நிறம் மாறிய நேசம் 25.2

Advertisement

Sarayu R

Member
Member
இரண்டு பாகமாக வருகிறது.
திருநெல்வேலி ஐயர் கல்யாணம் பற்றி சிறிது விளக்க பார்த்து இருக்கிறேன். திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, செங்கோட்டை , சுந்தரபாண்டியபுரம் இந்த ஊர்
வழக்கம் இங்கு விளக்க ஒரு சின்ன முயற்சி.

இது பாலக்காடு, திருவனந்தபுரம் வழக்கத்தில் இருந்து சிறிது மாறுபட்டது.

நீங்கள் சினிமாவில் பார்த்த பாஷை, கல்யாண கலாட்டா இங்கு வேறாக தெரியும்.
பிடித்து இருந்தால் சொல்லலாமே.

ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு ஷ்யாம் கண்டிப்பாக மறுத்து விட்டான்.



விஷ்வா தலைமையில் பாட்டு டான்ஸ் ஒரு பக்கம்.

நல்ல கூட்டம். ரிசப்ஷன் என்று கிடையாததால் எல்லோரும் நேராக வந்து விட்டனர். கிஃப்ட், பிளவர்ஸ் எதுவுமே கிடையாது. மீரா, ஷ்யாம் கௌரி சங்கர் ஒவ்வொருவரிடமும் சென்று பேசி ஃபோட்டோ, வீடியோ எடுத்துக்கொண்டனர். வரிசையில் நிற்பதும், ஓரிடத்தில் கூட்டம் என்று இல்லாமல் பக்காவாக பிளான்.

எல்லோருக்கும் புதிய அனுபவம்.



வண்ணம் கொண்ட வெண்ணிலவே....பாடல் யார் பாடுவது என்றால் யாருக்குமே தெரியவில்லை. ஆனால் மீரா கண்ணில் பட்டு விட்டது.

மெதுவாக ஷ்யாம் காதில் இது தான் உன்னோட ஷட்டகர் (சகலை) என்று நினைக்கிறேன். நானும் காலம்பர இருந்து பார்க்கறேன் . ம்ருது

போற இடம் இந்த பையன் பார்வை போனது. இப்போ ம்ருது உருகி நிக்கறா. மூத்த மாப்பிளையா விஜாரி. என்னை ரசிச்சது போறும்.



எப்பிடியா கண்டு பிடிச்ச?

ம்ம்.....இதுக்கு பேரு மல்டி டாஸ்க்.



மோஹன் இங்க வாயேன். என்னக்கா? யாரு டா இது பாடறது?

எங்க சீனியர் க்கா.

ஆஹாந்.....

உங்க சீனியர்க்கு தங்கை கசின் இருக்கணமே!....

ஆமாம் அக்கா .... உனக்கு எப்பிடி தெரியும்?

அவ எங்க?.....

அக்கா..... நீ பார்க்கரது சரி இல்லை.....

டேய் நீங்க பண்ணறது...... சரியா?

பேர் என்ன?

சந்துரு.....



சரி நீ போ. ஆனா நாங்க சந்த்ரு கிட்ட பேசணம்.....



சந்துரு பாடி முடித்து இறங்கியதும் அவனிடம் இருவரும் பேச, ஷ்யாம் மெதுவாக என்னோட மச்சினி அழகா இருக்காளா?....

யப்பா.... எங்கள மிஞ்சிடுவ போல இருக்கு....

அவளுக்கு தெரியுமா?....

சந்ததுரு முகத்தில் வெட்கம்.....



ம்ருது சந்துருவிடம் ஹே தேங்க்ஸ் ஃபார் கமிங். அழகா இருந்தது உங்க சாங்....



யேய் மித்து, யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்.....

தேங்க்ஸ் சந்துரு......



ஷ்யாம், மீரா இருவரும் உருகி உருகி கோச்சடையான் படத்தில் வந்த காதல் கணவா......., கண்ணே கனியே பாடி வர,

ஷ்யாம், மீரா சந்துருவை கூட்டிக்கொண்டு மெதுவாக பேசினர்.

