Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன்வசந்தன்-அத்தியாயம் 6

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன்வசந்தன்

அத்தியாயம் 6​

அடுத்தநாள், திங்கள்கிழமை காலையில் அருண் அவசரமாக தயார் ஆகி ஆபீஸ்க்கு கிளம்பினான் . வெளியில் வந்து கதவை பூட்டும் போது எதிர் பிளாட் கதவும் அதே சமயத்தில் திறக்கும் சத்தம் கேட்டவுடன் உள்ளம் துள்ள திரும்பியவன் ... அங்கே வேறு ஒரு பெண் நிற்பதை பார்த்ததும் மனதின் உற்சாகம் நொடியில் வடிய,

யார் இது” என்றுஅவன் புருவங்கள் யோசனையில் நெரிந்தது, அந்த பெண் இவனைப் பார்த்ததும் சினேகமாக சிரிக்கவும் அருணுக்கு சட்டென்று நினைவு வந்தது , இதே பெண்ணை தான் இந்த ஃபிளாட்டிற்கு வந்த புதிதில் முதன் முதலில் பார்த்தான் , பிறகு அவளைப் பார்த்ததாக நினைவில்லை .அவனும் பதிலுக்கு லேசாக சிரித்தான் .

“ஹாய் , நான் காவ்யா , எதிர் ஃபிளாட்ல இருக்கேன் ..”என்று உற்சாக குரலில் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

அவனுடைய யோசனையாக புருவ சுளிப்பை பார்த்தவள் ,அதன் காரணத்தை கண்டுகொண்டு . “நான் கம்பெனி ட்ரைனிங்காக புனே போயிருந்தேன் ரெண்டு வாரம் , அதான் நீங்க என்னைப் பார்த்திருக்க மாடீங்க..” என்றாள்.

“ஓ.. ஓகே.. ஐ அம் அருண்..” என்றான் சம்பிரதாயமாக . அங்கே நின்று வீணாக்க அவனிடம் நேரம் இல்லை , ஏற்கனவே அவனுக்கு நேரமாகி கொண்டிருந்தது .இருந்தாலும் இப்படி நட்பாக சிரிக்கும் பெண்ணை முகத்திலடித்தது போல் எப்படி பாதியிலே வெட்டிவிட்டு போவது..?என்ற ரீதியில் அவன் எண்ணம் ஓட, அதை பற்றி கொஞ்சமும் உணராமல் காவ்யா தொடர்ந்து பேசினாள்.

“ நான் அசேஞ்சர்ல ஒர்க் பண்றேன்.. நீங்க?” என்று பேச்சுவார்த்தையை தொடரவும் ..

“இதென்னடா வம்பா போச்சி? மொக்கை போடுறதுக்கு இதுவா நேரம்..?” என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு பொறுமையை இழுத்து பிடித்து “ “நான் இன்போடெக்ல் ஒர்க் பண்றேன் , அபியோட டீ எல் , ஏன் அபி உங்க கிட்ட சொல்லலையா?” ஏற்கனவே தெரிந்த விஷயத்தை கேட்டு ஏன் என்நேரத்தை வீணடிக்கிறாள்…?” என்று உள்ளூர அலுத்துக்கொண்டான்.



புரியாத பாவனையுடன் “ இல்லையே அபி என்கிட்ட சொல்லவே இல்லையே “என்று தனக்குள்ளே பேசிக்கொள்பவள் போல் கேட்டாள்.

“சொல்லலையா.. ?” என்று அவனையறியாமல் அவன் உள்ளம் குதூகலித்தது ,அவளுக்குள் ஏதோ இருக்க போய்தானே என்னை பற்றி ரூம் மேட் கிட்ட கூட சொல்லாம இருக்கா,” என்று மனம் துள்ளியது ...அதே சமயம் ஒருவேளை ‘சொல்ற அளவுக்கு முக்கியம் இல்லைனு நெனைச்சிருப்பாளோ?’ என்ற மற்றொரு எண்ணமும் தோன்ற , துள்ள தொடங்கிய மனம் தொய்ந்து விழுந்தது . .

