Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன்வசந்தன்-அத்தியாயம் 32

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன்வசந்தன்
அத்தியாயம் 32​
அருண் மறுநாள் ஆஃபீஸ் உள்ளே நுழையும் போதே விக்கி பரபரப்பாக அவனை நோக்கி வந்து ,
டேய் என்ன டா கால் பண்ணா எடுக்க மாட்டியா ?என்றான் எரிச்சலும் பதற்றமுமாக ,அவன் அறிந்த விக்கி என்றுமே நிதானம் இழக்காதவன் ,இன்று இப்படி படபடப்பது அவனுக்கு ஆசர்யாமாக இருந்தது.
“டேய் வண்டி ஓட்டிட்டு இருந்தேன் டா இப்ப என்ன ஆச்சு ?”
“இங்க என்ன விஷயம் போய்ட்டு இருக்கு தெரியுமா..? வால் மார்ட் ப்ராஜெக்ட் கேன்சல் ஆகிடுச்சின்னு பேசிக்கறாங்க ..ஷர்மா சார் நீ வந்தும் உடனே அவரை வந்து பார்க்க சொன்னாரு..”
“என்ன டா சொல்றா?”
என்று அதிர்ந்தான் அருண்..
“மொதல்ல வா, ஷர்மா சார போய் பார்க்கலாம்..”என்று அவனை அழைத்துப்போனான் விக்கி.
இருவரும் ஷர்மாவின் அறையை அடைந்த போது ஏற்கனவே விவேக்கும் பூர்ணாவும் அங்கிருந்தனர்.
ஷர்மா சார் அவரது லாப்டாபில் எதையோ வேகமாக டைப் செய்யும் ஒலி கூட துல்லியமாக கேட்கும் அளவிற்கு அங்கு நிலவிய நிசப்தமான சூழல் ஏனோ அருணின் நெஞ்சில் குளிர் பரப்பியது ..
ஒரு யுகமாக தோன்றிய ஒரு நிமிட த்திற்கு பின் ஷர்மா இவர்களை நிமிர்ந்து பார்த்து
“இன்னிக்கு காலைல நாலு மணிக்கு வால் மார்ட் கம்பனில இருந்து கால் வந்தது அவங்க இந்த ப்ராஜெக்ட்ல இருந்து பின் வாங்கறாங்களாம் ..அதுக்கான அஃபீஷியல் மெயில் கூட இப்ப வந்துடுச்சி..”என்றார்.
என்னதான் அவர்களுக்கு அனுமானமாக விஷயம் தெரியும் என்றாலும் ,அவரது வாய்மூலமாக அதிகார பூர்வ அறிவிப்பாக வரும்போது இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது..
விஷயத்தை அவர்கள் கிரகித்துக்கொள்ள சிறிது நேரம் கொடுத்து விட்டு ஷர்மா மீண்டும் தொடர்ந்தார்.
“ப்ராஜெக்ட்டை கேன்சல் செய்யறதுக்கு அவங்க சொல்லிருக்கற காரணம் என்ன தெரியுமா?அவங்களுக்கு நம்ம போட்டி கம்பனியான சிலிகான் டெக்னாலஜிஸ்ல இருந்து இதே ப்ராஜெக்டை இன்னும் திறமையா ,குறுகிய காலத்துல ,குறைந்த செலவுல செஞ்சி தர்றதா சொல்லி பேரம் பேசி இருகாங்க ..இவ்வளவு முக்கியமான ரகசியமான விவரங்களை அடுத்த கம்பெனிக்கு லீக் பண்ணிடோம்ன்னு நம்ம மேல அவங்களுக்கு நம்பிக்கை போச்சாம் ,இனிமேல் இன்ஃபோடெக் சொல்லுஷன்ஸோட எந்த விதமான வர்த்தக தொடர்பும் வச்சிக்கமாடோம்ன்னு சொல்லிட்டாங்க..
