Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 20

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 20
“டேய் மச்சான்.. நீ ரொம்ப நல்லவன்டா லவ்ல பிரச்சனைன்னா தண்ணி அடிச்சி ஃபீல் பண்றவன தான் பார்த்திருக்கேன்.. லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரெண்ட்க்கு சரக்கு வாங்கி குடுத்து ஃபீல் பண்றவன இப்ப தாண்டா பார்க்குறேன்.. நண்பேன்டா..” என்று அருணை தோளோடு அணைத்தான் விக்கி…
இருவரும் ஒரு உயர்தர பார் வசதியுடன் கூடிய உணவு விடுதியில் இருந்தனர்…
விக்கி அவனுக்குள் சென்ற ஆல்கஹாலின் வீரியத்தில் உளறிக்கொண்டிருந்தான்..
“மச்சி.. அபி உன்னை சந்தேகப்பட்டங்களாடா..? என்னால நம்பவே முடியலை டா..” என்று அதிசயித்தான்..
“டேய்.. அவ சந்தேகமா கூட கேக்கல.. நான் தப்பானவன்தான்னு முடிவே பண்ணிட்டா, அவ ஏன்டா என்னை தப்பா நெனைச்சா..?”என்று ஆற்றாமையில் புலம்பினான் அருண்..
“சரி, விடுடா மச்சான்.. ஃபீல் பண்ணாத..” என்றான் விக்கி சமாதானமாக..
“விட முடியலையே.. அதானே ப்ராப்ளம்.. அவ எப்படிடா என்னை தப்ப நினைக்கலாம்?”என்று திரும்ப கேட்டான்..
“மச்சி.. அபியை சொல்லியும் குத்தமில்லை.. அந்த எடத்துல யாரா இருந்தாலும் அப்படித்தான் நினைக்கத்தோணும், ஏன் அந்த இடத்துல நானே இருந்திருந்தாகூட..” என்றவனை இடைவெட்டி..
"நிறுத்துடா.. நீ என்னோட ஃப்ரெண்டா இல்லை அபியோட ஃப்ரெண்டா? என்னை விட்டுட்டு அவளுக்கு சப்போர்ட் பண்ற…?”என்றான் கோபமாக..
“இல்லைடா ஒரு பேச்சுக்கு..” என்று விளக்கப்போனவனை மீண்டும் தடுத்து..
"பேச்சுக்குக்கூட அவளை ஜஸ்டிஃபை பண்ணி பேசாத.. ச்ச.. அவளை நான் எவ்ளோ உயரத்துல வச்சிருந்தேன் தெரியுமா..?”என்று உச்சுக்கொட்டினான்..
"எவ்ளோ உயரம் மச்சி..” என்றான் விக்கி அப்பாவியாக..
அருண் அவனை முறைத்து பார்த்துவிட்டு "உன்கிட்ட போய் சொன்னேன் பாரு.. என்னை சொல்லணும், இதுக்கு தான் உனக்கு சரக்கு வாங்கி குடுத்தனா? ஒழுங்கா குடிச்சதை வாமிட் பண்ணுடா..” என்றான் அருண்
"சரி சரி விடுடா, இப்போ உன்னோட பிரச்சனைதான் என்ன..? அதை சொல்லு..” என்று பேச்சை மாற்றினான் விக்கி..
“அவ என்னை ஏன்டா தப்பா நெனைச்சா..?”என்று மீண்டும் பல்லவியை தொடங்கவும்..
“மறுபடியும் மொதல்ல இருந்தா..?” விக்கித்துப்போனான் விக்கி..
“டேய் அருண், நீ சரக்க எதுவும் ஸ்மெல் பண்ணி பார்க்கலையே..” என்று சந்தேகமாக கேட்டான் விக்கி..