“நீங்க ஊருக்கு போய் இருந்ததால சொல்ல மறந்திருப்பாங்க..” என்று ஒரு காரணத்தை தேடி பிடித்தான் , அது காவ்யாவை சமாளிக்கவா இல்லை முணுமுணுக்கும் தன்மனதை சமாதானப்படுத்தவா என்று அவனுக்கே சந்தேகம் தோன்றியது.

"இருக்கலாம்..” என்று அவள் அரை மனதாக ஒப்புக்கொண்டாள். ஏனெனில் எதிரே இருப்பவனிடம் சொல்ல முடியாதே அவள் அபியிடம் இவனை வர்ணித்தததை , ஆனால் ‘ஏன் அபி என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை?’ என்ற கேள்வி அவள் மனதையும் குடைந்தது.. அதேநேரம் கதவின்பின்னால் ஏதோ அசைவை உணர்ந்து அருணின் கவனம் அங்கு சென்றது. லேசாக எட்டி பார்த்த அபியின் கண்கள் உடனே கதவின் பின் ஒளிந்ததையும்,அவன் கண்கள் கண்டு கொண்டன, புருவங்கள் ஆச்சரியத்தில் உயர ,இதழ்கள் குறும்புசிரிப்பில் வளைந்தது,

உண்மையிலேயே அப்போது அபி அவர்கள் பேசுவதை கதவுகளுக்கு பின்னால் இருந்து ஒட்டு கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் ,

காவ்யா கைகடிகாரத்தை திருப்பி மணி பார்ப்பதை பார்த்து விட்டு

"என்ன லேட்ஆகிடுச்சா,நான் வேணா ட்ராப் பண்ணவா? ஓ எம் ஆர் தானே உங்க ஆஃபீஸும்..” என்று கதவின் பின்னால் ஒட்டுகேக்கும் காதுகளுக்கு விழும் அளவு சத்தமாக கேட்டான் அருண்.

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் ,"ஆவ்..... யூஆர் சோ ஸ்வீட் அருண்..” என்று நன்றியுடன் கூறினாள் காவ்யா …

அதே நேரத்தில் அபி வீட்டினுள் இருந்து ,வேகமாக வெளியே வந்து “ஹேய் காவ்யா, இந்தா மொபைலை மறந்து வச்சிட்ட பாரு பிரகாஷ் கிட்ட இருந்து 5 மிஸ்ட்டு கால்ஸ் இருந்தது .. ஒரு வேளை அவன் உன்னை பிக்அப் பண்ண வரானோ என்னவோ ?” என்று அபி அவசரமாக காவ்யாவிடம் பேசினாள், அபிக்கு அவளை அங்கிருந்து கிளப்பினால் போதும் என்று இருந்தது.

காவ்யாவும் தாமதிக்காமல், அபியிடம் மொபைலை வாங்கிக்கொண்டு அருணிடம் ஒரு தலையசைப்பில் விடை பெற்று கொண்டு ,போனில் அவள் பாய் பிரெண்டுடன்கதைத்தவாறு அவசரமாக கிளம்பிச் சென்றாள்... “மிஸ்ட்டு கால் நான் பார்க்கல சாரி டா…என்னது..? நீ கால் பண்ணவே இல்லையா? சரி இப்ப நீ உடனே கெளம்பி வா பேசிக்கலாம் "என்று காவ்யாவின் குரல் தேய்ந்து மறையும் வரை அந்த திசையையே பார்த்துக்கொண்டிருந்த அபி... "பர்ஃபெக்ட் டைமிங் "என்ற அருணின் குரலில் திகைத்துஅவனை பார்த்தாள்..

“என்னது …? “

“இல்லை ,கரெக்ட் டைம்க்கு வந்தீங்க இல்லைனா ,காவ்யா கெளம்பி இருப்பாங்கன்னு சொன்னேன் …”
என்றான் உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கி,

“ஓஹ்…ஆமா ” என்று ஒப்புதலாக தலையசைத்துவிட்டு

“காவ்யாவோட பாய் ஃபிரெண்ட் போன்ல அதான் அவசரமா வந்தேன்..” ஏதோ சாதாரணமாக விளக்கம் தருவது போல் காவ்யா கமிட்டேட் என்ற முக்கிய தகவலை பதிவு செய்தாள், அவளது உள்ளர்த்தம் புரிந்தவனாக அவனது சிரிப்பு மேலும் விரிந்தது .