இப்ப என்னொட கேள்வி என்னன்னா ,நம்ம அஞ்சு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச இந்த ப்ராஜெக்ட் விஷயம் வெளிய எப்படி லீக் ஆச்சி?நம்ம கம்பனிக்கு வால்மார்ட் ப்ரொஜெக்ட் சம்பந்தமா குடுத்த டீடெய்ல்ஸ் எல்லாம் சிலிகான் டெக் க்கு எப்படி தெரிஞ்சது ?
யாரு இந்த கீழ்தனமான வேலைய செஞ்சது ?எவ்ளோ பணம் வாங்கினீங்க ? இதனால நம்ம கம்பெனிக்கு எவ்ளோ நஷ்டம் தெரியுமா ?அதுமட்டுமில்லாம மார்கெட்ல நமக்கு இருந்த நல்ல பேரும் போச்சி … பிசினஸ்ல நமக்கு இது மிக பெரிய பின்னடைவா இருக்க போகுது ,எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு கருப்பு ஆடு ..யாரு ,,?”என்ற கேள்வியுடன் ஒவ்வொருவரையும் ஊடுருவுவது போல பார்த்தார்..கடைசியாக அவரது பார்வை அருணின் மீது நிலைத்தது.
இவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகத்த செஞ்ச அந்த துரோகிக்கு என்ன தண்டனை குடுக்கலாம் ..?அருண் நீ சொல்லு “என்றார் அவனை கூர்மையாக பார்த்து..
“கண்டிப்பா வேலையை விட்டு தூக்கணும் ,அதுக்கும் மேல லீகல் ஆக்‌ஷன் எடுக்கணும் என்றான் ..”அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் எதற்காக கேட்கிறார் என்ற குழப்பத்துடன் ..
“கரெக்ட் ஆனா இதனாலெல்லாம் நமக்கு ஏற்பட்ட கெட்ட பேர் ,நஷ்டம் எல்லாம் சரி ஆகிடுமா ?”என்று திருப்பி கேட்டார் ஷர்மா .
“நாம வேணா வால்மார்ட்ட திரும்ப அப்ரோச் பண்ணி நடந்தத விளக்கி இன்னொரு வாய்ப்பு கேட்கலாம் .”.என்று தொடங்கியவன் அவனுக்கே அவன் சொல்வது நடவாத காரியமாக தோன்ற தயக்கதுடன் நிறுத்தினான் .
“அவங்க இதெல்லாம் ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறியா?இது என்ன சின்ன பிள்ளைங்க விளையாட்டா நினைசப்பல்லாம் மாத்தி மாத்தி விளையாடுறதுக்கு ?”
நடந்த து நடந்தது தான் அதை மாத்த முடியாது ,இனிமேல் நம்ம கம்பனில இப்படி ஒரு குள்ளநரித்தனம் நடக்காம தடுக்க என்ன செய்யனுமோ அதை பார்க்கலாம் ..”
சரி இந்த ப்ராஜெக்ட் ப்ரசென்டேஷன் பொறுப்பு உங்கிட்ட தானே இருந்தது?
என்று அருணைப் பார்த்து நேராக கேட்டார்.
“யெஸ் சார் “