பார்த்த ம்ருது டென்ஷன் ஆயிட்டா.

சந்துரு இவர்களின் சீனியர். ஹவுஸ் சர்ஜன்சி முடித்து மேற்படிப்பு படிக்க ரிசல்ட்க்கு காத்திருக்கிறான்.

குடும்பத்தில் எல்லாரும் டாக்டர்ஸ். திருநெல்வேலியில் தன்வந்திரி ஆரோக்யா மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் அவர்களுடையது.

தங்கை சஹானா மெடிகல் காலேஜ் முதல் வருஷம்.



சந்துரு 1 வருஷம் Bsc படித்துவிட்டு மெடிகல் காலேஜ் சேர்ந்தான்.

மோஹனுக்கு சஹானா மேல் ஈர்ப்பு.

சந்த்ருவுக்கு ம்ருது மேல்.

இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் இருந்தால் வரும் மருமகன், மருமகள்...டாக்டர்ஸ் என்று குடும்பமே பார்த்துக்கொள்வது வசதி தானே....



சந்துரு தன் ஆசையை இன்னும் சொல்ல வில்லை. சீனியர், ப்ரெண்ட் என்ற முறையில் ம்ருது, மோஹன் அழைக்க வந்திருந்தான்.



சந்துரு நாளைக்கு வருவியா? மீரா கேட்க,

அப்பா, அம்மா வருவா.....

நீயும் வா..... பிளீஸ்....

பாக்கரேன் அக்கா....அப்படி கூப்பிடலாமா?.

அப்படித்தான் கூப்பிடணம்.... ஓகே யா



படிப்பு முடிச்சு, பெரியவா சம்மதிக்கும் வரை ........ பொறுத்துப்பியா?.....



மீரா, ஷ்யாம் சாப்பிட போங்கோ.... என்ற கௌரி

யாரும்மா இது?.

இது வந்து சந்துரு,

திருநெல்வேலில டாக்டர்....

என்று மீரா இழுக்க,

டாக்டர் பாலு, லக்ஷ்மி பிள்ளையா?

வாப்பா.... ரொம்ப சந்தோஷம்.... அப்பா, அம்மா வரலையா....

எங்க அம்ருதா, மோஹன் கூட மெடிசின் தான் பண்ணறா.....

ஷ்... அம்மா ....சந்துரு நம்ம ம்ருது, மோஹனுக்கு சீனியர்....

ஆன்டி அவா நாளைக்கு வருவா...

வா நீயும் சாப்பிட வா.

மோஹன் கூட்டிண்டு போ....



அம்மா நீயும் வா, எல்லருமா சாப்பிடலாம்...

நாளைக்கு காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணம். வாங்கோ எல்லாரும்....



இன்னும் 12 ஹவர்ஸ்ல யூ ஆர் மைன்....



சும்மா சும்மா மெஸேஜ் அனுப்பாதே....

நாளைக்கு முகூர்த்தம் முடியும் வரை நான் ஃபோன் வைத்துக்க மாட்டேன்....



காலையில் எழுந்து மங்கள ஸ்நானம் செய்து மீரா தோழி பொங்கல் என்று அம்மான்( மாமா) வீட்டு சீர் வழக்கத்திற்கு ரெடியாக பிஸ்வேஷ், அவரின் மனைவி, புருஷோத்தமன் தாத்தா, இந்திரா பாட்டி மேள தாளத்துடன் சீர் வகை கொண்டு வர,

கௌரி சங்கர் தாரை வார்த்து குடுக்க 9 கஜம் புடவை வகையறா, மீராவுக்கு ஊஞ்சல் புடவை, நகை, பட்சணம், கொண்டு வந்து மீராவை உட்கார்த்தி பொங்கல் பரிமாறி, ஒவ்வொருவரும் ஊட்டிவிட்டனர்

சந்தோஷம், படபடப்பு, எதிர்பார்ப்பு, குடும்பத்தை விட்டு பிரியப்போகும் வருத்தம், என்னதான் தெரிந்த குடும்பம் என்றாலும் உறவு முறை, பழக்க வழக்கம், எல்லாவற்றிக்கும் மேல் ஷ்யாமின் அன்பு, ஆசை, தன் மேல் உள்ள பொசசிவ்நெஸ், தான் நினைத்ததை சாதிக்கும் தன்மை.....