“அப்புறம் ?” என்றான் கண்கள் சிரிக்க

அவனது முகத்திலிருந்து பார்வையை விலகாமல் அவளும் "அப்புறம்…” என்றாள்..

நான் ஆபீஸ் கிளம்பறேன்..”என்று இழுத்தான்…

“நானும் தான் கிளம்பறேன்… என்று ஒரு கணம் தாமதித்து விட்டு “பட் ஆபீஸ் பஸ்ல ” என்று கூறி அவனது முகத்தில் தோன்றிய கணநேர ஏமாற்றத்தை ரசித்து விட்டு கண்களில் குறும்பு நகையுடன் உள்ளே ஓடிப்போனாள்.. அருணும் உதடு காதுவரை விரிய அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே கிளம்பி போனான்.



அருண் ஆபீஸ் வந்து சேர்ந்ததும் ,தானாக அவனது பார்வை அபியின் இடம் நோக்கி சென்றது ,ஆனால் அவள் அங்கு இல்லை ,"இன்னும் ஆபீஸ்க்கு வரலையா ?”என்று யோசனையாக புருவம் சுருக்கினான் ,பிறகு தன் அன்றாட அவலுவல்களில் ஈடுபட்டு அதை மறந்தே போனான் ,வேலையின் நடுவே விழி உயர்த்தி பார்க்கும் போது அபி முகத்தில் தீவிரத்துடன் கம்ப்யூட்டர் திரையை வெறித்து பார்த்து வேலை செய்து கொண்டிருந்தாள்...அவனை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை,அப்படி என்ன சீரியஸான முகபாவனை ?என்னமோ+12 ரிசல்ட் பார்க்கற ஸ்டூடண்ட் மாதிரி ? என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான். ஆனால் அந்த நாள் முழுவதுமே அபி இருக்கையில் இல்லாமல் அடிக்கடி காணாமல் போவதை அவன் கவனிக்க தவறவில்லை

"என்ன ஆச்சு இவளுக்கு ,வேலை நேரத்துல சீட்ல இருக்காம எங்க போறா?"என்று தனக்குள் குழம்பினான் ,சரி அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்பது போல் தோளை குலுக்கி விட்டு வேலையை தொடர்ந்தான் ,அருண் வேலையை முடித்து சிஸ்டெமை ஷட்டௌன் செய்யும் போது மணி ஏழரை “ஓ காட் இவ்ளோ நேரம் ஆகிடுச்சா?” என்று நேரம் போனது தெரியாமல் ஆச்சரியப்பட்டான் … அனிச்சையாக அபியின் இடத்தை பார்த்தல் அது காலியாக இருந்தது ,

வீட்டுக்கு போய்ட்டாளா? சொல்லிட்டு போகிற மானர்ஸ் கூட இல்லை அவளுக்கு என்று ஏமாற்றமாக உணரும் போதே அதற்காக தன் மீதே ஆத்திரமும் வந்தது ,அவ சொல்லிட்டு போனா என்ன சொல்லாம போனா என்ன என்று அலட்சியமாக நினைத்தாலும் ,உள்ளுக்குள் ஏமாற்றம் எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை ,தலை வலிப்பதுபோல் இருந்தது ,ஒரு காபி குடிக்கலாம் என்று கான்டீன் பக்கம் போனால் ,அங்கே பூர்ணாஒரு காபியை உறிஞ்சிக்கொண்டு போனில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தாள்…

"ஹாய் பூர்ணா.. என்ன இன்னும் கெளம்பலையா?" என்று கேட்டுக்கொண்டே அவள் எதிரே அமர்ந்தான் "ஹாய் அருண் ,இல்லைபா 8 மணி பஸுக்கு தான் போகணும் "

"ஏன் வேலை இருக்கா ?

"வேலைதான் பட் எனக்கு இல்லை அபி க்கு"
என்று உச்சு கொட்டினாள்… “அபிக்கு என்ன வேலை? நான் எந்த ஒர்க்கும் குடுக்கலையே…?”என்றவனின் புருவம் நெரிந்தது ..