“டேய் விக்கி, நான் என்னிக்காவது ட்ரிங்க்ஸ டச் பண்ணி பார்த்திருக்கியா? உயிர் நண்பன் நீ நீயே என்னை நம்ப மாட்டேங்குற, நேத்துவந்தவ எங்க நம்ப போறா..? நானா வரேன்டா..” என்று தொங்கிப்போன முகத்துடன் அருண்கிளம்பவும் அவசரமாக அவன் கையை பற்றி அமரவைத்துவிட்டு..
“சரிடா கோச்சுக்காத.. உன்னோட பேச்சு ஒரு மார்க்கமா இருந்ததால மயில்டா ஒரு டவுட் அவ்ளோதான்.. ஆமாண்டா.. அபி எப்படிடா உன்னை சந்தேகப்படலாம்..? அவங்க பண்ணது பெரிய தப்பு.. இனிமேல் அவங்க முகத்துலையே முழிக்காத சரியா..?”என்றான்..
“என்னடா பேசுற..? ஃப்ரெண்டோட லவ்ல ஏதாவது ப்ராப்ளம்னா சேர்த்துவைக்க ஐடியா தராம ஒரேடியா பிரிஞ்சிபோக ஐடியா தர நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டா..?”என்று அருண் கேக்க
விக்கிக்கு எறியபோதை மொத்தமும் இறங்கியது போல் உணர்ந்தான், தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது..
“அடடா..சப்போர்ட் பண்ணாலும் திட்டறான்.. பண்ணாட்டியும் திட்டுறான்.. இப்படி வந்து சிக்கிட்டானே..சரி சமாளிப்போம்...”
“கவலைப்படாத மச்சி.. என் உயிரை கொடுத்தாவது உன் லவ்வ நான் சேர்த்துவைக்கிறேன்..” என்று வீர வசனம் பேசினான் விக்கி..
அதற்கு அவனை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு..
"என்ன மப்பு ஓவரா ஆகிடுச்சா?”என்றான் அருண்
"அவளுக்கு என்ன உலக அழகின்னு நினைப்பா..? எனக்கு அவளைவிட்டா வேற பொண்ணே கிடைக்க மாட்டாங்களா..? நான் மும்பைல இருந்தப்ப எத்தனை பொண்ணுங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணாங்க தெரியுமா..? அதை விடுடா என்னோட டீம்ல ஷில்பான்னு ஒரு பொண்ணு அப்படியே தீபிகா படுகோனே மாதிரி இருப்பா, இன்னும் டெய்லி மெசேஞ்சர்ல மெசேஜ் பண்ணறா.. நான் இன்னும் அவ ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்ட கூட அக்செப்ட் பண்ணலை தெரியுமா? அப்படிப்பட்ட என்னைப்போய் பொறுக்கின்னு சொல்லிட்டாளேடா.. அதுவும் அபி.. அதைத்தான் என்னால தாங்கிக்கவே முடியலை..” என்று புலம்பினான் ..
“கரெக்ட் மச்சி.. உனக்கு என்ன பொண்ணு கெடைக்காதுன்னு நெனைச்சிட்டாங்களா..? நாளைக்கே இறக்கறோம் மும்பைல இருந்து கலர் கலரா மாடல்ஸ இறக்கறோம் சரியா..?” என்றான் விக்கி உற்சாகம் காட்டி..
“டேய் லூசு..” என்றான் அருண் அவனை பார்த்து…
"லூசா..?”என்று அதிர்ந்தான் விக்கி..
“நான் என்ன விளம்பரப்படமா எடுக்கப்போறேன் மாடல்ஸ ஏறக்கறேனேன்னு சொல்ற..? குடும்ப குத்துவிளக்கேத்தற பொண்ண பத்தி சொன்னா நீ குத்து படத்துக்கு டான்ஸ் ஆட ஆள் பிடிக்கற மாதிரி பேசுற.. நீயெல்லாம்…”
“ஒரு ஃப்ரெண்டு… அதானேடா…”
என்று அருண் முடிக்காமல் இழுத்த வாக்கியத்தை முடித்தான் விக்கி ..
