இரண்டு பாகமாக வருகிறது.
திருநெல்வேலி ஐயர் கல்யாணம் பற்றி சிறிது விளக்க பார்த்து இருக்கிறேன். திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, செங்கோட்டை , சுந்தரபாண்டியபுரம் இந்த ஊர்
வழக்கம் இங்கு விளக்க ஒரு சின்ன முயற்சி.
இது பாலக்காடு, திருவனந்தபுரம் வழக்கத்தில் இருந்து சிறிது மாறுபட்டது.
நீங்கள் சினிமாவில் பார்த்த பாஷை, கல்யாண கலாட்டா இங்கு வேறாக தெரியும்.
பிடித்து இருந்தால் சொல்லலாமே.
சந்தோஷமாக சாப்பிட்டு முடித்த பின்னர் தன்னுடைய ரூமுக்கு கிளம்பிய மீராவை மாடில வேலை நடக்கிறது.
நீங்க எல்லோரும் நம்ம சின்ன ஆத்துக்கு போய் ரெஸ்ட் எடுங்கோ.
நாங்க கல்யாண விஷயம் பேசப்போறோம்.
நீங்களும் வரலாம், உங்களோட ஐடியா சொல்ல.....
தாத்தா சொல்ல இளையவர்கள் ரெஸ்ட் எடுக்க போறோம் என்று கிளம்பினார்கள்.....
எட்டு பேர் கூட்டணி ஒரே சிரிப்பும், கிண்டலும், கேளிக்கையும் தான்.
மறுநாள் காலை பாவாடை, தாவணியில் நின்ற மீராவை பார்த்து கண் கொட்டாமல் நின்றான் ஷ்யாம். அவனைப் போலவே புருவம் உயர்த்தி என்ன? என்பது போல் பார்த்தாள்.....
பின்னால் இருந்து ஓ என்று ஒரே சப்தம் ம்ருது தலைமையில்...
ஏப்ரல் இறுதியில் முஹுர்த்தம். அதற்கு 1 வாரத்துக்கு அல்லது 10 நாட்களுக்கு முன்பிருந்தே முஹூர்த்தக்கால் ( பந்தல்கால்) நாட்டல், தாலிக்கு பொன் உருக்குதல் ( இன்றும் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான குடும்பங்களில் கடையில் சென்று தாலி வாங்கும் பழக்கம் இல்லை. வீட்டிற்கு பொற்கொல்லர் வந்து நல்ல நேரத்தில் பொன்னை உருக்கி தங்களின் பட்டறையில் தாலி அவர்களின் குடும்ப வழக்கப்படி செய்து 3 அல்லது 4 நாளில் கொண்டு வந்து குடுப்பர்).
உடனே வீட்டில் சுமங்கலி பிரார்த்தனை ( பொண்டுகள் பூஜை ) செய்து அந்த புடவை கலத்தில் தாலியை வைத்து மனமுருகி பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்த பிரார்த்தனை செய்ய நிறைய கட்டுப்பாடுகள் உண்டு.
தெருவை அடைத்து மூன்றடுக்கு அல்லது 5 அடுக்கு பந்தல் போடணம்.
வீட்டின் பின்புறம் கோட்டை அடுப்பு கட்டி, தெரு முழுவதும் 3 நாட்கள் எல்லாரும் கல்யாண வீட்டில் தான் சாப்பாடு. ராமா, நீ தான் இது பார்துக்கணம்.
மாப்பிள்ளை வீட்டார் பக்கத்து ஊர் என்றால் பஸ் வைத்து கூட்டிக் கொண்டு வரணம். இவாத்துல இங்க யாரும் இல்லை.
தூத்துக்குடி ஏர்போர்ட், இரயில்வே ஸ்டேஷன் ல இருந்து வரவாள கூட்டிண்டு வர விச்சு நீ பார்த்துக்கோ.
தேதி, நிகழ்ச்சிகள், எல்லாம் முடிவு செய்து சமையலுக்கு கோபாலனை ( அந்த, ஏரியாவின், பெரிய சமையல்காரர்) அழைக்க ஆள்
போயிற்று.
மாலையில் எல்லோரும் தூத்துக்குடி போய் அங்கிருந்து சென்னை கிளம்பினர்.
விஷ்வா வர, அடுத்த 15 நாட்கள் மூவரும் ஒரே பிஸி, பெங்களூர், டெல்லி ஒரே அலைச்சல்.
