நிறம் மாறிய நேசம் 26

Advertisement

Sarayu R

Member
Member
அடுத்த பதிவு. உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்

தாலி முடிச்சு போட்ட கைக்கு டஸ்ட் டைமண்ட் வளையல் நந்திதாவுக்கும் பிரியாவுக்கும்.. கெளரி குடுக்க....

பொரி இட்ட கைக்கு மோஹன், அஷ்வின், அர்ஜுனுக்கு மோதிரம் சுமித்ரா குடுக்க....
விஷ்வா மறுக்க மறுக்க ரெண்டு தாத்தாவும் வந்து பிரேஸ்லெட் போட்டு விட்டனர் ...
எதிர் பூஷணம் நக்ஷத்ரா கலெக்ஷன் போட்டு மீராவை தாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு கிரகப்பிரவேசம் செய்ய அழைத்தனர்.


சம்பந்தம் கலக்க, எதிர் மரியாதை செய்ய என்று இரு வீட்டினரும் எதிர் எதிராக உட்கார, சந்தனம் குங்குமம், பாலும் பழமும், திரட்டுப்பால் பரிமாறிக்கொள்ள,
புடவை, வேஷ்டி, பாண்ட் ஷர்ட், என்று இருபுறமும் பார்த்து பார்த்து குடுக்க எல்லோருக்கும் சந்தோஷமும் மன நிறைவும் தான்....

நந்திதா, பிரியா சுமித்ரா மீராவுக்கு வாங்கின விளையாடல் சாமான்களை பார்த்து அசந்து போய்விட்டனர்....
டிசைனர் சாரீ, லஹங்கா, சுரிதார், அக்ஸ்ஸரிஸ், ஐயர் கல்யாண டால் ( doll) செட்ஸ், மேக்அப் செட்.....
டெர்ரா கோட்டா செட்ஸ்......

மீரா இன்னும் சில வருடங்களுக்கு எதுவுமே வாங்க வேண்டாம்.....


எல்லாரும் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போடலாம். அப்பறம் நலுங்கு, சேஷ ஹோமம் இருக்கு....

கௌரி மீராவை கூட்டிக்கொண்டு போக ஷ்யாம் விழித்தான்..... எதுக்கு இப்போ அவளை கூட்டிண்டு போறா?..

விஷ்வா அவனிடம் வந்து அவ இப்போ ரெஸ்ட் எடுத்தால் தான் முடியும்.
நீயும் ரெஸ்ட் எடு.
எனக்கு ஒன்னும் எடுக்க வேண்டாம்....
சொன்னா கேளுடா....
நைட் .... உனக்கும் முடியணம்....
போடா.....
இன்னிக்கு நைட் என்ன என்று ஞாபகம் இருக்கா? அதுக்கு தான் சொல்லறேன்..... ஃபோனை குடு.நீயும் ரெஸ்ட் எடுக்காம, அவளையும் ரெஸ்ட் எடுக்க விடாம பண்ணாதே.....
கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் அசடு வழிய உள்ளே போனான்......
எல்லோரும் சாப்பிட்டு வர 1 மணி நேரம் கழித்து வந்து ரொம்ப பசிக்கரது. விஷ்வா சாப்பிட வா.....
நீங்க ரெண்டு பேரும் இன்னிக்கு மத்தியானம் சாப்பிடக்கூடாது.


போடா நான் சாப்பிடப்போறேன் ....என்று நேராக போய் மீரா நீயும் வா சாப்பிடலாம் என்று தூங்கும் மீராவை எழுப்பினான்....
தூக்க கலக்கத்துடன் இருந்தவளை கூட்டிக்கொண்டு போனான்.
அவர்கள் இருவரையும் பார்த்து இப்போ .....நீங்க.... சாப்பிடக்கூ......
எல்லாரையும் பார்வையால் அடக்கி, அவருக்கு பசிக்கறது... சாப்பிடலாம் கொண்டு வாங்கோ......
உடனே கோலம் போட்டு.... சாப்பிட உட்கார்ந்தனர்.....
யாராவது சொன்னால் சமாளி... என்று விஷ்வாவுக்கு ஒரு மெஸேஜ்....


