Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 23

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 23

“அருணைக் காணவில்லை…”
என்பதற்கு மேல் எதையும் யோசிக்க முடியவில்லை அபியால், கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.. தடுமாறி விழப்போனவளை ஆதரவாக தாங்கி பிடித்தாள் பூர்ணா..

அடுத்த சிலநிமிடங்களில் அந்த இடமே பரபரப்பானது..பயிற்சியாளர் பதற்றமுற்றிருந்த மற்றவர்களிடம் பேசினார் ..

"யாரும் பயப்படவேண்டாம், மிஸ்டர் அருணை தேடிப்போக எங்க மீட்புக் குழு தயார்நிலைல இருக்கு ,நீங்க யாராவது வாலன்டியர்ஸ் இருந்தா எங்க கூட சேர்ந்துக்கலாம்..” என்றார்..

விக்கியையும் சேர்த்து சில ஆண்கள் தேட செல்வதற்கு முன்வந்தனர், அவர்களில் நல்ல தேக பலத்துடன் இருந்த சிலரையே தெரிந்தெடுத்தார், மற்றவர்களை,இங்கிருந்து பார்த்துக்கொள்ளுமாறு பணித்து விட்டு தேடும் குழுவினர் கிளம்பினார்..

அப்போது அபி அவசரமாக விக்கியிடம் வந்து "நானும் வரேன்.. "என்றாள்..

அபி இந்த நேரத்துல நீங்க வர்றது சரியாவராது , அருணுக்கு ஒன்னும் ஆகி இருக்காது ,வழி தவறி போய் இருப்பான் நாங்க கண்டுபுடிச்சி கூட்டிட்டு வரோம்.." என்றான் அவனுக்கும் உள்ளுக்குள் கவலையாக தான் இருந்தது..

அபி அப்போதும் பிடிவாதம் பிடிக்க ..

விக்கி பூர்ணாவை பார்த்து "நீ கொஞ்சம் சொல்லு பூர்ணா..” என்று விட்டு வேகமாக கிளம்பி சென்றான் விக்கி..

பூர்ணா அபியை ஆதரவாக அணைத்து "ஆமாம் அபி,அவங்க போகட்டும் , அருணுக்கு ஒன்னும் ஆகி இருக்காது நீவேணா பாரு அவன் நல்லபடியா திரும்பி வருவான்..” என்றாள் அவளுக்கே உள்ளே பதறிக்கொண்டிருந்தாலும் அபியை தேற்றுவதற்காக திடமாக பேசினாள்..

“நிஜமா வந்துடுவானா பூர்ணா..?” என்று தன் உயிரையே கண்ணில் தேக்கி பூர்ணாவிடம் கேட்டாள் அபி..

அவள் முகத்தை பார்த்து விக்கித்து தொண்டை அடைத்த போதும் சிரமத்துடன் தன் வேதனையை விழுங்கிக்கொண்டு "நிச்சயமா.. "என்று உறுதியளித்தாள் பூர்ணா…

அதன் பிறகு ஒவ்வொரு மணித்துளியும் நத்தை வேகத்தில் நகர எங்கோ தூரத்தில் கேட்ட சிறு தவளை கத்தும் சாதத்திற்கும் உடல் நடுங்கினாள் அபி ,பூர்ணா அவள் அருகில் அமர்ந்து ஆதரவாக அவளை அணைத்து அவள் பயத்தில் நடுங்கும் போதும், கவலையடைந்து புலம்பும் போதும் சமாதான படுத்திக்கொண்டிருந்தாள்..

அருண் நல்லபடியாக திரும்பி வந்துவிட்டால்போதும் அதற்கு மேல் அவள் கேட்க கூடியது எதுவும் இல்லை என்று தோன்றியது அபிக்கு.

இப்படியாக நரகமாக நிமிடங்கள் கரைய ,ஒரு யுகமாக தோன்றிய அந்த அரை மணிநேரத்தில் தேடி சென்றவர்கள் திரும்பி வந்தனர் ,

அபி பரபரப்புற்று பார்க்கும் போது ,அனைவருக்கும் பின்னால் இருவர் ஒரு ஸ்ட்ரெச்சரில் அருணை தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது…
இதயம் ஒருகணம் நின்று பின்பு வேகமாக துடித்தது அவளுக்கு,அருணின் உடை முழுவதும் சேற்றில் முக்கியது போன்று அழுக்காடைந்திருந்தது ,அவன் கண்மூடி படுத்திருந்தது ,இனம் புரியாத குளிரை பரப்பியது …
அபியை போலவே மற்றவர்களும் அதிர்ந்து தான் போயினர் ..