விவேக் ஏதோ வேலை குடுத்திருக்காரு போல இருக்கு ,முடிச்சிட்டு வரேன் 8 மணி பஸ்க்கு போலாம் வெயிட் பண்ணு பூர்ணானு சொன்னா அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்றாள்.

"ஓஅப்படியா..” என்று யோசனையில் ஆழ்ந்தான்…

பூர்ணாவின் போன் ஒலித்தது ,எடுத்து பேசியவள்,முகத்தில் கவலை அப்பிக் கொண்டது ,"யாரு பூர்ணா போன்ல ?"என்று கேட்டவனிடம்

"அபி தான்… அவளுக்கு இன்னும் வேலை முடியலாம் ,லேட் ஆகும் நீ கெளம்புன்னு சொல்றா..”

"அபி எப்படி வீட்டுக்கு போவாங்க?”
என்று அக்கறையாக கேட்டான் …

"அவ ஆபீஸ் cab ல போய்க்கறேன்னு சொல்றா ..”

"ஆனா அப்படி என்ன தலை போற வேலை பூர்ணா? நாளைக்கு வந்து செய்ய கூடாதா?” என்று எரிச்சலாக கேட்டான்…

“தெரியலை அருண்…பட் விவேக் இன்னிக்கே முடிக்க சொல்லி இருக்கானாம்..” என்றவள் குரலிலும் எரிச்சல் தெரிய ,வழக்கமாக மற்றவர்கள் முன்னலையில் விவேக்கிற்கு கொடுக்கும் மரியாதை பன்மையை கூட கைவிட்டாள்.

“சரி அருண் ,நான் கிளம்பறேன்,இப்போ கெளம்பினா தான் நான் போய் சேர பத்து மணியாவது ஆகும்…நீ கெளம்பலையா?"என்று கேட்க ,

"நானும் கிளம்பறேன் பூர்ணா "என்று எழுந்தான்..

…………………………​

அந்த தளம் முழுவதுமே காலியாக இருக்க ,அபியின் இடத்தில் மட்டும் கீ போர்ட் ஐ தட்டும் ஒலிகேட்டது, நொடிக்கொரு முறை மணி பார்த்துக்கொண்டே ,ஒவ்வொரு நகரும் நொடிக்கும் வீட்டிற்கு போய் சேர ஆகும் நேரம் அதிகரித்துக்கொண்டே போவதை எண்ணி கவலை கொண்டாள்….கடைசியாக அவள் வேலையை முடித்து அப்பாடா என்று நிமிரும் போது மணி 10…

"ஐயோ, இவ்ளோ லேட் ஆகிடுச்சே "என்று அவசரமாக ஸிஸ்டெமை ஷட்டௌன் செய்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு எழ முனையும் போது

"என்ன அபி கெளம்பிட்டியா?” என்ற குரல் அருகில் கேட்கவும் ,ஒரு கணம் தூக்கிவாரி போட்டது அவளுக்கு..

விவேக் எப்போதும் இல்லாத அதிகப்படி புன்னகையுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்...

ஏனென்றே தெரியாமல் அபிக்கு தொண்டை வறண்டு போனது ,சட்டென்று பதிலளிக்க முடியாமல் வெறும் காற்றுதான் வந்தது ,எச்சில் விழுங்கி சமாளித்து கொண்டு ,

“ஒர்க் முடிச்சிட்டேன் சார் ," என்றாள்.

“குட்… சரி போலாமா..?” என்று சாதாரணமாக கேட்டான்,,,

“எங்க சார்..?” என்று அபி புரியாமல் கேட்க …

"அபி நீ எனக்காக இவ்ளோ கஷ்ட பட்டு வேலை செஞ்சி இருக்க ,அதுக்கு பதிலுக்கு நான் ஏதாவது செய்யணும் இல்லையா ?கீழ வேலை பார்க்கறவங்களுக்கு ஒருவேளை டின்னர் கூட வாங்கி தராம பட்டினி போட்டு வேலை வாங்குற கொடுமைகாரன்னு நீ என்னை நெனைச்சிட்டியா?