சாப்பிடும் போதே கண்ணா ஒரே டயர்ட் நான் சாப்பிட்டு விட்டு தூங்க போறேன், நீயும் ரெஸ்ட் எடு. அப்பறம் நலங்கு , திரும்ப ஹோமம் இருக்கு. சரியாப்பா....


நீ என் கூட இருடா...
நான் உன் கூட இருந்தா நீயும் ரெஸ்ட் எடுக்க முடியாது. என்னையும் விட மாட்ட.
எனக்கு கொஞ்சம் டென்ஷனா, பயம்மா, டயர்டா இருக்குடா. நான்
காம் ஆகணம்.

என்னை பார்த்தா பயம்மா இருக்கா?. ஏன் என்ன அவாய்ட் பண்ணற?

இல்லை கண்ணா.... எல்லாருக்கும் கல்யாணம் அன்னிக்கு இருக்கற ஃபீலிங் தான்....


என்னை பிடிச்சு இருக்கு தானே....

யூ னோ இன் அன்ட் அவுட் ஆப் மீ. அப்பறம் இப்பிடி கேட்கறையே ராஜா......

இன்னும் கொஞ்ச நேரம் தானே.....


நலுங்குக்கு வேற பாடணம்
என்ன ரெடியா? ......
என்ன ரொம்ப டெலிகேட்டா ஆக்காதே!!!!
அவன் கையை பிடித்து விட்டு கிளம்பினாள்.
யேய்.....
ஒரு வம்பு எங்க பஞ்ச பாண்டவர்களில் அடுத்த ஜோடி ரெடி ....கெஸ் பண்ணு... இருக்கறது ஒரு பொண்ணு.... பையன் யாரு?
சுரேஷ்......
எப்படிப்பா....?
இதுல நாங்க PHD தெரியுமா?
கரெக்டா சொன்னதுக்கு என்ன கிடைக்கும்?. சொல்லு நானும் சொல்லறேன்....
போடா... எப்போதும் ... நீ மோசம் டா....

வாங்கிக்கறேன் இன்னும் கொஞ்ச நேரம் தானே.....
நீ தானே சொல்லுவ, உனக்கு பிடித்த ஒரு பாட்டு, பாரதி அந்த காலத்திலேயே இப்படி ஒரு பாட்டு அந்த பாட்டில் உள்ள காதல், அதுல இழையோடும் காமம்.... சான்ஸே இல்லை என்று,
"வீணையடி நீ எனக்கு.....
மேவும் விரல் நான் உனக்கு....."
மவளே கச்சேரி தான்.......
அதை வைத்தே உன்னை ஓட்டறேன் பாரு....

தூங்கி எழுந்து குளித்து நலுங்குக்கு ரெடி ஆகி ஷ்யாமை அழைக்க வந்தாள்.
தன் குடும்பத்தவர்கள் ஆசைக்காக நலுங்கு நிகழ்வுக்கு சரி என்று சொன்னாள்.
பாட்டு பாடி அவனை அழைத்து ....
இங்கும் ஷ்யாம் அவளுக்காக விட்டு குடுத்து, யாருடைய கிண்டலும் அவனை அசைக்கவே இல்லை.
மீராவுக்கு பொட்டு இட்டு டிரஸ் பண்ண நேராக சென்று அவளது முகத்தை கையில் ஏந்தி......அப்பளம் சுற்றி உடைத்து....
வெள்ளி தேங்காய் உருட்டி விளையாடும் போது மீராவுக்கு விட்டு குடுக்க, அவள் கையில் இருந்து நலுங்கு தேங்காயை சுலபமாக வீணையடி..... பாட்டை ஹம் செய்து எடுத்து தன் டிரேட் மார்க் கண் சிமிட்டி., புருவம் உயர்த்தி..... அவளை நிலை குலைய வைத்து எடுத்தான்.
மீரா, ஷ்யாம் ஒருபுறம், மீராவின் சகோதரர்கள், விஷ்வா ஒருபுறம் .... நலுங்கு விளையாட....