“இனிமேல் ஓசியில சரக்கு வாங்கி தரேன்னு எவனாவது கூப்பிட்டா நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு போவியா? போவியா..?” என்று தன்னைத் தானே அறைந்து கொண்டான்..
“உன் சங்காத்தமே வேண்டாம் சாமி, சரக்கடிக்காமலே இப்படி படுத்துறியே நீ மட்டும் சரக்கு அடிச்ச.. இந்த உலகமே அழிஞ்சிடும்..போடா நான் போறேன்.. என்று எழுந்து சென்றான் விக்கி ..
“ டேய் விக்கி.. போகாதடா இருடா..” என்று அருண்அவன் பின்னாடியே ஓடினான்..
அபியும் பூர்ணாவும் காபிடேயில் அமர்ந்து தங்களது காப்பிச்சினோவை மெதுவாக உறிஞ்சிக்கொண்டிருந்தனர்..
“ஹே அபி, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..?” என்று திட்டினாள் பூர்ணா..
அபி எதுவும் புரியாதவள் போல அவளைப் பார்த்தாள்..
“யாரை சந்தேகப்படுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை..? அருணைப் போய் எப்படி சந்தேகப்பட முடிஞ்சுது உன்னால..? ஒருத்தர் முகத்தைப்பார்த்தாலே தெரியாதா அவங்க நல்லவங்களா.. கெட்டவங்களான்னு..?”
“முகத்துல எப்படி தெரியும்..? அவங்க நடவடிக்கையில் தானே தெரியும், நான்தான் கண்ணாலேயே பார்த்தேனே…”
“ஓங்கி ஒன்னு விட்டா தெரியும்.. அப்போ நீ இன்னும்அவனை நம்பலை..? அவன் அவ்வளவு தூரம் வருத்தப்பட்டு கோபப்பட்டதை பார்த்ததுக்கு அப்புறமும் நீ அவன் மேல சந்தேகபடுறியா?”
என்று கோபமாக கேட்டாள் பூர்ணா..
“எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு பூர்ணா..”
“ஹே.. கண் இல்லாதவன் கூட சொல்லிடுவான் அருண் உன்னை லவ் பண்ணறான்னு இவ்ளோ பெரிய கண்ணை வச்சிக்கிட்டு அது உனக்கு தெரியலையா..?”
என்று கடிந்து கொண்டாள் பூர்ணா..
“பொய்.. அவன் நித்யாவ தான் லவ் பண்ரான்..” என்றாள் அபி பிடிவாதமாக..
பூர்ணா அபியை ‘உன்னை என்ன செய்ய..?’ என்பது போல் பார்த்து நம்பிக்கையிழந்த தலையசைப்புடன் பேசாமல் இருந்தாள்.
“அப்போ நீ அவன் மேல தப்பு இல்லை.. அவன் நல்லவன்னு சொல்றியா? என்று மெதுவாக கேட்டாள் அபி..
பூர்ணா அவளை எரித்துவிடுபவள் போல் பார்த்துவிட்டு..
"இவ்ளோ நேரம் நான் சொன்னது எதுவுமே உன் மர மண்டையில ஏறலையா ?"என்றாள்..
“அப்போ நான் பார்த்தது…” என்று விடாமல் அதிலேயே நின்றாள் அபி
"ஆஆ அபி இங்க பாரு நித்யா அவனோட காலேஜ்மேட், அவளுக்கு ஏதாவது ப்ராப்ளம்ன்னு ஆறுதல் சொல்லி இருப்பான், இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு சண்டை போட்டுட்டு இருந்தா.. உன்னை விட முட்டாள் இந்த உலகத்துலயே யாரும் கிடையாது.. சும்மா இழுப்பரிய போடாம சீக்கிரம் அவனை சமாதானப்படுத்தி ராசியாக பாரு..” என்று அபிக்கு அறிவுறுத்தினாள்..