என்று விவேக் தேன் தடவிய குரலில் இனிமையாக கேட்டதும், அவளுக்கு அவனை ஓங்கி அறைந்து ஒழுங்கா பேசுடா என்று சொல்ல வேண்டும் போல இருந்தது ,ஆனால் முடியாதே ,தன்னை கட்டு படுத்தி கொண்டு "அதெல்லாம் வேணாம் சார் ,நான் கிளம்பறேன்” என்று கிளம்பவும் ,அவள் வழியை மறித்து நின்று..

“ என்ன இவ்ளோ அவசரம் அபி…? நான் ரெஸ்டாரண்ட்ல டேபிள் புக் பண்ணிட்டேன், என்று ஒரு பெரிய 5 நட்சத்திர ஹோட்டலின் பேரை சொல்லி ,மொதல்ல டின்னர் சாப்பிடலாம் அப்புறம் நான் உன்னை என்னோட கார்லேயே ட்ராப் பண்ணிடறேன்…” என்று ஒரு மாதிரி குரலில் பேசவும் ,

“நோ தேங்க்ஸ் சார் ,எனக்கு பசிக்கல,நான் வீட்டுக்கு கிளம்புறேன்..”என்று உறுதியான குரலில் மறுத்துவிட்டு அவனை சுற்றி நடக்க முயல ,மேலும் அவளை மறித்து நின்று …

"நோ வே யூ ஆர் கோயிங் வித்தவுட் ஹாவிங் டின்னர் வித் மீ ,டேபிள் புக் பண்ணிட்டேன் ,இப்போ போகலைனா நல்லா இருக்காது அவங்க என்ன நினைப்பாங்க ?"என்று மேலும் வற்புறுத்தினான் ஊர் பக்கம் இருந்து வந்தவள் ஸ்டார் ஹோட்டல் என்றதும் மயங்கி விடுவாள் என்று எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அபி நடக்கவும் அவனுக்கு நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற வெறி வந்தது..

“அதை பத்தி எனக்கென்ன கவலை? நான் வரலை அவ்ளோதான்..” என்றாள்வெடுக்கென..” அபியும் நிமிர்ந்து திருப்பி கொடுக்க ஆரம்பித்தாள்….. “இவன் என்னோட வேலைல என்னவேணா தப்பு கண்டுபிடிக்கட்டும் ,என்னோட பெர்சனல் லைப்ல நான் என்ன பண்ணனும்னு என்னை கட்டாயபடுத்த இவன் யாரு? நான் ஒன்னும் இவனுக்கு அடிமை இல்லை..” என்று நினைத்த நொடியில் அவளது முதுதண்டு தானாக நிமிர்ந்தது…

"அபி ,நீ உன்னோட பி எம் கிட்ட பேசிக்கிட்டு இருக்க மறந்திடாத..” என்று எச்சரிக்கவும் ...

“சோ வாட்? நீங்க என் பாஸ்னா நான் உங்க கூட டின்னர்க்கு வரும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா?” என்று ஏளனமாக கேட்கவும்…

அவனுக்கும் கோபம் ஏறியது எப்படி தன்னிடம் பயந்து நடுங்கி நிற்பாள்…’இப்போ எப்படி எதிர்த்து பேசுறா’ என்ற ஆத்திரம் பொங்கியது.

"நான் நெனைச்சா உன்னை பத்தி ப்ராஜெக்ட் ஹெட் கிட்ட கம்பிளைன்ட்பண்ண முடியும் தெரியுமா? என்று மிரட்டல் தொனியில் கேட்கவும்,

“என்ன கம்பிளைன்ட் பண்ணுவீங்க? உங்களோட டின்னெர்க்கு வரலைனா..? செம காமெடி ,அப்படி கம்பிளைன்ட் பண்ணா உங்க மேல தான் டிஸ்கிப்ளினரி ஆக்ஷன் எடுப்பாங்க…”என்று ஏளனமாக கூறினாள்.