உணர்வுகளின் குவியலாய் மீரா....



காலை எழுந்து மங்கள ஸ்நானம் செய்து முடித்த ஷ்யாம், காசி யாத்திரை போக மாட்டேன். மீரா ஆத்துல தடுக்காட்டி என்ன பண்ண என்று ஒரு சீன் போட.... விஷ்வா வந்து அதட்ட,

ஒரு வழியாய் காசி யாத்திரை கிளம்பினான்.

விஷ்வா மாப்பிள்ளை தோழனாய் கூட வர, ஷ்யாமிடம் நீங்க பிரம்மச்சாரியாக காசி போக வேண்டாம். எங்காத்து பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் வாருங்கோ என்று சங்கர் 2 தேங்காயை அவனிடம் குடுக்க



ஹே நல்ல வேளை காசி யாத்திரை பிளான் ட்ராப் ஆச்சு என்று வாய் விட்டு சொல்லி குதூகலித்தான்......

டேய், மீரா அப்பா இப்பிடி கூப்பிடா விட்டாலும் நீ 2 நிமிஷத்தில் திரும்பி இருப்ப.... என விஷ்வா கிண்டல் அடிக்க,

மாமா பிஸ்வேஷ், ரெண்டு சித்தப்பாக்கள், தம்பிகள் கூட வர சர்வாலங்கார பூஷிதையாய் மீரா வந்தாள்.

மாலை மாற்றல்:

நீயும் நானும் ஒன்று என்பதை உணர்த்த 3 முறை மாலை மாற்றினர். மாமா, சித்தப்பா தம்பி எல்லோருமே மீராவை உயரத்தில் தூக்க, கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒரே குதி, அவள் கழுத்தில் அவன் இட்ட மாலை. மீரா மாலை போட வரும்போது யார் சொல்லுவதையும் கேட்காமல், கம் ஆன் பேபி என்று அவளுக்கு வசதியாய் நின்று கொண்டான்.

சுற்றி இருந்தவர்கள் மாலை மாற்றினாள்...... பாட்டு பாட,

யேய்... அழகா இருக்கடி என்று மீராவின் காதில் ஹஸ்கி வாய்ஸ்ல் சொல்ல, குங்குமமாய் சிவந்தாள் மீரா....



கோந்தே, வலது கை 5 விரலையும் சேர்த்து இப்பிடி குமிச்சு பிடி. மாப்பிள்ளை சார் , இந்த 5 விரலையும் விடாம சேர்த்து இப்படி பிடிங்கோ என்று சாஸ்திரி காமிக்க, முதன் முறையாக, அனைவர் முன்னிலையில் மீராவின் கை பற்றினான்....

வாரணம் ஆயிரம் ...... யாரோ பாட, மீரா கோதை நாச்சியார் ஆனாள் .



அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் இருவரையும் அமர வைத்து, பாலும் பழமும் குடுத்து, காலில் பால் வைத்து, பட்டு துணியால் கௌரி, சுமித்ரா, ஆத்து பெரிய சுமங்கலிகள் துடைக்க, கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் பாட்டு பாட, மஞ்சள், குங்குமம் கலந்த சாத உருண்டைகளை பிரதட்சிணமாக, அப்பிரதட்சிணமாக பிடி சுற்றிபோட்டனர். இதுவும் ஒரு வகை திருஷ்டி கழித்தல் தான். ஊஞ்சல் பலகையை தாங்கி இருக்கும் சங்கிலி போல நம் பந்தம் . வாழ்க்கை மேலும் கீழுமாக , முன்னும் பின்னுமாக இருக்கும். ஆனால் நம் பந்தம் தெய்வீகமானது. இந்த வாழ்வை நம் பந்தத்தால் வாழ்வோம் சொல்லாமல் சொல்லும் சம்பிரதாயம்....