சுமித்ரா தான் ரெஸ்ட் எடுக்காமல் இப்படி அலைந்தால் கல்யாணம் சமயத்தில் உடம்பு முடியாமல் போனால் என்ன பண்ண என்று புலம்பினாள்.
திருமணத்திற்கு 10 நாள் முன்னால் மீரா ஆபீஸுக்கு லீவ் போட்டு விட்டு ஊருக்கு கிளம்ப, ஏர் போர்டில் வைத்து
ஷ்யாமிடம், கண்ணா கல்யாணத்துக்கு முதல் நாள் வரை பார்க்க, பேச, மெஸேஜ் அனுப்ப மாட்டேன்.... ஓகே....யா?
என்னடா சொல்லற? என்னால முடியாது.பேசினா என்ன......?
மெஸேஜ் அனுப்பினா என்ன......?
நீ ரொம்ப மோசம் கண்ணம்மா. பிளீஸ் என்னை ரொம்ப படுத்தாதே. ரொம்ப ஏங்கி விடுவேன்.
நீ.....?
நானும் தான்... ஆனா இது நமக்கு ஒரு டெஸ்ட்....
டெஸ்ட், கொஸ்ட் ஒன்னும் வேண்டாம்.
நான் வரும்போது உன்னை பார்க்கணம். தனியா இல்லாட்டியும் எல்லார் இருக்கும் போது பார்த்து பேசணம்.
என்னை கடுப்படிக்காதே....
நான் திங்கள் கிழமை நைட் வருவேன். அடுத்த நாள் மெஹந்தி. நான் ஆட வருவேன். நீயும் ஆடணம்.
புதன் ஏதோ பூஜை.... அப்பறம் ரிலடிவெஸ் வருவா.
வியாழன் காலைல இருந்து ஒரே பிஸி. ஆனா நைட் டான்ஸ், karaoke எல்லாம் உண்டு, எனக்கு வேணும்.
யார் கிட்ட பேசணம் சொல்லு.....
கண்ணா, அது வில்லேஜ். உன்னோட இந்த மாதிரி ஆசை, அது, இது நடந்தா ஒரு மாதிரி இருக்கும்.
அப்போ கல்யாணம் சென்னைல பண்ண சொல்லு.
லைஃப்ல ஒரு தடவை தான் கல்யாணம் பண்ணிக்க போறோம். கொஞ்சம் நம்ம இஷ்டப்படி பண்ணினா என்ன?....
இப்போ நான் ஃபோன் பேச மாட்டேன் என்று சொன்னதுக்கு வந்த கோவமா? சரி, இப்போ நான் ஊருக்கு போகட்டா இல்லை வேண்டாமா? உன்னோட இஷ்டப்படி நடக்கறேன்.
சொல்லுமா.....
ஆனா எனக்கு நீ வேணும்....
இன்னும் 10 நாள்ல நான் உனக்கே உனக்கு, நீ எனக்கே எனக்கு.
நீ என்ன குட்டி பேபியா? இப்படி படுத்தறதுக்கு......
அங்க நான் சும்மா கொஞ்சிண்டு இருக்க போரேனா? பூஜை, அதுக்கு ரெடி பண்ணனும், என்னோட டிரஸ் , சாமான் எல்லாம் நம்ம ஆத்துக்கு பேக்கிங், கொஞ்ச நேரம் எல்லார் கூடவும் இருக்க......
கல்யாணம் ஆனா நீ விடுவியா சொல்லு? ...... இப்பவே இந்த பொசசிவ்.... எனக்கு நீ இப்படி இருக்கறது பிடிச்சு இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் .......
இப்போ உள்ள பிரீடம் கல்யாணத்துக்கு அப்புறம் இருக்காது.
அப்போ வந்தா மாப்பிள்ளையை பாரு.... அப்படின்னு போகும்....
சரி டெய்லி நைட் தனியா இருக்கும் போது கால் பண்ணரேன் சரியா?.
ம்ம்....... ம்ம்.....
கொஞ்சம் சிரிச்சுண்டு சொன்னா குறைஞ்சா போகும்?
ம்ம்.......ம்ம்.....
என்னைப் பாருப்பா... அவன் முகத்தை கையில் ஏந்தி முத்த மழை பொழிய....