“அப்போ அந்த டீடெய்ல்ஸ் லீக் ஆனதுக்கு நீ தான் பொறுப்பு..”
என்று முடித்தார்.
சார்… நான் அப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணவேயில்லை சார்.”என்றான் அருண் அதிர்ந்து போய்..

“அருண் நாங்க ஐ டி டீம வச்சி இன்வெஸ்டிகேட் பண்ணதுல, ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் உன்னோட சிஸ்டம்ல இருந்து ,சிலிகான் டெக்ல வேலை பார்க்குற நடராஜ்ங்கறவரோட பர்ஸனல் மெயில் ஐடி க்கு போயிருக்கு ,அந்த நடராஜ் வேற யாருமில்லை உன்னோட மும்பை ப்ரான்ச்ல வேலைப்பார்த்த நம்ம கம்பனியோட பழைய எம்ப்லாயி..உன்னோட ஃப்ரெண்ட்…”
சோ இது ரொம்ப சிம்பிள் ,ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு சொல்ற மாதிரி, கண்ணை மூடிகிட்டு நீ தான் பண்ணினேன்னு அப்பட்டமா தெரியுது..”


அருண் செய்வதறியாத திகைப்பில் ,விக்கித்துபோய் நின்றிருக்க அவர் மேலும் தொடர்ந்தார்.
“இப்படி எல்லா ஆதாரங்களும் உன்னை நோக்கியே இருக்கறது தான் என்னை கொஞ்சம் யோசிக்க வைக்குது ..ஏன்னா தப்பு பண்றவன் மாட்டிக்காம தப்பு பண்ணனும்ன்னு தானே நினைப்பான் இவ்ளோ ஆதாரங்களை விட்டுட்டு போவானா?ஆனா தப்பு செஞ்சவன் முதல் முறை இப்படி பட்ட காரியத்தை செய்யறவனா இருந்தா வாய்ப்பு இருக்கு ,இல்லை மாட்டிகிட்டா இதையே ஒரு காரணமா சொல்லி தப்பிக்கலாம்ன்னு கூட இந்த மாதிரி ஆதாரங்களை விட்டிருக்கலாம் ..தெரியாது
கண்ணு முன்னாடி இருக்கற ஆதாரங்களை வச்சி நீதான் குற்றவாளின்னு என்னால ஈஸியா இந்த விஷயத்தை முடிச்சிருக்க முடியும்,ஆனா அப்படி பண்ணினா நூற்றில் ஒரு வாய்ப்பாக நீ குற்றவாளி இல்லாமல் வேற யாராவதா இருந்தா..? நானே அவங்களை தப்ப வச்ச மாதிரி ஆகிடும் ,அதனால நான் உனக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன் .. .

என்றவரை இடை மறித்து விவேக்

சார் ..அதான் அருண் தான் தப்பு பண்ணாங்கறதுக்கு சாலிடா ஆதாரம் இருக்கும் போது எதுக்கு வாய்ப்பு அது இதுன்னு… அவனை வேலையவிட்டு தூக்கிட்டு போலீஸ்க்கு கால் பண்ணுங்க சார்..” என்றான் ஆவேசமாக..

ஷட் அப் விவேக் ,இங்க நான் தான் பாஸ்…ஐ நோ வாட் ஐ அம் டூயிங்..இங்க பாரு அருண் நீ நிரபராதின்னு ப்ரூவ் பண்ணனும்ன்னா நீ சரியான ஆதாரதோட வரணும் அதோட உண்மையான கல்பிரிட் யாருன்னும் நீ கண்டுபிடிக்கணும் ,உனக்கு இருபத்தி நாலு மணி நேரம் டைம் இருக்கு அதுக்குள்ள நீ இன்னசன்டுன்னு நிரூபிக்க முடியுமா ?”என்று கேட்டார்.

அதுவரை அமைதியா இருந்த விக்கி

“சார் ,அருண் மேல எந்த தப்பும் இல்லை அவன் கண்டிப்பா தப்பு பண்னலைன்னு ப்ரூவ் பண்ணுவான் சார்.”என்றான் உறுதியாக

“அதை அருண் சொல்லட்டும் ? என்றார் அவர் கராரான குரலில்.

“சார் ..நான் தப்பு செய்யலைன்னு எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணுவேன் ..”என்றான் திடமான குரலில்.

“சரி ,உன்னோட டைம் ஸ்டார்ட் ஆகிடுச்சி..ஒரு வேளை உன்னால நிரூபிக்க முடியலைன்னா ,நான் கையில இருக்கற ஆதாரத்தை வச்சி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தான் ..உன்னோட நடவடிக்கைகள் கவனிக்க படும் அதையும் மறந்துடாத..தப்பிச்சி எங்கயும் ஓடிட முடியாது” என்று கூறி அனுப்பினார் .

கான்டீன்

நால்வரும் திடுமென்று ஏற்பட்டிருந்த அசாதராண சூழலை எப்படி கையாள்வது என்று விவாதித்து கொண்டிருந்தனர்.