வா மச்சான் வா, நான் என் மீராவுக்கு தான் விட்டு குடுப்பேன்.
இந்த ஷ்யாம் யாருன்னு இப்போ தெரியாதா......அவர்களை ஒரு கை பார்த்து தெறிக்க விட்டான்.....

இதுக்கு இடையில்
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்ட சிங்கம்... என்று பாட்டு வேற.....

மீராவிடம் விட்டு குடுத்தது இந்த ஷ்யாமா என்று நினைக்க வைத்தான்....
கண்ணால் அவளிடம் வம்பு செய்து கொண்டே இருந்தான்...இந்த சிரிப்பு, சிணுங்கல், உடல் உரசல், கை தீண்டல், கொஞ்சல், கெஞ்சல் .....இருவரையும் இரவை எதிர்பார்க்க வைத்தது.....

இந்த நலுங்கு எல்லாரும் விளையாட ஆசைப்பட ஒவ்வொரு ஜோடியும் நலுங்கிட்டனர். மீனாக்ஷி, சுந்தரேசன், இந்திரா புருஷோத்தமன், கெளரி சங்கர், சுமித்ரா கிருஷ்ணா, விஷ்வா பிரியா, நந்து ராகேஷ்.... மாமா, மாமி, சித்தப்பா சித்தி..... எல்லாரும்
இவர்கள் விளையாடும் போது மீரா, ஷ்யாம் தங்கள் உலகில்.....
ஒரே பாட்டு , சிரிப்பு, கூத்து....


அந்த பீச் ரிசார்ட் நிகழ்ச்சியில் பாடிய பாடல்களை பாடி மீராவை வெட்கப்பட வைத்தான். என்னோட மூஞ்சி பார்த்து பாடு என்று பிடுங்கல் வேற.
வேறு வழி இல்லாமல் அவனுடன் அவனுக்கு ஈடு குடுத்து பாடினாள்......

பார்த்தவர்களும் கேட்டவர்களும் மீரா நிலை இன்று அவ்வளவு தான் என்று புரிந்து கொண்டனர்......

சேஷ ஹோமம் திரும்ப 9 கஜம், பஞ்சகச்சம்....
விஷ்வாவுக்கு ஒரே சந்தேகம். தன் திருமணத்தில் இப்படி இரவு திரும்ப ஒன்னும் பண்ணவில்லையே என்று....
சாஸ்த்திரிகளிடமும் தாத்தா விடமும் கேட்க,
இப்போ சென்னை மாதிரி ஊர்களில் காண்ட்ராக்ட் கல்யாணம். சத்திரம் வாடகை , மத்த செலவு ஜாஸ்தி. அதுனால அங்க முதல் நாள் காலைல விரதம், நாந்தி, அப்பறம் நிச்சயதார்த்தம், ரிசப்ஷன் என்று ஜெட் வேகத்தில் நடக்கிறது.
அடுத்தநாள் முகூர்த்தம், சாப்பாடு உடனே மத்தியானம் சத்திரம் காலி செய்து போக வேண்டி இருப்பதால் இந்த சேஷஹோமம், அருந்ததி , துருவ நட்சத்திரம் பார்த்தல் காலையிலே செய்ய வேண்டி இருக்கு. சாஸ்த்திரத்துக்கு தான் அது செய்யரோம். எங்களுக்கும் வழி இல்லை.
எப்படி 4 நாள், 5 நாள் கல்யாணம் இப்போ 1 நாள், 11/2 நாள் கல்யாணம் ஆச்சோ, அது மாதிரி தான். மாறும் போது நாமும் மாற்றிக்க வேண்டி இருக்கு.
இன்னிக்கு வானம் நன்னா தெளிவா இருக்கு.
எல்லாரும் பார்க்கலாம். வாங்கோ. வடக்க பாருங்கோ, ஒரு கப்ஐ தலை கீழா கவிழ்த்த மாதிரி 7 நட்சத்திரம் இருக்கும். அதுல கைப்பிடில கடைசிக்கு முந்தின நட்சத்திரம் தான் வசிஷ்டர். அதுக்கு பக்கத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும் .அது தான் அருந்ததி நட்சத்திரம். பார்க்க இவை
2 நட்சத்திரங்களா இருந்தாலும், அவற்றின் ஒளி ஒன்றின் மேல் ஒன்றாய் இருக்கும். இந்த ரெண்டும் ஒன்றை ஒன்று சுற்றி சுற்றி வரும்.
அது போலவே ரெண்டு பேராக இருக்கும் கணவன், மனைவியும் பார்க்க தனித்தனியாக இருந்தாலும் ஒருமித்த கருத்து கொண்டவர்களாய் ஒருவரை ஒருவர் பிரியாமல் சார்ந்து இருக்கணம்.

