நிறம் மாறிய நேசம் 29

Advertisement

Sarayu R

Member
Member
மார்ச் மாதம் இந்தியா சென்றதற்கு எதிர் மாறான மனநிலையில் மீரா, ஷ்யாம் டேலஸ் திரும்பினர்.
ஃப்ளைட்ல ஸ்பெஷல் பிசினஸ் கிளாஸ் சீட்டிங் பெரிய ஹனி மூன் இல்லாத குறையை போக்கியது....

ஹரி வந்து இருவரையும் கூட்டிவர, அனு ஆரத்தியுடன் எதிர் கொள்ள, புதிய வாழ்க்கை ஆரம்பம்......

மீரா, ஹரி, அனு, ஜிட்டுவுக்கு கொண்டு வந்த கிஃப்ட் எல்லாம் குடுக்க இருவருக்கும் தனிமை குடுத்து அவர்கள் போக......

கண்ணா, காஃபி குடிக்கலாமா? ரொம்ப டயர்ட்ஆ இருக்கு......

நான் போடறேன் நீ ரெஸ்ட் எடு.... ஷ்யாம் காஃபி கொண்டுவர, ஒரு வாய் குடித்தவள் வாயை பொத்திக்கொண்டு பாத்ரூம் போய் ஒரே வாயிலெடுப்பு......

என்ன என்று இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை......
வந்து சேர்ந்த விபரத்தை அனுப்பிவிட்டு இருவரும் ரெஃபிரேஷ் பண்ணி வந்து அனு கொண்டு வந்த உணவை சாப்பிட, திரும்பவும் வாயிலெடுப்பு.....
பிளைட்ல வந்த அலுப்பா, அல்லது புட் பாய்சனா?......

மீராவை மடியில் சாய்த்து தாயாய் தாங்கினான்.....

இது அவர்கள் அன்பின், காதலின் இல்லறத்தின் அடுத்த நிலையா என ஒரே நேரத்தில் இருவரும் சிந்தித்து வாய் திறக்க.....
கண்ணா, போய் ப்ரக்னன்ஸி (pregnancy) டெஸ்ட் கிட் வாங்கிண்டு வரியா .....

புஸ்ஸி நிஜமா?....
தெரியலை..... நானும் வரவா?
வாடா, எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை......
இருவரும் போய் வாங்கி வந்து, பார்த்தால்.....

பாஸிட்டிவ் ......

கண்ணம்மா நாளைக்கு ஃபாதர்ஸ் டே
இது ரொம்ப ஸ்பெஷல் கிஃப்ட் எனக்கு.....
நான் அப்பாவாக போறேனா?.....
தேங்க்ஸ் ராஜாத்தி.....
வெட்கத்தில் சிவந்த மீராவை முத்த மழையில் நனைத்தான் ஷ்யாம்.....

உடனே ஃபோட்டோ. எடுத்து
"The special (Grand) Father's day gift to you both" என்று கிருஷ்ணா, சங்கருக்கு ஒரு மெஸேஜ்......
மாமியாரில் இருந்து பாட்டி ஆக பதவி உயர்வு...... என்று சுமி, கெளரிக்கு மெஸேஜ்.....
அலுப்பில் இருவரும் தூங்க,
Whatsapp ல் வரிசையாக மெசேஜ்.
மீரா, ஷ்யாம், கெளரி, சங்கர், சுமி , கிருஷ்ணா இவர்கள் ஆறு பேர் உள்ள குரூப் சுமி தொடங்க.....
நாங்க இன்னும் 2 வாரத்தில் வரும் என்று எதிர்பார்த்த விஷயம் ..... என கெளரியும் சுமித்ராவும் ரொம்ப சாதாரணமாக சொல்ல..... உடனே
வீடியோ கால்......
Dr கிட்ட போய்ட்டு கன்ஃபார்ம் பண்ணு. 2 வாரம் கழிச்சு எல்லார் கிட்டவும் சொல்லலாம்.....
ஒரே அட்வைஸ் மழை...