மீரா காதில் என்ன சொன்னான் அது அவர்கள் இருவரும் அறிந்தது. ஆனால் மீராவின் சிவந்த முகம் அவள் வெட்கத்தை சொல்ல, ஷ்யாம் விடாமல் அவள் காதில் பேசிக்கொண்டே இருந்தான்....

மாப்பிள்ளை சார் இனிமேல் மந்திரம் சொல்லணம். அப்பறமா மீரா காதுல ரகசியம் சொல்லலாம் என சாஸ்திரிகள் சொல்ல கொல் என்ற சிரிப்பு.....

சுமித்ரா மீரா கையை பிடித்து, கௌரி ஷ்யாம் கையை பிடித்து மண மேடைக்கு அழைத்து வந்தனர். ஷ்யாம்

கூறை புடவை குடுக்க, அவனை நமஸ்காரம் பண்ணி கூறை புடவையை வாங்கிக்கொண்டாள்.



அவள் வரும் முன்பு, மாப்பிள்ளையை மகாவிஷ்ணுவாக ஆவாஹனம் செய்து சங்கர், கௌரி கால் அலம்ப,



8 மாச கர்ப்பிணியான நந்திதா, பிரியா,கட்டிவிட வர, அவர்களுடன் ரெண்டு பாட்டியும் கூட போயினர்.

நந்திதா கட்டி விட தெரியாது என்று சொன்னதால் ...

கோந்தே பாத்ரூம் போய்ட்டு வந்துடு.

இன்னும் 2 மணி நேரம் போக முடியாது..



புடவையை கீழே போட்டு, அதுல உட்காரு ( சில குடும்ப வழக்கம்). சரி இப்போ மேட்சிங் ப்ளவுஸ், வளையல் நகை போட்டுக்கோ.

பைக் ஷார்ட்ஸ் போட்டுண்டு இருக்கியா.... சரி....

இந்திரா 11 கொசாம் வை.

வா இப்பிடி நில்லு என்று, நிமிஷமா கட்டி விட்டு, ஒட்டியாணம், பில்லாக்கு, நாகுத்து என்று நகைகள் போட்டு, கால்ல ஜலம் வைத்து , மாலை போட்டு,



சாட்சாத் காந்திமதி அம்மன் மாதிரி இருக்கே. சந்தோஷமா இருடி... என்று ஆசிர்வதித்து நந்திதாவுடன் அனுப்பினர்.

ஃபோட்டோ, விடியோ ஃபிளாஷ் ஃபிளாஷ்.....

கோந்தே சபைக்கு நமஸ்காரம் பண்ணிக்கோ....

ஷ்யாம் வாவ் மை கார்ஜியஸ்... வாயை விட்டே சொன்னான்.



கன்னிகாதானம், நுகத்தடி

ஒரு சேரில் சிறிது வைக்கோல் பரப்பி, மேல பட்டு வஸ்திரம் போட்டு சங்கர் உட்கார, அவர் மடியில் மீரா உட்கார, 3 தலை முறை ப்ரவரம் சொல்லி, கோத்திரம் மாற்ற,

தர்பையினால் ஆன மௌஞ்சி புல் கயிற்றை மீராவின் இடையில் புடவை மீது மூன்று சுற்றாக அவளது நாபியின் தென் பகுதியில் முடிச்சு வருமாறு ஷ்யாம் கட்டினான்

தர்ப்பையால் புருவத்திக்கிடையில் தோஷம் நீக்கி, நுகத்தடியில் மாங்கல்ய சரடை சுற்றி, நீரூற்றி பூஜை செய்து, இந்த வாழ்க்கையில் இந்த நுகத்தடியில் கட்டப்படும் மாடுகள் போல சரி சமமாய் வாழ்க்கை வண்டியை ஓட்டுவோம் என்றும் தாத்பரியம் சொல்ல.....