இதெல்லாம் இப்போ தான் மேலை நாட்டுல கண்டு பிடிச்சு இருக்கா.
நாம் ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முந்தியே கண்டு கொண்டோம்.
இந்த astronomy என்ற வானியல் ல இந்த மண்டலத்துக்கு கிரேட் பேர், கிரேட் டிப்பர் அல்லது அர்ஸ்சா மேஜர் என்று பேர்.


அப்பறம் நாம துருவ நட்சத்திரம் என்று சொல்லரோம். இங்கிலீஷ்ல
போல் ஸ்டார். அது இடம் மாறாம ஸ்திரமா இருக்கும். துருவன் கதை தான் எல்லாருக்கும் தெரியுமே.
அந்த துருவன் மாதிரி அழிவின்றி ஸ்திரமா இருக்கணம் என்று அதையும் காமிக்கரா.
எல்லாருக்கும் நன்னா மனசிலாச்சா....

எல்லோரும் கை தட்டி சாஸ்திரிகள் மாமா சொன்னதை கேட்டு அறிந்தனர்.

இரவு சாப்பாடு மாப்பிள்ளை பெண்ணை அருகருகே அமர்த்தி சுற்றி வர எல்லோரும் இருக்க கிண்டலும் கேலியுமாக சாப்பிட வைத்தனர். மீராவால் சாப்பிடவே முடிய வில்லை. மீரா இப்பிடி சாப்பிடு என்று அவளுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே இருந்தான். மீராவுக்கு தர்ம சங்கடமான நிலை.....

மீரா ஷியாமுக்கு ஊட்டி விடு. ஷ்யாம் அண்ட சராசரம் தெரிய வாயை திறந்தான். அம்மா கிருஷ்ணா உம்மாச்சி ( என்னோட அப்பா இல்லை) இப்படியா வாயை திறந்தான் என்று கேள்வி வேற!!!!!
மீரா வெள்ளி தட்டில் பால்சாதம் பரிமாறி, இருவருமாக சேர்ந்து சாப்பிட்டனர்.
விஷ்வா ஷ்யாம் பக்கத்தில் வந்து டேய்
ரொம்ப சாப்பிடாதே..... தூங்க போற. என்று மெதுவாக சொல்ல.....
என்னடா.....? ஏன் ?
விஷ்வா தலைல அடித்துக்கொண்டு அவன் காதில் மவனே, இப்போ அடுத்து என்ன? ஞாபகம் இருக்கா? ரொம்ப சாப்பிட்டு தூங்காதே..... ஸ்வீட் வேணும் என்றால் சாப்பிடு. ஹைப்பர் ஆவாய்.....
எப்படித்தான் எந்தங்கச்சி உன்னை சமாளிக்க போராளோ தெரியலை டா.


சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது பிரியா, நந்திதா மீராவிடம் குட் லக் ஹவ் அ கிரேட் நைட் . என்ஜாய்... என்று கட்டி அணைத்து சொல்ல, மீராவுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. இன்னும் சிவந்தாள்....