“என்ன ஆச்சு அருணுக்கு..?” என்று ஒரு கூட்டத்தில் இருந்து ஒரு குரல் எழும்பியது..
அவர்களது பயிற்சியாளர் முன்வந்து..

“சொல்றேன்… அருண் ப்ளீஸ் எழுந்துருங்க..” என்றார் …

அருண் தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல் சட்டென்று எழுந்து நின்றான் ..

“ஆஅஹ்ஹ்ஹ..” என்ற ஆச்சர்ய குரல் எல்லார் வாயிலிருந்தும் வெளிப்பட்டது ..

“உங்க எல்லரையும் டென்ஷன் ஆகுனதுக்கு மன்னிசிடுங்க ,இது முன்னடியே ப்ளான் பண்ணி நட த்தப்பட்ட ட்ராமா .இந்த மாதிரி ஆபத்து காலங்களில் நீங்க எப்படி சமாளிகறீங்கங்கறதுக்கான ஒரு டெஸ்ட் தான் இது.. நாங்க அருண் கிட்ட முதல்லையே இன்ஃபார்ம் பண்ணிட்டோம் ,அவரும் நல்லா ஒத்துழைச்சாரு , தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப் அருண் …நீங்களும் இந்த மாதிரி எதிர்பாரா சூழ்நிலைகளில் எப்படி பதட்டப்படாமல் நிலைமையை கையாளணுன்னு கத்துகிட்டீங்க .. இது உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவமா இருந்திருக்கும்..இப்போ எல்லாரும் போய் தூங்கலாம் ..” என்று கூறி முடித்தார்..

விக்கி பாய்ந்து வந்து அருணை சட்டயை பிடித்து உளுக்கினான் ..
“அட பாவி நாங்க உன்னை காணோம்ன்னு பதறிடயடிச்சி தேடிட்டு இருக்கோம் ,நீ அப்படியே ஹாயா வந்து நின்னு சிரிக்கிறியா? இருடா நானே உன்னை கொன்னுடறேன் இன்னிக்கு…” என்று அருணை முஷ்டியால் சராமாரியாக குத்த தொடங்கினான் ..

“டேய் வலிக்குது டா..” என்று வலியில் அலறினான் அருண் ..

“அருண் எங்களை விடு, அபிய பத்தி நினைச்சி பார்த்தியா ?” என்று பூர்ணா அவனது காரியத்தின் வீரியதை அவனுக்கு உணர்த்தினாள் .

சட்டென்று கூட்டத்தில் அலைந்த அவனது கண்கள் அபியிடம் வந்து நிலைத்து, அவள் முகத்தில் தெரிந்த சொல்லவொன்னா வேதனையை க் கண்டு கழிவிறக்கம் பேரலையாக த் தாக்க ஒரு கணம் கண் மூடித் திறந்தான் …
“கடவுளே அபியை எப்படி நான் மறந்தேன் ?"

அபி சற்று தள்ளி நின்று கொண்டு நடப்பவை அனைத்தையும் ஏதோ நாடகம் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள் முதலில் உச்சி முதல் பாதம் வரை அருணை விழிகளில் அலசி அவனுக்கு ஒன்றும் இல்லை என்று மனதில் நன்றாக பதிந்த பின்னர் தான் அதற்கு மேல் என்ன நடந்து என்பது மூளைக்குள் உரைக்கதொடங்கியது ….

“என்ன நாடகம் இது ?மனுஷங்களோட எமோஷன்ஸோட விளையாடுறாங்க? இவ்ளோ நேரம் நான் பட்ட அவஸ்தை எனக்கு தானே தெரியும் ,அதுவரை தான் அனுபவித்த வலி, வேதனை எல்லாம் வெறும் ஒரு வீணாப்போன நாடகத்திற்காக எனும் போது அதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, ஏமாந்துவிட்டோம் என்ற அவமானத்தைவிட ,அருண் அவளை ஏமாற்றிவிட்டானே என்பதை தான் அவளால் தாங்கவே முடியவில்லை …
ஒரு வார்த்தை பேசாமல் அவனை குற்றம் சாட்டும் பார்வையால் குத்தி கிழித்துவிட்டு ,திரும்பி வேகமாக நடக்கத்தொடங்கினாள்.

அருண் அவசரமாக அவள் பின்னாலேயே ஓடினான் ..

அவள் வேகமாக மூச்சிரைக்க நடக்க அவளது வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்தபடி
“அபி ப்ளீஸ் நிள்ளு” என்று கெஞ்சினான்..

