்க இல்லைன்னு அர்த்தம் கிடையாது ..நம்ம கிட்ட இருக்க அந்த விஷயத்துக்கு தான் தகுதி கிடையாது இதை மொதல்ல தெரிஞ்சிக்கோ..

இப்போ நீ ஒரு ஜாப் இன்டர்வியூ க்கு போற ,உன்னை வேண்டாம்ன்னு ரிஜெக்ட் பண்ணிடறாங்க ..நஷ்டம் யாருக்கு ?அவங்களுக்கு தான்.. உன்னை மாதிரி ஒரு திறமைசாலியை அவங்க தான் மிஸ் பண்றாங்க ..

என்னையெல்லாம் இப்படி எத்தனை கம்பெனி மிஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா..?
என்ற அவனது கடைசி வார்த்தையில் அபிக்கு லேசாக புன்னகை அரும்பியது..

கடவுள் ஒரு விஷயத்தை நமக்கு தராம மறுக்கரார்னா ..அதைவிட பெஸ்ட் ஆ வேற ஒன்னை நமக்கு தரப் போறார்ன்னு அர்த்தம் ..இப்படி யோசிச்சிப்பாரு ..அந்த கார்த்திக் உன்னை வேண்டாம்ன்னு சொல்லாம இருந்திருந்தா இந்த உலகத்துல அருண்ன்னு ஒரு மகா மனிதன் இருக்கறதே உனக்கு தெரியாம போய் இருக்குமே ..” என்று புருவம் உயர்த்தி கேட்க அவளது கண்கள் ஒரு புதிய உணர்தலில் ஒளிர்ந்தது.

“அவனுக்கும் எனக்கும் பொருத்தமில்லை அதான் அவன் என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டான் அவ்ளோ தான் ..”என்றாள் அபி.

வெரி குட் ..இப்படி தான் ஸ்போர்டிவ்வா எடுத்துக்கணும் ..

உன்னோட அடுத்த மனகுழப்பம்,அனு எப்படி உனக்கு பார்த்த மாப்பிள்ளையை காதலிக்கலாம்ங்கறது..லவ் ங்கறது ஒரு க்ரேஸி ஃபீலிங் அது யாருக்கு யாரு மேல எப்ப வரும்ன்னு கணிக்கவே முடியாது..லவ்ங்கற மேஜிக் நிகழும்போது எல்லா லாஜிக்கும் காணாம போய்டும் ..

கடைசியா உன்னோட அப்பாம்மா ..

அவங்களுக்கு உன்னோட வலி புரியாம இருந்திருக்காது ,ஆனா அதை அவங்க கையாண்ட விதம் வேணா தப்பா இருக்கலாம் ..ஆனா உன்மேல அக்கறையே இல்லைன்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியலை.பெத்தவங்களா ரெண்டு பொண்ணுங்களுக்கு நடுவுலயும் அவங்களால முடிஞ்ச அளவுக்கு பாலன்ஸ் பண்ண பார்த்தாங்கன்னு தான் தோணுது..அவங்க பக்கமும் எதாவது நியாயம் இருக்கும் ..”
என்று முடித்தான்.

“இப்ப என்னை என்னதான் பண்ண சொல்ற?” என்றாள் அலுப்புடன்

“ஒரு நிமிஷம் உன்னோட கோப தாபங்களை ஒதுக்கி வச்சிட்டு அவங்க இட த்துல இருந்து யோசிச்சிப் பாரு ..அப்புறம் உன்னால முடிஞ்சா அவங்களை மன்னிச்சிடு..மன்னிப்பைவிட பெரிய தண்டனை என்ன இருக்க முடியும் சொல்லு ?
அது மட்டுமில்லாம அவங்களை மன்னிகறதுதான் உன்னோட வேதனைக்கும் மருந்தா அமையும் ..”


அபி சற்று யோசித்துப் பார்த்தாள்..மனதில் ஏன் இந்த பாரத்தை சுமந்துகொண்டு இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும் ?அவர்களை எளிதாக மன்னித்திருக்கலாமே..என்ன இருந்தாலும் அவர்கள் என் அன்பிற்கினியவர்கள் தானே..

வாழ்க்கையை இந்த புது கோணத்திலிருந்து பார்க்கும் போது எல்லாமே எளிதாக தோன்றியது.முதன் முறையாக தன்னிரக்கம்கொண்டு வருந்தாமல் ..எதிர்மறையான எண்ணங்களை விட்டு ,அவளது எண்ணவீடானது நேர்மறையான எண்ணங்களால் நிறைந்து அவளை ஆனந்த பெருவெள்ளத்தில் மூழ்கடித்தது..