கௌரி, சுமித்ரா இருவரும் மீராவை கூட்டிக்கொண்டு போய், ஷ்யாம் அவளுக்காக வாங்கிய டிசைனர் சாரி, அதன் அக்சசரிஸ் , அதற்கு மேட்சாக கொஞ்சம் செண்பகப்பூ, மனோரஞ்சிதம் பூ,குடுத்து ரெடியாக சொல்ல,
அம்மாஸ் ரொம்ப அழகா இருக்கு இந்த டிரஸ், அக்ஸ்சசரிஸ். தேங்க்ஸ் .எங்க வாங்கினது?
உன்னோட தேங்க்ஸ், எங்க வாங்கினது எல்லாத்தையும் உங்க ஆத்துக்காரர் கிட்ட கேளு என்று சுமித்ரா சொல்ல,
எங்க ரெண்டு பேரையும் ஒரு வழி ஆக்கிட்டான்... ஆனா சந்தோஷமா இருக்கு இப்படி அன்பா,ஆசையா இருக்கானே என்று. இது நீ பண்ணின அதிர்ஷ்டம். இப்படியே இதுக்கும் மேல ரெண்டு பேரும் புரிஞ்சுண்டு ஆயுசோட சகல சௌபாக்கியத்தோட இருக்கணம் ராஜாத்தி......
ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கான். ஏமாத்தாதே...... புரியும் என்று நினைக்கிறோம் இல்லையா சுமி?....

ஆமாம் கௌரி,
இந்த மாதிரி அவன் இருந்ததே இல்லை. இவளை பார்த்த நாள் முதலா பைத்தியமா இருக்கான். என் பிள்ளையை பத்திரமா பார்த்ததுண்டு, அவனை சந்தோஷமா வைச்சுக்கோ. இனிமேல் அவன் உனக்கு தான். உனக்கு மட்டும் தான் என்று சுமித்ரா உணர்ச்சி வசப்பட....
இதுக்கு, இந்த அன்புக்கு, காதலுக்கு நான் வொர்த்தா? மீரா அழ,
இருவரும் வந்து இப்போ அழுவாளா? . யாராவது பார்த்தா என்ன நினைப்பா?
கண்ணை துடைச்சுண்டு கொஞ்சம்
டச் அப் பண்ணிக்கோ....
கௌரி மீரா ரெடியா? என்று சங்கர் வர...
வாங்கோ, உங்க ஆசை பொண்ணை கொஞ்ச வந்தாச்சா?
ஷ்யாமுக்கு கொஞ்சம் மிச்சம் வையுங்கோ...
சங்கர் வந்து மீராவை அணைத்துக்கொண்டு....
கண்ணம்மா, எப்பிடிடா இருக்க? அப்பா தானே உன்னோட பெஸ்ட் ப்ரெண்ட் இல்லியாடா.... இனிமேல் ஷ்யாம் அந்த இடத்துக்கு வந்துடுவான்.......
இனிமேல் அவன் தான் உனக்கு எல்லாம்.....
அப்போ நீங்க எல்லாம்?.....
நாங்க எல்லாம் இருப்போம், ஆனா ஷ்யாம் தான் இனிமேல் பிரைமரி,
He takes the precedence over others (அவர் மற்றவர்களை விட முன்னுரிமை பெறுகிறார்).
ம்ம்....
அப்படி இருக்கப்போற ஷ்யாமுக்கு நீ குடுக்கப்போற இம்பார்டன்ஸ், டிஃபர்ரன்ஸ்......
உலகத்துல லேடீஸ் வீக்கர் செக்ஸ் என்று சொல்லுவா
ஆனா அது உண்மை இல்லை. ஒரு மரத்துக்கு, செடிக்கு ஆணி வேர் எப்படி முக்கியமோ அது போல தான் குடும்பத்துக்கு லேடீஸ்.
நீ ஆணி வேர், செடி ஷ்யாம் இலையும் பூவும் உன் குடும்பம்....