அவள் காதில் விழாதவள் போல மேலே தொடர்ந்து நடக்க ,அவன் மீண்டும் மன்றாடினான்
“அபி ப்ளீஸ் நிள்ளு ஐ கேன் எக்ஸ்ப்ளைன் ..”

“எனக்கு உன்னோட ஒரு கதையையும் கேட்க வேணாம்..ஜஸ்ட் லீவ்”
என்றாள் ஆத்திரமாக

“அபி.. நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு.. ப்ளீஸ் மா..”

“என்ன கேட்க சொல்ற ?உன்னோட அற்புதமான ட்ராமாவ பத்தியா ?அதான் அங்க நல்லா புளி போட்டு விளக்கினாங்களே…இல்லை உன்னோட ஆஸ்கார் வின்னிங் பர்ஃபாமன்ஸ் பத்தி கேட்கணுமா ?எதை பத்தி கேட்கணும் அருண்?எனக்கு எந்த கண்ணராவியையும் கேட்க வேணாம் ,ப்ளீஸ் லீவ் மீ அலொன் “

கோபமாக வெடித்த போதும் அபியின் கண்கள் குளமாகி குரல் நடுங்கியது ,
அவன் முன்னர் அழக்கூடாது என்ற வீம்புடன் அவனுக்கு முதுகு காட்டி த் திரும்பி நின்றாள்..
அதுவரை அடக்கிவைத்த உணர்ச்சிகள் அனைத்தும் பிரவாகமாக ஊற்றெடுக்க கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக வழிந்தோடியது.

அருணுக்கு அவளை எப்படி சமாதானப்படுதுவது என்று ஒன்றுமே புரியவில்லை தன் மீதே ஆத்திரம் பொங்கிவர கைகளால் தலையை க் கோதியபடி செய்வதறியாது திகைத்தான் .
அதே சமயம் அபியின் கண்களுடன் போட்டியிடுவது போல் வானமும் கொட்ட த் தொடங்கியது..

அருண் சட்டென்று அபியின் கையை பற்றி இழுத்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு குடிலை நோக்கி ஓடினான் ,அபியின் எதிர்ப்பை சற்றும் சட்டைசெய்யாமல் ,

குடிலை அடைந்ததும் தன் கையை வெடுக்கென்று விடுவித்துக்கொண்டு
“நீ யாரு என்னை தொடுறதுக்கு ?என்று ஆவேசமாக முறைத்தாள்..

“சாரி அபி ..நான் காணாம போனா நீ டென்ஷன் ஆவேன்னு நினைச்சி பார்க்காம போனது தப்பு தான் ,அது என்னொட மிகப் பெரிய முட்டாள்த்தனம் தான், அதுக்காக எவ்ளோ வாட்டி வேணாலும் மன்னிப்பு கேட்டுக்கறேன் , ரொம்ப சாரி..”

“டென்ஷனா ..?அவளவளுக்கு இங்க உயிரே போச்சாம் …இப்போ வந்து கூலா சாரி சொன்னா எல்லாம் சரியா போய்டுமா ?”
என்று கோபத்தில் மேலும் வெடித்தாள்.

“கோட்ச் சொன்னதும் இது ஒரு ட்ராமான்னு என் மைண்ட்ல செட் ஆகிடுச்சி, அதுமட்டுமில்லாம இது இயல்பா இருக்கறதுக்காக யார் கிட்டயும் சொல்லவேணாம்ன்னு சொன்னாங்க அதான் சொல்லை.. இதோட சீரியஸ்னஸ் புரியாம பண்ணிட்டேன் ,சாரி அபி..”

“அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சில்ல?அப்புறம் எதுக்கு எங்கிட்ட வந்து விளக்கம் குடுத்துட்டு இருக்க? மைண்ட் ப்ளோயிங் ட்ரமா ,அவார்ட் வின்னிங் பர்ஃபார்மன்ஸ் போதுமா ?”
என்றாள் ஏளனமாக அவனது கசங்கிய உடையை குறிப்பாக பார்த்து ..கோபமாக பேசிய போதும் அவள் குரல் உடைந்து நடுங்கியது, உடலும் உதறளெடுத்தது..