சங்கரின் இரு கைகளுக்குள் மீராவின் இரு கைகளை வைத்து அதில் தேங்காய், தாம்பூலம், பூ, தட்சிணை வைத்து கௌரி தத்தம் குத்த ( நீர் வார்க்க) கிருஷ்ணாவின் இரு கைகளுக்குள் இருந்த ஷ்யாமின் இரு கரங்களுக்குள் சங்கர் கண்ணில் நீர் வழிய கன்னிகாதானம் செய்து மெதுவாக தான் கரங்களை விலக்கி இனி இவள் உன்னுடையவள் என்று குடுத்தார். கிருஷ்ணாவும் தனது கரங்களை விலக்கி கொண்டார்.



என்ன படித்து, எந்த நிலையில் இருந்தாலும் பெண்ணை தாரை வார்க்கும் போதும், கோத்திரம் மாற்றும் போதும் அழாத தந்தை இருக்க மாட்டார்கள்.....

எந்த தானம் குடுத்தாலும் வாங்கினாலும் குடுப்பவர் கை உயர்ந்தும், வாங்குபவர் கை தாழ்ந்தும் இருக்கும்.

இந்த கன்யா தானத்தில் மட்டுமே கொடுப்பவர், வாங்குபவர் கை ஒரே நிலையில் இருக்கும். மேலும் தானம் குடுப்பவர் நின்றும், வாங்குபவர் அமர்ந்தும் வாங்குவது உலக வழக்கம். இந்த ஒரு தானத்தில் தான் குடுப்பவர் அமர்ந்தும் பெறுபவர் நின்றும் வாங்கும் ஒரு நிலை. ரொம்ப ஸ்பெஷல் என்பதால்....



அவ்வேளையில் ஓதப்படும் மந்திரங்கள், அக்கினி சாட்சியாக, அவளை தானமாக மணமகனிடம் ஒப்படைப்பதாகும்...இதன்படி அந்தப்பெண்ணிற்கு திருமணத்திற்குப் பின்னர் ஒரு மகளுக்காக தான் ஆற்றவேண்டிய ஒரு சில கடமைகளைத் தவிர,அவள் மேலுள்ள உரிமைகளை மணமகளின் தந்தை இழக்கிறார்... அந்தப்பெண்ணிற்கு செய்யவேண்டிய பொறுப்புகள், கடமைகள் மற்றும் உரிமை முதலியன அவள் தந்தையிடமிருந்து அந்தப்பெண்ணின் கணவனான மணமகனுக்கு மாறுகிறது..

இப்போ மாங்கல்ய தாரணம் ஆக போறது. கட்டி முடித்தபின் பக்கத்துல வந்து பூ, போட்டு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. தயவு செய்து யாரும் பொண்ணு, மாப்பிள்ளைக்கு கை குடுத்து விஷ் பண்ண வர வேண்டாம்.

சப்தபதி முடிந்துதான் வரணம்.

அது ரொம்ப ரொம்ப முக்கியம்.



மாங்கல்ய தாரணம்:

எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கப் பெற்ற திருமாங்கல்யத்தை ஷ்யாம் கையில் குடுத்து ரெண்டு பேரும் பகவானை நன்னா பிரார்த்தனை பண்ணிண்டு மீரா கழுத்துல ஒரு முடிச்சு போடு. அடுத்த ரெண்டு,மூணாவது முடிச்சு உன்னோட சகோதரிகள் போடணம். பிரியா, நந்திதா ரெடியாக வந்து நிற்க, மீரா கழுத்தில் உள்ள மாலையை எல்லாம் கொஞ்சம் பின்னாடி இழுத்து விட்டுக்கோங்கோ.....

அந்த தலை அலங்காரத்தை கொஞ்சம் தூக்கி வைத்துக்கோங்கோ...... சாஸ்திரிகள் ஒரே ஆர்டர் போட்டார்.