மீரா தூங்கிய நேரத்தில் ஷ்யாம் போய் அடுத்த வாரத்துக்கு தேவையான பால், பழம், காய்கறி, பிரெட் என்று வாங்கி வந்துவிட, மெதுவாக சாமான்களை எடுத்து வைத்து திங்கள் அன்று ஆபீஸ் போக தயார் ஆகினர்.....
மீரா சாப்பிடுவதும், அதை வாயிலெடுப்பதும், தலை சுற்றல்... என்று இருக்க... இருவரும் பயப்பட தொடங்கி விட்டனர்....

மறுநாள் walk-in செய்து இந்தியன் Dr இடம் போய் பார்த்தால்
பிளட் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்.....
6 வாரம் ஆகிறது சில சமயம் கரெக்டா தெரியாது. அப்படி இருந்தால் 2 வாரம் கழித்து பார்க்கலாம் ....... சொல்லி விட்டு பிளட் சாம்பிள் எடுத்து பார்த்த Dr முகத்தில் சந்தேக ரேகை......
டென்ஷன் ஆன ஷ்யாம்.....
என்ன என்ன....? என்று கேட்க
HCG லெவல் அதிகமாக இருக்கு. மல்டிப்பிள் ப்ரக்னன்ஸி மாதிரி இருக்கு.
ஒரு அல்ட்ரா சவுண்ட் பண்ணி பார்க்கலாம்....
ஃபேமிலி ஹிஸ்டரி டுவின்ஸ் இருக்கா?
ஆமாம் என்ற மீராவிடம் அப்ப சரிதான்....
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டுவின்ஸ் என்று சொல்ல......
இருவருக்கும் சந்தோஷம், டென்ஷன், பயம்..... ஒருவர் கையை ஒருவர் விடவே இல்லை....
Dr சொன்ன விஷயம் , இன்ஸ்டிரக்க்ஷன்ஸ் கேட்டு குரூப் சாட்டில் போட, எல்லோருக்கும் சந்தோஷம் எப்படி இருவரும் சமாளிக்க போகிறார்கள் என்று கவலை.....

நந்திதாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக நியூஸ்.

விஷ்வா அண்ணா, பிரியா மன்னிக்கும் சீக்கிரம் நல்ல விஷயம் வரணம் என்று மீரா வாய் விட்டு சொன்னாள்.

மாதுளங்கா ரசாயனம் (வாயிலெடுப்பு மற்றும் மசக்கை குறைய நாட்டு மருந்து) , சத்து மாவு என்று அடுத்த பார்சல் கௌரி அனுப்ப.....
காலை எழ முடியாமல் மீரா தூங்க, அத்தனை வேலையும் ஷ்யாம் பார்த்து பார்த்து செய்தான்......

மீரா விஷ்வாவை கூப்பிட்டு அவன் மாமா ஆகும் விஷயத்தை சொல்ல.....

அதுவும் ட்வின்ஸ் என்றதும்
விஷ்வா ஷ்யாமை ஒரேடியாக ஓவர் டைம் பார்த்தியா? என்று கலாய்க்க....

தினமும் மீரா வயிற்றை தனியாக ஃபோட்டோ எடுத்து ஒரு ஆல்பம் தயாரித்தான் ஷ்யாம்.....

ஆபீஸ் வேலை மாத்திரம் மீரா செய்ய, வீட்டு வேலை, சமையல், டிரைவிங் எல்லாம் ஷ்யாம் தான்....
பாட்டு கிளாஸ் மட்டும் இருவரும் போய் வந்தனர்.
ட்வின்ஸ் என்பதால் வழக்கத்தை விட நிறைய டாக்டர் விசிட், ஸ்கேன்.....

ஏற்கனவே நல்ல அழகு மீரா, இப்பொழுது தாய்மையின் பூரிப்பும் சேர அழகோவியமாக மிளிர்ந்தாள்...

சந்தோஷம், மன நிறைவு, சங்கீதமாய் நாட்கள் ஓட......
 

Advertisement

Advertisement

Back
Top