"அபி, நீ ரொம்ப டேலண்ட்டடா இருக்க…பட் உன்னோட இந்த முன் கோபமும் பிடிவாதமும் தான் உன் வளர்ச்சியை தடுக்குது, நீ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சா,உன்னை எங்கேயோ உயரத்துக்கு என்னால கொண்டு போக முடியும்..” என்று நயமாக பேசினான்…

“என்ன அட்ஜஸ்ட் பண்ணனும்னு சொல்றீங்க ?” என்று அவனை நேராக பார்த்து நிதானமாக கேட்டாள்.

அவளது பார்வையிலும் ,குரலிலும் ஒரு கணம் திகைத்துப்போனான் விவேக் ,இப்படி பூடமாக பேசும் நய வஞ்சகர்களுக்கு தங்களது இரட்டை அர்த்த வசனங்களுக்கு விளக்கம் கொடுக்க நேரும் போது வாயடைத்து போய்விடும் ,அந்த நிலையில் தான் இருந்தான் விவேக்,, “என்ன நாம அவளை கார்னர் பண்ண பார்த்தா அவ இப்படி நம்ம கிட்டயே பிளேட்டை திருப்பிட்டாளே, விட கூடாது வேறு வழியில் தான் மடக்கணும்..”என்று யோசித்து,சட்டென்று அபி ஏதோ விட் அடித்தது போல பலமாகசிரித்தான்..

“அபி நீ ரொம்ப ஃபன்னியா பேசுற ,உன்னோட பேசினா நேரம் போறதே தெரியாது போல ,சரி வா போலாம்..” என்று அவன் சம்மதித்தது போல சகஜமாக திரும்பி நடந்தான்… அபி சிறிதும் அசையாமல்..

“சார் எனக்கு டைம் ஆச்சி நான் கிளம்பறேன்…”என்று கூறி விட்டு அவனை தாண்டி செல்ல முயலும்போது ,

"எப்படி போவ அபி? நான் உன்ன டிராப் பண்றேன்னு சொல்லி கம்பெனி டிரைவரை வீட்டுக்கு போக சொல்லிவிட்டேன், இனிமே நீ எப்படி வீட்டுக்கு போவ..? உனக்கு வேற வழியே இல்ல என்கூட தான் வந்தாகணும்..” என்று உதட்டை ஒருபுறம் ஏளனமாக வளைத்தான்…

“நோ ப்ராப்ளம் ஐ வில் மேனேஜ்" என்றாள் மிடுக்காக..

“இந்த அன்டைம்லயா ?அது ஸேஃபே இல்லை , நியூஸ்லாம் நீ பார்க்கிறதே இல்லையா? உன்னை அப்படியே கொத்திட்டு போய்டுவாங்க….”என்று விஷத்தை கக்கினான்.

அவனது வார்த்தையிலே உடல் சிலிர்த்தது அபிக்கு ,"டிராகுலா ,டிராகுலா ,கடைசில ,எப்படி குள்ளநரித்தனம் பண்ணி இருக்கு ,ஏற்கனவே தயக்கமா தான் இருக்கு ,இப்போ இவன் பேச்சை கேட்ட பின்னாடி தனியா போக இன்னும் பயமா இருக்கே…." இந்த சங்கடத்தில் இருந்து தப்பிக்க எந்த வழியும் தோன்றாமல் போக ,வெறுப்புடன் விவேக்கை முறைத்தாள்..

இப்போது முழுதாக வில்லன் சிரிப்பே சிரித்தான் ,"நீ என்கூட தான் வந்தாகணும் ,உனக்கு சாய்ஸே இல்லை..”

அவனுடன் போய் டின்னர் சாப்பிடுவதை நினைத்தாலே குமட்டியது.. ஆனால் விறைத்து கொண்டு தனியே போகவும் மனம் அஞ்சியது.

“கடவுளே இந்த தர்மசங்கடத்துல இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து..” என்ற வேண்டுதலுடன், தயக்கத்துடன்மெல்லஅடி எடுத்து அவனுடன் நடக்க தொடங்கும்போது… நுழைவாயிலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தால், அங்கே அருண்,முகம் முழுவதும் சிரிப்பாக இவளை பார்த்து கையசைத்துக்கொண்டுருந்தான்.. அபி இமைத்தட்டவும் மறந்து அவனை விழிவிரிய வியந்து நோக்கினாள்…

தொடரும்
 
Top