கோந்தே மீரா அந்த திருமாங்கல்யத்தை உன்னோட நெஞ்சு கிட்ட வைத்து ரெண்டு கைக்குள்ள பிடிச்சுக்கோ.... அப்போதான் உங்க ஆத்துக்காரர் கட்டறது சரியா இருக்கும் .....

வாங்கிய திருமாங்கல்யத்தை எல்லோருக்கும் தூக்கி காட்டி, குனிந்திருந்த மீராவின் முகத்தை தன் கையால் நிமிர்த்தி தான் டிரேட் மார்க் புருவ தூக்கல் சைகையால் கட்டவா என்று கேட்க, அவளும் சிரித்துக்கொண்டே கண்ணால் சரி என்று ஜாடை காட்ட, கெட்டி மேளம் கொட்ட, மந்திரம் முழங்க மீரா சங்கர் மீரா ஷ்யாம் ஆனாள். தாலி கட்டி முடித்து அவள் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் இட்டு ஐ லவ் யூ பொண்டாட்டி என்றான்.

அவள் நெற்றி வகிட்டிலும், திருமாங்கல்யத்திலும் குங்குமம் இட்டு சாஸ்திரிகள் சொல்லுவதையும் செய்தான்.....



சிரித்துக்கொண்டே சாஸ்திரிகள் எதுக்கும் ஆறாம் மாசம் சீமந்தத்துக்கு நாள் குறிச்சு குடுத்துட்டு போறேன். மாப்பிள்ளை போற ஸ்பீடு சான்ஸே இல்லை.....



ஷ்யாம் மீராவின் வலது கையை பற்றி அக்னியை வலம் வந்து பாணிக்கிரஹணம் ஆயிற்று.

இப்பொழுது சப்தபதி.

சாஸ்திரிகள் இதன் முக்கியத்துவம், தாத்பர்யம் சொல்ல ஆரம்பித்தார்.



திருமாங்கல்யம் கட்டுவதில் திருமணம் முடிவதில்லை. சப்தபதி என்று இருவரும் எடுத்து வைக்கும் இந்த 7 அடிகள், வெறும் அடிகள் இல்லை.

இந்த பாரின் வெளி நாட்டுல திருமணத்துக்கு முந்திய ஒப்பந்தம் அத எப்படி சொல்லணம் என்று தெரியலை... அது போல....



முதல் 4 சுற்று மணமகன் முன்பு செல்ல, கடைசி 3 மணமகள் முன்பு செல்ல சொல்லப்படும் உறுதி மொழி.

நல்ல நண்பர்களாய், மன ஒற்றுமையுடன், சந்தோஷமாக...வாழ்ந்து, நல்ல குழந்தைகளை பெற்று.....

இதுதான் பொதுவான அர்த்தம்.

அந்த உறுதி மொழி எடுக்குமுன் யாரும் அவர்கள் இடையில் வரக்கூடாது என்று தான் பொறுத்துக்கொள்ள சொன்னேன்.

இப்பொழுது நான் சொல்லும் மந்திரத்தின்பொருள் இது தான்.....

இப்போது நாம் ஒன்றாக ஒரு உறுதிமொழி ஏற்போம். நாம் அன்பைப் பகிர்ந்து கொள்வோம், ஒரே உணவைப் பகிர்ந்து கொள்வோம், நமது பலத்தைப் பகிர்ந்து கொள்வோம், அதே சுவைகளைப் பகிர்ந்து கொள்வோம், நாம் ஒருமனதாக இருப்போம், ஒன்றாக உறுதிமொழி கடைப்பிடிப்போம். நான் சாமவேதமாக இருப்பேன் , நீ (மணமகள்) ரிக் வேதமாக இருப்பாய்: நான் மேல் உலகமாக இருப்பேன், நீ பூமியாக இருப்பாய்; நான் சுக்கிலம் ஆவேன், நீ அதை உன் கருப்பையில் வைத்திருபாய் - நாம் ஒன்றாக வாழ்ந்து குழந்தைகளையும், பிற செல்வங்களையும் பெறுவோம்; ஓ இனிமையான வார்த்தையுள்ள பெண்ணே...நாம் இருவரும் இப்பொழுது முதல் நல்ல நண்பர்கள்....