நானா கேட்டா அலட்டிப்ப,
இப்ப உனக்கு வேலை ஆகணம். என்னை எப்படி சமாதான படுத்தணம் நன்னா தெரியரது இல்லையா.....
இந்த குட்டி பிரிவு தான் இன்னும் ஆசையை அதிகரிக்கும்....
பை....
அவள் வந்த அடுத்தநாள் நாற்கால் ( பந்தல் கால் அல்லது முஹூர்த்தக்கால் நாட்டி) தாலிக்கு பொன் உருக்கி, தட்டானுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்தனர்.
அடுத்தநாள் பக்ஷணம் செய்ய எத்தம் (ஏற்பாடு ) கூட்டினார். 9 சுத்து, 7 சுத்து, வைத்துக்குடுக்க்க முறுக்கு, அதிரசம், மாலாடு, முத்துச்சரம், லட்டு,
மைசூர் பாக், மனோஹரம், 5 வகை பருப்பு தேங்காய் ( மோனோரம் அல்லது மனோஹரம், பூந்தி, தேங்காய் பர்பி, முந்திரி பருப்பு, மைசூர் பாக்)
திரட்டுப்பால்( தேங்காய், பால்), ஜாங்கிரி.....
மாப்பிள்ளை ஆத்துல இருந்து திங்கள் கிழமை ராத்திரி வந்துட ஆரம்பிக்கறா.
மெனு வித்தியாசமா வேளா வேளைக்கு இருக்கணம். ஒரே ஸ்வீட், பாயாசம் கூடாது.
அடை பிரதமன், சக்கை பிரதமன், கடலை பிரதமன், தேங்காய் பால் பாயாசம், பால் பாயாசம் (குருவாயூர் அல்லது வைக்கத்தப்பன் கோயில் மாதிரி), இப்போ எல்லாரும் சொல்லற இளநீர் பாயாசம்..... கோபாலன் மெனு கொண்டு வந்தானா....
ஒரே கேள்வி, பதில், அங்க இங்க என்று அலைச்சல்.....
திங்கள் கிழமை சுமங்கலி பிரார்த்தனை: காலையில் இருந்தே எல்லாருக்கும் நல்ல வேலை. 7 பெண்டுகள், 2 கன்யா பெண்கள்.
(சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம், சீமந்தம் போன்ற விஷேசங்களுக்கு முன்னர் செய்வது ஆகும். குடும்பங்களில் சுமங்கலியாக இறந்த பெண்களை தெய்வமாக பாவித்து செய்யும் நிகழ்ச்சி.
வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும் வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம்)
சுமித்ரா, கிருஷ்ணா ஷ்யாமுக்கு யாத்ரா தானம் செய்து வைக்க, மீராவின் மாமா, மாமி, ஷ்யாம், மாப்பிள்ளை தோழன் விஷ்வாவை சென்னையில் இருந்து பரஸ்தானம் ( நல்ல நேரம் பார்த்து, பூஜை செய்து பெற்றோர் அனுமதியுடன் பிரம்மச்சரிய நிலையில் இருந்து கிரஹஸ்தாஸ்ரமம் நிலைக்கு செல்ல) அழைத்து வந்தனர்.
ஷ்யாம் மீராவைத்தேட ,
மீரா கையில் பூங்கொத்துடன் அவனை வரவேற்றாள். பாட்டி இருவரும் ஆரத்தி எடுக்க, மொத்த குடும்பமும் வாசலில் வந்து வரவேற்க , ஷ்யாமும் விஷ்வாவும் சிலிர்த்தார்கள். இதுவே சென்னையில் என்றால், கான்ட்ராக்டர் ஏற்பாடு செய்த மாமிமார்களும், சூப்பர்வைசரும் வந்து ஒரு இயந்திரத்தனமாக வரவேற்பு இருந்திருக்கும். விஷ்வா தன் திருமணத்தில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
ஷ்யாமுக்கு அவன் பேர் மறந்து போகும் அளவு மாப்பிள்ளை, மாப்பிள்ளை சார், மீரா ஆத்துக்காரர், அத்திம்பேர், ஜிஜாஜி, ஜி என்று எல்லாரும் அழைக்க .....
விஷ்வா எல்லாருக்கும் அண்ணா ஆனான்....
இரண்டு பெரிய வீடுகள் அவர்கள் உபயோகத்துக்கு என்று ஏற்பாடு.....
ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு லாட்ஜ்ல ரூம் வேற.
திடீர் என்று வாசலில் ஒரு கார் வர பார்த்ததால் சுமித்ரா, கிருஷ்ணா.....
உங்க எல்லார் கூடவும் இருக்கணம் என்று மதுரை வந்து இங்க வந்து விட்டோம் என்று.....சொல்ல ....
திரும்ப எல்லோருமாக ஆரத்தி எடுத்து, மீரா அவர்களுடன் உள்ளே வர நம்ம ஹீரோவுக்கு செம கோவம் ....
இவ என்ன இந்த படுத்து படுத்தறா? நான் இருந்தா வரலை, இப்போ அப்பா அம்மா வந்தா வரா.... நம்மள பிடிக்கலையா? என்ன பண்ணினோம்?...... ஏன் அவாய்ட் பண்ணறா?....
இமோஜியுடன் ஒரு மெஸேஜ்......
மித்தும்மா எல்லாம் வசதியா இருக்கா பாருங்கோ....
இவா ரெண்டு பேர் வந்தப்ப நான் வந்து கேட்க முடியாது இல்லையா.... அது தான் இப்போ வந்து கேக்கறேன்....
ஒரு பார்வை ஷ்யாமிடம்.....
என்ன வாசனை இங்க....? ரொம்ப நன்னா இருக்கே...
யா.. என்ன ரூம் ஸ்ப்ரே? என்ற
விஷ்வாவுக்கு
ரூம் ஸ்ப்ரே இல்லை, நாங்க வைத்துக்கொண்டு இருக்கற செண்பகப்பூ, மனோரஞ்சிதம் பூ தான்...
வாவ் ... எனக்கும் வேணும் என்ற
சுமியிடம் உங்களுக்கு வைத்து இருக்கேன் நாளைக்கு தரவா என்றாள் கௌரி....
நம்ம F N க்கு வேணும். ...... அடுத்த மெஸேஜ்.....
மீரா முறைத்தாள்.....
எல்லாரும் சாப்பிடலாம்....
மீரா, உன்னோட சாமான், டிரஸ், ஜூவல்ஸ் எடுத்து வைக்கணம் . சாப்பிட்டு விட்டு அந்த வேலை பாரு.
நாளைக்கு மெஹந்தி 12 மணிக்கு வருவா. சோ சோ என்று சோம்பேறியாக இருக்காதே.... கௌரி சொல்ல, அம்மா எல்லாம் எடுத்து வைத்தாச்சு. நீ வந்து பாரும்மா என்று கௌரியையும் கூட்டிக்கொண்டு அப்பாடா என்று ஓடி விட்டாள்.
சுமித்ரா ஷ்யாமிடம் அவ அடிச்சு பிடிச்சு ஓடற மாதிரி என்ன பண்ணின?
நான் ஒன்னுமே பண்ணலை. விஷ்வா கிட்ட கேளு. பேசக்கூட இல்லை....
பேச வேண்டாம் மெஸேஜ் போய் இருக்கும்....
நீ ஏதாவது கூத்து பண்ணுவ என்று தான் வந்தேன்.
கண்ணா, இன்னும் 3 நாள் தான். அப்பறம் அந்த பொண்ணு உன்கிட்ட என்ன பாடு படப்போராளோ தெரியலை.
ஏண்டா அவ கிட்ட மட்டும் இப்பிடி நடக்கற?
ஏன்னா அவ எனக்கு மட்டும் தான்.
ஷி இஸ் மைன்......
போடா....உன்னை திருத்தவே முடியாது.....
அன்று இரவே பாலிகை தெளிக்க தானியங்களை ஊறப்போட்டர்கள்.
ஒவ்வொருவராக வர வீடு களை கட்டியது.
பிரியா, நந்திதா, ராகேஷ், ஷ்யாமின் தாய் வழி, தந்தை வழி சொந்தங்கள், விஷ்வாவின் பெற்றோர்..... மீரா வழி கும்பல் கேட்கவே வேண்டாம்...வீடு பூரா உறவு, பேச்சு, சிரிப்பு, சப்தம்.....
பக்ஷனம் வீட்டில் வைத்து பண்ணுவதை பார்த்திராத சென்னை கும்பல் வெந்த முறுக்கு, வேகாத முறுக்கு ....தீனி தீனி.....
மெஹந்திக்கு கிளி பச்சை நிற லெகங்கா...