“என்னடா இது இப்படி ஒரு ப்ராப்ளம் வரும்ணு ..நான் நினைச்சிகூட பார்க்கலை..” என்றான் விக்கி.

“வேணும்னே அருணை யாரோ மாட்டிவிட்டிருக்காங்க..”என்று கொதித்தாள் அபி.

“இப்படி பண்ற அளவுக்கு அருணுக்கு யார் எதிரி இருக்க முடியும் ?”என்றாள் பூர்ணா.

“வேற யாரு அந்த எல்லாம் அந்த ட்ராகுலாவா தான் இருக்கும்..” என்று பல்லை கடிதாள்.
ஆனால் இந்த சம்பாஷனைகள் எதிலும் கலந்து கொள்ளாமல் அருண் அமைதியாக காபியை பருகிகொண்டிருந்தான் இருந்தான் .

“என்னடா என்னமோ என் மேல பழி விழுந்த மாதிரி நான் இங்க பதறிகிட்டு இருக்கேன் ,நீ என்னமோ உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி கூலா காபி குடிச்சிட்டு இருக்க ?”என்று கேட்டான் விக்கி..

“என்னை என்னடா பண்ண சொல்ற ?என்னை நல்லா கோர்த்து விட்டிருக்காங்க, என் சிஸ்டம்ல இருந்து மெயில் போய் இருக்கு ,அந்த டைம்ல நான் சீட்ல தான் இருந்தேங்கறதுக்கு சீசீடீவி ஆதாரம் இருக்கு ,மெயில் போனது என்னோட எக்ஸ் கொலீக்கு இதுல நான் தப்பு பண்ணலைன்னு நான் எப்படி நிரூபிக்கிறது ?
எங்க அப்பா ரொம்ப நாளா கூப்பிட்டுட்டு இருக்கார் அவரோட பிசினஸ்க்கு வர சொல்லி ,இவங்க என்னடா என்னை வேலைய விட்டு தூக்கறது நானே ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு போறேன் ..”
என்ற விட்டேற்றியாக பேசிய அருணை மூவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் ,அபி கோபத்துடன் அவன் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள்,

“டேய் நீ எங்க வேணா போடா ,ஆனா உன்மேல தப்பு இல்லைன்னு ப்ரூவ் பண்ணிட்டு போ …உன்மேல இப்படி ஒரு பழி விழுந்துடுச்சின்னு ஒவ்வொரு நிமிஷமும் முள்ளு மேல நிக்குற மாதிரி நான் தவிக்கறேன்,நீ என்னமோ பெரிய இவன் மாதிரி பேசுற?உனக்காக இல்லாடியும் எங்களுக்காக பண்ணு உன்மேல தப்பு இல்லைன்னு ப்ரூவ் பண்ணு “என்று உணர்ச்சிவசபட்ட நிலையில் கண்கலங்கிவிட்டாள்.

“சாரி அபி ,நான் டென்ஷன் ஆனா நீங்களும் கவலைப்படுவீங்கன்னு தான் நான் சாதாரணமா இருக்கறமாதிரி நடிச்சேன், கண்டிப்பா நான் தப்பு பண்ணலைன்னு ப்ரூவ் பண்ணுவேன் ,எனக்காக இல்லாட்டியும் என் மேல இவ்ளோ அன்பு வச்சிருக்கற என்னோட ஃப்ரண்ட்ஸ்காக ..”என்றான் அருண் பெருமையாக மூவரையும் பார்த்து.
“சரி இப்ப எங்க இருந்து ஆரம்பிக்கலாம் ?”என்று பூர்ணா கேட்க,

“எனக்கு அந்த விவேக் மேல தான் சந்தேகம்..” என்று ஆணித்தரமாக கூறினாள் அபி.
சந்தேகத்தை வச்சி என்ன செய்ய முடியும் அபி..?எல்லா ஆதாரமும் எனக்கு எதிரா இருக்கு ,நமக்கு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் வேணும் அபி ..”” என்றான் அருண்.