இப்போ அம்மி மிதிச்சு கால்ல மெட்டி போட்ட பின் ஒரு 20 நிமிஷம் எல்லாரும் விஷ் பண்ணுங்கோ. அப்பறம் அடுத்த பொரியிடல்....

சுகத்தில், கட்டத்திலும் இருவரும் இந்த அம்மிபோல் நிலையாய் இருப்போம் . நாத்தனார் வாம்மா அம்பிக்கு மெட்டி போட ஹெல்ப் பண்ணு.

நானே போடுவேன் , நந்து நீ வேண்டாம் என்று அவள் காலை வருடி கொடுத்தவாறே மெட்டி போட்டு விட்டான்.


கௌரி, சங்கர், சுமித்ரா, கிருஷ்ணா தாத்தா, பாட்டி என்று எல்லோருக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் வாங்கியபின், உற்றார், உறவினர் எல்லோரின் கை குலுக்கல்கள், வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்டு பொரி இட மைத்துனர்கள் மோஹன், அஷ்வின், அர்ஜுன் வர விஷ்வா நீயும் வா என்று அழைத்தனர்.

அதன் பெயர் லஜ்ஜா ஹோமம்.

ஷ்யாம் கைக்குள் மீராவின் கைகள், அதில் அவள் சகோதரர்கள் நெல் பொரி குடுக்க, ஷ்யாம் மீராவின் கை அணைத்து அதை ஹோம குண்டத்தில் போட்டான்.

இது முடிந்து மீராவின் இடுப்பில் கட்டிய

மௌஞ்சி புல் கயிற்றை மந்திரம் சொல்லி அவிழ்த்தான்.


ஒவ்வொன்றாக பார்க்கும் பொழுது, சின்ன சின்ன தீண்டல்கள், அணைப்பு, அதுவும் பெற்றோரின் அனுமதியுடன் கை, கால் பிடித்தல்., இடுப்பில் கட்டுதல், .... நலுங்கு நடக்கும் போது முகத்தை தொடுதல், தேங்காய் உருட்டி பிடுங்கும் போது கிடைக்கும் ஸ்பரிசங்கள், இரவு சேஷஹோமத்தில் செய்யும் சடங்கு, உணவை ஊட்டி விடுதல்....... மெது மெதுவாக எதிர்பார்ப்பை தூண்டி, அவர்களின் வாழ்க்கையின் முக்கிய கட்டத்திற்கு அஸ்திவாரம் இடுவது.... போல இருந்தது.....


இனி மாலையில் நலுங்கு( தாத்தா பாட்டியின் ஆசைக்காக ), அதற்கு பின் சேஷ ஹோமம், அருந்ததி, துருவ நட்சத்திரம் பார்த்தல்.....

சில சம்பிரதாயங்களை விரிவாகவும், சிலவற்றை மேலோட்டமாகவும் எழுதி உள்ளேன். விரிவாக எழுத ஆரம்பித்தால் அது பிராமண கல்யாண கதை ஆகிவிடும்.

இந்த கூட்டு குடும்பம், சம்பிரதாயங்கள் இவைதான் மனமொத்த வாழ்வுக்கு அடித்தளமா?.



கண்டதும் காதல், அதில் இருப்பது காதலை விட காமம், ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள், ஏமாற்றங்கள், மனதில் கள்ளம், திருப்தி இன்மை.....இதுதான் இன்றைய நிலைமை.

மண முறிவுகளும், பொருந்தா காதல்களும், வஞ்சம் கொண்ட நெஞ்சங்களால்.........

புனிதத்தை இழந்தது அன்பு, ஆசை, பண்பு, காதல், திருமணம்.....எல்லாம் தான்......
 

Advertisement

Advertisement

Back
Top