ஆணி வேர் எப்பிடி கிளைகளை பரப்பி, நன்னா மண்ணுல பற்றி இருக்கோ அது போல நீயும் ரெண்டு பக்க உறவுகளோடு பற்றிக்கொண்டு இருந்தால் குடும்ப மரம் ஸ்ட்ராங் ஆ இருக்கும்.
உன்னோட பாட்டி, கெளரி இவாள பார்க்கறையே, ஃபைனல் டெசிஷன் அவாதான், சும்மா எங்க கிட்ட கேட்பா, நாங்களும் நன்னா தலை ஆட்டுவோம்.


இதுக்கு எல்லாம் காரணம், எங்க கிட்ட அடங்கி, எங்களையே தங்களோட அன்பால, ஆசைனால, எங்களோட விருப்பு, வெறுப்பு, பிளஸ், மைனஸ் எல்லாம் தெரிஞ்சு தங்களுக்குள்ள அடக்கி வைத்து இருக்கற திறமைதான்.

ஆண்களை கைல போட்டுக்கறது ரொம்ப ஈஸி. என்னடா அப்பா இப்பிடி சொல்லறேன் என்று நினைக்காதே. நம்ம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ், எல்லா டாப்பிக்கும் பேசுவோம் இல்லையா.....
அவர்கள் எதிர் பார்க்கும் நேரங்களில் எதிர் பார்க்கும் விதத்தில் சாப்பாடோ, செக்ஸ்சோ கிடைத்தால் ( அதுவும் கல்யாணம் ஆன புதிதில்) அப்படியே சரண்டர் தான்.
முதல்ல அடங்குபவர்கள் தான் முடிவில் அடக்குபவர்கள்.
இங்க நம்ம ஆத்துல தான் பார்க்கறையே.....
லகான் உங்க கைல......
விட்டுக்குடுத்தா கெட்டுப்போகமாட்டா...
ஈகோ, நீயா, நானா, என்ற நினைப்பு இல்லாம, நம்ம குடும்பம் எது நல்லது என்று பேசி தீர்மானிக்க வேண்டும். ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவும் மறைக்க வேண்டாம். நோ சீக்ரெட்.
அது எந்த மாதிரி இருந்தாலும்....

குடும்பத்துக்காக டைம் ஒதுக்கணம்.
அதுக்கும் மேல உங்க ரெண்டு பேருக்கும் தனியா டைம் ஓதுக்கணம், இப்போ மட்டும் இல்லை எத்தனை வருஷம் ஆனாலும். இன்று புதிதாய் இணைந்தோம்.....
இந்த புரிதல் இருந்தா வாழ்க்கை சொர்கம் தான்......

ரொம்ப போர் அடிச்சேனா?
இல்லப்பா..... ஐ லவ் யூ அப்பா....

ஷ்யாம் காத்துண்டு இருக்கான்.....
பெஸ்ட் விஷஸ் டூ யூ போத் ஃபோர் எ ஹாப்பி ஜாய்புல் லைஃப் டா..
அணைத்து நெற்றியில் முத்தம் இட்டு கூட்டிக்கொண்டு வந்தார்.


விஷ்வா வந்து தோளை அணைத்து விட்டு, பெஸ்ட் விஷஸ் டூ யூ போத் ஃபோர் எ ஹாப்பி ஜாய்புல் லைஃப் டா...
இன்னம் கொஞ்ச நாள் அந்த தடியன் உன்னை விடவே மாட்டான். அது தான் .....

அண்ணா ..... பாவம் ஷ்யாம்.....

என் தங்கச்சி அதுக்குள்ள அந்த தடியனுக்கு சப்போர்ட் பாருடா.....


அனைவரின் ஆசிர்வாதம் வாங்கி இருவரும் மீராவின் அறைக்குள் வந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட அறை, ஆசையுடன் இருவர்,
அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாமே....

அன்பு, ஆசை, காதல், நேசம் கலக்கும் நேரம்....
 

Advertisement

Advertisement

Back
Top