அபியின் மனதிற்கு எப்போதுமே தெரியும் அருண் நல்லவன் என்று, அவள் கண்ணை மூடிக்கொண்டு அவனை நம்புவாள், ஆனால் அவளை எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கும் மூளைக்குத் தான் நிரூபணம் ஆதாரம் எல்லாம் தேவைப்படுகிறதே..
அவள் அருணை நம்பினாலும் ஒருபுறம் அவளது புத்தி அவளை எச்சரித்துக்கொண்டே இருந்தது..
தன் ஒற்றை நம்பிக்கையில் தன்னுடைய அறிவுடன் போராடிக்கொண்டிருந்தவளுக்கு இப்போது பூர்ணா மூலமும் ஒரு நம்பிக்கையான ஒரு வார்த்தை கிடைக்கவே அவளது மனம் அதை ஆசையோடு பற்றிக்கொண்டது, பூர்ணாவுடன் பேசியது அவளது அலைப்புற்ற மனதிற்கு ஆறுதலாகவும், திடமளிப்பதாகவும் இருந்தது.. மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் நீங்கியது போல் லேசாக உணர்ந்தாள்..
இன்போடெக் சொலுஷன்ஸ்
மறுநாள் அபி தனது வேலையிடத்தை நெருங்கும் போது,அவளது இடத்தை சுற்றிலும் சிறு கூட்டமாக ஆட்கள் இருந்தனர், எல்லாம் அவளது டீம் ஆட்கள் தான், நடுநாயகமாக நித்யா இருக்க எல்லாரும் ஏதோ உற்சாகமாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தனர்..
அபி புருவமத்தியில் கேள்வி முடிச்சோடு அவர்களை நெருங்கினாள்…
அபி வருவதைக் கண்டுவிட்ட நித்தி அவளை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு அபி தயக்கத்துடன் அரை மனதாக சிரித்துவைத்தாள்..
நித்தி எல்லாரிடமும் கை குலுக்கிக்கொண்டே வந்தவள் அருணிடம் வந்த போது அவன் அவளது நீட்டிய கரத்தை தள்ளிவிட்டு விரிந்த கரங்களில் தன்னோடு சேர்த்து அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்..
அதிர்ச்சியில் அபியின் கண்கள் வெளியே வந்து விழுந்துவிடும் போல பெரிதாகியது…
அபியின் நிலையை பார்த்து அருண் ஏளனமாக உதட்டை வளைத்தான்..
அபிக்கு புரிந்தது அவன் அவளை எரிச்சலூட்டுவதற்காக தான் இப்படி செய்கிறான் என்று, அவள் குறைகூறும் விதமாக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்..
அபியின் முகம் தொங்கிப்போனதை கண்டு பூர்ணா அவளருகில் வந்து,
"ஹே.. நித்தி வேலைய விட்டு போறாளாம் அபி, அவளுக்கு பெங்களூருல வேலை கெடைச்சிருக்காம்.” என்றாள் அதே நேரம் நித்தி அபியிடம் வரவே அவள் ஆச்சர்யமாக அவளை பார்த்தாள்..
“என்ன அபி.. அவ்ளோ ஆச்சர்யமா என்னை பார்க்கற..?” என்று விட்டு அவள் எதிர்பாராத வகையில் சட்டென்று அவளை இறுக அணைக்கவும் அபி திகைத்து போனாள்..
எப்படி ரியாக்ட் செய்வது என்று அறியாமல் அபி குழம்பிப்போயிருக்கையில்
“சாரி அபி.. நான் ஏதாவது உன்னை டிஸ்டர்ப் பண்ணி இருந்தா ென்னை மன்னிச்சிடு..” என்றாள் உள்ளார்ந்த வருத்தத்துடன்..
“அருணை நான் ஒன் சைடா லவ் பண்ணினேன்.. ஆனால் அவன் தெளிவா சொல்லிட்டான் அவனோட லைஃப்ல எனக்கு இடமில்லைன்னு, அதுமட்டும் இல்லை அவன் உன்னை லவ் பண்ரான்னு நினைக்கறேன் ,ரொம்ப நல்ல பையன் அவனை கண் கலங்காம பார்த்துக்கோ..” என்று அவளை பார்த்து சிரித்து கண்ணடித்தாள் நித்யா ..