“சட்டென்று நினைவு வந்தவளாக அருண் அன்னிக்கு சொன்னேன் ல அந்த விவேக்க ரெஸ்டாரண்ட்ல பார்த்தேன்னு …எனக்கு அன்னிகே எதும் சரியா படலை, அவன் என்னை பார்த்தும் முகத்தை மறைச்சிகிட்டு போனான் ,எனக்கென்னமோ அங்க போனா எதாவது க்ளூ கிடைக்கும்ன்னு தோணுது …”என்று யோசனை கூறினாள் அபி.
அப்போதும் அருண் தயங்க ,

“அபி சொல்றது கரெக்ட் மச்சி ,எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு குழம்பறதுக்கு, நாம இங்க இருந்தே தொடங்குவோம்..” என்றான் விக்கி.

“ஆமாம் அந்த ரெஸ்டாரண்ட் சீசீடீவி கேமராவ செக் பண்ணினா எதாவது க்ளூ கிடைக்கும்” என்றாள் பூர்ணா அவள் பங்கிற்கு..

“அது எப்படிடா யார் போய் கேட்டாலும் சும்மா சீசீடீவிய பார்க்க விட்டுடுவாங்களா?”என்று அருண் நியாயமான சந்தேகத்தை எழுப்பினான் .

சிறிது யோசனைக்கு பின் விக்கி ஏதோ நினைவுவந்தவனாக “டேய் மச்சான் நம்ம இன்ஸ்பெக்டர் ராகவன் சார் இருக்காரே டா ..”என்றான் புதிதாய் தோன்றிய உற்சாகத்துடன் .

அருண் புருவம் சுருக்கி யோசிக்கவும் , “அதாண்டா காலெஜ் படிக்கும் போது ஒரு வாட்டி ,நியூ இயர் பார்ட்டில மிட் நைட்ல குடிச்சிட்டு வண்டி ஓட்டினதுக்கு புடிச்சாரே..”என்றவனை இடை வெட்டி

“நான் எங்க டா குடிச்சேன்.. நீ தான் குடிச்ச,அதுவும் வண்டி ஓட்டின நான் குடிக்கலைன்னு தான் நம்ம மேல கேஸ் போடாம விட்டாங்க..”என்று அவனைத் திருத்தினான் அருண் .

“ஆமண்டா ,நீ ஒரு உத்தம சிகாமணின்னு நிரூபிக்கறது இப்ப ரொம்ப முக்கியம் ?” என்று பொருமினான் விக்கி.

“கண்டிப்பா.. இல்லாட்டி அபி என்னை தப்பா நினைச்சிக்குவா இல்லை ..”
“போதும் ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸா இருகீங்களா?விக்கி நீங்க அந்த இன்ஸ்பெக்டர பத்தி சொல்லுங்க அவரு நமக்கு ஹெல்ப் பண்ணுவாரா?”
என்று கவலையாக கேட்டாள் அபி.

“நிச்சயமா ,அவருக்கு அருண ரொம்ப பிடிக்கும் ,இவன் மும்பைக்கு போறதுக்கு முன்னடி கூட அவர போய் பார்த்துட்டு வந்தோம்..ரொம்ப நல்ல மனுஷன் ,இப்போ அசிஸ்டன்ட் கமிஷனர் ஆகிட்டாருன்னு கேள்விப்பட்டேன் ..”

அப்புறம் என்ன அருண் அவரை மீட் பண்ணி ஹெல்ப் கேளுங்க..” என்றாள் அபி ..பரபரப்பாக .

“இருங்க அபி கால் பண்றேன்..” என்று தன்னுடைய மொபைலில் டயல் செய்து சிறிது நேரம் பேசியவன் , அவனை ஆவலாக பார்த்த மூவரிடமும் திரும்பி ஆள்காட்டி விரலை உயர்த்தினான் ..

“சக்சஸ் ..அவரு ஆஃபீஸ்க்கு வந்து மீட் பண்ண சொன்னாரு ..”என்றான் வெற்றிப் புன்னகையுடன் …
தொடரும்
 
Top