“அது எப்படி டா நான் நடக்கவே நடக்கது..ரொம்ப கஷ்டம்ன்னு நெனைச்ச விஷயம் கூட உன் வாயால கேட்க்கும் போது ..அவ்ளோ ஈஸியா இருக்கு ..?”
என்று வியப்புடன் கேட்டாள்.

“அது தான் ஐயாவோட மேஜிக்”என்று இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான் ..

மறுகணமே அவன் முகம் மாறியது..”அதுமட்டுமில்லை ..அன்னிக்கு உங்க அப்பா உடைஞ்சிப் போன முகத்தோட போனப்ப எனக்கே கஷ்டமா இருந்த து தெரியுமா?என்றான்.

“ஹே..அன்னிக்கு நீ பார்த்தியா ?” என்றாள் ஆச்சரியமாக
அவன் ஆமாம் என்று தலையாட்டவும்

“பின்ன, அவரு வந்து சுரேஷ கட்டிக்கோ, ஒரே மேடையில ரெண்டு கல்யாணம்ன்னு சொன்னா.. எனக்கு எப்படி இருக்கும் ?அதான் திட்டிட்டேன்..”என்றாள் கோபமாக,

“அட டா..அந்த கெடா மீசைக்காரர் என் வாழ்க்கயில மண் அள்ளிப் போட தான் வந்தாரா?நல்லவேளை என் செல்லம் பிடிவாதமா இருந்தா ..”என்று மனதில் அபியை நினைத்து பெருமிதம் கொண்டான் ..

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேனா அருண்?என்று பாவமாக கேட்டாள் அபி..

“போச்சுடா ..இப்போ வருந்தும் படலமா ? எல்லாம் நன்மைக்கேன்னு நெனைச்சிக்கோ..ட்ரை டூ சீ தி பிரைட் சைட் ..”

“இதுல நான் பட்ட வேதனைய தவிர நல்லது என்ன இருக்கு ?”

“இந்த பிரிவினால உனக்கு அருண்ன்னு ஒரு அருமையான பையன் கிடைச்சிருக்கானே அது நல்ல விஷயம் இல்லையா ?
”என்று புருவம் உயர்த்தி கேட்டு சுயதம்பட்டம் அடிக்கவும் அபிக்கு சிரிப்பு வந்தது..வெகு நாளைக்குபிறகு மனதின் இறுக்கமெல்லாம் தளர மனம் விட்டு சிரித்தாள்.ஏதோ அதுவரை நெஞ்சை அழுத்திய பாரம் நீங்கி மனம் லேசானது போல் உணர்ந்தாள்.

அருண் எழுந்து நின்று அவள்புறம் கை நீட்டி “சரி கிளம்பு “என்றான்.

“எங்க ?”

“என்ன கேள்வி இது..நாளைக்கு சிஸ்டருக்கு மேரேஜ் வச்சிகிட்டு இங்க என்ன பண்ற?”

“அருண் இப்ப நான் அங்க போனா எல்லாருக்கும் புரளி பேசுற ஒரு பொருளா நான் மாறிடுவேன் ..நான் அதை சுத்தமா விரும்பலை..”

“புரளி பேசுறவங்களைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற..?அதையெல்லாம் கண்டுக்க கூடாது..”

“நான் இன்னும் அவங்களை மன்னிக்கல..”

“செல்லாது செல்லாது ..”

“ட்ரெயினிங்ல இருந்து எப்படி போறது ?விடமாட்டாங்களே..”

“அதை நான் பார்த்துகறேன்..நீ கிளம்பு..”

“கல்யாணத்துக்கு போட்டுக்க நான் புது டிரெஸ் கூட எடுக்கலை எப்படி போறது ?”
“இதெல்லாம் ஒரு பிரச்சனையா ?”

“உனக்கு தெரியாது, பொண்ணுங்களுக்கு இது தான் மெயின் பிரச்சனையே..”

“அடி வேணுமா உனக்கு ,இப்படி சும்மா உப்பு பெறாதா காரணம் சொல்லாம கிளம்பு அபி..”
என்றான் அதட்டலாக

“கண்டிப்பா போகணுமா?”என்று உதட்டை பிதுக்கினாள்..

கம் ஆன் பேபி ..லெட்ஸ் கோ ஹோம் “என்றான் அவள் கன்னத்தைப் பிடித்து கொஞ்சலாக கிள்ளியபடி..

“ஹே..நீ எங்க கிளம்புற?”

நான் இல்லாமலா? வருங்கால மாமனார் வீட்டை நான் பார்க்க வேண்டாமா ?

“மாமனாரா?யாருக்கு ?”
என்றாள் போலி ஆச்சரியத்துடன் …

“யாருக்கோ..”என்று அருண் கூறவும் அங்கே சிரிபொலி எழுந்து அந்த மலையில் எதிரொலித்தது
தொடரும் …
 
Last edited:
Top