அபி அதிர்ந்து போனாள் என்பது அவளது நிலையை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும்…அதற்கும் மேல்ஒருபடியாக அவள் மூளை செயல்பாட்டையே நிறுத்தி இருந்தது..
இருப்பினும் நித்தியின் வார்த்தைகள் அவளது கடினமான மண்டையைத் துளைத்து ஒருவாறு மூளையை அடைய.. அவள் முகம் சட்டென்று ப்ரகாசமுற்றது கண்கள் தானாக அருணை பார்த்தது, அவன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவளை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்..


அருண் கேன்டீனில் தனியாக அமர்ந்திருந்தான்.. அவன் மனதில் ஏதேதோ எண்ணஅலைகள் தோன்றி சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது…
அப்போது அவனருகில் யாரோ வந்து அமருவது போல் இருந்தது ,திரும்பி பார்க்காமலேயே அது யாரென்று தெரிந்தது , மெளனமாக எழுந்து செல்ல எத்தனித்தவனை அபியின்கெஞ்சும் குரல் நிறுத்தியது,
"அருண் "
“என்ன..?”
என்றான் சுருக்கமாக..
“அது வந்து..” என்று அவள் தயங்கவும்
“என்ன சாரின்னு சொல்ல போறியா? ஒருத்தனை உயிரோட வச்சி கொன்னுட்டு நீ சொல்ற சாரியால என்ன ஆகா போகுது..?”என்று கோபமாக வெடித்தான்..
“ஹலோ.. இப்ப யாரு சாரி சொல்ல போறா..? நான் எதுக்கு சாரி கேக்கணும்..” என்று அவள் திருப்பி கேட்கவும்
இப்போது அருண் அவளை ஆச்சரியமாக பார்த்தான்..
"என்ன பார்க்குற? என்ன தான் அந்த நித்தி உன்னோட ஃப்ரெண்டா இருந்தாலும் அவ கிட்ட நீ லவ் யூ சொன்னது தப்பு.. அதை நீ நியாய படுத்தவே முடியாது.. நான் அதை ஒத்துக்க மாட்டேன்..”
என்றாள் உறுதியாக..
அவன் எவ்வளவு முயன்றும் அவளது துணிச்சலை மெச்சாமல் இருக்க முடியவில்லை..
“பண்ற தப்பையெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து பெரிய மஹாராணி மாதிரி தோரணையா பேசுறதை பாரு.. ஆனாலும் இவளோட ஈகோ இருக்கே..!!” என்று பல்லைக்கடித்தான்..
“இப்படி சொல்லி எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்க்கிறியா? இரு உனக்கு வைக்கிறேன் செக்..” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு
"சரி அபி.. ஒரு விஷயம் மட்டும் சொல்லேன்.. நான் நித்திகிட்ட ஐ லவ் யூ சொன்ன உனக்கு ஏன் கோபம் வருது..? வாட் ஈஸ் யுவர் டாம் ப்ராப்ளம் இன் தட்? நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற..?”என்று நேராக கேட்டான்..
ஏதோ இந்த பிரச்சனையே ஒன்றும் இல்லாதது என்பது போல் பேசி முடித்துவிடலாம் என்று மனப்பால் குடித்திருந்த அபி, அருண் இப்படி ஒரு கேள்வியை கேட்டு தன்னைப் பொறியில் சிக்க வைப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை, என்ன பதில் சொல்வது என்று எதுவும் தோன்றாமல் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தாள்..
“என்ன சத்தத்தையே காணோம்..? பதில் சொல்லு அபி.. என்ன திடீர் மவுன விரோதமா?”
“அது.. அதுவந்து..”
என்று அபி தடுமாறவும்..