அருணுக்கு ஒன்றுமே புரியவில்லை ,அபி மிகவும் காயபட்டிருப்பது நன்றாக தெரிந்தது,அவளது வேதனையின் வெளிபாடே இந்த மிதமிஞ்சிய கோபம் என்பதையும் அறிவான் ,ஆனால் அதை எப்படி சரி செய்வது என்று அறியாமல் திணறித்தான் போனான், எப்பாடு பட்டாவது அபியின் வலியை போக்கிட வேண்டும் என்று அவன் மனம் துடித்தது, அவன் வார்த்தைகள் யாவும் பயனின்றி போகவே ,சட்டென்று அவளை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான் .
.நூரு வார்த்தைகளால் கொடுக்கமுடியாத ஆறுதலை ஒரு சிறு ஸ்பரிசத்தில் கடத்தி விட முடியுமல்லவா..?

அபி வேகமாக திமிறி அவனது அணைப்பிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றபோது ,அவளை விடாமல் மேலும் இறுக அணைத்தபடி ,

“ஷ்ஷ்…சும்மா இரு அபி” என்றான் ஆழ்ந்த குரலில் ,ஏதோ மந்திர வார்த்தைக்கு கட்டுண்டது போல அபி அப்படியே அடங்கிப்போனாள்.

அவ்வளவு நேரமும் அவள் அனுபவித்த உணர்ச்சிப்போராட்டதிற்கும், மனவலிக்கும் அவனது அணைப்பு அவளுக்கும் இன்றியமையா தேவையாக இருந்தது..
அருண் ,அவளது வேதனை அனைத்தையும் தன்னுள் உறிஞ்சிக்கொள்பவன் போல காற்றுபுகும் இடைவெளி கூட இல்லாத அளவிற்க்கு அணைப்பை இறுக்கிக்கொண்டே போனான் ..

அப்படியே சிறிது நேரம் கடந்த பின் அபியின் நடுக்கம் நின்றது…உடலின் வெப்பம் சீரானது, கோபத்தினால் உண்டான பதற்றம் நீங்கியது, ஆனால் அவர்கள் நின்ற நிலையினால் வேறுவிதமான படபடப்பு தொற்றிக்கொண்டது..

ஆறுதலான அணைப்பு எப்போது ஆசைத்தீயாக பற்றிக்கொண்டது என்று இருவருமே அறியவில்லை .

அருணின் கைகள் அபியின் முதுகை வருட இருவருக்குள்ளும் உணர்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.அபியின் பட்டுப்போன்ற சருமத்தில் பட்டும் படாமல் ஒட்டிக்கொண்டிருந்த மழைதுளியை முத்தமிட்டு பருகின்னான் ,அவள் பல்லைக்கடித்து அடிவயிற்றிலிருந்து வெளியேறத் துடித்த முனகலை அடக்கினாள்.

அவன் மெதுவாக அவள் முகத்தின் புறம் திரும்பி காதுமடலில் இதழ் பதித்து

“சாரி” என்று கிசுகிசுத்தான் .

அவ்வளவுதான் அபி முகத்தில் ஒரு வாலி தண்ணீரைத் தெளித்தாற்போல விலுக்கென்று நிமிர்ந்தாள்,

அதுவரை அவளைச்சுற்றி பின்னப்பட்டிருந்த மாயவலை முழுவதும் அறுத்தெரியப்பட, சற்று நேரத்திற்கு முன்னால் நடந்த கசப்பான நினைவுகள் யாவும் முட்டி மோதிக்கொண்டு முன்னே வர ,கண்ணில் கனல் எழ அவனை உறுத்து விழித்தாள்.

என்ன தந்திரமாக என்னை அவன் வசப்படுத்த பார்க்கிறான் என்று உள்ளம் கொதித்தது அவளுக்கு..

சற்று முன்வரை தன் கையணைப்பில் நெகிழ்ந்த பாவை ,மறுகணம் காளி ரூபம் கொண்டு தன்னை முறைப்பதன் மர்மம் அறியாமல் மலைத்தான் அருண்..

அவளைத் தொட கையை நீட்டினான் ,நீண்ட அவன் கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டாள் அபி.
“உனக்கு என்னை பத்தியும் என்னொட ஃபீலிங்ஸ பத்தியும் ஒரு கவலையும் இல்லை, அப்புறம் எதுக்கு இந்த ட்ராமா போடுற..?என்று சீரினாள்..

“அப்படி இல்லை அபி ..”

“அப்..ப..டி.. தான் ..ஒதுக்கோ ,ஒத்துகிட்டு என்னை விட்டு விலகி போ ..”

“ஐ அம் ரியலி சாரி அபி..”
அவனுக்கு தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது ..

அப்போதும் சமாதானமடைய மறுத்து “கோ டூ ஹெல் வித் யுவர் சாரி..”என்று முகம் திருப்பினாள்.