எல்லோருக்கும் முழங்கைகள் வரை, கால்களிலும் போட்டு முடிக்கும் முன் வந்த 8 பேருக்கும் நல்ல வேலை, நல்ல வருமானமும்.....
எல்லா ஆண்களும் உள்ளங்கையில் இட்டுக்கொள்ள
மெதுவாக ஆட்டம் தொடங்கியது....
ம்ருது தலைமையில் பெண்களும், ஷ்யாம் விஷ்வா தலைமையில் ஆண்களும்.....
மீரா வர மாட்டேன் என்று இருக்க கடைசியில் அவளும் ஆட.....
நேரம் போனதே தெரிய வில்லை.
அது தமிழ் நாட்டில் உள்ள கிராமமாக அல்லது வட நாட்டு கல்யாண களேபரமா......
என்ன நடந்ததோ இல்லையோ வேளா வேளைக்கு கண்ணேறு படாமல் இருக்க திருஷ்டி சுத்தி போட்டுக்கொண்டு இருந்தார்கள்.....
மறுநாள் புதன் கிழமை நாந்திசிரார்த்தம். மாப்பிள்ளை, பெண்ணிற்கு அவ்வளவு வேலை இல்லை.
"நாந்தி சிரார்த்தம்"(திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியின் போது, மறைந்த முன்னோர்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காக நடத்தப்படுவது "நாந்தி சிரார்த்தம்'. அதாவது தந்தை, தந்தையின் தந்தை, அவரின் தந்தை, இந்த மூவரின் மனைவிகள், தாய் வழியிலும் இதே வகையில் மூவரும், அவர்களின் மனைவிகளுமாக உள்ள முன்னோர்களை "சோபன பித்ருகள்' என்று குறிப்பிடுவர். இவர்களின் ஆசியால் குடும்பத்தில் மங்களமும், சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சி நம் வீட்டில் நடத்தும் சமயத்தில், பிதுர்லோகத்தில் இருந்து ஆசியளிப்பதற்காக இவர்கள் வீடு தேடி வருகிறார்கள். அவர்களுக்கு உடை, உணவுஅளித்து வழிபடும் செய்யும் சடங்கே "நாந்தி சிராத்தம்' ஆகும்).
பக்கத்தில் திருச்செந்தூர், வன திருப்பதி என்று சில கூட்டம் போக....
மாலையில் மீரா பாட, ஷ்யாம் வயலின், மோஹன் புல்லாங்குழல், கிருஷ்ணா மிருதங்கம் என்று கூட்டணியின் கர்நாடக சங்கீத கச்சேரி.
கௌரி, சங்கர் தங்கள் பெற்றோரைக்கொண்டு, உறவு, நட்புக்கு வாங்கிய டிரஸ் எல்லாம் குடுக்க,
வியாழன் காலை முதலில் மீராவுக்கு விரதம்.
சென்னையில் இருந்து வந்த பியூட்டி பார்லர் லேடீஸ் பிசியாக இருந்தனர்.
காதில் பேர் சொல்லி, இரு புறமும் தாத்தா, பாட்டி இருக்க கௌரியும் சங்கரும் நின்று, கங்கணம் காப்பு இடது கையில் கட்டினர். இனி திருமணம் முடியும் வரை மீரா வெளியில் இறங்கக்ககூடாது.
இது முடிந்ததும் ஷியாமுக்கு விரதம்.
விரத பட்டு, அதிரசம், ஹோமம் வளர்க்க அக்னி,கொண்டு கௌரி செல்ல, கிருஷ்ணா ஷ்யாமின் வலது கையில் காப்பு கட்டினார். இனி திருமணம் முடியும் வரை ஷ்யாம் வெளியில் இறங்கக்ககூடாது.
இது நடக்கும் போதே பாலிகை தெளிக்க ரெண்டு பக்கத்து பெண்டிர் வர, பெண் வீட்டுகாரர்களுக்கு மாப்பிள்ளை வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டுகாரர்களுக்கு பெண் வீட்டினரும் தாம்பூலம், தட்சிணை குடுத்து மரியாதை செய்தனர்.
திருமணம் செய்து முடிந்து 3 அல்லது 5 நாட்களில் இந்த முளைத்த பாலிகையை குளம் அல்லது ஆற்றில் கரைப்பர்.
மாலையில் நிச்சியதார்த்தம்.