“அது இன்னுமா வரலை..” என்று கேலி செய்தான் அருண்..
“சரி நான் கேள்வியை மாத்தி கேக்குறேன் அப்பவாது பதில் சொல்ல முடியுதான்னு பாரு, நான் ஏன் நித்திகிட்ட லவ் யூ சொல்லகூடாதுன்னு நெனைச்சா..?”
“அதெப்படி சொல்லலா..”
என்று தொடங்கியவன் கப்பென்று வாய் மூடிக்கொண்டாள்..
“கம் ஆன் அபி..ஸ்பீக் அப்…வாய் கிழிய பேசுவ, இப்ப என்ன வாயில கொழுக்கட்டையா இருக்கு?” என்று மேலும் சீண்டினான்..
“என்ன இப்படி கொக்கி போட்டு என்னை சிக்கவைக்கறான்..” என்று அவளுக்கு கடுப்பாக இருந்தது..
"அதெல்லாம் ஒண்ணுமில்லை ,நீ யார் கூடவேணா பேசிக்கோ, கட்டிபுடிச்சிக்கோ என்னவேணா பண்ணிக்கோ எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை போதுமா..” என்று எரிச்சலாக கூறி முடித்தாள்..
“ஓ அப்படியா? சரி ஓகே.. நான் இப்பவே போன் பண்ணி நித்திகிட்ட ஐ லவ் யூ சொல்றேன்..”
என்று தனது போனை கையிலெடுத்தான்…
“வேணாம் அருண் விளையாடாத..” என்றாள் அபி கோபமாக,
“உனக்கு தான் நான் என்ன பண்ணாலும் ப்ராப்ளம் இல்லைன்னு சொல்லிட்டியே அப்புறம் என்ன..?”என்று கேட்டபடியே நித்திக்கு டயல் செய்து போனை காதில் வைத்தான்..

அந்த பக்கம் நித்தி போனை எடுத்து “ஹலோ” எனவும், இவனும் “ஹலோ நித்தி ..” என்று பேசத்தொடங்கினான்.. அபி சட்டென்று அவனது மொபைலை பறித்து தூக்கி வீசினாள்..
விழுந்த வேகத்தில் மொபைலின் பாகங்கள் திசைக்கொன்றாக பறந்தது..
அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த விக்கி இந்த காட்சியை கண்டு திகைத்து போனான்..
“டேய்..என்னடா இது பிரேக் பாஸ்ட்க்கு ஆரம்பிச்சீங்க, லன்ச் டைம் ஆக போகுது நீங்க இன்னும் உங்க சண்டையை முடிக்கலையா..?”
என்று அலுப்புடன் கூறியபடியே சிதறிய பாகங்களை சேகரிக்க தொடங்கினான் விக்கி..
ஏதோ ஒரு ஆத்திர அவசரத்தில் போனை பிடுங்கி வீசிவிட்டவள் அதன் பிறகு அருணின் கோபத்தை எண்ணி கலங்கி போனாள், எரிமலை வெடிக்க போகிறது என்று காத்திருந்தவள் அவளது ஆபத்பாந்தவனாக விக்கி அங்கே வரவே மனதிற்குள் அவனுக்கு நன்றி கூறிவிட்டு சட்டென்று எழுந்துவிட்டாள்..
“விக்கி நான் ஒன்னும் சண்டை போடலை உங்க ஃப்ரெண்ட்தான் சண்டை போடுறாரு.. அவரையே கேளுங்க..” என்றவள்,ஒரு நொடி அருணை பார்த்து நாக்கை நீட்டி அழகு காட்டி விட்டு அவன் கோபத்தில் அவள் மேலே பாய்வதற்குள் அங்கிருந்து விரைந்தோடிபோனாள்
அவள் போவதையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவன் "ஷி ஈஸ் இம்பாஸிபிள்.." என்று வாய்க்குள் முணுமுணுத்தான்…
தொடரும்
 
Last edited:
Top