அருணின் பொறுமையும் காற்றில் பறக்க ,வேகமாக திரும்பியவளை கையை பிடித்து இழுத்து தன் புறம் திருப்பினான் .

“ஜஸ்ட் லீவ் மீ அரு…ண் …”அவள் சொல்லிமுடிப்பதற்கு முன்பே
அருண் என்ற அவன் பெயர் அவளது இதழில் தொடங்கி அவனது இதழில் முடிய, அவனது இதழ்கள்,அவளதை அழுந்த மூடியிருந்தது..

அவள் ஏதும் அறியும் முன்னரே ,இதழ் என்னும் சாவி கொண்டு அவள் இதயத்தை திறந்திருந்தான் அருண்..

மீண்டும் அவன் அவளை விடுவித்த போது இருவருமே பெரிய மூச்சுகளை வாயினால் விழுங்கினர் ,அருண் அபியின் முகத்தை தன் இருகைகளிலும் ஏந்தி இருளிலும் ஒளிரும் அவளின் அழகு முகத்தை ஆசையாக பார்த்தான் ,அபியின் கண்கள் மூடியிருந்தது.
அவனுக்கு அவள் கண்ணோடு கண் கலக்க வேண்டும் , ஒருவேளை அவர்களது காதலின் அடையாளமான அந்த முதல் முத்திரையை அவள் விரும்பாவிட்டால்? இம்மியளவேனும் அவளது கண்களில் வெறுப்பை கண்டானானால் அவனையே அவனால் மன்னிக்கமுடியாது ,இதயம் தடதடக்க

“அபி..” என்று மிக மென்மையாக அழைத்தான்..

முகம் முழுதும் நாணத்துடனும்,கண்கள் நிறைந்த காதலுடனும் அவள் அவனை இமை திறந்து பார்த்தாள்..

அந்த கண்கள் அகத்தின் சாளரமாக அவள் மறைத்து வைத்திருந்த அத்தனை உணர்சிகளையும் துலாபாரமாக உடைத்துக்காட்ட ,அதற்கு மேல் அவனைத் தடுப்பார் யாரும் இல்லை ..சட்டென்று குனிந்து மீண்டும் அவளை முத்தமிட்டான், இம்முறை இன்னும் அழுத்தமாக ஆழமாக தன்னுடையவள் என்ற உரிமையுடன் ..

அபி அவனது வேகதிற்கு ஈடுகொடுக்கமுடியாமல் முழு சரணாகதியடைந்தாள் ,காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடிய உணர்ச்சி பிரவாகத்தில் தன்னிலை இழந்து மெதுவாக மூழ்கிக்கொண்டிருந்தாள்...

இருவரின் தாபமும் அவர்களை எங்கே இழுத்துக்கொண்டு சென்றிருக்குமோ தெரியாது ,அதற்குள்,வீரிட்டு அலறிய அபியின் மொபைல் ஃபோன் சத்தம் இருவரையும் நடப்பிற்கு இழுத்து வந்தது ..

அனிச்சையாக இருவரும் விலகினர் ,அருண் உணர்ச்சி வேகம் அடங்காதவனாய் ,தன் அடர்ந்த கேசத்தில் விரல்களை ஓட்டினான் ..

அபி ஒரு கணம் ஏதும் புரியாமல் விழித்துவிட்டு ,மிக பிரயத்தனப்பட்டு எங்கோ கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த தன் மனதை மண்ணுலகிற்கு கூட்டிவந்து, அப்போதும் சினுங்கிக்கொண்டிருந்த தனது ஃபோனை கையில் எடுத்து பார்த்தாள்,
திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் அவள் முகம் வெளிரிப்போனது…

ஒரு இனம் புரியாத பார்வையுடன் அவனை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு ,தனது கூடாரத்தை நோக்கி ஓடிப்போனாள்.

அருண் மழை விட்டும் புயல் அடங்காத மனதுடன் அவள் சென்ற திசையை பார்த்திருந்தான் ..

தொடரும்
 
அபியின் கோபம் நியாயமானதே
ஏண்டா அருண் எது எதுக்கு சீரியஸ் இல்லாமல் விளையாடறதுன்னு ஒரு வரைமுறை இல்லையா?
ஆனால் அருண் நல்லாவே அபியின் கோபத்தை சமாளிக்கிறான்
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு
அச்சோ
அது யாரு அபியை போனில் கூப்பிட்டது?
அபியின் வீட்டில் ஏதாவது பிரச்சினையா?
யாருக்காவது உடம்பு சரியில்லையா?
அபியை வரச் சொல்லுவாங்களோ?
 
Top